KAILASA Library/பகவத்கீதை/இயல்பின் குணநலன்கள்Sign in
பகவத்கீதை

இயல்பின் குணநலன்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

14. 5 உலகியல் இயல்புகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று விதமான குணங்களைக் கொண்டது. ஒரு உயிர் பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்பொழுதே, இந்த மூன்றுவிதமான குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.

14. 6 ஓ! குற்றமற்றவனே! ஸத்வ குணம் மற்ற குணங்களைவிட மிகத் தூய்மையானதாதலால் ஒளி வீசக்கூடியது. அது, ஒருவரை பாவங்கள் செய்வதிலிருந்து விடுவிக்கும். இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல் அறிவை வளர்த்துக்கொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் சந்தோஷம் என்ற கருத்தினால் கட்டுண்டு விடுவார்கள்.

14. 7 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், ரஜஸ் என்பது வரம்பு கடந்த விருப்பங்களையே தன் இயல்பாகக் கொண்டிருப்பதால், இது ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும். ரஜஸ், மனிதர்களை அவர்கள் செய்யும் செயல்களுடன் இணைத்துப் பந்தப்படுத்தும்.

14. 8 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், செயல்திறன் அற்ற நிலையிலிருந்து பிறக்கும் தமஸ், மனிதர்களை மருட்சிக்குள்ளாக்குகிறது. இது கவனமின்மை, சோம்பேறித்தனம் மற்றும் அதிகப்படியான உறக்கம் ஆகியவற்றால் மனிதர்களைப் பந்தப்படுத்தும்.

ஆனந்தத்திற்கே அழைத்துச் சென்றிடும் ஸத்வ குணம்

வெளியுலக மூலப்பொருள்கள், ஸத்வ - சாத்விகம், ரஜஸ் - அதீத உணர்ச்சி, தமஸ் - அறியாமை என்ற மூன்று விதமான பண்புகளைக் கொண்டவை; இவை ஸம்ஸ்க்ருதத்தில், குணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அழியாத் தன்மை கொண்ட தனி ஜீவன் இயற்கையுடன் தொடர்புகொள்ளும்பொழுது, அது, இந்த மூன்று பண்புகளால் கட்டுறுத்தப்படுகிறது.

இவைதான் மனிதர்கள் நடந்துகொள்ளும் வெவ்வேறு முறைகள் என்றுகூட நாம் சொல்லலாம். ஒரே சொற்றொடரில் குறிப்பிட வேண்டுமானால், நல்லவை, கெட்டவை மற்றும் அழகற்றவை என்று குறிப்பிடலாம்.

கிருஷ்ணர், நாம் எப்படி மூன்று வெவ்வேறு விதமான மன அமைப்புகளில் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்று விவரிக்கிறார். நாம் மூன்று விதமான ஆழ்நினைவுப்பதிவுகள் மூலமாகச் செயல்படுகிறோம்.

இப்பொழுது இந்தக் கருத்துக்களை உங்களுக்கு விவரிக்கின்றேன். ஸத்வ என்பது நம்மை ஆனந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய ஆழ்ந்த நினைவுப்பதிவுகளைக் குறிக்கின்றது. இந்த நினைவுப்பதிவுகள் நம்மை சந்தோஷத்தை நோக்கியும், ஆனந்தத்தை நோக்கியும் வழிநடத்தும்.

ஒருவரை உணர்ச்சிபெருக்குள்ளவராகவும், பரபரப்பானவராகவும் ஆக்கி, வேலைகளை ஆழமான தீவிரத்தன்மையுடன் செய்யவைக்கும் மனப்பதிவுகள் ரஜஸ் எனப்படுகின்றன. இது நம்மைச் சுறுசுறுப்புள்ளவராகவும், பணரீதியில் வசதி படைத்தவராகவும் ஆக்குகிறது.

மூன்றாவது குணமான தமஸ் என்பது நம்மை மனச்சோர்விலும், சோம்பேறித்தனத்திலும், மந்தத் தன்மையிலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகளைக் குறிக்கிறது.

நம்மைப் பரவசத்திலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகள் ஸத்வ குணம்.

நம்மை அமைதியற்ற நிலையிலும், கோபத்திலும், உணர்ச்சி சமனற்ற நிலையிலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகள் ரஜஸ்.

அழியாத் தன்மை கொண்ட தனி ஜீவன் இயற்கையுடன் தொடர்புகொள்ளும்பொழுது, முக் குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.

நம்மை மனச்சோர்விலும் மந்தத்
தன்மையிலும் கீழான மனநிலையிலும்
ஆழ்த்தும் நினைவுப்பதிவுகள் தமஸ்.

ஒரு சின்ன உதாரணம்:
நாம் எல்லோரும் ஒரு காரில்
பயணம் செய்யும் பயணிகள்
போன்றவர்கள்தான். மெதுவாக, நாம்
எண்ணங்களில் மூழ்கிவிடுகிறோம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, நம்மைத் தொந்தரவு செய்யும் மனிதரோ அல்லது இடமோ திடீரென்று நினைவுக்கு வருகிறது. உடனே நமக்குள், ஒருவித அசௌகரியத்தை உணர்கிறோம். அவ்வாறு அசௌகரியத்தை உணர்ந்தவுடன், விழிப்பு நிலைக்கு வருகிறோம். அப்போது நமக்குள் நாம், பெரும்பாலும் இவ்வாறு சொல்லிக் கொள்வதுண்டு: ‘நான் இதைப் பற்றி நினைக்கவே கூடாது. வேறு எதைப் பற்றியாவது யோசிக்கலாம்.’

சில சமயங்களில் நாம் இந்த வார்த்தைகளை, சத்தமாகவேகூட சொல்லிக் கொள்கிறோம் அல்லது சில சைகைகளைச் செய்கிறோம். இவ்விதங்களில் நாம், அந்த எண்ணத்திலிருந்து விடுபட முயல்கிறோம். ஓட்டுநர் வியப்புடன் திரும்பிப் பார்த்து ‘இவருக்கு என்ன நடந்தது? இவர் என்ன செய்கிறார்?’ என்று நினைப்பார்.

நாம் நமது எண்ணங்களில் மூழ்கியிருக்கும்பொழுது, ஒரு நினைவு எழுந்து, நம்மைச் சோர்வாகவோ மந்தமாகவோ அல்லது அமைதியற்றோ உணரச் செய்தால், உடனே நாம் உணர்வு நிலைக்குத் திரும்புகிறோம். “நான் என்ன யோசித்துஃக் கொண்டிருக்கின்றேன்,” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம்.

சில சமயங்களில் நாம் சத்தமாகவே, “ஓ! கடவுளே! நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன்? நான் வேறு எதைப் பற்றியாவது நினைக்க வேண்டும்,” என்று சொல்லிக்கொள்கிறோம்.

அந்த மாதிரியான நினைவுப்பதிவுகள் தன்னிச்சையாக எழுந்து மனச்சோர்விற்குள் ஆழ்த்துவதை தமஸ் என்று அழைக்கிறோம்.

மூன்றில் உயர்ந்த குணம், ஸத்வமே

சில நேரங்களில், ‘நான் அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடப் போவதில்லை. அவருக்கு ஒரு பாடம் புகட்டாமல் விடப் போவதில்லை. அவரை நான் இப்படியே சும்மா விடப் போவதில்லை’ என்ற ஒரு எண்ணம் திடீரென்று மேலெழும்பி வரும். இந்த எண்ணத்தால் சூழப்பட்டு இருக்கும்பொழுது, அக்கோபத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நாம் எதிர்பாராத விதமாக, நம் கைகளை அசைப்போம்.

நம்மைச் சுறுசுறுப்பானவராகவும், கோபமுள்ளவராகவும், மூர்க்க மானவராகவும், உணர்ச்சி சமனற்றவராகவும் செய்யும் குணம் ரஜஸ் என்றழைக்கப்படுகிறது

உரை நடை படம்

நாம் பொதுவாக ரஜஸின் பிடியில் அல்லது
தமஸின் பிடியில்தான் சிக்கியுள்ளோம்.
நாம் வெகு அபூர்வமாகத்தான் ஸாத்விக
நினைவுப்பதிவுகளைப் பெறுகிறோம்.
ஸாத்விக நினைவுப்பதிவுகள் நம்மைத்
தொந்தரவு செய்வதில்லை. அவை, நாம்
அனுபவித்த ஆழமான மகிழ்ச்சியின்
அல்லது ஆனந்தத்தின் நினைவை நமக்குள்
எழும்பச் செய்யும்.

உதாரணத்திற்கு, தினமும் மாலை வேளை

ஸத்ஸங்கத்திற்கு வருபவராக இருந்தால்,
மாலை 4. 30 நிமிடம் ஆனவுடன், இது
போன்ற ஒரு நினைவுப்பதிவு மேலெழும்பக்
கூடும். 'ஓ, நேற்றைய சொற்பொழிவு
மிக அருமையாக இருந்தது. த்யானமும் மிக
அருமையாக இருந்தது. இன்றைக்கும் நான்
செல்ல வேண்டும்!'

ஆனால், பொதுவாக, மாலை 4. 30 மணி ஆனவுடன், நமக்குள், இந்த ஸாத்விக நினைவுப்பதிவுக்குப் பதிலாக, 'நாம் ஏதாவது சிற்றுண்டி உண்ணலாம் என்ற நினைவுப்பதிவோ அல்லது ஒரு கப் காபி அருந்தலாம் என்ற எண்ணப்பதிவோதான் மேலெழும்புகிறது.

நாம் உள்முகமாக இழுக்கப்பட்டாலோ அல்லது ஆனந்தம், பரவசம் மற்றும் அமைதியான மனநிலையை அளிக்கும் ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்படி நாம் தூண்டப்பட்டாலோ, அது நிச்சயம், ஸாத்விக நினைவுப்பதிவுகளின் காரணமாகத்தான் இருக்கும்.

நாம் இமாலயத்திற்குச் சென்றோம் என்றால், நாம் அங்கு அமைதியையும் சந்தோஷத்தையும் உணர்வோம். அதன் பிறகு ஏதாவது ஒரு மலையை, ஒரு படத்தில் காண நேர்ந்தால்கூட, இமாலயத்திற்குச் சென்று வந்த நினைவுகள் மேலெழும்பும். உடனே நாம், 'ஓ! நான் மீண்டும் இமாலயத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு ஒரு இரண்டு மாதங்களாவது தங்க வேண்டும், அங்கு எவ்வளவு அமைதியாக இருந்தது!' என்று நினைப்போம். எந்த நினைவுப்பதிவுகள் நமக்கு ஆனந்தத்தை, பரவசத்தைத் தருகின்றதோ அவை ஸாத்விக நினைவுப்பதிவுகள்.

நம்முடைய முழு வாழ்க்கையையுமே
இந்த மூன்று விதமான நினைவுப்பதிவுகள்
அல்லது ஸம்ஸ்காரங்கள்தான் ஆதிக்கம்
செலுத்துகின்றன.

Sattvic memories callout
Rope illustration

மனத்தை உபயோகிப்பதற்கான கையேடு, ஆயுர்வேதம்...

வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ விரும்பும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அறிவு என்னவென்றால், இந்த நினைவுப்பதிவுகளைப் பற்றிய அறிவுதான். உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியத்தைத் தெளிவாக விளக்கும் ஆயுர் வேதம், இம்மூன்று குணங்கள் மற்றும் அவை நம் உடல் மன அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாத்விக நினைவுப்பதிவுகள் நாம் அனுபவித்த ஆழமான மகிழ்ச்சியின் நினைவை நமக்குள் எழும்பச் செய்யும்.

இது மனத்தை உபயோகிப்பதற்கான ஒரு உரிமையாளர் கையேடு போன்றது. உரிமையாளர் கையேடு இல்லாமல் ஒரு பொருளை உபயோகிக்க ஆரம்பித்தால் நாம் முழு விஷயத்தையும் தவறவிட்டுவிடுவோம் அல்லது அந்தப் பொருளைப் பற்றிய சில முக்கிய பயன்பாடுகள் பற்றிய அறிவையோ அல்லது பொருளை உபயோகிக்கும் முறைகள் பற்றிய அறிவையோ தவறவிட்டுவிடுவோம்.

கம்ப்யூட்டரில் பல உபயோகங்களும் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. ஒரு சாதாரண கணக்கிட உதவும் கருவிகூட (Calculator), நூற்றுக்கணக்கான செயல்பாடுகள் உடையதாக இருக்கிறது. அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

நாம், கணக்கிடும் கருவியைப் பற்றிய அறிவைப் போதுமான அளவு பெறாவிட்டால், அதைப் பெரும்பாலும் ஒரு சில அடிப்படையான அம்சங்களான கூட்டல், பெருக்கல், வகுத்தல் மற்றும் கழித்தல் போன்றவற்றிற்கே உபயோகிப்போம். நாம் அந்தக்கருவியின் மற்ற செயல்பாடுகளைப் உபயோகப்படுத்தாமலேயே இருப்போம்.

அதேபோல மனத்தைப் பற்றிய 'உரிமையாளர் கையேடு' (owner's manual) நம்மிடம் இல்லாமல் போனாலோ, அல்லது அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருந்தாலோ, மனத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகிக்காமலே இருப்போம் அல்லது அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம்.

மூன்று வெவ்வேறு விதமான நினைவுப்பதிவுகள் அல்லது ஸம்ஸ்காரங்களைப் புரிந்துகொள்வதே, மனத்தைச் செயல்படுத்துவதைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் கையேடு (Manual). கிருஷ்ணர் அதை, குணத்ரய விபாக யோகம் என்றழைக்கிறார். இந்தக் கையேட்டை நாம் புரிந்துகொள்ள வில்லையென்றால், வாழ்க்கையைப் பற்றிய முழுப்புரிதலை, நம்மால் உள்வாங்க முடியாது.

ஆகையால் நாம் பல சந்தர்ப்பங்களை இழக்கிறோம். ஏனென்றால் நாம் இதுவரை, குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ அல்லது அறிந்துகொள்ளவோ இல்லை. நமக்கிருக்கும் சாத்தியங்களில், ஒரு சிறு பகுதியை மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் உரிமையாளர் கையேட்டைப் படித்து, புரிந்துகொள்ளாதபோது, நம் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் அழகையும் அளப்பரிய ஆற்றலையும் தவறவிடுகிறோம்.

ஆன்மிகத்தை ரசித்திட உதவும் ஸம்ஸ்க்ருதம்

மொத்தத்தில், ஸம்ஸ்காரங்கள் என்பது உயிரற்ற நினைவுப்பதிவுகள் அல்ல. ஸம்ஸ்காரங்கள் என்பதற்கான சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு வார்த்தை நம்மிடம் இல்லை.

நம்மால் ஷேக்ஸ்பியரின்
புத்தகங்களை, மற்றொரு மொழியில்
புரிந்துகொள்ளவோ அல்லது முழுமையாக
உள்வாங்கவோ முடியாது. நாம்
ஷேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்புகளைப்
படித்தோமானால், அதிகபட்சமாக, அவர்
எதை வெளிப்படுத்த விரும்புகிறார்
என்பதை மட்டுமே, நாம் புரிந்துகொள்ள
முடியும்.

வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட மூளையின் உள் கிரகிக்கும் பகுதிகள் நாளடைவில் சீர்குலைந்து இறந்துவிடும்.

ஆனால், அவர் அதை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையோ, அவர் மூழ்கியெழுந்த ஆழத்தையோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது. நாம் ஷேக்ஸ்பியரின் புத்தகங்களை ரசிக்க வேண்டும் என்றால் அதை அவர் எழுதிய மூல மொழியிலேயே படிக்க வேண்டும்; இன்றைய பேச்சு வழக்கில் இருக்கும் ஆங்கிலத்தில் அல்ல.

அதேபோல, இம்மாபெரும் ஸத்யங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நமக்குச் சிறிதளவாவது ஸம்ஸ்க்ரு'தம் தெரிந்திருக்க வேண்டும்.

நான் மக்களிடம், ஸம்ஸ்க்ரு'த மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னால், நான் ஸம்ஸ்க்ரு'த மொழியைப் பரப்ப முயல்கிறேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. நான் அப்படிச் சொல்லவில்லை. குறைந்தபட்ச ஸம்ஸ்க்ரு'த அறிவுகூட, பல நுட்பமான ஆன்மிக வார்த்தைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

ஸம்ஸ்காரம் என்ற வார்த்தைக்கான மிகச் சரியான அர்த்தத்தை அல்லது அந்த வார்த்தை வெளிப்படுத்தும் கருத்தைச் சொல்கிறேன்.

அது விரும்பிய பாதைக்கு நம்மை இழுப்பதே ஸம்ஸ்காரத்தின் வேலை...

ஸம்ஸ்காரம் என்பது ஏதோ ஒரு உயிரற்ற நினைவுப்பதிவு அல்ல. அது, உயிருடனும், செயல் துடிப்புடனும் இருக்கும் ஒரு நினைவுப்பதிவு. அதற்கு, நம்மைக் கீழ்நோக்கி இழுத்து, நம்மை மீண்டும், மீண்டும் அதே பாதையில் பயணிக்க வைக்கச் செய்யும் வலிமையும் உண்டு.

பொதுவாக 'நினைவு' என்ற வார்த்தை, 'ஒரு உயிரற்ற பதிவு' என்று புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், ஸம்ஸ்காரம் என்பது உயிரற்ற பதிவு அல்ல. அது உயிரற்ற நினைவு அல்ல. அது, கம்ப்யூட்டரில் படங்களையும், வாக்கியப் பதிவேடுகளையும் (word documents) பதிவு செய்து வைத்திருப்பது போன்றது அல்ல.

diagram

ஸம்ஸ்காரங்களுக்கு, நம்மைக் கீழ்நோக்கி இழுத்து, அதே பாதையில் மீண்டும் மீண்டும் செல்ல வைக்கும் வல்லமை உண்டு. நாம் மூடப்பட்ட வட்டத்திற்குள் அடைப்பட்டு விடுகிறோம்.

ஸம்ஸ்காரங்கள், தன்னிச்சையாக நம்மைக் கவர்கின்றன. நம்மை அதே பாதையில் மீண்டும் மீண்டும் பயணிக்கச் செய்கின்றன. அவ்வாறு நாம் பயணிக்க, பயணிக்க, அந்த நினைவுப்பதிவுகள் இன்னும் ஆழமாகப் பதிந்து, அவை மேலும் வலுவாகின்றன.

நவீன அறிவியல் இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு உணர்ச்சி பூர்வமான அனுபவம், அந்த உணர்ச்சியை வலுப்படுத்துவதற்காகவே, மேலும் அதிகமான உள்வாங்கிகளை மூளையில் உருவாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் ரீதியாகவும், உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் ரீதியாகவும் எவ்வளவு அதிகமாக உங்களுடைய கோபம் வெடித்து வெளிப்படுகின்றதோ, அதே அளவுக்கு உங்கள் மூளையும் கோபத்தை உள்வாங்கும் தன்மையை வளர்த்துக்கொள்கிறது. இது அச்சத்தைத் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், இதுதான் உண்மை.

உள்ளுலக விஞ்ஞானிகளான ரிஷிகள்,
இதை ஆயிரக்கணக்கான வருடங்க
ளுக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். சில
உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படாமலேயே
இருந்தால், அந்த உணர்ச்சிகள்
சம்பந்தப்பட்ட மூளையின் பகுதிகள்
அல்லது மூளையின் உள் கிரகிக்கும்
பகுதிகள், நாளடைவில் சீர்குலைந்து
இறந்துவிடும். அதனால், நாம் எதிர்மறை
உணர்ச்சிகளிலிருந்து முற்றிலுமாக விலகி
இருந்தோமானால், அந்த உணர்ச்சிகள்
சம்பந்தப்பட்ட மூளையின் பகுதிகள்
இறந்து விடும்.

‘இதிலிருந்து எனக்கு என்ன
கிடைக்கும்?’
என்ற கேள்வி
நமது அஹங்காரப்
பகுதியில்தான் எழுகிறது.

ஆனால், நாம் அவ்வாறு செய்யாமல், அளவுக்கு அதிகமாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டோமானால், அந்தவிதமான உணர்ச்சிகளையே நமது மூளையும் அளவுக்குஅதிகமாக விரும்பிக் கேட்கும்.

இதுவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கான உண்மையான காரணம். நம்முடைய முழு வாழ்க்கையுமே, ஸம்ஸ்காரங்களால் ஆட்சி செய்யப்படுகிறது.

நினைவுப்பதிவுகளை நல்ல செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்; தவறான செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.

ஸம்ஸ்காரங்கள் என்பது உயிரோட்டமுள்ள நினைவுகளே, அவை உயிரற்ற நினைவுகள் அல்ல. நாம் அந்த நினைவுகளோடு இசைந்து பயணம் செய்யும் பொழுது, அந்த நினைவுகளுடனேயே வாழும்பொழுது, அவை நம் இருப்புத்தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகின்றன.

நம்முடைய இருப்பின் ஆழமான நிலைகளை, தங்கள் குடியிருப்பாக ஆக்கிக்கொள்கின்றன. அவை ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அவை நம்முடைய மூளைக் கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.

கிருஷ்ணர், நாம் எவ்வாறு இந்த மூன்று நிலைகளான நினைவுகளின் பிடியில் சிக்கிகொள்கிறோம்; எவ்வாறு மீண்டும் மீண்டும் நாம் அந்த நினைவுகளால் இழுக்கப்பட்டும், தள்ளப்பட்டுக்கொண்டுமிருக்கிறோம் என்பதை படிப்படியாக விவரிக்கிறார்.

ஒருவருக்கு மூன்று மனைவிகள் இருப்பதுபோன்ற நிலை இது. ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு பெண் மட்டுமே இருந்தால், அவருக்கு, ஞானமடைதல், ஒரு சொகுசுப்பொருள்; இரண்டு மனைவிகள் கொண்டவருக்கு, ஞானமடைதல், ஒரு விருப்பத் தேர்வு; மூன்று மனைவிகள் கொண்டவருக்கு, ஞானமடைதல், கட்டாயமானது! மூன்று கணவர்கள் அல்லது மனைவிகளுடன் வாழ்பவர்கள், ஞானமடையாமல் வாழ இயலாது.

ஒருவர் என்னிடம் “கிருஷ்ணருக்கு ஏன் இத்தனை பெண் தோழிகள்?” என்று கேட்டார். அதற்கு நான், “இதுவே அவர் ஞானமடைந்தவர் என்பதற்கான ஒரு திடமான சான்று,” என்று சொன்னேன். உண்மையில், கிருஷ்ணர் தொடர்ந்து அத்துணை பெண் தோழிகளுடன் வாழ்ந்தார் என்பதே, அவர் ஞானமடைந்தவர் என்பதற்கான சான்று. சந்தேகமேயில்லாமல் அதுவே, அவர் கடவுள் என்பதற்கான ஒரு திண்மையான சான்று.

இங்குக் கிருஷ்ணர், இந்த நினைவுப்பதிவுகளுடன் எவ்வாறு நாம் வாழ்வது என்பதற்கான புரிதலை அளிக்கிறார். மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நினைவுப்பதிவுகள் அனைத்துமே உயிரோட்டமுள்ள சக்திகள் என்பதால் அவற்றை நல்ல செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்; தவறான செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.

ஒரு மனிதர், தவறான செயல்கள் செய்வதற்கான சக்தியுடன் இருக்கிறாரென்றால், நாம் அந்த சக்திக்குள் ஊடுருவி, அவரை நல்ல செயல்களைச் செய்ய வைக்க முடியும்.

முழுமையான ஈடுபாட்டால் முழு வாழ்க்கையுமே மாறிவிடும்

சிறைச்சாலைகளில் த்யான முகாம்கள் நடத்திய என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன், த்யானத்திற்குள் ஆழமாகச் செல்வதற்கு, கைதிகள் செய்வதைப் போன்ற முயற்சியை, வேறு எவரும் செய்வதில்லை.

மற்றவர்களோடு ஒப்பிடும்பொழுது, சிறைக்கைதிகள் மிகவும் ஈடுபாட்டுடன் த்யானத்திற்குள் ஆழ்ந்து செல்கின்றனர்.

சிறைக்கைதிகள் த்யானத்தில் ஈடுபடும்
பொழுது, அவர்கள் முழுமையாகவும்
தீவிரமாகவும் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் எதையுமே அரைமனத்தோடு
செய்வதில்லை. அவர்கள் உணர்வுமாற்றம்
அடையும்பொழுது, அவர்களுடைய
முழு வாழ்க்கையுமே உணர்வுமாற்றம்
அடைகிறது.

மகரிஷி வால்மீகி, அருணகிரிநாத சுவாமிகள் ஆகியோருடைய

text_callout

வாழ்க்கையைப் பார்த்தோமென்றால், அவர்கள் பாவச்செயல்கள் புரிந்தவர்களே. அவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல ஞானிகளும் பாவச் செயல்கள் புரிந்தவர்கள்தான். ஆயினும், அவர்களுக்குள் ஒரு தெளிவான, தீர்க்கமான உணர்வுமாற்றம் நிகழ்ந்தது. ஒரு உள்ளுணர்வு மேம்பாடு அவர்களுடைய இருப்புத்தன்மையில் நிகழ்ந்தது.

இந்த உணர்வுமாற்றம், பொதுவாக, நம்முடைய மனம் செய்திகளை உள்வாங்கி, அதை நடைமுறைப்படுத்தி, முடிவை வெளியிடும்பொழுது நடைபெறுகிறது.

உணர்வுமாற்றம் ஒருமுறை நமக்குள் நிகழ்ந்துவிட்டால் போதும், நாம் வெளியுலகை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, செய்திகளை உள்வாங்கி, நடைமுறைப்படுத்தி, உள்நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறோம்.

நாம் வெளியுலகை நோக்கிச் செயல்பாடும்பொழுது, நாம் மனச்சோர்வை நோக்கிச் செல்வதற்கான வேலைகளைச் செய்கிறோம். ஆனால், உள்நோக்கிச் சென்றோமானால், நாம் ஆனந்தத்தை நோக்கிச் செல்கிறோம்.

உதாரணமாக, நமக்கு நெருக்கமான ஒருவரது மரணம், நம் அன்பிற்குரிய உற்றார் உறவினரது மரணம், நம்மை ஆன்மிகத்தை நோக்கி வழிநடத்தும் அல்லது ஏமாற்றத்திலும் துக்கத்திலும் ஆழ்த்தும்.

நாம் இருவிதமாக நினைக்கலாம், ஒன்று, 'நானும் ஒருநாள் இப்படித்தான் இறக்கப்போகிறேன், அதற்குள் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைக்கற்று, என்னை உயர்த்திக்கொள்ளப் போகிறேன்' என்றும் நினைக்கலாம்.

‘நீங்கள்’ என்ற அடிப்படையில் நாம் முடிவெடுக்கின்றபோது, நாம் தினந்தோறும் செய்யும் சாதாரண செயல்கூட தெய்வீகமாக மாறும்.

அல்லது, 'எப்படியும் நானும் ஒரு
நாள் இறக்கத்தான் போகிறேன்.
அதற்குள், நான் எதையெல்லாம் செய்ய
விரும்புகிறேனோ, அதையெல்லாம் செய்து
முடித்துவிடவேண்டும்'என்றும்நினைக்கலாம்.

ஒரு சின்ன கதை:

தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருந்த தூக்கு தண்டனை கைதியிடம், "உன்னுடைய கடைசி ஆசை என்ன?'' என்று பணியில் இருந்த அதிகாரி கேட்டார்.

"எதுவும் இல்லை," என்றான், அந்தக் கைதி.

உடனே அந்த அதிகாரி "நீ கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம். அவரிடம் மன்னிப்புக் கோரலாம். வேண்டுமென்றால், அதற்காக நாங்கள் ஒரு சமய குருவை அழைத்து வருகிறோம்,'' என்றார்.

அந்தக் கைதி, "நான் கடவுளைப் பிரார்த்திக்க விரும்புகிறேன். ஆனால், நீங்கள் சொன்ன முறையில் அல்ல. 'இறைவா! இந்தக் குற்றங்களுக்காக நான் தூக்கிலிடப்படுவேன் என்று முன்பே தெரிந்திருந்தால், மேலும் சில குற்றங்களைச் செய்திருப்பேனே' என்று நினைப்பேன்!" என்று சொன்னான்.

நம் அன்பிற்குரிய
உற்றார் உறவினரது
மரணம்,
நம்மை ஆன்மிகத்தை
நோக்கி வழிநடத்தும்
அல்லது
ஏமாற்றத்திலும் துக்கத்திலும்
ஆழ்த்தும்.

மேலும் அந்தக் கைதி, "நான் தூக்கிலிடப்
படுவேன் என்று தெரிந்திருந்தால், பல பாவச்
செயல்களைச் செய்திருப்பேன். அதனால்
கடவுளை நான் பிரார்த்தித்தால், 'நான்
தூக்கிலிடப்படுவேன் என்பதை எனக்கு
ஏன் முன்னமே தெரியப்படுத்தவில்லை?'
என்று கேட்பேன். அதற்கு எனக்கு ஒரு
சமய குரு தேவையில்லை," என்றான்.

மரணமே இறுதியானது என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது, 'மரணமே இறுதியானது. அதனால் தெய்விகத்தை நோக்கிச் செயல்பட்டு, கடவுளை அடைய வேண்டும் அல்லது ஆத்மாவை உணர்ந்துகொள்ள வேண்டும்' என்று சில மனிதர்கள் நினைக்கின்றனர்.

மற்றவர்கள் வேறு விதமாகச் செயல்படுகின்றனர். 'எப்படியிருந்தாலும் நாம் இறக்கப் போகிறோம். அதனால், நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்துவிட்டு, எப்படி வாழ விரும்புகிறோமோ அப்படி வாழ்ந்துவிட்டு போகலாமே!' என்று நினைக்கின்றனர்.

ஒரு குழுவினர் தியானப் பாதையையும், மற்றவர்கள் வெளியுலக வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுக்கின்றனர். எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்முடைய விருப்பத் தேர்வுதான்.

நினைவுப்பதிவுகள் என்பது வாழும் சக்தி.
நினைவுப்பதிவுகள் மூலம், மீண்டும்
மீண்டும் நம்மைநாமே துன்பத்திற்கும்
சித்ரவதைக்கும் உள்ளாக்குவதா
அல்லது நம் வாழ்க்கையை ஆனந்தமாக
அனுபவிப்பதா என்பதை நாமே
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த நினைவுப்பதிவுகள் எப்படி நம் இருப்புத் தன்மைக்குள் நிகழ்கிறது, எப்படி நம் இருப்புத் தன்மையை மாற்றி அமைக்கின்றன என்ற அறிவியலைத் தெரிந்து கொண்டோமென்றால், நம் இருப்புத்தன்மையில் நிலையான விழிப்புணர்வையும், என்றும் மாறா ஆனந்தத்தையும் அடைவதற்கு இந்த நினைவுப்பதிவுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நம் இருப்புத்தன்மையில்
நிலையான விழிப்புணர்வை
அடைவதற்கு
நினைவுப்பதிவுகளின்
உதவியைப்
பெற்றுக்கொள்ள முடியும்.

மனத்தின் சாஃப்ட்வேர் புரோகிராம்

கிருஷ்ணர், இந்த நினைவுப்பதிவுகள், நம்முடைய மனத்தை எப்படித் தொந்தரவு செய்கின்றன என்பதை விவரிக்கிறார். இதைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் நம்முடைய இருப்புத்தன்மையை உணர்வுமாற்றம் அடையவைக்க இயலும்.

இந்த ஸ்லோகங்களை விவரிப்பதற்கு முன், ஒரு சிறிய வரைபடத்தின் மூலம், நினைவுப்பதிவுகள் நாம் எடுக்கும் தீர்மானங்களை எப்படிப் பாதிக்கின்றன; அவற்றின் பாதிப்பிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை விளக்குகிறேன். அதன்மூலம் நீங்கள், நினைவுப்பதிவு கள் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். வேறு ஒரு அத்தியாயத்தில் இந்த வரைபடத்தின் அடிப்படையைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் அதை விவரிக்கிறேன். அப்படியானால் மட்டுமே, நாம் ஸம்ஸ்காரங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

நாம் செய்திகளையும், கருத்துக்களையும் வெளி உலகிலிருந்து எவ்வாறு பெறுகிறோம், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறோம், தீர்மானங்களை எவ்வாறு எடுக்கிறோம் என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

Mind-body perception diagram

முதலில் நாம், ஏதாவது ஒரு பொருளைக் கண்மூலமாகப் பார்க்கிறோம். இங்கு நான் 'பார்த்தல்' என்ற உதாரணத்தை எடுத்துள்ளேன். ஆனால், வேறு எந்தப் புலனை வேண்டுமானாலும் 'பார்த்தலுக்குப்' பதிலாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு கேட்டல், நுகர்தல், சுவைத்தல் அல்லது தொடுதல். இந்த ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களில் ஏதாவது ஒன்றை இங்கு உபயோகப்படுத்தலாம்.

ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களும், ஐந்து கர்மேந்த்ரியங்களும்தான், நமக்கும் வெளியுலகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தும் வழிகளாக இருக்கின்றன.

ஜ்ஞானேந்த்ரியங்கள் என்பவை புலன்களால் உணரும் உணர்வுகளான பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடுஉணர்வு ஆகியவை.

கர்மேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், ஈர்த்தல், நகர்தல், நீக்குதல், உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளைக் குறிக்கின்றன. அதாவது நாக்கு, கைகள், கால்கள், மல, ஜலங்களை வெளியேற்றும் உறுப்பு, இனப்பெருக்க உறுப்பு, ஆகிய 5 செயல்புரியும் இந்திரியங்களைக் குறிக்கிறது.

> கண்களுக்குள் இருக்கும் சக்ஷு சக்தியே 'பார்த்தல்' நிகழ்வதற்குக் காரணம்!

ஒவ்வொரு புலனும், நம் உடல் - மன அமைப்பில் உள்ள ஒவ்வொரு சக்தி மையத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு, 'நகர்தல்', வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சக்தி மையமான மணிப்பூரக சக்ரத்துடன் தொடர்புடையது. மேலும் இது அக்னியின் அம்சமாகும். நாம் ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களில் வேறு ஏதாவது ஒன்றைக்கூட, கண்களுக்குப் பதிலாக, இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

நான் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காட்சியையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். இங்கு நான் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். முதலில் உங்களுடைய கண்கள், இந்த முழுக் காட்சியையும் ஒரு படம்போல் பிரதி எடுத்துக் கொள்கிறது.

பிறகு அந்தப் படம் சக்ஷுவிற்குச் செல்லுகிறது (கண்களுக்குப் பின்னால் இருக்கும் சக்தி) ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் கண்களால் பார்ப்பதில்லை; சக்ஷு மூலமாகத்தான் பார்க்கிறோம். கண்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியின் மூலமாகத்தான் உண்மையில் ‘பார்த்தல்’ நிகழ்கிறது.

ஸம்ஸ்காரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள், இருப்புத்தன்மையை உணர்வுமாற்றம் பெறச்செய்யுங்கள்!

அதேபோல், காதுகளுக்குப் பின்புலமாக ஒரு சக்தி இருக்கிறது. அதன்மூலம்தான் ‘கேட்டல்’ நிகழ்கிறது; காதுகளால், கேட்க இயலாது.

அதனால்தான், நாம் ஒரு புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்து மூழ்கியிருக்கும்பொழுது, அலாரச் சத்தமோ அல்லது அழைப்பு மணி சத்தமோ கூட நமக்குக் கேட்பதில்லை. நாம் படித்துக்கொண்டிருக்கும்பொழுது, நம்முடைய வாழ்க்கைத்துணை அறைக்குள் வருவதுகூட நமக்குத் தெரியாது. அதுவே பின்னிரவாக இருந்தால், தங்களுடைய கணவன்மார்களின் வருகையை எல்லா மனைவிகளும் எப்படியோ அறிந்துகொள்வார்கள்; அது வேறு விஷயம்!

ஒரு சின்ன கதை:

ஒருவர், தம்முடைய வீட்டில் புகுந்து, கொள்ளையடித்து பிடிப்பட்ட திருடனைச் சந்திக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கிருந்த அதிகாரி, “நீங்கள் அந்த திருடனுடன் இப்பொழுது பேச முடியாது. நாளை அவனை நீதிமன்றத்தில் சந்திக்கலாம்,” என்று கூறி, திருடனைச் சந்திக்க அவருக்கு அனுமதிதர மறுத்துவிட்டார். உடனே அவர், "நான் அவனைத் தொந்தரவு செய்வதற்காக இங்கு வரவில்லை. நான் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான்; அவன், என் மனைவிகூட அறிந்துகொள்ளாத அளவுக்கு ஓசையின்றி வீட்டிற்குள் எப்படி நுழைந்தான் என்பதை மட்டுமே. வீட்டினுள் ஓசையின்றி நுழைய நானும் பல வருடங்களாக முயலுகிறேன். என்னால் முடியவில்லை. அவனால் எப்படி முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவே வந்தேன்!" என்றார்.

அதனால் கண்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் பார்க்கிறது. நாம் அந்த சக்தியை, சக்ஷு என்று அழைக்கிறோம். கணினியில் இருக்கும் டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸர், அதனுள் அனுப்பப்படும் செய்திகளைக் கோப்புகளாக மாற்றுவதுபோல, ஐம்புலன் களால் அனுப்பப்படும் செய்திகளை, இந் த சக்ஷு சக்திதான் டிஜிட்டல் கோப்புக்களாக மாற்றித் தருகின்றது. அதனால்தான், நம்முடைய மனம் செய்திகளை, செய்முறைக்கு உட்படுத்த முடிகிறது.

சக்ஷு என்பது ஏறக்குறைய மின் அணு
அமைப்புகளில் இருக்கும் டிஜிட்டல்
சிக்னல் ப்ராசஸர் (Digital Signal
Processor)போலத்தான். நாம் ஒலியின்
அல்லது புகைப்படத்தின்மீது வேலைசெய்ய
வேண்டுமென்றால், முதலில் அது, ஒரு
'டிஜிட்டல் ஃபைல்' (Digital File) ஆக
மாற்றப்பட வேண்டும்.

> காதுகள் கேட்பதில்லை,
> காதுகளுக்குப்
> பின்புலமாகயிருக்கும்
> சக்திதான்,
> கேட்டலைச்
> சாத்தியமாக்குகிறது!

கணினியில், ஒரு கோப்பை (File) - அது, காட்சி சார்ந்த கோப்போ அல்லது ஒலி சார்ந்த கோப்போ - எதுவானாலும் முதலில் அதை ஒரு 'டிஜிட்டல் ஃபைல்' ஆக மாற்ற வேண்டும்.

அதுபோல்தான் நம்முடைய 'மன-அமைப்பில்', நாம் பார்க்கும் அல்லது கேட்கும் எதுவாக இருந்தாலும், அது முதலில், பயோ-சிக்னல் ஃபைலாக மாற்றப்பட வேண்டும். 'பார்த்தல்' என்னும் இந்தச் செயலில், இந்த மாற்றம் சக்ஷு பகுதியில் நிகழ்கிறது.

அதன் பிறகு அந்தக் கோப்பு படிப்படியாக நகரத் துவங்​குகிறது. முதலில் அந்தக் கோப்பு, மனத்தின் முதல் பகுதியான சித்ததுிற்குச் (Memory) செல்கிறது. இதை நாம் புரிந்துகொண்டால், நம்முடைய முழு வாழ்க்கையுமே உணர்வுமாற்றம் பெற்றுவிடும். எங்கு, எப்பொழுது நாம், நமது உணர்ச்சிகளை எதிர்த்துச் செயலாற்ற வேண்டும் என்பது தெரியவரும். நாம், முக்கியமான தீர்மானங்களை எப்படி நம்முடைய அனுமானத்தின் அடிப்படையில் எடுத்துவிட்டு, பின்னர் அதனால் துன்பப்படுகிறோம் என்பதையும் உணர்வோம்.

இதுதான் அந்த ஆசிரியருடைய கதையிலும் நடந்தது. அந்த ஆசிரியர் பரிசுப் பெட்டியிலிருந்து, மதுபானம்தான் கசிகிறது என்று અનુமானம் செய்ததால், அவர் சிறிதும் யோசிக்காமலேயே, அதை சுவைத்துப் பார்த்தார்.

இந்த வரைபடத்தை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, எப்படித் தவறுகள் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் கோப்பு, சித்தக்கிற்குச் செல்கிறது. கோப்பு, இந்தப் பகுதியை அடைந்தவுடன், ந இதி, ந இதி - 'இது அல்ல, இது அல்ல' என்று, 'நீக்குதல்' செயல்முறை நிகழ்கிறது. கடந்தகால நினைவுகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில்தான் ‘நீக்குதல்’ செயல்முறை நிகழ்கிறது. அந்தக் கோப்பைப் பார்த்தவுடன் நம்முடைய சித்தம், 'இது இந்தப் பொருள் அல்ல, இது இந்தப் பொருள் அல்ல’ என, அதை ஒதுக்கத் தொடங்கிவிடும்.

உதாரணத்திற்கு ஒரு காட்சியை எடுத்துக்கொள்வோம். நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள், மொத்தக் காட்சியுமே படம் பிடிக்கப்படுகிறது. அது சக்ஷுவுக்குச் செல்கிறது, அங்கு அது பயோ - சிக்னல் கோப்பாக மாற்றப்படுகிறது; அந்தக் கோப்பு பிறகு, சித்தம் என்ற பகுதிக்குச் செல்கிறது. சித்தம், “இது மரம் அல்ல. இது விலங்கு அல்ல. இது செடியல்ல. இது இதுவல்ல. இது அதுவல்ல,” என்று சொல்கிறது. இதையே ‘நீக்குதல்’ செயல்முறை என்கிறோம். இந்த 'நீக்குதல்' செயல்முறை சித்தத்தில் நிகழ்கிறது.

இது, அகராதியில் ஒரு வார்த்தையைத் தேடுவது போன்றது. ‘COW’ என்ற வாா்த்தைக்கு அர்த்தம் தேடும்பொழுது ‘C’ என்ற எழுத்தை அடைய முதலில் நீங்கள் மற்ற எழுத்துக்களைத் தவிர்த்துவிடுவீர்கள். அதன் பிறகு ‘O’ என்ற எழுத்தை அடைய மற்ற எழுத்துக்களைத் தவிர்ப்பீர்கள். அதன் பிறகு நீங்கள் ‘W’ என்ற எழுத்தை அடைய மற்ற எழுத்துக்களைத் தவிர்ப்பீர்கள். இதுபோல நீங்கள் ‘COW’ என்ற வார்த்தையை அடைவீர்கள். இதுபோலத்தான் சித்தம் (Citta) வேலை செய்கிறது.

ந இதி, ந இதி,
'இது அல்ல, இது அல்ல' என
ஒதுக்கப்படுவதையே
'நீக்குதல்'
செயல்முறை
என்கிறோம்!

அடுத்து அந்தக் கோப்பு, மனத்தின் இரண்டாவது பகுதியான மனஸிற்குச் செல்கிறது. மனஸ், அந்தக் கோப்பை உறுதியாக அடையாளம் காண முயல்கிறது.

அடையாளம் காணும் செயல்முறையான இதி, இதி - ‘இது, இதுதான், இது, இதுதான் என்னும் ‘அடையாளம்’ காணும் செயல்பாடு மனஸில் நிகழ்கிறது.

சித்தத்தில், ந இதி ந இதி (இது அல்ல, இது அல்ல) என்ற ‘நீக்குதல்’ செயல் முறை நிகழ்கிறது.

மனஸில், இவர் ஓர் மனிதர், இவர் காவி உடை அணிந்திருக்கிறார், இவர் மேடையில் நின்று கொண்டிருக்கிறார் என்று ‘அடையாளம்’ காணும் செயல்பாடு நிகழ்கிறது.

‘அடையாளம்’ காணுதல் நிகழ்ந்தவுடன், அந்தக் கோப்பு மனத்தின் மூன்றாவது பகுதியான புத்திக்குச் செல்கிறது. புத்தி என்ற பகுதியில்தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. இங்குதான் பாகுபடுத்தல் துவங்கு கிறது.

‘நான் எந்த விதத்தில் இந்தக் கோப்புடன் தொடர்புகொண்டுள்ளேன்? இந்த நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு? எந்த அளவிற்கு இது எனக்கு உதவிகரமாக இருக்கும்? இந்தக் காட்சிக்கு நான் என்ன பதில் செயல்புரிய வேண்டும்?’ என்ற பாகுபடுத்துதல் தொடங்குகிறது.

உடனடியாக நீங்கள், உங்கள் கடந்தகால நினைவுகளைப் புரட்டிப் பார்ப்பீர்கள்; ஆம், உங்களுடைய புத்தி, கடந்தகால நினைவுகளை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுக்கிறது.

உங்கள் புத்தியின் கருத்துப்படி, என்னைப் பற்றிய கடந்தகால நினைவுகள் நல்லவையாக, இனிமையானதாக இருந்தால், நீங்கள் நேர்மறை யான வழியில் பதில்செயல் புரிவீர்கள். ‘இவருடைய நேற்றைய சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது. அதனால் இன்றும் சொற்பொழிவைக் கேட்கலாம்’ என்று உங்கள் புத்தி சொல்லும்.

ஆனால், என்னுடனான உங்களுடைய கடந்தகால அனுபவங்களை இனிமையற்றவையாகவும், சலிப்படையச் செப்பவையாகவும் உங்கள் புத்தி உணர்ந்து இருந்தால், உடனே உங்கள் புத்தி, ‘இது உனக்கான இடம் அல்ல என்றும், இந்த இடத்தைவிட்டு அகன்றுவிடு’ என்று சொல்லும்.

இவையெல்லாமே உங்கள் மனத்தில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் ‘விழிப்புநிலை நினைவு’களின் அடிப்படையில் எடுக்கப்படும் தர்க்க ரீதியான முடிவுகள்.

விழிப்புணர்வு மனம் என்பது
மனத்தின் ஒட்டு மொத்த
ஆற்றலில் 10% மட்டுமே.

இந்தச் செயல்முறைவரை, புலன்களால் உணரப்பட்டு, ஒவ்வொரு பகுதியா கக் கடந்து வந்த கருத்தும், மனத்தால் பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கருத்தும், நேரடியாக ஒன்றையொன்று சார்ந்துள்ளது. இது விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடு.

விழிப்பற்ற உணர்வும் நமக்குக் கிடைத்த பொக்கிஷமே!

நான் இதற்கு முன்பே ஒருமுறை விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு அற்ற மனம் பற்றி விவரித்திருக்கிறேன். உளவியல் நிபுணர்கள், ஆழ்நிலை-விழிப்புணர்வு மனத்தைப் (Subconscious) பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், அப்படியொரு மனம் இல்லை. இந்த வார்த்தை உங்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் புலன்களால் உணரும் 90% செய்திகள் நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிக்குச் செல்கிறது என்பதும், நாம் எதையெல்லாம் புலன்கள் மூலம் உணர்கிறோம் என்பதுகூட தெரியாமலேயே இருக்கிறோம் என்பதும் மனவியல் நிபுணர்களுக்குத் தெரியும். இது, ஆழமானதொரு பள்ளத்தாக்கிற்குள் குதிப்பதுபோன்றது. 90% செய்திகள், பெரும் பாய்ச்சலாக, நம்முடைய இருண்ட விழிப்பற்ற மனத்திற்குள் புகுகின்றன.

இந்தப் பெரும் பாய்ச்சலுக்கு எந்தவித காரணமும் இல்லை. இது அதிர்ச்சி தரக்கூடிய செய்திதான், ஆனால், உண்மை! அதன் விளைவாக, நம்முடைய 90% மன ரீதியான செயல்பாடுகள், நாம் அறியாத விழிப்புணர்வற்ற நிலையில்தான் நிகழ்கின்றன.

விழிப்புணர்வு மனம் என்பது ஒரு மிதக்கும் பனிக்கட்டியின் நுனிப்பகுதி போன்றது. அதன் 90% பகுதி, நீரின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ளது. நாம் அதைப் பார்ப்பதும் இல்லை, உணர்வதும் இல்லை. நாம் அதை உபயோகிப்பதும் இல்லை.

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நாம் இந்தப் பகுதியில், எல்லையில்லா ஓர் ஆற்றலைக் கொண்டிருக்கிறோம். அந்த விழிப்புணர்வற்ற மனத்தை 10% விழிப்படையச் செய்தாலே போதும், நம் மனத்தின் வலிமையை இரட்டிப்பாக்க முடியும். ஒவ்வொருவரும் ஐன்ஸ்டின் ஆக இருப்பார்கள். இந்த அதிகப்படியான மனத்தின் ஆற்றலை நாம், நல்ல விஷயங்களுக்கு உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்ளக்கூட முடியும்.

புலன்களால் பெறப்பட்ட செய்திகளை அடையாளப்படுத்தும் இந்தச் செயல்முறை, விழிப்புணர்வு நிலையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டால், அதாவது புத்தி நிலையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டால், நாம் புத்தியை உபயோகித்து, விழிப்புணர்வு நிலையிலேயே முடிவெடுப்போம். இது பரவாயில்லை. ஆனாலும், இது, ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையே, ஏனென்றால் விழிப்புணர்வு மனம் என்பது மனத்தின் மொத்த ஆற்றலில் 10% மட்டுமே.

நம் மனத்தின் ஒட்டுமொத்த ஆற்றலில் 10% மட்டுமே பயன்படுத்தி எடுக்கப்படும் முடிவுகளையே நாம், பட்டறிவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்கிறோம். இந்த முடிவுகள், காரணங்களையும் பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டனவாகவே இருக்கும். நாம் இந்தச் சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்; ஆனால், நம்முடைய மனத்தின் 90% பகுதியான விழிப்புணர்வற்ற பகுதியைப் பற்றி நாம் மறந்தே விட்டோம்.

பிரெஞ்சு தத்துவ ஞானியான டெஸ்கார்டிஸ் (Descortes), "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்," என்று சொல்கிறார். அவர் தம்முடைய ஆற்றலை 10%க்குள் கட்டுப்படுத்திக்கொண்டு விட்டார் என்பதை உணரவில்லை. என்ன ஒரு வருந்தத்தக்க நிலை!

நம்முடைய விழிப்புணர்வு மனத்திற்கு எல்லைக்குட்பட்ட ஆற்றல் மட்டுமே இருப்பதால், விழிப்புணர்வு அற்ற மனத்தை உபயோகித்து, பல விஷயங்களைத் தீர்மானிக்கும்படி நம்மை இயற்கையானது கட்டமைத்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த விழிப்புணர்வு அற்ற மனம் ஒரு கட்டுறுத்தப்பட்ட மனமாகவே இருக்கிறது. இது, நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குள் புகுத்தப்பட்டுள்ள நினைவுப்பதிவுகளாலும் நம்பிக்கைகளாலும் ஒழுக்க விதிமுறைகளாலும் நிரம்பியுள்ளது.

எதுவுமே மனத்தில் எளிதில் ஆழமாகப் பதிவாகும் சிறு வயதில், நம் பெற்றோர்களாலும் பெரியோர்களாலும் கற்றுக் கொடுக்கப்பட்டவை மட்டுமல்ல, சமூகத்தாலும் மதத்தாலும் கற்றுக் கொடுக்கப்பட்ட எல்லாமே, இந்த விழிப்புணர்வு அற்ற பகுதியில்தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இதை எப்போதுமே நம்மால் திறக்க முடியாது.

விழிப்புணர்வு மனம் என்பது ஒரு மிதக்கும் பனிக்கட்டியின் நுனிப்பகுதி போன்றது.

அது விரும்புகின்றபோது தானாகவே திறக்கும்; அதுவும் முக்கியமாக நாம் மன அழுத்தத்திலும் மனக்காயத்திலும் இருக்கும்போது திறக்கும். நம்முடைய நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும்பொழுது எப்படி வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் நம்மைத்

தாக்கி நோயில் வீழ்த்துகின்றதோ,
அதேபோல், நினைவுப்பதிவுகள்
மற்றும் ஸம்ஸ்கார வைரஸ்கள்
நம்முடைய உணர்ச்சி அமைப்புகள்
தளர்வடைந்திருக்கும்பொழுது, நம் மீது
ஆதிக்கம் செலுத்துகின்றன.

விழிப்பற்ற மனம் எல்லையில்லா ஆற்றல் களஞ்சியம்!

ஸம்ஸ்காரங்கள், இந்தப் பிறவியில் மட்டுமே திரட்டப்பட்டவை அல்ல. மன அமைப்புகள் முற்பிறவியிலிருந்து எடுத்து வரப்படுபவை. நரம்பியல் விஞ்ஞானிகள் நமது மூளையின் ஒரு பகுதியான ‘ரெப்டிலியன் ப்ரெய்ன் (Reptilian brain)’ என்னும் பகுதியில், கடல்வாழ் உயிரினத்திலிருந்து இப்பொழுதுவரை, பரிணாம வளர்ச்சி முறைப்படி, நாம் எடுத்துள்ள எல்லாப் பிறவிகளின் நினைவுப்பதிவுகளும் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். மதங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அறிவியல் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.

செய்திகள், விழிப்புணர்வு மனத்திலிருந்து, மனத்தின் விழிப்புணர்வற்ற பகுதிக்கு, அதாவது அஹங்காரத்திற்கு அனுப்பப்படுகின்றன.

நான், மனத்தின் இந்த விழிப்புணர்வற்ற பகுதியை அஹங்காரம் என்று குறிப்பிடுவது, அது கர்வமானது என்பதால் அல்ல; இது உங்களுக்கு, ‘நீங்கள் யார்’ என்ற அடையாளத்தைத் தருவதால் அவ்வாறு குறிப்பிடப்படுகிறேன்.

‘ஈகோ’ (Ego) என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு ‘முகமூடி’ என்று அர்த்தம். அடையாளம் என்பது நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியே, அது நீங்கள் அல்ல.

உங்களுடைய அடையாளம் தோன்றுவதே உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்திலிருந்துதான். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அப்படித்தான் உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறீர்களே தவிர, உண்மையில் நீங்கள் யாரோ அப்படி வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

முதலில், உங்களுக்கே நீங்கள் யார் என்பது தெரிவதில்லை. ‘நீங்கள் யார்’

என்பது உங்களுடைய விழிப்புணர்வற்ற
மனத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும்
எல்லா முக்கியமான முடிவுகளும், இந்த
விழிப்புணர்வற்ற பகுதியிடம்தான்
ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

ஸம்ஸ்கார வைரன்,
நம்முடைய உணர்ச்சி
அமைப்புகள்
சோர்வடைந்திருக்கும்போது,
நம்மைத் தாக்கி,
நம் மீது ஆதிக்கம்
செலுத்துகின்றன.

இந்த விழிப்புணர்வற்ற மனம், உங்களைப் பற்றிய உணர்ச்சிசி கரமான நினைவுகள் மற்றும் நம்பிக்கைகளின் கருவூலம். இதுவே நீங்கள் யார் என்பதைக் கட்டமைக்கிறது. அதன்மூலம் உங்கள் அடையாளத்தை உருவாக்குகிறது. இதைத்தான் நான் அஹங்காரம் (ஈகோ) என்கிறேன்.

விழிப்புணர்வு மனம், எந்தவிதமான முக்கிய தீர்மானங்களையும் எடுப்பதில்லை. தன்னுடைய எல்லைக்குட்பட்ட அறிவுத்திறனால் எட்ட முடிந்த சில முடிவுகளை மட்டுமே எடுக்கிறது.

நம்முடைய விழிப்புணர்வற்ற மனமே, வாழ்க்கையில் ஏற்படும் வாழ்வா சாவா என்று அச்சுறுத்தக் கூடிய சூழ்நிலைகளைக் கையாள்கிறது. இந்தச் சூழ்நிலைகளை நம்முடைய விழிப்புணர்வு மனம், மிக மெதுவாகத்தான் கையாளும்.

நாம் மீண்டும், நீங்கள் இங்கு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவத்திற்குச் செல்வோம். உங்களுடைய விழிப்புணர்வு மனம் நேரடியாக முடிவெடுக்காதபொழுதுதான் பிரச்சினையே எழுகிறது.

உங்களுக்குக் கடந்தகாலத்தில் வேறு யாராவது ஒரு காவி உடை அணிந்தவருடன் ஏதாவது ஒரு அனுபவம் ஏற்பட்டு இருந்தால், உங்களுக்குள் அதைக் குறித்த நினைவுப்பதிவுகள் இருக்கும். நீங்கள், இங்கு காவி உடை அணிந்திருக்கும் இந்த மனிதர் யார் என்பதையெல்லாம் கருத்திற்கொள்ளமாட்டீர்கள். நீங்கள் உங்கள் நினைவுகளுக்கு ஏற்ப, "அந்த குருவிடம் சென்று, நான் அந்த மாதிரி துன்பப்பட்டேன், மீண்டும் வேறு குருவிடம் சென்று, அந்த மாதிரி கஷ்டப்பட்டேன்," என்று சொல்வீர்கள். அது ஒரு பொதுவான நினைவுகளாகத்தான் இருக்கும். இங்குக் காவி உடை அணிந்திருக்கும் இவருக்கும், முன்பு சந்தித்த காவி உடை அணிந்தவருக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உணரமாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய ஒன்று சேர்க்கப்பட்ட கடந்தகால ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பீர்கள்.

அங்குதான் நாம் பிரச்சினைகளை உருவாக்குகிறோம். முடிவுகள், நேரடியான புரிதல்கள் மூலம் எடுக்கப்படும்பொழுது, பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், நாம் பெரும்பாலான நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நினைவுப்பதிவுகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்து, அதற்கேற்றவாறு எதிர்ச்செயல் புரிந்துகொண்டு இருக்கிறோம்.

உங்களுடைய
அடையாளம் தோன்றுவதே
உங்களுடைய
விழிப்புணர்வற்ற
மனத்திலிருந்துதான்.

உதாரணத்திற்கு, நீங்கள் வெள்ளை உடை அணிந்திருக்கும் ஒருவரைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வெள்ளை உடை அணிந்த ஒருவரால் கடந்தகாலத்தில் நீங்கள் ஏதாவது ஒருவிதத்தில் மனத்தளவில் காயப்பட்டு இருக்கலாம். இப்போது நீங்கள் வெள்ளை உடையைப் பார்த்தவுடன், உங்களின் பழைய நினைவுகள் நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட மீண்டும் வருகின்றன.

அதேபோல, நம்மை மரியாதை குறைவாகவோ அல்லது இழிவாகவோ ஓர் வீட்டில் நடத்தினார்கள் என்றால், அடுத்த முறை அந்த வீட்டிற்குள் நுழையும்பொழுது, தன்னிச்சையாகவே அந்த நினைவுகள் எழும்புகின்றன, அந்த வீட்டில் அந்த நபர் இல்லையென்றாலும்கூட! அதனால் மீண்டும் நாம் அதே உணர்ச்சியை அனுபவமாக உணர்கிறோம், பிறகு மன அழுத்தத்திற்கும் உற்சாகமற்ற மன நிலைக்கும் சென்றுவிடுகிறோம்.

நினைவுப்பதிவுகள் குறைந்திட்டால் நம்முள் சுதந்திரம் அதிகரிக்கும்

நாம் விஷயங்களை இடங்களுடனும் காரணங்களுடனும் நினைவுகளுடனும் இணைத்தும், கோர்த்தும் அவற்றை நினைவுக் கோப்புகளில் இடுகிறோம்.

தன்னிச்சையாகச் செயல்பரியும் திறனற்றவர்களாக நாம் இருக்கிறோம். அதனால் நாம், வேலையின் செயல்பாடுகளைக் குறைக்க, சில நுட்பங்களையும் வழிமுறைகளையும் சார்ந்து இருக்கிறோம்.

Person looking up from between two stacks of folders

பிறகு இயற்கையாகவே நாம், நம்முடைய நினைவுகளில், ஒருவித ஒழுங்குமுறையை விரும்புகிறோம். அதன் விளைவாக நாம், உண்மையான வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறோம்.

திருமணமான முதல் சில மாதங்களுக்குத் தான், நாம் நம் வாழ்க்கைத்துணைக்கு உடனுக்குடன் இயல்பாகப் பதிலளிப்போம். அதற்குள் நாம், நம் வாழ்க்கைத்துணையைப் பற்றி ஒரு தெளிவான கருத்தை உருவாக்கிவிடுவோம்.

அதன்பிறகு நாம் உண்மையில் நம் வாழ்க்கைத் துணையுடன் வாழ்வதில்லை. அவர்களைப்பற்றி நாம் கொண்டுள்ள கற்பனையின் அடிப்படையில்தான் வாழ்கிறோம். அவர்களைப்பற்றி நாம் கொண்டுள்ள புரிதலின் அடிப்படையில்தான் வாழ்கிறோம்.

நாம் விஷயங்களை இடங்களுடனும் காரணங்களுடனும் நினைவுகளுடனும் இணைத்தும் கோர்த்தும், அவற்றை நினைவுக் கோப்புகளில் இடுகிறோம்.

அதன்பிறகு அவர்கள் எதைச் செய்தாலும், அது நமக்குத் தவறாகவே தெரியும். நாம் முன்பே தீர்மானித்த கருத்தின்படி, 'அவர் எப்பொழுதுமே தவறு செய்பவர்' என்ற முடிவுக்கு வருகிறோம். நம்முடைய துணை எதையாவது சரியாகச் செய்தாலும்கூட, 'ஏதோ தவறுதலாக' இம்முறை சரியாக நடந்துவிட்டது!' என்றே சொல்வோம்.

திருமணமான சில மாதங்களிலேயே, நாம் நம்முடைய துணையைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். இந்த முடிவை அடிப்படையாகக்கொண்டு, அவர்களைப் பற்றிய நினைவுப்பதிவுகளை நாம் உருவாக்கிக்கொள்வோம். அதன் பிறகு அவர் எதைச் செய்தாலும், அவரைப்பற்றி நாம் பதிவுசெய்து வைத்திருக்கும் நினைவுப்பதிவுகள் என்னும் வடிகட்டி மூலமாகவே, அவருடைய செயல்களுக்கான தீர்ப்பை வழங்குவோம்.

சில சமயங்களில், மற்றவர்களுடைய அனுபவங்கள் மூலமாகவும் அல்லது தொலைத் தொடர்பு சாதனங்களின் பாதிப்பின் அடிப்படையிலும்கூட, நம்முடைய நினைவுப்பதிவுகளை நம்முடைய மன-அமைப்புகளில் உருவாக்குகிறோம்.

ஒரு சின்ன கதை:

ஒருநாள், ஈமச்சடங்கு ஊர்வலம் ஒன்று
சாலையில் சென்று கொண்டிருந்தது.
அந்த ஊர்வலத்தில் ஓர் மனிதர், இரண்டு
வேட்டை நாய்களுடன், இறந்துவிட்ட
பெண்மணியின் உடலுக்கு முன் சென்று
கொண்டிருந்தார்.

ஒரு நீண்ட வரிசை அவரைப் பின்தொடர்ந்து
சென்றது. அந்த நீண்ட வரிசையைப் பார்த்த
ஒருவர், இறந்தவர் மிகப் பிரபலமானவராக
இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

முடிவுகள்,
நேரடியான புரிதல்கள் மூலம்
எடுக்கப்படும்பொழுது,
பெரிதாக பிரச்சினைகள்
ஏதும் ஏற்படுவதில்லை.

அந்தப் பார்வையாளர், வேட்டை நாய்களுடன் சென்று கொண்டிருந்த மனிதரைப் பார்த்து "இறந்தவர் யார்?" என்று கேட்டார்.

"என்னுடைய மாமியார்," என்று அந்த மனிதர் பதிலளித்தார்.

உடனே அந்தப் பார்வையாளர், "இந்த இரண்டு நாய்கள் உங்கள் மாமியாரின் செல்லப் பிராணிகளா?" என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லை, இல்லை... இவை அவரை மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொன்ற நாய்கள்," என்றார்.

பார்வையாளர் ஆச்சரியத்துடன், "என்ன கொன்றுவிட்டதா!" என்று கேட்டார். "ஆம்," என்றார் அந்த மனிதர். உடனே அந்தப் பார்வையாளர் ஒருவித பரபரப்புடன், "இரண்டு நாட்களுக்கு மட்டும், உங்களுடைய நாய்களை எனக்குக் கடனாகத் தர முடியுமா?” என்று கேட்டார்.

உடனே அந்த மனிதர், அவரைத் தொடர்ந்து வந்த மக்களின் வரிசையைக் காண்பித்து, “அந்த வரிசையில் போய் நில்லுங்கள்,” என்றார்.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களைப் பற்றிக்கொண்டு, பிறருடன் தொடர்புகொள்ளும்போது இதுதான் நிகழ்கிறது. நாம் பல நினைவுகளைச் சேர்த்துக் கொள்ளும்பொழுது, மனிதர்களை உள்ளது உள்ளபடியே, அதாவது அவர்களை அவர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் தொடர்புகொள்வதில்லை. நாம் அவர்களைப் பற்றி முன்பே தீர்மானித்து வைத்திருக்கும் கருத்துக்களின் அடிப்படையில்தான், அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நாம் பதிவுசெய்து வைத்திருக்கும் நினைவுப்பதிவுகள் என்னும் வடிகட்டி மூலமாகவே, மற்றவர்களுடைய செயல்களுக்கான தீர்ப்பை வழங்குகிறோம்.

மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது: “ஸ்வாமிஜி, நம்முடைய வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டதா அல்லது நம்முடைய விருப்பத்திற்குட்பட்டதா?”

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நமக்குள் எந்தளவுக்கு அதிகமாக நினைவுப்பதிவுகள் இருக்கின்றனவோ, அந்தளவுக்கு அதிகமாக நம்முடைய வாழ்க்கையும் முன்பே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கும். ஏனென்றால், நாம் அதே பாதையில் மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருப்போம்.

குறைந்த அளவு நினைவுப்பதிவுகள் நம்முள் இருந்தால் மட்டுமே, நாம் மிகுந்த சுதந்திரத்தை அனுபவிப்போம்.

ஸம்ஸ்காரங்களின் எண்ணிக்கையே, நம்முடைய வாழ்க்கைமுறையானது, நம் விருப்பத்திற்குட்பட்டதாக இருக்கிறதா அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கிறது.

அஹங்காரம்- முடிவெடுக்கும் அலுவலகம்

உதாரணத்திற்கு, இந்தக் கோப்பு அஹங்காரத்தை நோக்கிச் செல்கிறது. அஹங்காரம், தன்னுடைய பட்டியலில் இருக்கும் அனைத்து ‘ஆம்’ என்ற பதில்களையும், அனைத்து 'இல்லை' என்ற பதில்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்கிறது. நாம் அதைச் செயல்படுத்துகிறோம்.

ஒருவேளை, நம்முள் நிறைய எண்ணப்பதிவுகள் இருந்தால், அந்தக் கோப்பு, அரசாங்க அலுவலகத்தில் அனுப்பப்படுவதுபோல, ஒவ்வொரு நினைவுப்பதிவு மேஜைக்கும் அனுப்பப்படும். ஒவ்வொரு நினைவுப்பதிவும், தன்னுடைய கருத்தை எழுதி, அதன்கீழ் தன்னுடைய முத்திரையைக் குத்தி, கையெழுத்திட்டு, அடுத்த நினைவுப்பதிவு மேஜைக்கு அனுப்பும்.

உதாரணத்திற்கு, இந்தச் சொற்பொழிவில் பங்கு பெறுவதையும், என்னை பார்த்துக்கொண்டிருப்பதையுமே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு எண்ணப்பதிவு, "இதற்கு முன் ஒரு குரு இருந்தார். வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் அவர். அவர் எனக்கு நிறைய உதவியிருக்கிறார். அதனால் நான், இப்போது, இங்கு, இந்த குருவிருக்கும் இடத்திலும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்," என்று சொல்லும். உடனே அந்த எண்ணப்பதிவு "ஆமாம், நான் இங்கு அமர்ந்திருப்பேன்," என்று கையெழுத்திடும்.

அடுத்த எண்ணப்பதிவு, "குருமார்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள், அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நான் செய்தித்தாள்களில் படித்தேன்," என்று சொல்லும். அதனால் இரண்டாவது எண்ணப்பதிவு, "நான் இங்கு அமரலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது," என்று சொல்லி கையெழுத்திடுகிறது.

பத்திரிக்கைகளில் அதிகமாகவே, அதுவும் குறிப்பாகத் தென்னிந்தியாவில், குருமார்களைத் தவறாகப் பழித்துச் சொல்வது என்பது ஒரு நாகரிகமாகவே இருக்கிறது.

அதன்பிறகு அந்தக் கோப்பு (file), அடுத்த மேஜைக்குச் செல்லும். மூன்றாவது எண்ணப்பதிவு, "நான் இவருடைய சொற்பொழிவில்

நேற்று பங்கேற்றேன். அவர் என்ன
சொல்கிறாரோ அதில் அர்த்தம் இருக்கிறது.
நான் இங்கேயே இருக்க வேண்டும் என்று
நினைக்கின்றேன்," என்று சொல்லும்;
இந்த எண்ணப்பதிவு 'ஆமாம்' என்று
கையெழுத்திடும்.

அந்தக் கோப்பு, இறுதியில் அஹங்காரத்தைச் சென்றடைகிறது. அஹங்காரம், இந்த எண்ணப்பதிவுகளின் 'ஆமாம்' என்ற எல்லாப் பதில்களையும், 'இல்லை' என்ற எல்லாப் பதில்களையும் அடிப்படையாகக்கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறது. 'ஆமாம்' என்பதோ 'இல்லை' என்பதோ ஒரு பிரச்சினை கிடையாது. ஆயினும், ஒரு சிறிய முடிவெடுப்பதற்குக்கூட, நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறோம்.

உதாரணத்திற்கு, நீங்கள் அலுவலகத்தில், ஏதோ ஒரு சிறு முடிவெடுக்கத் தெரியாமல், அதனைக் குறித்து கவலைப்பட்டுச் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் மன அழுத்தத்திற்குள் விழுவது உறுதி. எந்த வேலையும் செய்யாவிட்டாலும், பதினைந்து நிமிடங்களுக்குள் உங்களது தோள்பட்டைகள் வலிக்கத் துவங்கும். ஒரு சிறிய முடிவு எடுப்பதற்காகக் கவலைப்படுதல், தோள்பட்டை வலியை ஏற்படுத்துகிறது. எண்ணப்பதிவுகள் அதிகமாக அதிகமாக, அமைதியற்றும் ரஜோ குணத்திலும் நீங்கள் இருப்பீர்கள்.

அதிகமான எண்ணப்பதிவுகள் உடையவர்கள், ஒருபொழுதும் தளர்வாக இருப்பதில்லை. மன அழுத்தத்தில் இருக்கும் மக்களால் அமைதியாக உட்கார முடிவதில்லை. அதிகமான உடல் அசைவுகளும், அமைதியற்ற உடல்மொழியும், அவர்களுடைய விழிப்புணர்வற்ற மனத்தில், பல தீர்மானங்கள் ஓடிக் கொண்டிருப்பதனால் ஏற்படுகிறது.

இந்த புத்திக்கும் அஹங்காரத்திற்கும் இடையே இருக்கும் 'வெளி'தான் (Space) விழிப்புணர்வற்ற மனம். இந்த மனத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாததால், அங்கு எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரிவதில்லை.

அது ஒரு அரசாங்க அலுவலகம் போன்றதுதான். ஒரு தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க, அங்கு 300 மேஜைகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் கையெழுத்திட வேண்டும்.

அந்தக் கோப்பு அங்கீகாரம் பெறுவதற்கு 300 மேஜைகளையும் கடக்க வேண்டும். அது ஒவ்வொரு மேஜையாக எப்பொழுது நகரும், யார் அதில் கையெழுதிடுவார்கள், இறுதி முடிவு என்ன என்பது நமக்கும் தெரியாது; அந்தக் கடவுளுக்கும் தெரியாது!

விழிப்புணர்வுப் பகுதி என்பது ஒரு நேர்மையான அலுவலகத்தைப் போன்றது. அந்த மாதிரி ஒரு அலுவலகத்திற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால் எந்த அலுவலகத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, அதுபோன்ற, சொல்லத்தக்க பொருத்தமான உதாரணம் ஏதும் இல்லை.

ஸம்ஸ்காரங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுங்கள்!

புகைபிடித்தலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். விழிப்புணர்வு நிலையில் சேர்க்கப்பட்ட குறிப்புகளின்படி, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நமக்குத் தெரியும்.

நாம் ஏற்றுக்கொண்ட எளிய, நேரடியான கருத்தின்படி, புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று நமக்குத் தெரியும். ஆயினும் திடீரென்று ஒருநாள் நாம் புகைபிடிக்க முடிவெடுக்கிறோம்.

'புகைபிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு, ஆகவே புகைபிடிக்க வேண்டாம்' என்ற இந்தக் கோப்பு, எப்படி இப்படி ஒரேயடியாக, 'புகைபிடிக்கலாம்' என்ற மேஜைக்குத் தாவுகிறது? எப்படி இப்படிப்பட்ட தாவலுக்கு உள்ளாகிறது? எப்படி முதல் முடிவு மொத்தமாக மாற்றப்படுகிறது? அந்தக் கோப்பு விழிப்பற்ற பகுதியில் பயணிக்கும்பொழுது, எண்ணப்பதிவுகள் "இல்லை, இல்லை, சென்ற முறை புகைபிடிக்கும்பொழுது, நான் எல்லாவிதமான மன அழுத்தத்திலிருந்தும்

> ஒரு சிறிய முடிவு
> எடுப்பதற்காகக்
> கவலைப்படுதல்,
> தோள்பட்டை வலியை
> ஏற்படுத்துகிறது.

வெளி வந்தேன், நான் சுகமாக இருப்பதை உணர்ந்தேன்," என்று சொல்லும்.

விழிப்பற்ற பகுதியில், எல்லாவிதமான கடந்தகால நினைவுகளும் குடியிருக்கும். திடீரென்று நாம் எதைச் செய்ய வேண்டாம் என்று நினைத்தோமோ அதையே செய்வதற்கான முடிவை எடுப்பது நம்முடைய விழிப்புணர்வற் ற நினைவுகளால்தான்.

"நான் புகைபிடித்தேன். அப்போது, நான் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்; எனக்கிருந்த வேதனை குறைந்ததைப்போல உணர்ந்தேன்; என்னுடைய எல்லா மன அழுத்தமும் மறைந்துவிட்டது,"

விழிப்புணர்வுப் பகுதி என்பது ஒரு நேர்மையான அலுவலகத்தைப் போன்றது.

என்று, நம் விழிப்புணர்வற் ற
நினைவுப்பதிவுகள் சொல்லும். உடனே
நாம் அதன்படி செயல்பட ஆரம்பிப்போம்.

நாம் எண்ணற்ற தீர்மானங்களை இந்த
எண்ணப்பதிவுகளின் அடிப்படையிலே
எடுக்கிறோம். பிறகு அதனைக் குறித்து, நாம்
வருத்தப்படுகிறோம்; துன்பப்படுகிறோம்.

சட்டென ஒரு சிறு விஷயத்திற்கும் கோபப்பட்டு விடுகிறோம். பிறகு பத்து நிமிடங்கள் கழித்து, 'நான் ஏன் சத்தம் போட்டேன்? நான் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கத்தானே விரும்பினேன். மக்களின் நினைவில், என்னுடைய அடையாளமாக, என்னுடைய சிரித்த முகம்தானே பதிந்திருக்க வேண்டுமென நினைத்தேனே, அதை நிர்மூலமாக்கும்படி, இன்று ஏன் இவ்வளவு கோபமாகச் சத்தமிட்டேன்?' என்று எண்ணி எண்ணி வருத்தப்படுவோம்.

இந்த எண்ணப்பதிவுகளின் விளைவாக, சட்டென முடிவுகளை எடுக்கிறோம். அதற்கேற்ப எதிர்செயல்களும் புரிகிறோம்.

இந்த எண்ணப்பதிவுகள் நம்முடைய தீர்மானங்களை எந்த அளவிற்கு இடைமறித்து குழப்பத்திற்குள்ளாக்கி, சிக்கலாக்கி மாற்றுவழியில் திசைதிருப்பிவிடுகின்றன என்பதைப் பார்ப்போம்.

கிருஷ்ணர், நம்முடைய இருப்புத்தன்மையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கச் சொல்கிறார்:

  1. நான் எப்படி, உண்மை நிலையைத் தவறவிட்டேன்?
  1. நான் ஏன், நினைவுப்பதிவுகளினால் ஏமாற்றப்படுகிறேன்?

கிருஷ்ணர், நம்மை ஆனந்தத்தை நோக்கியும் அமைதியை நோக்கியும் வழிநடத்தும் ஸத்வ குண ஸம்ஸ்காரங்களைப் பற்றியும், அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் எடுத்துச் செல்லும் ரஜோ குண ஸம்ஸ்காரங்களைப் பற்றியும், மனச்சோர்விற்குள் தள்ளும் தமோ குண ஸம்ஸ்காரங்களைப் பற்றியும் பேசுகிறார்.

மேலும் அவர் இந்த ஸம்ஸ்காரங்கள் நம்முடைய முடிவு எடுக்கும் செயலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் விவரிக்கிறார்.

விழிப்பற்ற மனத்திலிருந்து எடுக்கப்படும் முடிவுகள் துக்கத்தையே தருகின்றன!

நம்முடைய ரேடியோவில் திடீரென்று,
ஒரே நேரத்தில் மூன்று அலைவரிசைகளும்
ஒன்றாகக் கேட்கிறது என்று வைத்துக்
கொள்வோம். அதாவது ஒரு
அலைவரிசையில், அழகுக் குறிப்பும்,
இரண்டாவது அலைவரிசையில்,
விவசாயச் செய்முறைகளும்,
மூன்றாவது அலைவரிசையில்,
ஒரு நகைச்சுவை நாடகமும்
ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது என
வைத்துக்கொள்வோம்.

அதன் விளைவு நிச்சயம் இப்படித்தான் இருக்கும்:

"உங்கள் முகத்தை சுத்தமாக துடைக்கவும். அதன்பிறகு சிறிதளவு பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கவும். இப்பொழுது உங்கள் பற்களை சுத்தமாகத் துலக்குங்கள். மேலும் சிறிதளவு பூச்சிக் கொல்லி மருந்தைப் போடவும். கடைசியாக மேலும் கீழும் குதித்து, உங்கள் கை கால்களைத் தட்டிச் சிரிக்கவும்!"

நாம் இது போன்ற இடைச்செருகலுடன் கூடிய. கலப்படம் வாய்ந்த செய்முறைகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துச் செயல்பட்டோமென்றால், சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய நிலை எப்படியிருக்கும் என்று!

அதேபோல நாம், மூன்று விதமான நினைவுப்பதிவுகளான ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றோடு செயல்பட முயற்சி செய்யும்பொழுது, மூன்றும் ஒன்றை ஒன்று முந்த முயற்சி செய்யும்பொழுது, அவை நம்முடைய வாழ்க்கையில் நரகத்தையே உண்டாக்கும்.

நம்மைத் திரும்பிப் பார்ப்பதே புத்திசாலித்தனம்

உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்! 1. நான் எப்படி, உண்மை நிலையைத் தவறவிட்டேன்? 2. நான் ஏன், நினைவுப்பதிவுகளினால் ஏமாற்றப்படுகிறேன்?

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், புத்திசாலிகள், ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டுமென்பதற்காக வாதங்களைச் சேகரிப்பார்கள். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் வாதங்களைச் சேர்ப்பது, நாம் முன்பே எடுத்து வைத்திருக்கும் தீர்மானத்திற்கு வலு சேர்ப்பதற்குத்தான்.

நம்முடைய வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தோமானால், நம்முடைய வாழ்வில் இதுவரை எத்தனை முறை நாம், நம்முடைய தவறுகளைத் தவறுகளாக உணர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

நம்முடைய வாழ்க்கையை உற்று நோக்கி, எங்கெங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கேகூட, புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. நாம் பொதுவாக, கர்வத்தினால் அல்லது குற்றவுணர்ச்சியினால் எதிர்ச்செயல்களைச் செய்கிறோம்.

"ஆமாம், நான் தவறு செய்துவிட்டேன், அதனால் என்ன?" என்று கேட்கிறோம். நாம் நம்முடைய தவறான செய்கையை அப்படியே ஒதுக்கி வைத்துவிடுகிறோம். இது ஒருவிதமான அணுகுமுறை.

மற்றொரு அணுகுமுறை குற்றவுணர்ச்சியினால் துன்புறுவது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அறிவுத்திறன் இல்லாத ஒரு மனிதர் எப்பொழுதுமே குற்றவுணர்ச்சியில் விழமாட்டார். நானும், உங்களுடைய குற்றவுணர்ச்சியை விட்டுவிடுமாறு சொல்கிறேன். ஆனால், நான் இதைச்சொல்லும்போது, முற்றிலும் வேறுவிதமான கருத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.

புத்திசாலி மனிதர் மட்டுமே, தர்மத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடியவர் மட்டுமே, குற்றவுணர்ச்சியினால் துன்பப்படுகிறார். உள்ளுணர்ச்சியின் தூண்டுதலால் மட்டுமே செயல்படும் ஒரு மனிதர், ஒருபோதும் குற்றவுணர்ச்சியில் வீழ்வதில்லை.

ஒரு அர்ஜுனனோ அல்லது ஒரு யுதிஷ்டிரனோ, குற்றவுணர்ச்சியில் வீழ்வார். ஆனால், துரியோதனன், குற்றவுணர்ச்சியில் விழமாட்டார்.

பட்டறிவு நிலையில் உள்ள மனிதர்கள், குற்றவுணர்ச்சியில் துன்பப்படுகிறார்கள். நுண்ணறிவு நிலையில் உள்ளவர்கள் குற்றவுணர்ச்சியைத் தாண்டிச் செல்கின்றனர். அவர்கள் ஸத்யத்தை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்கிறார்கள்.

கிருஷ்ணர், இந்த மூன்று விதமான குணங்களையும் எப்படிச் சரியாகக் கையாள்வது என்றும், அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்றும் பேசுகிறார். அவற்றிலிருந்து அதிகபட்ச நன்மையைப் பெறுவதே ஒரு புத்திசாலித்தனமான செயல்பாடு.

ஒரு சின்ன கதை:

நாணயத்தை விழுங்கிவிட்ட ஒரு குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த மருத்துவர், பல வழிகளிலும் அதை வெளியே எடுக்க முயன்றார். ஆனால், ஒரு பயனும் இல்லை. அங்கிருந்த செவிலிப் பெண்ணும் (Nurse) முயற்சி செய்தார், ஆனால், அந்த நாணயத்தை வெளியே எடுக்க முடியவில்லை.

அருகில் நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவரும் முயன்றார், பலனில்லை. அதுவ

> எங்கெங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கேகூட புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது!

ரை அமைதியாக நின்று, இதையெல்லாம்
கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், நாண
யத்தை வெளியே எடுக்க உதவ முன்வந்
தார்.

"உங்களால் எப்படி உதவி செய்ய முடியும்," என்று அந்த மருத்துவர் கேட்டார். "எனக்கு ஒரு நிமிட அவகாசம் தாருங்கள்," என்று சொல்லிவிட்டு, அந்த நபர் அந்தக் குழந்தையிடம் பேசினார். சில நிமிடங்களில், சிரித்த முகத்தோடு கையில் நாணயத்தோடு வந்தார். ஆச்சரியப்பட்ட மருத்துவர், "நான் ஒரு மருத்துவர். என்னாலேயே அந்த நாணயத்தை வெளியே எடுக்க முடியவில்லை. நீங்கள் மட்டும் எப்படி எடுத்தீர்கள்," என்று கேட்டார்.

அவர், "நான் ஒரு வேடதாரி (Con artist), என்னால் எவரிடமிருந்தும் பணத்தைக் கறந்துவிட முடியும்," என்றார்.

கிருஷ்ணர் மூன்று குணங்களிலிருந்து நாம் அதிகபட்சமான நன்மைகளைப் பெறுவதற்கான குறிப்புகளையும் நுட்பங்களையும் தருகிறார்! இந்த மூன்று அடுக்கு நினைவுப்பதிவுகளுக்குள் செல்லுமுன், அதாவது ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் தொடர்பான ஸம்ஸ்காரங்களுக்குள் செல்லுமுன், நாம் இதில் எப்படி சிக்கியுள்ளோம், இந்த நினைவுப்பதிவுகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை விளக்குகிறேன். பிறகு நாம் ஒவ்வொரு நுட்பங்களுக்குள்ளும் நுழைவோம்.

நீங்கள் வசிப்பது, ஏழு உடல்களில்...

நம்முடைய உடல் - மன அமைப்பில் ஏழு சக்தி அடுக்குகள் உள்ளன. இவை நம்முடைய இருப்புத்தன்மையின் ஏழு பகுதிகள் ஆகும்.

முதலில் இருப்பது ஸ்தூல சரீரம், தசைகளாலும், எலும்புகளாலும் ஆன நம்முடைய உடல்.

இரண்டாவது ப்ராண சரீரம், ப்ராண, வியான, உதான, அபான மற்றும் ஸமான என்ற 5 விதமான ப்ராண ஓட்டங்கள் நிகழும் தளம்.

ஏழு சக்தி அடுக்குகள் படம்

ஏழு சக்தி அடுக்குகள் படம்

மூன்றாவது மன சரீரம். இங்குதான் நம்முடைய மனத்தின் உள்-பேச்சுகள் இடைவிடாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாம் நின்று கொண்டிருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும் அல்லது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும், ஒரு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவிபோல (Recorder) தொடர்ந்து உள்பேச்சு நமக்குள் நடக்கிறது.

சில சமயம், நாம் வாய் திறந்து சத்தமாகவே பேசுவோம். வேறு சில சமயங்களில், நாம் வாயை மூடிக்கொண்டு உள்ளேயே பேசுகிறோம். எப்படியோ மனம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது.

நாம் வாயைத் திறந்திருந்தாலும், மூடிக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து 'பேச்சு' நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. இதைத்தான் உள் பேச்சு அல்லது மன சரீரம் அல்லது சஞ்சலம் அதாவது உள்அசைவு என்கிறோம்.

நான்காவது அடுக்கு ஸூக்ஷ்ம சரீரம்.
இங்குதான் நம்முடைய ஆழமான
உணர்ச்சிகள் மற்றும் வேதனையான
அனுபவங்கள் எல்லாம் சேமித்து
வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே
நம்முடைய ஆழமான உணர்ச்சி
கள் எல்லாமே வலி அல்லது துன்பம்
சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன.

> நுண்ணறிவு நிலையில் உள்ளவர்கள் குற்றவுணர்ச்சியைத் தாண்டிச் செல்கின்றனர். நமக்கு வேறு எந்த ஆழமான உணர்ச்சிகளும் தெரியாது. அப்படித் தெரிந்தால், நாம் ஆன்மிகவாதிகள்!

நாம் வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தோமானால், வலியானது ஆழமான உணர்ச்சியைத் தருவதைப் பார்க்கலாம். நாம் மன அழுத்தத்திலோ அல்லது வேதனையிலோ இருக்கும்பொழுது, நாம் தீவிரத்தன்மையுடையவர்களாக இருப்போம், நம்முடைய முழு மனதும் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கும். நம்முடைய மனம் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது.

நீங்கள் வேதனையை அனுபவித்த அதே அளவு ஆழத்துடன் ஆனந்தத்தை எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா? இல்லை! உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் வேதனைதான்.

நாம், ஸூக்ஷ்ம சரீரத்திற்கு அப்பால் இருக்கும் மூன்று சரீரங்களையும் பட்டறிவு பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியாது. அவற்றை ஆன்மிக பூர்வமாக மட்டுமே உணரமுடியும்; அதுவும் த்யானத்தின் மூலமாக!

ப்ராண சரீரம், ஆசைகளால் நிரப்பப்பட்டது. மன சரீரம் 'நான் இதைச் செய்திருக்க வேண்டும், அதைச் செய்திருக்க வேண்டும்' என்ற ஆற்றாமையினாலோ அல்லது குற்றவுணர்ச்சியினாலோ நிரப்பப்பட்டுள்ளது. ஸூக்ஷ்ம சரீரம் வேதனையினால் ஆனது. இந்த மூன்றையும் புரிந்துகொள்ளுங்கள். ஆசை, குற்றவுணர்ச்சி, மற்றும் வேதனை - இவையே இந்த அடுக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள உணர்ச்சிகள் அல்லது அனுபவங்கள்.

முக்குணங்களிலிருந்து அதிகபட்ச நன்மையைப் பெறுவதே ஒரு புத்திசாலித்தனமான செயல்பாடு.

ஆசை, குற்றவுணர்ச்சி மற்றும் வலி- இம்மூன்று தன்மைகளின் விளைவாக நமக்குள் எழும் உணர்ச்சிகளும் விருப்பங்களும் சிந்தனைகளும் முறையே ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்றழைக்கப்படுகின்றன. தூய்மைப்படுத்தப்பட்ட ஆசைகள், ஸத்வம் என்றும், தூய்மைப்படுத்தப்பட்ட குற்றவுணர்ச்சிகள், ரஜஸ் என்றும் தூய்மைப்படுத்தப்பட்ட வலிகள், தமஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆனால், பொதுவாக அவை, தூய்மையற்றதாகவே இருக்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று கலந்தேயிருக்கின்றன. அவற்றை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது. மிக மிக அவசியம். நம் ஆசைகளை நம்மால் தூய்மைப்படுத்த முடிந்தால் போதும், நாம் ஜீவன்முக்தர்களாகி விடுவோம்.

சரியான ஆசைகள் அவசியம்!

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஆசைகளே இல்லாமல் நம்மால் வாழ முடியாது, நம்மால், நம் ஆசைகளைச் சுத்தப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் மட்டுமே முடியும்; நம்மால் அவற்றை, சரியான பாதையில் திசைதிருப்ப முடியும்.

தூய்மைப்படுத்தப்பட்ட ஆசைகள், ஸத்வம். தூய்மைப்படுத்தப்பட்ட குற்றவுணர்ச்சிகள், ரஜஸ். தூய்மைப்படுத்தப்பட்ட வலிகள், தமஸ்.

ஆசை இல்லாமல், நம்மால் சுவாசிக்கக்கூட இயலாது. சுவாசத்தை உள்ளிழுப்பதும், வெளிவிடுவதும்கூட ஆசை இல்லாமல் நடைபெறாது. நம்மால் ஆசைகள் இல்லாமல் வாழ இயலாது. ஆனால், அவற்றை, நாம் சரியான முறையில் கையாள வேண்டும்; அவற்றை நேராக்க வேண்டும். இப்படி நாம், ஸத்வத்தை நோக்கிச் செயல்பட்டாக வேண்டும். அப்போது மட்டுமே ப்ரண சரீரத்தில் எவ்வித குற்றவுணர்வுமின்றி இருப்போம்.

அடுத்து குற்றவுணர்ச்சி, ரஜஸ். 'நான் முன்பே அதைச் செய்திருக்க வேண்டும்; அப்பொழுது நான் அதைச் செய்யாததால், இப்பொழுது அதைச் செய்ய என்னை அனுமதியுங்கள் என்றோ அல்லது அந்த சமயத்தில் நான் இப்படித்தான் செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால், அப்பொழுது எனக்கு போதுமான அறிவுத்திறன் இல்லாததால் தவறாகச் செயல்பட்டு விட்டேன்; ஆனால், இப்பொழுது எனக்கு அறிவு வளர்ந்துவிட்டது, அந்தச் செயலுக்கு எப்படி பதில்செயல் புரிய வேண்டுமென்று எனக்குத் தெரியும். அவருக்குச் சரியான பாடம் கற்றுத்தரப் போகிறேன்' என்றோ நம்முள் எண்ணங்கள் தோன்றி, அமைதியற்ற தன்மையை உருவாக்குகின்றன.

இப்படித்தான் அமைதியற்ற தன்மை அல்லது ரஜஸ் வேலை செய்கிறது. மூன்றாவது வேதனை, தமஸ். நாம் செய்யும் செயல்கள் சரியானவையோ, அல்லது தவறானவையோ, அவற்றை வேதனை தருபவையாக மாற்றிக் கொள்வது எப்படி என்பது நமக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும், தமஸின் மூலமாகத் துன்பத்தை உருவாக்குவது எப்படி என்பது நமக்குத் தெரியும்.

முதல் நான்கு உடல் - மன அடுக்குகளும் மூன்று குணங்களினால் பாதிக்கப்படுகின்றன. நான்காவது அடுக்குக்கு அப்பால், மீதமுள்ள மூன்று அடுக்குகளையும் இந்த மனத்தால் உணர முடியாது. அந்த அடுக்குகளை த்யானத்தால் மட்டுமே உணர முடியும்.

ஆசைகளை சரியான முறையில் கையாள வேண்டும்!

காரண சரீரம் என்றழைக்கப்படும் ஐந்தாவது அடுக்கில், நாம் கனவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தின் பொழுது உணரும் சக்தி அடுக்கை, காரண சரீரம் என்கிறோம்.

ஆறாவது அடுக்கு, ஆத்ம சரீரம், சந்தோஷமான நினைவுகளால் நிரப்பப்பட்டது. ஏழாவது அடுக்கு என்பது நிர்வாண சரீரம் அல்லது ஆனந்த சரீரம். முதல் நான்கு அடுக்குகளான ஸ்தூல ப்ராண, மன மற்றும் ஸூக்ஷ்ம அடுக்குகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போதுமானது. ஏனென்றால் நாம் இதில் மட்டுமே ஆழ்ந்து செயல்படப் போகிறோம். கிருஷ்ணர் முன்பே ஸ்தூல சரீரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது கிருஷ்ணர் மற்ற மூன்று குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றில் செயல்படுகிறார்.

ஸத்வ குணம், இரண்டாவது அடுக்கான ப்ராண சரீரத்தோடு தொடர்புடையது.

ரஜஸ், மூன்றாவது அடுக்கான மன சரீரத்தோடு தொடர்புடையது.

தமஸ், நான்காவது அடுக்கான ஸூக்ஷ்ம சரீரத்துடன் சம்பந்தப்பட்டது.

அடுத்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், மற்ற சரீரங்களைப் பற்றி விவரிப்பார். நாம் அப்பொழுது அதைப் புரிந்துகொள்வோம்.

நான் சொன்னதுபோல, ஸத்வ குணம், ஆசைகளுடனும் ப்ராண சரீரத்துடனும் சம்பந்தப்பட்டது. நம்முடைய ஆசைகள் மாறும்பொழுது, நம்முடைய ப்ராண ஓட்டமும் மாறுவதை நம்மால் உணர முடியும்.

நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது, காற்றை மட்டுமல்ல காற்றுடன் உயிர்ச்சக்தியையும் சேர்த்தே சுவாசிக்கிறோம். அந்த உயிர்ச்சக்தி, ஸம்ஸ்க்ருதத்தில், ப்ராணன் என்றழைக்கப்படுகின்றது. காற்று என்பது ப்ராணனை உள்ளே எடுத்து செல்கின்ற ஒரு சாதனம் மட்டுமே.

நீங்கள், அமைதியாகவும், சாந்தமான மனநிலையிலும் இருந்தால், ப்ராண ஓட்டம் மிக மெதுவாக இருக்கும்.

உயிர், நம்முள் இருப்பதற்கு ஆதாரமாக
இருப்பதே ப்ராணன்தான். நம்முடைய
மாறக் கூடிய ஆசைகளினால் ப்ராணன்
பாதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு,
நாம் காமத்தின் அல்லது தீவிரமான ஒரு
விருப்பத்தின் பிடியில் இருந்தோமானால்,
நம்முடைய உள்ளிழுக்கும் சுவாசமும்
வெளிவிடும் சுவாசமும் தீவிரமாகும்.
உள்ளே சென்று, வெளியே வரும் ப்ராணன்
அதிகரிக்கும். எந்தவிதமான ஆசையாக
இருந்தாலும், ப்ராண ஓட்டம் மொத்தமாக
மாறிவிடும்.

நீங்கள், அமைதியாகவும், சாந்தமான மனநிலையிலும் இருந்தால், ப்ராண ஓட்டம் மிக மெதுவாக இருக்கும். உங்களுக்கே ப்ராண ஓட்டம் நிகழ்வது தெரியவராது.

ஆத்மா விளக்குப் போன்றது

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த ப்ராண சரீரம் ஆசைகளால் நிரம்பி உள்ளது. நாம் ஸத்வத்தைப் பற்றியும் ப்ராண அடுக்கைப் பற்றியும் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? அதைப்பற்றி நான் விவரிக்கிறேன்.

நாம் நம்புகிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கடவுளே. நாம் எல்லோரும் தூய்மையான விழிப்புணர்வு உள்ளவர்களே. நம்முடைய தூய்மையான விழிப்புணர்வு நிலையில், எந்தவிதமான எண்ணங்களை நாம் உருவாக்கினாலும், அந்த எண்ணங்கள் சக்தி பெறும்.

இந்தத் தளம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. இதைத்தான் 'சுயம்', ஆத்மன் அல்லது உள்ளார்ந்த தெய்வீக நிலை என்று அழைக்கிறோம்.

நாம் எந்தவிதமான எண்ணத்தை இந்தத் தளத்தில் (space) உருவாக்கினாலும், எந்தளவிற்கு அது ஆழமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அது விழிப்புணர்விலிருந்து அதிக சக்தியைப் பெறும். இது, படம் காட்டும் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்கின் முன்பு, ஒரு படச் சுருளை வைப்பது போன்றது. படச்சுருளில் உள்ள காட்சிகள் அனைத்தும் திரையில் நிஜமாகி உலவுகின்றன.

நம்முடைய இந்த 'உள் சுயம்' விளக்கு போன்றது. இந்தப் பகுதியில் நாம் எந்தக் காட்சியை உருவாக்குகிறோமோ, அது வெளியுலகில் உண்மையாகி விடுகிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால் நாம் சுய முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குகிறோம். இதனால்தான் நம்முடைய ஆசைகளினால், நாம் துன்பப்படுகிறோம். நம்முடைய ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் முடிவில் துன்பப்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

நம்முடைய ஆசைகள் நிறைவேறிவிட்டால், அங்கு ஒரு வெறுமைத் தன்மையையும், அவை நிறைவேறாவிட்டால் ஒருவித அமைதியற்ற தன்மையையும் நமக்குள் உணர்கிறோம். இந்த இரண்டு நிலைகளிலுமே, நாம் தமஸை நோக்கிச் செல்கிறோம், ஏன்?

காற்று என்பது ப்ராணனை உள்ளே எடுத்துச் செல்கின்ற ஒரு சாதனம் மட்டுமே!

இந்த ஆசைகளினால் நாம் ஏன்
துன்பப்பட வேண்டும்? முதலில்,
சுயமுரண்பாடுகளுடைய ஆசைகளைப்
பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்,
உதாரணத்திற்கு நாம் தலைவலியிலிருந்து
விடுபட வேண்டும் என்று விரும்பினால்,
"நான் இந்தத் தலைவலியிலிருந்து விடுபட
வேண்டும். நான் இந்தத் தலைவலியிலிருந்து
விடுபட வேண்டும்," என்று தொடர்ந்து
சொல்கிறோம்.

நாம் விழிப்புற்ற நிலையில், தொடர்ந்து மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளைச்

சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
'நான் தலைவலியிலிருந்து விடுபட
விரும்புகிறேன்' என்று தொடர்ந்து
நினைப்பதால், நாம் நிச்சயமாக
அதிலிருந்து விடுபடவே முடியாது.

நம்முடைய
'உள் சுயம'
விளக்கு போன்றது!

நாம் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லும்பொழுது, அந்த வார்த்தை சக்தி பெறுகிறது. இங்குத் 'தலைவலி' என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது, உண்மையில் அந்த வார்த்தைக்கு நாம் சக்தியைக் கொடுக்கிறோம். தலைவலி மறைவதற்கு பதிலாகத் தீவிரமாகிறது.

இது மிகவும் ஒரு சூட்சுமமான புரிதல். நாம் விழிப்புணர்வற்ற நிலை யில், எந்த வார்த்தைகளைத் தொடர்ந்து உச்சரித்தாலும் சரி, அவை நம் உடலில் நிஜமாகிவிடுகின்றன.

ஏனென்றால் எந்த வார்த்தைக்கும் உயிர் கொடுக்கக்கூடிய சக்தி நமக்கு உள்ளது. 'இப்பொழுது எழுந்து இங்கிருந்து போகலாம்' என்ற வார்த்தைகள் நம் மனத்திற்குள் எழுந்தாலே, உடனடியாக நம்முடைய உடல் அசையத்துவங்கும்; நாம் எழுந்து நின்று, உடனே அந்த இடத்தைவிட்டு அகலத் துவங்குவோம்.

நாம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்ய ஒரு வார்த்தை போதும். நம் மனத்தில் எழும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. நம் மனத்தில் எழும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்த்ரங்கள் போன்றது. நம் மனத்தில் எழும் எல்லா வார்த்தைகளும் ஒன்று சேர்ந்துதான் நம் வாழ்க்கையாக அமைகிறது, முக்கியமாக, விழிப்புணர்வற்ற நிலையில் சொல்லப்படும் வார்த்தைகள்!

உதாரணமாக, நாம் காலையில் பல்துலக்கும்பொழுது கவனித்தோமென்றால், நம்முடைய மனம் வேறெங்கோ இருப்பதைப் பார்க்கலாம்.

அதேபோல் நாம் குளிக்கும்பொழுதும் நம்முடைய மனம் வேறெங்கோ இருக்கும். குளிர்ந்த நீரில் குளிக்கும்பொழுது நாம் சிலசமயம், நம் மனதைத் திசைதிருப்புவதற்காகப் பாடுவோம். குளிர்ந்த நீரில்

குளிப்பதும் பாடுவதும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை! குளியலறையில் நம்மைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நாம் சுதந்திரமாகப் பேசுகிறோம், பாடுகிறோம். சில சமயம் மக்கள் குளியலறையில் அவர்களாகவே சத்தமாக வாதங்கள் செய்வதும் உண்டு.

குளியலறையைவிட்டு வெளியே வந்த மனைவியிடம் கணவர் கேட்டார், "குளியலறைக்குள், யாரிடம் நீ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாய்?"

மனைவி "எனக்கு நானேதான் பேசிக்கொண்டிருந்தேன்!"

வார்த்தைக்கு சக்தி அளித்திடும் சக்தி உங்களுக்குண்டு

கணவர்: நீ வாதம் செய்து கொண்டிருந்தாய்.

மனைவி: நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இதில் தலையிடாதீர்கள்.

கணவர்: உனக்கு நீயே பேசி க் கொண்டிருந்தாய் என்பது புரிகிறது. ஆனால், ஏன் நீ உன்னுடனேயே வாதம் செய்து கொண்டிருந்தாய்?

மனைவி: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுமல்லவா? நான் முட்டாள்தனமான தர்க்கங்களை ஒப்புக்கொள்ள மாட்டேனென்று! அதனால்தான் என்னுடனே நானே வாதம் செய்து கொண்டிருந்தேன்!

நாம் இந்த விளையாட்டை எல்லா நேரமும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நிதர்சன நிலைக்கு வராமலேயே நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்யும்போது, சில வார்த்தைகளை உச்சரித்தோமானால் போதும், பிறகு பல்துலக்கும் ஒவ்வொரு முறையும் அதே வார்த்தைகளை உச்சரிக்கிறோம்.

நாம் பற்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்த அந்தத் தருணமே, அதே எண்ணங்கள் நமக்குள் வருகின்றன. ஒவ்வொரு தடவை நாம் குளிக்கும்பொழுதும், ஒரே விதமான எண்ணங்கள்தான் நமக்குள் வருகின்றன. நாம் நம்மை ஆழ்ந்து கவனித்தோமானால், இந்த விஷயங்களை நாம் உணர முடியும்.

நாம் விழிப்பற்ற நிலையில் மீண்டும் மீண்டும் நினைக்கும் எண்ணங்களுக்கு, நாம் விழிப்புணர்வுடன் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியைவிட அதிக சக்தி உண்டு. நாம் பல எண்ணங்களை, பல சுய - முரண்பாடுடைய ஸம்ஸ்காரங்களை விழிப்பற்ற நிலையில் உருவாக்குகிறோம்.

மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகளே தியானம்

'தலைவலியிலிருந்து நான் விடுபட வேண்டும்' என்ற இந்த எண்ணமே ஒரு சுய முரண்பாடுடைய எண்ணம்தான். எப்பொழுது நாம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்கிறோமோ, அப்போது நாம் தலைவலியையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.

தலைவலி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்வதன் மூலம், தலைவலியையும் நம் மனத்திற்குள் திரும்பத் திரும்ப எடுத்து வருகிறோம். பிறகு நாம் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

நாம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் 'நான் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும்' என்று சொல்லும் பொழுதெல்லாம், 'தலைவலி' என்ற வார்த்தையை உச்சரிக்கும் பொழுதெல்லாம், அந்த நினைவை ஒவ்வொரு முறையும் திரும்ப எடுத்து வருகிறோம். நாம், வேதனை நிறைந்த அந்தக் கோப்பை, திரும்பத் திரும்ப மனத்திற்கு எடுத்துவருகிறோம். பிறகு எப்படித் தலைவலியிலிருந்து விடுபட முடியும்?

'தலைவலி' என்ற வார்த்தையை உபயோகிப்பதற்குப் பதிலாக, 'நான்

நாம் விழிப்புணர்வற்ற்ற
நிலையில், எந்த
வார்த்தைகளைத்
தொடர்ந்து
உச்சரித்தாலும் சரி,
அவை நம் உடலில்
நிஜமாகிவிடுகின்றன!

நலமாக வேண்டும், நான் ஆரோக்கியமாக
இருக்க வேண்டும்' என்ற ஸம்ஸ்காரத்தைத்
திரும்பப் திரும்ப உருவாக்குங்கள்.
பிறகு நாம் ஆரோக்கியம் என்ற கருத்தை
நினைவில் வைத்துக்கொள்ள முடியும்!

எந்த மந்திரத்தை அல்லது வார்த்தையை
நாம் உபயோகிக்கிறோமோ, அந்த
த்யானம், நம்முடைய விழிப்புணர்வற்ற
பகுதியில் தன்னிச்சையாக நிகழும். நாம்
'தலைவலி' என்ற வார்த்தையை மீண்டும்
மீண்டும் உபயோகித்தோமானால், நாம்
'தலைவலியை' த்யானம் செய்தவர்களாகி
விடுவோம்.

> விழிப்பற்ற நிலையில்
> மீண்டும் மீண்டும் நினைக்கும்
> எண்ணங்களுக்கு அதிக
> சக்தி உண்டு!

நாம், 'ஆரோக்கியம்' என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகித்தோமானால், நாம் ஆரோக்கியத்தை த்யானம் செய்து கொண்டிருப்போம்.

அதனால்தான் கடவுளை த்யானம் செய்ய ஆரம்பிக்கும்பொழுதுகூட, நாம் த்யான ஸ்லோகங்கள் உச்சரித்து, த்யானத்தைத் தொடங்குகிறோம். இது, கடவுளை வரவேற்கும் வழிபாட்டுச் செய்யுள்கள் போன்றது. நாம் எந்த நல்ல விஷயங்களை நம் வாழ்க்கையில் காண விரும்புகிறோமோ, அதை வார்த்தைகளாக இந்த வழிபாட்டுச் செய்யுள்களில் வடிக்கிறோம்.

காட்சியாகக் காண விரும்புவதை வார்த்தைகளால் உச்சரிப்பதே த்யான ஸ்லோகங்கள். இப்பொழுது நாம் மீண்டும் மீண்டும், 'தலைவலி, தலைவலி, தலைவலி' என்ற வார்த்தையை உச்சரித்தோமானால், நாம் எதைக் காட்சியாகக் காண்போம்? எந்த மனிதர் நமக்குத் தலைவலியை உண்டாக்குகிறாரோ, அவரைக் காண்போம் அல்லது தலைவலி வரும்பொழுது நாம் என்ன மனநிலையை உணர்கிறோமோஅப்போது பயத்தை உணரலாம் அல்லது வெறுப்பை உணரலாம்-எதை உணர்கிறோமோ, அதையே காட்சியாகக் காண்போம்.

எதை நாம் மீண்டும் மீண்டும் காட்சியாகக் காண்கிறோமோ, அதுவே நம்முடைய நினைவுகளில், உள்ளுலகத்தில், உள் இருப்புத்தன்மையில் செதுக்கப்படும், பதிக்கப்படும்.

வார்த்தைகளாலேயே நம்மைக் குணப்படுத்தலாம்

உங்களுக்கு ஏதாவது நோய் இருந்தால், தயவுசெய்து நோயின் பெயர் தாங்கிய எந்த வார்த்தையையும் உருவாக்காதீர்கள் அல்லது சொல்லாதீர்கள்.

உதாரணத்திற்கு, ‘இந்த இதய நோய் குணமாக வேண்டும்’, ‘நான் இந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட வேண்டும்’, ‘நான் இந்த உயர்ந்த இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும்’ என்று எப்பொழுதுமே சொல்லாதீர்கள்.

சுய - முரண்பாடுடைய வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். சரியான வார்த்தைகளை உபயோகியுங்கள். நமக்கு வலியோ அல்லது உடல்நலக் குறைபாடோ இருந்தால், ‘நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ போன்ற வார்த்தையை உபயோகிக்கவும். வார்த்தைகள் பாவனையையும் காட்சியையும் உருவாக்குகின்றன; மேலும் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கான சக்தியை உருவாக்குகின்றன. எப்பொழுதும், ‘நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்ற வார்த்தையையே உபயோகியுங்கள். ‘இந்த வலியிலிருந்து விடுபட வேண்டும்’ என்று எந்தக் காரணத்தைக்கொண்டும் நினைக்காதீர்கள்.

சுய முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உபயோகிக்காதீர்கள். எவ்வளவு அதிகமாக சுய முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உபயோகிக்கிறோமோ, அந்தளவிற்கு அதிகமாக நாம் அந்த நோயை நம்முடைய உள்தளத்தில் பதித்துவிடுகிறோம். எவ்வளவு அதிகமாக நாம் பதிவுசெய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அது வலிமை கொண்டதாகிவிடும்.

தயவுசெய்து உங்கள் உள்தளத்தை அல்லது இச்சா சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள். நம்முடைய ப்ராண அடுக்கு என்பது இச்சாசக்தி ஆகும்; விஷயங்களை நிகழச் செய்வதற்கான சக்தி அதற்கு உண்டு. நம்முடைய ஆசைகளை நிறைவேறச் செய்யும் சக்தி அதற்கு உண்டு. சுய முரண்பாடுடைய எண்ணங்களையோ அல்லது சுய முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளையோ உருவாக்கி, இச்சா சக்தியை வீணடிக்காதீர்கள்.

சுய முரண்பாடுடைய எண்ணங்கள், நம்முடைய முழு ஸத்வ வெளியையும் தூய்மை அற்றதாக மாற்றிவிடுகிறது. இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்ற உடன் ஒருபத்து நிமிடங்கள், இந்தச் சிறிய பயிற்சிக்காகச் செலவழியுங்கள்.

![காட்சியாகக்
காண விரும்புவதை
வார்த்தைகளால்
உச்சரிப்பதே
த்யான ஸ்லோகங்கள்.](images/p0129_01.webp)

பத்து நிமிடங்கள் நீங்கள் உங்களுடனே
அமர்ந்து, உங்கள் மனத்திற்குள்
என்ன எண்ணங்கள் எழுகின்றனவோ
அவற்றை அப்படியே வரிசையாக
எழுதுங்கள். அதன்பிறகு, நீங்கள் சுய
முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை
எங்கு உருவாக்குகிறீர்கள் என்று பார்த்து,
அவற்றை நீக்கி, எண்ணங்களைத் தூய்மை
படுத்துங்கள்.

சுயமுரண்பாடுடைய எண்ணங்களை உங்கள்
மனத்திற்குள் எக்காரணத்தைக்கொண்டு
எடுத்து வராதீர்கள்.

மனரீதியான நோய்கள் ஆராயப்பட்டு, அவற்றைப் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக அதே நோயால் பாதிக்கப்படு கின்றனர் என்பதை, சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்நோயைப் பற்றிப் படித்து, நமக்கும் அந்நோய் வந்துவிடுமோ என்று பயப்படுவதனாலேயே கூட, அந்நோய்த் தாக்குதலுக்குள்ளாகிறோம்.

மருந்தால் மனம் குணமாகாது

நோயின் பெயர் தெரியாதவரை, மக்களுக்கு அந்த நோய் இருந்தாலும்கூட, அதனால் அவர்கள் துன்பப்படுவதில்லை. எந்த வினாடி நாம் இவைதான் நோய்க்கான அறிகுறிகள் என்று சொல்கிறோமோ, உடனே எல்லோரும், 'எனக்கும் இந்த அறிகுறிகள் இருக்கின்றனவே' என்று நினைக்கிறார்கள். மேலும் எப்படியாவது அந்த நோயினுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்!

பலர், நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும்கூட, மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்கிறார்கள். பெரும்பாலும், நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில், தலைசுற்றுவதுபோல் உணர்வோம். உணர்ச்சிவசப்பட்டு அதிக கோபப்படும் சமயத்தில் தலை சுற்றுவதுபோல உணர்வோம்.

அதற்காக அந்தத் தலைசுற்றல், இரத்த அழுத்தப் பிரச்சினையுடன் தொடர்புடையது என்று அர்த்தம் அல்ல. பலர் இரவில், தூக்கத்திலிருந்து வியர்க்க விறுவிறுக்க எழுந்திருப்பார்கள். அதனால் அவர்கள் இதயத் தாக்குதலுக்கு (Heart At-tack) ஆளானவர்கள் என்று அர்த்தம் அல்ல.

ஆனாலும், இவைதான் ஆபத்தான
நோய்க்கான அறிகுறிகள் என்று
அவர்களுக்குள் ஆழமாகப்
பதிந்துவிட்டால், அவர்கள் நரம்புக்
கோளாறினால் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் கற்பனையான நோயால்
பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய
நரம்புகளின் அமைப்பு சிதைந்துவிடுகிறது.

சரியான வார்த்தைகளை உபயோகியுங்கள்!

இது ஒரு ஆபத்தான விளையாட்டு. மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாக்கும் பல்வேறு நோய்களைப் பற்றிய வார்த்தைகளை உள்வாங்கி, நமக்குள் சந்தேகங்களை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.

'எனக்கும், இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கின்றேன்' என்ற இந்தக் கருத்து, நாம் நோய்களைப் பற்றிய அறிக்கையைப் படிக்கும்பொழுதும், விளம்பரங்களைப் பார்க்கும்பொழுதும் நமக்குள் உருவாகிறது. உடனடியாக நாம் 'எனக்கு இந்தப் பிரச்சி னை இருக்கிறது. நான் இதிலிருந்து விடுபட வேண்டும்' என்ற நினைவுப்பதிவை உருவாக்கிக் கொள்கிறோம்.

நாம் மீண்டும் மீண்டும் பத்துமுறை இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள், நமக்கு அந்தப் பிரச்சினை வந்துவிட்டிருக்கும்.

நாம் கேட்கும் விஷயங்களும் மற்றும்
பார்க்கும் விஷயங்களும் நமக்குள்
பாதிப்பை ஏற்படுத்த தொடர்ந்து
அனுமதிக்கிறோம். மனத்தைப் பற்றிய
ஸத்யத்தையும், விழிப்புணர்வு நிலையைப்
பற்றியும் அறியாத மக்கள் நம்மீது
ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்துமே,
‘தூய்மையான உள்ளுலக ஆனந்தம்
சாத்தியமே’ என்பதை நாம் உணராததால்
எழுபவையே!

> சுய முரண்பாடுடைய
> நினைவுப்பதிவுகளை
> உருவாக்கி
> இச்சா சக்தியை
> வீணடிக்காதீர்கள்.

எந்த மருந்தும் அல்லது இரசாயனப் பொருளும் நம்முடைய மனத்தைக் குணப்படுத்த இயலாது என்ற துணிச்சலான கருத்தை நான் இங்கு அறிவிக்கின்றேன். கவலைக்கான மருந்துகள், மனஅழுத்தத்திற்கான மருந்துகள் எல்லாமே ஆறுதல் தருவதற்காகத்தான். முதலில் நாம் மனஅழுத்தத்தால் துன்பப்படுவதாக மனத்திரையில் காட்சியாகக் கண்டோம். இப்பொழுது நாம் அதற்கான மருந்து எடுத்துக்கொள்கிறோம் என்பதை மனத்திரையில் காட்சியாகக் காண்கிறோம் அவ்வளவுதான்.

தாயத்திற்குச் சக்தியூட்டுவது உங்களின் நம்பிக்கையே!

உங்களிடம் இன்னொரு முக்கியமான இரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு வியாபார இரகசியம்.

பலர் "ஸ்வாமிஜி, அந்த மனிதர் எனக்கு ஏதோ மாந்திரீகம் செய்துவிட்டார். அவர் எனக்கு ஏதோ செய்வினை செய்துவிட்டார். யாரோ தீங்கு செய்யும் ஆவியை என் பின்னால் ஏவிவிட்டார்கள். ஏதோ ஒரு தீயசக்தி என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது," என்று சொல்வார்கள்.

சில மனிதர்கள், இது போன்ற மற்றவர்களின் பயங்களை உபயோகித்து, அந்தப் பயத்தைக் காசாக்குவார்கள். இதுபோன்ற எல்லா எதிர்மறையான விஷயங்களுக்கும் ஒரே ஒரு ஆற்றல்தான் உண்டு. அது-எதிர்மறை விஷயங்களின் மீது நீங்கள் வைக்கும் 'நம்பிக்கை'தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறை விஷயங்களின் மீதான நம்முடைய நம்பிக்கை, அவற்றிற்கு மிகுந்த வலிமையைத் தருகிறது.

நாம் அவற்றை நம்புவதால், நாம் எல்லா நிகழ்ச்சிகளையும் கோர்த்துப் பார்த்து, நமக்கு நாமே தொல்லையை ஏற்படுத்திக்கொள்கிறோம். பிறகு அதிலிருந்து நம்மை விடுபடுத்திக்கொள்வதற்காகப் போராடுகிறோம்.

மக்கள் என்னிடம் இது போன்ற பயங்களுடன் வரும்பொழுது, "இதில் பயப்பட ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள். ஒரு பிரச்சினையும் இல்லை," என்று நான் சொல்வேன். பின் அவர்கள், 'இவர் இளம் வயத்தினராக இருக்கிறார். இவருக்கு அதிகம் தெரியாது. கொஞ்சம் வயதான மனிதரிடம் போவோம். அவர் ஏதாவது மாற்று மந்திரம், தாயத்து எல்லாம் தருவார்; அல்லது பேய் ஓட்டும் ஒரு நபரிடம் போய், தீங்கு தரக்கூடியவற்றையும் தடைகளையும் நீக்குவோம்' என்று நினைக்கிறார்கள்.

அவர்கள் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். இப்போது நான் அவர்களுக்கு உதவியாக வேண்டும்! என்ன செய்ய? அவர்களுக்கு ஒரு தாயத்தைக் கொடுத்து, "நீங்கள் இதற்காகப் பணம் தரவேண்டாம். உங்கள் தலையணைக்கடியில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். நீங்கள் நலமாகிவிடுவீர்கள்," என்று சொல்கிறேன்.

தாயத்திலோ யந்திரத்திலோ எதுவுமே இல்லை என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், அந்த மனிதர் தனக்குள் ஒரு கருத்தை உருவாக்கிவிட்டார்.

இந்த எதிர்மறை கருத்தை அவர் எப்படியோ பெற்றிருக்கிறார். அவருக்கு யந்திரத்தைக் கொடுப்பதன் மூலம், அவருக்குள் பதிந்துள்ள எதிர்மறை கருத்தை நீக்கி, அவருக்குள் நம்பிக்கையை ஏற்படுத்து கின்றேன். இது ஒரு முள்ளை நீக்குவதற்கு இன்னொரு முள்ளை உபயோகிப்பது போன்றது. வேறு எதுவும் இதில் இல்லை.

பல்வேறு நோய்களைப்
பற்றிய வார்த்தைகளை
உள்வாங்கி,
நமக்குள் சந்தேகங்களை
உருவாக்கிக்கொள்ளக்
கூடாது.

"இந்த யந்திரங்களை வைத்திருப்பதனால், உங்கள் வீட்டுக் கூரையிலிருந்து ஏதாவது பொழியும் என்று நினைக்காதீர்கள். எலிகளைத் தவிர வேறு ஒன்றும் உங்கள் வீட்டுக் கூரையில் இருந்து விழாது," என்று நான் மக்களுக்குச் சொல்வதுண்டு.

இந்த யந்த்ரங்கள் அவர்களுடைய எதிர்மறையான கருத்துக்களுக்கு ஒரு எதிர்ப்பு மருந்து. அவ்வளவுதான்! அவர்கள் ஏற்கனவே தங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்ற கருத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்களிடம், "நீங்கள் இந்தக் குழப்பத்தை உங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு நான் உதவுகின்றேன்," என்று சொல்கிறேன்.

பிரச்சினைகள் அனைத்துமே,
தூய்மையான உள்ளுலக
ஆனந்தம் சாத்தியமே
என்பதை
நாம் உணராததால்
எழுபவையே!

அதனால் புரிந்துகொள்ளுங்கள், எல்லா எதிர்மறை பண்புகளுக்கும் ஒரே ஒரு ஆற்றல்தான் இருக்கிறது. நாம் அதன் மீது வைத்திருக்கும் 'நம்பிக்கை'தான் அது.

இந்தப் பயங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் மனிதர், நம்மிடமிருந்து பணம் மட்டும் வாங்கிக் கொண்டால் பரவாயில்லை, நம்மால் அந்தப் பணத்தை மீண்டும் சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆனால், ஆபத்தான விஷயம் என்னவென்றால், அவர், தொடர்ந்து நம்மை வேட்டையாடும், ஆட்டிப்படைக்கும் ஸம்ஸ்காரங்களையும், நினைவுப்பதிவுகளையும் நம்முள் ஏற்படுத்திவிடுகிறார்.

ஏதாவது ஒரு விஷயத்திற்காகவோ அல்லது எல்லாவற்றிற்குமோ, அந்த மனிதர் பின்னால் நாம் அடிமைகள்போல ஓடிக் கொண்டிருப்போம்.

மந்த்ரவாதியின் கைகளில் சிக்கி இருப்பதைவிட பேயின் பிடியில் சிக்கியிருப்பதே மேல். பேயாவது எப்பொழுதாவதுதான் தொந்தரவு செய்யும். ஆனால், இந்த மந்த்ரவாதி நம்மை முழுமையாகச் சுரண்டிவிடுவார்.

பேய்களுடன் நமக்கு மனரீதியான துன்பங்கள் மட்டுமே இருக்கும். மந்த்ரவாதிகளினால் நமக்கு மனரீதியான மற்றும் பொருளாதார ரீதியான कष्टங்களும் வரும். பெரிய பிரச்சினை என்னவென்றால், அந்த மனிதர் நம்முடைய பணத்தை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பயம் என்ற பெயரில் நினைவுப்பதிவுகளையும் நம்முள் உருவாக்கி விடுகிறார். நாம் இரவில் கேட்கும் ஒவ்வொரு சிறிய சத்தத்திற்கும், ‘தாயத்தின் சக்தி குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். இப்போது வேறு ஒரு தாயத்து வாங்கி வரவேண்டும்’ என்று நினைப்போம்.

இந்த வியாபாரத்தில் இருக்கும் மனிதர்கள், மீண்டும் சக்தியூட்டப் படக்கூடிய தாயத்துக்களையும் தருகிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து, அந்தத் தாயத்தை அவரிடம் எடுத்துச் சென்று சக்தியூட்டிக்கொண்டு வரவேண்டும்.

இப்படி மீண்டும் சக்தியூட்டப்படக்கூடிய தாயத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது!

நமக்குத் தேவைப்படுவதெல்லாம் விளம்பரம் மட்டுமே! ஒரு மனிதர் நின்றுகொண்டு எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பது போன்ற ஒரு விளம்பரத்தை செய்தித்தாளில் பார்த்தேன். அதில் அவர் அதர்வண வேத மேதை என்று தம்மைப் பற்றிக் கூறியிருந்தார்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அதர்வண வேதம் என்ற நூல், இது சம்பந்தப்பட்டது அல்ல. அந்த நூல், நம்முடைய வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்வது என்பதைப் பற்றிய அறிவியல். நம்முடைய மனத்தை ஆனந்தமாகக் கையாள்வது எப்படி என்பது பற்றிய சுத்தமான அறிவியல். எந்த வேத நூல்களும் மற்றவர்களைச் சுயநலமாக உபயோகித்துக்கொள்வது பற்றிக் கற்றுத் தருவதில்லை.

உண்மையில் ஒரு மனிதருடைய உள்ளுலகம் தூய்மையானதாகவும், பணம், பெயர், புகழ் என எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமலும் இருக்கும்போது, அவருடைய உள்ளுணர்வு விழிப்படையும் என்று ஜ்யோதிஷ ஸாஸ்த்ரம் (வேத ஜோதிடம்) குறிப்பிடுகிறது.

அதனால், மந்த்ரம், தந்த்ரம், செய்வினை,
தாயத்து போன்றவற்றில் ஈடுபடும்
மனிதர்களிடம் எப்பொழுதும்
செல்லாதீர்கள். மேலும்
புரிந்துகொள்ளுங்கள், தீங்கு விளைவிக்கக்
கூடிய பொருள்களுக்கெல்லாம் ஒரே ஒரு
ஆற்றல்தான் இருக்கிறது, அது, அவற்றின்
மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை மட்டுமே.

நாம் சுய முரண்பாடுடைய எண்ணங்களை
எப்பொழுது உருவாக்குகிறோமோ
அப்பொழுதே அதை நாம் நம்பத்
தொடங்கி விடுகிறோம்.

எல்லா எதிர்மறை
பண்புகளுக்கும்
ஒரே ஒரு ஆற்றல்தான்
இருக்கிறது.
நாம் அதன் மீது
வைத்திருக்கும்
'நம்பிக்கை'தான் அது.

முக்கியமாக, நோய்களுக்கு மனரீதியான பெயர்களைப் புதிது புதிதாக இடுகிறார்கள். நாகரிக உடை வியாபாரத்தில், ஒவ்வொரு வாரமும் புதுவிதமான உடைகளை அறிமுகப்படுத்துவார்கள். அதேபோல இங்கு ஒவ்வொரு மாதமும் அவர்கள் புதிய நோயைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் எதிர்மறையான கருத்துக்களை நினைப்பதன் மூலமும், நோய்க்கான அறிகுறிகளின் மீது த்யாணம் செய்வதன் மூலமும், நாம் அந்த அறிகுறிகளை நமக்குள் உருவாக்குகிறோம். இது ஒரு ஆபத்தான விளையாட்டு, இந்த விளையாட்டில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

சுய முரண்பாடுடைய எண்ணங்களை உருவாக்குவதன் மூலம் நாம், ஸத்வத்தை - தூய்மையான உள்ளுலகைத் தொந்தரவு செய்கிறோம். அதனால் உங்களுடைய முக்கியமான எண்ணங்களையும், ஆசைகளையும் எழுதி, அவற்றை ஆராயுங்கள். அதில் எத்தனை எண்ணங்கள் சுய முரண்பாடுடைய எண்ணங்கள் என்று கவனியுங்கள். இதுதான் முதல்படி.

ஆசைகளின் சண்டைகளினால் உண்டாகும் குழப்பங்கள்

அடுத்து, எப்படி இரண்டு ஆசைகள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்று பார்ப்போம். நாம் அமைதியான வாழ்க்கையையும் வாழ விரும்புகி றோம். அதேசமயம் செல்வத்தையும் விரும்புகிறோம். செல்வத்துடன் பொறுப்பும் சேர்ந்துதான் வரும். அதனால், செல்வத்தை விரும்பி னால், அதனுடன் சேர்த்து வரும் பொறுப்பையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், அமைதியை மட்டும் தேர்ந்தெடுங்கள்; எது நிகழ்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். செல்வத்தையும் அமைதியையும் ஒருசேர, ஒரு சமயத்தில் தேர்ந்தெடுக்காதீர்கள்.

இரண்டு ஆசைகள் முரண்படும்பொழுது, ஏதாவது ஒரு எண்ணத்தை மட்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும். இரண்டும் நம்மிடையே இருக்கும்பொழுது, சுய முரண்பாடுடைய மன அமைப்பை நாம் கொண்டிருப்போம். ஸத்வ வெளியில் சுயமுரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உருவாக்கினோமானால், நாம் தன்னிச்சையாக ரஜஸுக்குள் தூக்கியெறியப்படுவோம்.

கிருஷ்ணர், ரஜஸைப் பற்றி என்ன சொன்னார் என்பதை விவரிக்கிறேன்: 'அளவற்ற ஆசைகள் மற்றும் ஏக்கத்திலிருந்துதான் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கூடிய மனப்பாங்கு பிறக்கிறது. இதனால்தான் உயிர்கள், பலன் சார்ந்த செயல்களை (Result Oriented) செய்வதிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றன என்கிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர், ராக: - ஆசைகளைப் பற்றியும், த்ரிஷ்நா - ஏக்கங்களைப் பற்றியும் பேசுகிறார். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

சில நினைவுகளுக்கு நம்முடைய உணர்ச்சி பூர்வமான ஆதரவு இருக்கும்; சில நினைவுகள் வலுக்கட்டாயமாக நமக்குள் விளம்பரங்கள் மூலமாக திணிக்கப்பட்டிருக்கும்.

விளம்பரங்கள் என்பது
தொலைக்காட்சியிலோ அல்லது
திரையரங்குகளிலோ வருவது மட்டும்
அல்ல. நம்முடைய தந்தை திரும்ப திரும்ப
சில விஷயங்களைச் சொன்னால், அதுவும்
விளம்பரமே. நம் தாயார் திரும்ப திரும்ப,
"இதுதான் சரி இதுதான் சரி, இது நமக்காக,
இது உனக்காக," என்று சொன்னால்
அதுவும் விளம்பரமாகிவிடுகிறது.

செல்வத்தையும்
அமைதியையும் ஒருசேர,
ஒரு சமயத்தில்
தேர்ந்தெடுக்காதீர்கள்.

சில ஆசைகளுக்கு நம்முடைய மனத்தின் ஆதரவு இருக்கும். அதாவது ‘இவையெல்லாம் நமக்கு நிறைவைத் தரும்; இவையெல்லாம் நம்முடைய நியாயமான தேவைகள்’ என்று நாமே நினைப்போம். இவை ஆசைகள் எனப்படுகின்றன.

சில ஆசைகளை வேறு ஒருவரிடமிருந்து நாம் விலைக்கு வாங்கியிருப்போம். இவை ஏக்கங்கள் எனப்படுகின்றன.

ஆசைகள் எல்லாம் நம்முடையவை. ஏக்கங்கள் எல்லாம் நமக்கு சமுதாயத்தால் தரப்பட்டவை. இதுதான் ஆசைகளுக்கும், ஏக்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.

ஆசை - நிறைவைத் தரும் ஏக்கம் - வெறுமையைத் தரும்

ஆசைகள் எல்லாம் நம்முடன் பிறந்தவை. அவை நம்முடைய இயல்பு. நம் ஆசைகள் நிறைவேறிவிட்டால் நாம் அமைதியாகவும், நிறைவுடனும் இருப்பதை உணர்வோம். ஆனால், ஏக்கங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகள். ஏக்கங்களைப் பொறுத்தமட்டில், அவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால்கூட, நாம் வெறுமையைத்தான் உணர்வோம். இதுதான் ஆசைக்கும், ஏக்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.

ஆசை நமக்கு நிறைவைத் தருகிறது. ஏக்கம் நமக்கு வெறுமையைத் தருகிறது.

கிருஷ்ணர், சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை எப்படி ரஜ ஸுக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைக் காண்பிக்கிறார். ஆசைகள்

text box

ஒன்றுக்கொன்று முரண்படும்பொழுது, நாம் குழப்பமடைந்து விடுகிறோம். நாம் ரஜஸில், அமைதியற்ற தன்மையில் வீழ்ந்து விடுகிறோம்.

ஒரு பொருளைப் பற்றிய செய்தி நம்முடைய அமைப்பிற்குள் நுழையும்பொழுது, அது சக்ஷு, சித்தம், புத்தி ஆகியவற்றைக் கடந்து அஹங்காரத்திற்குச் செல்கிறது. அதன் பாதையில், அஹங்காரத்தை அடைவதற்கு முன்பு, அது இன்னொரு பாதையையும், ஸம்ஸ்காரங்கள் நிறைந்திருக்கும் விழிப்புணர் வற் ற தளத்தையும் கடக்க வேண்டியுள்ளது. அந்தச் செய்திக் கோப்பில் இந்த விழிப்புணர்வற்ற தளத்தில் நிறைந்திருக்கும் ஸம்ஸ்காரங்கள் தங்களின் கருத்துக்களைப் பதிக்கின்றன.

உதாரணத்திற்கு, ஒரு பத்து
நினைவுப்பதிவுகள், 'நான் அமர்ந்து
இந்தச் சொற்பொழிவைக் கேட்க
விரும்புகிறேன்' என்ற முடிவை
எழுதுகின்றன என்று வைத்துக்கொள்வோம்;
வேறு ஒரு பத்து நினைவுப்பதிவுகள்,
"இல்லை, இது வாரக்கடைசியாதலால்
திரைப்படத்திற்குச் செல்வோம்," என்று
எழுதுகின்றன என்றும் வைத்துக்கொள்வோம்.

இரண்டு ஆசைகள்
முரண்படும்பொழுது,
ஏதாவது
ஒரு எண்ணத்தை மட்டும்
வலுப்பெறச் செய்ய
வேண்டும்.

ஒரு பத்து நினைவுப்பதிவுகள் ஒரே மாதிரியான முடிவை அந்தக் கோப்பில் எழுதுகின்றன; மற்றும் ஒரு பத்து நினைவுப்பதிவுகள் வேறு மாதிரியான தீர்மானங்களைக் கோப்பில் எழுதுகின்றன. அதனால், அந்தக் கோப்பு அஹங்காரத்தை அடையும்பொழுது நாம் குழப்பமடைந்து விடுகிறோம். நம்முடைய நினைவுப்பதிவுகளிலிருந்து எழும் இந்த சுயமுரண்பாடுடைய கருத்துக்களால், நம் உள்ளுலகம் குழப்பத்திற்குள்ளாகிறது. அமைதியற்று தத்தளிக்கிறது.

அதிகமான நினைவுப்பதிவுகள் இருந்தால், முடிவுகள் எடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். நினைவுப்பதிவுகள் அதிகமாக அதிகமாக, முடிவுகள் எடுப்பதற்கான நேரமும் அதிகமாகும். நாம், முடிவுகள் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலையிலும் துன்பத்திலும் இருப்போம்.

மனிதன் என்பவன் குழப்பம் நிறைந்தவன். நமக்குள் தொடர்ந்து ஓடும் ஒரு எண்ணவோட்டம்: 'நான் அதை அப்படிச் செய்திருக்க வேண்டும் அல்லது நான் அதை இப்படிச் செய்திருக்க வேண்டும்' என்பதுதான்.

குழப்பங்கள் வருவதற்கு காரணமே அதிகமான நினைவுப்பதிவுகள் இருப்பதினால்தான். குழப்பத்தைத்தான் கிருஷ்ணர் ரஜஸ் மற்றும் அமைதியற்ற தன்மை என்று அழைக்கிறார். நாம் ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது, நம்மிடம் அசாதாரணமான கோபமும், வன்முறையும், உள்ளுலகில் அமைதியற்ற தன்மையும் குடிகொண்டிருக்கும். ரஜோ குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதர், மற்றவர்களின் ஒரு சிறு தவற்றைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டாமல், கோபம்கொண்டு கூச்சலிடுபவராகவும், எரிச்சலடையும் மனநிலையிலும் இருப்பார். அவருடைய நாக்கு விஷத்தன்மையுடையதாக இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அடுத்தவர் மீது, தமது எரிச்சலையும் கோபத்தையும் காண்பிக்கக் காத்துக் கொண்டிருப்பார்.

ரஜஸ் சம்மந்தப்பட்ட நினைவுப்பதிவுகளை நாம் நீக்கிவிட்டோமானால், நம்மால் ஆயிரக்கணக்கான தீர்மானங்களை மனச்சோர்வடையாமல் எடுக்க முடியும். அந்தக் கோப்பு நேரடியாக அஹங்காரத்திற்கு எவ்வித தடங்கலுமின்றி சென்றடைந்துவிடும்.

ஆசைகள், நம்முடையவை. ஏக்கங்கள், நமக்கு சமுதாயத்தால் தரப்பட்டவை.

ஒரு முடிவெடுப்பதற்கு, இந்திய அரசாங்கத்தில் இருப்பதுபோல, நாம் முந்நூறு மேஜைகளைக் கடக்கத் தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று மேஜைகள் மட்டுமே இருக்கும். ஒன்று 'சரி' என்று சொல்லும் மற்றது, 'ஆமாம்' என்றும் சொல்லும். அதற்குள் அந்தக் கோப்பு அஹங்காரத்தை அடைந்துவிடும். அதனால், அங்கு பல்வேறுவிதமான வேறுபட்ட கருத்துக்கள் எழாது.

அஹங்காரம் உடனடியாக முடிவெடுத்து, அந்தக் கோப்பைச் செயல்படுத்துவதற்காக அதற்குரிய இடத்திற்கு அனுப்பிவிடும். செயல்பாடு எளிமையாக இருக்கும். முடிவெடுத்தல், இலகுவாக இருக்கும், நம்முடைய நேரமும் சக்தியும் வீணடிக்கப்படாது இருக்கும்.

அதனால்தான், நாம் எப்பொழுது விளைவுகளை எதிர்பார்க்காமல் இருக்கிறோமோ, கர்ம பலனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கிறோமோ, அப்பொழுது மட்டுமே, நம்மால் செயலில் ஆழ்ந்து ஈடுபட முடியும் என்கிறார் கிருஷ்ணர்.

நாம் விளைவுகளை எதிர்பார்க்காமல் அல்லது அவற்றைப் பற்றிய கவலைகொள்ளாமல் இருக்கின்றபொழுது, நாம் அருமையாகச் செயல்படுவோம். ஏனென்றால், அங்கு ஒரு சில நினைவுப்பதிவுகளே இருக்கும். நாம் அந்த நினைவுப்பதிவுகளினால் துன்பப்படவோ அல்லது கஷ்டப்படவோமாட்டோம்.

நீங்கள் முடிவெடுத்தால் வாழ்வில் வருத்தத்திற்கே இடமிருக்காது

அடுத்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் தமஸ் பற்றி பேசுகிறார்.

அவர் அர்ஜுனனை நோக்கி, “ஓ, பரத சிரேஷ்டா! தெரிந்துகொள்; இருளின் தன்மை உடைய தமஸ், அறியாமையிலிருந்துதான் பிறக்கிறது. எல்லா உயிரினங்களிடமும் இருக் கின்ற மாயை இதுவே. முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் - இவையே இந்த மனப்பாங்கின் விளைவுகள். இவையே கட்டுறுத்தப்பட்ட ஆத்மாவைப் பிணைக்கின்றன. தமஸைப் பற்றிய மிக அழகான விளக்கம் இது.

அதிகப்படியான ஸம்ஸ்காரங்கள் அல்லது நினைவுப்பதிவுகள் இருந்தால், கோப்பு அஹங்காரத்தை எளிதில் அடைய முடியாது. உண்மையைச் சொல்லப் போனால், அந்தக் கோப்பு அஹங்காரத்தை முழுமையாகக்கூட சென்றடையாது. ஒரு வலிமையான நினைவுப்பதிவு, அஹங்காரத்தை நோக்கிச் செல்லும் பாதையிலேயே முடிவெடுத்துவிடும். இது, நீதித்துறையில் புழக்கத் தில் உள்ள ‘சிந்திக்காமல் செயல்படுவது’ என்ற சொற்றொடருக்கு ஒப் பாகும்.

இது ஏன் நிகழ்கிறது? விழிப்புணர்வற்ற நிலையில் முடிவெடுத்துவிட்டு பின்னர் ஏன் வருந்துகிறோம்?

இந்த விழிப்புணர்வற்ற பகுதி எதிர்மறையான நினைவுகளாலும், அமைதியற்ற தன்மையாலும் நிரம்பியுள்ளது. நம்முடைய எல்லாவிதமான கடந்தகால நினைவுகள், கடந்தகால எண்ண அமைப்புகள் மற்றும் ஸம்ஸ்காரங்கள் என அனைத்தும் இந்தப்

குழப்பத்திற்குக் காரணம் ஸம்ஸ்காரங்களே

பகுதியில்தான் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான தர்க்கரீதியான இணைப்பும் இல்லாமல், பல கோப்புகள் இந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுதான் நடக்கிறது. கோப்புகள் ஒரு பெரிய தாவலாக இந்த விழிப்புணர்வற் பகுதிக்குள் நுழையும்பொழுது, அவை, முடிவு எடுக்கும் பகுதியான அஹங்காரத்தை முழுமையாக அடைவதில்லை. ஏனென்றால் இந்தப் பகுதியில்தான் உங்களுக்குள் அமைதியற்ற தன்மையை உருவாக்குகின்ற எல்லாக் கருத்துக்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

ரஜஸ் சம்மந்தப்பட்ட
நினைவுப்பதிவுகளை நாம்
நீக்கிவிட்டோமானால்,
நம்மால் ஆயிரக்கணக்கான
தீர்மானங்களை
மனச்சோர்வு அடையாமல்
எடுக்க முடியும்.

கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தில் (Hard Disk), உயர் அடர்த்தி (High Resolution) புகைப்படங்கள் அதிகமாகப் பதிவேற்றப்பட்டு இருந்தால், அதன் பிறகு மேற்கொண்டு அந்த நினைவகத்தில் எதையும் புதிதாகச் சேமிப்பதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. அதுபோலத்தான், உங்களுடைய விழிப்புணர்வு அற்ற பகுதி கடந்தகால எண்ண அமைப்புகள் மற்றும் நினைவுகளினால் நிரம்பி இருந்தால், அது திறனற்ற, மேலோட்டமான, அறிவிற்குப் புறம்பான தீர்மானங்களை எடுக்கும்.

இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சேர்த்து வைத்துள்ள கருத்துக்களின்படி, புகைப்பிடித்தல் என்பது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடியது. அது உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் நல்லது அல்ல.

விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, நீங்கள் எடுத்த இந்த முடிவில் நிலையாக இருக்க முடியும். ஆனால், மனம், ஒரே தாவலாக அஹங்காரத்திற்குச் சென்றவுடன், அங்குள்ள நினைவுப்பதிவு புகைபிடிக்கக் கட்டளை இடுகிறது; நீங்களும் புகைபிடிக்க முடிவெடுக்கிறீர்கள்!

விழிப்புநிலை மனத்தின் செயல்முறை, "இல்லை, இது உடல்நலத்திற்கு நல்லதல்ல," என்று சொல்லும். ஆனாலும் விழிப்புணர்வற்ற மனத்தின்

Mind Illustration

செயல்முறை, சட்டென்று முடிவு
எடுத்து, உங்களையும் அதன்படி செயல்
படத் தூண்டுகிறது. இது முற்றிலும்
உள்ளுணர்ச்சியின் தூண்டுதலால் எடுக்
கப்பட்ட ஒரு முடிவாக இருக்கிறது.

நமக்குள் அதிகமான நினைவுப்பதிவுகள் இருந்ததென்றால், என்ன முடிவு வெளிவரும் என்பது நமக்கே தெரியாது. இது ஒரு பண்டோரா பெட்டியைப் (Pandora Box) போன்றது. நம்முடைய உள்ளுலகம் முழுவதும் நினைவுப்பதிவுகள் மற்றும் ஸம்ஸ்காரங்களால் நிரம்பியிருப்பதால் நமக்குள்ளிருந்து என்ன முடிவு வெளிவரும் என்பது நமக்கே தெரியாது. நாம் விலங்குகளின் நிலையில் இருக்கிறோம். நாம் உள்ளுணர்ச்சியிலிருந்து செயல்படுகிறோம்.

ஒரு சில நினைவுப்பதிவுகள் மட்டுமே இருந்தால், ஒரு கோப்பு, முந்நூறு மேசைகளைக் கடந்துசெல்லவேண்டிய அவசியமேற்படாது. அங்கு, தனியார் நிறுவனங்களைப்போல ஒரு சில மேசைகள் மட்டுமே இருக்கும். இதுவே மனித நிலை அல்லது அறிவு பூர்வமான நிலை.

நினைவுப்பதிவுகளே இல்லாதிருந்தால், ஒரு முடிவுக்காக ஒரு கோப்பு விழிப்புணர்வற் ற பகுதியில் விழவேண்டிய தேவையில்லை. அது மனத்தைக் கடந்த பிறகு நேரடியாக புத்தியையும், அஹங்காரத்தையும் சென்றடைகிறது. அங்கு எந்தவிதமான தடைகளும் இல்லை. விழிப்புணர்வு மனத்தின் செயல்முறைக்கு ஆகும் நேரத்தைவிட, விழிப்புணர்வற் ற மனத்தின் செயல்முறைக்கு ஆகும் நேரம் மிகக் குறைவு. நாம் உள்ளுணர்ச்சியால் தூண்டப்பட்டு செயல்படுபவர்களாக இருப்போம் அல்லது கடவுள் நிலையில் இருப்போம்.

உள்ளுணர்ச்சியால் தூண்டப்பட்டுச்
செயல்படும் நிலை விலங்கு நிலை.
பட்டறிவால் தூண்டப்பட்டுச் செயல்படும்
நிலை மனித நிலை. உள்ளுணர்வால்

> நாம் விளைவுகளை
> எதிர்பார்க்காமல்
> இருக்கின்றபொழுது,
> நாம் அருமையாகச்
> செயல்படுவோம்.

தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை கடவுள் நிலை!

உள்ளுணர்ச்சி நிலை தமஸ் நிலையையும், பட்டறிவு நிலை ரஜஸ் நிலையையும், உள்ளுணர்வு கடவுள் நிலையையும் குறிக்கின்றன.

ஸத்வ நிலையில் நம்முடைய மனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்; நாமும் தொடர்ந்து தீர்மானங்களை எடுப்போம். ஆனாலும் நாம் சோர்வடைவதில்லை. நாம் 24மணிநேரமும் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியும். இதைத்தான் நான், ‘செயல்பாட்டில் செயலற்ற தன்மை மற்றும் செயலற்ற தன்மையில் செயல்படுதல்’ என்று அழைக்கின்றேன்.

தமஸை ஜெயித்தவர்களே உண்மையான தைரியசாலிகள்

நாம் ஸத்வ நிலையில் இருக்கும்பொழுதுதான், நாம் நமக்குள் மையங்கொள்வோம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். நம்முள் மையங்கொள்ளும்போது, நம்மைச் சுற்றி பல செயல்கள் நடந்தாலும், நாம் முற்றிலும் தளர்வாக இருப்போம்.

இவை அனைத்துமே ஒரு விஷயத்தைச் சார்ந்திருக்கிறது; அது நம்முடைய நினைவுப்பதிவுகளைச் சார்ந்திருக்கிறது. நினைவுப்பதிவுகளின் எண்ணிக்கையே, நாம், ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற இம்முக் குணங்ளுள் எந்தக் குணத்தில் சிக்கியுள்ளோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்த மூன்றுமே ஜ்ஞான நிலை அல்ல. ஜ்ஞான நிலை என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாலுள்ள நிலை.

> விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, நீங்கள் எடுத்த முடிவில் நீங்கள் நிலையாக இருக்க முடியும்.

நாம் தமஸில் சிக்கியிருந்தால், ரஜஸை நோக்கிச் செல்ல வேண்டும். நாம், ரஜஸில் சிக்கியிருந்தால் ஸத்வத்தை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் ஸத்வத்தின் பிடியில் சிக்கியிருந்தால், அது தன்னிச்சையாக நம்மை ஞானமடைதலை நோக்கி எடுத்துச் செல்லும். நாம் இதை எப்படிச் செய்வது?

கிருஷ்ணர் தமஸ் பற்றிப் பேசுகிறார், "எல்லா

உயிர்களுக்குள்ளும் இருள் மற்றும்
அறியாமை வடிவாக இருந்து கொண்டு,
அவற்றை மயக்கத்திற்குள்ளாக்குவதே தமஸ்
என்பதை அறிவாயாக!''

முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும்
உறக்கம் ஆகியவை இந்த மனப்பாங்கின்
விளைவுகளே. அவையே கட்டுறுத்தப்பட்ட
ஆத்மாவைக் கட்டிப்போடுகின்றன.

உதாரணத்திற்கு, நாம் சுய-முரண்பாடுடைய ஆசைகளை ஸத்வ நிலையில் உருவாக்குகிறோம். அதன் காரணமாக நாம், அமைதியற்ற தன்மையை ரஜோ நிலையை உருவாக்குகிறோம். நாம் அமைதியற்று இருந்தோமானால், நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவோம், எந்தப் பொறுப்பையும் எடுக்க வேண்டாம் என்று முடிவுசெய்து, அதற்குப் பதிலாகத் தூங்குவோம். அப்போது நாம் தமஸில் விழுகிறோம்.

தமஸ் என்பது தூக்கம் மற்றும் மன அழுத்தம் மட்டுமல்ல, போதுமான அளவிற்குப் பொறுப்பெடுக்காமல் இருப்பதும்தான்.

உதாரணத்திற்கு, நாம் மருத்துவம் படித்து மருத்துவரான பிறகு, மந்தத்தன்மையின் காரணமாக, அந்தத் துறையில் பணிபுரிய நமக்கு விருப்பமில்லையென்றால், நாம் தமஸில் இருக்கிறோம் என்று அர்த்தம். தமோ குணத்தின் காரணமாக எதிலிருந்தும் விலகிவிடாதீர்கள். ஆன்மிக காரணங்களுக்காக - தியானம் செய்வதற்காக, புனித யாத்திரை செல்வதற்காக அல்லது ஆன்மிக செயல்களுக்காக - விலகுகிறீர்கள் என்றால், அது நல்லது. இப்படி எந்தக் காரணங்களும் இல்லாமல், மந்தத்தன்மையின் காரணமாக விலகினோமென்றால், நாம் தமோ குணத்தின் பிடியில் சிக்கியுள்ளோம்.

தமஸினால் நாம் விலகினோம் என்றால், நமக்குப்போதுமான ஆற்றலும், பொறுப்பான முடிவெடுக்கும் திறனும் இல்லை என்று அர்த்தம். அவ்வாறு ஏன் நிகழ்கிறது?

நாம் சேகரித்துவைத்திருக்கும் அதிகமான நினைவுப்பதிவுகள், நம்முடைய முடிவு எடுக்கும் செயல்பாட்டைப் பாதிக்கின்றன. ஒரு விஷயத்திற்குண்டான முடிவை எடுத்தவுடன், நாம் சோர்வடைந்ததாக உணர்கிறோம், தூங்க விரும்புகிறோம். அதனால்தான் நாம் வாழ்க்கையிலிருந்து தப்பியோட முயற்சிக்கிறோம். தப்பியோடும் மனிதர்கள் எல்லாம் தமோ குணத்தில் இருப்பவர்கள்.

நம் மூளையின் செயல்பாடு, பருவத்திற்கேற்ப மாறுபடும்

கேள்வி : ஸ்வாமிஜி, ஸம்ஸ்காரங்கள் உருவாகின்றன என்பதை நிரூபிக்க விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா?

உள்ளுணர்வால்
தூண்டப்பட்டுச்
செயல்படும் நிலை
கடவுள் நிலை!

அருமையான கேள்வி. ஆச்சரியப்படத்தக்க வகையில், அதற்கான பதில் 'ஆம்' என்பதே. இது ஆச்சரியப்படத்தக்கது, ஏனெனில் அறிவியல், முக்கியமாக மருத்துவ அறிவியல், இந்தத் துறையை ஆராய்வதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும், பழைமையை உடைத்து புதுமை படைக்க எண்ணங்கொண்ட சில விஞ்ஞானிகள், நம்முடைய மரபணுக்கள் நம்முடைய நடத்தையை (Behavior) தீர்மானிப்பதில்லை என்றும், மேலும் சொல்லப்போனால் இது தலைகீழாக நடக்கிறது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மேலைநாட்டு மருத்துவ அறிவியல், மனத்தைத் தவிர்த்து உடலிற்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதில் கவனம் கொண்டிருக்கிறது. மேலும் மனத்தைப் பற்றி செய்த ஆராய்ச்சிகள் அனைத்துமே, ஊனமுற்ற மனத்தை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்டவை.

எனினும், உயிர் அணுக்களின் மூலக்கூறை ஆராயும், பிரபல உயிரியல் அறிஞரான டாக்டர். புரூஸ் லிப்டன் (Dr. Bruce Lipton), தம்முடைய Biology of Belief என்ற புத்தகத்தில், 'நம்முடைய கட்டுறுமனப்பாங்குதான் நம்முடைய உயிரியலைத் தீர்மானிக்கிறது' என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜீவராசிகளின் உயிரணுக்களின் மட்டத்தில், பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர், 'உயிர்கள், தங்களின் நடத்தை, சுற்றுப்புறச் சூழலின் நேர்மறை மற்றும் எதிர்மறை பாதிப்புகள், கட்டுறுக்கள் போன்றவற்றில் எவ்வாறு நிலைகொள்கின்றன, அவை, உயிரணுக்களின் வடிவமைப்பையே எப்படி மாற்றி அமைக்கின்றன' என்பதைக் கண்ட றிந்தார்.

நம்முடைய மூளையின் செயல்பாடுகள், நம்முடைய வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. நம்முடைய மூளையின் அதிர்வலைப்பாங்கு, அதிர்வெண் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.

விஞ்ஞான பூர்வமாக, குழந்தைப் பருவத்தில்
நம்முடைய மூளை, குறைந்த செயல்பாடு
நிலைகளான டெல்டா (Delta) மற்றும்
தீட்டா (Theta) அலைகளில் செயல்படுகிறது
என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நாம் வளரும்பொழுது (Adolescence),
அவை ஆல்பா தன்மையில் (Alfa)
செயல்படுகிறது. வயது வந்தவர்கள்
மூளை, பீட்டா அலை வடிவங்களில்
(Beta), 14 ஹெர்ட்ஸை விட அதிகமாகச்
செயல்படுகிறது.

தமோ குணத்தின்
காரணமாக
எதிலிருந்தும்
விலகிவிடாதீர்கள்.

குறைந்த அதிர்வெண் அலை (Low frequence waves) அதிகளவு மாற்றங் களுக்கும் தாக்கங்களுக்கும் உட்படுவதாக இருக்கிறது. பெரியவர்கள் சொல்வது எதுவாக இருந்தாலும், சிறு குழந்தைகள் அதை அப்படியே உண்மையான அறிவுரையாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் காரணங்களை ஆராய்ந்து, வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

பெரியவர்களின் ஆதிக்கம், நாம்ாதாரணமாகப் புரிந்து கொண்டிருப்பதைவிட, குழந்தைகளிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாழ்க்கையில் ஏற்படும் ஸம்ஸ்காரங்களுக்கு இதுவே தொடக்கம்.

டாக்டர். புரூஸ் லிப்டன் அவர்களின் ஆய்வை நாம் இன்னும் ஆழமாக நோக்கினால், மரபணுக்களைப் (DNA) பாதிக்கும் நம்முடைய

நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், நம்முடைய வாரிசுகளையும் பாதிக்கின்றன. பிறகு ஸம்ஸ்காரங்கள் பல தலைமுறைகளுக்குத் தொடர்கின்றன. நான் முன்பே குறிப்பிட்டதுபோல, ஊர்வனவற்றுக்கு இருக்கும் அதே மூளை அமைப்பு, நமக்கும் இருப்பது எதைக் குறிக்கிறதென்றால், நமக்குள், பரிணாம வளர்ச்சிப்படி தொடர்ந்துவரும் நம்முடைய முந்தைய ஜென்மங்களின் ஸம்ஸ்காரங்கள் பதிந்துள்ளன என்பதையே குறிக்கிறது.

'நான்' என்னும் தனித்தன்மை அழிவில்லாதது என்று வேத அமைப்பு நம்புகிறது. உடல் வேண்டுமானால் இறக்கலாம், மறையலாம். ஆயினும் நான் என்னும் 'சுயம்' அல்லது ஆத்மன் வாழ்ந்துகொண்டிருக்கும்.

திடப்பொருள் அழிகிறது. சக்தி உயிர்வாழ்கிறது. மரணத்தின்பொழுது, அந்தப் பிறவியின் வாழ்க்கைமுறை சாரம், வாஸனாவாக அடுத்த பிறவிக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.

இந்த வாஸனா என்பது ஒருவருடைய ஸம்ஸ்காரங்களின் விதை. எனக்குத் தெரிந்த வரையில் இதுதான் ஸத்யம். மேலும் நான் இதை அனுபவமாக உணர்ந்திருக்கிறேன். விஞ்ஞானம் ஒருநாள் இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ளும்.

ஆனந்த ஸ்புரண த்யான முகாம், இந்த ஸத்யத்தை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய ஸம்ஸ்காரங்களே நம்மைச் செயல்களைச் செய்யும்படி உந்துகின்றன. உபநிஷதங்கள், நம்முடைய எண்ணங்களே, நம்முடைய செயல்களையும், நம்முடைய தலைவிதியையும் நிர்ணயிக்கின்றன என்று சொல்கின்றன. எண்ணங்களை உருவாக்கி, அவற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஸம்ஸ்காரங்களைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. ஸம்ஸ்காரங்களால் உருவாக்கப்பட்ட உணர்ச்சி அடைப்புக்களைக் கரையச்செய்து, முடிவாக ஸம்ஸ்காரங்களையும் கரைப்பது சாத்தியமே.

முதல்நிலை தியானமுகாமில், ஸம்ஸ்காரங்களால் உருவாக்கப்பட்ட உணர்ச்சி அமைப்புக்களைக் கரைப்பதற்கான முறைகளைக் கற்றுத் தருகிறோம். இதனால், உணர்ச்சிக் குறைபாடுகளற்ற ஒரு வளமான வாழ்வை நீங்கள் வாழ முடியும்.

இரண்டாம் நிலையான நித்யானந்த ஸ்பூரண த்யானமுகாமில், பல்வேறு சக்தி நிலைகளில் செயல்பட்டு, ஸம்ஸ்காரங்களைக் கரைத்து, அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றிக் கற்றுத் தருகிறோம்.

இறுதியில், தொடர்ந்து ஸம்ஸ்காரங்களை நீக்கிக்கொண்டேயிருக்கும், ‘நித்ய தியான சிகிச்சையாளர் தீக்ஷை’ வழங்கப்படுகிறது.

ஆனந்த கந்த த்யானம் என்றும் அழைக்கப்படும் இத் த்யானம், ஒருவரை மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

குணங்கள்தான் - ஸம்ஸ்காரங்களை மற்றும் கர்மாக்களை தோற்றுவிக்கின்றன. இந்த த்யானம் நம்மை த்ரிகுண ரஹிதராக அதாவது மூன்று குணங்களின் கட்டுக்கு அப்பாற்பட்டவராக மாற்றக்கூடியது. இது ஞானமடைவதற்கான த்யானம்.

Hands playing a flute