KAILASA Library/பகவத்கீதை/உங்கள் மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்யுங்கள்Sign in
பகவத்கீதை

உங்கள் மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna playing flute

ஒரு சின்ன கதை: அன்று பள்ளி வருடாந்திர நாள், அதனால் மாணவ மாணவியர்கள், தங்களுடைய ஆசிரியருக்குக் கொடுப்பதற்கென்று பரிசுப் பொருட்களை எடுத்துவந்திருந்தனர்.

முதல் குழந்தை ஆசிரியருக்கு, அழகிய வண்ணக் காகிதத்தால் மூடப்பட்ட ஒரு பரிசுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தது. அக்குழந்தையினுடைய தந்தை, பலகாரக் கடைக்குச் சொந்தக்காரர்.

ஆசிரியர் அந்தப் பரிசுப் பொருளை வாங்கி, உலுக்கிப் பார்த்துவிட்டு, "இதில் தின்பண்டங்கள் இருக்கின்றனவா?" என்று கேட்டார். அந்தக் குழந்தை, "ஆமாம்," என்றது.

உடனே அந்த ஆசிரியர், தாம் கண்டுபிடித்துவிட்ட பெருமையுடன் தம்முடைய மாணவர்களைப் பார்த்தார். அடுத்து வந்த குழந்தை, துணி வியாபாரியின் மகள். அந்த மாணவி, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பரிசுப் பெட்டியை ஆசிரியருக்குக் கொடுத்தாள்.

அந்த ஆசிரியர், அந்தப் பரிசுப்
பொருளையும் தம்முடைய காதருகே
வைத்துஃக் குலுக்கிப் பார்த்துவிட்டு,
"இதற்குள் உடைகள் இருக்கின்றனவா?"
என்று கேட்டார். அந்தக் குழந்தையும்,
"ஆமாம்," என்றது. அந்த ஆசிரியரும்
ஒருவித கர்வத்துடன், அடுத்து வந்த
மாணவியைப் பார்த்தார்.

ஒரு கோணத்தில் மட்டுமே
சிந்திக்காதீர்கள்!
உங்கள் சிந்தனை
பல் முனை சிந்தனையாக
இருக்கட்டும்!

அந்த மாணவியும், அழகிய துணியால்
அலங்கரிக்கப்பட்ட ஒரு பரிசுப்
பெட்டியுடன் வந்தாள். அவளுடைய
தந்தை, ஒரு மதுபானக்கடைக்குச்
சொந்தக்காரர்.

வழக்கம்போல் அந்த ஆசிரியர், பரிசுப் பெட்டியைக் கையிலெடுத்து அசைத்துப் பார்த்தார். அப்பொழுது அந்தப் பரிசுப் பெட்டியிலிருந்து திரவம் கசிவதைக் கண்டார். அவர், அந்தக் கசியும் திரவத்தினைத் தம்முடைய விரலால் தொட்டுப் பார்த்துவிட்டு, அந்த மாணவியிடம் மிகுந்த ஆர்வத்துடன், "இது பீரா?" என்று கேட்டார். அந்தச் சிறுமி, "இல்லை," என்றாள்.

அந்த ஆசிரியர் அந்தத் திரவத்தில் மீண்டும் தன் விரலைத் தோய்த்து, அதன் சுவையைக் கவனமாக ருசித்தார். பிறகு "இதன் சுவை புதியதாக இருக்கின்றதே? இது என்ன? புது வகை மதுவா?" என்று கேட்டார்.

அந்தச் சிறுமி மீண்டும், 'இல்லை' என தலையாட்டினாள்.

அந்த ஆசிரியரும், "சரி, நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்; இதில் என்ன இருக்கிறது என்று நீயே சொல்?" என்று கேட்டார்.

அந்தச் சிறுமி கவலை தோய்ந்த குரலில், "நாய்க்குட்டி!" என்றாள்.

Puppy

இதுக் கதையின் நீதி மிகவும் எளிமையானது: தயவுசெய்து என்ன பொருள் என்று தெரியாமல் வாயில் எதையும் போட வேண்டாம்!

முடிவை எடுப்பது நீங்களா? உங்கள் ஸம்ஸ்காரங்களா?

உண்மையில் இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, எந்த மிக முக்கியமான தீர்மானங்களையும் எடுக்க வேண்டாம் என்பதே.

நம்முடைய கடந்தகால அனுபவங்கள் எல்லாமே விழிப்புணர்வு அற்ற மனத்தில் ‘நினைவுப்பதிவு’களாக அல்லது ‘எண்ணப்பதிவு’களாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவை நம்மைத் தவறாகவே வழிநடத்தும். ஸம்ஸ்க்ருத்தில் இந்த நினைவுப்பதிவுகளை ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லுவோம்.

நாம், மிக முக்கியமான தீர்மானங்களை இந்த ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் எடுக்கும்போது, அவை தவறானவையாகவே இருக்கின்றன.

அந்த ஆசிரியர், அந்தப் பரிசுப் பெட்டியில் இருப்பது, ஒருவகை மதுப்புட்டியாகத்தான் இருக்குமென நினைத்தார். ஏனென்றால் அந்த மாணவியின் தந்தை, மதுபானங்களை விற்பவர். இதேபோல்தான் நாமும், நமது விழிப்புணர்வு அற்ற மனத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ‘நினைவுப்பதிவு’களின் வழிகாட்டுதலின்படியே, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் எடுக்கிறோம்.

ஆசிரியரின் முதல் இரண்டு யூகங்கள் சரியாக இருந்தன. முதல் மாணவியின் தந்தை, இனிப்புத் தின்பண்டங்கள் வியாபாரம் செய்பவராதலால், ஆசிரியர் அப்பரிசுப் பெட்டியில் இனிப்புகள் இருக்குமென நினைத்தார்.

இரண்டாவது மாணவியின் தந்தை, துணிக்கடைக்குச் சொந்தக்காரர் என்பதால், அது ஒரு ஆடையாகத்தான் இருக்கும் என்கிற ஆசிரியரின் யூகமும் சரியாகவே இருந்தது.

மூன்றாவது மாணவியின் தந்தை, மதுபானக்

> ஸம்ஸ்காரங்களைக் கடந்து வாழ்வதே ஜீவன்முக்த வாழ்வு, கடையின் சொந்தக்காரர் என்பதால், ஆசிரியர், அந்தப் பரிசுப் பொருள், ஒரு மதுபானப் புட்டியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

நாம், எதையும் சுவைப்பதற்கு முன், 'அது என்ன' என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது, பல சங்கடங்களுக்கு வழிவகுக்கும்.

பகவத்கீதையின்

இந்த அத்தியாயம் முழுவதுமே,
நம் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும்
ஸம்ஸ்காரங்களைப் பற்றியதே.

நம்முடைய அனைத்து செயல்களுமே, விழிப்புணர்வற் ற மனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணப்பதிவுகளின் தூண்டுதலின்படி தான் அமைகின்றன.

இப்படி நம்முடைய செயல்கள், நம்முடைய நினைவுப்பதிவுகளைச் சார்ந்தே அமைந்திருந்தாலுங்கூட, அக்குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டுமென்ற 'அத்தீர்மானங்கள்' எங்கிருந்து வந்தன என்பதை, நாம் தெரிந்துகொள்வதோ அல்லது புரிந்துகொள்வதோ இல்லை.

நாம், நம்முடைய செயல்கள் அனைத்தும், தர்க்க ரீதியான எண்ணங்களின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன என்று நினைத்து க்கொண்டு இருக்கிறோம். ஆனால், அத்தீர்மானங்கள் எல்லாமே, நம்முடைய விழிப்புணர்வற் ற மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் நினைவுகளிலிருந்தே வருகின்றன.

எப்பொழுதும் எதிலும் எங்கும் விழிப்புடன் இருங்கள்!

நம்முடைய தீர்மானங்களில், முடிவுகளில்
விவேகமோ விழிப்புணர்வோ
இருப்பதில்லை. நவீன உளவியல் துறை,
நமது 90% மனமானது, விழிப்புணர்வு அற்ற
நிலையில்தான் உள்ளது என்கிறது. அதாவது
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ‘நம்
முடைய பத்து சதவிகித மனத்தை மட்டுமே
விழிப்புணர்வுடன் உபயோகிக்கிறோம்’
என்கிறது.

நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுள், 10% மட்டுமே விழிப்புணர்வுள்ள மனத்தினால் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 90%, விழிப்புணர்வற் ற மனத்தினாலேயே இயக்கப்படுகின்றன.

நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தின் செயல்பாடுகள், நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஏனென்றால், 'விழிப்பறு மனம்' எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றியோ, அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ, நாம் அறிந்திருப்பதில்லை.

பெரும்பாலும், விழிப்பறு மனத்தில் பதியும் நினைவுப்பதிவுகள், பயத்தையும் வலி வேதனைகளையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவை, எதிர்பாராத நிகழ்வுகளின்பொழுதும், வேதனையான சூழ்நிலைகளின்பொழுதும் மேலெழும்புகின்றன. அவையே, நாம் எடுக்கும் முடிவுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன; அவற்றில் நம்முடைய விழிப்புணர்வின் பங்கு இருப்பதில்லை.

நீங்கள் அறிந்ததும் அறியாததும்

நம்முடைய புலன்கள் மூலம் கிரகித்துக் கொள்ளும் பல விஷயங்களில், ஒரு துளி அளவு மட்டுமே, நம் விழிப்புணர்வு நிலையில் பதிவாகின்றன என்றும், நாம் பார்க்கின்ற, கேட்கின்ற விஷயங்களில் 5 சதவீகிதத்திற்கும் குறைந்த அளவைப் பற்றித்தான் நமக்குத் தெரிந்திருக்கிறது என்றும், விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

ஒரு உண்மை சம்பவம். நம்முடைய பிடதி ஆச்ரமம், பெங்களூரிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆரம்பக் காலத்தில், நான் தினமும் பிடதியில் இருந்து பெங்களூரு செல்வது வழக்கம்.

ஒருநாள் நான் ஓட்டுனரிடம், பெங்களூரு போகும் பாதையில் அமைந்திருக்கும் ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அவ்விடத்திற்குச்

செல்லுமாறு சொன்னேன். அந்த இடம்,
ஒரு மசூதியின் அருகில் இருப்பதையும்
நான் ஓட்டுனரிடம் குறிப்பிட்டேன்.

அந்த ஓட்டுனர் குழம்பிப் போனார். நாங்கள் தினமும் செல்லும் அந்தப் பாதையில் எந்த மசூதியும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகச் சொன்னார். நான், மசூதியின் அருகாமையிலுள்ள பல அடையாளங்களைச் சொல்லியும், அவரால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற அடையாளங்களை அவருக்குத் தெரிகிறது, ஆனால், அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள மசூதியை மட்டும் அவர் அறியவில்லை.

கடைசியில், அங்கு ஒரு ஹனுமன் கோயிலும் இருக்கும் என்று நான் சொன்னவுடன், அவர் புரிந்து கொண்டார். புரிந்து கொண்டதாலும், சந்தோஷத்தினாலும் அவருடைய முகம் மலர்ந்தது.

"ஸ்வாமிஜி, ஏன் இதை நீங்கள் முதலிலேயே சொல்லவில்லை? அந்த இடம் எனக்குத் தெரியும். நீங்கள் எங்குச் செல்ல வேண்டும் என்று இப்போது எனக்குப் புரிந்துவிட்டது!" என்றார்.

அந்த இந்துக் கோயில், மசூதியுடன் ஒப்பிடும்பொழுது, ஒரு சிறிய கட்டடமே. நாங்கள் தினமும் இந்த இரண்டு கட்டடங்களையும் கடந்துதான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனாலும் அவர், ஹனுமன் கோயிலை மட்டுமே நினைவில் வைத்திருந்தார். ஏனென்றால் அவருக்குச் சொந்த விருப்பம் அதில் இருந்ததால், அவருக்கு மசூதியைப் பற்றிய நினைவே இல்லை.

நாம் உள்வாங்குபவை எல்லாம், உண்மையும் அல்ல; நாம் உள்வாங்காதவை, பொயய்யும் அல்ல.

ஒரு எளிய உண்மை என்னவென்றால், நம்முடைய ஐம்புலன்களால் நாம் உணர்வதில் ஒருசில துளிகள் மட்டுமே, நம் 'விழிப்புறு' மனத்திற்குள் இறங்குகின்றன. மற்றவை எல்லாம் நேரடியாக, 'விழிப்பறு' மனத்திற்குள் சென்று விடுகின்றன. உடனே நீங்கள், விழிப்பறு மனத்தில் பதிந்த அந்த நினைவுப்பதிவுகளை நாம் மறந்து விடுவோம் என்று எண்ணி விடாதீர்கள்; அப்படி அல்ல.

நமக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலுங்கூட, பற்பல அனுபவங்களின் நினைவுகள், நம்முள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நினைவுகள்தான், நம்முடைய செயல்களுக்கான வலிமையான தூண்டுகோள்களாக செயல்படுகின்றன.

நம் வாழ்க்கையை வாழ்ந்திடும் விழிப்புணர்வற் ற பகுதி

அறுவை சிகிச்சைக்காக மயக்க நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் கூட, அவர்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை அவர்கள் தங்களுக்குள் பதிவு செய்கிறார்கள் என்பதை தற்போது அறுவைசிகிச்சை நிபுணர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இது கதையல்ல. பல பிரபலமான மருத்துவர்களும் கூட இதைப் பற்றிய ஆராய்ச்சிகளைப் புத்தகங்களாக எழுதியுள்ளனர். அவர்கள் மற்ற மருத்துவர்களை எச்சரிக்கின்றனர்; அறுவை சிகிச்சை செய்யும்பொழுது மருத்துவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஏனென்றால், சிகிச்சை பெறும் ஒரு நபர், நாம் நினைப்பதுபோல விழிப்புணர்வு அற்ற நிலையில் இல்லை.

உங்களுக்கு நினைவில்லை என்பதற்காக, அவை உங்களைப் பாதிக்காது என்று எண்ணிவிடாதீர்கள்!

அதற்கு உதாரணமாக ஒரு உண்மைச்
சம்பவத்தை அவர்கள் விவரிக்கின்றனர்:
ஒரு நோயாளி, தம்முடைய மனப்
பிரச்சினைக்காக, மருத்துவரை நாடி
வந்தபோது, அவருடைய பிரச்சினைக்கான
மூலகாரணத்தைக் கண்டுபிடிக்க நேர்ந்தது.

சில வருடங்களுக்கு முன், அந்த
மனிதர், ஒரு விபத்திற்குள்ளானார்.
அப்போது அங்கிருந்தவர்கள், அவரை
மருத்துவமனையில் சேர்ப்பதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர். மயக்கத்திலிருந்த

அவரைக் காரிலிருந்து வெளியேற்றும்பொழுது, அப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் இருவர், அவர்களுடைய தினசரி பிரச்சினைகளைப் பற்றி பேசிக்கொண்டு இருந்திருக்கின்றனர்.

அதில் ஒருவர், தன் காதலி, தன்னைத் திருமணத்திற்காக வற்புறுத்தியதால், அவரை விட்டு விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அப்பொழுது அவர், 'வாழ்க்கை மிகச் சிறியது. அதைத் திருமணம் என்கிற பொறுப்பெடுத்து வீணாக்க விரும்பவில்லை' என்று குறிப்பிட்டிருந்திருக்கிறார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபர், இந்தக் குறிப்பிட்ட வாக்கியத்தை, மயக்கத்திலிருந்தபொழுது கேட்டாலுமே, அது ஆழமாக அவர் நினைவில் பதிந்துவிட்டது. இது அவருக்கு, மற்றவர்களுடனான உறவுமுறைகளில், கடினமான பிரச்சினைகளை உருவாக்கியது. அவருக்கு வாய்க்கும் பொறுப்புகளில் பல பொறுப்புகளை, ஏன் தட்டிக்கழிக்கிறோம் என்று தெரியாமலேயே தட்டிக்கழித்தார். இது அவருடைய தொழில் ரீதியான முன்னேற்றத்திலும் பல பிரச்சினைகளை உண்டாக்கியது.

பல வலிமைவாய்ந்த
நினைவுகள்,
விழிப்புணர்வு நிலையில்
இருப்பதில்லை; அவை
நேரடியாக விழிப்புணர்வு
அற்ற பகுதியைச்
சென்றடைந்துவிடும்.

இது பல வருடங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கவே, இறுதியாக அவர் மருத்துவ சிகிச்சையை நாடினார். மருத்துவர்கள், விபத்தில் ஏற்பட்ட அந்த நினைவுப்பதிவுகளை வெளிக்கொண்டு வந்த பிறகே, அவர் குணமடைந்தார். அவருடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அந்த உரையாடல்தான். அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்திருந்தாலும் அவருடைய நினைவுப் பகுதியில் அந்த வார்த்தைகள் நுழைந்ததுதான்.

பல வலிமைவாய்ந்த நினைவுகள், விழிப்புணர்வு நிலையில் இருப்பதில்லை; அவை நேரடியாக விழிப்புணர்வு அற்ற பகுதியைச் சென்றடைந்துவிடும். நாம் அவற்றைத் திரும்பவும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனாலும் அவை, நமது செயல்களின் மீதும் முடிவுகளின் மீதும் ஆற்றல்வாய்ந்த விளைவுகளையும் தாக்கத் தையும் ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இந்தத் தாக்கம், அந்த அனுபவத்தை அனுபவித்தபோது நமக்குள் ஏற்பட்ட உணர்ச்சிபூர்வ மான 'புலனுணர்தலை' அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நான் இங்கு, 'புலனுணர்தல்' என்று சொல்லும்போது புலன்களின் மூலம் உணரக்கூடிய அனுபவங்களைக் குறிக்கவில்லை. அந்த அனுபவங்களுக்கு நாம் எப்படி உணர்ச்சிபூர்வமாகப் பதிலளிக்கிறோம் என்பத்தைக் குறிக்கிறேன். இந்தப் பதில்செயல், ஒரு கட்டுறுத்தப்பட்ட பதில்செயலே.

இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் நாம் புலன்களால் உணரக்கூடியவற்றிற்கு எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பற்றி விவரிக்கிறார். இந்த அத்தியாயம் குணத்ரய விபாக யோகம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர், மூன்றுவிதமான குணங்களை அர்ஜுனனுக்கு விவரிக்கிறார்.

> விழிப்புறு மனத்தில்
> பதியும் நினைவுகள்,
> நமது செயல்களின்
> மீது ஆற்றல்வாய்ந்த
> விளைவுகளையும்
> தாக்கத்தையும்
> ஏற்படுத்தக் கூடியவையாக
> உள்ளன.

நாம் எப்படிச் செயல்படுகிறோம் ?...
நாம் எப்படிச் 'செயல்படுகிறோம்' என்றுகூட
கேட்க இயலாது, 'நாம் ஒவ்வொரு
சூழ்நிலைக்கும் எப்படி 'எதிர்ச்செயல்'
செய்கிறோம் ?' என்றே கேட்க வேண்டும்.
நாம் எவ்வாறு எதிர்ச்செயல் புரிகிறோம்
என்பது இந்த மூன்று குணங்களைத்தான்
அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இப்படித்தான் நாம் பல ஸம்ஸ்காரங்களை உருவாக்குகிறோம். நம்முடைய செயல்களால் பந்தங்கள் உருவாகின்றன. அவற்றின் விளைவாக நமக்குப்பல பிரச்சினைகள் உருவாகின்றன.

கேள்வி: ஸ்வாமிஜி, எப்படி விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வற்ற மனங்கள் வேலை செய்கின்றன என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. மேலும் குருவானவர் நமக்குள் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு எப்படி உதவி செய்கிறார் என்பதை தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்.

உங்களுக்குள்ளேயே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன ; வன்பொருள் மற்றும் மென்பொருள். உங்கள் மூளை என்பது வன்பொருள். மனம் என்பது மென்பொருள்.

உங்கள் மனத்திற்குள் அதாவது உங்களுடைய மென்பொருளுக்குள் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அவையாவன; ஒன்று, விழிப்புணர்வுப் பகுதி; இரண்டு, விழிப்புணர்வற் ற பகுதி.

விழிப்புணர்வுப்பகுதி என்பது பொதுவாக நாம் சொல்லும் விழிப்புநிலையான ஜாக்ரத் நிலையைக் குறிக்கின்றது. நீங்கள் விழிப்பு நிலையில் இருந்தாலும், 90% நேரம் உங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் உங்களுடைய விழிப்புணர்வற் ற மனம்தான் ஆளுகிறது! இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

விழிப்புணர்வுப்பகுதி என்பது மென்பொருள் என்றால், விழிப்புணர்வற் ற பகுதி என்பது வைரஸ்! விழிப்புணர்வுப் பகுதியை ஞானக் கருத்துக்களால் தூய்மைப்படுத்த முடியும். விழிப்புணர்வற் ற பகுதியை த்யானத்தின் மூலமாகத்தான் தூய்மைப்படுத்த முடியும்.

குருவின் தீக்ஷையினால் மட்டுமே முடியும்!

நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வு மனத்தையும், விழிப்புணர்வற் ற மனத்தையும் தூய்மைப்படுத்தி, விளைவுகளை உருவாக்கும்போது, மூளையால் அந்த மாற்றங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்.

> நீங்கள்
> விழிப்பு நிலையிலிருந்தாலும்
> 90% நேரம் உங்களுடைய
> எண்ணங்களையும்
> செயல்களையும்
> உங்களுடைய
> விழிப்புணர்வற் ற மனம்தான்
> ஆளுகிறது!

இப்பொழுது மென்பொருளில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப்
பற்றிக்கொள்வதற்கும், மாற்றப்பட்ட
மென்பொருளினால் ஏற்படும் புதிய
அனுபவங்களைப் பற்றிக்கொள்வதற்கும்
ஏற்றாற்போல், மூளையில், ஹார்ட்வேரில்
மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இது குருவினுடைய ஆசீர்வாதத்தினாலும்,
அவருடைய தீக்ஷையினாலும் மட்டுமே
நடக்கக்கூடிய ஒருசெயலாக இருக்கிறது.

குருவிடமிருந்து தீக்ஷை பெற்றுவிட்டால்,

அந்த மாற்றங்களைத் தக்கவைத்துக்க்
கொள்வதற்கான வகையில், மூளை,
மாற்றம் அடைகின்றது.

ஒரு வாழும் ஞானியின் ஸாந்நித்யம் இல்லாதபொழுது, தொடர்ந்து ஞானக் கருத்துக்களைக் கேட்பதும், தியானங்களைச் செய்வதும்நான் நம்முடைய ஹார்ட்வேரில் மாற்றங்களை நிகழ்த்த முடியும். ஸம்ஸ்காரங்களால் மூளை யில் உருவாக்கப்பட்டிருக்கும் வழித்தடப் பள்ளங்களே இங்கு ஹார்ட்வேர்.

> விழிப்புணர்வுப் பகுதியை
> ஞானக் கருத்துக்களால்
> தூய்மைப்படுத்த
> முடியும்.
> விழிப்புணர்வற்ற பகுதியை
> தியானத்தின்
> மூலமாகத்தான்
> தூய்மைப்படுத்த
> முடியும்.

ஒருமுறை புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுவிட்டாலே போதும், மெதுமெதுவாக வன்பொருளும் மாற்றத்திற்கு உள்ளாகும். எப்படியானாலும், நீங்கள் உடனடியாக உங்களுடைய வன்பொருளை, மூளையை உருமாற்ற விரும்பினால், குருவினுடைய ஸாந்நித்யமே அதற்குச் சரியான வழியாகும். அது, நேரடியாக நம்முடைய மூளையை மாற்றவல்லது.

சில நேரங்களில் வன்பொருளை மாற்றிப்போட்டாலே போதும், அந்த மனிதனுடைய மென்பொருளின் தன்மை மாற்றப்படாவிட்டாலும்கூட, அவர் உடனடியாக மென்பொருளிலும் மாற்றத்தை வெளிப்படுத்துவார்!

இது, ஒரு சீடர் தம் குருவிடம் முழுமையாகத் திறந்த தன்மையுடன் இருக்கும்பொழுதும், எந்தக் காரணமும் இல்லாமல் குருவின் மீது அளவு கடந்த அன்புடன் இருக்கும்பொழுதும் சாத்தியமாகும்.

சில நேரங்களில் ஒரு சீடர், தம் குருவிடம் காரணமே இல்லாமல் அன்பில் வீழ்வார். அந்தச் சீடர் குருவினுடைய கருத்துக்களாலோ அல்லது தியான நுட்பங்களாலோ கவரப்பட்டு இருக்க மாட்டார். இருந்தாலும், வெறுமனே அன்பு வசப்பட்டிருப்பார்.

இத்தருணங்களில், எந்தவிதத் தாமதமும் இல்லாமல் வன்பொருளை (மூளையின் செயல்பாடுகளை) மாற்ற இயலும். இந்த மாதிரியான சீடர்கள், ஞானக் கருத்துக்களையும் தியானங்களையும் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் தனிச்சிறப்புடன் வெளிப்படுத்துவார்கள். அவற்றை அவர்கள், மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆனாலும் அவற்றைக் கற்ற, கேட்ட பலன் கண்கூடாகத் தெரியும்.

இன்றுவரை, உங்களுடைய மூளையின் செயல்பாடுகளும், மனத்தின் செயல்பாடுகளும் வெளியுலகத்தை நோக்கிச் செல்வதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் சக்ரா த்யான முகாமிற்கு அதாவது ஆனந்த ஸ்புரண முகாமிற்குச் சென்றால், உங்களுடைய மென்பொருளான மனம் திடீரென்று உள்நோக்கித் திரும்பும். அது உள்முகமாக, ஆன்மிகத்தை நோக்கி, தூய்மைப்படுத்தும் ஒரு செயல்முறையை நோக்கிச் செல்லத் துவங்கும்.

விழிப்புணர்வுப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் செயல், ஜ்ஞானக் கருத்துக்களின் மூலமாகவும், விழிப்புணர்வற்ற பகுதியைத் தூய்மைப்படுத்தும் செயல், த்யானத்தின் மூலமாகவும் நடைபெறுகின்றன.

எப்படியிருந்தாலும், உங்கள் மனம் (மென்பொருள்) உள்முகமாகத் திரும்பினாலும், உங்கள் மூளையால் அதை அவ்வளவு எளிதாகக் கையாள முடியாது. அப்பொழுது மூளையானது (வன்பொருள்) அதனுடைய பழக்கப்பட்ட வழித்தடப்பள்ளங்களை, தன்னால் இயன்றவரை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யும்.

மனம் வலிமையாகவும், அதே லயத்திலேயேயும் புதிய மாற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டால், மூளை மெதுவாக மாற்றத்திற்கு உள்ளாகும்.

எப்படியிருந்தாலும், ஜ்ஞானக் கருத்துக்களையும் த்யானங்களையும் உள்வாங்கியவுடன், குருவிடமிருந்து பெறுகின்ற சக்தி நிறைந்த தீக்ஷையே, மூளையை, புதிய மனஅமைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றும். இது புதிய அனுபவங்களைப் பிடித்துவைக்கத் தயாராகும். இந்தக் கருத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் போதிய அளவு விழிப்புணர்வை உங்களுக்குள் கொண்டுவந்து, உணர்வுமாற்றத்தை உங்களுக்குள் நிகழ அனுமதிக்க முடியும்.

illustration

கிருஷ்ணர் தம்மை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்

Lord Krishna

கிருஷ்ணர் சொல்கிறார்: முனிவர்கள் எல்லோரும் பூரணத்துவத்தை அடைய எந்த ஜ்ஞானம் உதவியதோ அந்த ஒப்புயர்வற்ற ஜ்ஞானத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கின்றேன்.

அந்த ஜ்ஞானத்திலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த இயல்பை அடைய முடியும்; அழிவற்ற விழிப்புணர்வில் நிலைபெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் சிருஷ்டியில் பிறப்பதும் இல்லை, பிரளயத்தில் அழிவதும் இல்லை.

ப்ரஹ்மம் என்றழைக்கப்படும் மொத்தப் பருப்பொருளின் கருப் பொருளே பிறப்பதற்கு மூலகாரணமாக இருக்கிறது. நான் அந்த ப்ரஹ்மத்தைக் கருவுறச் செய்து, எல்லா உயிரினங்களும் பிறப்பதைச் சாத்தியமாக்குகிறேன்!

அர்ஜூனா, புரிந்துகொள். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமாகப் பிரகிருதி இருக்கிறது. அவை பிறப்பதற்குச் சாத்தியமான மூல வித்துக்குரிய தந்தை நானே!

உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் வார்த்தைகள்

மீண்டும் மீண்டும் ஸத்யத்தைச் சொல்வதன் மூலம் கிருஷ்ணர் அர்ஜுனனுடைய மனத்தில் ஸத்யத்தைப் பற்றிய நினைவுப்பதிவுகளை உருவாக்க முயல்கிறார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், ஏன் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்துகிறார்? அவர் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை ஏன் உபயோகிக்கிறார்? அவர் மீண்டும் மீண்டும், அதே விஷயத்தையே ஏன் பேச வேண்டும்?

கிருஷ்ணர், பலன்களை அளிக்கக்கூடிய ஒரு குருவாக இருக்கிறார்.

கிருஷ்ணர், எதைச் செய்ய விரும்புகின்றாரோ, அதில் நிலைத்த மனத்துடன் செயல்படுபவராக இருக்கிறார். அதிலிருந்து பின்வாங்கவோ, மாற்றாக வேறொன்றைச் செய்யவோ விரும்பாதவராகவும் இருக்கிறார்.

அவர், 'நான் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டேன், கேட்பதோ கேட்காமல் இருப்பதோ அவர் விருப்பம்' என்ற மனோபாவத்தில் இருப்பவர் அல்ல; அப்படி எளிதில் திருப்தி அடையக் கூடியவர் அல்ல.

மீண்டும் மீண்டும் அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார்.

கிருஷ்ணர்,
பலன்களை அளிக்கக்கூடிய
ஒரு குருவாக இருக்கிறார்.

ஏனென்றால் அர்ஜுனனுடைய மனத்தில் தம்முடைய போதனைகளை ஒரு நினைவுப் பதிவாக உருவாக்க விரும்புகிறார். அவர் இதை ஏன் செய்கிறார் என்றால், தம்முடைய போதனைகளை, முதல்முறை சொல்லும்பொழுது, அர்ஜுனன் தவறவிட்டிருந்தால்கூட, அடுத்த முறை சொல்லும்பொழுதாவது, அதை உள்வாங்குவார் என்ற காரணத்தினால்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

அர்ஜுனனுடைய மனத்தில் ஒரு நினைவுப்

பதிவை ஏற்படுத்துவதன் மூலம், அதை
அர்ஜுனன் பின்பற்ற வேண்டும் என்று
விரும்புகிறார். அந்த நோக்கத்தோடுதான்
கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் ஸத்யத்தை
உரைக்கிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், "நான் இன்னும்
ஒருமுறை உரைக்கிறேன், எந்த உயர்ந்த
ஜ்ஞானத்தின் மூலமாக எல்லா முனிவர்களும்
பூர்ணத்துவத்தை அடைந்தார்களோ, அந்த
ஸத்யத்தைப் பற்றி உனக்கு உரைக்கிறேன்."

நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மனிதன் இயல்பிலேயே இயந்திரத்தைப் போன்றவன்தான். அவன் இயந்திர அமைப்பில் இருப்பவன்தான். உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் இயந்திர அமைப்பில்தான் இருக்கின்றான். நாம், இதை 'உயிருள்ள இயந்திர அமைப்பு' என்று வேண்டுமானால் அழைக்கலாம். ஆனாலும், மனிதன் ஒரு இயந்திர அமைப்பு உடையவனாகவே இருக் கிறான்.

மனிதன், நினைவுப்பதிவுகளை அல்லது ஸம்ஸ்காரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்களைச் செய்கிறான்.

அவன், அவனுடைய மனத்திலும் உணர்விலும் பதிவுசெய் யப்பட்டிருக்கும் 'நினைவுப்பதிவுகள்' என்னும் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் மனிதன், தன்னுடைய விழிப்புணர்வற் ற மனத்தில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் நினைவுப்பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றான்.

Figure

நான் மீண்டும் மீண்டும் சில
வார்த்தைகளையும் வாக்கியங்களையும்
சொல்கிறேன் என்றால், என்னிடம்
வேறெதுவும் சொல்வதற்கில்லை என்பதால்
அல்ல. இந்த வார்த்தைகளுக்கும்,
வாக்கியங்களுக்கும் உங்களுக்குள்
ஆழ்ந்து செல்லக்கூடிய சக்தி உண்டு.
நீங்கள் அதை அனுமதித்தால், அவை

உங்களுக்குள் உணர்வுருமாற்றத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், திறந்த மனதுடன், இந்த வார்த்தைகளை உங்களுக்குள் மூழ்க அனுமதிக்க வேண்டியதே.

நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்கும்பொழுது, அந்த வார்த்தைகளை உங்களுக்குள் ஊடுருவ அனுமதியுங்கள். இந்த வார்த்தைகள், உங்களுக்குள் உணர்வுருமாற்றத்தை நிகழ்த்தி, உங்களை மேலேடுத்து வரக்கூடிய சக்தியை, தம்மகத்தே கொண்டவை.

நம்மை உயர்த்துவதற்காகவே உருவானவை -

வேத கலாசாரங்கள்...

பல்வேறு மதச் சடங்குகளும் நமக்குள் நல்ல ஸம்ஸ்காரங்களை உண்டாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. கோயில்கள், பிரார்த்தனை குழுக்கள் அல்லது ஸத்ஸங்கங்கள் போன்றவை ஆன்மிகத்தை நோக்கிச் செல்ல வேண்டுமென்ற நம்முடைய விருப்பத்தை வலுப்படுத்துகின்றன.

பல்வேறு மதச் சடங்குகளும், நமக்குள் நல்ல ஸம்ஸ்காரங்களை உண்டாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை.

இவை எல்லாமே, நாம் சரியான முடிவை எடுப்பதற்கான மனநிலையையும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன. இந்தச் செயல்கள், நம்மை விடுவிக்கவோ அல்லது ஜ்ஞானமடையச் செய்யவோ முடியாது. எனினும், நம்மைக் கட்டுப்படுத்தி, நம்முடைய விழிப்பற்ற மனத்தை ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லவைக்க அவற்றால் முடியும். அவற்றால் நம்மைப் புதுப்பிக்கவும் முடியும்.

mற்ற மதங்களைப் பற்றியும், மத நம்பிக்கைகளைப் பற்றியும் சிறிதளவே படித்தவர்கள், தங்களை அறிவில் உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டு, தங்களுடைய சொந்தக் கலாசாரத்தின் பழக்க வழக்கங்களையே கேள்வி கேட்கின்றனர். அவர்கள் இதைப் ‘பகுத்தறிவு’ வாதம் என்கின்றனர். அவர்களுடைய அகராதியில், பகுத்தறிவு வாதம் என்ற வார்த்தைக்கு மதச் சம்பந்தப்பட்ட எல்லாப் பழக்க வழக்கங்களும், முக்கியமாக இந்து மத சடங்குகள் எல்லாமே முட்டாள்தனமானவை, மூடநம்பிக்கைகளைச் சார்ந்தவை என்று அர்த்தம். அவர்கள், இந்தப் பழக்கவழக்கங்களின் பின்னால் இருக்கும் ஸத்யங்களைச் புரிந்துகொள்வதற்கு எந்தவித முயற்சியையும் மேற்கொள்வதில்லை. அவர்களுடைய பட்டறிவு பூர்வமான புரிந்துகொள்ளுதலின் காரணமாகவும், மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களின் மூலம் பெற்ற, மேலோட்டமான, ஆழமற்ற அறிவின் காரணமாகவும், இப்படி அவர்கள் முடிவுசெய்கின்றனர்.

குறிப்பாக, வேத கலாசாரத்தைப் பற்றி குறுகிய அறிவாற்றலே பெற்றிருக்கும் இந்நாட்டு அறிஞர்கள், அதை விமர்சிக்கும்பொழுது, இது முற்றிலும் உண்மையாகி விடுகின்றது.

இந்தியாவில் இதுபோன்ற அறிஞர்கள் பலர் இருந்தனர். இவர்களுள் பல அறிஞர்கள் மேலை நாட்டுக் கல்வி பெற்றிருந்தனர். அவர்களுடைய சித்தாந்தமே, ‘எதுவெல்லாம் அறிவியல் பூர்வமானது இல்லையோ அதை ஏளனம் செய்வதுதான்’. அவர்களுக்கு வேத கலாசாரத்தைப் பற்றிய புரிதலும், ஜ்ஞானமும் சிறிதளவே இருந்தன.

மேல்நாட்டு அறிஞர்களையே தங்களுடைய முன்மாதிரியாகக் கொண்ட இவர்கள், ஸம்ஸ்க்ரு’த்ததை, வேத புத்தகங்களைப் படிப்பதற்காக மட்டுமே கற்றனர்.

அவர்களுடைய நோக்கம், உள்ளுலக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அல்ல. ஆனால், வேதங்களின் சாரமே, நோக்கமே உள்ளுலக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். இந்த அறிஞர்கள், தாங்கள் தர்க்க ரீதியாக ஆராயவும், வேதங்கள் உணர்த்தும் ஸத்யத்தோடு தங்கள் தர்க்கம் ஒத்து வரவில்லையென்றால், அவற்றைக் குறைசொல்லவும் மட்டுமே விரும்பினார்கள். தர்க்க ரீதியாக ஒத்து வராத இடங்களைக் கண்டுபிடிக்க மட்டுமே விரும்பினார்கள்.

அறிவியல் என்பது பதிவுசெய்ய முடிகின்ற
தகவல்களைக் கொண்டது. ஆன்மிகம்
என்பது ஸத்யத்தைப் பற்றியது. அது அனுபவ
பூர்வமாக உணரப்பட வேண்டியது.
அதனால்தான் நம்முடைய வேதங்கள்,
மிகச் சரியான வரலாற்றுக் குறிப்புகளைப்
பற்றியோ, தகவல்களைப் பற்றியோ

என்னுடைய வார்த்தைகள்,
உங்களுக்குள்
உணர்வுமாற்றத்தை
நிகழ்த்தி,
உங்களை மேலெடுத்து
வரக்கூடிய சக்தியை,
தம்மகத்தே கொண்டவை.

பெரிதாகக் கவலைப்படவில்லை.

வேதங்கள், நம்முடைய விழிப்புணர்வைப் பாதித்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையது. நமது வேதங்களைப் புரிந்துகொள்ள, நாம் தர்க்கத்தை உபயோகிக்க முடியாது. நாம் த்யானத்தைத்தான் உபயோகிக்க வேண்டும்.

ஸத்யத்திற்கும் நமது மூளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது, நம் இருப்புத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் பற்றியது.

கடவுளைக் காணலாம், நீங்கள் தயாரானால்...

மக்கள் என்னிடம், "கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்பதுண்டு.

விவேகானந்தர் ஞானமடைவதற்கு முன், அவருடைய குரு இராமகிருஷ்ணரைச் சந்தித்தபொழுது, இராமகிருஷ்ணரால் தமக்குக் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என்று கேட்டார்.

விவேகானந்தர் இராமகிருஷ்ணரைச் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக, இக் கேள்வியைக் கேட்கவில்லை. ஏனென்றால் அவர், அந்த குருவிடம், தாம் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்ததை உணர்ந்தார். மேலும் தம்மைவிட்டு விலகிவிட்ட ஸத்யத்தைக் கண்டுபிடிப்பதற்கான உதவியையும் இராமகிருஷ்ணரிடமிருந்து வேண்டினார்.

அறிவியல் என்பது பதிவுசெய்ய முடிகின்ற தகவல்களைக் கொண்டது. ஆன்மகம் என்பது ஸத்யத்தைப் பற்றியது.

விவேகானந்தரைப்பற்றிப் படித்த ஓர் இளைஞர், இந்தியாவில் நடந்த என்னுடைய சொற்பொழிவொன்றிற்கு வந்திருந்தார். விவேகானந்தர் இராமகிருஷ்ணரிடம் கேட்டதுபோல், அவர் என்னிடம் கேள்வியையும் கேட்டார். ஆனால், அந்த இளைஞருக்கு, ஸத்யத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விவேகானந்தருக்குிருந்த தாகம் இல்லை. அந்த இளைஞர், தாம் ஒரு புத்திசாலி என்பதைக் காண்பிக்கவே விரும்பினார். நானும் அவரிடம், "விவேகானந்தரைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.

உடனே அந்த இளைஞரும்
பெருமையுடன், "ஆம், படித்திருக்கிறேன்!
நானும் அதே கேள்வியை உங்களிடம்
கேட்கிறேன்," என்று சொன்னார். நான்
இராமகிருஷ்ணரைப்போல பணிவாக
இருப்பேன் என்று நினைத்தாரோ
என்னவோ!

மனத்தைக் கடந்த ஒருவரை
நம்முடைய மனத்தின்
சக்தியால் எப்படிப்
புரிந்துகொள்ள முடியும்?

நான் அவருடைய சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு, "நான் கடவுளைப் பார்த்தது மட்டுமல்லாமல், உங்களுக்குக் காண்பிக்கவும் முடியும். விவேகானந்தர் இராமகிருஷ்ணரைப் பின்தொடர்ந்து செல்லத் தயாராக இருந்தார். இப்பொழுது நீங்களும் என்னுடன் வருவதற்கு உங்களைத் தயார்செய்துகொள்ளுங்கள். நான் உங்களுக்குக் கடவுளைக் காண்பிக்கிறேன்," என்று சொன்னேன்.

அந்த இளைஞர் என்னுடைய பிடியிலிருந்து தம்மைப் போராடி விடுவித்துக்கொண்டு ஓடி விட்டார். அவர் மிகவும் பயந்து விட்டார்; அதனால் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிவிட்டார்!

நாம், நம் மனத்தை விடும் பொழுதுதான், கடவுளை உணர முடியும். அவர், நம் மனத்தை எல்லாம் தாண்டியவர். நாம் எப்படி அவருடைய இருப்பை, நம்முடைய தர்க்க ரீதியான மன அமைப்பைக்கொண்டு நிரூபிக்க முடியும்?

மனத்தைக் கடந்த ஒருவரை, நம்முடைய மனத்தின் சக்தியால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? நம்முடைய மனதால், நம்முடைய தர்க்க அறிவினால் அவரைப் புரிந்துகொள்ள முடிந்தால், அவர், நம்மைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர் ஆவார்? அவர் எப்படி, கடவுள் ஆக முடியும்?

தெய்விகத்தைப் பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ நாம் பேசும்பொழுது, நாம் நம்முடைய குறைந்த அளவு மனோ சக்தியை வைத்துக்கொண்டு ஒரு கருத்துடனோ, ஒருகொள்கையுடனோ போராடுகிறோம். நாம் அதைத் தாண்டி வேறு எதையும் அதிகமாகச் செய்வதில்லை. ஏனென்றால் இது, வெறும் ஒரு கருத்து மட்டுமே, நாம் இந்தக் கருத்தை, உண்மை என்றும் நிரூபிக்கலாம் அல்லது உண்மையல்ல என்றும் நிரூபிக்கலாம். அதனால் நாம் ஒரு பக்தராகவோ அல்லது நாத்திகராகவோ ஆகிறோம்.

ஒரு நாத்திகராக இருப்பதற்கு, ஆத்திகராக இருப்பதைவிட அதிக தைரியம் தேவைப்படுகிறது. ஆத்திகர்கள், கடவுள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்கள், கடவுளின் படத்தை, வீட்டினுள் ஒரு மூலையில் தொங்க விட்டிருக்கின்றனர்.

> கடவுளை
> நீங்கள் அனுபவமாக
> உணர வேண்டுமென்றால்,
> என்னிடம் திறந்த
> மனத்தினராக வாருங்கள்.
> நான் உங்களுக்குக்
> கடவுளைக் காண்பிக்கிறேன்.

சில மனிதர்கள் இயேசுவைச் சிலுவையில்
தொங்கவிட்டனர், நாம் கிருஷ்ணரை
ஆணியில் தொங்கவிட்டிருக்கிறோம். இதில்
வேறு எந்தவொரு பெரிய வித்தியாசமும்
இல்லை.

குறைந்தபட்சம் இயேசுவை சிலுவையில் அறைவதற்கு, அவர்களுக்கு அவர்மீது பயமும் வெறுப்பும் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கிருஷ்ணரை ஆணியில் தொங்கவிடுவதற்கு, நாம் அவரை நம்புவதைப்போலப் பாசாங்குச் செய்துவிட்டு, பிறகு அவரை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம். ஒரு குருவைப் பூஜிப்பதுபோலப் பாசாங்கு செய்வதே, அவரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கான சிறந்த வழி.

நாத்திகராக இருப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். கடவுள் மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பொருட்படுத்தாமல் இருக்கும் ஒரு ஆத்திகரைவிட, நாத்திகராக இருப்பவர்தான் கடவுளை அடிக்கடி நினைப்பார்.

நாம் எப்பொழுது அதிக நம்பிக்கையில்லாமல் இருக்கிறோமோ, அப்பொழுது, தன்னிச்சையாகவே மிகுந்த விழிப்புணர்வுள்ளவர்களாக இருப்போம். நாத்திகர், ஆத்திகரைவிட கடவுளைப் பற்றிய அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பார்.

கடவுளை அனுபவமாக உணரத்தான் முடியும். அவரது இருப்பை நிருபிக்கவும் முடியாது, நிருபிக்காமல் இருக்கவும் முடியாது. அவரை நம்பவும் முடியாது; நம்பாமல் இருக்கவும் முடியாது.

கடவுளை நீங்கள் அனுபவமாக உணர வேண்டுமென்றால், என்னிடம் திறந்த மனத்தினராக வாருங்கள். உங்களுக்கு உறுதியும் தைரியமும் இருந்தால், மனத்தைக் கைவிடுங்கள். நான் உங்களுக்குக் கடவுளைக் காண்பிக்கிறேன். நீங்கள் அவரை உங்களுக்குள் அனுபவமாக உணர்வீர்கள்.

யார் வேண்டுமானாலும் ஞானமடைந்திடலாம்...

கிருஷ்ணர், அர்ஜூனனை அந்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார். சொல்லப் போனால், கிருஷ்ணர் முன்பே தம்முடைய விச்வரூப தர்சனத்தை வெளிப்படுத்தும்பொழுதே, அர்ஜூனனை அந்த நிலைக்கு எடுத்துச் சென்றார்.

இப்பொழுது கிருஷ்ணர், மற்ற மனித குலத்தவர்களையும் அதே நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்புகின்றார். அதனால்தான் அவர் அந்த நுட்பங்களை மீண்டும் மீண்டும் உரைக்கிறார். அதன் மூலம் நாமும் நம்முடைய தெய்விகத் தன்மையை உணர்வோம்.

கிருஷ்ணர் அவருடைய ஆழ்ந்த கருணையினால், நம்மைக் காப்பாற்றுவதற்கான கயிற்றை நம்மை நோக்கி வீசி, அதைப் பிடித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் நமக்குக் கொடுக்கிறார். அதைப் பிடித்துக்கொண்டால் நாம் பத்திரமாகக் கரை சேர முடியும்.

நாத்திகர், ஆத்திகரைவிட கடவுளைப் பற்றிய அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பார்.

முதல் முறையாக கிருஷ்ணர், நாமும் அவருடைய நிலையை அடைய முடியும் என்பதைச் சொல்கிறார். அவர் இதுவரை, "என்னை வழிபடுங்கள், என்னைச் சரணடையுங்கள்," என்று மட்டுமே சொன்னார்.

இப்பொழுது, "நான் இருக்கும் நிலையை நீயும் அடைய முடியும். யார்

வேண்டுமானாலும் மனித இயல்பைத்
தாண்டிய நிலையை, என்னைப் போன்ற
நிலையை அடைய முடியும்,"' என்று
சொல்கிறார்.

நாமும் கிருஷ்ணர் எந்த நிலையில்
இருக்கின்றாரோ, அந்த நிலையை
அடைய முடியும். கிருஷ்ணர்தான்,
முதன்குமுதலில், தைரியத்துடனும்
துணிவுடனும் வெளிப்படையாகவும்,
'ஞானமடைதல் எல்லோருக்கும் சாத்
தியமே; யார் வேண்டுமானாலும் அதை
அடைய முடியும்' என்று உரைத்த முதல்
ஞானமடைவதற்கான
விண்ணப்பத்தை
எழுதுவது எப்படி,
அதை அளிப்பது எப்படி
என்பதை நமக்குக்
கற்றுக்கொடுத்த
முதல் குரு, கிருஷ்ணரே!

குரு. ஞானமடைதல் என்பது விபத்து அல்ல. அது நம்மால் உருவாக்க முடிந்த ஒரு நிகழ்வு.

ஞானமடைவதற்கான விண்ணப்பத்தை எழுதுவது எப்படி, அதை அளிப்பது எப்படி என்பதை நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் குரு, கிருஷ்ணரே!

பூரணத்துவத்தை அடைவது எப்படி என்பதையும், அது ஒரு விபத்து அல்ல, ஒரு நிகழ்வு என்பதையும் காண்பித்தவர் அவரே! நாம் விழிப்புணர்வுடன் எடுக்கும் முடிவின் மூலம், அதை அனுபவமாக உணர முடியும்.

இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'ஒருவரால்' ஞானமடைய முடியும் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அவர் அர்ஜூனனிடம், இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'நீ' ஞானமடைய முடியும் என்று சொல்லவில்லை; அவர், இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'ஒருவரால்' ஞானமடைய முடியும் என்றே சொல்கிறார். அதன் அர்த்தம், யார் வேண்டுமானாலும் ஞானமடைய முடியும் என்பதே!

கிருஷ்ணர் நிலைக்கே, உயர்த்தீடும் ஸத்யம்...

கிருஷ்ணர், தம்முடைய விஸ்வரூப தர்சனத்தை வெளிப்படுத்திய பின்பு, அர்ஜூனனிடம் அவர் எதையெல்லாம் பகிர்ந்துகொண்டாரோ அவையெல்லாம் உலகத்திற்காகவும், மொத்த மனித குலத்திற்காகவும் பகிர்ந்துகொள்ளப்பட்டவையே. அர்ஜுனன், எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு, சொல்வதற்கு வேறெதுவும் இல்லை. கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவான விஷ்வரூப தர்சனத்தையும் அர்ஜுனன் பார்த்துவிட்டார்.

பதினொன்றாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் விஷ்வரூப தர்சனத்தை அனுபவமாக உணர்ந்தார். பன்னிரண்டாவது அத்தியாயம் முதல், கிருஷ்ணருடைய போதனைகள் இந்த உலகத்தின் நன்மைக்காகப் பதிவு செய்யப்பட்டவையே.

ஒரு விஞ்ஞானி, வெளியுலகப் பொருட்களை மீண்டும் உருவாக்குவதற்கான ஸூத்ரங்களை உருவாக்குகிறார். ஒரு ஆன்மிக குருவானவர், உள்ளுலக அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஸூத்ரங்களை உருவாக்குகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், "இந்த நல்லறிவில் உன்னை நீ நிலைநிறுத்துவதன் மூலம், நான் இருக்கும் அதே நிலையில் உன்னை நீ நிலைநிறுத்திக்கொள்ள முடியும்; என்னுடைய நிலையைப் போன்றே!"

மம என்றால் 'என்னுடைய' என்று அர்த்தம். கிருஷ்ணர், "இந்த ஸத்யம், உங்களை நேரடியாக, நான் நிலைகொண்டிருக்கும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கும்," என்று பிரகடனப்படுத்துகிறார்.

கிருஷ்ணர், என்றும் அழியாத, பிறப்பு, இறப்பினால் கட்டுப்படுத்தப்பட முடியாத ஸத்யத்தைப் பற்றிப் பேசுகிறார். 'அழியா நிலை' என்பது படைத்தலுக்கும் அழித்தலுக்கும் அப்பாற்பட்டது. அது, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கடந்தது. அழியா நிலை, நித்ய நிலை என்பது இங்கேயே, இப்பொழுதே இருப்பது. நித்ய நிலை என்பது நிகழ்காலத் தருணங்களே!

பிரம்மா, படைத்தலின் அதிபதி. படைத்தல் என்பது, கடந்தகாலம். இத்தூல தளத்தில் இருக்கவேண்டுமானால், நாம் முன்பே படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே படைத்தல் என்பது, கடந்தகாலத்தோடு தொடர்புடையது.

கிருஷ்ணர்,
இந்த அறிவில் நிலைத்து
நிற்கும் 'ஒருவரால்'
ஞானமடைய முடியும்'
என்றுதான் சொல்கிறார்.
அதன் அர்த்தம்,
யார் வேண்டுமானாலும்
ஞானமடைய முடியும்
என்பதே!

பாதுகாப்பது, விஷ்ணுவின் வேலை.
பாதுகாப்பது என்பது எதிர்காலம், நாம்
எப்படி இருக்க விரும்புகிறோம்; நாம்
எதையெல்லாம் அடைய விரும்புகிறோம்;
மற்றும் நம்முடைய ஆசைகள், நம்முடைய
எதிர்பார்ப்புகள் போன்ற எதிர்காலத்துடன்
தொடர்புடைய எல்லா விஷயங்களையும்
பற்றியது அது.

சிவன் நிகழ்காலத்தின் அதிபதி.
அவர், நிகழ்காலப் பாதை வழியாக,
எதிர்காலத்தைக் கடந்தகாலத்திற்குள்
பாயச்செய்து, எதிர்காலத்தை அழிக்கிறார்.
அவர் நிகழ்காலத்தின் குரு.

அவர் அழிப்பவர் மட்டும் அல்ல; புதுப்பிப்பவர், இயல்பிலும், தோற்றத்திலும் உள்ளுரம் பெறச்செய்பவர். நிகழ்காலம், எப்பொழுதுமே புதுப்பொலிவைத் தரக் கூடியது, புதுப்பிப்பது.

ஸம்ஸ்க்ருதத்தில், 'சிவ' என்றால் 'காரணமில்லாத மங்களத்துவம்' என்று பொருள். நிகழ்காலம் மிகவும் மங்களத்தன்மை உடையது. நிகழ்காலத்தில் நடப்பவை அனைத்தும் மங்களத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்கும்.

நாம், நிகழ்காலத்தில் எது நடந்தாலும், அது மங்களத்துவமானதே என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு வகையான மக்கள் உள்ளனர். முதல்வகை, எல்லாவற்றையும் சந்தேகத்துடனேயே பார்ப்பவர்கள்; அவர்கள் எது நடந்தாலும் திருப்தி அடையமாட்டார்கள். அவர்கள் "எல்லாம் சரிதான்; ஆனாலும்...," என்று இழுப்பார்கள். அவர்களால் எதையும், 'ஆனால்' என்று சொல்லாமல் சுவீகரிக்கமுடியாது. இந்த வகை மனிதர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியாது.

அவர்கள், வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இருப்பார்களே தவிர, எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பதில்லை. அவர்கள் முற்றிலும் லௌகீகம் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இண்டாவது வகையினர், எது நடந்தாலும் அதில் மங்களத்தன்மையை உணர்பவர்கள்; அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்; வாழ்க்கையை அப்படியே வரவேற்பவர்கள்; இவர்கள் ஆன்மிகவாதிகள்.

இவர்கள், கிருஷ்ணர் சொன்னதைப்போல், படைத்தலையும் அழித்தலையும் அதாவது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கடந்து செல்பவர்கள். அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்பவர்களாகவும், கிருஷ்ண விழிப்புணர்வில் நிலைத்திருப்பவர்களாகவும் உள்ளனர்.

இது இறுதி ஸத்யமன்று... காத்திருங்கள்... உபதேசம் முடியும் வரை!

நடைமுறைரீதியாகப் பதில் சொல்லவியலாத தத்துவ ரீதியான கேள்விகளுக்குக் கிருஷ்ணர் பதில் சொல்ல முயல்கிறார்: இந்தப் பிரபஞ்சம் எப்படிப் படைக்கப்பட்டது? எல்லாமே கடவுள்தான் என்றால், ஏன் பிரபஞ்சம் படைக்கப்பட்டது? நாம் எப்படிப் பிறந்தோம்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயற்சி செய்த அனைவருமே, மற்றுமொரு தத்துவத்தைத்தான் உருவாக்கினார்கள்.

தோல்விகளினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம், "ஏன் நாம் பிறக்கிறோம்? ஏன் நாம் பிறப்பெடுக்க வேண்டும்? பிறப்பு, த்யானம், அதன் பிறகு ஞானமடைதல் என்ற இந்த முழு நாடகமும் ஏன்? யாருக்காக இந்த நாடகம் நடக்கிறது? நம்முடைய கர்மாக்களை நாம் கழித்தே ஆக வேண்டுமென்றால் நாம் ஏன் கர்மாக்களை முதலில் உருவாக்குகிறோம்? அதற்குக் காரணம் என்ன? இந்தச் சுழற்சி ஏன் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது?'' என்று கேட்டார்.

> 'அழியா நிலை' என்பது படைத்தலுக்கும் அழித்தலுக்கும் அப்பாற்பட்டது.

கிருஷ்ணர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க முயல்கிறார். இருந்தாலும் இந்தப் பதில், 'இறுதி ஸத்யம்' அல்ல! கிருஷ்ணர் சொல்கிறார்; "தயவுசெய்து காத்திருங்கள், உபதேசங்கள் முடியும்வரை!''

பொதுவாக நம்முடைய தத்துவ ரீதியான கேள்விக்கான பதிலை நாம் பெறவில்லை என்றால், நாம் அந்தக் கேள்வியையே பற்றிக்கொண்டு, அங்கேயே நின்று விடுகிறோம். நம்மால் தியானத்திற்குள் நுழைய முடிவதில்லை. நாம் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையே நினைத்துக் கொண்டிருப்போம். அந்தக் கேள்விக்கே நாம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்போம். இங்கு அர்ஜுனனும் அதே கே ள்விக்கே திரும்பி வருகின்றார்; அதிலேயே மீண்டும் மீண்டும் நின்றுவிடுகிறார்.

தியானத்திற்காகவும் அர்ஜுனனுக்குள் புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் கிருஷ்ணர் பதிலைச் சொல்கிறார்.

எது நடந்தாலும்
அதில் மங்களத்தன்மையை
உணர்பவர்
ஆன்மிகவாதி!

நான் இப்போது இதை உங்களுக்கு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.

X + 2 = 4 என்ற கணக்குச் சூத்திரத்தை எடுத்துக்கொள்வோம். இப்போது நாம், X ன் மதிப்புஎண் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை நமக்கு விளக்க முயலும் ஆசிரியர், முதலில் அனுமானத்தின் வாயிலாகவே விளக்கத் தொடங்குவார். அவர் முதலில், “நாம் X = 2 என்று அனுமானித்துக் கொள்வோம்,” என்று ஒரு அனுமான எண்ணைச் சொல்வார். பிறகு, அனுமானித்த எண்ணான ‘2’ ஐ, X க்குப் பதிலாக நிரப்பி, 2 + 2 = 4 என்று எழுதுவார். அந்தக் கணக்கிற்கு விடை கிடைத்துவிடும்.

அதன்பிறகு ஆசிரியர், “இந்தக் கணக்கிற்கு விடை கிடைத்துவிட்டதால், X = 2 என்று நாம் அனுமானித்தது சரியே,” என்று சொல்வார். ஆனால், ஒரு செயல்முறையின் மூலம் நாம் ஒரு முடிவுக்கு வரும் வரை, நாம் X = 2 என்று અનુமானிக்க மட்டுமே முடியும்.

நாம் ஆரம்பத்திலேயே, X = 2 என்று அனுமானித்ததைக் குறித்து வாதம்செய்ய ஆரம்பித்தோமேயானால், அதாவது ‘X = 2 என் று ஏன் அனுமானிக்க வேண்டும்? X = 3 அல்லது X = 4 என்று ஏன் அனுமானிக்கக் கூடாது என்று விவாதித்துக் கொண்டிருந்தால், நம்மால் அந்தக் கணக்கிற்கு விடை கண்டுபிடிக்கும் செயல்முறைக்குள் இறங்க முடியாது, அது இயலவும் இயலாது.

ஒருமுறை கணக்கிற்கான விடையைக் கண்டுபிடித்தவுடன், நமக்கு X = 2 என்று தெரியும். நாம் அதைத் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்வோம். ஆனால், விடை காணுவதற்கு முன், கணக்கு போட ஆரம்பிக்கும் பொழுது, நாம் X = 2 என்று அனுமானித்தே ஆக வேண்டும். சில அனுமானங்களைச் செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் மேற்கொண்டு பயணம் செய்யவே முடியும்.

கிருஷ்ணரும் ஒரு சிறு அனுமானத்தை முன்வைத்து, பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயல்முறையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார்.

அவர், தீர்வைக் கண்டறிந்து
பிரச்சினையைத் தீர்த்துவைத்த பிறகே,
அவர் அனுமானித்தது சரியே, ஸத்யமே
என்பதைப் புரிந்துகொள்வோம்.

ஆசிரியர் அனுமானித்த விடை,
தவறானது அல்ல என்றாலுமே, அதை
நிரூபிக்கும்வரை, அந்த અનુமானம்,
வெறும் ஒரு அனுமானமாகவே நீடிக்கும்.
அது தீர்வாக மாறாது.

அதேபோல, கிருஷ்ணர் கொடுக்கும்
கருத்து, இறுதி ஸத்யம் அல்ல; ஆனால், அது
ஒரு ஒப்பிடக்கூடிய ஸத்யம்.

கிருஷ்ணர், "நானே பிதா, நானே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கிறேன்," என்று சொல்கிறார். ஆனாலும், நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளை, நாம் எப்பொழுது கிருஷ்ண விழிப்புணர்வை அனுபவமாக உணர்கிறோமோ, அப்பொழுது மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

நாம் கிருஷ்ண விழிப்புணர்வு நிலையை அனுபவமாக உணரும்வரை, அது ஒரு அனுமானமாக மட்டுமே இருக்கும்.

அது அனுமானமாகவே இருந்தாலும்கூட பரவாயில்லை. அடுத்த அத்தியாயங்களுக்குள், அடுத்த ஸ்லோகங்களுக்குள் இந்த அனுமானத்துடனே மேற்கொண்டு செல்லுங்கள். திடீரென்று நாம் தீர்வுகளைப் பார்க்கும்பொழுது, எதையெல்லாம் நாம் இதுவரை அனுமானமாகக் கருதினோமோ அவையெல்லாம் ஸத்யங்களே என்பது புரியும்.

பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், நாம் இதுவரை செய்த அனுமானங்கள் எல்லாமே ஸத்யங்களே எனப் புரிந்துகொள்வோம். கிருஷ்ணர் இந்த அனுமானங்களைச் செய்கிறார். அதன் மூலம் நாம், ஸத்யங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

தியானம், உங்கள் கேட்டலைக் கூர்மைப்படுத்துகிறது

கேள்வி: ஸ்வாமிஜி, த்யானம் என்பது ஆன்ம நிலைக்கு, கிருஷ்ண விழிப்புணர்வு நிலைக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடிய பாதை என்று சொன்னீர்கள். ஆனால், எனக்கு அது சிக்கலானதாகவும் கடினமானதாகவும் தெரிகிறது. நான் அதை வெற்றிகரமாகச் செய்வது எப்படி?

ஆம், த்யானம் என்பது சுய-விழிப்புணர்வுக்கான திறவுகோலே. நீங்கள் கிருஷ்ண நிலையையோ, சிவ நிலையையோ, அல்லது அதைவிட வேறெந்த நிலையையோ அடைய, த்யானத்தைத் தவிர வேறு எந்தப் பாதையும் இல்லை. த்யானம் என்பது நிகழ்காலத்தில் நம்மை இருக்க வைப்பது. அது சிக்கலானதோ அல்லது கடினமானதோ அல்ல.

த்யானம் என்பது ஒரு எளிய செயல்முறை. அது மனத்தைக் கைவிடுவது, மனத்திலிருந்து விடுபடுவது, மனத்தை உங்களிடமிருந்து பிரித்து, அதைச் சாட்சியாயிருந்து பார்ப்பது, மனத்தைக் கவனிப்பது மற்றும் 'நான் மனதல்ல' என்று நினைவுபடுத்திக்கொள்வது. இதையே நான், அன்கிளட்சிங் என்று குறிப்பிடுகிறேன்.
சில அனுமானங்களைச் செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் மேற்கொண்டு பயணம் செய்யவே முடியும்.

அன்கிளட்சிங்,
புலன்களையோ
எண்ணங்களையோ
மனத்தையோ
அல்லது
அடக்குவதல்ல.

இது எண்ணங்களிடையே ஏற்படும் தொடர்பைத் துண்டிப்பது. எண்ணங்கள், அதன் இயல்பினாலேயே ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையே. அவை பகுத்தறிவிற்குப் பொருந்தாதவையாகவும், தர்க்கத்துக்குப் பொருந்தாதவையாகவும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகவும் இருக்கின்றன. நாம்தான் அவற்றைக் கோர்த்துப் பார்க்கிறோம். அப்படிப் கோர்த்துப் பார்ப்பதினால் நாம், துன்பத் தண்டையும் இன்பத் தண்டையும் உருவாக்குகிறோம். இரண்டு வழிகளிலுமே நாம் கஷ்டப்படுகிறோம்.

> விழிப்புணர்வுடன் இருப்பது என்றால், > 'நான் மனமல்ல; நான்தான் குரு,' என்று தெரிந்துகொள்வது.

எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் இருப்பதன் மூலம், அன்கிளட்ச் செய்வதன் மூலம், நாம் மனத்திலிருந்து விடுபடுகிறோம். நாம் தொடர்ந்து, 'நாம் மனம் அல்ல' என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறோம். அந்த நினைவு, மெதுமெதுவாக மிகவும் வலிமையுள்ளதாக மாறுகிறது. உங்களுக்கும் உங்கள் மனத்திற்கும் இருக்கும் இடைவெளி அதிகமாகிறது. மனம் என்பது ஒரு இயந்திர அமைப்பு; அதனுடன் உங்களை, தவறுதலாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்பதை, ஒருநாள் நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்கள்.

நீங்கள், மனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது அந்த உறக்க நிலையிலிருந்தும் மாயையிலிருந்தும் விழித்துக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது; மனத்திலிருந்து அன்கிளட்ச் செய்வதற்கான நேரம் வந்து விட்டது.

'விழிப்புணர்வுடன் இருப்பது' என்றால் 'நான் மனம் அல்ல; நான்தான் குரு' என்று தெரிந்துகொள்வது. அப்பொழுது உங்களுடைய மனத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்; உங்கள் மனம் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதன்பிறகு அது, உங்களை தன் விருப்பப்படியெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது.

நீங்கள் மனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும்பொழுது, நீங்கள் சுதந்திரம் அடைகிறீர்கள்; நீங்கள் ஜீவன்முக்தர்களாகிறீர்கள்; நீங்கள் ஆனந்தத்தில் இருக்கிறீர்கள்.

எந்தத் திறனும் பயிற்சியினால்தான் பெறப்படுகிறது. அதேபோலத்தான் தியானத்தையும் பயிற்சியினால்தான் பெறமுடியும். நீங்கள், மற்ற திறமைகளையும் தகவல்களையும் பெறுவதற்கு, பல வருடங்கள் செலவிடுகிறீர்கள்.

சில தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ள உதவும் வகுப்புகளில், அது வுங்கூட, அதன்பிறகு நீங்கள் வாழ்க்கையில் மீண்டும் எப்பொழுதுமே உபயோகப்படுத்தாத தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ள உதவும் வகுப்புகளில் அதிக பணம் கொடுத்து சேர்கிறீர்கள்.

தியானம், வாழ்க்கையைப் பாதுகாக்கும் ஒரு நுட்பம். அது, உங்களை நீங்களே புரிந்துகொள்வதற்கு வழிகாட்டுகிறது. அது மனத்தைத் திசைத் திருப்புவது அல்ல, அது மனத்தை ஒருநிலைப்படுத்துவது; அது மனத்தை விட்டுவிடுவதைப் பற்றியது. இயற்கையிலேயே, மனம், தன்ணை விடுபடுத்திக்கொள்ள விரும்புவதில்லை. அது, தன் கட்டுப்பாட்டை விடுவதற்கு விரும்புவதில்லை. அதனால்தான் அது தியானத்தை எதிர்க்கிறது.

தியானம் செய்வதன் நோக்கமே, மனத்தின் இறுக்கமான பிடியிலிருந்தும், எண்ணங்களின் பிடியிலிருந்தும் உங்களை விடுவிப்பதுதான்.

தியானம், நீங்கள் படுக்கையில் இளைப்பாறிக் கொண்டே, தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோல எளிதானதும் அல்ல; அதே சமயத்தில் அது கடினமானதும் அல்ல.

இதற்குத் தேவையானவை எல்லாம், சில நாட்கள் அமர்ந்து, உங்களுக்குள் பார்ப்பதற்கான உளப்பயிற்சியும் சுயக்கட்டுப்பாடும்தான். நீங்கள், உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தும்பொழுது ஏற்படும் சந்தோஷத்தை ஒருமுறை கண்டு கொண்டீர்களானால், அதன்பிறகு நீங்கள், மனத்தின் மீது செலுத்தும் கட்டுப்பாட்டை விட விரும்ப மாட்டீர்கள். இந்தக் கட்டுப்பாடே நம்மைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும்!

என்னைச் சந்திக்க வரும் மக்களுள் பெரும்பாலானோர் சொல்லும் வாசகம் இது: "ஸ்வாமிஜி, என்னுடைய காதுகளில் மற்றவர்கள் பேசுவது கேட்காதவரை, என்னால் தியானத்தை ஒழுங்காகச் செய்ய முடிகிறது. ஆனால், சிறு சத்தம் கேட்டாலும், அது எனக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கிறது."

தியானம், உங்களைக் காது கேளாதவர்களாக மாற்றாது. நீங்கள் தியானத்தில் இருக்கும்பொழுதும் உங்களால் கேட்கமுடியும். உண்மையில், உங்களுடைய ‘உணரும் தன்மை’ அதிகரிக்கவே செய்யும்; நீங்கள் சாதாரணமான நேரத்தில் கேட்பதை விட, மிகமிக நன்றாகக் கேட்க முடியும். தியானத்தின் முக்கியமான நோக்கமே, வெளியில் நடப்பதை, அதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் கவனிப்பதுதான்.

நீங்கள் உங்கள் புலன்களைத் தடுத்து அடக்க முடியாது. உங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போதுகூட, மனதிற்குள் ஓடும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்.

வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களைக் கவனிப் பது போல, உங்கள் எண்ணங்களை வெறுமனே ஒரு பார்வையாளராக, ஒரு சாட்சியாக இருந்து கவனியுங்கள். நீங்கள் மேகங்களின் பாகமாக மாறவேண்டாம்.

தீவிரமான பயிற்சியின் மூலம், சத்தமும் பரபரப்பும் நிறைந்த ஒரு சந்தையில் அமர்ந்துகூட, உங்களால் தியானம் செய்ய முடியும். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டேகூட, நீங்கள் தியானம் செய்ய முடியும். இவை எல்லாமே விடாமுயற்சியினாலும், சிரத்தையுடன் கூடிய பயிற்சியினாலும் சாத்தியப்படக்கூடியவையே! ஒரே ஒரு கடினமான விஷயம் என்னவென்றால், ‘தியானம் கடினமானது’ என்று நீங்கள் அனுமானிப்பதுதான்.

Hands playing a flute