KAILASA Library/பகவத்கீதை/நாம் இங்கிருந்து எங்கே செல்கிறோம்?Sign in
பகவத்கீதை

நாம் இங்கிருந்து எங்கே செல்கிறோம்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் உலகங்களுக்குச் செல்கிறார்கள்; இரஜோ குணத்தில் வாழ்பவர்கள் பூமியைச் சார்ந்த உலகங்களில் வாழ்கிறார்கள்; தமோ குணத்தில் வாழ்பவர்கள் கீழ் உலகங்களுக்குச் செல்கிறார்கள்.

எல்லாச் செயல்களிலும் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றும், பரம்பொருள் இம்முக் குணங்களையும் கடந்தவர் என்பதையும் உணரும் ஒருவர் என் தெய்வீக நிலையை உணர்ந்துகொள்ள முடியும்.

மனித உடலில் இருக்கும் ஒருவர், இம்முக் குணங்களைக் கடக்க முடிந்தால், அவர் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் துக்கங்களிலிருந்து விடுபட முடியும். இந்த வாழ்க்கையிலேயே அமிர்தத்தை ருசிக்க முடியும்.

இந்தக் கணத்தில், உங்களின் குணம் என்ன?

முக்திக்கான சாவியை கிருஷ்ணர் இங்கு வழங்குகிறார். இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்கள், இந்த குணங்கள் ஏற்படுத்தும் செயல்களைக் கடந்தவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக, உலகத்தில் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள். இது, குருவிலிருந்து வருகின்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இது, ஒரு உத்திரவாதம்.

இந்த வார்த்தைகளே ஒரு சிறந்த நுட்பம்தான்.

> இந்த மூன்று குணங்களைக்
> கடந்து செல்பவர்கள்,
> பிணைப்புகளிலிருந்து
> விடுபட்டு, சுதந்திரமாக,
> உலகத்தில் ஆனந்தத்தை
> அனுபவிப்பார்கள்.

முதல்படி: நம்முடைய ஒவ்வொரு செயலும், மூன்று குணங்களில் - அதாவது ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய ஏதோ ஒன்றிலிருந்து எழுகிறது.

இரண்டாவது படி: ஒரு குறிப்பிட்ட செயல், எந்த குணத்திலிருந்து எழுகிறது என்று புரிந்துகொள்வதும் மற்றும் அந்த குணம், துல்லியமாக நமக்கு என்ன செய்கிறது என்று புரிந்துகொள்வதும்தான்.

மூன்றாவதுபடி: தமோ, இரஜோ குணங்களிலிருந்து ஸத்வ குணத்திற்குச் செல்வது. இறுதியாக, நாம் ஸத்வ குணத்தையும் கடந்து நிர் குண நிலைக்குள் நுழைகிறோம்.

நாம் எதைச் செய்தாலும், நமக்கு எது நடந்தாலும், நாம் நம்மை இயக்குகின்ற குணத்தைப் பற்றிய விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம்முடைய செயல் கற்பனையாக இருந்தால், நாம் தமஸிலிருந்து செயல்படுகிறோம்; பயத்தினாலும் பேராசையினாலும் செயல்பட்டால், நாம் ரஜஸிலிருந்து செயல்படுகிறோம். நாம், நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளாலும் பாதிக்கப்படாமல், பிணைக்கப்படாமல் இருந்தால், நாம் ஸத்வத்திலிருந்து செயல்படுகிறோம்.

பல மனோதத்துவ முறைகள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாகத் தரப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு மனோதத்துவ முறை சொல்கிறது: மக்கள், வயது முதிர்ந்தவர்கள், பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் என்று மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்துதான் செயல்படவேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள், தீர்ப்பளிக்காமல் எதையும் ஏற்றுக் கொள்பவர்களாகவும், பெற்றோர்கள், விமர்சிக்கும் தன்மை உடையவர்களாகவும், குழந்தைகள், தற்காத்துக் கொள்பவர்களாகவும் (defensive) இருக்கிறார்கள்.

இந்த மனோதத்துவப் பயிற்சியில், பெரும்பாலும், நாம் எந்தப் பாத்திரத்தில் இருந்து செயல்பரிகிறோம் என்பதைப் பற்றிய புரிதலைத் தந்து, நாம் செயல்பட வேண்டிய சரியான நிலையான வயது முதிர்ந்தவர்கள் (மனப்பக்குவமான வர்கள்) நிலைக்கு நம்மை உயர்த்துகிறார்கள். அதுவே நாம் செயல்பட வேண்டிய சரியான நிலை எனக் கற்றுத்தருகிறார்கள்.

விமர்சிக்கும் தன்மை உடைய பெற்றோர்களினால் வளர்க்கப்பட்டால், ஒருவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருந்துவிடுவார்.

கொள்கையளவில், இது, ஒரு நியாயமான வழிமுறையே. இது, கட்டுறு மனப்பாங்கினால் நம்மீது ஏற்படும் பாதிப்பைக் கருத்திற்கொள்கிறது. விமர்சிக்கும் தன்மை உடைய பெற்றோர்களினால் வளர்க்கப்பட்டால், ஒருவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருந்துவிடுவார். அவர், தொடர்ந்து பாராட்டுதலை எதிர்பார்ப்பார். அல்லது குறைந்தபட்சம் தம்மை யாரும் குறைசொல்லாமல் தற்காத்துக் கொள்வார்.

விமர்சிக்கும் பெற்றோர்கள் எல்லாம், நல்ல பெற்றோர்களாக அந்த நேரத்தில் இருந்தார்கள் என்று அர்த்தம் அல்ல. உண்மையில், பெற்றோர்கள் என்ற முகமூடி, அவர்களுக்குள் இருக்கும் குழந்தை நிலையை (தற்காத்துக்கொள்ளும் மனப்பான்மையை) மறைக்கிறது.

அதனால் ஒருவர், சில நேரங்களில் ஒரு பெற்றோராக மாறி, தம்மால் கட்டுப்படுத்த முடிந்தவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்கிறார்.

மற்ற நேரங்களில் அவர், தமையைத்
தற்காத்துக்கொள்ளும் ஒரு குழந்தையாக
மாறிவிடுகிறார்.

இந்த இரண்டு பாத்திரங்களிலிருந்தும் வெளிவருவதற்கு, நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிகளில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

> எதிர்மறையான
உணர்ச்சிகளை நீக்கி,
உணர்ச்சிகளைத்
தூய்மையாக்கும்
செயல்முறைகள்,
தற்காலிக நிவாரணத்தையே
தருகின்றன

இதனை, விழிப்புணர்வு நிலையில் செய்வது மிகக் கடினம்; விழிப்புணர்வற்ற நிலையில் செய்வது மிகவும் ஆபத்தனாது. இதனை, உயர் உணர்வு நிலையிலிருந்து அதாவது (Superconsious) த்யானப் பயிற்சிகள் மூலமாக, நம்முடைய நித்யானந்த ஸ்பூரண முகாமில் இருப்பதைப்போன்ற தியானப் பயிற்சிகள் மூலமாகச் செய்யவேண்டும்.

இதன்மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன்? ஸம்ஸ்காரங்களைப் பற்றி, நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் புதைந்திருக்கும் நினைவுப்பதிவுகள் பற்றி நாம் பேசினோம். அவை நம்மை தமோ, இரஜோ, ஸத்வ என்ற மூன்றில் ஏதாவது ஒரு குணத்தின் மூலமாகவோ அல்லது மூன்றின் கலவையாகவோ, சிந்திக்கவும் செயல்படவும் வைக்கின்றன.

நாம் கேட்டதற்கும், அதிகமாகவே பெறுவோம்

இந்த எண்ணங்களும், செயல்களும் மீண்டும் மீண்டும் நிகழும்பொழுது, ஸம்ஸ்காரங்கள் ஆழப் பதிகின்றன. இந்த நுட்பமான மன அமைப்பு வாஸனா, நம்முடைய மனஅமைப்பில் ஆழமாக உழப்படுகிறது. விழிப்புணர்வு, தர்க்கம் மற்றும் பாகுபடுத்தும் செயல்முறைகள் மூலம், இவற்றை எளிதாக அடையாளம் கண்டு, நீக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது.

அதனால்தான், எதிர்மறையான உணர்ச்சிகளை நீக்கி, உணர்ச்சி களைத் தூய்மையாக்கும் செயல்முறைகள் (catharsis), தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன. அடிப்படையான எதிர்மறை உணர்ச்சிகள் புதைந்தே இருக்கும். விழிப்பற்ற மனம் ஸம்ஸ்காரங்களை வெளிப்படுத்தும். ஆயினும் அதற்குப் பிறகு, அந்தச் செயல்முறை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.

அது ஒரு பண்டோரா பெட்டி (pandora's box). பண்டோரா பெட்டி என்பது கிரேக்க பழங்கதை மரபுப்படி, மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் ஒருசேர உள்ளடக்கிய ஒரு பெட்டி. அதைத் திறந்துவிட்டால் போதும், அதன்பிறகு நிகழ்வது, நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.

கிரியேடிவ் விஷீவலைசேஷன் (Creative Visualization), ஹிப்னாட்டிக் ரிக்ரஷன் (Hypnotic Regression), செல்ப் ஹிப்னாட்டிக் சஜெஷன் (Self Hypnotic Suggestion) போன்ற செயல்முறைகள் மிகவும் ஆபத்தானவை. அவை செயல்படாது என்று பொருள் அல்ல. அவை செயல்படும். ஆயினும் அதன் பிறகு நிகழ்வது, நம் கட்டுப்பாட்டில் இருக்காது.

அதனால்தான் இந்தப் பழமொழி சொல்லப்படுகிறது. ‘நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்; நீங்கள் அதை அடையலாம்; யாருக்குத் தெரியும், பிறகு அதை அடைந்ததற்காக நீங்கள் வருத்தப்படவும் செய்யலாம்.’

எனக்குத் தெரிந்த ஒருசிலர், இந்தச் செயல்முறைகளை உபயோகித்தனர். மற்றவர்களுக்கும் கற்றுத் தந்தனர். ‘இந்தச் செயல்முறைகள் அபாயகரமானவை’ என்று, நான் ஏன் சொல்கிறேன் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அப்போது அவர்களுக்கு மோசமான அனுபவங்கள் விளைந்திருக்கின்றன. ஆனால், ஏன் அப்படி விளைகின் றன என்பது தெரியவில்லை.

சில நாட்கள் கழித்து, நம்முடைய சில த்யான முகாம்களில் கலந்துகொண்ட பிறகே, இந்தச் செயல்முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்று உணர்ந்தனர். பிறகு இதைப்பற்றி விவாதித்தபொழுது, அவர்கள் என்ன நிகழ்ந்தது என்று புரிந்து கொண்டனர்.

நாம் கேட்டதற்கும், அதிகமாகவே
பெறுவோம். இது ஒரு வாடிக்கையாளர்,
உணவு விடுதிக்குள் நுழைந்து
உணவுப்பட்டியலில் இருக்கும் அனைத்து

நீங்கள் எதை
விரும்புகிறீர்கள் என்பதில்
கவனமாக இருங்கள்;
நீங்கள் அதை அடையலாம்;
பிறகு அதை
அடைந்ததற்காக, நீங்கள்
வருத்தப்படவும் செய்யலாம்.

உணவுப் பொருட்களுக்கும் ஆர்டர் செய்வது போலத்தான். அப்படிச் செய்தால் நாம் உண்டு முடித்து உணவு விடுதியை விட்டுக்கிளம்பும் போது, உணவுஉண்டதற்கான பில்லைக் கொடுக்கத்தான் செய்வார்கள். அப்போது நீங்கள், 'நான் இதற்கு ஆர்டர் கொடுக்கவில்லையே' என்று சொல்ல முடியுமா?

நாம் உணவைக் கொண்டுவரச் சொல்லும்பொழுதே, அதற்கான பில்லையும் கொடுப்பார்கள் என்று நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் விழிப்பற்ற செயல்முறையின்போது, நாம் பில்லைப் பற்றி நினைப்பதில்லை. நாம் தொடர்ந்து கொண்டுவரச் சொல்கிறோம்; ஆனால் பில் வரும்பொழுது, நமக்கு அது துன்பமான, மகிழ்ச்சியற்ற ஒரு அனுபவத்தையே தருகிறது.

விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்பற்ற நிலையிலோ பாவனை செய்வது, நம்மை ரஜஸிலிருந்தோ தமஸிலிருந்தோ வெளியேகொண்டு வராது.

அவ்வாறு செய்யும்போது, நாம் இன்னும் ஆழமாக, கற்பனை உலகமான தமஸுக்குள் இழுத்துச் செல்லப்படுவோம். ஸத்வ நிலைக்குச் செல்வதற்கும், ஸம்ஸ்காரங்களைக் கரைப்பதற்குமான ஒரே வழி, தியானத்தின் மூலமாக ‘உயர் உணர்வு நிலை’க்குச் செல்வதே. வேறு எந்த வழியிலும் நாமே இதை அடையமுடியாது.

உயர்ந்த உணர்வுநிலை பாவனையை, ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் செய்தால், ஸம்ஸ்காரங்களை, நினைவுப்பதிவுகளைக் கரைக்க முடியும். ஸம்ஸ்காரங்களின் மூலமாக வளர்த்துக் கொண்ட மன அமைப்பை, வாஸனாவை எரிக்க, இது ஒன்றே வழி.

உயர்ந்த உணர்வுநிலை பாவனை text frame

மற்ற நுட்பங்களெல்லாம் ஒரேயொரு
விஷயத்தை - கற்றுக்கொடுப்பவர்களுக்குப்
பணம் சம்பாதித்துக் கொடுப்பதைத்தான்
செய்கின்றன. யார் இதை நாடிச்
செல்கிறார்களோ, அவர்களை ஆழமான
சிக்கலுக்குள் மாட்டிவிடச் செய்கிறது.

அதனால் முதலில் உங்கள் எண்ணங்கள்
மற்றும் செயல்களைப் பற்றிய
விழிப்புணர்வோடு இருங்கள். அவை
எந்த குணத்திலிருந்து வருகின்றன என்று

அடையாளம் காணுங்கள். அது ஒரு
கற்பனையாக இருந்தால், தமஸில்
வேரோடியிருந்தால், கற்பனையைக் கீழே
போட்டுவிட்டு நிகழ்காலத்தில் உள்ள
நிஜத்தை நோக்கிச் செல்லுங்கள்.

நீங்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினை என்னவென்றால், கற்பனைகள்
அனைத்தும், நீங்கள் வாழ்க்கையை
வாழும் விதத்தைவிட, சுவாரஸ்யமாக
இருக்கின்றன. அதனால்தான் நீங்கள்
நிஜத்தைவிட்டு விலகி, கற்பனையிலேயே
இருப்பதற்கு விரும்புகிறீர்கள்.

உங்கள் எண்ணங்கள்
மற்றும்
செயல்களைப் பற்றிய
விழிப்புணர்வோடு இருங்கள்.

நிஜத்தை நோக்கிச் செல்லுவதே, நிஜமான தீர்வு

அறியாமையிலிருந்து செய்யப்படும் செயல்கள், உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யப்போவதில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். கற்பனை பகுதிகளிலிருந்து உங்களை வெளிக்கொணர உதவும் இந்தப் புரிதலும் விழிப்புணர்வும், த்யானத்தின் விளைவாகவே நிகழமுடியும். அது சுயவிழிப்புணர்வுக்கு உங்களை வழிநடத்தும்.

அதேபோல நாம் ரஜஸால் செலுத்தப்படும்பொழுது நம்மைக் கவர்கின்ற சில விஷயங்களின் பின்னால் ஓடுகிறோம் அல்லது நம்மைத் தொந்தரவு செய்யும் விஷயத்திலிருந்து விலகிவிடுகிறோம். இது அபாயகரமான ஒரு சுழற்சி என்பதை நாம் உணரவேண்டும். பிணைப்பு மற்றும் வெறுப்பு, பேராசை மற்றும் பயம் ஆகியவற்றால் ஆன இந்தச் சுழற்சி அபாயகரமானது.

நாம் எதை மேலும் மேலும் விரும்புகிறோமோ, அது குறைந்த அளவு சந்தோஷத்தையே கொடுக்கும். நாம் எத்தைக் கண்டு பயப்படுகிறோமோ, அதை நோக்கித் திரும்பி, அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளாதவரை, பயம் நம்முள் வேரூன்றியிருக்கும்.

மீண்டும் த்யானம் ஒன்றுதான் அதற்கான திறவுகோல். அது, தவறான வழியில் நம்மைச் செலுத்துகின்ற விஷச் சுழற்சியைப் பற்றிய விழிப்புணர்வைத் தந்து, நாம் பற்றற்று இருப்பதற்கு உதவுகிறது.

மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்படுகின்ற தியான நுட்பங்கள் மூலமாக, நாம் நம்முடைய ஸம்ஸ்காரங்களை எரித்து, நம்முள் தற்பொழுது வேரூன்றி இருக்கும் குணங்களிலிருந்து வெளிவர முடியும். நாம் நம்முடைய நினைவுகளில் இருக்கும் உணர்ச்சிச் சுமைகளை விட்டுவிடுவதன் மூலம் பிணைப்புக்கள் அற்ற நிலைக்குச் செல்லமுடியும்.

தியானத்தின் மூலம், நம்முடைய எதிர்மறைப் பண்புகளைத் தூய்மையாக்கி, தடைகளை நீக்கி, நம்முடைய சக்கரங்களைச் சக்தியூட்ட முடியும். அதுதான் திறவுகோல்.

Illustration with text inside

நம்முடைய ஆனந்த ஸ்பூரண தியான முகாமில்
நம்முடைய ஏழு சக்கரங்களை, ஏழு சக்தி
மையங்களை சக்தியூட்டுவதற்கான தியான
நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

முதல் வகுப்பில், இதயப் பகுதியில் அமைந்துள்ள சக்ரமான அனாஹத சக்ரத்தை ஒருமுகப்படுத்துவதற்கான மஹாமந்த்ர தியானம் கற்றுத்தரப்படுகிறது. இது மிக வலிமையான தியான நுட்பம். இதைத் தினமும் பயிற்சி செய்தோமானால், சக்தியூட்டப்பட்ட அனாஹத சக்ரத்திலிருந்து, நாம் சுயநலமற் ற அன்பை வெளிப்படுத்த உதவுகிறது.

யாரேனும் ஒருவர் நம்முடன் தொடர்புகொள்ளும்பொழுதும் அல்லது நாம் அவர்களுடன் தொடர்புகொள்ளும்பொழுதும், ஏதேனும் ஒரு சக்தி மையத்திலிருந்தே தொடர்பு நிகழ்கிறது.

ஒவ்வொரு சக்ரமும் அதற்கே உரிய ஒவ்வொரு உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது அடைபட்டிருக்கிறதா அல்லது சக்தியூட்டப்பட்டு இருக்கிறதா என்பது, அதனனுடைய விழிப்புநிலையை பொறுத்து இருக்கிறது.

மற்றவர்களுடைய புன்னகை உங்களுக்குத் தேவையில்லை

அநாஹத சக்ரம், நாம் மற்றவர்களிடமிருந்து அன்பு என்ற பெயரில் ‘கவனத்தை’ எதிர்பார்க்கின்றபொழுது, அடைபட்டு விடுகிறது.

பொதுவாக, நாம் நம்பிக்கையிழந்த நிலையில், மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்க்கிறோம்; நாம் மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படுகிறோம்.

அநாஹதம் சக்தியூட்டப்பட்ட பிறகு, நாம் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துகிறோம். நாம் அங்கீகாரத்திற்காக, மற்றவர்களைச் சார்ந்து இருக்கமாட்டோம். நம்முடைய நாளை சந்தோஷமாகக் கழிப்பதற்கு, மற்றவர்களுடைய புன்னகை நமக்குத் தேவை இருக்காது.

நம்மை ஆனந்தமாக வைத்துக்கொள்வதற்கும், மற்றவர்களுக்கும் அதை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்வை வளப்படுத்துவதற்கும் தேவையான புன்னகையை, நமக்குள்ளேயே கொண்டிருப்போம்.

எந்த உணர்வுநிலையில் ஒருவர் நம்மை நெருங்கி வருகிறார் என்பதை கருத்திற்கொள்ளாமல், அவர் கோபம், ஆசை, பயம், கவலை, கவனத்தேவை, பொறாமை, அஹங்காரம் அல்லது திருப்தியில்லாத் தன்மை - இவற்றில் எந்த உணர்வுடன் இருந்தாலும், திறந்த மனத்துடன் அநாஹதத்திலிருந்து பதிலளியுங்கள்.

நிபந்தனையற்ற அன்புடன் பதிலளியுங்கள். அதுமட்டுமே நாம் செய்ய வேண்டியது. அவ்வாறு நாம் செய்யும்பொழுது, நம்முடைய வினாவிற்கும் மற்றவர்கள் தங்களுடைய அநாஹதத்திலிருந்து பதிலளிப்பதைக் காண்பீர்கள். முதலில், இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முக்கியமாக, நீங்கள் யாரை மிக உண்மையாக நேசிக்கிறீர்களோ, யாருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவர்களுடன் நிபந்தனையற்ற அன்புடன் இருப்பது மிகக்கடினம்.

நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம், ஒரு முகத்திரையைப் போட்டுக் கொண்டு, புன்னகைத்து, அன்பு செலுத்துவதுபோல நடிப்பது மிகவும் சுலபம்.

உலகத்தையே நேசிப்பது சுலபம். ஏனென்றால் அதற்கு முகம் கிடையாது. நம்முடைய அண்டை வீட்டுக்காரரை, முகம் தெரிந்தவரை நேசிப்பது என்பது கடினம்.

நம்முடைய வாழ்க்கைத் துணையுடன் நிபந்தனையற்று, திறந்த மனத்துடன் இருப்பது மிகவும் கடினமானது. இருந்தாலும், இதைச் செய்யும்போதுதான் நாம் நிறைவடைகிறோம்; முழுமையடைகிறோம்.

நம்முடைய மூலாதார சக்ரம், எல்லா சக்ரங்களுக்கும் அடிப்படை ஆதார மாகும். இது வாழ்வாதாரத்தின் அடிப்படை உணர்ச்சித் தூண்டல்களைப் பற்றியது. அதுவே நம்முடைய எல்லாக் கனவு, கற்பனைகளின், தமோ குணத்தின் ஆணி வேராகும்.

நம்முடைய தமஸ், பேராசை, காமம், குரோதம் மற்றும் குற்றவுணர்ச்சி போன்றவை அடைபட்டிருக்கின்ற மூலாதார சக்ரத்திலிருந்து எழுகின்றன. மூலாதார சக்ரம், சக்தியூட்டப்பட்டு, அந்த அடைப்புகள் நீக்கப்பட்டால், நாம் தமஸிலிருந்து வெளிவருவோம். நாம் யதார்த்தத்தை நோக்கிச் செல்வோம்.

நம்முடைய வாழ்க்கைத்
துணையுடன்
நிபந்தனையற்று,
திறந்த மனத்துடன்
இருக்கும்போதுதான்
நாம் முழுமையடைகிறோம்.

ஒருவர் நம்மை அடைபட்ட மூலாதாரத்திலிருந்து அணுகினால், அவரிடம் பேராசை, கோபம், காமம் போன்ற தமோ குண வெளிப்பாடுகளை நாம் காண முடியும். இருந்தாலும், அவருக்கு நாம் நிபந்தனையற்ற அன்புடன், நம்முடைய அநாஹதத்திலிருந்து பதிலளிக்க முடியும்.

அடைபட்ட ஸ்வாதிஷ்டான சக்ரம்தான், எல்லாப் பயங்களுக்கும் மற்றும்

பாதுகாப்பின்மைக்கும் வேராகும்.
மணிபூரக சக்ரம், கவலைகள் மற்றும்
மனஅழுத்தம் ஆகியவற்றின் சிம்மாசனம்!

அநாஹதம் கவனத் தேவையினாலும்,
தீவிரமான அங்கீகாரத் தேவையினாலும்
அடைபடுகிறது.

விசுத்தி சக்ரம், ஒப்பிட்டுப்பார்த்தல் மற்றும் பொறாமையினால் அடைபடுகிறது.

ஆஜ்ஞா சக்ரம், அஹங்காரத்தினால் அடைபடுகிறது.

விழிப்பூட்டப்பட்ட
அநாஹத சக்ரத்திலிருந்து
பதிலளிப்பதற்கான
விருப்பத் தேர்வு
நம்மிடம் இருக்கிறது.

ஸஹஸ்ரார சக்ரம் திருப்தியில்லாத் தன்மையினால் அடைபடுகிறது.

ஒருவருக்கு எந்த சக்தி மையம் அடைபட்டு இருக்கிறது என்பது, அவர் நம்மை நாடி வரும்பொழுதே, நமக்குத் தெரியவந்துவிடும். எந்த உணர்வில் அவர்கள் நம்மை அணுகினாலும், அதைக் கருத்திற்கொள்ளாமல், விழிப்பூட்டப்பட்ட அநாஹத சக்ரத்திலிருந்து பதிலளிப்பதற்கான விருப்பத் தேர்வு நம்மிடம் இருக்கிறது.

ஒருமுறை, ஹாலிவுட் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் என்னிடம், 'அனைத்து திரைக் கதைகளுமே, சக்ரங்களில் இருக்கின்ற உணர்ச்சி அடைப்பை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படுகின்றன' என்று சொன்னார்.

இந்த சக்ரங்களின் அடைப்பினால் நம்முடைய நிஜ வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்முடைய கற்பனை உலக வாழ்க்கைகூட பாதிக்கப்படுகிறது.

சக்ரங்களையும் அதனுடைய உணர்வு அடைப்புகளையும் புரிந்துகொள்வதன் மூலம், நம்முடைய குணங்களைப் புரிந்துகொள்ள முடியும். நம்முடைய குணங்களைப் புரிந்துகொள்வதுதான், ஆனந்தத்திற்கான வழியைக் கண்டறிந்து, அதன் கதவுகளைத் திறப்பதற்கான ஒரேவழி.

ஒரு விதையாக, ஞானகுரு என்னும் மண்ணில் விழுங்கள்

கேள்வி: நாம் ஆன்மிக வளர்ச்சி அடைவது எப்படி? மனிதர்கள் வினோதமானவர்கள், அவர்கள் தொடர்ந்து உள்நோக்கிச் செல்ல முயன்றுகொண்டும், வெளியுலகை நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர் என்று நீங்கள் சொன்னீர்கள். உள்முகமாகச் செல்வதற்கான வழி என்ன?

இந்தக் கேள்வி மிக முக்கியமான கேள்வி. நீங்கள், 'நான் உள்ளுலகை நோக்கிச் செல்ல வேண்டும்; நான் வெளியுலகை நோக்கி இழுக்கப்படும்போது, பிரச்சினைகளுக்கு உள்ளாகிறேன்' என்ற புரிதலே, உங்களை உள்ளுலகை நோக்கிச் செலுத்துவதற்குப் போதுமானது.

வெளியுலகப் பயணம் உங்களை நிறைவுறச் செய்யாது. மேலும் அது உங்களை அறியாமை என்ற புதைகுழியில் இட்டு, மனச்சோர்வுக்கு இழுத்துச்சென்றுவிடும் என்ற முழுமையான விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தாலே போதும், அது உங்களை மையத்தை நோக்கி எடுத்துச் சென்றுவிடும்.

மையத்தை நோக்கிச் செல்லும் வேகத்தை, தியான நுட்பங்களின் மூலமாக அதிகப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி நிறைய பேசலாம். ஆனால், அது அவசியமற்றது. மையத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்ற உணதல்தான் மிக முக்கியமானது.

ஞானகுருவினுடைய எல்லையற்ற அன்பும், வழிகாட்டுதலும், அவரின் ஊக்குவித்தலும் உங்கள் பயணத்தை ஊக்கம் உடையதாக்கும். ஒரு சீடராக இருந்து, நீங்கள் மையத்தை நோக்கி மேற்கொள்ளும் பயணமே, சாத்தியமாகக் கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு பயணம்.

மனிதன், விதையாகப் பிறக்கின்றான். விதையில், நறுமணம் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால், அது, உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது. விதை வெடித்து, வளர்ந்து மரமாக வேண்டும். விதை, வசந்தகாலத்திற்காக, விழிப்புணர்வு ஏற்படுவதற்காகக் காத்திருக்க வேண்டும். ஒருநாள் திடீரென்று விதை வெடித்து, மரமாக வளர்ந்து, பூக்களைத் தந்து, நறுமணத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு சீடனாக இருப்பது என்பது, நீங்கள் விதையாக, ஜீரூகுரு என்ற மண்ணில் வீழ்வதைக் குறிக்கிறது. நீங்கள் உங்களையே மண்ணில் கரைத்துக்கொள்கிறீர்கள்.

சீடராக இருப்பதற்கு, உயிர்விடவும் தயாராக இருக்கும் அளவிற்குப் போதுமான நம்பிக்கை தேவைப்படுகிறது. விதையானது, மரமாக வளர்வதற்கு முன்னால் இறக்க வேண்டும்.

ஒரு சீடராக இருந்து, நீங்கள் மையத்தை நோக்கி மேற்கொள்ளும் பயணமே, சாத்தியமாகக் கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு பயணம்

அதனால் முதல் தேவை, ஜீரூகுருவிடம்
நம்பிக்கை வைக்கவேண்டும்;
இருப்புத்தன்மையில் நம்பிக்கைகொள்ள
வேண்டும்.

இரண்டாவது தேவை என்பது, அனைத்து
சாத்தியமான வழிகளிலும் தொடர்ந்து
வளர்வது. தொடர்ந்து மேற்கொண்டு
பயணிக்காமல், அதே இடத்தில் மக்கள்
சிக்கிக்கொண்டு நின்றுவிடுகின்றனர்.
அவர்கள் சிறிதுதூரம் சென்றபிறகு,
'இதுதான் இறுதியானது; இதற்குமேல்
வாழ்க்கையில் எதுவும் இல்லை' என்று
நினைக்கிறார்கள். வாழ்க்கைக்கு முடிவு
என்பதே இல்லை.

வாழ்க்கை என்பது முடிவற்ற ஒரு புனிதப் பயணம். நீங்கள் அதற்குள் ஆழமாகச் செல்லும்பொழுது, பல ஆச்சரியங்களைச் சந்திக்கநேரிடும். அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்பொழுது, நீங்கள் மிகவும் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விடுவீர்கள்; தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். இது, ஒரு முடிவற்ற செயல்முறை.

ஆகவே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம்: வளர்ந்துகொண்டே இருங்கள். அன்பில், ஆனந்தத்தில் மற்றும் தியானத்தில் வளர்ந்து கொண்டே இருங்கள். சாத்தியமான அனைத்து

வழிகளிலும்... கூர்ந்து அறியும்திறன்,
விழிப்புணர்வு மற்றும் படைக்கும் ஆற்றல்
ஆகியவற்றில் வளர்ந்துகொண்டே
இருங்கள்.

மூன்றாவது விஷயம் என்பது,
காத்திருத்தல். ஏனென்றால், ஆன்மிக
வாழ்க்கைக்கு பொறுமையின்மை ஒரு
இடயூறு. வளர்வதற்கான் எல்லா முயற்சி
களையும் எடுக்கவேண்டும். அதற்குரிய
வழியில் விரிவடைதலும் மலர்தலும்
நிகழ்வதற்குப் போதுமான அவகாசம்
அளியுங்கள்.

> கடவுள் அன்பு செலுத்துகிறார்
> என்பதன் பொருள்,
> மொத்த பிரபஞ்ச இருப்பே
> உங்களை நேசிக்கிறது
> என்பதாகும்.

சரியான நேரம் வராதவரை எதுவும் நிகழ்வதில்லை. அந்தச் சரியான நேரம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. வசந்த காலத்திற்காகக் காத்திருங்கள். மரத்திலிருந்து மலர்களை வலுக்கட்டாயமாக வரவழைக்க முடியாது. அவை எப்பொழுது மலரவேண்டுமோ, அப்பொழுதுதான் மலரும்.

ஆன்மிகத்தில் மலர்தல் என்பது, நிர்பந்தப்படுத்தக்கூடிய ஒரு செயல்முறை அல்ல. அதற்குப் பொறுமை தேவைப்படுகிறது.

இந்த மூன்று விஷயங்களும் நிறைவேறிவிட்டால், நீங்கள் மலர்ந்து மணம் வீசும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

கடவுளுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது

இது உங்கள் மனத்தில் ஆழமாகப் பதியவேண்டும். இதுதான் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படை தேவை. கடவுள் நம்மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதை உணர்ந்துவிட்டாலே போதும், நம்முடைய அச்சம் மறைந்துவிடும்; மனவேதனை கரைந்துவிடும். நாம் கடவுளுடைய அன்பை ஆழமாக உணர்கின்ற அளவுக்கு, திறந்த மனமுடையவர்களாகிறோம்.

பயம், நம்மை இறுக்கமாக்குகிறது. அன்பு, நம்மை மலரச் செய்கிறது. கடவுள் அன்பு செலுத்துகிறார் என்பதன் பொருள், மொத்த பிரபஞ்ச இருப்பே உங்களை நேசிக்கிறது என்பதாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரங்கள், மக்கள் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் அன்பு உங்கள்மீது பொழியப்படுகிறது. ஆன்மிகப் பாதையில் நுழைவது என்பதே கடவுள் எடுத்த முடிவு. அது உங்களுடையது அல்ல; கடவுளுடையது.

மிகவும் பழைமையான சொற்றொடர் ஒன்று உண்டு: மனிதன், கடவுளைத் தேடுவது என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, கடவுள் ஏற்கனவே, அந்த மனிதனைத் தேடுவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவருடைய முடிவு இல்லாமல், நம்முடைய முடிவு என்பது ஆற்றலற்றதாகிறது.

கடவுள் முடிவெடுக்கும்பொழுதுதான், நம்முடைய முடிவுகளுக்கும் நிறைவேறக்கூடிய ஆற்றல் உண்டாகிறது. நம்முடைய முடிவுகள், எப்பொழுதுமே பிளவுபட்டதாகவும், தடுமாற்றங்களுடன் கூடியதாகவும் இருக்கிறது. அவை, பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற முடிவுகளாக இருக்கின்றன.

அதாவது இன்றைக்கு சிறுபான்மை முடிவுகளாக இருப்பவை, நாளை பெரும்பான்மை முடிவுகளாக ஆகிவிடுகின்றன. இன்று பெரும்பான்மை முடிவுகளாக இருப்பவை, நாளை பெரும்பான்மை முடிவுகளாக இருப்பதில்லை. நம்முடைய முடிவுகள், நம்பத் தகுந்தவை அல்ல; அவை முழுமையானவையும் அல்ல.

கடவுள் முடிவெடுக்கும்பொழுதுதான், நம்முடைய ஆழமான உள்ளத்தில் (Inner most core) எடுக்கப்படும் முடிவுகளும் பொறுப்புகளும் முழுமையாக இருக்கும். அதில் ஏற்படும் ஈடுபாடு மாற்றமுடியாதது. நாம் திரும்பிச் செல்ல முடியாது. அந்த முடிவு, நம்மைவிட பெரியதாக இருக்கும். அது, நம்மை ஆளுகிறது. அதனால் நாம் மூழ்கடிக்கப்படுகிறோம். அப்பொழுதுதான் உண்மையான சி ஷ்ய உறவு பிறக்கிறது. கடவுள் நமக்காக முடிவெடுக்கவில்லையென்றால், நம்முடைய முடிவுகள் எல்லாம் குறைந்த மதிப்புடையனவே.

கடவுள்தான்
உங்களைத்
தேர்ந்தெடுக்கிறார்!

நினைவில்கொள்ளுங்கள், இது உங்களுக்குப் பதிலாக, கடவுள் எடுத்த முடிவு. நீங்கள் ஒரு ஊடகம் மட்டும்தான். அவருடைய தீர்மானங்களை வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கான ஒரு வாகனம். அதன்பிறகு, விஷயங்கள் தானாகவே தீவிரத்துடன், ஆழத்துடன் மற்றும் வேகத்துடன் நிகழத்துவங்கும்.

அவ்வாறு நிகழத்துவங்கும்பொழுது, 'என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஏன் அது நிகழ்கிறது' என்று தொடர்ந்து ஆச்சரியத்திலேயே இருப்போம். ஏனென்றால் அதற்குத் தகுதியானவர்களாக நம்மை நாமே உணர்வதில்லை. ஆனாலும் அது எப்படியோ நிகழ்கிறது.

ஆனந்தமான முயற்சிதான் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. சாதாரணமான முயற்சி வேலைசெய்யாது. அது, ஆனந்தமயமான முயற்சியாக இருக்கவேண்டும். நம்முடைய முயற்சி ஆனந்தமயமானதாக ஆகும் அந்தக் கணமே, அதற்கு கடின உழைப்பு தேவைப்படுவதில்லை. முயற்சி ஆனந்தமயமானதாக இருக்கும்பொழுது, அது கடினமானதாக இருப்பதில்லை.

அது, ஆனந்தமாக இல்லாதபொழுது, அது கடுமையான முயற்சியாகிறது. கடவுளுடைய உலகத்திற்குள், ஆழமான அமைதியான மனநிலையில் மட்டுமே ஒருவரால் நுழையமுடியும். அவர் கண்டிப்பாக முயற்சி செய்யவேண்டும். அவர் ஒரு கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும்.

ஆனால், அவருடைய முயற்சி பிரத்யேகமானதாக இருக்கவேண்டும். அது, கடுமையானதாகவோ அல்லது இறுக்கமானதாகவோ இருக்கக்கூடாது. உண்மையைச் சொல்லப்போனால், அது ஒரு வேலையாக இல்லாமல், ஒரு விளையாட்டுபோல் இருக்க வேண்டும்.

அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்.
அதைக் கடமையைப்போல செய்யக்கூடாது.
விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல்,
வேலையை, அந்த வேலைக்காகவே செய்ய
வேண்டும். நாம் பக்குவமடையும்பொழுது,
அதன் பலன்கள் நம்மை வந்தடையும்.
அதைப் பற்றி யோசிக்கத் தேவை இல்லை.

அதனுடைய விருப்பத்திற்கு ஏற்ப நிகழும்.

இருப்புத்தன்மை நியாயமானது;
பாரபட்சமற்றது. அது உங்கள்
தகுதிக்குத் தக்கவாறு வழங்குகிறது; ஒரு
கணம்கூட காலதாமதம் செய்வதில்லை.
நீங்கள் அதற்குத் தகுதியானவராக
இல்லையென்றால், நீங்கள் எவ்வளவு
கடுமையாக முயற்சி செய்தாலும்கூட
நிகழாது.

உங்கள் வாழ்க்கையில்
ஜ்ஞான சத்குரு தோன்றுவது
என்பது ஒரு ‘அழைப்பு’.

சரியான முயற்சி என்பதே முயற்சியற்று நிகழும் ஒரு முயற்சியாகும். அதுவே மகிழ்ச்சி, அன்பு, மற்றும் ஆனந்தம். அதன்பிறகு அற்புதங்கள் நிகழத் துவங்குகிறது. நாம் அற்புதங்கள் நிகழ்த்தவதற்கு தகுதியானவர்கள். ஆயினும் நாம், அடிப்படையான நிபந்தனையை நிறைவேற்றுவதில்லை. இதுதான் அடிப்படையான நிபந்தனை. அதன்பிறகு, அற்புதங்களும் மற்ற எல்லாவற்றையும்போல சாதாரணமாஃகிவிடும்.

ஸத்யம், அழகானது!

உங்கள் வாழ்க்கையில் ஜ்ஞான சத்குரு தோன்றுவது என்பது ஒரு ‘அழைப்பு’. கடவுள் உங்களை அழைக்கிறார். அந்த அழைப்பை நீங்கள் கேட்டதே நல்ல விஷயம்!

தேடுதல் என்பதே கடவுளிடமிருந்து வரும் அழைப்புதான். மேலும் எல்லோருக்குமே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது! சூஃபி ஞானிகள் சொல்கிறார்கள்: நூறு நபர்கள் அழைக்கப்பட்டால், பத்து நபர்கள் மட்டுமே அந்த அழைப்பைக் கேட்கிறார்கள். தொண்ணூறு நபர்கள் கேட்பதேயில்லை.

பத்து சதவிகித மக்கள் மட்டுமே அதன்படி செயல்படுகிறார்கள், பதிலளிக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் பதிலளிப்பதே இல்லை. அதனால்தான், ஒரு சில மனிதர்களுடைய இருப்பு மட்டுமே, கடவுளின் சாட்சியாக இருக்க முடிகிறது. அதனால், சிலர் மட்டுமே ஒளியும், நறுமணமும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கிறார்கள், அது இவ்வுலகியல் வாழ்வைக் கடந்த நிலை.

அழகானவை அனைத்துமே ஸத்யத்தில்
வேரோடி இருக்கின்றன. 'ஸத்யம்
அல்லாதவை அழகு' என்பது
பொய்யானது. அது, ஸத்யத்தின் ஒரு
பகுதியாக ஆகாதவரை, அது ஒரு கனவு,
ஒரு கற்பனை அல்லது செயற்கையானது.
கவிஞர்கள், கனவுகளில் வாழ்கின்றனர்.

ஸத்யம் உருவாக்கப்பட முடியாது.

அவர்களுடைய பார்வையில் பார்க்கப்படும் அழகு, ஸத்யம் அல்ல. கவிஞர், அவருடைய தன்மையில் அழகை உருவாக்குகிறார். அவர், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர்தான். ஆனால், தீர்க்கதரிசிகள், ஸத்யத்தை உருவாக்குபவர்கள் அல்ல. ஸத்யம் உருவாக்கப்பட முடியாது.

நாம், அதை வெளிப்படுத்த மட்டுமே முடியும். அது ஏற்கனவே அங்கே இருக்கிறது. ஆனால், ஸத்யத்தை நாம் வெளிப்படுத்திய வினாடியே, உயர்ந்த அழகு, நமக்குள்ளும் வெளியிலும் வெடிக்கிறது. ஸத்யத்தின் அனுபவம், நம்மை அழகானவர்களாக மாற்றுகிறது. மேலும், முழு அனுபவத்தையும் பிரகாசமானதாக மாற்றுகிறது.

இதுதான், ஒரு கவிஞருக்கும் தீர்க்கதரிசிக்கும் உள்ள வித்தியாசம். கவிஞர், அழகைப்பற்றிக் கனவு காண்கிறார். தீர்க்கதரிசி, அதை உணருகிறார். கவிஞர், வெகு வெகுதொலைவிலேயே நின்று விடுகிறார்.

கவிஞர், 'அழகைப் பற்றி'ப் பேசுகிறார். 'அழகைப் பற்றி' மட்டுமே பேசுகிறார்; தீர்க்கதரிசி, 'அழகைப் பேசுகிறார்; 'அழகைப் பற்றி' அல்ல. அவர், ஸத்யத்தை உரைக்கிறார். ஸத்யம் அழகானது மற்றும் சிறந்தது.

தியானம், ஸத்யத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி. அதன்பிறகு இயல்பாகவே அழகும் வெளிப்படுகிறது. அழகு, ஸத்யத்தை ஒரு நிழலைப்போல பின்தொடர்கிறது.

இருப்புத்தன்மையை இரண்டு விதங்களில் வாழமுடியும், ஒன்று உரைநடையாக அல்லது கவிதையாக!

இவை இரண்டு மட்டுமே சாத்தியமான அணுகுமுறைகள். நாம் அதை, தர்க்கரீதியாக வாழலாம்; அப்போது அது உரைநடையாகிறது. அல்லது நாம் அதை, அன்பினால் வாழலாம், அப்போது அது கவிதையாகிறது!

நாம் அதைக் கணிதமாக வாழலாம். அப்போது அது உரைநடை! நாம் அதை அற்புதமாக வாழலாம், அப்போது அது கவிதை! நாம் வாழ்க்கையை கவிதையாக வாழ்ந்தால் மட்டுமே, நாம் கடவுளை வெளிப்படுத்துகிறோம்.

வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது ஆன்மீகம்!

கடவுளை நீங்கள் தர்க்கம்கொண்டு உணரமுடியாது. மேலும் கடவுள் இல்லாமல், வாழ்க்கைக்கு அர்த்தமோ, முக்கியத்துவமோ இல்லை. கடவுள் இல்லாத வாழ்க்கை ஒரு சுமையாகிவிடுகிறது. வாழ்ந்தாக வேண்டுமே என்று வாழும் ஒரு மனிதர், தற்கொலை செய்துகொள்வது தவறு என்று உணர்வதாலும், தற்கொலை செய்துகொள்வதற்குத் துணிச்சல் இல்லாததாலும் மட்டுமே வாழ்கிறார்.

சிலர், வாழ்க்கையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்; சில ர், உண்மையில் வாழவே இல்லை; சிலர், மெதுமெதுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு, வாழ்க்கையில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லை.

கவிதை இல்லாமல், இதயத்தில் எந்தவிதமான துணிச்சலான செயல்பாடுகளும் இருப்பதில்லை. அனைத்துச் செயல்களுமே உலகியல் ரீதியானவை. எதுவுமே புனிதமானதாக இருப்பதில்லை. நம் வாழ்க்கையை விட்டு, கோயில்கள் மறைந்துவிடுகின்றன. மிகப்பெரிய வணிக அங்காடிகள் மட்டுமே இருக்கின்றன.

வங்கி இருப்பு, அதிகாரம், பெருமை போன்றவற்றைப் பெற்றிருந்தாலும், நம்முடைய ஆழமான மையப்பகுதியில் ஏதோ ஒன்று நிறைவேறாமல், வெறுமையாக இருக்கிறது. வாழ்க்கை, ஒரு புண்ணாக மாறிவிடுகிறது. அது ஒவ்வொரு நாளும் பெரியதாகிக் கொண்டே இருக்கிறது.

கடவுளை, நீங்கள் தர்க்கம்கொண்டு உணரமுடியாது.

நாம் வாழ்க்கையை வேலைகளிலும்,
தொடர்ந்து கவலைப்படுவதிலும், போதை
வஸ்துகளிலும், பொருள்கள் வாங்கி
குவிப்பதிலும் மற்றும் காமத்திலும்
மூழ்கடிக்க விரும்புகிறோம். நாம் நம்முள்
அவ்வப்போது எழும் ‘நாம் எதையோ
இழந்து கொண்டிருக்கிறோம்’ என்ற
நினைவையும் உணர்வையும் மூழ்கடிக்க
விரும்புகிறோம்.

ஆனால் நம்மால் அதை மூழ்கடி க்க முடியவில்லை. அது தொடர்ந்து நம்முடைய கதவைத் தட்டிக்கொண்டும், அடிக்கடி நினைவில் வந்து, நம்மைத் துரத்திக்கொண்டும் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டிய மிக அவசியமான ஒன்று.

கார்ல் ஜங் (Carl Jung) என்னும் பிரபலமான மனோதத்துவ நிபுணர் சொல்கிறார்: “வாழ்நாள்முழுவதுமான என்னுடைய மருத்துவப் பணியில் நான் கவனித்தவரை, என்னிடம் வந்த நாற்பது வயதைத் தாண்டிய நோயாளிகளுக்கு, மனரீதியான சிகிச்சைத் தேவைப்படவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒருவித மதம் தேவைப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கைக்கு ஏதோ ஓர் அர்த்தம் தேவைப்பட்டது.”

ஆனாலும் மனோதத்துவத்தால் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்க முடியாது. அது சமுதாயத்தில் சில குறிப்பிட்ட சீரமைவுகளை, இசைவித்தலை ஏற்படுத்த முடியும். ஆனால், சமுதாயமே நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டள்ளது. அச்சமுதாயத்திற்கு ஏற்றவாறு நாமும் மாறுவது என்பதே நரம்புக் கோளாறை ஏற்படுத்திக்கொள்வதுதான். பைத்தியக்காரத்தனத்தை ஏற்றுக்கொள்வது போன்றதுதான்.

விஞ்ஞானி ஐன்ஸ்டின் சொல்கிறார்: “சமுதாயத்தின் கட்டுறுமனப்பாங்கிலிருந்து தப்பித்துக் கொள்பவரே, அதிபுத்திசாலி!” இது முற்றிலும் ஸத்யம்.

உளவியல், நாம், அடிமை வாழ்க்கையையும், ஒரேமாதிரியான வாழ்க்கைமுறையையும் மந்தத் தன்மையையும் ஏற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால், நமக்கு உதவும். இவற்றைச் சரிசெய்ய நமக்கு உதவாது. ஜங் அவர்களின் உள்நோக்கு பார்வை சரியானதே.

ஆன்மீகம் மட்டுமே உங்களைப் பூரணமாக்கும்

ஆன்மீகத் தேவை 42 வயதில் எழுகிறது. 14 வயதில் எப்படி காம உணர்வு எழுகின்றதோ, அதுபோல 42 வயதில் ஆன்மீகத் தேவை எழுகிறது. அது நிறைவேற்றப்படாவிட்டால், நாம் வேருடன் களையப்பட்டதைப்போல் உணருகிறோம். அதை ஆன்மீகத்தால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியும்.

ஆன்மீகத்திற்காக வாதம் செய்யவேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, இசையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அதைப் பற்றி நாம் வாதம் செய்வதில்லை. இசையினுடைய அழகை ஒருவராலும் எவருக்கும் நிரூபிக்க முடியாது.

அதேபோலத்தான், ரோஜாவை நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அதனுடைய அழகைப்பற்றி விவாதம்செய்ய வேண்டிய தில்லை. யாரோ ஒருவருக்கு ரோஜா அழகாக இல்லையென்பதால், ரோஜா எதையோ இழப்பதாக அர்த்தம் இல்லை; அவரும் பெரியதாக எதையும் இழந்துவிடமாட்டார்.

ஆனால், ஆன்மீகத் தேவையை நிராகரிப்பதன் மூலம் ஒரு மனிதன், இயற்கையுடனும் கடவுளுடனும் மற்றும் தன் சொந்த இயல்பான தெய்விதக் தன்மையுடன் ஒன்றியிருக்கும் பெரிய வாய்ப்பை இழக்கிறான்.

சாதுவாகவே, மனிதன் தன் விழிப்புணர்வற் இயல்புணர்ச்சிக ளுக்கும், உடல்கூறுக்கும், மனத்திற்கும் அடிமையாக இருக்கின்றான். இது பல பரிமாண அடிமைத்தனம். இந்த மொத்த அடிமைத்தனமுமே வேருடன் அழிக்கப்படவேண்டும். அதற்குப் பிறகுதான் விழிப்புணர்வு நிலை, அதனுடைய முழுமையான அழகுடனும் மேன்மையுடனும் பேரொளியுடனும் நறுமணத்துடனும் எழும்.

ஆன்மீகத் தேவையை நிராகரிப்பதன் மூலம் ஒரு மனிதன், தன் சொந்த இயல்பான தெய்விதக் தன்மையுடன் ஒன்றியிருக்கும் பெரிய வாய்ப்பை இழக்கிறான்.

விழிப்புணர்வு பெற்ற அனைவரும் த்யானத்தின் பாதையை பின்பற்றுகின்றனர். த்யானம் செய்யும்பொழுது, நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். கவனமுடன் இருக்கும்பொழுது, விழிப்புணர்வற் ற நிலை, தமஸ் ஒவ்வொரு நாளும் குறைகிறது. நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்கத் தொடங்கியவுடன் விழிப்புணர்வற்ற பகுதியின் எல்லை குறைகிறது; தமஸ் குறைகிறது.

எப்பொழுது நாம் நூறு சதவிகிதம் விழிப்புணர்வை அடைகிறோமோ, அப்போதே விழிப்பற்ற உணர்வுநிலை மறைந்துவிடும். விழிப்பற்ற உணர்வு நிலை மறைந்த பிறகு, இயல்புணர்ச்சி ரீதியான, உடல் ரீதியான, மனரீதியான அடிமைத்தனம் மறைந்துவிடும். எல்லாவிதமான அடிமைத்தனமும் விழிப்புணர்வு அற்ற நிலையில்தான் இருக்கிறது. விழிப்புணர்வு அற்ற நிலையை வெட்டுவதன்மூலம், நாம் வேரையே வெட்டுகிறோம்.

நமக்கு நாமே தலைவனாவதற்கு த்யானமே திறவுகோல்.

Hands playing a flute

குணங்களைக்

கடந்து செல்வது

Lord Krishna

14. 21 அர்ஜுனன் கேட்கிறார், இறைவா, இந்த குணங்களைக் கடந்து நிற்கும் ஒருவரை எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளலாம்? அவருடைய நடவடிக்கை எத்தகையதாக இருக்கும்? அவர் மூன்று குணங்களையும் எவ்வாறு கடக்கிறார்?

14. 22-25 இறைவன் கூறுகிறார்: யார் ஒருவர் ஒளியை (ஸாத்விகத்தை), பற்றுகளை (ரஜஸை), மாயத்தோற்றத்தை (தமஸை) அவை இருக்கும்பொழுது வெறுக்காமலும், அவை மறைந்துவிட்டால் ஏக்கம்கொண்டு கவலைப்படாமலும், குணங்களைக் கடந்த நிலையில் நிலைகொண்டு, குணங்கள் மட்டுமே செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு திடமாக இருக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, மண்ணையும், கல்லையும் மற்றும் பொன்னையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இருந்து, மரியாதையிலும் அவமரியாதையிலும் சமநிலை குலையாமல் இருந்து, நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தி,

பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே மூன்று குணங்களையும் கடந்தவராகக் கருதப்படுகிறார்.

ஞானிகளின் அசைவு, பிரபஞ்ச இருப்பின் ஆணைப்படியே!

மிகத்தெளிவாக ஜ்ஞான ஸத்குரு, நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறார். அவர், தவறாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத அல்லது தவறான விளக்கம் கொடுக்கப்படமுடியாத வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.

கிருஷ்ணர், மூன்று குணங்களையும் கடந்த ஒருவரது இயல்பையும், ஒருவர், மூன்று குணங்களின்பாதிப்பிலிருந்தும் விடுபட வேண்டுமானால், அதாவது த்ரிகுண ரஹிதனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறார்.

மூன்று குணங்களைக் கடந்த ஒருவர் அவற்றின் விளையாட்டால் பாதிக்கப்படமாட்டார். அவர் உணர்ச்சிகளின் விளையாட்டை கடந்தவராகிறார். என்ன நடந்தாலும், அதை அவர் சரியென்றே ஏற்றுக் கொள்வார். வெற்றியும் தோல்வியும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நண்பர்களும் எதிரிகளும் எந்த வித்தியாசத்தையும் அவரிடத்தில் ஏற்படுத்துவதில்லை. ஏழ்மையும் செல்வச்செழிப்பும் அவரிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

முழுமையான பற்றற்ற
தன்மைக்கு
ஒரு விஷயம்
தேவைப்படுகிறது.
அது,
முழுமையான நம்பிக்கையே!

இந்த மாதிரியான முழுமையான பற்றற்ற தன்மைக்கு ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது, முழுமையான நம்பிக்கையே! என்ன நிகழ்ந்தாலும், அது நடக்க வேண்டிய நிகழ்ச்சிதான் என்ற நம்பிக்கைகொள்ளும்பொழுது, எது நடந்தாலும், நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். நாம் முழுமையாக பற்றற்று இருப்போம். அதன்பிறகு எது நடந்தாலும், அது சரியாகவே இருக்கும். இப்படிப்பட்ட நம்பிக்கை, முழுமையான சரணாகதியிலிருந்து மட்டுமே ஏற்படும்.

நான் என்னுடைய சீடர்களிடம் சொல்வது இதுவே: "எனக்கென்று ஒரு வீடு இல்லை என்பதால்தான், நான் செல்லும் ஒவ்வொரு வீடும் என்னுடைய வீடாகிறது. நான் எங்கே தங்கினாலும், அது மரத்தடியாக இருந்தாலும் அல்லது திறந்தவெளியாக இருந்தாலும், அது என்னுடைய வீடுதான். நான்கு சுவர்கள், ஒரு கதவு மற்றும் ஒரு தாழ்ப்பாள், இவை ஒரு வீட்டை உருவாக்கிவிட முடியாது."

மக்கள் என்னிடம், நான் ஏன் நகைகள் அணிந்துகொள்கின்றேன், மேலும் ஏன் விதவிதமாக உடை அணிகிறேன் என்று கேட்பதுண்டு. அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது? இந்த உடலே என்னுடையது அல்ல; இந்தத் தோலே என்னுடையது அல்ல. அதன்மேல் நான் ஆடை, அணிகலன்களை அணிவதோ அல்லது அணியாமல் இருப்பத்தோ என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது?

ஞானமடைந்த ஆத்மாக்களுக்கு கடவுள் என்பது உண்மை. அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய இருப்புத்தன்மையின் உண்மைநிலை.

இதில் விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. மக்கள், மற்றவர்கள் அலங்காரமாக அணிந்திருக்கும் ஆடைகளை எப்படி இரசிக்கின்றனரோ, அதேபோல் நான் இந்த உடலில் போடப்பட்டிருக்கும் ஆடைகளையும் ஆபரணங்களையும் ரசிக்கிறேன். அவற்றிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

என்னுடைய ஒவ்வொரு அசைவும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஆணைப்படித்தான் நடக்கிறது. நான் என்னுடைய விரலைக்கூட, பிரபஞ்ச சக்தியின் உத்தரவில்லாமல் அசைக்க முடியாது.

பொதுவாக மக்கள் கடவுளைப் பற்றிப் பேசும்பொழுது, கடவுள் என்பது அவர்களுக்கு, சரியென்று நிரூபிப்பதற்கோ அல்லது தவறு என நிரூபிப்பதற்கோ இருக்கும் ஒரு கொள்கையாகவும், ஒரு கருத்தாகவும் மட்டுமே இருக்கிறது. ஞானமடைந்த ஆத்மாக்களுக்கு கடவுள் என்பது உண்மை. அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய இருப்புத்தன்மையின் உண்மைநிலை.

பொதுவாக மக்களை, 'நான்' என்ற அடையாளமே இயக்குகிறது. ஆனால், அஞ்ஞானிகளுக்கு, 'நான்' என்ற அடையாளம் உண்மையானது அல்ல; 'நான்' என்பது அங்கு இருப்பதில்லை.

இயற்கையைக் காதலிப்பவருக்குப் பாதுகாவல் என்பதே அவசியமில்லை

நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு, இயற்கையோடு இணைந்து இருக்கும்பொழுது எதுவுமே நம்மைப் பாதிக்காது.

நான் காலணி அணியாமல், ஆயிரக் கணக்கான மைல்கள், இந்தியா முழுவதும் நடந்திருக்கிறேன். மக்கள் என்னிடம், ''காலணியின்றி வெறும் பத்து மைல்கள் நடந்தால்கூட, எங்கள் பாதங்கள் காய்த்துப் போகின்றன, வெடிப்புகள் தோன்றிவிடுகின்றன. ஆனால், உங்கள் பாதங்கள் மட்டும் எப்படி மிகவும் மென்மையாக இருக்கின்றன,'' என்று கேட்பதுண்டு. நான் சொல்கிறேன், நாம் இயற்கையின் மீது நம்பிக்கை வைத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!

நான், இமய மலையிலுள்ள தபோவனத்தில், கங்கோத்ரியிலிருந்து தோராயமாக, 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள தபோவனத்தில் வாழும்பொழுதும், அந்த உறையவைக்கும் குளிரிலும், இதேபோல இடுப்புக்கு ஒரு துணியும், தோளுக்கு ஒரு துணியும்தான் அணிந்திருந்தேன். நாம் இயற்கையின்மீது நம்பிக்கைவைக்கும்பொழுது, குளிரோ வெய்யிலோ நம்மைப் பாதிக்காது.

திபெத்திய லாமாக்கள் சமூகத்தில், தீக்ஷைக்கான தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் பதிவுசெய்திருக்கிறார்கள். தேர்வில் கலந்துகொள்பவர்கள், தங்களை ஈரமான ஆடைகளினால் மூடிக்கொண்டு, உறையவைக்கும் பனியில் அமர்வார்கள். அந்த ஈரமான ஆடைகளை, தியானத்தின்மூலம் உருவாக்கப்படும் வெப்பத்தினால் காயவைக்க முடிந்தால், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகிறார்கள்.

நாம் இயற்கையின் மீது நம்பிக்கை வைத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!

இதில் வெற்றிபெற அவர்கள் சில தியான நுட்பங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், அவை மட்டுமே அவர்களுடைய வெற்றிக்குக் காரணம் அல்ல; அவர்களுடைய வெற்றிக்குக் காரணம் அவர்கள் இயற்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே!

வேதனையும் இன்பமும் நம்முடைய கட்டுறுமனப்பாங்கின் ஒரு பகுதி. பரிவிராஜக நாட்களில், நான் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தேன். அங்குப் பெண்களுடைய வாழ்க்கையில் ஒரு வியப்பான இயல்பைக் காண நேர்ந்தது; அது, வலியில்லாத பிரசவம்!

ஒளி இருள்,
நல்லது கெட்டது,
சரி தவறு போன்றவை
நம்முடைய
கட்டுறுமனப்பாங்கை
அடிப்படையாகக்
கொண்டவையே.

கர்ப்பிணிப்பெண்கள், பிரசவத்திற்கென
போடப்பட்டிருக்கும் குடிசைக்குள்
நுழைகிறார்கள். அங்கு அழுகையோ
அல்லது வலியால் அலறுகின்ற சத்தமோ
இல்லை.

ஒரு கர்ப்பிணிப்பெண் தனியாகக் குடிசைக்குள் சென்றார். எந்த உதவியும் தேவைப்படாமல், சிரித்த முகத்துடன், குழந்தையுடன் வெளியில் வந்தார். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். நான் ஒரு வயதான பெரியவரிடம் ''எப்படி இது சாத்தியம்? ஒரு மருத்துவச்சியின் உதவியில்லாமல், பிரசவம் எப்படிச் சாத்தியம்? அதுவும் வலியே இல்லாமல்!'' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

அவருக்கு என்னுடைய கேள்வியே புரியவில்லை. அவர் கேட்டார், ''வலியா? என்ன வலி? குழந்தை பெறும்பொழுது பெண்கள் ஏன் வலியை உணரவேண்டும்? அது ஒரு கொண்டாட்டம்!''

Baby feet held in hands

நாம் வலியையும் இன்பத்தையும்
கட்டுறுமனப்பாங்கின் மூலமாக
உருவாக்குகிறோம். நாம், கோர்த்
துப் பார்ப்பதன் மூலமாகத்தான்
பேராசையையும் பயத்தையும்
உருவாக்குகிறோம். நம்முடைய
ஸம்ஸ்காரங்களே, வேதனையும்
இன்பத்தையும்
உருவாக்குகின்றன.

உலகமே உங்கள் குடும்பமாகட்டும்

ஒளி இருள், நல்லது கெட்டது, சரி தவறு போன்றவை நம்முடைய கட்டுறுமனப்பாங்கை அடிப்படையாகக் கொண்டவைதான்.

நம்முடைய கட்டுறுமனப்பாங்கு, நவநாகரிகக் கல்வி மற்றும் மெருகேற்றப்பட்ட கருத்துக்கள் - இவை மூன்றும்தான், குறிப்பிட்ட பாணியில் உடையணியும் மனிதனைத்தான் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், வேறு பாணியில் உடையணியும் மனிதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கற்றுத்தருகின்றன.

இதுபோன்ற கருத்துக்களை உலகத்தின் முக்கியமான மனிதர் வெளியிட்டால், உதாரணத்திற்கு, சர்ச்சில் காந்தியை, 'அரை நிர்வாண ஃபக்கீர்' என்று அழைத்தபோது, பலர் அதை விதிவிலக்காகக் கருதினர். ஆனால், பெரும்பான்மையான மக்கள் அதைப் பின்பற்றி, அதேவழி யில் நடக்கத்தொடங்கினர்.

நாம் சர்ச்சிலைப்போன்று அழுத்தமாக அல்லது கடுமையாக சொல்லவில்லையென்றாலும்கூட, நம்முடைய கட்டுறு வளர்ப்புமுறையின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கவே செய்கிறோம். இல்லையென்றால், இந்தியாவில் தீண்டாமை என்ற அமைப்பு இருந்திருக்காது.

இது, வேத கலாச்சாரத்துடனோ அல்லது வேத மதத்துடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டது அல்ல.

sidebar image

தீண்டாமை,
வேத கலாச்சாரத்துடனோ
அல்லது
வேத மதத்துடனோ
எந்தவிதத்திலும்
சம்பந்தப்பட்டதல்ல.

எந்த வேத நூலும், ஒரு மனிதன் இன்னொரு
மனிதனுக்குத் தாழ்ந்தவன் என்று
குறிப்பிடவில்லை. எல்லா வேத நூல்களும்
உறுதியாக, ஒவ்வொரு மனிதனும்
தெய்விகமான ஆத்மா, நாம் எல்லோரும்
தெய்வத்தன்மை என்ற விதையை எடுத்து
வந்திருக்கிறோம் என்று பறைசாற்றுகின்றன.

அதனால் ஒருவர், வேத நூல்களை
மேற்கோள் காட்டி, நியாயமற்ற முறையில்
மற்றொருவரைத் தாழ்வாக எப்படி
நடத்தமுடியும்?

கிருஷ்ணர் வஸுதைவ குடும்ப: - உலகனைத்தும் உங்கள் குடும்பமாகட்டும் என்று சொல்லும்போது, அங்கு எந்தவித ஒதுக்குதலும் இல்லை; அவர், 'அனைத்தும்' என்று சொல்லும்பொழுது, அவர் 'அனைத்தையும்' தான் குறிப்பிடுகிறார்.

நம்முடைய கட்டுறுமனப்பாங்கு, நம்முடைய வளர்ப்புமுறை..., உண்மையில் அதை, 'வளர்ப்பு முறை' என்று சொல்லக்கூடாது, 'கீழே இறக்கும் முறை' என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் அது நம்மைக் கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. அது நம்மை மேலெடுத்துச் செல்வதில்லை.

நம்முடைய கட்டுறுமனப்பாங்கு, இந்த
எதிர்மறை பண்புகளை நமக்குள் ஆழமாகப்
பதியவைக்கிறது.

இப்படித்தான் சமுதாயம் நம்மை, பயம்
மற்றும் பேராசையால் கட்டுப்படுத்தி,
தன்னுடைய ஸ்திரத் தன்மையை
உறுதிசெய்து கொள்கிறது.

எல்லா வேதநூல்களும் உறுதியாக, நாம் எல்லோரும் தெய்வத்தன்மை என்ற விதையை எடுத்து வந்திருக்கிறோம் என்று பறைசாற்றுகின்றன.

நம்முடைய நித்யானந்த ஸ்பூரண த்யானங்கள் அனைத்தும், நம்முடைய கட்டுறுமனப்பாங்கை, நம்முள் ஆழமாகப் பதிந்துள்ள நினைவுகளைக் கரைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்கு நாள் வகுப்பின் முடிவில், (வெளிநாடுகளில் இது இரண்டு நாள் வகுப்பு) மக்கள் வயது வித்தியாசமன்றி, ஆண் பெண் என்ற வித்தியாசம், அந்தஸ்து அல்லது வகுப்பு பேதமின்றி ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குவார்கள்.

அவர்களுடைய எதிர்மறை பண்புகள் மறைந்து விடுகின்றன. அந்த உயர்ந்த உணர்வு நிலையில், ஒருவர் மற்றவரிடம் தெய்விகத்தன்மையை மட்டுமே காணமுடியும்.

வகுப்பின் முடிவில், மாமனார், தம் மருமகளின் காலில் விழுந்து நமஸ்கரிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். இந்திய கலாசாரத்தின்படி, இது எவராலும் நம்பமுடியாதது.

நீங்கள் பள்ளத்தாக்கிற்கு வந்தே ஆக வேண்டும்!

கேள்வி: நீங்கள் எப்பொழுதும் ஆனந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற காருண்யத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். இவை இரண்டும் ஒன்றா?

ஆனந்தம் என்பது உள்ளுலகம், கருணை என்பது அதன் வெளிப்பாடு. ஆனந்தம் என்பது ஒரு மலர். கருணை என்பது அதன் நறுமணம். ஆனந்தம் என்பது அனுபூதி; காருண்யம், அதை வெளிப்படுத்துவது.

ஆனந்தம், ஒரு மலர். கருணை, அதன் நறுமணம்.

அன்பு என்பது ஆனந்தமயமாகத்தான் இருக்கும். அது துக்கமாகவோ அல்லது கடுமையாகவோ இருக்காது. அது களிப்பாகவும் சிரிப்பாகவும்தான் இருக்கமுடியும்.

ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பைத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது. அது அழகற்றதாக இருக்க முடியாது. அது அசாதாரணமான அழகுடையதாக இருக்கிறது; அழகு என்பதின் உயிரோட்டமாக, சாரமாக இருக்கிறது. அன்பும் ஆனந்தமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

மக்கள் ஆனந்தத்தை, ஒரு மலை உச்சியாகவே பார்க்கிறார்கள்; பள்ளத்தாக்காகப் பார்ப்பதில்லை. ஆனால், ஆனந்தம், இரண்டு பகுதிகளையும் கொண்டிருக்கிறது. மலையுச்சி, ஒரு பள்ளத்தாக்கு இல்லாமல் இருக்கமுடியாது. எந்தப் பள்ளத்தாக்கும் மலைமுகடு இல்லாமல் இருக்க முடியாது. அவை பிரிக்க முடியாதவை. ஒருவர் இரண்டு சூழ்நிலைகளிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள், சூரிய ஒளியினால் சூழப்பட்ட மலை உச்சியில் இருந்தால், ஆனந்தமாக இருப்பது என்பது எளிதானது. அந்த உயரம், அமைதி, சூரியன், திறந்த வானம் மற்றும் அந்த வானத்தின் சுதந்திரத்தன்மை

Man standing on top of a mountain

உங்களை ஆனந்தமாக இருக்கச்
செய்கிறது. நீங்கள் உலகத்திலிருந்தும்,
அதனுடைய பிரச்சினைகள் மற்றும்
கவலைகளிலிருந்தும் வெகு
தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால்,
நீங்கள் மலை உச்சியிலேயே
வாழமுடியாது. நீங்கள்
பள்ளத்தாக்குக்கு, மீண்டும் வந்தே
ஆக வேண்டும்.

மலை உச்சி, ஒரு விடுமுறையாக மட்டுமே இருக்க முடியும். ஒருவர் அங்கேயே வெகுகாலம் தங்கியிருக்க முடியாது. அதனால் ஒருவர் பள்ளத்தாக்கிலும், உலகத்தினுடைய குழப்பத்திலும், இருளிலும், சோகத்திலும், போராட்டத்திலும், போட்டியிலும் மற்றும் பள்ளத்தாக்கில் நிலவும் எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சூழ்நிலைகள் உகந்ததாக இல்லையென்றாலும், சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும், நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு துன்பமான சூழ்நிலையில், உங்களால் ஆனந்தமாக இருக்க முடியவில்லையென்றால், நீங்கள் இன்னும் ஆனந்தமயமான மனிதராக மாறவில்லை. நரகத்தில்கூட, நீங்கள் சொர்க்கத்தில் இருப்பதுபோல் இல்லையென்றால், நீங்கள் அடைய வேண்டிய நிலையை அடையவில்லை. நீங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

ஒரு பழமையான நீதிக்கதை:

ஞானமடைந்த குரு ஒருவர் சொர்க்கத்தின்
வாசலை வந்தடைகிறார். "நீங்கள் எங்குச்
செல்ல விரும்புகிறீர்கள்?" என்று வாயிற்
காப்பாளர் கேட்கிறார். குருவிடமிருந்து
உடனடியாக பதில் வருகிறது:

"நரகத்திற்கு!"

சூழ்நிலைகள் உகந்ததாக
இல்லையென்றாலும்,
நாம் அமைதியாகவும்
ஆனந்தமாகவும் இருக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வாயிற் காப்பாளருக்கு, இந்தப் பதில் புதிராகவும் குழப்பமாகவும் இருந்தது.

அவர் குருவைப் பார்த்து, "இந்த இலட்சக்கணக்கான வருடங்களில், நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்கும் முதல் நபர் நீங்களே. உங்களுக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா? ஏன் நீங்கள் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.

ஞானி, "நான் எங்கிருந்தாலும், என்னால் சொர்க்கத்தில் இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். சொர்க்கம், அது என் இதயத்தில்இருக்கிறது. நான் பூலோகத்தில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனாலும், அங்கும் நான் எப்பொழுதும் சொர்க்கத்திலேயே வாழ்ந்தேன். நான் நரகத்தில் வாழ்ந்ததில்லை. என்னை எங்கு அனுப்பினாலும் நான் சொர்க்கத்தில்தான் இருப்பேன். நான் எங்கிருந்தாலும், சொர்க்கம் அங்கே இருக்கும்," என்றார்.

இதுவே ஒரு ஸத்யமான, உண்மையான சாதனை; அடையப்பட வேண்டிய நிலை. இல்லாவிட்டால், சூழ்நிலைகள் அனுமதிக்கும்பொழுது, அனுசரணையாக இருக்கும்பொழுது, உதவும்பொழுது மற்றும் ஊக்கமளிக்கும்பொழுது மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வீர்கள்.

உலகத்தில் வாழும்பொழுதும், பள்ளத்தாக்கில் வாழும்பொழுதும், உங்கள் இதயம் இனிமையான பாடலை இசைத்துக் கொண்டிருக்கட்டும். எப்பொழுதும் இதயத்தில், ஒரு இனிமையான பாடலுடன் வாழுங்கள். உலகத்தின் பள்ளத்தாக்குகளில் உள்ளவற்றினால் பாதிக்கப்படாமல், தொடப்படாமல், மாசுப்படுத்தப்படாமல் வாழுங்கள். இது சாத்தியமே.

இதுதான் சிறந்த அற்புதம் மற்றும் இன்பக் கொண்டாட்டம். ஏனென்றால் நீங்கள் அப்பொழுது அனைத்து விதமான வெளியுலக சூழ்நிலைகளையும் கடந்து விட்டதால்தான் இது நிகழ்கிறது.

இந்த நிலைதான், தேடுதலுடைய ஒருவரின் இறுதி இலக்கு.

அன்பின் வேறு சில பெயர்கள்...

ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பும்கூட. அன்பு என்பது வாழ்க்கையின் மற்றொரு பெயர்; இருப்புத்தன்மையின் மற்றொரு பெயர்; கடவுளின் மற்றொரு பெயர்; புரிதல் அதிகமாக வளர வளர, அன்பும் சிறகடித்து உயரப் பறக்கும்.

அன்பு - புரிதல், விழிப்புணர்வு மற்றும் தியானம் என்ற சிறகுகளின்மூலம் உயரச் செல்லும்.

அன்பும் தியானமும், உண்மையான தேடுதல் உடையவர்களின் பாதையைச் சமனப்படுத்தும். உங்கள் அன்பை, அது எந்த நிலையில் இருந்தாலும், மேலும் மேலும் தியான உணர்வு உடையதாக ஆக்குங்கள், தியானம், அதை அடுத்த உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும்.

ஒரு சின்ன கதை:

ஒரு காட்டில், இரு பிச்சைக்காரர்கள் வசித்து வந்தனர். ஒருவருக்கு கால்கள் இல்லை. இன்னொருவருக்கு கண்கள் இல்லை. ஒருநாள், பெரும் காட்டுத் தீ மூண்டது.

நாம் ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள். இதைத் தெரிந்துகொள்வதே பயத்திலிருந்து விடுபடுவதற்கான வழி.

கால்கள் இல்லாத மனிதரால், தப்பித்துச் செல்லும் பாதுகாப்பான பாதையைப் பார்க்க முடிந்தது. ஆனால், அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லையாதலால், அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. மற்றொருவரால் நடக்க முடியும். ஆனால், தப்பித்துச் செல்லும் பாதுகாப்பான பாதையைப் பார்க்க கண்கள் இல்லாததால், அவராலும் தப்பிச் செல்ல முடியவில்லை.

இருவரும் தனித்தனியே தப்பிச் செல்ல முயன்றிருந்தால், இருவருமே இறந்து போயிருப்பார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தனர். காட்டைவிட்டுப் பாதுகாப்பாக வெளியேறினார்கள்! கண்பார்வை இல்லாதவர், கால் இல்லாதவரை தம் தோளில் தூக்கிக் கொண்டார். மொத்தமாக அவர்களுக்கு இரண்டு கண்களும் இரண்டு கால்களும் இருந்தன. சரியாக மனிதனுடைய சூழ்நிலையும் அதுதான். அன்பு இல்லையென்றால், உங்களுக்கு இயங்குவதற்குக்கூட சக்தி இருக்காது. த்யானம் இல்லையெனில் உங்களுக்குத் தெளிவான உள்நோக்குப் பார்வை இருக்காது.

அன்பும் த்யானமும் சேரும்பொழுது, உங்களுக்கு இரண்டுமே கிடைக்கிறது. உங்களுக்கு வளர்ச்சி அடைவதற்குத் தேவையான சக்தியும் இருக்கும். மேலும் எங்கே, எப்படி, எப்பொழுது போக வேண்டும் என்ற தெளிவும் இருக்கும்.

நம்பிக்கை என்பது வேறு, புரிதல் என்பது வேறு...

நம்முடைய உடல்கள் இறந்து விடுகின்றன. ஆனால், நாம் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. நாம் ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள். இதைக் தெரிந்துகொள்வதே பயத்திலிருந்து விடுபடுவதற்கான வழி. இது வெறுமனே ஒரு நம்பிக்கையாக மட்டுமே இருக்கக்கூடாது.

இலட்சக்கணக்கான மக்கள், அவர்கள் நிரந்தரமானவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள், இதை பயத்தின் காரணமாக நம்புகிறார்கள். அதாவது அவர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் என்றும் நிரந்தரமானவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்; அதனால் அதை நம்புகின்றனர்.

ஆனால், மரணத்தைப் பற்றிய பயமும் சந்தேகமும் ஆழமாக உள்ளே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

மரணத்தைப் பற்றிய பயமும் சந்தேகமும்
ஆழமாக உள்ளே இருந்தால், இறக்கும்
தருணத்தில், 'நாம் நிரந்தரமானவர்கள்'
என்ற நம்பிக்கை அவர்களுக்கு உதவி
செய்யாது; அப்போது உள்ளிருக்கும்
சந்தேகம் வெடித்து எழும்பும். அவர்கள்
சந்தேகத்துடனேயே இறப்பார்கள்.

சந்தேகத்தில் இறப்பது என்பது மொத்த உண்மையைத் தவறவிடுவது ஆகும்.

அதனால் 'நிரந்தரத் தன்மை'
என்பது நம்பிக்கையைப் பற்றியது
அல்ல. அது நம்முடைய புரிதலாக
வேண்டும். த்யானம்தான் அதற்கான
வழி. த்யானமே காலத்திற்கப்பாற்பட்ட
மற்றும் நித்யத்தன்மையின் கதவுகளைத்
திறந்துவிடுகிறது.

ஆரம்பத்தில் நம்முடைய த்யானப்
பயிற்சியில், காலம், சில கணங்களுக்கு
மட்டுமே மறைகிறது; ஆனால், பயிற்சி
செய்ய, பயிற்சி செய்ய காலம் மறையும்
கால அளவு அதிகரிக்கும்.

ஒருநாள் திடீரென்று நாம் ஆச்சரியப்படுவோம். பல மணி நேரங்கள் கடந்திருந்தாலும், ஏதோ நமக்குள் இருக்கும் கடிகாரம் நின்றுவிட்டதைப்போலத் தோன்றும். அப்போது நமக்குள் எந்தவிதமான நேர அசைவுகளும் இருக்காது. நம்மால் நேரத்தைக் கடக்க முடியும் பொழுது, நாம் மரணத்தைக் கடந்திருப்போம். காலம், மரணத்தை எடுத்துவருகிறது; காலம்தான் பிறப்பையும் எடுத்துவருகிறது.

காலம் மற்றும் மரணம் இந்த இரண்டையும் குறிக்க, கால: என்ற ஒரே சொல்லையே ஸம்ஸ்க்ரு'த மொழியில் பயன்படுத்துகின்றனர். காலத்திற்கு அப்பால் செல்வது என்பது மரணத்தைக் கடந்து செல்வது; இதுவே மிகச் சிறந்த ஒரு புரிதல். த்யானம், காலத்திற்கு அப்பால் நம்மை எடுத்துச் செல்லும்.

இந்தப் புரிதல் நமக்கு அனுபவமாக ஆகட்டும். நாம் இதை நம்ப வேண்டிய அவசியமில்லை. இது போன்ற நம்பிக்கையாளர்கள் போதுமான அளவிற்கு உலகத்தில் இருக்கின்றனர். இப்போது நமக்கு இதப் பற்றித் தெரிந்த மக்கள் மட்டுமே தேவை.

இவர்களே புதிய மனித இனத்திற்கு முன்னோடிகளாக இருப்பார்கள். இவர்களே புரிதலுடன் இருக்கக்கூடிய மக்கள். அவர்களுக்கு கடவுள் பற்றிய நம்பிக்கை இருக்காது; அவர்கள் கடவுளைப் புரிந்திருப்பார்கள். கடவுளை அறிந்திருப்பார்கள்.

ஜாக்கிரதை!... ஆனந்தத்தைச் சகித்துக்கொள்ள முடியாத மக்கள்

ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பது மறைக்க முடியாதது. அது ஒரு நெருப்பு. அது ஒரு ஜ்வாலை. அதை நாம் மறைக்க முடியாது. ஆனந்தம் நம் முன்னே ஒளிவீசும். இதை மறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

சில இரகசிய மரபுகள், மக்களுக்கு 'மறைப்பதற்கு' அறிவுறுத்தும். ஏனென்றால், சில கலாசாரத்தில், சில நாடுகளில், சில மரபுவழிகளில்... நாம் நம்முடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தினால், நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம். இந்தக் கலாசாரங்களில், ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதற்காகவே சிலர் கொல்லப்பட்டார்கள்.

இவர்கள் முழுமையான ஆனந்தத்திலும் இறைநிலையிலும் மூழ்கியிருந்தனர். அதனால், மத போதகர்கள் வேத நூல்களுக்குத் தவறான விளக்கங்களைத் தருகிறார்கள் என்ற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்; மத போதகர்கள் தந்த விளக்கங்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னார்கள். அவர்கள் மரபுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிராகவும் இருந்தனர்.

அளவுகடந்த ஆனந்தத்தில் ஒரு சூஃபி ஞானி, "நான் கடவுள்," என்று அறிவித்தார். அவர் அந்த ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.

> ஆனந்தம் என்பது மறைப்பதற்கு சாத்தியப்படாத ஒன்று. அது ஒளிவீசக்கூடிய தோற்றம்.

ஆனால், அவருடைய குரு, அவரை இந்த அனுபவத்தைப் பற்றிப் பேசாது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டுமென்று எச்சரித்தார். இந்த மனிதரும் வாக்களித்தார்.

ஆனால், சில கணங்கள் கழித்து அவர், "நான் கடவுள்," என்று சப்தமாக உரக்கக் கூவினார். அவர் மட்டும் அல்லாமல், அவருடைய முழு இருப்புத்தன்மையும் சப்தமிட்டது; அவருடைய உடலிலுள்ள ஒவ்வொரு தசை நார்களும் சப்தமிட்டது. அவர் முழுவதுமாக ஒளிவீசினார்! அவர் கொலை செய்யப்பட்டார். மகிழ்ச்சியற்ற மனிதர்களால், ஆனந்தமான மனிதர்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. யாராவது ஆனந்தமாக இருப்பதைப் பார்த்தால், அது அவர்களைக் காயப்படுத்தும். அது, அவர்களிடம் பொறாமையை உருவாக்குகிறது. அது அவர்களுடைய அஹங்காரத்தைக் காயப்படுத்துகிறது.

அதனால் சூஃபி மக்கள், ஆனந்தத்தை மறைப்பதற்குக் கற்றுக்கொண்டனர். மற்றவர்களையும் அதேபோல இருக்க அறிவுறுத்தினர். ஆனால், அது மறைப்பதற்கு சாத்தியப்படாத ஒன்று. ஆனந்தம் என்பது ஒளிவீசக்கூடிய தோற்றம்.

துன்பம் என்பது இருள். ஆனந்தம் என்பது ஒளி. துன்பம் என்பது வெளிப்படாத ஒளி, ஏற்றப்படாத ஒரு விளக்கு. ஆனந்தம் என்பது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு. நாம் அதை எப்படி ஒளித்து வைக்க முடியும்? அது சாத்தியமில்லாத ஒன்று!

இந்த ஞானிகளைக் குறித்து எந்த ஒரு தீர்ப்பும் வழங்காமல், அவர்களித்து அன்புசெய்யும் சமுதாயத்தை நாம் இன்னமும் உருவாக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஆனந்தமயமான மக்களை மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நம்மால் முடியவில்லை.

ஆயினும், அந்த இறுதி ஸத்யத்தையும், இருப்புத்தன்மையின் ஆனந்தத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு, வெளிப்படுத்துவதற்கு நம்முடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தால்கூட, அது தகுதியானதே.

பூரணத்துவமே இறுதிநிலை

மனிதன்ாதாரணமாகத் தோன்றுகிறான். ஆனால், அவன் சாதாரண மானவன் அல்ல. அவன், ஒரு விதையைப் போன்றவன். விதைதான் பெரிய விருட்சமாக வளரும். மேலும், ஒரு சின்ன விதை, பூமி முழுவதையும் பசுமையால் நிறைத்துவிடும். ஒரு சின்ன விதை, தன்னள் கணக்கிலடங்காத விதைகளைக் கொண்டுள்ளது.

அதுபோல மனிதன், தெய்வீக அன்பின்
ஒரு விதை, அந்த விதை மிகப் பெரிய
ஒரு கண்டமாக வளரமுடியும். அதைச்
செய்யாவிடில், நாம் எப்பொழுதும்
திருப்தியடையப் போவதில்லை.
நாம், எந்தவிதமான லாபத்தையும்
எதிர்பார்க்காத, பகிர்ந்துகொள்ளுதலால்
ஏற்படும் மகிழ்ச்சியைத் தவிர, வேறு
எந்தப் பலனையும் எதிர்பார்க்காத
தூய்மையான அன்பாக மாறாதவரை, நாம்
நிறைவுத்தன்மை அடைவதில்லை.

அன்பு மீது
நம்பிக்கைகொள்ளுங்கள்.
ஏனென்றால் அன்புதான்
உணர்வுமாற்றத்திற்குரிய
அஸ்திவாரம்.

முழுமையான, எல்லையற்ற அன்பாக மாறும்பொழுது மட்டுமே, வாழ்க்கை அதனுடைய இறுதி உச்சத்தை அடைகிறது. அந்த உச்சமே கடவுள், சொர்க்கம் மற்றும் நிர்வாணா என்று அழைக்கப்படுகிறது.

நாம் அன்பை நோக்கி மேலும் மேலும் வளர வேண்டும். வேறு எந்தப் பிரார்த்தனையும் தேவையில்லை. வேறு எந்த வேத நூல்களும், வேறு எந்த நல்லொழுக்கமும் தேவையில்லை. அன்பு என்பது எந்த ஒரு வேத நூலையும் நல்லொழுக்கத்தையும் விட மேலானது. அது, தனக்கே உரிய நெறிமுறையைக் கொண்டுவருகிறது. அது, நம்முடைய உள் இரைச்சல்களை இறைவனாக மாற்றுகிறது.

அன்பு மீது நம்பிக்கைகொள்ளுங்கள். ஏனென்றால் அன்புதான் உணர்வுமாற்றத்திற்குரிய அஸ்திவாரம். அன்புதான் ரசவாதத்தின் ஆழமான உள் மையம். அன்பு நம்மை மனநிறைவடையச் செய்கிறது.

மக்கள் அதிருப்தியில், மனநிறைவற்ற நிலையில் வாழ்கின்றனர். மனநிறைவற்ற தன்மையில் வாழ்வது என்பது குற்றஞ்சாட்டிக்கொண்டும், குறைபட்டுக்கொண்டும், எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டும் வாழும் நிலையைக் குறிக்கிறது.

மனநிறைவற்ற வாழ்க்கை வாழ்வது என்பது ஆசையில் வாழ்வது. ஆசைகள் எப்பொழுதுமே தீர்க்க முடியாதவை. நீங்கள் ஆசைகளாலும் எதிர்பார்ப்புக்களாலும் நிறைந்திருக்கும்போது, வாழ்க்கை ஒரு நீண்ட துக்க நாடகமாகி விடுகிறது. அது தொடர் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கொண்டதாகவும், எதுவும் வளர முடியாத, மலர முடியாத ஒரு பாலைவனமாகவும் ஆகிவிடுகிறது.

மனிதன் ஆசைகளுடனோ அல்லது ஆசைகளற்றோ வாழலாம். ஆனால், தேடுதல் என்பது ஆசைகளற்ற ஒரு பாதையின் தொடக்கம். தேடுதல் என்பது நம்மிடம் எது இருக்கிறதோ, அதுவே தேவைக்கு அதிகமானது என்று இருப்பது; என்ன இருக்கின்றதோ, அதற்கு நன்றியுணர்வுடன் இருப்பது; அதற்கு மேல் எதுவும் கேட்காத நிலை; இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், அபரிதமாகக் கொடுக்கப்பட்டிருப்பதற்காக நன்றியுடன் இருப்பது!

நமக்கு ஏற்கெனவே என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தோமானால், நாம் ஆச்சரியப்படுவோம். நாம் கேட்காமலேயே, நமக்கு அளவுக்கதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி உணர்வுடன் இருங்கள். நிறைவுத்தன்மைக்கு அதுதான் வழி.

மனநிறைவு என்பது இருப்புத்தன்மைக்கு நன்றியுடன் இருப்பது. அந்த நன்றி உணர்வினாலேயே மேலும் பல விஷயங்கள் நம்மைத் தேடி வரத்துவங்கும். இது வாழ்க்கையின் புதிரான உண்மை. அதாவது நாம் ஆசைப்படும்பொழுது எதுவுமே நிகழாது, ஏமாற்றத்தைத் தவிர! ஆனால், நாம் ஆசைப்படாதபொழுது, அனைத்துமே நிகழும்! நாம் அற்புதங்களுக்குத் தகுதியானவர்களாக ஆகிறோம்!

நினைவில்கொள்ளுங்கள், 'நிறைவுத் தன்மை' என்னும் இந்த ஒரேயொரு வார்த்தையில்தான், மொத்த ஆன்மிகமும் அடங்கியுள்ளது. அது ஞானத்தால் வெளிப்படுகிறது; நிறைவுத்தன்மை வெறும் பட்டறிவால் வெளிப்படுவதில்லை. அது தெரிந்து கொள்வதாலும், அனுபவமாக உணர்ந்துகொள்வதினாலும் ஏற்படுகிறது.

'நிறைவுத் தன்மை' மற்ற எந்த ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது நம்முடைய தெளிவான பார்வையிலும் நேரடி அனுபவத்திலும் வேரோடியிருக்கிறது.

பட்டறிவுச் சுமையை இறக்கிவிட்டு, சுகமாகப்மானியுங்கள்

பட்டறிவு என்பது மிகவும் மலிவானது. நாம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ள முடியும். அதற்கு நமக்குத் தேவையானது எல்லாம் நல்ல ஞாபக சக்தி மட்டுமே. இது கடினமானது அல்ல. ஞாபக சக்தியைப் பயிற்சிசெய்து, மேலும் திறன் உடையவராகவும் ஆக முடியும்.

ஆயினும் ஞாபக சக்தி நமக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தாது. தினசரி வாழ்க்கையிலும், விஞ்ஞானபூர்வமான வேலைகளிலும் ஞாபக சக்தியின் உபயோகம் இருக்கிறது. ஆனால், நம்முடைய உள்ளுணர்வு சம்பந்தப்பட்டவரை அது உபயோகமற்றது.

உள்ளுலகப் பயணம் செய்ய வேண்டுமானால், பட்டறிவின் சுமை இல்லாமல் இருப்பது அவசியமாகிறது. நாம் ஒரு கள்ளம் கபடம் அற்ற குழந்தையைப்போல உள்நோக்கிச் செல்ல வேண்டும். குறைந்த அளவு தெரிந்திருப்பதே மிகவும் உகந்தது. நமக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் மிகவும் நல்லது.

அதைத்தான் சாக்ரடீஸ் சொல்கிறார்: எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - அது, ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்பதே!

ஒருவர் உள்நோக்கித் திரும்பும் அந்தக் கணம்தான், திருப்பு முனையாக அமையும். அந்தக் கணத்தில்தான் ஒருவர் அறிவாளி ஆகிறார். அந்தக் கணத்தில்தான் ஒருவர் வாழ்க்கையை அனுபவமாக உணருகிறார்.

வெளிமுகமாக ஓடும்வரை, வார்த்தைகள், கொள்கைகள் மற்றும் தத்துவங்களும் நமக்கு வாழ்க்கையைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது நம்மை, நம் வாழ்க்கையுடன் நேரடியாகவும் உடனடியாகவும் தொடர்பு கொள்ள அனுமதிக்காது.

கள்ளங்கபடமற்றதன்மை என்பது பாலம்; கள்ளங்கபடமற்ற தன்மை மலரும்பொழுது, அது ஞானமாகிறது. இறுதி ஞானம் என்பது ஆனந்தம். அதனுடைய வெளிப்பாடே எல்லையற்ற அன்பு. அதன்பிறகு ஒரு மனிதன் மீண்டும் குழந்தையாகிறான்.