புலன்களைக் காத்தல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸத்வ குணம் ஒருவரை மகிழ்ச்சியான நிலைக்கும், ரஜோ குணம் ஒருவரை கர்ம பலனிற்கும், தமோ குணம் முட்டாள்தனத்திற்கும் எடுத்துச் செல்கிறது.
ஓ பரத புத்திரா! சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தை அடக்கியும், சில நேரங்களில் ஸத்வம் ரஜோ குணத்தை அடக்கியும், சில சமயங்களில் தமோ குணம், ரஜஸ் மற்றும் ஸத்வ குணத்தை அடக்கியும் மேலெழுகின்றது. இவ்வகையில் ஒன்றை ஒன்று விஞ்ச எப்பொழுதும் போட்டி நடந்து கொண்டே இருக்கும்.
ஞான ஒளி, இந்த உடலில் உள்ள எல்லாப் புலன்களையும் ஒளிரச் செய்கிறபோது ஸத்வ குணம் மேலோங்கி நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பரதகுலத் தோன்றலே! எப்பொழுது ரஜோ குணம் மேலெழுகின்றதோ, அப்பொழுது ஆழமான பற்றுதல், கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்சி ஆகியவை மேலெழும்புகின்றன.
சஞ்சரிக்கும் மனத்தைக் கடந்துவிட்டால் தப்பித்துவிடுவீர்கள்
கிருஷ்ணர், மூன்று குணங்களைப் பற்றி மேலும் விவரிக்கிறார்.
ஓ அர்ஜூனா! சில நேரங்களில் நல்ல குணங்களின் பாங்கு (ஸத்வ குணம்), ஆழமான உணர்ச்சி நிலையையும் (ரஜோ குணம்) மற்றும் அறியாமையையும் (தமோகுணம்) வீழ்த்திவிட்டு, அது மேலெழும்புகிறது. சில நேரங்களில் அறியாமை நல்ல குணங்களையும், ஆழமான உணர்ச்சி நிலையையும் வீழ்த்துகிறது. இந்த வகையில், ஒன்றையொன்று முந்துகின்ற போட்டி, எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.
நாம் எல்லோரும் முழுமையாக ஸத்வ அல்லது ரஜஸ் அல்லது தமஸ் நிலைகளில் பிடிபடவில்லை. நாம், ஸத்வம், ரஜஸ், மற்றும் தமஸ் ஆகியவற்றிற்கு இடையில் ஊசலாடுகிறோம். நாம், இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைக்கும், அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கிறோம்.
சில சமயங்களில், நாம் காலையில் எழும்பொழுதே மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வோம். நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்ததுபோல உணர்வோம். நாம் புத்துணர்ச்சியுடன் துடிப்புடன் இருப்போம்.
நாம் கிட்டத்தட்ட ஞானமடைந்து விட்டோமோ என்று நினைப்போம்.
| நாம், ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றிற்கு இடையில் ஊசலாடுகிறோம்! | |---|
மாலைவரை அனைத்து விஷயங்களும் அழகாகச் செல்லும். திடீரென்று நாம் அமைதியிழந்து விடுவோம். அடுத்த நாளே நாம் தமோ குண நிலையில் இருப்போம். நாம் எந்தச் செயலையும் செய்ய விரும்பமாட்டோம். இந்த அலைபாயும் மனநிலை தொடர்ந்து ஏற்படும்.
உடல் பருமன் மற்றும் அலைபாயும் மனநிலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. நாம், மனத்தில் சஞ்சலம் ஏற்பட அனுமதிக்கும்போது, நம்மைநாமே சித்ரவதைக்குள்ளாக்கிக் கொள்கிறோம். சில நேரங்களில் நாம் அமைதியற்றும், சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் நாம் தமஸிலும் இருப்போம். நாம் தமோ குணத்தில் இருக்கும்பொழுது எந்தச் செயலையும் செய்ய விரும்புவதில்லை. நாம் எல்லாவற்றிலிருந்தும் தப்பியோட விரும்புகிறோம். நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஓடிவிட விரும்புகிறோம்.
குழந்தைகளுக்கு
விதிகளைப்
போதிக்காதீர்கள்!
நாம், இயற்கையின் இந்த மூன்று நிலைகளிலும் பிடிபட்டு இருக்கிறோம். சில சமயங்களில் உள்ளுணர்ச்சி நிலையிலும், சில நேரங்களில் பட்டறிவு பூர்வ நிலையிலும், சில சமயங்களில் உள்ளுணர்வு நிலையிலும் இருப்போம்.
ஏன்? ஏன் நமக்கு இந்த அலைபாயும் மனோநிலை இருக்கிறது?
நாம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஸம்ஸ்காரங்களை அளவுக்கு அதிகமாக, பல வருடங்களாகச் சேமித்து வைத்திருந்தால் இது நிகழ்கிறது. உதாரணத்திற்கு, மது அருந்துதலைப் பற்றிய நினைவுப்பதிவுகளை எடுத்துக்கொள்வோம். சிறு வயதிலிருந்து, 'மது அருந்துதல் பாவம். ஆகவே மது அருந்தக்கூடாது' என்று மீண்டும் மீண்டும் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இது நம்முடைய ஆர்வத்தை அதிகரிக்கிறது. ஒருமுறையாவது மதுவைச் சுவைக்க நாம் தூண்டப்படுகிறோம்.
ஆகவே குழந்தைகளுக்கு விதிகளைப் போதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தெளிவைக் கொடுத்து, அந்த விதிகளுக்குப் பின்னர் இருக்கும் உட்கருத்தைப் புரியவையுங்கள்.
நாம், குழந்தைகளை ஆனந்தமாக வளர்க்க விரும்பினால், நாம் அவர்களுக் குள் குற்றவுணர்ச்சியை விதைக்காமல் வளர்க்க வேண்டும். விதிகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றைப் பின்பற்றுவது, விதிகளை மீறுவதற்கு வழி வகுக்கும். விதிகளை மீறுவது குற்றவுணர்ச்சியை உருவாக்கும். உல கிலேயே மிகக் கொடிய பாவம் எதுவென்றால், அது குற்றவுணர்ச்சிதான்.
குழந்தைகள் பெறுவதற்கு முன் ஞானமடைந்திடுங்கள்
விதிமுறைகளைப்பற்றி மற்றவர்களுக்கு புரியவைப்பதற்கு நமக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன.
- நாம் எந்த விதிகளை வலியுறுத்த முயற்சி செய்கிறோமோ, அதன் உட்பொருளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவுத்திறன் முதலில் நமக்குத் தேவைப்படுகிறது.
- அதை விவரிப்பதற்கான பொறுமை.

இதற்கு அதிகமான காலமும் சக்தியும் தேவைப்பட்டாலும் அவர்களுக்குப் புரியவைக்க முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.
மக்கள், விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு அவற்றை ஒருபோதும் விதிகளாகக் கொடுக்காதீர்கள்.
நாம் விதிகளாகக் கொடுத்தால், அவர்கள் விதிகளுக்குப் புறம்பாகத்தான் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ‘மிகச் சரியான’ எதிர்வழியில்தான் செயல்படுவார்களா என்பதையும் நாம் முன்கூட்டியே யூகிக்க இயலாது. நேரம் மற்றும் சக்தி அதிகமாகத் தேவைப்பட்டாலும், பொறுமையாக குழந்தைகளுக்குப் புரியவைத்து, எந்தவொரு செயலையும் புரிதலுடன் செய்யப்பழக்குங்கள்.
மக்கள் என்னிடம், “ஸ்வாமிஜி, இந்த நவீன யுகத்தில் எங்களுக்கு நேரமே இருப்பதில்லை. எங்களுடைய பெண் பள்ளிக்குச் செல்கிறாள். நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதில் அவளுக்காக நேரம் ஒதுக்கி, அவளுக்குப் புரிதலைக் கொடுப்பது என்பது எப்படி முடியும்?” என்று கேட்கிறார்கள்.
“நீங்கள் உங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாதென்றால், ஏன் குழந்தைப் பெற்றுக்கொண்டீர்கள்? நீங்கள் என்னைப்போல ஒரு சன்னியாசியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். இதைத் திருமணத்திற்கு முன்பே நீங்கள் தீர்மானித்திருக்க வேண்டும்,'' என்று அவர்களுக்குச் சொல்கிறேன்.
தாயார் ஒருவர், தம் குழந்தையை என்னிடம் அழைத்துக்கொண்டு வந்து "ஸ்வாமிஜி, தயவுசெய்து இவனுக்கு அறிவுரை சொல்லுங்கள். நான் சொல்வதைக் கேட்குமாறு அறிவுறுத்துங்கள்,'' என்றார்கள்.
எனக்கு அதுபோன்ற அறிவுரை கொடுப்பதில் விருப்பம் இல்லை. ஏனென்றால் நானே எனது சிறுவயதில் என்னுடைய தாயார் சொன்னதைக் கேட்டதில்லை. நான் எப்படி அறிவுரை சொல்லமுடியும்? ஆனால், அதை அவர்களிடம் என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. நான் இரண்டு மூன்றுமுறை அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால், பயனில்லை.
அவர் தொடர்ந்து, "நீங்கள்
அவனுக்கு அறிவுரை சொல்லியே
ஆகவேண்டும்,'' என்றார். அதனால்
அவரைத் திருப்திப்படுத்துவதற்காக,
அவருடைய மகனுக்கு அறிவுரை சொல்ல
முடிவுசெய்தேன்.

நான் அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு, மென்மையாக "நீ ஏன் உன் தாயார் சொல்வதைக் கேட்பதில்லை; அவர் சொல்வதைத்தான் இப்பொழுது நானே கேட்கிறேன், பார்த்தாயா! அவர் சொல்வதை நீ ஏன் கேட்கமாட்டேன் என்கிறாய்?'' என்று கேட்டேன்.
அதற்கு அந்தச் சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்தச் சிறுவன் விவரிக்கத் தொடங்கி னான். "ஸ்வாமிஜி, அவரே சந்தோஷமாக இல்லை. அவர் சொல்லும் அறிவுரையைக் கேட்டால், நானும் அவரைப்போல் ஆகிவிடுவேன். நீங்கள் ஏன் என்னை அவர் சொல்வதைக் கேட்கச் சொல்கிறீர்கள்!?''
நான் வியந்து போனேன். அந்தச் சிறுவன் ஸத்யத்தைப் பேசுகின்றான். நான் எப்படியோ அந்தச் சிறுவனைச் சமாதானப்படுத்தி
அனுப்பிவைத்தேன். இருந்தாலும், நான்
திருப்தியடையவில்லை. அவன் ஸத்யத்தைச்
சொன்னான். தாயார் சந்தோஷமாக இல்லை
என்றால் அவருடைய மகன் எப்படி
அவரது அறிவுரையைப் பின்பற்றுவான்?
எதிர்காலத்தில், குழந்தைகள், தங்களுடைய பெற்றோர்கள் தங்களைச் சரியாக வளர்க்கவில்லை என்று வழக்கு போடக்கூடும். அவர்கள் ஏற்கனவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மன அழுத்தத்தில் அல்லது சிறைச்சாலையில் இருக்கும் சிறுவர்கள், தங்களுடைய பிரச்சினைகளுக்கு தங்களுடைய பெற்றோர்கள் தங்களைச் சரியான முறையில் வளர்க்காததுதான் காரணம் என்று சொல்கிறார்கள்.
நாம்,
குழந்தைகளை எப்படி
வழிநடத்துவது என்பதில்
தெளிவாக இருந்தால்
மட்டுமே,
குழந்தைகள்
பெற்றுக்கொள்வதற்கு
திட்டமிடலாம்!
பெற்றோர்கள் அவர்களை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களைக் கீழான நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.
குழந்தைகள் பெறுவதற்கு முன்பாக ஞானமடைந்துவிடுங்கள். அந்தத் தகுதி மட்டுமேதான் நமக்குத் தேவைப்படுகிறது. நாம் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது என்பதில் தெளிவாக இருந்தால் மட்டுமே, குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடலாம்.
இந்த உலகத்தில் போதுமான மக்கள்தொகை இருக்கின்றது. நாம் கோடிக்கணக்கான மக்களை பூமிகிரஹத்திற்கு அழைத்து வந்துவிட்டோம்.
நம்மால் உணவு, மருந்து மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை இப்போது இருப்பவர்களுக்கே வழங்கமுடியாத நிலையில், ஏன் புதிதாக அதிக மக்களைக் காண்டுவர வேண்டும்? இடம் எங்கு இருக்கிறது? ஆதார வளங்கள் எங்கே இருக்கின்றன?

உங்களுக்குக் குழந்தைகள் வேண்டும் என்று முடிவு செய்தால், நீங்கள் அவர்களுக்குச் சொல்பவை அனைத்தும், அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தும் வகையிலே விளக்கிச்சொல்லும் அளவுக்கு, அறிவுத்திறன் உடையவராக இருங்கள்.
நீங்கள் எதையெல்லாம் அவர்களுக்குப் புரிதல் மூலம் வழங்குகிறீர்களோ, அவையெல்லாம் ஸத்வ அடுக்குகளில் பதிந்துவிடும். இந்தப் புரிதலே அறிவுத்திறனாக மாறிவிடும்.
நீங்கள் விதிகளாகவோ அல்லது கட்டளைகளாகவோ கொடுக்கும் எல்லாமே ரஜஸ் அல்லது தமஸ் அடுக்குகளில் அமர்ந்துவிடும். அது, ஒரு நல்ல அறிவுரையாக இருந்தாலுமே, அதை விதியாகக் கொடுக்காதீர்கள். நல்ல அறிவுரைகளை விதியாகக் கொடுத்தால்கூட, அது ஒரு வெறுப்பை அவர்களுக்குள் உருவாக்கும்.
இது, குழந்தைகளுக்கு உதவ விரும்புபவர்களுக்கானது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து வரும்பொழுது, அவர்களை என்னுடைய பாதத்தைத் தொடுமாறு கட்டாயப்படுத்துவார்கள். நான் சொல்வேன் "இதை எப்பொழுதும் செய்யாதீர்கள். இது உங்களின் பேராசை."
இந்தப் பெற்றோர்கள், என்னுடைய பாதத்தைத் தொடுவதால் அவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்றோ அல்லது நல்ல விஷயங்கள் நடக்கும் என்றோ நினைக்கிறார்கள். அவர்களுடைய பேராசையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருத்தை குழந்தைகள் மீதும் திணிக்கிறார்கள்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைக்
கட்டாயப்படுத்துவதன் மூலம், குழந்தைகள்
என்னை வெறுக்கும்படி செய்கிறார்கள்.
சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின்
தலையைப் பலவந்தமாகப் பிடித்து அழுத்தி,
என்னுடைய பாதத்தில் வைக்கிறார்கள்.
என்னுடைய பாதத்திலிருந்து நல்ல
சக்தியைப் பெறமுடியும் என்பதுபோல
> நீங்கள் எதையெல்லாம்
> அவர்களுக்குப்
> புரிதல் மூலம்
> வழங்குகிறீர்களோ,
> அவையெல்லாம்
> ஸத்வ அடுக்குகளில்
> பதிந்துவிடும்!
இதைச் செய்கின்றனர்! நான் அந்தப் பெற்றோர்களிடம், “குழந்தைகளை இதுபோல் கட்டாயப்படுத்தாதீர்கள்,” என்று சொல்வதுண்டு.
இரண்டு கைகளையும் குவித்துப் வணங்கினாலேபோதுமானது. குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் என்னை வெறுக்கும்படி செய்து விடுகிறார்கள். அடுத்தமுறை இந்தக் குழந்தைகள் காவி உடையைக் கண்டவுடன், “ஓ, இப்பொழுது நான் குனிந்து நிமிரும் பயிற்சியைச் செய்ய வேண்டும்,” என்று முணுமுணுக்கிறார்கள்.
ஒருபோதும் குழந்தைகள் மீது விதிகளைத் திணித்து வலியுறுத்தாதீர்கள். நம்முடைய பெற்றோர்கள் நமக்குக் கொடுத்த விதிகளினால், நாம் அவதிப்படுகிறோம். பெற்றோர்கள் நமக்குக் கொடுத்த விதிகள் எல்லாம் ரஜஸ் அல்லது தமஸ் குண அடுக்குகளில் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் அவை நம்மை அமைதியற்ற தன்மைக்கும், ஆழமான மன அழுத்தத்திற்குமே எடுத்துச் செல்கின்றன. அவை மேலும் மேலும் கஷ்டத்தைத் தருகின்றன.
ஆசை மற்றும் குற்றவுணர்ச்சி ஆகிய
இரண்டுமே ஒரே சக்தியின் இரண்டு
வடிவங்கள். ஒன்று எதிர்காலத்துடன்
தொடர்புடையது. மற்றது கடந்தகாலத்துடன்
தொடர்புடையது. ஆசை, எதிர்காலத்துடன்
குற்றவுணர்ச்சி, கடந்தகாலத்துடன்
தொடர்புடையது.
தொடர்புடையது.
‘நான் இதைச் செய்தாக வேண்டும்’ என்ற நம்முடைய தீர்மானத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, ‘நான் முன்பே இதைச் செய்திருக்க வேண்டும்’ என்கிற எண்ணம்தான். இதையே நான் குற்றவுணர்ச்சி என்கிறேன்.
நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த விதிகள் மூலம், நமக்குள் ஏற்படுத்தப்பட்ட குற்றவுணர்ச்சிகள்தான், நம் வாழ்க்கையில் நரகத்தை உருவாக்கி, நம்மை தமஸுக்கு எடுத்துச் செல்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், “நாம், அந்த: - ‘அதोगதி’க்கு வழிநடத்தப்படுகிறோம். நாம் அறியாமையில் வீழ்கிறோம்.”
உங்கள் வீட்டிற்கு, யார் காவல்?
கிருஷ்ணர் சொல்கிறார், “நம் உடலின் எல்லா வாயில்களும் அறிவாற்றலால் ஒளிரும்பொழுதுதான், ஸத்வ குணங்களின் வெளிப்பாட்டை உணரமுடியும்.”
இது ஒரு நுட்பம். தகவல்கள் அல்லது செய்திகளைப்பெறும் புலன்களையே, நாம் ‘உடலின் வாயில்கள்’ என்றழைக்கிறோம்; ‘கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தொடுஉணர்வு’ - இந்த வாயில்கள் மூலமாகவே நாம் செய்திகளை வெளியிலிருந்து பெறுகிறோம்.
நாம் இந்த ஐந்தையுமே, ப்ரகாசா - ஒளிர்கின்ற அறிவாற்றல் மூலமாகக் கவனமாகக் காக்க வேண்டும். நாம் இந்த நுழைவாயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அறிவாற்றலே, பாதுகாப்பு அமைப்பு என்கிறார், கிருஷ்ணர்
நமக்கு, எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், எதைப் பற்றி தெரிந்துகொள்ளத் தேவையில்லை என்பதைப் பற்றிய ‘அறிவு’ இருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால், நாம் எப்பொழுதும் ஸத்வத்திலேயே குடியிருப்போம்; நாம் எப்பொழுதும் ஆனந்தத்திலேயே குடியிருப்போம்.
ஆசை மற்றும் குற்றவுணர்ச்சி - இந்த இரண்டுமே ஒரே சக்தியின் இரண்டு வடிவங்கள்!
கிருஷ்ணர் சொல்கிறார், நாம் நம் உடலின் நுழைவாயில்களில் ஒரு காவலாளியைப் பணியில் அமர்த்த வேண்டும். நம் உடலுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அமைப்பும் கிடையாது. நம்முடைய வீடுகளுக்கு பாதுகாப்பு அமைப்பு வைத்திருக்கிறோம். யாராவது உடைத்துக்கொண்டு உள்ளே வந்தால், உடனே தானியங்கி தொலைபேசி மூலம் தானாகவே 911க்கு (அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் எண்) அழைப்புச் சென்றுவிடும்.
அமெரிக்காவில் ஒவ்வொரு பகுதியிலும், ‘இந்தப் பகுதி இந்தக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது’ என்ற அறிவிப்பை ஒட்டி வைத்திருப்பார்கள்.
அமெரிக்காவில், ஒரு வீட்டிற்கு பல பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன. அமெரிக்க மக்கள், நாளொன்றுக்கு, அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு மணிநேரம் மட்டுமே தங்கள் வீட்டில் செலவழிக்கின்றனர். மீதமிருக்கும் 12 மணிநேரத்தை வீட்டிற்கு வெளியில்தான் செலவழிக்கின்றனர்.
நாம் 24 மணிநேரமும், தினமும் இந்த உடல் என்னும் வீட்டில் தங்கி இருக்கிறோம். ஆனாலும் அதற்கான பாதுகாப்பு அமைப்பு நம்மிடம் இல்லை.
ஐம்புலன்களைக் காவல்காத்திடும் ஸத்வ குணம்
ரமணமகரிஷி, அக்ஷரமணமாலை என்னும் தம்முடைய நூலில், திருவண்ணாமலையில் இருக்கும் புனித அருணாச்சல மலையின் மகிமை களைப் பற்றிப் பாடுகிறார். அதில் அவர் சிவனிடம், "ஐம் புலன்கள் என்னும் ஐந்து திருடர்களும் இந்த வீட்டிற்குள் புகுந்துவிட்டனர். ஓ! அருணாச்சலா! அப்போது நீர் வீட்டில் இல்லையா? அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்?'' என்று கேட்கிறார்
"இந்த ஐந்து புலன்களும் வீட்டிற்குள் (உடல்-மனம்) நுழையும்பொழுது நீங்கள் அங்கு இல்லையா? ஏன் அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தீர்கள்?'' என்று கேட்கிறார்.
நம் உடலின்
நுழைவாயில்களில்
அறிவாற்றல் என்னும்
காவலாளியைப்
பணியில் அமர்த்த வேண்டும்!
கிருஷ்ணர், "நாம் 5 நுழைவாயில்களையும்,
அறிவாற்றல் என்னும் பாதுகாப்பு
அமைப்பால் பாதுகாத்து, தொடர்ந்து நாம்
ஆனந்தத்திலேயே குடியிருப்போமாக!'' என்று
சொல்கிறார்.
இதன் அர்த்தம் என்னவென்றால், நமக்குத்
துன்பத்தைத் தருகின்ற எண்ணங்களை
நம்முடைய கண்கள் மூலமாகவும், மற்ற
புலன்கள் மூலமாகவும் நம் மனத்திற்குள்
நுழைய அனுமதிக்கக் கூடாது;
தொலைக்காட்சிப் பார்த்தலைத் தவிர்க்க
வேண்டும் என்று பொருள்.
குறைந்தபட்சம், மன அழுத்தத்தைத் தரக்கூடிய நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்; ஆனந்தத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தக்கூடிய நிகழ்ச்சிகளை மட்டுமே பாருங்கள். நம்மை துன்பத்தில் ஆழ்த்துபவையாகவும் அல்லது நம்மை வன்முறையாளராகவும் கபடம்மிக்கவராகவும் மாற்றுகின்ற நிகழ்ச்சிகளை ஒருபோதும் பார்க்காதீர்கள்.
> நமக்குத்
> துன்பத்தைத் தருகின்ற
> எண்ணங்களை
> நம் மனதிற்குள் நுழைய
> அனுமதிக்கக்கூடாது!
நான் இப்படிச் சொன்னதும், உடனே மக்கள் என்னிடம், "சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாவிட்டால், நம்மால் எப்படி வாழ முடியும்?" என்று கேட்பார்கள்.
அந்த விஷயங்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எந்தவொரு முக்கியமான அல்லது அவசரமான செய்தியுங்கூட யார் மூலமாகவாவது ஏதோ ஒருவழியில் நம்மை வந்தடையும். நாம் தனித்தீவில் வசிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், குற்றம் சார்ந்த செயல்களைப் பற்றிய செய்திகளை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது.
நாம் நம் புலன்களை, ஸத்வ குணத்தின் வாயிலாகப் பாதுகாக்கும்பொழுது, நாம் எதிர்மறையான நினைவுப்பதிவுகளை நமக்குள் அனுமதிப்பதில்லை.
செய்தித்தாள்கள், தினமும் ஒரேமாதிரியான செய்திகளைத்தான் - கொலை, கற்பழிப்பு, கொள்ளை, விபத்து பற்றிய செய்திகளைத்தான் - தாங்கி வருகின்றன. ஆனால், வித்தியாசம் என்னவென்றால், நாடு, நகரம், நபர்களின் பெயர் மட்டுமே மாறும். தினமும் செய்திகளைப் படிப்பதற்குப் பதிலாக, நாமே முன்கூட்டியே என்ன நிகழப்போகிறது என்பதைச் சொல்லிவிடலாம். அதைப் படித்து ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஏன் விரும்புகிறோம்? இடமும், எண்ணிக்கையும் மட்டுமே மாறப் போகிறது.
ஆனந்த செய்திகளால் உங்கள் வாழ்க்கையை நிறைத்திடுங்கள்
இது, நம்முடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? யார் அந்தச் சூழ்நிலையைக் கையாளப் போகிறார்களோ, அவர்கள் அதைப் பற்றித் தெரிந்து கொண்டால், போதுமானது. நாம் தொடர்ந்து இந்த விதமான செய்திகளை உள்வாங்கினோமானால், நாம் அவற்றைப் பற்றிய நினைவுப்பதிவுகளை உருவாக்குகிறோம். நாம் பயத்தாக்குதல்களையும் துன்பத்தையும் உண்டாக்குகிறோம்.
நாம், குழந்தைகளைக் கடத்துவது பற்றிய செய்திகளையே தொடர்ந்து படித்தோமென்றால், நம்முடைய குழந்தைகளோ அல்லது கணவரோ வீட்டிற்கு வர சில நிமிடங்கள் தாமதமானாலும், நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம். நாம் அமைதியை இழந்துவிடுகிறோம்.
நிஜமாகவே ஏதாவது ஒரு கெடுதல் நிகழ்வு நிகழ்ந்தால்கூட, நாம் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மட்டும்தான் துன்பப்படுவோம். ஆனால், பயத்தை உண்டாக்குகின்ற நினைவுப்பதிவுகளை நாம் உருவாக்கும்பொழுது, நாம் தினமும் துன்பப்படுகிறோம்.
இதுபோல நிகழ்வதை நம்மால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? முடியுமென்றால், எப்படி?
நம்மால் ஒரு கெடுதல் நிகழ்வை நிறுத்திவிட முடியும் என்றால், அதனைக்குறித்துக் கவலைப்படுவது, புத்திசாலித்தனமே. ஒரு கெடுதல் நிகழ்வை தடுத்து நிறுத்திவிட உதவும் கவலை, நல்லதே, புத்திசாலித்தனமே.

தொலைத்தொடர்பு
சாதனங்கள் வெளியிடும்
குற்றம் சார்ந்த செய்திகள்
நமக்கு எந்தவிதத்திலும்
உதவப்போவதில்லை!
ஆனால், பெரும்பாலும், நாம்
விஷயங்களைச் சேகரித்த பிறகும்,
அவற்றைக் கொண்டு கெடுதல் நிகழ்வுகளை
நாம் தடுத்து நிறுத்துவதுமில்லை; வேறு
எதுவும் செய்வதும் இல்லை. அதனால்
நாம் துன்பப்படுகிறோம். நாம் நம்மை ரஜஸ்
மற்றும் தமஸில் ஆழ்த்திக்கொள்கிறோம்,
அவ்வளவுதான்.
தயவுசெய்து, உங்களுக்குத் துன்பங்கள்
தரக்கூடிய எண்ணங்களால் உங்கள்
விழிப்புணர்வை நிரப்பாதீர்கள்; தொடர்ந்து
ஆனந்தத்தையும், அமைதியையும் தரக்கூடிய
எண்ணங்களையே சேமியுங்கள். இது
நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று நாம்
நினைக்கலாம். இந்த உலகத்தில் என்ன
நடக்கிறது என்பது தெரியாமல் நாம் எப்படி
இந்தச் சமுதாயத்தில் வாழ முடியும் என்று
நாம் நினைக்கலாம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தைக் காட்டுவது ஒரு நோய். செய்திகளைச் சேகரிப்பதும் ஒரு நோய்தான்.
அன்றொரு நாள், ஒருவர், "ஸ்வாமிஜி, நாம் நம்முடைய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டும்," என்றார். எப்படியாயினும், இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாமே பயனற்றவை. அவை எல்லாமே அர்த்தமற்றவை. எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக எதிர்மறையான பண்பை உள்வாங்குவோம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, வாழ்க்கையின் தரத்தைப் பற்றிய நினைவுப்பதிவுகளை, நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் பதிக்கிறது. நான் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு முயற்சி செய்தேன். ஆனால், என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.
என்னுடன் இருந்தவர்களிடம் நான் சொன்ன வாசகம் இதுதான்: "போதும், இதற்கு மேல் பார்த்தால் நான் ஜ்ஞானத்தை இழந்துவிடுவேன்! ஒருமுறை ஜ்ஞான நிலையை உணர்ந்துவிட்டால், மீண்டும் அதை இழக்க முடியாது என்பதுதான் நம்முடைய பாரம்பரிய நம்பிக்கை. ஆனால், இப்பொழுது இந்தத் தொலைக்காட்சி அந்த நம்பிக்கையையே இழக்கச் செய்துவிடும் என்று நான் நினைக்கின்றேன்!"
இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், "நாம் எதை உண்ணுகிறோமோ, அதனுடைய மணமே ஏப்பமாக வரும். நாம் தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலமாக எடுத்துக்கொள்வதுதான், புலன்களுக்கான
உணவு, நாம் தொடர்ந்து எதிர்மறையான
விஷயங்களைப் பார்த்துக்கொண்டும்,
கேட்டுக்கொண்டும் இருந்தோம் என்றால்,
அந்த எல்லா எதிர்மறை விஷயங்களையும்,
ஏப்பம்போல், நம்முடைய
வாழ்க்கையில் வெளிப்படுத்திக்
கொண்டிருப்போம். நமக்குள் என்ன
எடுத்துச்செல்லப்படுகின்றதோ அதன்
அடிப்படையில்தான், தரங்களை நமக்கு
நாமே நிர்ணயித்துக்கொள்கிறோம்.
வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது மற்றும் மிகவும் குறுகியது. அந்த குறுகிய வாழ்க்கையை, கவலைப்படுவதற்காகச் செலவழிக்கக்கூடாது.
ஸந்த்யா காலத்தை உங்களுக்காகவே செலவழித்திருங்கள்
மன அழுத்தத்தையும் கீழான மனநிலையையும் ஏக்கத்தையும் உருவாக்கக்கூடிய எண்ணங்களை உங்கள் மன அமைப்பில் முக்கியமாக ஸந்த்யா காலங்களில், பகலும் இரவும் சந்திக்கின்ற நேரங்களில் அனுமதிக்காதீர்கள்.
நம்முடைய புராதன குருமார்கள், ஸந்த்யா காலங்கள் - பகலும் - இரவும் சந்திக்கும் நேரங்கள் ஆபத்தானவை என்று அறிந்திருந்தனர். இரண்டு ஸந்த்யாகாலங்கள் இருக்கின்றன. சூர்ய உதயம் மற்றும் சூர்ய அஸ்தமன நேரங்கள்.
ஸந்த்யா காலங்களில் எந்த மாதிரியான எண்ண விதைகள் நம் இருப்புத்தன்மைக்குள் விதைக்கப்படுகின்றதோ அவை பெரிய விருட்சமாக வளரும் என்று நம்முடைய குருமார்களுக்குத் தெரியும். அதனால்தான் குருமார்கள், ஸந்த்யா வேளையை, கோயில்களிலும், பிரார்த்தனையிலும், பாடல்களைக் கேட்பதிலும், தெய்விக புத்தகங்களைப் படிப்பதிலும், த்யானத்திலும் செலவழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவ்வாறு செய்யும்போது, இந்த ஆன்மிகக் கருத்துக்கள் விதைகளாக நமக்குள் சென்று, பெருமதிப்புடைய மரமாக நம்முடைய வாழ்க்கையில் மலரும். இப்பொழுதெல்லாம், ஸந்த்யா வேளையில் நாம் தொலைக்காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த எல்லாக் குப்பைகளையும், குப்பைத் தொட்டியில் போடுவதுபோல, நமக்குள் போட்டுக்கொள்கிறோம். அடுத்த நாள் அதனுடைய நாற்றம் தெரிகிறது. ஒருபோதும், முக்கியமாக ஸந்த்யா வேளைகளில் எதிர்மறையான ஸம்ஸ்காரங்களை உங்களுக்குள் எடுத்துச்செல்லாதீர்கள்.
உங்ளுடைய புலன்களை இருபத்துநான்கு மணிநேரமும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நாள் முழுவதும் முடியவில்லையென்றால், குறைந்தபட்சம் ஸந்த்யா காலங்களில் மட்டுமோவது பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

பகலும் இரவும் சந்திக்கும்போது, ஒரு 1.30 மணி நேரம், நம்முடைய நுண்ணறிவு விழிப்புடன் இருக்கும். அந்தக் காலமே ஸந்த்யா காலம் எனப்படுகிறது. இந்தியா வில் காலை 6:00-7:30 மணி என்றும், மாலை 6:00-7:30 மணி என்றும் கணக் கிடப்படுகிறது. இந்த நேரம், தேசத்துக்குத் தேசம் மாறுபடும். ஸந்த்யா காலங்களில், நாம் எதிர்மறையான நினைவுப்பதிவுகளை நம்முடைய இருப்புத்தன்மையில் நுழைவதற்கு அனுமதிக்கக்கூடாது.
ஸந்த்யா காலங்களில் நம்முடைய இருப்புத்தன்மைக்குள் நுழையும் எதுவாயினும், அவையே தொடர்ந்து நம்முடைய வாழ்க்கை முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்
ஸந்த்யா காலங்களில்
எந்த மாதிரியான
எண்ண விதைகள்
நம் இருப்புத் தன்மைக்குள்
விதைக்கப்படுகிறதோ,
அவை பெரிய விருட்சமாக
வளரும்.
கிருஷ்ணர் இந்த ஒரு அறிவுரையை, இந்த
ஒரு நுட்பத்தைத் தருகிறார். ஏனென்றால்
இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையை
மாற்றியமைக்க முடியும். இந்த நுட்பத்தைப்
பயன்படுத்தி நாம் உணர்வுமாற்றம்
அடைகிறோம்; ஆம், இதன்மூலம் நம்முள்
உணர்வுமாற்றம் நிகழமுடியும்.
இப்போது நிகழும் உணர்வுமாற்றம், நம் மனத்திலுள்ள நம்முடைய எதிர்மறையான நினைவுப்பதிவுகளின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. நாம் உள்ளே எடுத்துச்செல்லும் நினைவுப்பதிவுகளில் மாற்றம் கொண்டுவந்தால், நம்முடைய மன அமைப்பை வேறுபட்ட சக்தி தளத்திற்கு அல்லது உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச்சென்றால், நம்முள் உயர் உணர்வுமாற்றம் நிகழும்.
உணர்வுமாற்றம் நிகழும்போதுதான், நாம் உள்வாங்கும் விஷயங்களை நேர்மறையான எண்ணப் பதிவுகளின் அடிப்படையிலும், தூய்மையான மனத்தோடும் அலசிப் பார்ப்போம்.
கிருஷ்ணர் ஒரு நுட்பத்தை, ஒரு அறிவுரையைத் தருகிறார். ஐந்து புலன்களையும் எதிர்மறை கருத்துக்களிலிருந்து பாதுகாத்து, அவற்றின் மூலம் நேர்மறை கருத்துக்களை நம் உள் தளத்தில் நிரப்ப வேண்டும். நாம் எதையெல்லாம் உள்வாங்குகிறோமோ, அவையே நம்முடைய இருப்புத்தன்மை ஆகிறது. மேலும் நாம் அந்த ஆற்றலையே வெளிப்படுத்துகிறோம்.
ஆன்மிக கருத்துக்கள்
விதைகளாக
நமக்குள் சென்று
பெருமதிப்புடைய மரமாக
நம்முடைய
வாழ்க்கையில் மலரும்!
ஸந்த்யா காலங்களை நல்ல முறையில் செலவழியுங்கள். அந்த நேரங்களில் வீட்டில் த்யானம் செய்யுங்கள், வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுங்கள். ஏதாவது தெய்விகமான செயல் செய்யுங்கள். நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, எதிர்மறையான நினைவுப்பதிவுகளைச் சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக மந்த்ரங்களை உச்சரியுங்கள். பிரார்த்தனை துதிகளைச் சொல்லுங்கள். அல்லது ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்யுங்கள்.
அதிகமான எதிர்மறையான நினைவுப்பதிவுகளை நமக்குள் எடுத்துச் சென்றால், அது, அதிகமான மன அழுத்தத்திற்கே வழிவகுக்கும்.
எந்த அளவு பணத்தை நாம் வங்கியில் போடுகிறோமோ, அந்தளவிற்கு நம்முடைய வங்கிக் கணக்கில் பண இருப்பு அதிகமாகும். நமக்குள் எந்தளவிற்கு அதிகமாக எதிர்மறையான நினைவுப்பதிவுகளைப் போடுகிறோமோ, அந்தளவிற்கு அதிகமாக நம்முடைய மனச் சோர்வும் அதிகமாகும். மனிதர்கள் எங்கிருந்து நேர்மறையான நினைவுப்பதிவுகளையும், எங்கிருந்து எதிர்மறையான நினைவுப்பதிவுகளையும் சேர்த்துக்கொள்வார்கள் என்பதை நம்முடைய குருமார்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் நேர்மறையான எண்ணப்பதிவுகளைச் சேமித்துவைத்துக் கொள்வதற்காகவும், அதன்மூலம் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், பல இடங்களை ஏற்படுத்தினார்கள்.
இலக்கை நோக்கி வாழ்வதற்கு பாட்டரியில் இயங்கும் பொம்மைகள் அல்ல நீங்கள்
கிருஷ்ணருடைய இந்த ஒரு அறிவுரையை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உடலைத் தூய்மையான ஸாத்விக பாதுகாப்பு அமைப்பினால் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆனந்தத்தை அனுபவியுங்கள்.
ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, அவர் ஸத்வ நிலையில் இருக்கிறார் என்று முன்பு கிருஷ்ணர் விவரித்தார். இப்பொழுது ஒருவர் ரஜஸ் நிலையில் இருக்கும்பொழுது அவருக்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறார்.
பற்றுதல், பேராசை, ஏக்கம், அமைதியற்ற செயல்கள் ஆகியவை ரஜோ குணத்தின் அறிகுறிகள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இதுவே பெரும்பாலோருடைய மனநிலையாக இருக்கிறது, இருந்தாலும் வியாபார நோக்கில் செயல்படுபவர்களுக்கு இந்த குணங்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. பேராசை, இதுவே கூட்டமைப்பு நிறுவனங்களின் (Corpo-rate) கோட்பாடு. அவர் தம் வாழ்க்கை முழுவதையும் ஒரு சிறு மேஜையின் பின் அமர்ந்து, இருண்ட, தூசிபடிந்த அறையில் கழித்தாலும்கூட, அந்த மேஜையின் மீது 'வானமே எல்லை' என்று எழுதப்பட்ட ஒரு போர்டு வைக்கப்பட்டிருக்கும். அவர் வெளி வானத்தைப் பார்ப்பதற்குக்கூட அங்கு ஒரு ஜன்னல் இருக்காது.

ஒருவரை குறிக்கோளுடன் செயல்படவைப்பது என்ற கருத்து, முழுக்க முழுக்கத் தீங்கு விளைவிக்கக் கூடியது.
பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள் செய்கின்ற ஒரே விஷயம், குறிக்கோளை வலியுறுத்துவது மட்டுமே. குறிக்கோள் என்றால் என்ன?
ஒருவரைக் குறிக்கோளுடன் வேலை செய்ய வைக்க வேண்டுமானால், நாம் அவருக்கு முன்னால் ஒரு காரட்டைக் கட்டித் தொங்கவிட வேண்டும். அதன்பிறகு அந்தக் காரட் அவரது இலட்சியம் ஆகிவிடும். நாம் கழுதைகளாக இருந்தால், நாம் காரட்டைத் தொடர்ந்து செல்வோம். நமக்கு அறிவாற்றல் இருந்தால், நமக்கு முன்னால் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காரட்டை, நாம் எப்போதுமே அடைய முடியாது என்பதை உணர்வோம். ஏனென்றால், அது, எப்பொழுதுமே நம்மால் அடையப்பட முடியாத தூரத்தில்தான் தொங்கவிடப்பட்டிருக்கும்!
நமக்கு அறிவாற்றல்
இருந்தால்,
நமக்கு முன்னால்
காண்பிக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் காரட்டை,
நாம் எப்போதுமே
அடைய முடியாது என்பதை
உணர்வோம்.
காரட் அடையக்கூடிய தூரத்தில் இருந்து. அதைக் கழுதை சாப்பிட்டது என்றாலும்கூட, அது அந்த ஒரு காரட்டைச் சாப்பிட்டவுடன் திருப்தி அடைந்துவிடுமா? ஒருபோதும் இல்லை. அது மேலும் அதிகமான காரட்களைக் கேட்கும். அதனால்தான் அந்தக் கழுதையை இயக்கும் நபர், புத்திசாலித்தனத்துடன், எப்பொழுதுமே அடைய முடியாத இடத்தில்தான் காரட்டை வைத்திருப்பார்.
அந்தக் கழுதை, காரட்டின் பின்னால், அமைதியற்று ஓடும். அது நிலையாக ஓரிடத்தில் இருக்காது. இந்த காரட் மிக அருகில் வருவது போல் தோன்றினாலும், மீண்டும் வெகு தொலைவில் சென்றுவிடும். இப்படி காரட் முன்னும் பின்னுமாக ஊசலாடிக் கொண்டிருந்தால், கழுதையால் நிலையாக எப்படி இருக்க முடியும்? கூட்டமைப்பு நிறுவனங்களில் இருப்பவர்களின் கதை இதுதான்.
வியாபாரம் செய்பவர்கள், "ஸ்வாமிஜி, வியாபாரம் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் ஒருவருமே நேர்மையாக இல்லை. எல்லோரும் ஏமாற்றுக்காரர்களாக இருக்கின்றனர். என்னால் ஒருவரையுமே நம்ப முடியவில்லை. எனக்கும் பணநஷ்டம்தான் ஏற்படுகிறது. நான் எவ்வளவு காலம் இதைத் தொடர்ந்து தாங்க முடியும் என்று தெரியவில்லை. தயவுசெய்து ஏதாவது அறிவுரை சொல்லுங்கள்,'' என்று வருந்துவார்கள்.
அவர்கள் புத்திசாலிகள். 'தயவுசெய்து உதவுங்கள்' என்று அவர்கள் சொல்வதில்லை. அவர்கள், 'தயவுசெய்து அறிவுரை சொல்லுங்கள்' என்றுதான் கேட்பார்கள். அதன்பிறகு நான்தான் மாட்டிக்கொள்வேன். நான் ஏதாவது அறிவுரை கூறினால்தானே, பிற்காலத்தில் அவர்கள் அதற்கு என்னைப் பொறுப்பாளியாக்க முடியும்!

ஆம், அவர்கள் மிகச் சரியாக அதையேதான் செய்வார்கள். சிறிதுகாலம் கழித்துவந்து "ஸ்வாமிஜி, நீங்கள் என்னை அப்படிச் செய்யச் சொன்னீர்கள். அது சரியாக அமையவில்லை. இப்பொழுது அதிலிருந்து மீண்டுவர தயவுசெய்து எனக்கு உதவுங்கள்,'' என்று சொல்வார்கள்.
நான் அவர்களிடம், "வியாபாரம் செய்வது கடினமாக இருந்தால், யாரையும் உங்களால் நம்ப முடியவில்லை என்றால், உங்களால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால், வியாபாரம் செய்வதில் என்ன பயன்? வியாபாரத்தை முடிவிட்டு நிம்மதியாக இருங்கள்,'' என்று சொல்வேன்.
உடனே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, "ஓ கடவுளே! ஸ்வாமிஜி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அதன்பிறகு நான் என்ன செய்வேன்? நான் எப்படி என் குடும்பத்தை நடத்த முடியும்?'' என்று கேட்பார்கள்.
ஒருபக்கம், தாங்கள் பணத்தை இழந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், நான் அவர்களிடம் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்கான வழியைச் சொன்னால், "ஐயோ ஸ்வாமிஜி, நான் எப்படி வாழ்வது?'' என்று கேட்கிறார்கள். எந்த மாதிரியான நாடகம் இது!
நாம் இதைக் கேட்டுச் சிரிக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் இந்தவிதமான நாடகத்தில்தான் இருக்கிறோம். நாமே தயாரித்த உளவியல் நாடகத்தில் (Psycho-Drama), நாமே நடித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள்போல் இருக்கிறோம். நாம் முழுவதுமாக முடுக்கப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொருதடவையும் முடுக்கப்பட்ட கம்பிச் சுருள் (Spring) தளர்வடைந்தவுடன், நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று திரும்பவும் நம்மை முடுக்கிவிடுகிறது. நாம் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பாட்டரியில் இயங்கும் கரடி பொம்மைபோல (Battery Bunny) இருக்கிறோம். நாம் ஓய்வெடுப்பதில்லை. நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இந்தச் செயல்பாட்தான் நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்று நாம் நினைக்கிறோம்.
எந்த வேலையையும் ஆர்வத்தோடு செய்பவர்களே வெற்றியாளர்கள்
நம்முடைய வாழ்க்கைக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை. நம்முடைய வாழ்க்கைக்கு எந்த இலட்சியமும் இல்லை. வாழ்வதே, பாதையும் இலட்சியமும் ஆகும். நாம் விழிப்புணர்வுடன் இருந்தால், ஸத்வத்தில் நிலைபெற்றிருந்தால், நாம் வாழ்க்கையை மகிழ்ச்சி யாக அனுபவிக்கிறோம், நாம் வாழ்க்கைப் பயணத்தை இனிமை யாக இரசிக்கிறோம். எங்கே செல்கிறோம் என்பதைப் பற்றிய கவலையில்லாதவரை, வாழ்க்கைப் பாதை இனிமையாக இருக்கும். வாழ்க்கைப் பாதையை இனிமையாக அனுபவித்தீர்களென்றால், அது, சரியான பாதையாகவே இருக்கும். நம்முடைய இலக்கும் சரியானதாகவே இருக்கும்.
ஆனால், அந்தப் பாதையை இனிமையாகக்
கழிப்பதற்குப் பதிலாக, நாம் இலக்கைப்
பற்றிக் கவலைகொண்டிருக்கிறோம்.
‘எப்பொழுது நம்முடைய இலக்கைச்
சென்றடைவோம், நாம் விரும்பிய
இலக்கைச் சென்றடைந்து விடுவோமா’
என்றெல்லாம் நாம் கவலைப்படுகிறோம்.
அதனால் நாம், எவ்வாறு பயணம்
செய்கிறோம் என்பதைக் கவனிப்பதே
இல்லை. நம்முடைய பயணத்தை, நாம்
இரசிப்பதில்லை. நாம், பாதையின்
அழகைத் தவறவிடுகிறோம்; அதை
அனுபவிப்பதில்லை.
நாம், உடனடி விளைவுகளைப்பற்றிக் கவலைப்பட்டு, நம்மை வருத்திக் கொண்டால், நாம் எப்படி வேலையை மகிழ்ச்சியுடன் செய்ய முடியும்? நமது வேலையை இனிமையாக அனுபவிக்கவில்லையென்றால், நம்முடைய வேலை சலிப்புடையதாகவும் தண்டனையாகவும் ஆகிவிட்டால், மேற்கொண்டு நாம் எவ்வாறு செயல்பட முடியும்? எப்படிப் பலன்களைப் பெற முடியும்?
அப்படியில்லாமல், நாம் காரட்டைப் பற்றியோ அல்லது இலக்கைப் பற்றியோ கவலைப்படாமல் வேலையை மகிழ்ச்சியுடன் செய்தோமென்றால், என்ன நிகழ வேண்டுமோ அது தானாகவே நிகழும். நாம் பாதையை மகிழ்ச்சியாக அனுபவித்தால், நம்முடைய வேலையையும் மகிழ்ச்சியாகவே செய்வோம். நாம் எந்த இலக்கை அடைந்தாலும் அது சரியான இலக்காகவே இருக்கும்.
அதனால்தான், வெற்றியடைகின்ற மனிதர்கள் எப்பொழுதும், எந்தச் செயலைச் செய்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்வார்கள். அவர்கள் செய்யும் செயலை மகிழ்ச்சியாகச் செய்வதால், இறுதியில் என்ன நிகழும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாம் என்ன செய்கிறோமோ, அதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால், நாம் செய்வதை மகிழ்ச்சியுடன் செய்வோம். நாம் எதைச் செய்தாலும் அது அருமையானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும்.
ஆனால், செய்யும் வேலையைப் போராட்டத்துடனும் துக்கத்து டனும் செய்யும்போது, அவ்வேலையின் மூலமாகப் பணமே சம்பாதித்தாலும்கூட நாம் துன்பப்படுகிறோம். எந்த இலக்கை துரத்திப் பின்செல்கிறோமோ, அது கானல்நீராக, மாயத் தோற்றமாக இருக்கும். நாம் அந்த இலக்கை அடைந்தவுடன், நாம் அடுத்த இலக்கைத் தேர்ந்தெடுக்கக் கட்டாயப்படுத்தப்படுவோம். நமக்கு, ஒருநிமிட காலஅவகாசம்கூட, நின்று ஓய்வெடுத்துக்கொள்ளவோ அல்லது அடைந்த இலக்கைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவோ இருக்காது.
ஒரு பொருளை முயன்று அடைவது
என்பது, ஒரு மகிழ்ச்சியான செயலாக
இல்லாமல், அது ஒரு இலட்சியமாகவே
ஆகிவிடுகிறது.
'இலட்சியத்தை
இலக்காக வைத்துச்
செயல்படப் போவதில்லை'
என முடிவெடுங்கள்!
நாம் ரஜஸில் இருந்தால் எப்பொழுதுமே
மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அது, நாம்
ஒரு கழுதையைப்போல சோர்வடைந்து,
வலுவிழந்து வீழ்கின்றவரையில், நம்மைத்
துரத்துகிறது.
நாம் இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையை வாழப்போகிறோமா, இல்லையா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
"நான் என் வாழ்க்கை முழுவதும் ஒரு கழுதையைப்போல, முன்னால் தொங்கவிடப்பட்டிருக்கும் காரட்டைப் பின்தொடர்ந்துதான் சென்றுகொண்டிருக்க வேண்டுமா, அதைத்தான் உண்மையிலேயே நான் விரும்புகின்றேனா?" என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
'இல்லை, நான் விரும்புவது இது இல்லை' என்று நாம் முடிவெடுத்தோமானால், இதுவே ரஜஸிலிருந்து விடுபட்டு, ஆனந்தத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம்!
விதிகள், அடிமைத்தனத்தைத்தான் உருவாக்கும்!
கேள்வி : ஸ்வாமிஜி, சமுதாயம் எப்படி விதிகள் இல்லாமல் இயங்க முடியும்? விதிகள் இல்லையென்றால் ஒழுங்கின்மைதான் இருக்கும். ஒவ்வொருவரும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்தால் மற்றவர்கள் எப்படி வாழமுடியும்?
விதிகளை ஏற்படுத்துவதற்காக சமுதாயம் உபயோகிக்கின்ற வாதம் இது. யார் சுதந்திரவாதி? சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத மனிதன்தான் சுதந்திரவாதி. சரியான புரிதலைக் கொடுக்கத் தவறிய இந்தச் சமுதாயத்தினால்க்கப்பட்ட, கண்மூடித்தனமான சட்டங்களை எதிர்க்கும் ஒருவன்தான் சுதந்திரவாதி.
சிறந்த ஆன்மிக குருமார்கள் அனைவருமே சுதந்திரமான கொள்கை உடையவர்கள். அவர்கள் எப்பொழுதுமே சமுதாயத்தின் சட்டத்திட்டங்களை ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள், தங்கள் கட்டுறுமனப்பாங்கையும், தங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமுதாயத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் உடைத்தெறிந்தார்கள்.
அவர்களின் அந்த விடுதலை அல்லது சுதந்திர அனுபூதியின் வெளிப்பாடு, மற்றவர்களும் அதே நிலையை அடைவதற்கு உதவுகின்றது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த குருமார்கள் உடலைவிட்டு மறைந்தவுடன், இந்த அனுபூதி வெளிப்பாடுகளை மட்டுமே மக்கள் பிடித்துக்கொள்கிறார்கள்; இந்த அனுபூதி வெளிப்பாடுகளுக்கு ஆதாரமான அவர்களுடைய 'அனுபவங்களை' மக்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால், அவர்களின் வெளிப்பாடுகள் மறுக்கமுடியாத சட்டங்களாக, விதிகளாக மாறிவிடுகின்றன. சமுதாயமும் மதமும் விதிமுறைகளை உருவாக்குவதற்கு இவர்களை உபயோகித்துக் கொள்கின்றன.
விதிகள் இல்லாமல் இருப்பது என்பது சுதந்திரத்தின் வெளிப்பாடு. அது இயற்கைக்குள்ளும், இயற்கையோடும் இணைந்து வாழ்வது. இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பதன் பொருள் வாழ்க்கையின் இறுதி அதாவது மரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? சுதந்திரம், வாழ்க்கையின் இறுதியில்தான் நிகழும் என்று நாம் நினைக்கின்றோம், ஏன்?
| சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத மனிதன்தான் சுதந்திரவாதி! | | --- |
விதிகளும் கட்டுப்பாடுகளும் அடிமைத்தனத்தை உருவாக்குகின்றன. அவை ஆசை அல்லது அச்சத்தை அடிப்படையாகக்கொண்டு எல்லைகளை வரையறுக்கின்றன. ஏதாவுது ஒருவிதத்தில், அவை உங்களை அடிமைப்படுத்துகின்றன. இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் சமுதாயத்தாலும், சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாலும், உங்களைக் கட்டுப்படுத்தவும், உங்களைத் தங்களுடைய பிடியில் வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன.
அமைதியையும் ஒத்திசைவையும் நிலைநிறுத்துவதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒவ்வொருவரையும், அவர்களும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் என்பதை உணரவைப்பது.
மற்றொன்று, சரியான நடத்தைமுறைகளுக்கான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தி, அவர்களின் ஆசை மற்றும் அச்சத்தை அடிப்படையாக வைத்து, பரிசுகள் மற்றும் தண்டனைகள் கிடைக்கச் செய்யக்கூடிய ஒரு அமைப்பை நிறுவி, அவர்களை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவது.
வேதபாரம்பரியமும் உண்மையான நாகரிகமான கலாச்சாரங்களும், முதல் வழியான, அக விழிப்பை ஏற்படுத்தும் ஸத்வ வழியைப் பின்பற்றின.
காலப்போக்கில், மக்களிடையே அந்த விழிப்புணர்வைப் புகட்டும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம். சமுதாயம், ரஜஸ் நோக்கி மிக வேகமாக தாழ்ந்துவிட்டது. அது, விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உத்தரவுகளையும் உருவாக்கியது. இப்போது நாம், மேலும் தாழ்ந்து, கூட்டு தமஸ் நிலைக்கு, கூட்டு விழிப்புணர்வற் நிலைக்குள் வீழ்ந்து விட்டோம். இனி விதிகளும் கட்டுப்பாடுகளும்கூட வேலைசெய்யப்போவதில்லை.
வேத பாரம்பரியம், அக விழிப்பை ஏற்படுத்தும் ஸத்வ வழியைப் பின்பற்றுகின்றன.
நாம், விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை மறந்துவிட்டோம். அவற்றின் மையக் கருத்தைத் தொலைத்துவிட்டோம். கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு அமைப்புமுறை மட்டுமே மீதம் இருக்கிறது. வெறுமனே ஆசையும் அச்சமும் மட்டுமே எஞ்சுகிறது. அதனால்தான் குற்றவுணர்ச்சியும் துன்பமும்!
நாம் இந்த அடிமைத்தன்மையைத் தகர்த்து விட்டு, சுதந்திரத்திற்குள் செல்லவேண்டியது அவசியமாகின்றது. இதற்காகத்தான் விழிப்புணர்வு நிகழ வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது உங்களுக்கு விதிகளோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை. உங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள்.
அதைக் காண்பதற்குத்தான், இந்த சமுதாயம் அஞ்சுகிறது. நீங்கள், இதற்குமேல் சமுதாயத்திற்குப் பயப்படப் போவதில்லை என்ற நிலைக்கு வந்தவுடன், சமுதாயம் உங்களைக் கண்டு அஞ்சுகிறது. சமுதாயம் உங்கள் மேல் வைத்திருக்கின்ற ஒரே பிடி அச்சம்தான். இப்போதுள்ள சமுதாய அமைப்பின்படி, நீங்கள் அதன் ஒரு பாகமாக இருக்க விரும்பினீர்களென்றால், உங்களுக்கு அச்சமும் இருந்தே தீரும்.
நீங்கள் விழிப்புணர்வுடன் தடைகளைத் தகர்த்து, விடுதலை அடையத் தீர்மானித்தீர்களென்றால், நீங்கள் நிரந்தரமான ஆனந்தத்தை, நித்யானந்தத்தை அடைவீர்கள்.

