KAILASA Library/பகவத்கீதை/இறைத்தன்மையின் வெளிப்பாடுSign in
பகவத்கீதை

இறைத்தன்மையின் வெளிப்பாடு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

எவரொருவர் முழுமையான தெய்வீகச் சேவையில் தன்னை உட்படுத்திக்கொள்கிறாரோ, எந்தச் சூழ்நிலையிலும் நிலை தவறாமல் இருக்கிறாரோ, அவர் உலக வாழ்க்கையின் இயல்பான முக் குணங்களையும் கடந்து, ப்ரஹ்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார்.

மேலும் நிலையானதும், அழிவற்றதும், நித்தியமானதும், உச்ச நிலை ஆனந்தத்தின் நேர்மையான வெளிப்பாடாக இருப்பதுமான ப்ரஹ்மத்தின் ஆதாரமாக இருப்பதும் நானே.

எல்லையற்ற அன்பின் வடிவம் நீங்கள்...

மூன்று குணங்களையும் இயல்புகளையும் கடந்த ஒரு நிலையே ப்ரஹ்மன், 'இறுதி பிரபஞ்ச விழிப்புணர்வுத் தன்மை' என்று சொல்லி, கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். இந்த நிலையை, பக்தியால் அடையுமாறு வலியுறுத்துகிறார். மேலும் அவர் தாமே ப்ரஹ்மன் என்றும், மாறாத ஆனந்தத்தின் 'மூலம்' என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணர், தனிமனிதரான வாஸுதேவ கிருஷ்ணராக அல்லாமல், உயர் இறுதி சக்தியான பரப்ரஹ்ம கிருஷ்ணராகப் பேசுகிறார்.

மூன்று குணங்களையும்
இயல்புகளையும் கடந்த
ஒரு நிலையே ப்ரஹ்மன்,

அவர் விரிவடைந்த ப்ரஹ்ம விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார்; குணங்களைக் கடந்து இருக்கிறார்; அவரே குணங்களின் மூலமும் ஆவார்.

பரப்ரஹ்ம கிருஷ்ணருக்கும், வாஸுதேவ கிருஷ்ணருக்கும் என்ன வித்தியாசம்? சாதாரண மனிதர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குள்ளும் தெய்விகத் தன்மை இருந்தாலும், அவர்கள் அதை உணர்ந்துகொள்வதில்லை. அதனால் கிருஷ்ணர் வித்தியாசமானவர்!

அதுதான் ஞானமடைந்த குருவுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். நீங்கள் இருவருமே இறைத்தன்மையுடன்தான் இருக்கிறீர்கள். இருந்தாலும், நீங்கள் உங்களுடைய இறைத்தன்மை பற்றிய உணர்வு இல்லாமல் இருக்கிறீர்கள். ஆனால், ஞானமடைந்த குரு, அதை முழுமையாக உணர்ந்து இருக்கிறார்.

கிருஷ்ணரை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு குரு. பிறகு ஏன் பரப்ரஹ்ம கிருஷ்ணர், வாஸுதேவ கிருஷ்ணர் என்ற இந்தப் பாகுபாடு?

இந்தப் பாகுபாடு அவருக்குள் இல்லை; அது நம்முள் உள்ளது. பரப்ரஹ்ம கிருஷ்ணருடைய உயர் அலைவரிசை உடல், அழியக்கூடிய உடல் படைத்த சாதாரண மனிதர்களால் காணமுடியாததாகவும் அணுக முடியாததாகவும் இருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை, பரப்ரஹ்ம ரூபத்தை, விச்வரூப தர்சனத்தை, தெய்விக தோற்றத்தை, அர்ஜூனன் கண்டுணர்ந்து கொள்வதற்காக, அவனுக்குத் தெய்விகப் பார்வையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

கிருஷ்ணருடைய மிக நெருங்கிய மனித நண்பனும், கிருஷ்ணனுடைய மனிதக் கண்ணாடியான அர்ஜூனன்கூட, கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை, கிருஷ்ணருடைய அனுமதி கிடைக்காதவரை கண்டுணர முடியவில்லை.

மனிதர்கள், அவரைக் கண்டுணரவும், அவருடன் பேசவும், பரப்ரஹ்ம கிருஷ்ணர் வாசுதேவ கிருஷ்ணராக மாற வேண்டியிருந்தது.

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர்,
தம்மை குணங்களின் விளையாட்டிற்கு
ஆட்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

ஞானமடைந்த ஆத்மா, பிரபஞ்ச
சக்தியுடன் இணைந்து, மனித உருவில்
அவதரிக்கும்பொழுது, அந்த உடலில் ஏதோ
ஒரு குணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது.

மனிதனை தெய்வநிலைக்கு
உயர்த்திட,
கடவுளே மனிதநிலைக்கு
இறங்குகிறார்

ஒரு உவமையை இங்கு நாம் சொல்லலாம். தங்கம், 24-காரட் தங்கமாக இருக்கும்பொழுது, அதைக்கொண்டு ஆபர ணங்கள் செய்ய இயலாது. நாம் அதனுடன் செம்பு போன்ற சில தூய்மையற்ற பொருட்களைச் சேர்த்து, அதை 22 அல்லது 18 காரட் ஆக தரம் குறைக்க வேண்டும். அதன்பிறகுதான், நாம் ஆபரணங்களை அதிலிருந்து செய்யமுடியும்.

அதேபோல ஞானமடைந்த ஆத்மா பூமிக்குள் நுழையும்பொழுது, ஒரு உடலெடுப்பதற்காக, சில ஸத்வ குணங்களை அந்த உடலுக்குள் உட்புகுத்த வேண்டியுள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு இந்த ஸத்வ குணமும் மறைந்துவிடுகிறது. பிறகு மீண்டும், குணங்களைக் கடந்த ஞான நிலையில் ஆத்மாவை நிலைபெறச் செய்கிறது.

ஒவ்வொரு ஜ்ஞான குருவும், தம்முடைய இறைநிலை அனுபவங்களை வெளிப்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவரே. சிலர், தங்கள்

அனுபவங்களை வெளியிடுவார்கள். சிலர்
வெளியிடமாட்டார்கள். நம்முடைய வேத
நூல்கள், இரண்டு ஞானமடைந்த குருமார்கள்
ஒரே விஷயத்தைச் சொன்னார்கள்
என்றால், அதில் ஒருவர் போலி என்று
சொல்கின்றன.

ஒவ்வொரு குருவுமே அவரவருடைய
வெளிப்பாட்டில் தனித்தன்மை
வாய்ந்தவராக இருப்பார். அனுபவங்கள்
ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும்
வெளிப்படுத்தும் தன்மை வேறு விதமாக
இருக்கும்.

மனிதர்கள், அவரைக்
கண்டுணரவும்,
அவருடன் பேசவும்
பரப்்ரஹ்ம கிருஷ்ணர்
வாஸுதேவ கிருஷ்ணராக
மாற வேண்டியிருந்தது.

கிருஷ்ணர், புத்தரிடமிருந்தும் ஏசுவிடமிருந்தும் வேறுபட்டவர். இவர்கள் அனைவருமே 'கருணை' என்னும் ஒரேகொள்கையை வைத்திருந்தார்கள். ஆனால், அந்தக் கருணையின் வெளிப்பாடு வெவ்வேற விதமாக இருந்தது.

புத்தர் 'கூர்ந்து ஆராய்தல்' மூலமாக வெளிப்படுத்தினார். கிருஷ்ணர் 'மகிழ்ச்சியாக விட்டுக்கொடுப்பதின்' மூலம் வெளிப்படுத்துகிறார்.

நாம் என்னவிதமான அதிர்வுகளை வெளிப்படுத்துறோமோ, அதன் அடிப் படையில்தான் நாம் குருவைத் தேர்ந்தெடுப்போம். பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்ததால், நாம் கிருஷ்ணர்பால் ஈர்க்கப்படுகிறோம். அவர் விரும்பத்தக்கவராக இருக்கிறார். நாம் த்யானம் செய்யும் வகையினராக இருந்தால், நாம் சிவனை நோக்கி, அமைதியில் கற்றுக்கொடுக்கும் குருவை நோக்கிச் செல்கிறோம்.

சரணடையும் குணமே, நம்மை விடுவிக்கும்

நம்முடைய குரு யார் என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. நம்முடைய நம்பிக்கை மற்றும் சரணடையும் தன்மையே முக்கியமாகக் கருதப்படுகிறது. நம்முடைய குரு ஞானமடையாதவராக இருக்கலாம். நாம் அவர்மீது நம்பிக்கை வைத்தோமென்றால், அவர் ஞானமடையாவிட்டால் கூட, நாம் ஞானமடைந்துவிட முடியும். முக்கிய தேவையாகக் கருதப்படுபவை எவையென்றால், நம்முடைய மனப்பாங்கும், அணுகுமுறையும், குணங்களும்தானே தவிர, குருவினுடைய நிலை அல்ல. ஒரு கல்லையே கடவுளாக வழிபட்டு, அதைச் சரணடைந்து, அதுவே நம்மைக் காப்பாற்ற வந்த பரம்பொருள் என்று கற்பனை செய்தால்கூட, நாம் விடுவிக்கப்படுவோம். இது ஸத்யம்.

அனைத்து செயல்களின் தன்மையையும் கடந்து செல்ல, உறுதியான நம்பிக்கையும் சரணாகதியும் மட்டுமே உதவுகின்றன. நாம் நம்முடைய செயல்களின் பலன்களை, குருவுக்கு, அவர் யாராக இருந்தாலும் அல்லது அது எதுவாக இருந்தாலும், சமர்ப்பித்து விடுகிறோம்.

நாம் அந்த குருவைத் தியானித்து
எல்லாவற்றையும்செய்கிறோம்அவருடைய
பாதங்களில் எல்லாவற்றையும் சமர்ப்பித்து
விடுகிறோம். இந்த மனப்பாங்கே நம்மை
விடுவிக்கிறது. இதையே கிருஷ்ணர், பக்தி
என்கிறார். வேறு எதுவும் தேவையில்லை.

கிருஷ்ணர், மஞ்சள் ஆடை அணிந்து,
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கும்
கிருஷ்ணரைப் பற்றிச் சொல்லவில்லை.
நாம் முழுமையாகச் சரணடையும் எந்த
ஒரு மனிதரும் கிருஷ்ணரே, அதன்
பிறகு நாம் கிருஷ்ணத் தன்மையில்
வீழ்ந்துவிடுகிறோம்.

அனைத்து செயல்களின் தன்மையையும் கடந்து செல்ல, உறுதியான நம்பிக்கையும் சரணாகதியும் மட்டுமே உதவுகின்றன.

நாம் பரப்ரம்ம கிருஷ்ணரிடம், பிரபஞ்ச விழிப்புணர்விடம், அந்த இறுதி சக்தியிடம், நம்முடைய வாழ்க்கையில் இந்த எல்லாப் புரிதல்களைத் தருவதற்கும், அவர் உபதேசிக்கும் சத்தியத்தை உணர்வதற்கும், அதை நமக்குள் நிலைநிறுத்துவதற்கும், ஆனந்தத்தை நித்யானந்தத்தை வெளிப்படுத்துவதற்கும் உதவுமாறு ஆழ்ந்து பிரார்த்தனை செய்வோம்.

கேள்வி : செல்களின் உருவாக்கத்திற்கும் நம்முடைய நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான, உயிரியல் ஆதாரங்கள் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதைப் பற்றி தயவுசெய்து விளக்கமாக விவரிக்கமுடியுமா?

நம் உடல் மன அமைப்பில் தொடர்ந்து அணுக்கள் புதிதாகப் பிறந்து

கொண்டே இருக்கின்றன என்பதை நவீன
விஞ்ஞானம் அறியும். நாம் ஒவ்வொரு
நாளும் இறக்கிறோம்.

நம் உடல் மன அமைப்பு 60 டிரில்லியன்
அணுக்களை கொண்டுள்ளது என்று
கணக்கிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான
அணுக்கள் தினமும் இறக்கின்றன.
தினந்தோறும் புதிய அணுக்கள்
பிறக்கின்றன. இந்தக் செயல்பாடு நாம்
உயிர் வாழும்வரை தொடர்கிறது.

இரண்டு வருடங்களுக்குள், நம்முடைய உடலில் உள்ள அனைத்து செல்களும் புதிய செல்களாக மாற்றியமைக்கப்படுகின்றன. அப்படியென்றால், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாம் முழுமையாக மறுபிறப்பெடுக்கிறோம்.

இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்து என்றாலும், ஏன் பழைய செல்களில் உள்ள துன்பங்கள் புதிய செல்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்றன? செல்கள் இறந்தபிறகும் நம்முடைய நோய்கள் ஏன் தொடர்கின்றன? எது இவற்றை இணைக்கிறது? விஞ்ஞானத்தால் இதற்கு பதில்தர இயலவில்லை. இருப்பினும், சுவாரஸ்யமான பரிசோதனைகள் அதற்கான பாதையைக் காட்டுகின்றன.

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் உடலிலிருந்து சிறிது இரத்த மாதிரியை எடுத்து, அதிலிருந்து சில அணுக்களைப் பிரித்தெடுக்கிறீர்கள். அந்த அணுக்களிலிருந்து DNAயைப் பிரித்தெடுத்து, அவற்றை உங்கள் உடலுக்கு வெளியே வைத்தாலும்கூட, நீங்கள் உணர்ச்சி களினால் எதிர்ச்செயல் செய்து, அதற்குரிய ஹார்மோன்களை வெளியிடும்பொழுது, உங்கள் உடலிலிருந்து தனியே பிரித்தெடுத்து வைக்கப்பட்ட DNA-வும் அதே ஹார்மோன்களை வெளியிடுகின்றன என்பதைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

நீங்கள் கோபமாக இருந்து, உங்களிடமிருந்து அட்ரினலின் வெளிப்பட்டால், வெளியில் இருக்கும் DNA-வும் அதே அட்ரினலினை வெளியிடுகிறது.

DNA Helix Illustration

நீங்கள் பயத்தால்
பாதிக்கப்படும்
போது, உங்கள்
உடலைவிட்டு
வெளியே
இருக்கும் DNA-வும், அதே
பயம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களை
வெளிவிடுகிறது. இந்த DNA
வைக்கப்பட்டிருக்கும் தட்டுக்கள்,
உங்களிடமிருந்து தள்ளி, சில மைல்களுக்கு
அப்பால் வைக்கப்பட்டபோதும்கூட, இந்த
விளைவுகள் நிகழ்கின்றன.

அன்பு - கேன்சரையும் குணப்படுத்தும்

விஞ்ஞானிகள், DNA மாதிரிகளை பல்வேறு உணர்ச்சிகளுக்கு உட்படுத்தி, பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர். நான் முன்பே ஓரிடத்தில் டாக்டர் மசாரு இமோடோ-வின் (Dr. Masaru emoto) புத்தகமான ‘தி ஹிட்டன் மெஸேஜஸ் இன் வாட்டர்-ல் (The Hid-den Messages In Water) பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகள் பற்றி பேசியிருக்கின்றேன்.

இந்த ஜப்பானிய விஞ்ஞானி, நீரினுடைய அணுக்களின் மூலக்கூறு, பல்வேறு விதமான மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்பொழுது, அதனுடைய வடிவங்களில், வியக்கத்தக்க வகையில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதை ஆராய்ந்து நிரூபித்திருக்கின்றார்.

ஸம்ஸ்காரங்கள் அல்லது
நினைவுப்பதிவுகள் எல்லாமே
சக்தி வடிவம். அவை,
நேர்மறையானவையாகவோ
அல்லது
எதிர்மறையானதாகவோ
இருக்கலாம்.

இந்தப் பரிசோதனைகள், What The Bleep
Do We Know என்ற திரைப்படத்தில்
காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

DNA மாதிரிகள் உணர்ச்சிகளுக்கு
ஆட்படுத்தப்பட்டபோது, நேர்மறையான
உணர்வுகளினால் அவை வளர்ந்ததையும்,
எதிர்மறையான உணர்ச்சிகளினால்
அவை சுருங்கியதையும் விஞ்ஞானிகள்

கண்டறிந்துள்ளனர். நாம் அன்புடன் நடத்தும்பொழுது, எச். ஐ. வி (HIV) கேன்சர் (Cancer) ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் DNA -வில் முன்னேற்றம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மேற்கொண்டு சீர்குலைவதும் தடுக்கப்படுகிறது என்பதை அவை காட்டின.

'சக்தி பரப்பு பற்றிய வேத இரகசியம்

ஃபோட்டோன்கள்' என்றழைக்கப்படும் மின்காந்த அதிர்வு சக்தியை உள்ளடக்கிய 'மூல ஒளித்துகள்'களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.

மூலகத் துகள்கள், மற்றொரு உயர்ந்த உணர்வுநிலை உடைய மூலகத் துகளைக் காண நேர்ந்தால், அதற்குக் கீழ்படிந்து, அதனைச் சுற்றி சுழல ஆரம்பித்து விடுகின்றன, 'மூல ஒளித்துகள்' (Photon), காற்று நீக்கப் பட்டு வெற்றிடமாக்கப்பட்ட ஒரு அறையில் (Vacuum chamber) வைக்கப்பட்டது. அவை அந்த அறைக்குள் இங்கும் அங்கும் தன்னிச்சையாக அசைந்து கொண்டிருந்தது. DNA-வை அந்த அறைக்குள் வைத்தவுடன், ஃபோட்டோன், அந்த DNA-வைச் சுற்றிச் சுழல ஆரம்பித்தது.

மூலகத் துகள்கள், மற்றொரு உயர்ந்த உணர்வுநிலை உடைய மூலகத்துகளை உணர நேர்ந்தால், அதற்குக் கீழ்படிந்து, அதனைச் சுற்றிச் சுழல ஆரம்பித்து விடுகின்றன, கிரகங்கள், சூரியனைச் சுற்றிச் சுழல்வதுபோல!

அதைவிட விநோதமான விஷயம் என்னவென்றால், DNA மாதிரி அந்த அறையிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட, ஃபோட்டோன், அதே பாதையில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருந்தது. DNA-வை நீக்கிய பிறகும்கூட தொடர்ந்து அந்த இடத்தில் DNA-யின் சக்தி இருந்ததைப் போன்றே சுழன்றது.

5000 வருடங்களுக்கு முன்பு வேத நூல்களில் என்ன நிலைநிறுத்தப்பட்டதோ, அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போதுதான் தளிர்நடை போடத் தொடங்கியுள்ளனர்.

அலையமைப்புகள்

வேதங்கள்,
திடப்பொருள்
அழிக்கப்பட்டாலும்,
அது
அழியா சக்திப்
பரப்பைக்
கொண்டிருக்கிறது
என்று
குறிப்பிடுகின்றன.

வேதங்கள், மன அமைப்பை ஒரு சக்தி வடிவமாக விவரிக்கின்றன. நம்முடைய மன அமைப்பு, எப்படி மரணத்தையும் கடந்து புதிய உடலுக்கும் தொடர்கிறது, காலத்தையும் வெளியையும் கடந்து நம்முடைய நடத்தையை எப்படிப் பாதிக்கிறது என்பதை விவரிக்கின்றன.

ஸம்ஸ்காரங்கள் அல்லது நினைவுப்பதிவுகள் எல்லாமே சக்தி வடிவம். அவை, நேர்மறையானவையாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம். ஸம்ஸ்காரங்கள் தொடர்ந்து வரும்வரை, அவை உடல் மன அமைப்பின்மீது, பொருள் சார்ந்த இயல்பின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

அணுக்கள் இறந்து, புதிய அணுக்கள் பிறந்த பிறகும் கூட, பழைய அணுக்களின் சக்தியில் உணர்வுமாற்றம் ஏற்படாதவரை, புதிய செல்கள் பழைய செல்களின் சக்தி ஆதிக்கத்திற்குட்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றன. நோய்கள் தொடர்கின்றன. அதனால்தான் நம்முடைய ஆனந்த ஸ்பூரண த்யான முகாமில் நாம், ஸம்ஸ்காரங்களைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சிகளுக்கும், ஸம்ஸ்காரங்களைக் கரைப்பதற்கான நுட்பங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துக் கற்றுத் தருகிறோம்.

நீங்கள் இதை ஒரு அதிகபட்ச
உத்திரவாதமாக நினைக்கலாம். ஆனால்,
இந்த நுட்பங்கள், உங்கள் DNA வையே
மாற்றக்கூடியவை. அவை, உங்களுடைய
மரபணுக்களின் பின்னால் இருக்கும்
ஆற்றலை மாற்றியமைக்கக்கூடியவை.

> வேதங்கள்,
> திடப்பொருள்
> அழிக்கப்பட்டாலும்,
> அவை,
> அழியா சக்திப் பரப்பைக்
> கொண்டிருக்கின்றன
> என்று குறிப்பிடுகின்றன.

அதன்பிறகு புதிய அணுக்கள், பழைய அணுக்களின் எதிர்மறை பண்புகளால் பாதிக்கப்படுவதில்லை.

ஸம்ஸ்காரங்களால் உருவாக்கப்பட்ட உணர்ச்சி அடைப்புக்களைக் கரையச்செய்து, முடிவாக ஸம்ஸ்காரங்களையும் கரைத்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தமாகிட பரப்ரம்ம கிருஷ்ணரிடம் பிரார்த்திப்போமாக!

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
குணத்ரயவிபாக யோகோ நாம சதுர்தசோத்த்யாய: ॥

இது ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தின் கண் அமைத்துள்ள, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான, மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ‘குணத்ரயவிபாக யோகம்’ என்னும் பெயருடைய பதினான்காம் அத்தியாயம்.

Hands holding a flute

ஸ்லோகங்கள்

அத சதுர்தஶோ'த்யாய: பதினான்காவது அத்யாயம்

குணத்ரயவிபாக யோக: குணத்ரயவிபாக யோகம்

ஸ்ரீபகவாந் உவாச

பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞானாநாம் ஜ்ஞானமுத்தமம் /
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:// 14.1

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; பரம் - மிகச் சிறந்ததுமான; பூய: - மீண்டும்; ப்ரவக்ஷ்யாமி - சொல்லப் போகிறேன்; ஜ்ஞானாநாம் - ஞானங்களிலேயே; ஜ்ஞானம் - ஞானத்தை; உத்தமம் - மிக உயர்ந்தும்; யத்- எதை; ஜ்ஞாத்வா- அறிந்து; முநய: - முனிவர்களும்; ஸர்வே

  • எல்லா; பராம் - மிகமேலான; ஸித்திம் - முழுமையை; இத: - இந்த ஸம்ஸாரத்திலிருந்து; கதா: - அடைந்திருக்கின்றார்களோ

ஸ்ரீபகவான் சொன்னது

14. 1 முனிவர்கள் எல்லோரும் பூர்ணத்துவத்தை அடைய எந்த ஞானம் உதவியதோ அந்த ஒப்புயர்வற்ற ஞானத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கின்றேன்.

...........................................................................................................................

இதம் ஜ்ஞானமுபாச்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: /
ஸர்கே'பி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச // 14.2

இதம் - இந்த; ஜ்ஞானம் - ஞானத்தை; உபாச்ரித்ய - அறிந்து பின்பற்றி; மம

  • என்னுடைய; ஸாதர்ம்யம் - இயல்பை; ஆகதா: - அடைந்துள்ளவர்கள்; ஸர்கே - படைப்பிலும்; ந உபஜாயந்தே - பிறப்பதுமில்லை; ப்ரலயே அபி
  • ப்ரளய காலத்திலும்; ந வ்யதந்தி - துன்புறுவதுமில்லை; ச - மேலும்

14. 2 அந்த ஞானத்திலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த இயல்பை அடைய முடியும்; அழிவற்ற விழிப்புணர்வில் நிலைபெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் சிருஷ்டியில் பிறப்பதும் இல்லை, பிரளயத்தில் அழிவதும் இல்லை.

...........................................................................................................................

மம யோனிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம் ததாம்யஹம்/
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத // 14.3

மம - என்னுடைய; யோநி: - பிறப்பிடம்; மஹத் ப்ரஹ்ம - படைப்பிற்குக் காரணமான மூலப்ரகிருதி; தஸ்மிந் - அந்தப் பிறப்பிடத்தில்; கர்பம் - உயிரினங்களின் கருவை; ததாமி - படைக்கிறேன்; அஹம் - நான்; ஸம்பவ: - உற்பத்தி; ஸர்வ பூதாநாம் - சகல சராசரங்களுடைய; தத் - அதிலிருந்து; பவதி - ஏற்படுகிறது; பாரத - பரதக்குலத் தோன்றலே

14. 3 பரதக்குலத் தோன்றலே! பிரஹ்மம் என்றழைக்கப்படும் மொத்தப் பருப்பொருளின் கருப்பொருளே பிறப்பிற்கு மூலகாரணமாக இருக்கிறது. நான் அந்த பிரஹ்மத்தைக் கருவுறச் செய்து, எல்லா உயிரினங்களும் பிறப்பதைச் சாத்தியமாக்குகிறேன்!

...........................................................................................................................

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: /
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா// 14.4

ஸர்வயோநிஷு - பலவிதமான அனைத்துப் பிறப்பிடங்களிலும்; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; மூர்தய: - உருவங்கள் கொண்ட பிராணிகள்; ஸம்பவந்தி - உண்டாகின்றனவோ; யா: - எத்தனை; தாஸாம் - அவை எல்லாவற்றிற்கும்; ப்ரஹ்ம - மேலான; மஹத் யோநி: - பிறப்பிடம்; அஹம் - நான்; பீஜப்ரத: - விதையளிக்கும்; பிதா - தந்தை

14. 4 குந்தியின் மைந்தனே, புரிந்துகொள். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமாகப் பிரகிருதி இருக்கிறது. அவை பிறப்பதற்குச் சாத்தியமான மூல வித்துக்குரிய தந்தை நானே!

...........................................................................................................................

ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ரு'திஸம்பவா: /
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம் // 14.5

ஸத்த்வம் - ஸத்வ குணம்; ரஜ: - ரஜோ குணம்; தம: - தமோ குணம்; இதி - என்ற; குணா: - மூன்று குணங்களும்; ப்ரக்ருதிஸம்ப_வா: - ப்ரக்ருதியிலிருந்து உண்டான; நிபத்நந்தி - கட்டுகின்றன; மஹாபாஹோ - அர்ஜுனா; தேஹே - இவ்வுடலில்; தேஹிநம்- ஜீவாத்மாவை; அவ்யயம்

  • அழிவற்றதான

14. 5 உலகியல் இயல்புகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று விதமான குணங்களைக் கொண்டது. ஒரு உயிர் பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்பொழுதே, இந்த மூன்றுவிதமான குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாச'கமநாமயம் /
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞானஸங்கேந சாநக // 14.6

தத்ர - அதிலும்; ஸத்த்வம்- ஸத்வ குணம்; நிர்மலத்வாத் - தூய்மையானதால்; ப்ரகாச'கம் - ஒளி கொடுக்கக்கூடியது; அநாமயம் - பாவங்களற்றது; ஸுகஸங்கேந - இன்பத்தில் கொண்டுள்ள தொடர்பினாலும்; பத்நாதி - கட்டுகின்றது; ஜ்ஞானஸங்கேந ச -ஞானத்தில் கொண்ட தொடர்பினாலும்; அநிக - பாவமற்றவனே

14. 6 ஒ! குற்றமற்றவனே! ஸத்வ குணம் மற்ற குணங்களைவிட மிகத் தூய்மையானதாதலால் ஒளி வீசக்கூடியது. ஒருவரை பாவங்கள் செய்வதிலிருந்து விடுவிக்கும். இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல் அறிவை வளர்த்துக்கொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் சந்தோஷம் என்ற கருத்தினால் கட்டுண்டு விடுவார்கள்.

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ரு'ஷ்ணாஸங்கஸமுத்பவம் /
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம் // 14.7

ரஜ: - ரஜோ குணம்; ராகாத்மகம் - விருப்பு வடிவாகின்ற; வித்தி - அறிந்துகொள்; த்ரு'ஷ்ணாஸங்க ஸமுத்பவம் -ஆசை, பற்று இவற்றில் உண்டானதாக; தத் - அது; நிபத்நாதி - கட்டுகின்றது; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; கர்மஸங்கேந - கர்மங்களிலும் கர்மங்களின் பயன்களிலும் உள்ள தொடர்பால்; தேஹிநம் - ஜீவாத்மாவை

14. 7 குந்தியின் மைந்தனே, தெரிந்துகொள், ரஜஸ் என்பது வரம்பு கடந்த விருப்பங்களையே இயல்பாகக் கொண்டிருப்பதால், இது ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும். ரஜஸ், மனிதர்களைத் தாங்கள் செய்யும் செயல்களுடன் இணைத்துப் பந்தப்படுத்தும்.

தமஸ்த்வஜ்ஞானஜம் வித்தி மோஹநம் ஸர்வஸேஹிநாம் /
ப்ரமாதாஸஸ்யநித்ராபிீஸ்ததிபத்நாதி பரத // 14.8

தம: - தமோகுணமோ; து - ஆனால்; அஜ்ஞாநஜம்-அஞ்ஞானத்திலிருந்து உண்டானதாக; வித்தி ; அறிந்துகொள்; மோஹநம் - மயக்கக் கூடிய; ஸர்வஸேஹிநாம் - உடலெடுத்துள்ள எல்லோரையும்; ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி: - வீணான செயல்களில் ஈடுபடுவது, சோம்பல், தூக்கம் இவற்றால்; தத் - அது; நிபத்நாதி - கட்டுகின்றது; பரத - பரதக்குலத் தோன்றலே

14. 8 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், செயல்திறன் அற்ற நிலையிலிருந்து பிறக்கும் தமஸ், மனிதர்களை மருட்சிக் குள்ளாக்குகிறது. இது கவனமின்மை, சோம்பேறித்தனம் மற்றும் அதிகப்படியான உறக்கம் ஆகியவற்றால் மனிதர்களைப் பந்தப்படுத்தும்.

ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பரத /
ஜ்ஞாநமாவ்ரு'த்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத // 14.9

ஸத்த்வம் - ஸத்வ குணம்; ஸுகே - ஸுகத்தில்; ஸஞ்ஜயதி - ஈடுபடுத்துகிறது; ரஜ - ரஜோ குணம்; கர்மணி - செயலில்; பரத - பரதக்குலத் தோன்றலே; ஜ்ஞாநம் - ஞானத்தை; ஆவ்ரு'த்ய - மறைத்து; தம: து - தமோகுணமோ; ப்ரமாதே - கவனமின்மையில்; ஸஞ்ஜயதி - ஈடுபடுத்துகின்றது; உத - சொல்லப்படுகிறது

14. 9 பரதக்குலத் தோன்றலே, ஸத்வ குணம் ஒருவரை மகிழ்ச்சியான நிலைக்கும், ரஜோ குணம் ஒருவரை கர்ம பலனிற்கும், தமோ குணம் முட்டாள்தனத்திற்கும் எடுத்துச் செல்கிறது.

ரஜஸ்தமச்'சாபிபூய ஸத்த்வம் பவதி பரத /
ரஜ: ஸத்த்வம் தமச்'சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா // 14.10

ரஜ: - ரஜோ குணத்தையும்; தம: ச - தமோ குணத்தையும்; அபூய - அடக்கி; ஸத்த்வம் - ஸத்வ குணம்; பவதி - மேலோங்குகின்றது; பரத

  • பரதக்குலத் தோன்றலே; ரஜ: - ரஜோ குணம்; ஸத்த்வம் - ஸத்வ குணத்தையும்; தம: ச - தமோ குணத்தையும்; ஏவ - அப்படியே; தம: -தமோகுணம்; ஸத்த்வம் - ஸத்வ குணத்தையும்; ரஜ: -ரஜோ குணத்தையும்; ததா -இவ்வகையில்

14. 10 ஓ பரத வீரா! சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தை அடக்கியும், சில நேரங்களில் ஸத்வம் ரஜோ குணத்தை அடக்கியும், சில சமயங்களில் தமோ குணம், ரஜஸ் மற்றும் ஸத்வ குணத்தை அடக்கியும் மேலெழுகிறது. இவ்வகையில் ஒன்றை ஒன்று விஞ்ச எப்பொழுதும் போட்டி நடந்துகொண்டே இருக்கும்.

ஸர்வத்வாரேஷு தேஹேऽஸ்மின் ப்ரகாச' உபஜாயதே /
ஜ்ஞானம் யதா ததா வித்யாத்விவ்ரு'த்தம் ஸத்த்வமித்யுத //

ஸர்வத்வாரேஷு - வாயில்கள் அனைத்திலும்; தேஹே - உடலிலும்; அஸ்மிந் - இந்த ; ப்ரகாச': - ஒளிருதன்மை ; உபஜாயதே - உண்டாகின்றதோ; ஜ்ஞானம் - ஞானம்; யதா - எப்பொழுது; ததா - அப்பொழுது; வித்யாத்

  • அறிந்துகொள்ள வேண்டும்; விவ்ரு'த்தம் - மேலோங்கி உள்ளது; ஸத்த்வம் - ஸத்வ குணமே; இதி - என்று; உத - சொல்லப்படுகிறது

14. 11 ஞான ஒளி, இந்த உடலில் உள்ள எல்லாப் புலன்களையும் ஒளிரச் செய்கிறபோது ஸத்வ குணம் மேலோங்கி நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

லோப: ப்ரவ்ரு'த்திராரம்ப: கர்மணாமச'ம: ஸ்ப்ரு'ஹா /
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே பரதர்ஷப //

லோப - பேராசை; ப்ரவ்ரு'த்தி: - உலகியல் கர்மங்களில் ஈடுபாடு; ஆரம்ப

  • தொடங்குதல்; கர்மணாம் - கர்மங்களை; அச'ம - அமைதியின்மை; ஸ்ப்ரு'ஹா - உலகியல் நுகர்பொருட்களில் பேராவல்; ரஜஸி - ரஜோ குணம்; ஏதாநி - இவையாவும்;ஜாயந்தே - உண்டாகின்றன; விவ்ருத்தே - அதிகமாகும்போது; பரதர்ஷப - பரத வம்சத்தோரில் உயர்ந்தவனே 14. 12 பரத வம்சத்தோரில் உயர்ந்தவனே! எப்பொழுது ரஜோ குணம் மேலெழுகின்றதோ, அப்பொழுது ஆழமான பற்றுதல், கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்சி ஆகியவை மேலெழும்புகின்றன.

...........................................................................................................................................

அப்ரகாசோ'ப்்ரவ்ரு'த்திச்'ச ப்ரமாதோ மோஹ ஏவ ச /
தமஸ்யேதானி ஜாயந்தே விவ்ரு'த்தே குருநந்தன // 14.13

அப்ரகாச': - ஒளியின்மை; அப்்ரவ்ரு'த்தி: - செய்யவேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை; ச - மேலும்; ப்ரமாத: - மூடத்தனம்; மோஹ: - புத்தி மயக்கம்; ஏவ - நிச்சயமாக; ச - மேலும்; தமஸி - தமோ குணம்; ஏதானி -இவையனைத்தும்; ஜாயந்தே - உண்டாகின்றன; விவ்ருத்தே - அதிகமாகும் போது; குருநந்தன - குரு வம்சத்தில் பிறந்தவனே

14. 13 ஓ! குரு வம்சத்தில் பிறந்தவனே, அறியாமை (தமோ குணம்) அதிகரிக்கும்பொழுது விவேகமற்ற தன்மை, மாயை, செயலற்ற தன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகியவை வெளிப்படுகின்றன.

...........................................................................................................................................

யதா ஸத்த்வே ப்்ரவ்ரு'த்தே து ப்ரலயம் யாதி தேஹப்்ருத்/
ததோத்தமவிநாம் லோகாநமலாந்-ப்ரதிபத்யதே // 14.14

யதா - எப்பொழுது; ஸத்த்வே - ஸத்வ குணம்; ப்்ரவ்ரு'த்தே - பெருகி உள்ள பொழுது; ப்ரலயம் - இறப்பை; யாதி - அடைகின்றானோ; தேஹப்்ருத் - இந்த மனிதன்; ததா து - அப்பொழுதே; உத்தமவிநாம் - உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய; லோகாந் - உலகங்களை; அமலாந் - நிர்மலமான; ப்ரதிபத்யதே - அடைகின்றான்

14. 14 ஒருவர் ஸத்வ குணம் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் உயர் உலகங்களைச் சென்றடைவார்.

...........................................................................................................................................

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கீஷு ஜாயதே /
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே // 14.15

ரஜஸி - ரஜோ குணத்தின் ஆதிக்கத்தில்; ப்ரலயம் - இறப்பை; கத்வா - அடைந்து; கர்மஸங்கீஷு- கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே; ஜாயதே - பிறக்கின்றான்; ததா - அவ்வாறே; ப்ரலீந: - இறந்தவன்; தமஸி - தமோ குணம் அதிகமாக இருக்கும் போது; மூடயோநிஷு - அறிவில்லாத மனிதர்களிடையே; ஜாயதே- பிறக்கின்றான்

14. 15 ஒருவர் ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணத்தில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் செயல்களில் ஈடுபாடு உடையவர்களிடையே பிறக்கிறார். ஒருவர் அறியாமை நிலையில் (தமஸில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால் அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கிறார்.

கர்மண: ஸுக்ரு’தஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம் /
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞானம் தமஸ: பலம் // 14.16

கர்மண: - செயலின்; ஸுக்ரு’தஸ்ய - சிறந்த; ஆஹு: - சொல்கின்றார்கள்; ஸாத்த்விகம் - ஸாத்வீகமானது; நிர்மலம் - தூய்மையானது; பலம் - பயனோ; ரஜஸ: - ராஜஸமான செயலின்; து - ஆனால்; பலம் - பயன்; து:கம் - துயரமானது; அஜ்ஞானம் - அறியாமை; தமஸ: - தாமஸீக செயலின்; பலம் - பயன்

14. 16 ஒருவர் ஸத்வ நிலையில் செயலாற்றும்பொழுது, தூய்மையானவர் ஆகிவிடுகிறார். ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணம்) செயல்படும்பொழுது மனக்கவலை விளைகிறது. அறியாமை நிலையிலிருந்து (தமஸ்) செயல்கள் செய்யப்படும்பொழுது விவேகமற்ற தன்மை விளைகிறது.

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞானம் ரஜஸோ லோப ஏவ ச /
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞானமேவ ச // 14.17

ஸத்த்வாத் - ஸத்வ குணத்திலிருந்து; ஸஞ்ஜாயதே - உண்டாகின்றது; ஜ்ஞானம் - ஞானம்; ரஜஸ: - ரஜோ குணத்திலிருந்து; லோப: ஏவ ச - பேராசையே; ப்ரமாதமோஹௌ - கவனமின்மையும், தமஸ: - தமோ குணத்திலிருந்து; மதிமயக்கமும்; பவத: - உண்டாகின்றன; அஜ்ஞானம் ஏவ ச - அறியாமையும்

14. 17 ஸத்வத்தின் நிலையிலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜஸிலிருந்து பேராசை உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து விவேகமற்ற

தன்மைய, முட்டாள்தனம் மற்றும் மாயை உண்டாகிறது.

ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: /
ஜநந்யகுணவ்’ரத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: // 14.18

ஊர்த்வம் - உயர்ந்த; கச்சந்தி - செல்கின்றனர்; ஸத்த்வஸ்தா: - ஸத்வ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள்; மத்யே - நடுவில் ; திஷ்டந்தி - நிற்கின்றார்கள்; ராஜஸா: - ரஜோ குணத்தில் நிலை பெற்ற மனிதர்கள்; ஜநந்யகுணவ்’ரத்திஸ்தா: - வெறுக்கத்தக்க குணங்களில் ஈடுபடுபவர்கள்; அத: - தாழ்நிலை ; கச்சந்தி - அடைகின்றார்கள்; தாமஸா: - தாமஸ குணம் உடைய மனிதர்கள்

14. 18 ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் உலகங்களுக்குச்செல்கிறார்கள்; இரஜோகுணத்தில் வாழ்பவர்கள் பூமியைச் சார்ந்த உலகங்களில் வாழ்கிறார்கள்; தமோ குணத்தில் வாழ்பவர்கள் கீழ் உலகங்களுக்குச் செல்கிறார்கள்.

நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபச்’யதி /
குணேப்யச்’ச பரம் வேத்தி மத்பாவம் ஸோऽதிகச்சதி // 14.19

ந - இல்லை; அந்யம் - வேறு ஒருவனை; குணேப்ய: - குணங்களிலிலிருந்து; கர்தாரம் - கர்த்தா என்று; யதா - எப்பொழுது; த்ரஷ்டாநுபச்’யதி - சரியாகப் பார்க்கும் ஒருவர்; குணேப்ய: ச - குணங்களின் இயல்பிலிருந்து; பரம் - அப்பாற்பட்ட; வேத்தி - அறிகிறானோ; மத்பாவம் - என் ஆன்மிக இயல்பை; ஸ: - அவன்; அதிகச்சதி - உணர்ந்துகொள்ள முடியும்

14. 19 எல்லாச் செயல்களிலும் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றும், பரம்பொருள் இம்முக் குணங்களையும் கடந்தவர் என்பதையும் உணரும் ஒருவர் என் தெய்விக நிலையை உணர்ந்துகொள்ள முடியும்.

குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந் /
ஜந்மம்ரு’த்யுஜராது:கைர்விமுக்தோऽம்ரு’தமச்’நுதே // 14.20

குணாந் - குணங்களையும்; ஏதாந் - இந்த; அதீத்ய - கடந்து; த்ரீந் - மூன்று; தேஹீ - புருஷன்; தேஹஸமுத்பவாந் - உடல் தோன்றுவதற்குக் காரணமான; ஜந்ம ம்ருத்யு ஜரா துஃகை: - பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும்; விமுக்த: - விடுபட்டு; அம்ருதம் - பரமானந்தத்தை; அச்நுதே - அனுபவிக்கின்றான்

14. 20 மனித உடலில் இருக்கும் ஒருவர், இம் மூன்று குணங்களைக் கடக்க முடிந்தால், அவர் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் துக்கங்களிலிருந்து விடுபட முடியும். இந்த வாழ்க்கையிலேயே அமிர்தத்தை ருசிக்க முடியும்.

அர்ஜுந உவாச

கைர்லிங்கைஸ்த்ரீங்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ /
கிமாசார: கதம சைதாம்ஸ்த்ரீந் குணாநதிவர்ததே // 14.21

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கை: - எந்தெந்த; லிங்கை: - இலக்கணங்களோடு; த்ரீந் - மூன்று; குணாந் - குணங்களையும்; ஏதாந்

  • இந்த; அதீத: - கடந்த மனிதன்; பவதி - இருக்கின்றான்; ப்ரபோ - பிரபுவே; கிமாசார: - எத்தகைய நடத்தை உள்ளவனாக; கதம் - எந்த உபாயத்தினால்; ச - மேலும்; ஏதாந் - இந்த; த்ரீந் - மூன்று; குணாந் - குணங்களையும்; அதிவர்ததே - கடக்கின்றான்

அர்ஜுனன் சொன்னது

14. 21 இறைவா, இந்த குணங்களைக் கடந்து நிற்கும் ஒருவரை எந்த அடையாளங்களால் அறிந்துகொள்ளலாம்? அவருடைய நடவடிக்கை எத்தகையதாக இருக்கும்? அவர் மூன்று குணங்களையும் எவ்வாறு கடக்கிறார்?

ஸ்ரீபகவாந் உவாச

ப்ரகாச'ம் ச ப்ரவ்ரு'த்திம் ச மோஹமேவ ச பாண்டவ /
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ரு'த்தாநி ந நிவ்ரு'த்தாநி காங்க்ஷதி//
14.22
உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே /
குணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்டதி நேங்கதே// 14.23

ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாச்’மகாஞ்சந: /
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி: //14.24

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: /
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே //14.25

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; ப்ரகாச்’ம் ச - ஒளியையும்; ப்ரவ்ரு’த்திம் ச - பற்றுகளையும்; மோஹம் ஏவ - மருட்சியையும்; பாண்டவ - பாண்டு புத்திரனே; ந த்வேஷ்டி - வெறுப்பதில்லையோ; ஸம்ப்ரவ்ரு’த்தாநி - அவை வரும் பொழுது; ந - இல்லை; நிவ்ரு’த்தாநி - அவை விலகும் போது; காங்க்ஷதி ச - விரும்புவதும்

உதாஸீநவத் ஆஸீந: - ஸாக்ஷியைப்போல் இருந்துகொண்டு; குணை: - குணங்களால்; ய: - எவன்; ந விசால்யதே - அசைக்கப்படுவதில்லையோ; குணா: - குணங்களே; வர்த்தந்தே - இயங்குகின்றன; இதி ஏவ - என்று அறிந்துகொண்டு; ய: - எவன்; அவதிஷ்டதி - இருக்கின்றானோ; ந இங்கதே - அதிலிருந்து நிலைகுலைவதில்லையோ

ஸமது:கஸுக: - இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவானோ; ஸ்வஸ்த:

  • தன்னுள் நிலைத்துநிற்கின்றானோ; ஸமலோஷ்டாச்’மகாஞ்சந: - மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாக மதிப்பானோ; துல்ய ப்ரிய அப்ரிய: - வேண்டியது வேண்டாதது இரண்டையும் ஒன்றாகவே நினைப்பானோ; தீர: - ஞானியோ; துல்ய நிந்தா ஆத்மஸம்ஸ்துதி: - இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றெனக் கருதுவானோ

மாநாபமாநயோ: துல்ய: - பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பானோ; துல்ய: - சமநோக்குக் கொண்டவனோ; மித்ர அரிபக்ஷயோ:

  • நண்பரிடத்திலும் பகைவரிடத்திலும்; ஸர்வாரம்பபரித்யாகீசெயல்களனைத்திலும் நான் செய்கிறேன் என்ற மனப்பான்மை விட்டவனோ; குணாதீத: - முக்குணங்களையும் கடந்தவன்; ஸ: - அந்த மனிதன்; உச்யதே - சொல்லப்படுகின்றான்

ஸ்ரீபகவான் சொன்னது

14. 22-25 பாண்டு புத்திரனே, யார் ஒருவர் ஒளியை (ஸாத்விகத்தை), பற்றுகளை (ரஜஸை), மாயத்தோற்றத்தை (தமஸை) அவை இருக்கும்பொழுது வெறுக்காமலும், அவை மறைந்துவிட்டால் ஏக்கம்கொண்டு கவலைப்படாமலும், குணங்களைக் கடந்த நிலையில் நிலைகொண்டு, குணங்கள்

மட்டுமே செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு திடமாக இருக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, மண்ணையும் கல்லையும் மற்றும் பொன்னையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இருந்து, மரியாதையிலும் அவமரியாதையிலும் சமநிலை குலையாமல் இருந்து, நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தி, பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே மூன்று குணங்களையும் கடந்தவராகக் கருதப்படுகிறார்.

மாம் ச யோऽவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே /
ஸ குணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்மபூயாய கல்பதே // 14.26

மாம் - என்னை; ச - மேலும்; ய: - எவன்; அவ்யபிசாரேண - வேறு எதிலும் நாட்டமில்லாத; பக்தியோகேந - பக்தி யோகத்தினால்; ஸேவதே - வழிபடுகின்றானோ; ஸ: - அவன்; குணாந் - மூன்று குணங்களையும்; ஸமதீத்ய - முற்றிலுமாகக் கடந்து; ஏதாந் - இந்த; ப்ரஹ்மபூயாய- பரபிரஹ்ம நிலையை அடைவதற்கு; கல்பதே - தகுதி பெறுகின்றான்

14. 26 எவரொருவர் முழுமையான தெய்விகச் சேவையில் தம்மை உட்படுத்திக்கொள்கிறாரோ, எந்தச் சூழ்நிலையிலும் நிலை தவறாமல் இருக்கிறாரோ, அவர் உலக வாழ்க்கையின் இயல்பான முக் குணங்களையும் கடந்து, பிரஹ்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார்.

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ரு’தஸ்யாவ்யயஸ்ய ச /
சா’ச்’வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச //14.27

ப்ரஹ்மண: - பரப்ரம்ஹத்திற்கும்; ஹி - நிச்சயமாக; ப்ரதிஷ்டா - உறைவிடம்; அஹம் - நானே; அம்ரு’தஸ்ய - அம்ருத நிலைக்கும்; அவ்யயஸ்ய - அழிவற்றதான; ச - மேலும்; சா’ச்’வதஸ்ய- ; ச - மேலும்; தர்மஸ்ய - எப்பொழுதும் இருக்கக் கூடிய தர்மத்திற்கும்; ஸுகஸ்ய - ஆனந்தத்திற்கும்; ஏகாந்திகஸ்ய- வேறுபாடற்ற ஒரே சீரான; ச - மேலும்

14.27 மேலும் நிலையானதும், அழிவற்றதும், நித்தியமானதும், உச்சநிலை ஆனந்தத்தின் நேர்மையான வெளிப்பாடாக

இருப்பதுமான அந்த பிரஹ்மத்தின் ஆதாரமாக இருப்பதும் நானே.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவக்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே குணத்ரயவிபாகயோகோ நாம சதுர்தசோ'த்யாய: //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவக்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான, மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'குணத்ரயாவிபாகயோகம்' எனப் பெயர் படைத்த பதினான்காவது அத்தியாயம்.

Illustration of Krishna's hands playing the flute

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

  1. அப்ரகாஶோ'ப்ரவ்ரு'த்திச்'ச 14.13
  1. இதம் ஜ்ஞானமுபாச்'ரித்ய 14.2
  1. உதாஸீநவதாஸீநோ குணைர்யோ 14.23
  1. ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா 14.18
  1. கர்மண: ஸுக்ரு'தஸ்யாஹு: 14.16
  1. கைர்லிங்கைஸ்த்ரீங்குணாநேதாநதீதோ 14.21
  1. குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ 14.20
  1. தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் 14.6
  1. தமஸ்த்வஜ்ஞானஜம் வித்தி 14.8
  1. நாந்யம் குணேப்ய: கர்தாரம் 14.19
  1. ப்ரகாஶம் ச ப்ரவ்ரு'த்திம் ச 14.22
  1. பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி 14.1
  1. ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம 14.27
  1. மம யோனிர்மஹத்ப்ரஹ்ம 14.3
  1. மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ 14.25
  1. மாம் ச யோ'வ்யபிசாரேண பக்த 14.26
  1. யதா ஸத்த்வே ப்ரவ்ரு'த்தே து 14.14
  1. ரஜ: ஸத்த்வம் தமச்'சைவ 14.10
  1. ரஜஸி ப்ரலயம் கத்வா கர்ம 14.15
  1. ரஜோ ராகாத்மகம் வித்தி 14.7
  1. லோப: ப்ரவ்ரு'த்திராரம்ப: 14.12
  1. ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: 14.5
  1. ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: 14.9
  1. ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞானம் 14.17
  1. ஸமது:கஸுக: ஸ்வஸ்த: 14.24
  1. ஸர்வத்வாரேஷு தேஹே'ஸ்மிந் 14.11
  1. ஸர்வயோனிஷு கௌந்தேய 14.4

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசர் துருபதனின் மகன்
சி'கண்டி: சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதாணன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை'ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரர்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பீமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்

ஸஹதேவன் : ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன் : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்

பீஷ்மர் : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்

த்ரோணர் : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜூனன்.

விகர்ணன் : கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்

கர்ணன் : பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல்

அச்’வத்தாமன் : துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்

க்’ருபர் : கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்

ச’ல்லியன் : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.)

ஸௌமாதத்தி : பகிர்களின் அரசர்

துச்’சா’தனன் : கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரெளபதியைத் துகிலுரித்தவர்

துரியோதனன் : கௌரவ சகோதரர்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின்

  • வேறு சில பெயர்கள்

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன் : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்

அரிஸூதனன் : பகைவர்களை அழிப்பவர்

க்ருஷ்ணன் : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொருபமானவர், பிரஹ்ம சொருபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்

கேசவன் : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்

கேசி நிஷூதனன் : கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்

கோவிந்தன் : எல்லா உயிர்களைப் பற்றியும் தெரிந்திருப்பவர்

பகவான் : ஆறுவித குணங்களை உடையவர். அவை

  1. பரிபூரண ஞானம்.
  1. பரிபூரண வைராக்கியம்.
  1. பரிபூரண பலம்
  1. பரிபூரண கீர்த்தி
  1. பரிபூரண தேஜஸ்
  1. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)

புருஷோத்தமன் : மேலான புருஷன்

மதுஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்

மாதவன் : லக்ஷ்மிக்குத் தலைவர்

யாதவன் : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்

யோகேச்வரன் : யோகத்திற்குத் தலைவர்

வாஸுதேவன் : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்

வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்

ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்

ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்

ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்

அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜூனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்

கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்

கிரீடி : கிரீடம் தரித்தவர்

குடாகேஸன் : தூக்கத்தை வென்றவர்

குருநந்தனன் : ‘குரு’ வம்சத்தில் பிறந்தவர்

கௌந்தேயன் : குந்தியின் மகன்

தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.

பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்

பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்

பார்த்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்

பாரதன் : பரத குலத்தில் பிறந்தவர்

ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்

குரு வம்சம்