உள்ளுலக நுட்பம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

13.7-11 அடக்கம், கர்வமின்மை, அஹிம்ஸை, பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஞானகுருவுக்குச் சேவைசெய்தல், தூய்மை, மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு;
புலன்களைத் திருப்தி செய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன்;
குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் பிறவற்றின்மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்;
என்னிடத்தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசித்தல், பொது மக்களிடமிருந்து விலகிவசித்தல்; ‘தன்னை உணர்தலின்’ முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி ஸத்யத்திற்கான தேடல்; - இவையே ‘புத்திசாலித்தனம்’ என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் ‘அறியாமை’ என்றும் வலியுறுத்துகிறேன்.
குணநலன்களைப் பயிற்சிசெய்து பெற முடியாது
இந்த ஐந்து ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர் ஒரு அருமையான நுட்பத்தைக் கொடுக்கிறார்.
இதுவரை அவர் அர்ஜுனனுக்குக் கொடுத்தது ஒரு புத்திசாலித்தனமான புரிதலே. ஆனால் இப்பொழுது அவர், தாம் சொன்னவற்றை நாம் உணர்ந்துகொள்வதற்கும், அனுபவமாக்கிக்கொள்வதற்குமான நுட்பத்தையும் தருகிறார்.
நம் உள்ளுலகை சுதந்திரமடையச் செய்யும் இந்த 5 ஸ்லோகங்களையும் நான் 'சிறந்த உள்ளுலக விஞ்ஞான தொழிற் நுட்பங்கள்' என்று சொல்லுவேன். ஒருவர் தம்மை க்ஷேத்ராவிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான தெளிவான நுட்பம் இது.

இந்த உடல்-மனத்திலிருந்து நம்மை
விடுவித்துக்கொள்வது எப்படி, அவற்றை
நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவது எப்படி என்பதை இங்கு
அவர் மிக அழகாக விளக்குகிறார்.
முதலில், நம் உடல்-மனத்தைவிட நாம் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால், நாம் உடல்-மனத்திலிருந்து விடுதலை பெறுவோம். இங்கே அவர், உடல்-மனத்திலிருந்து விடுதலையடையும் நுட்பத்தையும், அதன்மூலமாக எப்படி விழிப்புணர்வு அனுபவத்தைப் பெறுவது என்கிற நுட்பத்தையும் மிக அழகாகத் தருகிறார்.
முதலில் அந்த ஸ்லோகங்களின் பொருளைத் தருகிறேன்.
அடக்கம், அஹிம்ஸை, பொறுமை, எளிமை, நேர்மையான, உண்மையான ஞானகுருவை அணுகுதல், சுத்தம், தளராத மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, புலனின்பத்திற்கு காரணமான பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் தீமைகளை அறியும் உணர்வு, எல்லாச் சிக்கல்களிலிருந்தும் சுதந்திரம், இன்ப, துன்பத்தில் நடுநிலை வகித்தல், நிலையான பக்தி, ஆன்மிக வழியில் வாழ ஆழமான விருப்பம், இறுதி உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பற்றின்மை. இவை எல்லாவற்றையும் நான் 'புத்திசாலித்தனம்' என்று அறிவிக்கிறேன். இவற்றைத் தவிர உள்ள ஏனைய அனைத்துமே 'அறியாமை'யே.
இந்த ஸ்லோகங்களில் பல போதனைகளை, ஒரு நீளமான பட்டியலிட்டு கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், அவர் இங்கே கொடுத்திருக்கும் எல்லாக் குணநலன்களையும் நேரிடையாகக் கடைபிடித்து வாழ முயற்சித்தால், 'நமக்கு பைத்தியம் பிடித்துவிடும்' என்றுதான் நாம் நினைப்போம்!
இந்தக் குணநலன்களை உண்மையிலேயே
ஒவ்வொன்றாகப் பயிற்சிசெய்து பெற
முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம்
ஒன்றே ஒன்றுதான், அது, விழிப்புணர்வு
நமக்குள் நிகழ உதவுவதே!
விழிப்புணர்வு நிகழ்வதன் மூலம், நாம்
இந்த எல்லாக் குணநலன்களையும்
வெளிப்படுத்த ஆரம்பிப்போம். இந்தப்
பண்புநலன்கள் நம்முள் தானாகவே
நிகழும், மலரும்!
உதாரணத்திற்கு, நீரும் சேறும் கலந்து அசுத்தமாகிவிட்ட ஒரு தொட்டி நீரைச் சுத்தம் செய்ய விரும்புகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். உடனே நம் கைகளைத் தொட்டியினுள் விட்டு, கைகளினால் சேற்றை அள்ளி வெளியில் போட முடியுமா? அப்படி நம் கைகளை நீரினுள் விட்டு சேற்றை எடுக்க முயற்சித்தால், என்ன நடக்கும்? கீழே படிந்திருந்த சேறு முழுவதும், மேலெழும்பி கலங்கி, நீரை மேலும் அசுத்தமாக்கி விடும், அதுதான் நடக்கும்.
ஆனால், அப்படிச் செய்யாமல், அந்த நீர்த் தொட்டியினுள் நிறைய சுண்ணாம் புத்துளைத் தெளித்தோமென்றால், அது அந்த சேற்று அழுக்கையெல்லாம் ஈர்த்துக்கொண்டு, தொட்டிக்குக் கீழே படிந்து விடும். அதன் மூலம் தெளிந்த நீரை நாம் பெற முடியும். நம்முடைய மனதும் சேறு நிறைந்த ஒரு தொட்டிதான். நாம் அதை
அடக்க முயற்சி செய்தால், அதனோடு
போராடினால் நாம் மேலும் சிக்கல்களை
உருவாக்குவோம். அதற்குப் பதிலாக,
சுண்ணாம்பு தூளைப் போன்ற ஒரு சிறிய
தியானத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்;
பின் தளர்வாக இருங்கள். வெறுமனே
உங்களுடைய விழிப்புணர்வுக்குள்
தியானத்தைப் போட்டுவிடுங்கள்;
பிறகு இளைப்பாறுங்கள். அனைத்து
அசுத்தங்களும் அடங்கிவிடும்.
நாம் விழிப்புணர்வுள்ளவராக மாறும் அந்தத் தருணமே, ஸாக்ஷியாக இருந்து எல்லாவற்றையும் பார்க்கும் ஸாக்ஷி பாவனை மாலரத்துவங்கும்; மொத்த விஷயங்களுமே சரியாகிவிடும். தானாகவே எல்லா அசுத்தங்களும் கீழே படிந்துவிடும். ஸாக்ஷியாக இருந்து பார்க்கும் விழிப்புணர்வுதான் நம்முடைய இருப்பைச் சுத்தம் செய்யும் 'சுண்ணாம்புத் தூள்' ஆகும்.
பெரும்பாலும் நாம் சாஸ்த்ரங்களையும், பிற புத்தகங்களையும் படித்துவிட்டு, உடனே நாம் அந்த உபதேசங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றத் துவங்கிவிடுகிறோம். உதாரணத்திற்கு, 'உன்னை நீ நேசிப்பது போலவே உன் பக்கத்து வீட்டுக்காரரையும் நேசி' என்று அவை உபதேசித்தால், உடனே நாம் அதைக் கடைப்பிடிக்கத் துவங்கிவிடுகிறோம், அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே!
mமுதல் பிரச்சினையே, நாமே நம்மை நேசிப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளாமலிருப்பதுதான்.
முதலில், நம்மை நாமே நேசிக்கவில்லையென்றால், நம்மால் மற்றவர்களையும் நேசிக்க இயலாது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. அடுத்ததாக, அன்பு இயற்கையாகவே நிகழக்கூடிய மனநிலையையும் விழிப்புணர்வையும் நாம் பெற்றிருக்க வேண்டும். பிறகு அன்பு தானாகவே நிகழும் ஒரு செயல்முறையாகிவிடும்.
நாம் மற்றவர்கள் மீது அன்புச் சுமையை ஏற்றினால், அது ஒரு வியாபாரப் பரிமாற்றமாகிவிடும். நாம், தூய்மையற்ற அன்பின் வடிவத்தை மட்டுமே அறிவோம். ‘தூய அன்பு’ என்பது வெறும் பாதுகாப்புக்காகவோ அல்லது பிரதிபலனை எதிர்பார்த்தோ ஏற்படுவது அல்ல; அது தூய இருப்பின் ஒரு வெளிப்பாடு; அது தானாகவே நிகழும்.
நம்முடைய இருப்புக்கு நாம் உண்மையாக, நம்முடைய மையத்திற்கு உண்மையாக இருந்தால், அதுவே போதும். உடனடியாகவே, நாம் சுதந்திரமடைந்து விடுவோம்.
நினைப்பதை அப்படியே பேச முடிந்தால், ஞானியாவீர்கள்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கிறார், “உங்கள் மனத்தையும் வாயையும் ‘நேர்மை’ என்னும் ஒரு நேர்க்கோடு இணைத்தால், நீங்கள் சுதந்திரம் அடைகிறீர்கள்!”
சமூகம் விரும்பும் விதத்தில் நாம் செயலாற்றினால், நம்மைச் சமூகம் பாராட்டுகிறது. சமூகம் பாராப்புகிறது என்பதற்காக நாம் செயலாற்ற ஆரம்பித்தால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஏனெனில் அவற்றை நாம் உள்ளார்ந்த விருப்பத்துடன் செய்வதில்லை. நாம் செய்ய விரும்புவதற்கும், நாம் செய்பவற்றுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் இந்த வேறுபாட்டால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.

நாம் விழிப்புணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக, செயல்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமது ‘இருப்பு’ மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாம் நம் ‘செயல்’களின் மீதுதான் கவனம் செலுத்துகிறோம். நமது செயல்கள் எந்த வகையிலும் நமக்கு உதவாது. நமது இருப்பு மட்டுமே நமக்கு உதவப் போகிறது. அதனால், இருப்பின் மீது கவனம் செலுத்துங்கள், செயல்கள் மீது அல்ல!
செயல்களின் மீதே கவனம் செலுத்தும்
ஒருவர், செயல்களை மட்டுமே தொடர்ந்து
செதுக்கிக் கொண்டிருப்பார்; ஆனாலும்
அவரது இருப்பு, முன்பிருந்த அதே பழைய போராட்டம், மனஅழுத்தம், துன்பங்கள், சண்டை சச்சரவு ஆகியவற்றைத்தான் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் நம் இருப்பின்மீது செயல்பட்டால், நாம் தானாகவே மலருவோம்; சரியான சக்தியை, சரியான விழிப்புணர்வை தானாகவே வெளிப்படுத்துவோம்!
ரிஷி பதஞ்ஜலி, நம்முள் இறுதி விழிப்புணர்வு மலர்வதற்கும், யோகா நிகழ்வதற்குமான அஷ்டாங்க யோகம் என்னும் எட்டு முக்கியமான செயல்முறைகளைப் பற்றி தம்முடைய யோக நூலில் விவரித்திருக்கிறார்.
அதில் ஒரு அங்கமானது, அஹிம்சை, ஸத்யம் போன்ற பயிற்சிகளைப் பற்றி விவரிக்கிறது. பதஞ்ஜலி அல்லது கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காக, நாம் இந்த நற்பண்புகளை நடைமுறைப்படுத்தினால், அந்த நற்பண்புகள் நமக்குள்ளே உண்மையாக வளராது; அவை ஆழமாக உள் இறங்காமல், மேலோட்டமாகத் தோல் அளவில் நின்றுவிடும்.
உண்மையான அஹிம்சை நிகழும்பொழுது, நமது இருப்பே அன்பை வெளிப்படுத்தும், எதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பது அங்கு ஒரு பொருட்டே அல்ல! நம் எதிரியே நம் எதிரே நின்றாலும்கூட, அன்பு ஒன்றே நமக்குள் நிலைத்திருக்கும்; வேறு எந்த உணர்ச்சியும் நம்முள் இருப்பதில்லை. இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்.
தென்னிந்தியாவில், கர்நாடக மாநிலத்திலுள்ள சிருங்கேரி கோயிலுக்குச் செல்ல நேர்ந்தால், ஒரு பாம்பு படமெடுத்து, ஒரு தவளையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காட்சியை ஒரு கற்சிலையாக வடித்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு அழகான அருமையான காட்சி!
தெய்விக அன்பானது
நிபந்தனையற்றதாகத்தான் இருக்கும்
என்பதை அக்காட்சி தெளிவாக்குகிறது.
தெய்விக அன்பானது, ஒருவரை
நண்பரா இல்லை பகைவரா என்று
ஆலோசிப்பதில்லை. நமது இருப்பின்
மையத்தில் நாம் நிலைகொள்ளும்போது,
அன்பு மற்றும் அஹிம்ஸை என்னும்
நற்பண்புகள் நிகழும். அவை நம் இருப்பின்
வெளிப்பாடுதான்.
இந்த ஐந்து ஸ்லோகங்களில் கிருஷ்ணர் சொல்லியிருப்பவை அனைத்தும், அந்த விழிப்புணர்வு மலர்ந்தால், நம்முள்ளிருந்து வெளிப்படும் வெளிப்பாடுகளே தவிர, பயிற்சி செய்யப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல! மற்றவர்களைத் திருப்திபடுத்துவதற்காக, மகிழ்விப்பதற்காக அவற்றை நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், அவர்களுக்கு நாம் அடிமைகளாகிவிடுவோம்.
டையோஜினிஸின் கதையில், அவர் கைகளுக்கு விலங்கிட்டுவிட்டால் போதும், அவர் தங்களின் அடிமையாகிவிடுவார் என்று அந்தக் கூட்டம் நினைத்தாலும்கூட, அவர் அவர்களுக்கு ஒருபோதும் அடிமையாகிவிடவில்லை என்பதை நாம் கவனிக்கலாம். அவர் உள்ளுலகச் சக்தியையும் தூய விழிப்புணர்வையும் வெளிப்படுத்தினார். நாமும் அந்தமாதிரியே நம்முடைய உள்ளுலகச் சக்தியை வெளிப்படுத்தி வாழ்ந்தோமென்றால், மற்றவர்கள் நம்மை ஒரு அடிமை என்று நினைத்தாலும்கூட, நாம் ஒருபோதும் அடிமையாக மாட்டோம்.
சாதாரணமாக, நம்மைப் பற்றிய மற்றவர்களின் கருத்துகளைத்தான் நம்புகிறோம். நம்மை அளக்க உதவும் ஒரு அளவுகோலாக, மற்றவர்களின் அளவுகோல்களைத்தான் ஏற்றுக்கொள்ளுகிறோம். பின், பிரச்சினைகளுக்குள்ளாகிறோம். இதைத்தான் நான் 'குற்றவுணர்ச்சி' என்றழைக்கிறேன்.
நமது கடந்தகால முடிவுகளை எல்லாம், இப்போதைய மேம்படுத்தப்பட்ட அறிவைக்கொண்டு திரும்ப ஆராய்ந்து பார்ப்பதே குற்றவுணர்ச்சியாகும். நம் கடந்தகால முடிவுகளையெல்லாம், நமது தற்போதைய புத்திசாலித்தனத்தைக்கொண்டு மறுபரிசீலனை செய்யும்பொழுது, நாம் நமக்குள் குற்றவுணர்ச்சியையும் துன்பத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம்.
மிகத் தெளிவாக இருங்கள், நாம் ஒவ்வொரு கணமும் நம்மைத் திருத்தி, மேம்படுத்திக்கொண்டேயிருக்கிறோம். சில மணி நேரத்திற்குமுன் இருந்த அதே 'நாம்' இப்பொழுது இல்லை. நம்முடைய புத்திசாலித்தனம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் இயற்கையாகவே, நாம் நம் கடந்தகால நிகழ்ச்சிகளைத் திரும்ப நினைத்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நாம் அதில் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று உணருகிறோம்.
பிரச்சினை என்னவென்றால், 'எல்லாவற்றிற்குமே நாம்தான்' பொறுப்பு என்று நினைக்கிறோம். தினசரி நடவடிக்கைகளை முடிவுசெய்து நடத்துவதும் நாம்தான் என்று நினைக்கிறோம். நாம் எல்லாவற்றையும் நம் தோள்களின் மீது சுமத்திக்கொண்டு, பிறகு குற்றவுணர்ச்சி, கவலை போன்ற உணர்ச்சிகளை உள்ளே வர அனுமதித்துவிடுகிறோம்.

இந்தப் பிரபஞ்சமே தூய்மையான
புத்திசாலித்தனம்தான் என்றும், நம்
வாழ்க்கையை எப்படிக் கவனமாகப்
பார்த்துக்கொள்ள வேண்டும் என்று
அதற்குத் தெரியும் என்பதை நாம்
ஞாபகத்தில் கொண்டோமானால், நாம்
எந்தவித பதட்டமும் இல்லாமல் தளர்வாக
ஓய்வாக இருப்போம்.
அது மட்டுமல்ல, நாம் பிரபஞ்ச அறிவை இயங்க அனுமதிக்கும்பொழுது, கிருஷ்ணர் சொல்லும் அழகான பண்புகளை தன்னிச்சையாக வெளிப்படுத்துவோம். இந்தப் பண்பு நலன்களை வேறெதைச் செய்தும் நாம் அடைந்துவிட முடியாது.
கிருஷ்ணர், முதலில் பணிவு அல்லது அமாநித்வம் என்பதைத்தான் சொல்கிறார்.
பணிவு, நாம் முயற்சிசெய்து அடையப்பட முடியாத ஒரு பண்பு. பணிவை நாம் நம் முயற்சியினால் பெற முடியாது. அப்படி முயற்சியினால் அது பெறப்பட்டால், அது பார்க்க மிகவும் அழகற்றதாக இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தனிப்பிறவி என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளும்பொழுதுதான் பணிவு என்பது நிகழுமே தவிர, ஒவ்வொருவரும் சமமே என்று நினைப்பதால் பணிவு வருவதில்லை. முதல் விஷயம், இங்கு எதுவும் சமம் அல்ல! ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்தது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டோமானால், நாம் தானாகவே ஒவ்வொருவரையும் மதிப்போம். ஒவ்வொருவரும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு வழங்க, வாழ்க்கைக்கு வழங்க தங்கள் பங்குக்கு ஏதாவது பெற்றிருக்கிறார்கள்.
உங்கள் எதிரிகூட எதிரியல்ல
ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது நமது எதிரிகூட, நம்முடைய வளர்ச்சிக்குத் தம் பங்கினை அளிக்கிறார்! அவர் அதை மறைமுகமாகச் செய்கிறார். ஆனாலுங்கூட அதைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். நம்முடைய வளர்ச்சிக்கு அவர், தம் பங்களிப்பை அளிக்கிறார்.
ஒருவரை உபயோகமற்றவர் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர் அப்படி உபயோகமற்றவராக இருந்தால், அவரை இந்த உலகத்திலிருந்து வெகுகாலத்திற்கு முன்பே நீக்கியிருக்கும். ஏதாவது ஒருவழியில், பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு நாமும் நம் பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தால் மட்டுமே, நம்மை இங்கு இருக்க பிரபஞ்சம் அனுமதிக்கும். நம்முடைய பங்களிப்பை நிறுத்தும்பொழுது, இந்தப் புவியிலிருந்து தூக்கி எறியப்படுவோம். நாம் நம் பங்கை அளிக்கும்வரை, நாம் இந்த உலகில் நிலைத்திருப்போம்.

பொதுவாக, நாம் ஒருவரை நம்முடைய மரியாதையைப் பெறத் தகுதியானவர்தானா என்றுதான் மதிப்பீடு செய்கிறோம். அதை அளப்பதற்கென்று, நாம் நம்முடைய சொந்த அளவுகோலை வைத்திருக்கிறோம்.
அவர் எந்தளவுக்குத் தகுதியுள்ளவராக
இருக்கிறார், சமூகம் அவரை எவ்வளவு
தூரம் மதிக்கிறது என்று பார்ப்போம்.
அதற்குப்பிறகே, ‘சரி, நான் அவருக்குக்
கொஞ்சம் மரியாதை காட்டலாம் என்று நினைக்கிறேன்’ என்று நம் மனம் முடிவுசெய்கிறது. என்னவோ நம்முடைய மரியாதை அவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதைப் போலவும், அதன் காரணமாகத்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் போலவும் நடந்துகொள்கிறோம்!
ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் ஒரு தனித்துவம் மிக்க படைப்பு என்பதையும் நம்முள் இருக்கும் அதே தெய்விகம்தான் அதனுள்ளும் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளும்பொழுது, நாம் தானாகவே பணிவையும் கர்வமின்மையையும் வெளிப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு மனிதரும்
தனிப்பிறவி என்பதை
நாம் ஆழமாகப்
புரிந்துகொள்ளும்பொழுது
பணிவு என்பது நிகழும்!
ஆன்மிகத் தேடல்கொண்ட ஒருவருக்குள்ளே
இந்த எல்லாப் பண்புகளும்
சாதாரணமாகவே நிகழ்ந்து வெளிப்பட
வேண்டும். இதையே கிருஷ்ணர்
விளக்குகிறார். இன்னொரு முக்கியமான
விஷயம், ஆசார்யோபாஸந அதாவது ஒரு
சிறந்த உண்மையான, ஆன்மிக குருவை
அணுகுவதைப் பற்றி, அவர் இன்னாரு
ஸ்லோகத்திலும் சொல்கிறார்.
தத் வித்தி ப்ரநி பாதேநா பரிப்ராச்’நேநா ஸேவயா
அப்படியென்றால், நாம் அந்த குருவை கேள்விகளோடு அணுக வேண்டும், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அவரிடம் பணிவோடு விண்ணப்பிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
கிருஷ்ணர் ஏன் அதைச் சொல்கிறார்? அப்படிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
ஆன்மிக நூல்கள், மீண்டும் மீண்டும் குருவின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன. பகவத் கீதையில் மட்டுமல்ல, ஜென் புத்தமதம், ஜைன மதம், யூதமதம், இஸ்லாம் அல்லது கிருத்துவம் என்று எதுவாக இருந்தாலும், குரு என்பவர் நம் ஆன்மிக வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றுகிறார் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன! மிக முக்கியமாக வேத சம்பிரதாயத்தில், குருவானவர் ஒரு மிகப் பெரிய பங்காற்றுகிறார். ஏன்? தொடர்ந்து ஒருவர் விழிப்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தொடர்ந்து அவர் விழிப்புணர்வை வெளிப்படுத்துவதையும் நேரடியாகப் பார்த்தாலொழிய, விழிப்புணர்வு தன்மை சாத்தியம்தான் என்பதை நமது விழிப்புணர்வற்ற தன்மை நம்ப மறுக்கிறது.
நாம் இந்த ஸத்யங்களைப் படிக்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் நம் வெளிமனது அவற்றை நம்புகிறது. ஆனால் உள்மனது ‘இவையெல்லாம் பழைய சித்தாந்தங்கள், யாரோ ஒரு பைத்தியம் இவையெல்லாவற்றையும் எழுதியிருக்கலாம்!’ என்றே சொல்கிறது.
நமது உள்மனது அந்த ஸத்யங்களையும், ஜ்ஞானமடையக்கூடிய சாத்தியத்தையும் ஏற்றுக்கொள்ளாது. நமது தலையும் இதயமும் இதன் காரணமாக ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. நமது பட்டறிவு, ‘இவையெல்லாம் ஸத்யங்கள்தான்’ என்று ஏற்றுக்கொள்ளுகிறது; நாம் தர்க்க ரீதியாக ஒப்புக்கொள்கிறோம், ஆனால் உணர்ச்சி ரீதியாக நாம் அதை அனுபவிக்க முடிவதில்லை.
தொடர்ந்து கேள்விகள்
கேட்கும் நம்முடைய
உள்மனதுகூட, ஒரு
வாழும் ஞானியைப்
பார்க்கும்பொழுது
அடங்கிவிடுகிறது.!
நாம் ஒரு வாழும் ஞானியை பார்க்கும்பொழுது, நமது உணர்ச்சி கள் தானாகவே அதை உணரத் தொடங்குகின்றன. தொடர்ந்து கேள்விகள் கேட்கும் நம்முடைய உள்மனதுகூட, ஒரு வாழும் ஞானியைப் பார்க்கும்பொழுது அடங்கிவிடுகிறது. புத்தகங்களைப் படிக்கும்பொழுது, அதன் எழுத்து வடிவங்கள் மூலமாகக் கற்கிறோம் ஒரு ஜ்ஞான குருவோடு வாழும்பொழுது, அவருடைய ‘உடல் மொழி’ மூலம் கற்கிறோம்.
அவர், சத்தியத்தை உறுதிசெய்யும் ஒரு வாழும் உதாரணம். இவையெல்லாம் நமது வாழ்க்கையில் உண்மையாகிவிட முடியும் என்பதை அவர் நிரூபிக்கிறார். அவர் இதைச் சொல்லும்பொழுது, நாம் மேம்போக்காக நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அது, நம்மை ஆழமாகத் தொடும் ஒரு திடமான அனுபவமாகவே மாறிவிடும்.
என்னால் முடிந்தால், உங்களாலும் முடியும்
நாம் ஒரு ஜ்ஞானகுருவை நேரிடையாகச் சந்திக்கும்பொழுது, மூன்று விஷயங்கள் நிகழ்கின்றன.
முதலாவதாக, ஒரு நாளின் இருபத்திநான்கு மணி நேரமும் ஆனந்தமான உணர்விலேயே அல்லது நிலையான ஆனந்தத்திலேயே வாழ முடியும், அது சாத்தியம்தான் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்த நிலையை அடைவதற்கான திடமான நம்பிக்கையும் உற்சாகமும் அங்கே இருக்கிறது. அந்தச் சாத்தியத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.
அடுத்ததாக, "ஆமாம், அது சரிதான், ஆனால் அது குருவுக்கு மட்டுமே சாத்தியம்; அது எனக்கு சாத்தியமாகுமா?" என்று நாம் கேட்கிறோம். 'சாத்தியம்தான்' என்ற உறுதியும் நம்பிக்கையும் நாம் குருவை சென்றடையும்பொழுது, நமக்குக் கொடுக்கப்படுகிறது.
குருவானவர், "என்னால் அடைய முடியுமென்றால், ஏன் உன்னால் அடைய முடியாது?" என்று வினவி நமக்குள்ளே நம்பிக்கையை ஊட்டுகிறார்.
ஒரு விதையானது, 'தான் ஓட்டைக் கிழித்து முளைவிட்டால், ஒருவேளை, தான் இறந்துவிடக்கூடும்' என்று நினைத்து பயந்து முளைவிடாமல் இருப்பது போன்றதே இது.
ஒரு விதையினுள் இருக்கும் மரமோ, அந்த விதை உடைவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விதையோ, உடைய பயப்படுகிறது; ஆனால் அதற்குள் இருக்கும் மரம், "நீ உடைந்தால் மட்டுமே நான் நிகழ முடியும்," என்கிறது.
"நான் திறந்தாலும் அந்த மரம் வளருமோ,
வளராதோ யாருக்குத் தெரியும்?" என்கிறது
விதை.
அந்த மரமோ, "நீ திற, அப்பொழுதுதான் நான் வளர முடியும்," என்று சொல்கிறது.
அதற்கு அந்த விதை, “இல்லை, இல்லை,
நீ வளர்வதைப் பார்த்த பிறகே நான்
திறப்பேன்,” என்கிறது.
விதை, மரம் நிகழ்வதற்காக,
வளர்வதற்காகக் காத்துக்
கொண்டிருக்கிறது. விதையினுள் இருக்கும்
மரமோ, அந்த விதை உடைவதற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது
குருவானவர், “என்னால்
அடைய முடியுமென்றால்,
ஏன் உன்னால் அடைய
முடியாது?” என்று வினவி,
நமக்குள்ளே நம்பிக்கையை
ஊட்டுகிறார்.!
குரு, இங்கு மரத்திற்கு ஒப்புவமையாக சொல்லப்படுகிறார். நம்முடைய வாழ்க்கையில்கூட, நாம் அடியெடுத்து வைக்க, நம்மைத் திறக்க மிகவும் பயப்படுகிறோம். நாம் அடியெடுத்து வைத்தால், ஞ்ஞானமடைந்துவிட முடியும் என்ற உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். நாம் ‘நடுவில் மாட்டிக்கொள்கிற சூழ்நிலையை’ நினைத்து, அடியெடுத்து வைக்கவே பயப்படுகிறோம்!
ஒருமுறை அடியெடுத்து வைத்த பிறகு, நம்மால் ஞ்ஞானமடைய முடியாவிட்டால், அதன்பிறகு நம்மால் சாதாரண வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது; ஞ்ஞான வாழ்க்கையையும் தொடர முடியாது. இந்த நிச்சயமற்ற நிலையையும் பாதுகாப்பின்மையையும் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால், குரு அதற்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
ஒரு சின்ன கதை :
ஒரு பத்திரிகை நிருபர், ஜனாதிபதி தேர்தலுக்காக நிற்கும் ஒரு வேட்பாளரைப் பேட்டி காணச் சென்றார். வேட்பாளர் தம்முடைய தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, “நான் வெற்றியடைய போவது உறுதி, அதை நான் தெளிவாகப் பார்க்கிறேன்,” என்று சொன்னதைக் கேட்டிருந்த நிருபர், அந்தப் பேட்டியின்பொழுது, அதைச் சுட்டிக்காட்டி, “அப்படியென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு கவலையோடு காணப்படுகின்றீர்கள்?” என்று அவரைக் கேட்கிறார்.
அதற்கு அந்த வேட்பாளர் நான் நேர்மறை நோக்கு கொண்டவன்தான், ஆனால் அது என் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லையே!” என்று பதில் சொன்னார்.
நாமும் இதேபோல்தான் மாட்டிக்கொண்டு
நிற்கிறோம்! நமக்கு அந்த அனுபவம்
சாத்தியம்தான் என்று நம்புகிறோம், ஆனால்
அதே நேரத்தில் துணிச்சலான முடிவுகளை
எடுக்க நாம் பயப்படுகிறோம்.
குரு ஏற்கனவே ஒரு மரமாகி இருக்கிறார். சிஷ்யனுக்கு நம்பிக்கையூட்டுகிறார். அவர், “கவலைப்பட வேண்டாம், முதலில் நானும் உன்னைப் போலவேதான் போராடினேன். துணிந்து வெடித்தேன், இப்பொழுது என்னைப் பார், நான் மலர்ந்திருக்கிறேன். நான் இறந்துவிடவில்லை. நான் ஒரு மரமாகி இருக்கிறேன். நீ வெடித்தாலும், நீகூட ஒரு மரம் ஆகிவிடுவாய்,” என்று சொல்கிறார்.
அவர் நம்மோடு அமர்ந்து, நம்மைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வதாக உறுதியளிக்கிறார். நாம் திறந்துகொண்டு மரமாக மாறுவதற்கு சக்தியை உருவாக்கி, நம்பிக்கையும் தருகிறார். “நான் சாதித்திருக்கும்பொழுது, உன்னால் ஏன் முடியாது?” என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறார்.
மூன்றாவதாக, குரு, அந்த மரம் உருவாவதற்கான சரியான சூழ்நிலையையும் நுட்பத்தையும் உருவாக்குகிறார். சரியான சுற்றுச்சூழல், சரியான மண், நீர் முதலியவற்றை உருவாக்குகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் குருவை நம்புவதும், வெடிக்க வேண்டியது மட்டும்தான்.
அதற்குத்தான் குரு, ஆச்ரமங்களை உருவாக்குகிறார். ஆச்ரமம், நாம் முற்றிலும் மலர்வதற்கு உதவும் ஒரு அருமையான சூழல். அங்கு அந்த விதை திறக்க முடியும்; மரமாகவும் மாற முடியும்.
அது ஒரு அறுவை சிகிச்சை கூடம் என்றும் சொல்லலாம். அங்கு நீங்கள் போகலாம், திறக்கலாம், மரமாகலாம், அனுபவத்தை வெளிப்படுத்தலாம். ஆச்ரமம் என்பது ஒரு சூழல், அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் பாதுகாப்பான, பத்திரமான வழியில் விழிப்புணர்வுக்குள் நுழையலாம்.
குரு, நம்முடைய இருப்புக்குள் இருக்கும் ஸத்யத்தை உணர வைக்கிறார். அதனால் அவர் முதலில், தம்முடைய 'உடல் மொழி' மூலமாக, அது நிகழ்வதற்கான சாத்தியத்தை நமக்கு உறுதி செய்கிறார்.
அடுத்ததாக, அது நமக்கும்கூட சாத்தியமே என்பதை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கிறார்.
மூன்றாவதாக அது நிகழ்வதற்கான ஒரு சரியான சூழலையும் உருவாக்குகிறார்.
நான்காவதாக, நாம் அந்த விழிப்புணர்வில் நிலைத்திருக்க, எந்த இடையூறும் வராமல் பாதுகாப்பும் தருகிறார். இவையே ஒரு குருவின் பொறுப்புகள்.
அதனால்தான் வேத வழியிலான வாழ்க்கை முறையில், நாம் ஒரு வாழும் ஜ்ஞானியிடம் சரணடைய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இதுதான் கிருஷ்ணர் சொல்லும் ஆசார்யோபாஸநா. அவர், இந்த நுட்பத்தைச் சோதித்துப் பார்ப்பதற்கான முக்கிய விதிமுறைகளையும் தருகிறார்.
இங்கு யாரும் சமம் இல்லை
கேள்வி: கிருஷ்ணர் சொல்லியிருக்கும் எல்லா நற்பண்புகளும், ஜ்ஞானமடைவதன்மூலமாகவே பெறமுடியுமென்று நீங்கள் சொல்வீர்களானால், நாங்கள் ஜ்ஞானமடைவதற்கு எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? குரு எங்களுக்கு வழிகாட்டினால்கூட நாங்கள் எப்படி முன்னேற முடியும்?

கிருஷ்ணர், இந்த அத்தியாயத்தின் எட்டாவது ஸ்லோகத்திலிருந்து பன்னிரண்டாவது ஸ்லோகம் வரை, குறிப்பிட்ட சில குணங்கள்தான் உண்மையான புத்திசாலித்தனம் என்றும், மற்றவையெல்லாம் அறியாமையே என்றும் சொல்கிறார். இந்தக் குணங்கள் இலக்குகள் அல்ல; அவற்றை இலக்குகளாகக் கருதவும் முடியாது!
இந்தக் குணங்கள் தாமாகவே மலர்வதற்கான பாதையில் செல்வதுதான் முக்கியம். அந்தப் பாதையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதோ, எந்தப் படியைச் சென்று அடைந்திருக்கிறீர்கள் என்பதோ முக்கியமல்ல.
‘நான் அவரைவிட மிகப் பணிவானவன்’ என்றோ அல்லது ‘என்னைவிட அவருக்கு உயிர், வாழ்க்கை, இறப்பு என்பதைப் பற்றி நிறையத் தெரியும்’ என்றோ நினைக்கும் விளையாட்டில் மாட்டிக்கொண்டீர்களானால், நீங்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டே இருப்பதில் சிக்கிக்கொள்வீர்கள். நீங்கள் முன்னேற முடியாது.

நீங்கள் ஜ்ஞானமடைவதற்கு எதையும் சாதிக்க வேண்டியதில்லை. ஜ்ஞானம், உங்களுடைய இயல்பான நிலை.
அதை ஒரு வெளியுலகப் பொருள்
போன்று கருதி, வெளியுலகப் பொருளை
அடைவதற்கு வேலைசெய்வதுபோல்,
இதற்கு நீங்கள் வேலைசெய்ய முடியாது.
ஜ்ஞானம் என்பது உள்ளே உணரப்படுவது.
நாம், எதிர்மறை எண்ணம் மற்றும்
செயல்களிலிருந்து விலகி, நேர்மறை
எண்ணம் மற்றும் பண்புகள் நோக்கிச்
செல்லும்பொழுது, ஜ்ஞான அனுபவம்
நிகழ்கிறது.
எதிர்மறைகள் என்பது உங்களுடைய அஹங்காரத்தின் பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அஹங்காரம் தன்னை, பற்றுதல்கள், ஆசைகள், தோல்விகள், வருத்தங்கள், குற்றவுணர்ச்சிகள் என்று பலவிதங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. நேர்மறை பண்புகள் என்பவை கிருஷ்ணர் குறிப்பிட்டவற்றைக் குறிக்கின்றன.
ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்ச்சியை எடுத்துப் பார்ப்போம். உங்கள் நெடுநாளைய நண்பர் ஒருவர் வியாபாரத்தில் வெற்றியடைந்து, இப்பொழுது திடீரென செல்வந்தராகிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் முதல் உணர்ச்சி என்னவாகயிருக்கும்? பொறாமைதான்.
‘அவன் எப்படிப் பணக்காரனானான்? நான் ஏன் அவனைப்போல் ஆக முடிய வில்லை?’ என்று எண்ணி ஆச்சரியப்படுவீர்கள். அதோடு நிறுத்திவிடமாட்டீர்கள், ‘அவனிடமிருந்து நான் என்ன லாபம் அடைய முடியும்? அவனை நான் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்!’ என்றும் திட்டம் போடுவீர்கள். ஆனால், உடனே இந்த மாதிரி எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்களுக்குள் இருக்கக்கூடாது என்றும் நீங்கள் நினைப்பீர்கள்; உடனே உங்களுக்குள் குற்றவுணர்ச்சி எழும்.
உங்கள் செயல்களைத் தூண்டும் இந்த எல்லாவித உணர்ச்சிகளும், ஒரு அடிப்படையான விஷயத்திலிருந்துதான் எழுகின்றன: அவர்கள் வைத்திருக்கும் செல்வத்தினாலும் அடைந்திருக்கும் அந்தஸ்தினாலும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்து, அவர்களிடமிருந்து அந்த ஆசைகளை கடன் வாங்குவதிலிருந்துதான் எழுகின்றன.

ஒருவேளை உண்மையிலேயே அந்த செல்வமும், அந்தஸ்தும் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்கூட, அதே செல்வமும், அந்தஸ்தும் உங்களுக்கும் அதே அளவு மகிழ்ச்சியைத் தரும் என்று சொல்ல முடியாது! .
ஆனாலும்கூட நீங்கள் தொடர்ந்து ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டடும், அவரைப் போல ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டடும் இருப்பீர்கள். விளைவு உங்களையும் மற்றவர்களையும் துன்புறுத்திக்கொண்டேயிருப்பீர்கள்.
இந்த ஒப்பிட்டுப் பார்த்தல், பயம், பேராசை போன்ற எதிர்மறை குணங்களிலிருந்து விடுபடுவதற்கு, முதலில் உங்களுடைய அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய அத்தியாவசியத் தேவைகளைக்கூட, பலன்களின் மேல் பற்றுதல் இல்லாமல் செயல்களைச் செய்வதன் மூலமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் பாதையில் மட்டுமே நம் கவனத்தைச் செலுத்த வேண்டும், இறுதிப்பலனில் அல்ல. இந்தப் புரிதலோடு நீங்கள் அந்தப் பாதையில் செல்ல ஆரம்பித்தால், கிருஷ்ணர் குறிப்பிடும் இந்த நற்பண்புகள் எல்லாம் தானே நிகழும்.
ஒரு வாழும் ஞானியின் வழிகாட்டல், உங்களுடைய பாதையைத் தடைகளற்றதாக்கும், தூரத்தைக் குறைக்க உதவும். தைரியத்துடனும் மன உறுதியோடும் இந்தப் பாதையில் தனியாக ஒரு குரு இல்லாமலேயே ஒருவர் பயணிக்க முடியும்; அப்படிச் செய்து காட்டப்பட்டும் இருக்கிறது. ஆனால் எதற்குத் தேவையில்லாமல் உங்களை நீங்களே வேதனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்?
ஒரு சீடர் என்னிடம் சொன்னார், "ஸ்வாமிஜி, பாருங்கள், உங்களைவிட நாங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக இருக்கிறோம்! நீங்கள், ஒரு குருவைப் பின்பற்றிச் செல்ல சாதுர்யமில்லாமல், தனியாகப் போராட வேண்டியதிருந்தது. நாங்கள் உங்களைப் பெற்றிருக்கிறோம், எங்கள் வாழ்க்கை எவ்வளவு எளிதாகிவிட்டது!"

