விழிப்புணர்வும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனசாட்சியும்

செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தக் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவருடைய மஹிமைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.
செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய விதிகளோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்ற தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும் புலன்கள் ஐந்து, புலன்களின் விஷயங்கள் ஐந்து,
விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இங்ஙனம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், உடல்- மனம் எனப்படும் க்ஷேத்ரம், அதன் செயல்பாடுகள், அதன் மாற்றங்கள், அவை எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய அவருடைய விளக்கங்களைக் கவனமாகக் கேட்குமாறு சொல்கிறார்.
காலங்காலமாக, இந்த உண்மைகள் பல ரிஷிகளால் விளக்கப்ப்ட்டிருக்கின்றன. வேத சாாீஸ்த்ரங்கள், உதாரணத்திற்கு ப்ரிஹ்ம ஸூத்ரங்கள், உண்மைகளை மிகத் தெளிவாகச் சரியான விளக்கங்களோடு விளக்கியிருக்கின்றன.

இலட்சக்கணக்கான உள்ளுலக விஞ்ஞானிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்த உள்ளுலக ஆராய்ச்சிகள் இதே உண்மைகளைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றன. மனிதனுடைய உண்மையான தன்மை, தூய்மையான விழிப்புணர்வே! க்ஷேத்ரம் எனப்படும் உடல்-மனம் பற்றிய செயல்களை அறிந்த க்ஷேத்ரஜ்ஞனாக மனிதன் இருக்கிறான்.
மீண்டும் மீண்டும் இந்த அத்தியாயம் முழுவதும் கிருஷ்ணர், உடலை அறிந்தவனோடு உடலையும், மனத்தை அறிந்தவனோடு மனத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறார். களத்தை, களம் அறிந்தவனோடு சேர்க்கும்பொழுதுதான் பிரச்சினையே எழுகிறது.
நாம், இந்த உடலையும் மனத்தையும், நம்முடைய ஸம்ஸ்காரங்களை, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு நோக்கத்திற்காகவே கொண்டுவந்திருக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இந்தப் பிறப்பிற்காக இந்த உடல்-மன ஆடையை வாடகைக்கு எடுத்திருப்பதையும், நம்மைப் படிப்படியாக அதனோடேயே இணைத்துக்கொள்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம். சில நாட்களுக்கு பிறகு, மற்ற எதையும்விட அந்த ஆடையே நமக்கு மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த ஆடை சிறிது காலத்திற்குப் பிறகு, தேய ஆரம்பித்தவுடன் நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம்.
மனஸாகூஷி - சமூகம் தந்த கட்டுறு மனப்பாங்கு
உண்மையில் இது நம் தவறல்ல. சமூகம் நம் மேல் அடுக்குடுக்கான கட்டுறு மனப்பாங்குகளை விதித்திருக்கிறது. நாம் என்பது இந்த உடலும் மனமும்தான் என்று நம்மை நம்பவைத்து முட்டாளாக்கியிருக்கிறது. நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம், இந்த உடல், மனத்துடன்கூடிய ஒரு தனி ஜீவன் என்றேதான் சொல்லப்பட்டிருக்கிறோம்.
> உடலை அறிந்தவனோடு
> உடலையும்,
> மனத்தை அறிந்தவனோடு
> மனத்தையும் சேர்த்துக்
> குழப்பிக்கொள்ள
> வேண்டாம்!
இந்த உடலுக்கும் மனத்துக்கும் ஒரு
பெயர்கூட கொடுக்கப்படுகிறது. சில
வருடங்களுக்குப் பிறகு நாம் நம்மை
அந்தப் பெயரோடு சம்பந்தப்படுத்திக்
கொள்கிறோம். என்னுடைய பெயர்
இதுதான், நான் இன்னாருடைய மகன்,
நான் ஒரு டாக்டர் என்று அடுக்குடுக்காக
பல அடையாளங்களோடு, அதாவது நம்
பெயர், பெற்றோர், தொழில், நண்பர்கள்
ஆகியவற்றோடு நம்மை இணைத்து
நம்மையே அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
இது பல தபால் முத்திரைகள் குத்தப்பட்ட ஒரு அஞ்சல் கட்டைப்போலத்தான். நாம் ஒரு அஞ்சல்கட்டை (Parcel) இங்கிருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பினால், அது அனுப்பப்படுவதற்கு முன்னால் ஒரு முத்திரை குத்தப்படுகிறது. அதைப் போலவே, அது செல்லும் வழிநெடுக, அது ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு முத்திரையாக வாங்கிக்கொள்கிறது. அது திருவண்ணாமலை சென்று சேரும் சமயத்தில் நிறைய முத்திரைகள் பெற்றிருக்கும். இப்பொழுது அந்தக் கட்டானது, தன் மீது குத்தப்பட்டிருக்கும் முத்திரைகள்தான் 'தான்' என்று நினைத்துக்கொள்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் பொருள்தான் 'தான்' என்பதை அது மறந்தே விட்டது!
உடல்-மனத்தை வழிநடத்திச்
செல்லும் விழிப்புணர்வோடு நாம்
இணைவதற்குப் பதிலாக, நாம் நம்மை
இந்த உடலோடும் மனத்தோடும்
இணைத்துக்கொள்ளும்பொழுது, இதுதான்
நடக்கிறது.
'நாம் க்ஷேத்ரம் அல்ல, அதாவது முத்திரைகள் அல்ல; நாம் க்ஷேத்ரஜ்ஞன்தான், அதாவது உள்ளே இருக்கும் பொருள்தான்' என்பதை நாம்தான் மறந்துவிட்டோம். நாம் க்ஷேத்ரஜ்ஞனை க்ஷேத்ரத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்கிறோம். இயற்கையாக, உடல்-மன நிலையில் இருந்து வெளிப்படும் எல்லாப் பிரச்சினைகளும் நம்மைப் பாதிக்கின்றன. உடல்-மனத்தில் நடக்கும் செயல்பாடுகள் நம் வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
> விழிப்புணர்வு இன்றி
> மனசாட்சியோடு மட்டும்
> இருக்கும் ஒருவர்தான்
> துன்பப்படுகிறார்!
அடுத்த சில ஸ்லோகங்களில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அந்த செயல்பாடுகள் என்ன? அவை எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்புரிகிறது என்பதைப் பற்றிப் படிப்படியாக விளக்குகிறார்.
கிருஷ்ணர், மகத்தான ஐந்து மூலப்பொருட்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம் அல்லது முடிவெடுக்கும் மனம் மற்றும் பத்து புலன்களைப் பற்றி பேசுகிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அவர் சொல்கிறார், பத்து புலன்கள்- இந்த்ரியாநி தச'கம்ச:. நமக்கு ஐந்து புலன்கள்தான் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம். நமக்கு ஐந்து கர்மேந்த்ரியங்களும், ஐந்து ஞானேந்த்ரியங்களும் இருக்கின்றன. ஞானேந்த்ரியம் என்பது அறிவை உள்வாங்கிக்கொள்ளும் ஐந்து இந்த்ரியங்கள். அவை கேட்டல், தொடுஉணர்வு, பார்வை, ருசி மற்றும் வாசனை முதலியவற்றை உணரும் காதுகள், தோல், கண்கள், நாக்கு மற்றும் மூக்கு.
கர்மேந்த்ரியம் என்பது செயல்பரியும் புலன்கள்; அவையாவன, வாய், கைகள், கால்கள், மல-மூத்திரக் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு மற்றும் பிறப்புறுப்பு (இனப்பெருக்க உறுப்பு). இந்தப் பத்து புலன்களுடன், பற்று வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், உடல், பரஸ்பர ஈர்ப்பு, மற்றும் விழிப்புணர்வு ஆகியனவும்கூட செயல்பாடுகள் நிகழும் களத்திற்குப் பங்களிக்கின்றன.
உண்மையில் 'விழிப்புணர்வு' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. நம் விழிப்புணர்வு கடினமாகும்பொழுது, அது மனஸாக்ஷியாக மாறிவிடுகிறது. விழிப்புணர்வுக்கும் மனஸாக்ஷிக்கும் வித்தியாசம் இருக்கிறது.
விழிப்புணர்வு - கடவுள் தந்தது
உதாரணத்திற்கு, நம் மனசாட்சியின்படிதான் நாம் 'சரி, தவறு' என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதை அடிப்படையாகக்கொண்டே நாம் செயல்படுகிறோம்.
அடுத்த தலைமுறைக்கு, நாம் இதே உபதேசத்தைக் கொடுத்தோமானால், அது சரியாக வராமல் போகலாம்; ஏனென்றால் அவர்கள் வேறு எதையோ 'சரி, தவறு' என்று நினைக்கலாம். நாம் செய்தவற்றையே அவர்களையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தும்பொழுது, நாம் அதை ஒரு நல்லொழுக்கமாகவும், மனஸாக்ஷியாகவும் அல்லது சுயக்கட்டுப்பாடாகவும் மட்டுமே போதிக்கிறோம். நாம் அவர்களுக்கு உயிரற்ற, சாரமற்ற ஒரு சட்டத்தையே தருகிறோம்.
ஆனால், அதற்குப் பதிலாக, நம் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலைத் தரும்பொழுது, நாம் அவர்களுக்கு விழிப்புணர்வையே தருகிறோம்.
மனசாட்சியோடு மட்டும் இருக்கும்
ஒருவர்தான் எப்பொழுதும்
துன்பப்படுகிறார். அவர் உலகியல்
வாழ்வை அனுபவித்தாலும் சரி அல்லது
துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும்
சரி, அவரால் மகிழ்ச்சியாய் மட்டும்
இருக்க முடியாது, அவர் ஒன்றை
அனுபவிக்கும்பொழுதும், அதைப் பற்றிய
குற்றவுணர்ச்சியால் துன்பப்படுகிறார்;
நான் நல்லொழுக்கத்தை
நம்பவில்லை;
விழிப்புணர்வு
அனுபவத்தையே
நம்புகிறேன்!
- பரமஹம்ஸ நித்யானந்தர்
துறந்து விடும்பொழுது, அதை இழந்துவிட்டோமோ என்று வருந்துகிறார். இரு வகையிலும் அவர் வருந்துகிறார்.
ஒருபோதும் மனசாட்சியை மட்டும் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்காதீர்கள். வாழ்க்கையைப் பற்றிய புரிதலைக் கொடுங்கள். நான் இதைத்தான் 'விழிப்புணர்வு' என்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய புரிதலைத்தான் விழிப்புணர்வு என்கிறேன். அவர்களே அனுபவித்து, ஆராய்ந்துகொள்ள அனுமதியுங்கள்.
நான் நல்லொழுக்கத்தை நம்பவில்லை. நான் விழிப்புணர்வு அனுபவத்தை நம்புகிறேன். நான் நிச்சயம் மனசாட்சியை நம்பவில்லை; விழிப்புணர்வையே நம்புகிறேன்.
மனசாட்சி, சமூகத்தால் நமக்குக் கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. மனசாட்சி என்பது சமூகக் கட்டுறு மனப்பாங்கு. விழிப்புணர்வு என்பது நம்முடைய இயல்பு.
இயற்கையாகவே, மனசாட்சி நம்முடைய முழு வாழ்க்கையையும் ஒரு சடங்காகச் செய்துவிடுகிறது. நாம் எதையும் செய்யும் முன்பாக, நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதை நாம் சீர்த்தையுடன் செய்வோம்.
நாம் செய்து கொண்டிருக்கும் செயலுக்கான அர்த்தத்தைத் தர்க்கரீதியாக நாம் தெரிந்துகொள்ளவில்லையென்றால், நாம் நம்மை அதற்குள் முழுமையாக ஈடுபடுத்தி, அதற்காக நம்மை அர்ப்பணித்துக்கொள்ள மாட்டோம்.
அடுத்த
தலைமுறையினருக்கு
மனசாட்சியை மட்டும்
கொடுக்காதீர்கள்.
வாழ்க்கையைப் பற்றிய
புரிதலையும் கொடுங்கள்!
கிருஷ்ணர், மனசாட்சியின் கடுமையான
தன்மையும், க்ஷேத்ரத்தை உருவாக்கும்
எல்லா விதிமுறைகளும்கூட களமே என்று
சொல்கிறார். அவை பருப்பொருளே,
அவை சக்தி அல்ல, அவை உங்களுடைய
'இருப்பும்' அல்ல, அவை நீங்கள் அல்ல.
இங்கே எதைக் குறிப்பிட்டாலும் அது
நீங்கள் அல்ல.
நாம் என்னவாகவெல்லாம் இல்லை
என்பதைத் தெரிந்துகொள்ளும் அந்தத்
தருணத்தில், நாம் அந்தத் தளைகளிலிருந்து
விடுதலையாகிறோம் என்பதைப்
புரிந்துகொண்டாக வேண்டும்.
நாம் இந்த உடல், மனத்தோடு
வாழ்ந்தாலும்கூட, நாம் இந்த
உடலோ, மனமோ இல்லை என்று
தெரிந்துகொண்டால் அதற்குப் பின் நாம்
அவற்றின் அடிமைகளாக இருப்பதில்லை!
> நாம் செய்து
> கொண்டிருக்கும்
> செயலுக்கான அர்த்தத்தை
> நாம் தர்க்கரீதியாகத்
> தெரிந்துகொண்டால்
> மட்டுமே, அதற்காக
> நம்மை முழுமையாக
> அர்ப்பணிப்போம்!
உங்கள் விருப்பத்திற்கு எதிராக ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும்வரை, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அதை 'அடிமைத்தனம்' என்றே சொல்லலாம். நீங்கள் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும்கூட, விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் அவற்றின் அடிமை இல்லை.
பிறப்பாலேயே நீங்கள் சுதந்திரமானவர்
நான் ஒரு சின்ன கதையைச் சொல்கிறேன். அது கிரேக்க ஞானி டையோஜெனஸ் (Diogenes) என்பவரைப் பற்றியது. ஞானி டையோஜெனஸுக்கு எதிராகச் சிலர் சதிச்செயல்களில் ஈடுபட்டனர். அவர்கள் தீவிர ஆலோசனைக்குப்பின், அவரைக் கைதுசெய்து, அடிமைச் சந்தையில் விற்றுவிட முடிவுசெய்தனர். அதனால் அவரது இருப்பிடத்திற்குச் சென்று அவரைத் தாக்கினர். அவரைக் கைதுசெய்யும்பொழுது அதை அவர் எதிர்க்கக்கூடும் என்று நினைத்தார்கள். அவரோ எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.
அவர்கள் அவரைத் தாக்கிக் கைதுசெய்யச் சென்றார்கள். ஆனால், அவரோ எந்தவித எதிர்ப்பும் காட்டாததால், அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் அமைதியாக, தம்மைத் தாக்கியவர்களைப் பார்த்து, "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று ஒரு தலைவனைப்போல கேட்டார். தாக்க வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்!
அவர்களில் ஒருவன் மட்டும் சுதாரித்துக்கொண்டு, "உன்னைப் பிடித்து, ஒரு அடிமைச் சந்தையில் விற்றுவிட வந்தோம்," என்று சொன்னான்.
அதற்கு டையோஜினஸ், "ஓ, அதை நீங்கள்
நேரிடையாகவே சொல்லியிருக்கலாமே.
இதற்கெல்லாம் திட்டம் போட்டு, பேசி
ஏன் உங்கள் நேரத்தை வீணாக்கினீர்கள்?
வாருங்கள், விலங்கை மாட்டுங்கள், எங்கே
அவை?"
தாக்க வந்தவர்கள் மிகவும்
ஆச்சரியப்பட்டார்கள். தம்மைக்
கைதுசெய்ய வந்தோரிடம் ஒருவர், தம்
கைகளை நீட்டி, அவற்றில் விலங்கிடுமாறு
அவரே கட்டளையிடுவதை அவர்கள்
முதல் தடவையாகப் பார்த்தார்கள்!
அவரே தம் கைகளில் விலங்கை மாட்டிவிடச் சொன்னபொழுது, அவர் ஒரு தலைவரைப்போலத்தான் பேசினார். கடைசியில், அவர்களுள் ஒருவன் எப்படியோ விலங்கை எடுத்து, ஒரு பக்கத்தை அவருடைய கையிலும் அடுத்த பக்கத்தைத் தன்னுடைய கையிலும் மாட்டினான்.
அப்பொழுது டையோஜினஸ் அவனைப் பார்த்து, "மடையனே, நீ ஏன் உன் கையில் விலங்கைப் பிணைத்துக் கொள்கிறாய்? என்று வினவினார். மேலும், மற்ற சதிகாரர்களைப் பார்த்து, "நீங்கள் என்னை நம்பவில்லையா? நானேதானே எனக்கு விலங்கு பூட்டிவிடக் கட்டளையிட்டேன்? வாருங்கள். என்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். ஆனால் தெளிவாக இருங்கள், என்னிடமிருந்து நீங்கள் ஓடிவிடாதீர்கள்!" என்றார்.
அவரைக் கைதுசெய்தவர்களுக்கு, இப்பொழுது லேசாக பயம் பற்றிக்கொண்டது. 'என்ன நடந்து கொண்டிருக்கிறது' என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மெதுவாக, அவர்கள் தங்களைச் சிறியவர்களாகவும் குறையுடையவர்களாகவும் உணர ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது டையோஜினஸ், "முட்டாள்களே, சுதந்திரத்தின் நுட்பம் எனக்குத் தெரியும். சுதந்திரத்தின் அடிப்படை விதிகளும் எனக்குத் தெரியும். நான் எல்லையில்லா உள்ளுலகச் சுதந்திரத்தை நிலையாக அனுபவிக்கிறேன். என்னை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. உங்களால் முடிந்த மட்டும் உங்களுடைய விளையாட்டை விளையாடிப் பாருங்கள். அது எங்குப்போய் முடியப்போகிறது என்று பார்த்துவிடலாம்,'' என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கி ஒரு அரசனைப்போல் கம்பீரமாக நடந்தார். அவரைப் பிடிக்க வந்தவர்கள்தான், அடிமைகளைப்போல அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
தெருவில் நின்றுகொண்டு இந்த வினோதக் காட்சியப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களிடம் அவர், "இவர்கள் என் அடிமைகள். ஏனென்றால் இவர்களால் என்னை விட்டுப் போகமுடியாது,'' என்று சொன்னார். உடனே அவர்கள், "டையோஜெனஸ்தான், அடிமை,'' என்று கத்தினார்கள்.
உடனே டையோஜெனஸ் தம்மருகில் இருந்தவனிடம், "இதோ பார், இப்பொழுது நீ என்னைப் போக அனுமதித்தால் நான் உடனே ஓடிவிடுவேன். ஆனால் நான் உன்னைப் போக அனுமதிக்கிறேன். நான் இந்த விலங்கிலிருந்து உன்னை விடுவிக்கிறேன் உன்னால் ஓடிவிடமுடியுமா?'' என்று கேட்டார்.
அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்: "நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள், ஏனென்றால் உங்களுக்கு என்னிடமிருந்து ஏதோ வேண்டியதிருக்கிறது. அதுதான் உங்களை என்னிடம் அடிமையாக்கி வைத்திருக்கிறது ஆனால் எனக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. அதனால்தான் நான் தலைவனாக இருக்கின்றேன்! நான் சுதந்திரமானவன்!''
உண்மையில், உங்கள் கைகளில் விலங்கு
மாட்டப்படாமல் இருக்கலாம் ஆனாலும்
நீங்கள் மனதளவில் ஒரு அடிமையாக
இருக்க முடியும். அடிமைத்தனம் என்பது
உடல் சம்பந்தப்பட்டது அல்ல; இருப்புத்
தன்மை சம்பந்தப்பட்டது.
அடிமைத்தனம் என்பது
உடல் சம்பந்தப்பட்டதல்ல;
இருப்புத் தன்மை
சம்பந்தப்பட்டது!
அவர்கள் அவரைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்கள். யாருடைய கட்டாயப்படுத்துதலும் இன்றி, அவரே, அடிமைகள் விற்கப்படும் விற்பனை மேடை மீதேறி நின்றார். ஏலம் ஆரம்பித்தது. ஏல விற்பனையாளர், “இங்கே ஒரு அடிமை வந்திருக்கிறான். அதிக விலைகொடுத்து வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம்,” என்று கூவினார்.
டையோஜினஸ் உடனே அந்த ஏல விற்பனையாளரைப் பார்த்து, “நிறுத்து! இங்கு ஒரு அடிமை இருக்கிறான் என்று சொல்லாதே! அதற்கு பதில், இங்கே ஒரு குரு வந்திருக்கிறார். அவரை ஏலம் கேட்க முடிந்தால், ஏலம் கேட்கலாம் என்று சொல்,” எனக் கம்பீரமாகக் கூறினார்.
அடிமைத்தனத்தோடு
நாம் ஒத்துழைக்க
மறுக்கும்பொழுதுதான்,
அடிமைத்தனம் நம்மை
அடிமைப்படுத்த முடியும்!
ஒரு குருவுக்காக ஏலம் கோர அங்கு
யாருக்கும் தைரியம் வரவில்லை; அதனால்
அவரை யாரும் வாங்கிக்கொள்ளவில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு அவர் ஒரு சுமையாகத் தெரிந்தார். யாரும் அவரை வாங்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகு, அவருக்கு அனாவசியமாக உணவு கொடுத்து, செலவு செய்ய வேண்டியதிருக்கிறதே என்று வெறுத்தார்கள். ‘நாம் இங்கேயே உட்கார்ந்திருந்தால், இவன் நம்மையே விற்று விடுவான் போலிருக்கிறதே! இவனால் என்ன வெல்லாம் செய்ய முடியும் என்று நமக்குத் தெரியவில்லையே’ எனத் திகைத்தார்கள்.
இறுதியில் அவரை விடுதலைசெய்து விட்டார்கள்.
உங்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது
இது ஒரு கதையாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இந்தக் கதையின் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்றால், நாம் இந்த உடலும் மனமும் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும், நம்மை எதுவும் அடிமையாக்கிவிட முடியாது, என்பதுதான்.
நாம் எதற்கும், என்றும் அடிமையாகிவிட மாட்டோம். கைதுசெய்தோ, சிறையில் இட்டோ, நம்மை யாரும் அடிமையாக்கிவிட முடியாது. அடிமைத்தனம் நம்மை எப்பொழுது அடிமையாக்க முடியுமென்றால், அடிமைத்தனத்தோடு நாம் ஒத்துழைக்க மறுக்கும்பொழுதுதான், அடிமைத்தனம் நம்மை அடிமைப்படுத்த முடியும்!
ஒரு ஸூக்ஷ்மமான ஸத்யம், 'இந்த உடல்-மனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நாம்' என்று நாம் தெரிந்துகொண்ட பிறகு, நம்மை யாராவது அடிமைப்படுத்த முயன்றால், நாம் அதை எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதை உணர்வோம்.
ஏனென்றால் நாம் என்றுமே அடிமைகளாக இருக்க முடியாது என்ற ஸத்யம் நமக்குத் தெரியும்.

நம் விருப்பத்திற்கு எதிராக நிகழ்பவை மட்டுமே நம்மை அடிமைப்படுத்த முடியும்.
இங்கு நாம் முற்றிலும் வேறொரு தளத்தில், ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு விழிப்புணர்வில் இருக்கிறோம், அதனால் நம் விருப்பத்திற்கு எதிராக எதுவும் நடந்துவிடமுடியாது. நாம் எதையும் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். நாம் ஆற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருப்போம், நீரின் வேகத்தோடே ஓடிக் கொண்டிருப்போம். நாம் தெய்விகத்திற்குள் கரைந்துவிடுவோம். அதனால் அடிமைத்தனம் நமக்கு ஏற்படாது. நம்முடைய விழிப்புணர்வு எந்த ஒரு அடிமைத்தனத்திற்கும் அப்பாற்பட்டது.
அதனால்தான் கிருஷ்ணர், க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் என்னும் உடல்-மனம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் ரகசியத்தைப் போதிக்கிறார். பழங்காலத்தில், மனிதர்கள் உடல் ரீதியான அடிமைத்தனத்திற்கு மட்டுமே உட்படுத்தப்பட்டார்கள். இந்த நாட்களில் மனிதர்கள் மனோரீதியான அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
புரிந்துகொள்ளுங்கள், நாமெல்லாம் எண்ணற்ற வழிகளில்
மனோரீதியான அடிமைகளாகத்தான் இருக்கிறோம்.
தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு பொருள் பற்றிய விளம்பரம் காட்டப்படும்பொழுது, அது உடனே நேராக நம் தலைக்குள் நுழைந்து உட்கார்ந்துவிடுகிறது. சில நாட்களுக்குள் எப்படியோ பணத்தைப் புரட்டி அதை நாம் வாங்கியும் விடுகிறோம். நாம் இப்படி ஒரு மனோரீதியான அடிமைத்தனம்கொண்ட ஒரு உலகத்தில் வசிக்கிறோம்.
நாம் இந்த உடல்-மனம் அல்ல; அதற்கும் அப்பாற்பட்டவர்கள் நாம் என்பதை ஒருமுறை புரிந்துகொண்டுவிட்டோமானால், நாம் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் கொண்ட அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவோம்.
நாம் ஒரு குறிப்பிட்ட பொருளோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ நிகழ வேண்டுமென்று மிகவும் விரும்பும்பொழுது, நம் மகிழ்ச்சியானது அந்தப் பொருளிலோ அல்லது அந்த நிகழ்ச்சியிலோ சிக்கிக்கொள்கிறது. வெளியில் இருக்கும் அந்தப் பொருளோ அல்லது நடக்கும் அந்த நிகழ்ச்சியோதான் நம்முடைய மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் சக்தியைப் பெற்றுவிடுகிறது.
நிகழ்ச்சிகள் நாம் விரும்பியபடி நடக்காதபொழுது, நாம் மனச்சோர்வு அடைகிறோம். உலகத்தில் நியாயம் என்பதே இல்லை என்று நினைக்கிறோம். பலரும் என்னைக் கேட்பதுண்டு, "என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வளவு அநியாயங்கள் நடக்க கடவுள் அனுமதிக்கிறார்? நான் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்?"

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஏதோ
ஒன்றிடமோ அல்லது யாரோ ஒருவரிடமோ
உங்கள் மகிழ்ச்சியை அடகு வைக்கும்
கணத்தில், நீங்கள் அதனின் அல்லது அவரின்
அடிமையாகிவிடுகின்றீர்கள். அது அல்லது
அவர் உங்களை ஏமாற்றிவிடமுடியும்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம்,
நாம் அனுமதித்தால், சுதந்திரத்தை
விரும்பும் எண்ணம்கூட, நம்மை
அடிமைப்படுத்திவிடும்! பல சமயங்களில்,
ஆன்மிகத்தேடல் என்ற பெயரில் நாம்
சுதந்திரத்தைத் தேடி ஓடுகிறோம். நாம்
அப்படித் தேடி ஓடத் தேவையில்லை
என்று உணரும்பொழுதுதான் சுதந்திரம்
நிகழ்கிறது!
விடுதலை வேண்டும் என்ற எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். விடுதலையை மட்டுமே நாம் நம்ப வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாம் அதை அனுபவமாக உணர முடியும். இல்லாவிடில், விடுதலைக்கான ஏக்கமேகூட நம்மை அடிமையாக்கிவிடலாம். நாம் ஏற்கனவே சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்று நாம் தெரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நாம் இந்தப் போராட்டமே வீண் என்பதை உணர்கிறோம்; சுதந்திரத்தை அனுபவிக்கிறோம்.
நவ்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட அந்த நிமிமே, நம் எதிர்ப்பை நிறுத்திவிட்டு, தடையின்றி ஓட ஆரம்பிக்கிறோம். நம் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தையோ அல்லது சக்தியையோ வேறு ஒருவருக்கோ அல்லது வேறு எதற்கோ நாம் கொடுப்பதை நிறுத்தும்போது, எதுவும் நம்மை அடிமைப்படுத்தாது; நாம் சுதந்திர உணர்வை அனுபவிப்போம்.
ஆன்மிக ஸத்யங்களை உங்களுடைய அனுபவமாக்குங்கள்
கேள்வி: ஸ்வாமிஜி, மதத்திற்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம், மனஸாட்சிக்கும் விழிப்புணர்வுக்கும் உள்ள அதே வித்தியாசம் தானா?
பதில்: நீங்கள் மிகச்சரியாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்! ஆம், அதேதான்!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மோசஸ் தம் குருவைச் சந்தித்தபொழுது, அவருடைய ஆன்மிக அனுபவத்தின் உருவகமாகப் பத்து கட்டளைகள் வெளிப்பட்டன! மோசஸ், தம்முடைய ஆன்மிக உணர்வுமாற்றத்தால், அஹிம்ஸை, பேராசைகொள்ளாமை போன்ற அந்த 10 கட்டளைகளின் எல்லாக் கருத்துகளையும் தெரிந்துகொண்டார்.
அவை வெறும் வார்த்தைகளோ அல்லது அறிவுரைகளோ அல்ல. அவை மிக அழகான வெளிப்பாடுகள். ஒரு ஞானமடைந்த இருப்பு எப்படி வாழ்கிறது என்பதற்கான வெளிப்பாடுகள். அவர் குருவோடு கலந்துவிட்டதன் விளைவாக இவை அவருடைய விழிப்புணர்வாக மாறின.
ஏனென்றால், அவற்றை அவருடைய அனுபூதியாக உணர்ந்தபின், இந்த உண்மைகளே அவருடைய திடநம்பிக்கையாகிவிட்டதால், மோசஸால் அவற்றைப் பின்பற்ற முடிந்தது. அவரோடு நெருக்கமாக இ இருந்த ஒரு சிலரே, அவர் எதை அனுபவித்து உணர்ந்துகொண்டார் என்பதைப் புரிந்துகொள்ளவும், அந்த ஸத்யங்களைப் பின்பற்றவும் முடிந்தது. அதனால் அவையே அவர்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாடுகளாகவும் இருந்தன.
அந்த அனுபவம் நிகழாதவரை, அந்த வெளிப்பாடுகள் வெறும் விதிமுறைகளாக மட்டுமே இருக்கும். அவ்வாறு விதிமுறைகளாக இருக்கும்வரை, அந்த ஸத்யங்கள், வெளிப்படுத்துபவர்களைச் சுதந்திரமானவர்களாக ஆக்குவதற்கு பதிலாக, அவர்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் பந்தப்படுத்தி விடுகின்றன. அவை மனஸாட்சியின் விதிமுறைகளாகிவிடுகின்றன. அவை, ஆன்மிக ஸத்யங்கள் என்பதிலிருந்து கீழிறங்கி, மதக் கோட்பாடுகளாகச் சிதைந்துவிடுகின்றன.
இந்து தர்மம் - ஸநாதந தர்மம், ஆன்மிக வெளிப்பாடுகளுக்கும் மத சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை மிகத்தெளிவாகப் பிரித்துக் காண்பிக்கிறது.
ஸத்யங்கள், ஸ்ருதி என்றும், விதிமுறைகள் ஸ்ம்ருதி என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்ருதி என்பது சிறந்த ஞானிகளின் போதனைகள், ஸ்ம்ருதி என்பது மனஸாட்சியைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள்.

ஸ்ம்ரு'தியை இயற்றியவர்கள், அதனை இடம், காலம் பொறுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற விருப்ப விதியையும் அதில் இணைத்துள்ளார்கள்.
பகவத்ீதையில் ஓரிடத்தில், சமய நூல்களை வெறுமனே படிப்பது மட்டும் ஒருவனை இறைவனிடம் அதாவது ஜ்ஞானத்திற்கு அழைத்துச் சென்றுவிடாது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
சமய நூல்கள், வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும் கீதை ஆகியவை உள்ளுலகில் அனுபவிக்க வேண்டியவை. அவை ஒவ்வொரு தனிமனிதனின் ஸத்யங்களாக மாற வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுது மட்டுமே அவை உங்களுடைய விழிப்புணர்வாக, உங்களுடைய சொந்த ஆன்மிக ஸத்யங்களாக மாறும்.
இல்லையென்றால், அவை மற்ற எந்த விதிமுறைகளையும்விட, எந்தவிதத்திலும் சிறந்ததாகிவிட முடியாது. ஆண்களும், பெண்களும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி நடக்கும் கட்டுறு மனப்பாங்குடையவர்களாகவே இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அவர்கள் விதிகளை மீறி நடப்பார்கள்.
ஆனால், ஆன்மிக ஸத்யங்கள் ஒருவருடைய அனுபவமாக மாறிவிடும்பொழுது, ஒருவருடைய உள்ளுலக ஆன்மிக அனுபவமாகி விடும் பொழுது, இந்த ஸத்யங்களின் வழி வாழ்வதே பேரானந்தமாக மாறிவிடும்.
