வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
14. 13. ஓ! குரு வம்ச வீரா, அறியாமை (தமோ குணம்) அதிகரிக்கும்பொழுது விவேகமற்ற தன்மை, மாயை, செயலற்ற தன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகியவை வெளிப்படுகின்றன.
14. 14. ஒருவர் ஸத்வ குணம் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் உயர் உலகங்களைச் சென்றடைவார்.
14. 15. ஒருவர் ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணத்தில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் செயல்களில் ஈடுபாடு உடையவர்களிடையே பிறக்கிறார். ஒருவர் அறியாமை நிலையில் (தமஸில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கிறார்.
14. 16. ஒருவர் ஸத்வ நிலையில் செயலாற்றும்பொழுது, தூய்மையானவர் ஆகிவிடுகிறார். ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணம்) செயல்படும்பொழுது மனக்கவலை விளைகிறது. அறியாமை நிலையிலிருந்து (தமஸ்) செயல்கள்
செய்யப்படும்பொழுது விவேகமற்ற தன்மை விளைகிறது.
ஸத்வத்தின் நிலையிலிருந்து ஜ்ஞானம் பிறக்கிறது. ரஜஸிலிருந்து
பேராசை உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து விவேகமற்ற தன்மை,
முட்டாள்தனம் மற்றும் மாயை உண்டாகிறது.
வாழ்க்கையின் அர்த்தமே இறைத்தன்மையை உணர்வது...
நாம் அளவிற்கு மிஞ்சிய ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது, முடுக்கிவிடப்பட்ட ஒரு பொம்மையைப்போல செயல்படுகிறோம். நாம் தமோகுணத்தில் இருக்கும்பொழுது, செயல்படாத மின்கலம் (Battery) போடப்பட்ட ஒரு பொம்மைப்போல இருக்கிறோம்.
அந்த நிலை, எப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை என்பதை கிருஷ்ணர் வலிமையான வார்த்தைகளால் விளக்கிச்சொல்கிறார். அவர் உபயோகிக்கின்ற வார்த்தைகள் அஞ்ஞானம், முட்டாள்தன்மை, மாயை, செயலற்ற தன்மை மற்றும் இருண்டதன்மை.
ஒருவர் ரஜஸிலிருந்து தமஸீக்குள் எப்படி அவ்வளவு எளிதாக வீழமுடியும் என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க விஷயம். அமைதியற்ற செயல்நிலையிலிருந்து மந்தத் தன்மைக்கு நழுவிச் செல்வது மிகவும் எளிதாக இருக்கிறது.
அர்த்தமற்ற செயல்கள், இறுக்கத்துடனும் கடுமையுடனும் செய்யும் செயல்கள், புலன்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்படும் செயல்கள் போன்றவை ஒரு ஆழமான சோர்வை நோக்கியே அழைத்துச் செல்லும்.
தமஸில்
நாம் காணும் அர்த்தமற்ற
செயல்களும்,
ஸத்வ நிலையில்
நாம் காணும் இலக்கில்லாத
செயல்களும் ஒன்றாகாது.
தமஸில் நாம் காணும் அர்த்தமற்ற செயல்களும், ஸத்வ நிலையில் நாம் காணும் காரணமற்ற மற்றும் இலக்கில்லாத செயல்களும் ஒன்றாகாது. தயவுசெய்து இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் முன்பே சொன்னதுபோல, ரஜோ குணத்தினால் விளையும் உண்மையான
அபாயம் என்னவென்றால் நாம்
தொடர்ந்து இலட்சியத்தை நோக்கியே
மனத்தைப் பயணிக்கச் செய்வோம்.
நாம், ஒரு அர்த்தமற்ற குறிக்கோளைப்
பின்பற்றும்பொழுது, நாம் அந்தப்
பாதையில் மகிழ்ச்சியுடன் செல்ல
மறந்துவிடுகிறோம்.
வாழ்க்கைக்கு
எந்தக் குறிக்கோளும்
இல்லை;
வாழ்க்கைக்கு
அர்த்தம் மட்டுமே உண்டு.
வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லை. வாழ்க்கைக்கு அர்த்தம் மட்டுமே உண்டு. வாழ்க்கையின் அர்த்தம் என்பது உணர்வுடனும் விழிப்புடனும் இருப்பதும், நம்முடைய உள்ளுலக இறைத்தன்மையை உணர்வதும்தான். அதனால்தான் நான் சொல்கின்றேன், நான் இங்கு இருப்பது என்னுடைய இறைத்தன்மையை நிரூபிக்க அல்ல; ஆனால், உங்களுடைய இறைத்தன்மையை நிரூபிக்கத்தான்!
நம் வாழ்க்கைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்றால், இறைத்தன்மையுடன் இருத்தலும், நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்வதும்தான். அதற்குக் குறைந்தது எதுவாக இருப்பினும் அர்த்தமற்றதே ஆகும். பரபரப்புடனும் அமைதியற்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது இந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ உதவாது. ஏதோ ஒன்றின் பின்னால் நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்போம். நாம் பேராசையிலேயே இருப்போம்.
இரமண மஹரிஷி மிகஅழகாகச் சொல்கிறார்: அடையும் முன்பு கடுகாக இருந்தாலும், மலையெனத் தோன்றும்; அடைந்தபின் மலையே ஆனாலும் அது கடுகாகத் தோன்றும்!
நாம் ‘பொருட்களை உடைமையாக்கிக்கொள்ள வேண்டும்’ என்ற இடைவிடாத எண்ணத்தினால் மட்டுமே இயங்கினால், சில நாட்களுக்குள்ளோ அல்லது சில வருடங்களுக்குள்ளோ நாம் நிச்சயமாகச் சோர்வடைந்து விடுவோம். பரபரப்புத்தன்மை தீவிர மன அழுத்தத்தில்தான் முடியும். இதைத்தான் நான் ‘வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு’ என்று குறிப்பிடுகிறேன்.
நான் இதை, அமெரிக்காபோன்ற நாடுகளில் அதிகமாகக்
காண்கிறேன். இங்கு மனிதர்கள்,
அவர்களுடைய உலகியல் செல்வங்களை
அதிகரிப்பதற்காகவே, மற்ற
விஷயங்களைப் பற்றிக் கவனியாது
போராடுகின்றனர்; தங்களுடைய கார்களை
ஒவ்வொரு வருடமும், தங்கள் வீடுகளை
மூன்று வருடங்களுக்கொருமுறையும்,
தங்கள் வாழ்க்கைத்துணையை
ஐந்து வருடங்களுக்கொருமுறையும்
மாற்றிவிடுகின்றனர்!
மக்கள், சொத்துக்களைச் சேர்ப்பதற்கும் பரிசுகளைப் பெறுவதற்கும் ஓடுகிறார் கள்; எதற்காக ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடுகின்றனர்! தாங்கள் விருப்பப்பட்ட பல விஷயங்களை, தாங்கள் நினைத்ததைவிட பலமடங்கு அதிகமாக அடைந்துவிட்ட பின்னருங்கூட, தாங்கள் மகிழ்ச்சியற்றும், அமைதியற்றும் விருப்பமற்றும் இருப்பதை ஒருநாள் உணர்கிறார்கள்!
அவர்கள் எந்த விஷயங்களைப் போராடி அடைந்தார்களோ, அவற்றை ஏன் போராடி அடைந்தார்கள் என்பதையே மறந்துவிடுவதால், 'நாம் ஏன் இவற்றை அடையத் துடித்தோம்' என்று வியக்கிறார்கள். அவர்கள் ஆழமான மனச்சோர்வுக்குள் வீழ்கிறார்கள். அதைத்தான் நாம் தமஸ் என்று அழைக்கிறோம்.
இந்தியாவைப் போன்ற ஏழை நாடுகளில், மக்கள் அடிப்படை தேவைகளுக்கும் குறைவான வசதிநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த அடிப்படை தேவைகளை அடைவதற்குக்கூட போராடுகின்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, காலணிகள், பள்ளிக்குச் செல்வது என்பதே பலருக்கு மிகப்பெரிய ஆடம்பரம். அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாதவர்களின் துக்கம் என்பது தோல்வியினால் ஏற்படும் மனச்சோர்வினால் எழுவதுதான். இதைக் குணப்படுத்துவது என்பது எளிது. அவர்களுக்குத் தேவையானது எல்லாம் சில வெற்றிகள். அது கிடைத்தவுடன் அவர்கள் சந்தோஷமடைந்துவிடுவார்கள்.
நாம் மிகவும் கடுமையாக உழைத்து, எப்பொழுதும் வெற்றியடைந்து கொண்டே இருக்கும் நேரத்தில், தோல்வியை அனுபவமாக பெறும்பொழுது, அதை ஏற்றுக்கொள்ளவது மிகவும் கடினமானது. விளைவு: தமஸ் - மனச்சோர்வு, இந்த மனச்சோர்வை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினம்.
பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்
பொதுவாகவே, நம்முடைய உண்மை தன்மையை அறியாதபொழுது பிறப்பதுதான் தமஸ். இதுதான் முதன்மையான குற்றம். ஆதாம் மற்றும் ஏவாள் செய்த முதன்மையான பாபம், பாம்பு சொன்னதைக் கேட்காததோ அல்லது புணர்ச்சியில் ஈடுபட்டதோ அல்ல ; தங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையைப் புரிந்துகொள்ளாததே ஆகும்.
சில நேரங்களில், அறியாமையிலிருந்து விலகிச்செல்ல முயலும்பொழுது, தமஸ் எழக்கூடும். துடிப்புடன் வெளியுலகப் பொருட்களை ஈட்டுவதில் ஆர்வமாக இருக்கும் தீவிர ரஜோ குண மனிதர், ஆன்மிகப் பாதையில் நழையும்பொழுது, சிறிது காலத்திற்கு, எளிதில், தமோ குணத்திற்குள் விழுகிறார்.
நான் இதை, நம்முடைய ஆச்ரமத்தில் பார்த்திருக்கிறேன். அமைதியற்ற அர்த்தமற்ற செயல்களைச் செய்வதையே பழக்கமாகக் கொண்ட ஒரு வர், தமக்குள் மையங்கொள்ளும்பொழுது அவருடைய உடல்-மன அமைப்பு ஆரம்பத்தில் செயல்பட மறுக்கிறது. பிறகு செயல்பாடற்ற தன்மையான தமஸுக்குள் மூழ்கிவிடுகிறது.
அப்போது அவர்கள், எதையும் செய்ய விரும்பாமல், பகலிலும் இரவிலும், வெறுமனே தூங்கிக்கொண்டே இருப்பார்கள். இருந்தாலும், இது நீண்டகாலத்திற்குத் தொடராது. எதிர்மறை தன்மைகள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடும் ஸத்வ நிலையில் நிலைகொள்வார்கள், இந்நிலையில் அவர்கள் எந்தவித இலக்கை நோக்கியும் ஓடுவதில்லை.
கூட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும்
தொழில் செய்பவர்கள் ரஜோ குணத்திற்கு
முன் உதாரணமாகத் திகழ்பவர்கள் என்று
> ஸத்வ நிலையில்
> நிலைகொள்பவர்கள்
> எந்தவித இலக்கை
> நோக்கியும் ஓடுவதில்லை
முன்பே சொல்லி இருக்கிறேன்.
கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், ஆழமான தமஸுக்குள் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வெறித்தனமான செயல்களிலும் மற்றும் ஏமாற்றுதல் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
அனைத்து சர்வாதிகாரிகளும், செங்கீஸ்கான் மற்றும் ஔரங்கசீப் முதல் ஹிட்லர் வரை, இந்தப் பூமிப்பந்தில் துன்பத்தை உண்டாக்கிய அனைவரும், ரஜோ குண உடையவர்களாக மட்டுமல்லாமல், அபாயகரமான தமோ குண உடையவர்களாகவும் இருந்தார்கள். சுறுசுறுப்புடன் செயல்படுபவர்களாக இருந்தாலும் கூட, அறியாமையுடையவர்களாகவும், தவறான கொள்கை உடையவர்களாகவும் வெறிபிடித்தவர்களாகவும் மகிழ்ச்சி அற்றவர்களாகவும் இருந்தார்கள்.
பல கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மக்கள் என்னிடம் பேசும்பொழுது, எப்படி அவர்கள், பயத்தினால் விரட்டப்பட்டுச் செயல்படுகின்றனர் என்பதைப் பற்றிச் சொல்வார்கள். இதற்கு முன் நான் ரஜோ குணத்தைப் பற்றி விவாதிக்கும்பொழுது, பேராசையினாலும் குறிக்கோளினாலும் விரட்டப்பட்டு, செயல்படுவதைப் பற்றிப் பேசினேன்.
பல கழுதைகள், பயம் என்ற கோலால் விரட்டப்பட்டுத்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவர்கள், ஆசை என்னும் கேரட்டிற்கு விருப்பப்படாதவர்களாகவும், ‘பயம்’ என்னும் கோலுக்கு மட்டும் பயப்படுபவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களை விரட்டுபவர்கள், இவர்களை விரட்டுவதற்கு பயம் என்னும் கோல்தான் ஏற்றது என்று நம்புபவர்களாக இருப்பார்கள். வியாபார நோக்கில் இருக்கும் தலைவர்கள், பயம் என்னும் கோலைக்கொண்டே மக்களை ஆட்டிவைக்கிறார்கள்.
வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே இருளை நீக்க முடியும்.
கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்கள், ‘பயம்’ ஒன்றே சரியான கருவி என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவர்களே
பயத்தினால் நிரம்பியுள்ளனர். அவர்கள்
பாதுகாப்பற்ற உணர்ச்சியிலேயே
வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்
தமோ குணத்தால் இயக்கப்படுகிறார்கள். தமோ
குணம், தமோ குணத்தையே உருவாக்கும்.
இவ்விதமான மனிதர்களைச்
சமாளிப்பதற்கு ஒரேவழி, அவர்களை
நேரடியாக எதிர்கொள்வதுதான்.
நேரடியாக எதிர்கொள்ளும்பொழுது,
பயம் மறைந்துவிடும். பாதுகாப்பற்ற
உணர்ச்சியில் வாழும் தலைவர்கள்,
நம்முடைய அச்சத்திலிருந்து அவர்களது
சக்தியைப் பெறுகின்றனர்.
> அறியாமையை
> வெளியேற்றுவதற்கு,
> விழிப்புணர்வை
> உங்களுக்குள்
> எடுத்துவாருங்கள்
நாம் எழுந்து நின்று, அவர்களை நேருக்குநேர் எதிர்கொண்டால், நம்மை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்காது. இது ஆவிகள் மற்றும் பேய்களின் மீது வைத்திருக்கும் அச்சத்தைப் போன்றது. அவை நமக்குத் துன்பத்தை விளைவிக்க முடியும் என்ற நம்முடைய நம்பிக்கையும் பயமும்தான், அவற்றிற்கு நம்மைத் துன்புறுத்தக்கூடிய ஆற்றலைத் தருகின்றன. ஒருமுறை அவற்றை நாம் எதிர்கொண்டால் அவை ஓடிவிடும்.
ஞானமடைவதற்கு உதவும் ஸத்வ குணம்
தமஸ் என்பது இருளின் தன்மை. இது எதிர்மறையானது. நாம், வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே இருளை நீக்க முடியும். அதுபோலவே நாம் அறியாமையை வெளியேற்றுவதற்கு, விழிப்புணர்வை உள்ளே எடுத்து வரவேண்டும்.
தமஸோ மா-ஜ்யோதிர்கமய அதாவது, 'எனது அறியாமை என்னும் இருள், ஒளியினால் நீக்கப்படுவதாக!' என்று உபநிஷதம் கூறுகிறது.
ஜகத்குருவாகிய கிருஷ்ணருடைய ஒளியும் அறிவாற்றலும், உங்களுடைய இருள் தன்மையையும் தமோ குணத்தையும் சிதறச் செய்யட்டும்.
இந்த ஸ்லோகங்களில், இந்த மூன்று குணங்களான ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் நிலையில் ஒரு மனிதர் நிலைபெற்றிருக்கும்பொழுது, மரணம் சம்பவித்தால், அவர் எங்கே செல்கிறார் என்பதைக் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார்.
ஸாத்விக நிலையில் உள்ள ஒரு மனிதர் ஞானியாகிறார்; தமஸ் நிலையில் உள்ள ஒரு மனிதர் கீழான வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறார்; ரஜோ நிலையிலுள்ள ஒரு மனிதர் பேராசையினால் துன்பத்தையே தொடர்ந்து அனுபவிக்கிறார்.
கீதையில் உள்ள மற்றொரு ஸ்லோகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ஒரு மனிதர் தம்முடைய மரணத்தருவாயில் எந்த எண்ணத்திற்கு இடம் கொடுக்கிறாரோ, எந்த எண்ணத்தில் நிலை பெறுகிறாரோ அதன் அடிப்படையில்தான் அவருடைய மறுபிறவி அமையும் என்று சொல்கிறார்.
இங்குக் கிருஷ்ணர், அந்தக் கடைசி எண்ணம்
என்பது தற்செயலாக வருகின்ற எண்ணம்
அல்ல, அது ஒருவருடைய இயல்பை,
குணத்தை அடிப்படையாகக் கொண்டது
என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
மக்கள் என்னிடம், "ஓ! ஸ்வாமிஜி, நாங்கள் ஏன் ஆன்மிக விஷயங்களைப் பற்றி இப்பொழுதே கவலைப்படவேண்டும்? மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரம் இது. எங்களுக்கு வயதான பிறகு, ஆன்மிக சாதனைகளைப் பற்றி யோசித்துக்கொள்கிறோம்!
கிருஷ்ணர், நம்முடைய கடைசி எண்ணம்தான், நமக்கு விமோசனம் கொடுக்கிறது என்றுதானே சொல்கிறார். நம்முடைய கடைசி மூச்சின்போது, நாம் சொல்லவேண்டியதெல்லாம் இராமா அல்லது கிருஷ்ணா, அவ்வளவுதானே, அதனால் நாங்கள் மரணத்தின்போது, 'இராமா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொள்கிறோம்," என்பார்கள்.
அதுமட்டும் அவ்வளவு எளிதாக இருந்தால், நாம் எல்லோரும் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கை முழுவதும் பணத்தின் பின்னாலும், உலகாதாய பொருட்களின் பின்னாலும் ஓடிக்கொண்டிருந்தால், உங்களுடைய கடைசி எண்ணம், பணத்தைத் தவிர, வேறு எதைப்பற்றியாவது இருக்குமா?
வாழ்நாள் முழுக்க உங்கள் மனம், மது, மங்கை மற்றும் கேளிக்கைகளில் ஒன்றியிருந்தால், அந்த எண்ணங்கள் மட்டுமே, நீங்கள் இறக்கும்பொழுதும் உங்களுடைய மனத்தில் நிரம்பி இருக்கும்.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மை ஆட்டிப்படைத்த ஸம்ஸ்காரங்கள், நம்முடைய மனவெளியில் ஆழமான பள்ளங்களைச் செதுக்கி இருக்கின்றன.
நாம் எந்த மனநிலையில் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமோ, அந்த மனநிலை நம்முடைய மரணம்வரை மட்டும் அல்லாமல், மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.
நாம் எந்த மனநிலையில்
நம்முடைய வாழ்க்கையை
வாழ்ந்தோமோ,
அந்த மனநிலை, நம்முடைய
மரணம்வரை மட்டுமல்ல,
மரணத்திற்குப் பின்னும்
தொடர்கிறது.
இந்த மனநிலை, இந்தக் கட்டுறுமனப்பாங்கு,
இந்த வாசனா - இவற்றுடனேயே
நாம் வாழ்க்கையை வாழ்வது
மட்டுமல்லாமல், அவற்றை நம்முடனேயே
எடுத்துக்கொண்டே வாழ்க்கையை விட்டுப்
பிரிகிறோம்.
நாம் மீண்டும் பிறப்பெடுக்கும்பொழுது, நம்முடைய ஆத்மா, தான் நுழைவதற்காக இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கிறது, அப்போது இதே மனநிலைதான், இதே வாசனாத்தான் நம்முடைய ப்ராரப்த கர்மாவாக மீண்டும் தோன்றுகிறது.
நம்முடைய பழைய வாழ்க்கையின் நிறைவேறாத ஆசைகளே, ப்ராரப்த கர்மம். ഇവையே, இந்தப் பிறவியின் கட்டுறுமனப்பாங்கிற்கு அடிப்படையாகவும் ஆகிவிடுகின்றன. அவையே நம்முடைய ஸம்ஸ்கார விதைகளாகின்றன.
வாழும்போதே, மறுபிறவி எடுக்கலாம்
நம்முடைய இரண்டாவது நிலை நிகழ்ச்சியான நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில், நாம் ஸம்ஸ்காரங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்கிறோம். ஒருவிதத்தில், நித்யானந்த ஸ்புரண த்யான முகாம், நம்மை மரண அனுபவத்திற்குள் எடுத்துச்செல்கிறது. இது நம் உடலிலுள்ள ஏழு சக்தி அடுக்குகள் சம்பந்தப்பட்டது.
மரணத்தின்போது உயிரானது, இந்த ஏழு அடுக்குகளையும் கடக்க வேண்டியுள்ளது. அப்போது அது, இந்த வாழ்க்கையில் அது வாழ்ந்த எல்லா உணர்ச்சிகளையும் மீண்டும் வாழ்கிறது.
இன்னொரு விதத்தில் பார்க்கப்போனால், நித்யானந்த ஸ்புரண த்யான முகாம் நம்முடைய கட்டுறுமனப்பாங்கை எரிப்பது பற்றியது. இம்முகாமில் பங்குகொள்ளும் ஒருவர், தாம் செய்யும் த்யானத்தின் மூலமாக பல மேலோட்டமான மற்றும் ஆழமான ஸம்ஸ்காரங்களை எரித்துவிடுகிறார். முகாமின் முடிவில், அவர்கள் மறுபிறவி அடைந்ததின் அடையாளமாக, ஆன்மிகப் பெயரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கின்றேன்.
இந்த த்யான முகாம், அந்த இறுதி ஸத்யத்தை ஒருகண நேரமாவது ஒவ்வொருவரையும் உணரவைக்கிறது. நம்முடைய ஸம்ஸ்காரங்களும், நம்முடைய கட்டுறு மனப்பாங்கும்தான் இந்த ஸத்யத்திலிருந்து வேறுபடுத்தி, நம்மைப் பிரித்துவைக்கிறது.
இவ்வகுப்பை முடித்தவர்கள், கடந்தகாலத்தில் அவர்களிடம் மனம் புண்படும்படி நடந்து கொண்டவர்கள் மீதான விரோதத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுடைய அணுகுமுறையில் எதிர்மறை தன்மை இருக்காது. மற்றவர்களைப் பற்றிய தீர்மானங்களும் தீர்ப்புக்களும் குறைந்துவிடும். கட்டுறுமனப்பாங்கிலிருந்து விடுபட்டதாலும் ஸம்ஸ்காரங்கள் கரைந்து விட்டதாலும், அவர்களுக்குள் ஏற்பட்ட உள்ளுலக உணர்வுமாற்றத்தின் விளைவாக, மற்றவர்களைப் பற்றிய அவர்களது மனப்பான்மை முழுவதுமாக மாறிவிடும்.
நித்யானந்த ஸ்புரண த்யான வகுப்பை முடித்தவர்களுடைய அணுகுமுறையில் எதிர்மறை தன்மை இருக்காது.
நாம் இப்பொழுது எவ்வாறு வாழ்கிறோம் என்பதே, நாம் எவ்வாறு மீண்டும் பிறப்போம் என்பதை நிர்ணயம் செய்கிறது. நாம் மீண்டும் பிறக்கிறோம் என்பதை நிரூபிக்க விஞ்ஞான பூர்வமான ஒப்புக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள் பல இருக்கின்றன. naam oru kristhuvaraagavo alladhu oru musleemaagavo irundhaalum, நாம் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது ஒரு முஸ்லீமாகவோ இருந்தாலும், நம்முடைய மதம், மறுபிறவியின்மீது நம்பிக்கைகொள்ள நம்மை அனுமதிக்கின்றதோ இல்லையோ, ஒரு தேர்ந்த உளவியல் நிபுணர், நம்மைக் கடந்த பிறவிக்குள் எடுத்துச் சென்றுவிடமுடியும்.
இந்தச் செயல்முறைகள் கையாளப்படும் விதத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இது சந்தேகத்துக்கிடமில்லாமல் உண்மையாகும், இது முறையாக செய்யப்பட்டால், மக்கள் இதனால் பயனடையக்கூடும்.
நம்முடைய மத நம்பிக்கை, மறுபிறப்பு உள்ளது என்று நம்ப நம்மை அனுமதிக்கும்பொழுது, வாழ்க்கையின் இறுக்கங்கள் குறைந்துவிடும்.
கீழைநாட்டு மதங்கள்,
நம்முடைய பாதையை
இனிமையாக வாழ
நம்மை அனுமதிக்கின்றன
நாம் ஒருமுறை மட்டும் பிறந்து
இறப்பதில்லை. நாம் மீண்டும் மீண்டும்
பிறந்து இறக்கிறோம். அதனால், மறுபிறப்பு
நம்பிக்கையை அனுமதிக்கும் கீழைநாட்டு
மதங்கள், தங்களுடைய தனித்தன்மையின்
மீதும், மற்றவர்களின் மீதும் மிகுந்த
சகிப்புத்தன்மை உடையவையாக
இருக்கின்றன. நம்முடைய பாதையை
இனிமையாக வாழ, நம்மை
அனுமதிக்கின்றன.
'நீங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கலாம்; ஆனால், ஸத்யத்தை அடைந்துவிடுவீர்கள்' என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள கீழை நாட்டு மதங்கள் எல்லாம் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு உறுதியான கருத்தை எதுவும் வைத்திருக்கவில்லை. அவை, வளைந்துகொடுக்கக்கூடிய கருத்துக்களாக இருக்கின்றன. அவை மாற்றமுடியா கருத்துக்கள் அல்ல.
ஆனால், அதற்கு எதிராக, மறுபிறப்பை மறுக்கும் மதத்திற்கு சொர்க்கம், நரகம் என்பது நிலையானது. நாம் இந்த வாழ்க்கையில் நல்லதைச் செய்யவில்லையென்றால், நாம் நிரந்தரமாக நரகத்தில் எரிந்து கொண்டிருப்போம் என்று அவர்கள் கருதுவதால், அவர்களுடைய வாழ்க்கை பயத்தினாலும், அச்சத்தினாலும் இயக்கப்படுகிறது. உண்மையில், சொர்க்கம் என்பதோ நரகம் என்பதோ கிடையாது. அவை, நம்முடைய மனதில் இருப்பவை.
அவை, நம்மைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நம்முடைய மத நம்பிக்கைகளாக, நம் உடல்-மன அமைப்பிற்குள் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்படுகின்றன.
நாம் முழுவதுமாக நம்மைச் சுற்றியே மையங்கொண்டு, மற்றவர்களை விலக்கிவிட்டு, உலகாதாயமான வாழ்க்கையை வாழும்பொழுது, நாம் நரகத்தில் வாழ்கிறோம். நாம் மற்றவர்களைக் கண்டு அச்சப்பட்டுக்கொண்டும், பொறாமைப்பட்டுக்கொண்டும், கோபப்பட்டுக்கொண்டும் இருக்கும்பொழுது, நாம் சந்தோஷமாக இருப்பதில்லை.
ஸ்ஸத்வ நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நாம் எதனுடனும் பந்தப்படுவதில்லை.
எவ்வளவுதான் செல்வத்தை நாம் சேர்த்துவைத்தாலும்கூட, நாம் துன்பப்படுகிறோம். நாம் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனாலும் நாம் நரகத்தில் இருக்கிறோம்.
சொர்க்கமும் நரகமும், இப்போது நம் வாழ்க்கையில், நாம் வாழும் மன தளத்தைச் சார்ந்தவை; அவை, நாம் மரணமடைந்த பிறகு செல்லப்போகும் இடங்கள் அல்ல; நாம் வாழும்போது நமக்கு இருக்கும் மன நிலைகளே!
ஸத்வநிலை - உங்களை விடுவிக்கும்
கிருஷ்ணர் சொல்கிறார், "ஸத்வ நிலையில் வாழும் ஒரு மனிதர், ஞானிகள் வாழும் உயர்ந்த உணர்வு நிலையை அடைகிறார். அவர் இறைத்தன்மையை உடையவராகிறார்."
நாம் முழுமையாக ஸத்வ நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் விழிப்பு உணர்வு நிலையில் வாழ்கிறோம்; நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நாம் எதனுடனும் பந்தப்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை எழுவதில்லை. நாம் கவலையினாலும் பேராசையினாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிப்போம்.
அதன்பிறகு, 'நான்' மட்டுமே என்கிற தன்னலத்தைக் குறிக்கோளாகக் கொண்ட குறுகிய நோக்கம் நீங்கி, நானும் நீயும் என்றாகி, பிறகு காலப்போக்கில், 'நீ' என்பது மட்டுமே இருக்கும். பிறகு, 'நீ' என்பதே 'என்னையும்' உள்ளடக்கியதுதான் என்பதாகிவிடும்; எல்லா நடவடிக்கைகளுமே நிபந்தனை அற்றதாகிவிடும்.
'நிகழ்கால நிலை' மட்டுமே நிலையானது. அந்த நிலையே நாம் நினைக்கின்ற சொர்க்கத்தின் நிலை, உயர் கிரகங்களின் நிலை. நாம் வாழும்பாதே நாம் சொர்க்கத்தில் வசிக்கலாம்.
நம்முடைய உயிருக்கு, இந்த உடலைக் கடந்து செல்லும்பொழுது, தன்னுடைய ஸம்ஸ்காரங்கள், கட்டுறுமனப்பாங்கு ஆகியவற்றைக் கடந்து, தன்னுடைய உண்மை நிலையான 'தன்னை உணர்தல்' நிலைக்குள் செல்லக்கூடிய ஆற்றல் இருக்கிறது.
ஒருவர் தமோ குணத்தில் இருக்கும்பொழுது, ஆழமான அறியாமையிலும் மந்தத் தன்மையிலும் இருக்கும்பொழுது, கீழான மறுபிறவியில் வீழ்கிறார். அப்படிப்பட்ட மனிதர், மறுபிறப்பில் ஒரு விலங்காகப் பிறக்கிறார் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

மனித குலத்தின் கீழ்நிலையான சக்தி மையம் முதுகுத் தண்டின் நுனிப்பகுதியில் அமைந்துள்ள மூலாதார சக்ரம்தான். இதுவே காமத்திற்கான மையம். ஆனால், இதுவே, மிருகங்களுக்கான உயர் மையம். எல்லா மிருகங்களும் உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியின் அடிப்படையில்தான் தொடர்ந்து இயங்குகின்றன. அவற்றினுடைய இயல்பே அதுதான். இந்நிலை தவறானதோ அல்லது தகுதியில் குறைவானதோ அல்ல. அதுதான் அவற்றினுடைய இயல்பு.
விழிப்புணர்வு தளத்தில் மேல்நோக்கிச் செல்வதற்கான புத்திசாலித்தனம்
மனிதர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.
நமக்குத் தவறுகள் செய்வதற்கான சுதந்திரம்
இருக்கிறது; தவறுகள் செய்கிறோம்.
அறியாமையில் இருக்கும் மனிதர்கள் மிருகங்களாகவே பிறக்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்வது மிருகங்களைத் தாழ்த்திப் பேசுவதாகாது. கிருஷ்ணர் எந்த மனிதர் உள்ளுணர்ச்சியிலிருந்து, மூலாதார சக்ரத்திலிருந்து, மிருக இயல்புடன் நடந்துகொள்கின்றாரோ அவர், ஒரு மனிதனான தமக்கு இருக்கும் ஆற்றலைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், அறியாமையில் இருக்கிறார் என்று சொல்கிறார்.
நாம் ஆன்மிக அனுபவங்களுக்காகப் பாடுபடும் மனிதர்கள் அல்ல. நாம் மனிதப்பிறவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக ஆத்மாக்கள். இதுவே ஸத்யம்.
நாம் ஸத்வ நிலையில் இருக்கும்பொழுது மட்டுமே, நாம் இந்த நிலையில் இருப்பது என்பது சாத்தியம். நாம் தமோ நிலையில் இருக்கும்பொழுது, நாம் நம்முடைய ஆன்மிக இயல்பை மறந்துவிடுகிறோம்.
நாம் ரஜோ நிலையில் இருக்கும்பொழுது, ஒரு தெளிவற்ற கருத்துடன் இருப்போம். இருந்தாலும் ஆன்மிக அனுபவங்கள்மீது பந்தம் ஏற்பட்டு, அதுவும் இன்னொரு லட்சியமாகவும் விருப்பமாகவும் ஆகிவிடுகிறது. நாம் பந்தங்களைக் கடந்த ஒன்றுடன் பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதன்விளைவாக, நாம் பிறப்பு மற்றும் இறப்பு என்ற வாழ்க்கைச் சக்கரத்தில், ஸம்ஸாரம் என்ற சுழற்சியில் அதற்குரிய எல்லாவிதமான துன்பங்களுடன், இந்த மனித உருவத்திலே நாம் மீண்டும் பிறப்பெடுக்கிறோம் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் ஆழ்ந்த தமோ நிலையில் மூழ்கி, ஒரு மிருகத்தைப்போல, உள்ளுணர்ச்சியினால் உந்தப்பட்டு செயல்படும் நிலையை, விழிப்புணர்வற் ற நிலையைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ரஜோ நிலையில் மூழ்கி, தர்க்க மனப்பான்மையுடனும், பொருட்களைத்தேடி அலையும் வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கலாம். மூன்றாவது தேர்வு, பந்தங்களுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த விழிப்புணர்வு நிலையில், நுண்ணறிவு நிலையில் (Intuitive) மிக உயர்ந்த ஸத்வ இயல்புடன் இணைந்து இருப்பது.
இந்தத் தேர்வுகளே நம்முடைய அடுத்த பிறப்பை நிர்ணயிக்கின்றன. உண்மையைச் சொல்லப் போனால், நாம் மறுபடியும் பிறப்பெடுப்போமா இல்லையா என்பதையே இதுதான் தீர்மானிக்கிறது.
மாயமாய் இருந்து தன்னை உண்மையாய்க் காட்டிக்கொள்வதே மாயை...
மனோதத்துவ நிபுணர்களுக்கெல்லாம் குருவான கிருஷ்ணர், சரியாக நிர்ணயித்திருக்கிறார்: ஸத்வ நிலையிலிருந்து தூய்மை மற்றும் அறிவாற்றலும், ரஜோ நிலையிலிருந்து மனக்கவலை மற்றும் பேராசையும், தமோ நிலையிலிருந்து விவேகமற்ற தன்மை மற்றும் மாயையும் வெளிப்படுகின்றன.
நாம், மாயை மற்றும் மதிக்குழப்பம் இவற்றிலிருந்து ஆரம்பிப்போம். பலர் மேற்சொன்ன நிலையில்தான் இருக்கிறார்கள். இந்தியாவின் மிகச் சிறந்த தத்துவ ஞானியும், கவிகுருமான ஆதி சங்கராச்சாரியார் சொல்கிறார்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு மாயை!'
மாயை - உண்மையல்லாத ஒன்று; ஆனாலும் உண்மையைப்போலத் தோன்றுவது.
‘நாம் அனுபவமாக உணரும் இந்த வாழ்க்கையானது, நாம் நினைப்பதுபோல் உண்மையானது அல்ல’ - என்பதை யாரிடமும் வாதம் செய்து நிரூபிக்க முடியாது. வாழ்க்கை என்பது மெய்யானது, நிரந்தரமானது என்ற உணர்வைப் பெறுவதற்காக, நாம் அனைத்து வழிகளிலும் செயல்படுகிறோம். நாம் நடக்கிறோம், பேசுகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம், இதை நிரூபிப்பதற்கான எல்லாவற்றையும் செய்கிறோம். பிறகு எப்படி இவை
> இந்த வாழ்க்கையே
> 'ஒரு மாயை' - என்பதை
> வாதம் செய்து
> நிரூபிக்க முடியாது.
அனைத்தும் நிரந்தரமற்றது ஆகும்?
நவீன தொழில்நுட்பத்தினால், நாம் இவை அனைத்தையும் செய்யக்கூடிய பொம்மைகளை உருவாக்கலாம். பிறகு நாம், கண்ணாடி மற்றும் ஹெட்போன்களை அணிந்து, மின் இணைப்பு தரப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, அந்தப் பொம்மைகளின் அசைவுகளை நான்கு பரிமாணத்தில் காணும் அனுபவத்தைப் பெறலாம். அந்தப் பொம்மைகள் நம்மை உற்சாகப்படுத்துவதற்குச் சில வாசனைகளையும் வெளிப்படுத்தும். நாம் வாயைத் திறந்தால், எதையாவது ஊட்டக்கூடச் செய்யும். நமது ஐம்புலன்களும் கிளர்ச்சியடையக்கூடிய வகையிலே, செயலளவில் உண்மை என நம்பத்தகுந்த அனுபவங்களை, நாம் பெறமுடியும். ஆனால், அவை அனைத்தும் மாயையே!
எது இயல்பானது?
எது இயல்பில்லாதது?
அது அவரவருடைய
மனநிலையைப்
பொறுத்த விஷயமாக
இருக்கிறது.
உண்மையெனத் தோற்றமளிக்கும் காமம் உட்பட, உண்மைபோன்றே தோற்றமளிக்கக்கூடிய வாழ்க்கைச் சம்பவங்களை வைத்துப் புனையப்படும் கதைகளுக்கு, இனி அறிவியல் கதைகளின் எல்லைக்குள் இடமில்லை. அவற்றை விஞ்ஞான பூர்வமானவை என்று சொல்ல முடியாது. அது ஒரு மாயை. ஆனால், உண்மையான அனுபவம் கிடைப்பதற்கு வழியில்லாமல் ஏமாற்றத்திலும் விரக்தியிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு தனி நபருக்கு, அதெல்லாம் தேவைப்படுகிறது என்று நாம் வாதிடுகிறோம்.
எது இயல்பானது, எது இயல்பில்லாதது என்பது அவரவருடைய மனநிலையைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. ஆதிசங்கரருக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை இயல்பானது அல்ல.
ஆனால், உண்மைபோல் தோற்றமளிக்கக்கூடிய இந்த வாழ்க்கையை யார் முழு திருப்தியுடன் வாழ்கிறார்களோ அவர்களுக்கு இது இயல்பானது.
அதனால், ஒருவருக்குக் கற்பனையாகத் தெரிவது, மற்றவருக்கு உண்மையாக இருக்கும்.
நிகழ்காலமே நிஜம்
1970களில் 'ஹிப்பி' கலாசாரம் நடைமுறையில் இருந்தபொழுது, ஒரு சிலர், ஆன்மிக அனுபவங்களைத் தூண்டக்கூடியவை என்று கூறி, சில போதை வஸ்துக்களை ஆதரித்தனர்.
மக்களால் தியானத்தின் மூலம் பெறமுடியாத ஆனந்தத்தைப் பெறுவதற்காக மரிஜோனா, எல். எஸ். டி. (LSD), வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கற்றாழை, பலநிறக் காளான்கள் என, இதுபோன்ற பல பொருட்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டன. அது, உடனடி நிர்வாணா (Instant Nirvana) என்று அழைக்கப்பட்டது.
பிரச்சினை என்னவென்றால், இந்தப் போதைப் பொருட்கள் பீனியல் சுரப்பியின் செயல்களைத் தூண்டிவிட்டு, டோபமைனை (Dopamine) வெளியேற்றினாலும், அது எந்த விதத்திலும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது அல்ல. சில ஆன்மிக அனுபவங்களின்போது டோபமைன் வெளியேற்றம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும் தர்க்கம் தலைகீழாக வேலை செய்வதில்லை. அதாவது டோபமைனை வெளியிடுபவை யெல்லாம் ஆன்மிக அனுபவத்திற்கான சான்று அல்ல! அது போலியானது.
நாம் எதை நிகழ்காலத்தில் அனுபவமாக உணருகிறோமோ அதுவே, நிஜம். நிகழ்காலத் தருணங்களே உண்மையான தருணம்.
நிகழ்காலத் தருணமே நிலையானது. எதிர்காலமோ அல்லது இறந்தகாலமோ நிலையானதாக இருக்காது. அவை உண்மையானவை அல்ல. ஏனென்றால் அவை இரண்டுமே 'இப்பொழுது' என்ற நிலையில் இல்லை. அவற்றிற்கு நிகழ்கால நேரங்களில் உறுதியான திடமான இருப்புத்தன்மை இருப்பதில்லை.
நாம் இறந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ நம் கரங்களால் எட்டிப்பிடிக்க இயலாது. அவை நம் மை நிகழ்காலத்தில் ஆக்கிரமித்துள்ள எண்ணங்கள் மட்டுமே. நாம் அப்பொழுது
> டோபமைனை
> வெளியிடுபவையெல்லாம்
> ஆன்மிக அனுபவத்திற்கான
> சான்று அல்ல!
சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தாலும், ஒருமணிநேரம் சென்றபின் மனக்கவலையில் வீழ்ந்தோம் என்றால், நாம் அனுபவித்தது நிலையான ஆனந்தம் அல்ல. அது தற்காலிக இன்பம்.
கனவு மேகம் கலைந்தால்தான் நிஜமான வாழ்வை வாழமுடியும்
போதை வஸ்துகள், வெளிப்பொருட்களால் தூண்டப்பட்டு வரும் அனுபவங்கள், கற்பனைகள் - இவையனைத்தும் நம்மைத் தற்காலிக இன்பத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
‘இது நன்மை தரக்கூடியது அல்ல’ என்று நான் சொல்வதற்குக் காரணம், நாம் அதே அளவு சந்தோஷத்தில் நீடித்திருப்பதற்கு, நாம் எடுத்துக் கொள்ளும் போதைப் பொருட்களின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும். அப்படியே அதிகமாக எடுத்துக்கொண்டாலும், நாம் குறைந்த அளவு சந்தோஷத்தையே உணருவோம்.
இறுதியில், சந்தோஷம் என்பதையே உணரமாட்டோம். ஆனாலும் அதை உட்கொள்வதை நிறுத்தவும் மாட்டோம். போதை வஸ்துகளின் தன்மையே இதுதான். இது அபாயகரமான போக்கு!
இப்படித்தான் மக்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். ஹெராயின் அல்லது கொகெய்னை எடுத்துக்கொள்பவர்கள், தங்களைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்கு, அவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில், அவற்றின் அளவை அதிகரித்தாலும்கூட, எந்தவித பலனையும் கொடுப்பதில்லை; அவை வேலைசெய்வதையே நிறுத்திவிடும். ஆனால், அதை உபயோகிப்பவர் அதிக அளவில் உட்கொள்வார்; விளைவு, அகால மரணம். இதுதான் தமஸின் விஷச்சுழல்.
நாம் பகல்கனவு காணமுடியும், பகல்கனவு
காணும்பொழுது சந்தோஷமாக இருக்கவும்
முடியும். நாம் பகல்கனவு காணுவதை
நிறுத்தி விட்டால் என்ன நிகழும்?
வாழ்க்கை, முன்பு இருந்ததைப்போல துயர்
நிறைந்ததாகவே இருக்கும். வாழ்க்கை
சுவாரஸ்யமானதாக இருந்திருந்தால், நாம்
அதிலேயே மூழ்கியிருப்போம். அதன்பிறகு
நாம் பகல்கனவு ஏன் காணப்போகிறோம்?
சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து,
அவர்களை அடைய வேண்டும் என்று
நினைக்கிறார்கள் அல்லது அவர்களை
ப்போல இருக்க விரும்புகிறார்கள்.
முதல் உணர்ச்சி, முதல் கற்பனை, காமத்தினால் எழுகிறது. இது, ‘கற்பனை’ என்று மக்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், கற்பனையில் இருக்கும்பொழுது சுகமாக இருப்பதாக உணர்கிறார்கள். அவர்கள், எருமைமாடு சகதியில் புரள்வதைப்போல அந்தக் கற்பனையிலேயே புரள்கின்றனர். அந்த எருமைமாடாவது நிகழ்காலத்தில் இருக்கிறது. கற்பனையில் இருப்பது இல்லை.
அந்தக் கற்பனைகளால் தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதையும், தங்களுடைய நேரத்தை வீணடித் துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த அந்த வினாடியே, அவர்கள் தங்களுடைய விழிப்புணர்வைத் திரும்பப் பெறவேண்டும்; அவர்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே ஒரு பைத்தியக்காரச் சந்தையாகிவிடும்!
இரண்டாவது உணர்ச்சியான சினிமா நட்சத்திரத்தைப்போல இருக்க வேண்டும் என்பதுதான் மிக அபாயகரமானது. இது பொறாமை, ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகியவற்றால் பிறக்கிறது. அது நிச்சயமாக சக்தி விரயம்தான். இது ரஜஸ். இது இனியும் தமோ குணமாக இருப்பதில்லை.
இந்த மனிதர்கள், தங்களுடைய உடல், மனம் ஆகியவற்றால் திருப்திப்படாமல், வேறு ஒருவரைப்போல இருக்க விரும்புகிறார்கள். இன்று அவர்கள், இந்த நடிகை அல்லது நடிகரின் நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றுகின்றனர். அந்த நடிகரோ அல்லது நடிகையோ பிரபலமற்றவர்களாக, புகழ் இழந்துவிட்டால் அல்லது வயதாகிவிட்டால் என்ன நடக்கும்? அதைவிட மோசமானது என்னவென்றால், அவர்களை நேரில் சந்தித்து, அவர்களைவிடத் தாங்களே அழகாக இருப்பதைத் தெரிந்துகொண்டால்... !
எல்லாத்திரைப்படங்களும் உச்சபட்ச கற்பனையின் உருவகமாக இருக்கின்றன. அவற்றில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு பொருளுமே கற்பனையில் உருவாக்கப்பட்டவையே.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், பேராசை, பொறாமை மற்றும் குறுகிய மனப்பான்மை ஆகியவை கோபம், பயம், குற்றவுணர்ச்சி என, பல நூற்றுக்கணக்கான எதிர்மறையான உணர்ச்சிகளில் முடிவடைகின்றன.

ஒன்று நாம் பந்தத்தில், பற்றில் விழுகிறோம். அல்லது ஒதுக்கிவிடுவதில், வெறுப்பில் விழுகிறோம்.
ஒன்று, சில விஷயங்களை நோக்கி அல்லது சூழ்நிலைகளை நோக்கிச் செலுத்தப்படுகிறோம். அல்லது வேறு சில விஷயங்களில் இருந்து அல்லது சூழ்நிலைகளில் இருந்து நாம் விலகி இருக்கிறோம். நாம் பேராசையினால் தூண்டப்படுகிறோம். அல்லது பயத்தினால் சித்ரவதைப்படுகிறோம். அது எதுவாக இருந்தாலும் நாம் துன்பப்படுகிறோம்.
இந்தத் துன்பம், நம்மை மனக்கவலை, சோர்வு மற்றும் தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. நாம் நம்முடைய மையத்தைத் தொலைத்துவிடுகிறோம்.
நம்முடைய மையமே, நம்முடைய உண்மையான இயல்பு. நம்முடைய உண்மையான இயல்பு இறைத்தன்மையுடன் கூடியது. அதை நாம் பிரபஞ்ச சக்தி, கடவுள், பராசக்தி - என்று எப்படி அழைக்க விரும்புகிறோமோ, அப்படி அழைத்துக்கொள்ளலாம். நம்மால் அதை விவரிக்க முடியாது. நாம் அதை உணரமட்டுமே முடியும்.
நம்முடைய கவனத்தை மையப்புள்ளியில் நிலைநிறுத்தும்போது மட்டுமே, ஆனந்தத்தை நாம் அனுபவமாக உணரமுடியும்; மனிதப்
பண்புகளில் நிலைநிறுத்தும்போது அல்ல!
கற்பனைகளை விட வாழ்க்கைக்கு அதிக அர்த்தமுண்டு
நாம், நம் வாழ்க்கை முழுவதையும், அந்த ஆனந்த மையத்தை விட்டு விலகி ஓடுவதிலேயே கழித்துவிடுகிறோம். நம்முடைய புலன்கள், நம்மை உலகாயதமான பொருட்கள் இருக்கும் வெளி எல்லையை நோக்கி எடுத்துச்செல்கின்றன. நம்முடைய உள்ளுலக மையம் வெறுமையாக இருக்கிறது. அதுவே சூன்யம், அதுவே பூரணமும்கூட!
அது தனக்குள் முழுமையாக, ஆனந்தத்திற்கு மேற்பட்ட எதுவும் தேவைப்படாத நிலையில் இருக்கிறது. ஆயினும் உலகாயதமான வெளிவட்ட எல்லை எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. அங்கு எதுவுமே நிலையானது இல்லை. பொருட்கள், அவை அவையாகவே இருந்தாலும், அவற்றைப் பற்றிய நம்முடைய கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த எல்லையைத்தான் மாயா - கற்பனை, மற்றும் தமஸ் - அறியாமை என்கிறோம்.
நம்முடைய ரஜோ நிலை, நோக்கமற்று இருக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு, நோக்கத்தை அறிமுகப்படுத்தத் தூண்டுகிறது. இது நம்மை மையத்தில் இருந்து விலகச்செய்து, எல்லையற்ற இருள்தன்மையுடைய தமஸ் மற்றும் மாயையை நோக்கி இட்டுச் செல்கிறது.
ரஜஸ் நம்மை தமஸுக்குள் செலுத்துகிறது. எதிர்த்துப் போராடும் தன்மை, தீவிர உணர்ச்சி, பந்தம் மற்றும் வெறுப்பு ஆகியவை நம்மைச் சிறிது சிறிதாக, மதிமயக்கம் மற்றும் அறியாமை நோக்கி அழைத்துச் செல்கிறது.
ஆனால், அவ்வப்போது பளிச்சிடும், நம்
அறிவாற்றலின் ஒரு சிறிய ஒளிக்கீற்று,
நம் வாழ்க்கை இந்த வழியில் வாழ்வதற்கு
அல்ல என்பதைச் சொல்கிறது.
கற்பனைகளைவிட வாழ்க்கைக்கு அதிக
அர்த்தம் உண்டு என்று சொல்கிறது.
> நம்முடைய மையமே,
> நம்முடைய
> உண்மையான இயல்பு.
உடனே நாம் தேடத் துவங்குகிறோம். நாம் நம்முடைய உண்மையான இயல்பைத் தேட ஆரம்பித்தவுடன், நாம் நம்முடைய மையத்தை நோக்கி, ஆனந்தத்தின் மையத்தை நோக்கி நகர்கிறோம். அதன்பிறகு ஏதோ ஒரு விஷயம் வெளியுலகில் மீண்டும் நம்மைக் கவர்கிறது. மீண்டும் நாம் வெளி எல்லையை நோக்கி நகர்கிறோம்.
நாம் தொடர்ந்து உள்ளேயும் வெளியேயும், அதாவது மையப்பகுதியிலிருந்து புற எல்லைக்கும், புற எல்லையிலிருந்து மையத்திற்கும் சென்றுகொண்டு இருக்கிறோம்.
நாம் விசித்திரமானவர்கள்!

அதனால்தான் நான் மனிதர்களை விசித்திரமானவர்கள் என்று அழைக்கிறேன். அவர்களால் மையத்திலும் இருக்கமுடியாது. புற எல்லை விளிம்பிலும் இருக்க முடியாது. அவர்கள் இடைப்பகுதியில் இருந்துகொண்டு, தொடர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் முழுமையான பைத்தியக்காரர்களும் இல்லை; அதே சமயம் தங்களுடைய தெய்விகத் தன்மை யில் நிலைகொண்டவர்களும் இல்லை.
ஸத்வ குணத்தால், நம்முடைய மையத்தை நோக்கிய, நம்முடைய உண்மையான ‘நான்’ என்னும் உணர்வு நோக்கிய இயக்கம் நிகழ்கிறது.
ரஜோ குணத்தால் வெளியுலக எல்லையை நோக்கிய இயக்கம் நிகழ்கிறது.
நாம் புற எல்லையின் விளிம்பில் நிலைகொண்டோமானால், நாம் தமஸால் பீடிக்கப்பட்டு இருப்போம். நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம்.
நாம் உள்மையத்தில் நிலைகொள்ளும்பொழுது, நாம் மூன்று குணங்களைத் தாண்டிய நிலைக்குச் செல்கிறோம். நாம் த்ரி குண ரஹிதம் ஆக, மூன்று குணங்களையும் தாண்டிய தெய்விகமானவர்களாகிவிடுவோம்.
கேள்வி : மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள் கிருஷ்ணர் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். மறுபிறப்பை ஏற்றுக்கொள்ளாத மத நம்பிக்கையினை உடையவர்கள் என்ன செய்வார்கள்?
கீதையில் கிருஷ்ணர், ஹிந்துக்களுக்கு மட்டும் இதைப் பேசவில்லை. இந்தப் பிரபஞ்ச குரு, மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை விலக்கவில்லை. அவர் ஆன்மிக ஸத்யத்தை, பிரபஞ்சத்தின் ஸத்யத்தை, எல்லோருக்குமான ஸத்யத்தை உரைக்கிறார்.
முதலில் நாம், இந்த ஸத்யங்களை வெறுமனே 'கருத்துக்கள்' என்ற நிலைக்குத் தாழ்த்தாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஸத்வம் என்றால் நான் கடவுளாக மறுபிறப்பெடுப்பேன் என்று அர்த்தம்.
ரஜஸ் என்றால் நான் மனிதனாக மறுபிறப்பெடுப்பேன் என்று அர்த்தம்.
தமஸ் என்றால் நான் ஒரு மிருகமாக மறுபிறப்பெடுப்பேன் என்று அர்த்தம்.
இவை அனைத்தும் உருவகப்படுத்தப்பட்ட ஆன்மிக ஸத்யங்கள். விஞ்ஞான பூர்வமான கருத்துக்கள் அல்ல.
கிருஷ்ணர் சொல்கிறார், உங்களின் குணங்களின் வெளிப்பாடான வாஸனா எனப்படும் உங்கள் இயல்பு அடுத்த ஜென்மத்திற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. நீங்கள் தெய்விகமானவர்களாகவோ அல்லது மிருகமாகவோ இந்த மனித உடம்பிலேயே இருக்க முடியும். அதற்கென பிரத்யேகமாக உங்களுக்குச் சிறகுகள் முளைக்க வேண்டாம். அல்லது நீங்கள் பன்றியாக மாறவேண்டாம்.
இரண்டாவது, மறுபிறப்புக்கொள்கையை மறுக்கும் மதங்கள், மதத்தைத் தோற்றுவித்த குருவினுடைய போதனைகளைப் பின்பற்றுவது இல்லை. அவர்கள், மக்களை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வருவதற்காக, அந்த குருமார்களின் ஆன்மிகப் போதனைகளையே மாற்றி விளக்குகின்றனர்.
மதம் - அறியாமையிலிருந்து விடுபட உதவிட வேண்டும்
அனைத்து மத அமைப்புகளும் சொர்க்கத்தையும் நரகத்தையும் ஊக்குவிக்கின்றன. ஏனென்றால் அவர்கள் அதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும்.
நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களை இமயமலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது, நாங்கள் கேதார்நாத், மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித கோயில்களுக்குச் செல்வதுண்டு. அங்கு என்னை கர்ப்பக்ருஹத்திற்குள் செல்ல அனுமதிப்பார்கள். ஆனால், அங்கிருக்கும் அர்ச்சகர்கள் இதை விரும்புவதில்லை.
> மக்கள் இறப்பைப் பற்றிப்
> பயப்படுவதினால்
> மதங்கள் கட்டுப்பாடுகளை
> விதிக்கின்றன.
ஏனென்றால், “அர்ச்சகர்களில் பலர் கடவுள் பெயரால் பணத்தைப் பிடுங்குகிறார்கள்; அதற்குப் பதிலாகத் தெருக்களில் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்,” என்று நான் மக்களிடம் சொல்வதால், அது அவர்களுடைய வருமானத்தைக் கெடுக்கிறது.
இந்த அர்ச்சகர்கள், உங்களுடைய முன்னோர்கள் நற்கதியடைய வேண்டுமானால், கோவிலுக்கு ஒரு பசுவைத் தானமாக அளியுங்கள். அதற்கு 200 டாலர்களைக் (இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 ரூபாய்) கொடுங்கள்,” என்று சொல்கிறார்கள்.
பிறகு நீங்கள் கடவுளை வழிபடத் தொடங்கிய பிறகு, இடையில் உங்களைத் தொகையைச் செலுத்தச் சொல்கிறார்கள். நீங்கள் அதைக் கொடுக்காவிட்டால், அவர்கள், “உங்களுடைய முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். நீங்கள் நரகத்துக்குச் செல்வீர்கள், உங்கள் குழந்தைகள் நரகத்திற்குச் செல்வார்கள்,” என்று உங்களைச் சபிக்கத் தொடங்குவார்கள். நீங்கள் அதை, 200 அமெரிக்க டாலர்களைக் கொடுத்து நிறுத்திவிட முடியும்.
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு உண்மையான பசு கூட இருப்பதில்லை. பசு இருப்பதாக பாவனை மட்டுமே செய்யப்படுகிறது!
அப்படியே அவர்கள் உங்களுக்கு ஒரு பசுவைக் காண்பித்தால்க்கூட, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், அதே பசு, ஆயிரம் முறைக்கும் மேலாக, உங்களுக்கு முன் மற்றவர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருக்கும். இந்த மனிதர்கள் வால் ஸ்ட்ரிட் (Wall Street) தொழிலதிபர்களை விட பொருளீட்டத் தெரிந்தவர்கள்.
மக்கள் இறப்பைப் பற்றிப் பயப்படுவதினால் மதங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. சிலர் வலிகளைக் கண்டு பயப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலானோர்க்கு, மரணத்திற்குப் பின் என்ன நிகழுமோ என்ற பயம்தான் இருக்கிறது. அவர்கள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாததினால் பயப்படுகிறார்கள்.
யாராவது ஒருவர் அவர்களிடம், "நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் சந்தோஷமான இடத்திற்குச் செல்லலாம்," என்று சொன்னால், நிம்மதி அடைகிறார்கள். முடிவில் அவர்கள் எங்குச் செல்வார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமே அவர்களிடம் இல்லை. ஆயினும் அவர்கள், எதையாவது நம்பவேண்டிய ஆழமான தேவையில் இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு, அவர்களுடைய மதம் மட்டுமே ஒரே வழியாகிவிடுகிறது.

