விழிப்புணர்வே முடிவற்றது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.
எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது.
பரமாத்மாவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை ஆதாரம். ஆனாலும் அது, உண்மையில், எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மீதும் பற்றற்றது. எல்லா ஜீவராசிகளைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லாச் செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல் ரீதியான செயல் வகைகளில் தலைசிறந்த நிபுணத்துவம் மிக்கதாக இருக்கிறது.
சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் அருகில் இருக்கிறது!
பார்ப்பதற்குத் தனித்தனியாகப் பிளவுபட்டதுபோல் தோன்றினாலும் அது பிளவுபடாதது. சகல பிராணிகளையும் பேணிக் காப்பதென்றாலும் அழிப்பதாகவும் படைப்பதாகவும் அதுவே இருக்கிறது.
அந்தப் பரமாத்மன் ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, ஆதாரமாக இருக்கிறது. இருளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, உருவமற்றது, ஜ்ஞான வடிவானது, அறியப்படவேண்டியது, ஜ்ஞானத்தினால் அடையப்பட வேண்டியதுமாகிய அதுவே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், "நீ அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் விளக்கிவிடுகிறேன். அதையெல்லாம் அறிந்துகொண்ட பின்பே, இந்தப் பொருள்சார் உலகின் செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்ட ஆதியே இல்லாத விழிப்புணர்வை, நிலையான இருப்பை நீ அறியத் துவங்குவாய்.''
முன்பு வந்த ஸ்லோகங்களில், கிருஷ்ணர், உள்ளுக்குள் மலரும் தெய்விக விழிப்புணர்வின் பண்புகளைப் பற்றிச் சொன்னார். இப்பொழுது அவர் இந்த விழிப்புணர்வே நிலையானது என்பதை அர்ஜுனனுக்கு வெளிப்படுத்துகிறார்.
இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளியே க்ஷணம் எனப்படுகிறது.!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம் மனது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காலத்தோடும் இடத்தோடும் இணைத்து சம்பந்தப்படுத்திக்கொள்கிறது. மனது, காலவரிசைப்படி மட்டுமே நினைக்கும். அது ஒரு உள்ளுலகக் கால அட்டவணை; இந்தக் கால, வெளி அட்டவணையில் எல்லா நிகழ்ச்சிகளும் பட்டியலிடப்படும்.
நவீனவிஞ்ஞானம், "இது எப்படிநிகழ்ந்தது?
இதற்கு முன்னால் அங்கு என்ன இருந்தது?
இதற்குப் பிறகு என்ன வரப்போகிறது?
இதை எது தூண்டிவிட்டது?'' என்று
பல கேள்விகளைக் கேட்கிறது. இந்தப்
பிரபஞ்சம் உருவானதைப் பற்றி
அவர்களிடம் கேட்டபொழுது, 'பெரும்
வெடிப்பு' கொள்கை வாயிலாக அதை
விளக்கினார்கள்.
ஒரு மிகச்சிறிய நெருப்புப் பிண்டம் வெடித்துச் சிதறி, பிரபஞ்சம் உருவாகியது என்று அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் எதற்கு பதிலளிக்க முடியவில்லையென்றால், "அதற்கும் முன்னால் என்ன இருந்தது?" என்பதற்குத்தான்.
ஆனால் கிருஷ்ணர், இதற்குப் பதிலளிக்கிறார். அவர் சொல்கிறார்: இந்தப் பிரபஞ்ச சக்தி, இந்த இறுதி விழிப்புணர்வு என்றென்றும் இருக்கிறது; அதுவே கிரகங்களாகவும் மனிதர்களாகவும் இன்னும் பல ரூபங்களிலும் தோன்றியது; ஆனாலும் அது நிலையானது. அது தொடர்ந்து தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்; பிறகு தன் ஆதாரத்திற்கே திரும்பி விடும். அதாவது ஆதாரத்தில் ஒடுங்கிவிடும். அது எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
காலம், இடம் என்னும் நாம் வைத்திருக்கும் கருத்தெல்லாம் நமது மனம், மற்றும் புலன்களை அடிப்படையாகக்கொண்டது. நாம் எதை எப்படி உணர்ந்தாலும், அது நம்முடைய மனத்தின் காட்சியே. காலத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் ஒரு ஜ்ஞான குருவின் புரிதலிலிருந்து வேறுபட்டது. அவர் காலத்தை க்ஷணம் என்னும் அளவுகோலைக் கொண்டு அளக்கிறார். இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளியே க்ஷணம் எனப்படுகிறது.
புத்தர் இந்த காலம், இடம் என்னும் கருத்தை சூந்யம் என்று குறிப்பிடுகிறார். ஆதி சங்கரர் அதையே பூர்ணம் என்று குறிப்பிடுகிறார். இது மனமே இல்லாத ஒரு இடம்; அதே சமயத்தில் மனம் நிறைந்த ஒரு இடம்! இதில் நாம் நம் அடித்தளத்தையே தொடுகிறோம்! இதுவே நிகழ்காலத் தருணம்! இந்தத் தருணத்தில்தான் நமக்குள்
இருக்கும் தெய்வீகத்தை நாம் நேருக்குநேர்
சந்திக்கிறோம்; அதன்மூலம் நம்முடைய
முக்கியமான இயல்பான பிரபஞ்ச சக்தியை
அடையாளம் கண்டுகொள்கிறோம்.
நாம் உலகியல் இன்பங்களுக்குப்பின்,
அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாகச்
சென்று அலைவதிலேயே சிக்கிக்
கொள்ளும்பொழுது, ஒவ்வொரு
வினாடியும் மன அழுத்தம், மன உளைச்சல்,
கவலை என்று, நம் தலையை உடைத்துக்
கொண்டேயிருக்கின்றன.
> இந்த உடலும் மனமும்
> பஞ்ச பூதங்களால்
> ஆனது என்பதையும்
> அவை வந்த நோக்கத்தை
> ஆற்றி முடிந்தவுடன்
> அதனுடைய மூலத்திற்கு
> திரும்பிவிடும் என்பதையும்
> புரிந்துகொள்ளுங்கள்!
நம்முடைய க்ஷணம் என்பது மிகச்சிறியது. ஏனெனில் நமக்குள் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. அதனால்தான் நமக்கு மூச்சுத்திணறுவது போன்ற உணர்வும் பய உணர்வும் தோன்றுகின்றன.
நாம், வாழ்க்கை எனும் ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். 'காலம் போதவில்லை'-எனவும், காலம் சீக்கிரம் ஓடிப்போவதாகவும் சொல்லி, எப்பொழுதுமே வருந்திக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் இறப்பதற்கு முன்பே, எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டுமென்று, பல அனுபவங்களுக்காகப் பேராசை கொள்கிறோம். அதோடு கூடவே, நாம் சேமித்து வைத்த எல்லாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயமும் கொண்டிருக்கிறோம். நாம் இப்படித்தான் உணருகிறோம்; ஏனென்றால் நாம் நம்மை க்ஷேத்ரம் அழியக்கூடிய உடல்-மனம் என்றே நினைத்துக்கொள்கிறோம்.
ஆனால், ஒரு ஜ்ஞான குரு, தாம் க்ஷேத்ரஜ்ஞன் என்று அறிவார். தாம் இந்த உடல்-மன அமைப்பு இல்லை என்று அவர் அறிவார். அவர் தம்மை ‘இறுதி விழிப்புணர்வாக’ உணர்ந்திருக்கிறார். இந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து ஓட வேண்டும் என்று அவர் அவசரப்படுவதில்லை.
ஏனெனில் இந்த உடல் அழிந்தாலும் வாழ்க்கை தொடரும் என்பதை அவர் அறிவார். அவர் அந்த மனதுக்கு ஒரு ஸாட்சி ஆகிவிட்டார். ஆகவே அந்த மனத்தில் எழும் எந்தவொரு எண்ணமும், செயல் நோக்கம்கொண்ட எண்ணமாகத்தான் இருக்கும்; ஒருபோதும் அது ஆக்கமற்ற எண்ணமாக இருக்காது. எண்ணம் நிகழும் அந்தக் கணமே, அது செயலாக வெளிப்பட ஆரம்பித்துவிடுகிறது. அவருக்குள்ளே எண்ணங்கள் சேமிக்கப்படுவதில்லை. இந்த எண்ணங்களற்ற 'வெளியில்' அவர் நிலைத்து இருப்பதால், அவர் முடிவற்ற நிலையான இருப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் 'ஆதியில்லாத, தொடக்கமில்லாத விழிப்பு நிலை' என கிருஷ்ணர் இங்கு விளக்குகிறார்.
இந்த உடலும் மனமும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதையும், அவை வந்த நோக்கத்தை ஆற்றி முடிந்தவுடன், அதனுடைய மூலத்திற்கு திரும்பிவிடும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
குரு பார்த்தாலே, 'விழித்துக்கல்வீர்கள்
நாம், ஒரு ஜ்ஞானமடைந்த, மனம் இல்லா நிலையிலிருக்கும் குருவுக்கு முன்னால் இருக்கும்பொழுது, நமக்குள் ஓடும் எண்ண ஓட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வரும்; நமது க்ஷணத்தின் நேர அளவு நீளும்; அதாவது எண்ணங்களின் நடுவிலுள்ள இடைவெளியின் நேர அளவு நீளும். அதனால் நாம் முயற்சி செய்யாமலேயே, நாம் அமைதியானவர்களாக ஆகிறோம்; அதிக ஆனந்தமுடையவர்களாக, அதிக விழிப்புள்ளவர்களாக ஆகிறோம்.
நமது தர்க்க ரீதியான மனம்,
ஒவ்வொன்றிற்கும் காரணம் கற்பித்துப்
பார்க்க முயற்சி செய்யும். எந்த ஒரு
விஷயம் நடந்தாலும் இது ஏன் இந்த
விதத்தில் நடந்தது என்று ஆராய்ந்து,
அதற்கான காரணத்தைத் தர்க்க ரீதியாக
அறிந்துகொண்ட பிறகே, அதில் நம்பிக்கை
கொள்ள வேண்டுமென்று விரும்பும்.
ஆனால், நமது தர்க்க ரீதியான புரிதலும்,
புத்தகங்கள் மூலம் பெற்ற அறிவும் நம்மைச்
சுற்றியுள்ள உலகத்தை மாற்றுவதைப் பற்றிய
தகவல்களையே நமக்குக் கொடுக்கின்றன.
गुरुவின்மனத்தில் எழும்
எந்தவொரு எண்ணமும்
செயல் நோக்கம் கொண்ட
எண்ணமாகத்தான்
இருக்கும்!
ஆனால் கிருஷ்ணர் விளக்குகிற ‘அறிய வேண்டியது’ என்பது இந்த வெளிமாற்றங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இது எப்பொழுதும் நிலைத்திருப்பது. ஏனெனில், இது நம்மைச் சுற்றியுள்ள மற்ற பருப் பொருட்களைப்போல படைத்தல், அழித்தல் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது அல்ல. அது அங்கேடயேதான் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது; இனியும் தொடர்ந்து இருக்கப் போகிறது.
நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாப் பருப்பொருளுமே ஒரு குறிப்பிட்ட காரண-காரிய உறவைப் பின்பற்றுகின்றன. எனினும் நமது ஆழமான உள்-இருப்பு, இந்த மாற்றங்களினால் தொடப்படாதது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நமக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. நாம் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாம் தனித்தனி தீவுகளாகச் செயல்படுவதில்லை. நாம் வாழும் இடத்தின்கண்ணுள்ள ஆகασத்தில் பதிந்திருக்கும் எண்ணங்கள், நமது மன அமைப்பைப் பாதிக்கின்றன. அந்த மன அமைப்பின்படியே நாம் வாழ்கிறோம், எண்ணுகிறோம், செயல்படுகிறோம்.
நீங்கள் கணினியில், தகவல் தளத்தில் ‘தண்ணீரில் மறைந்துள்ள செய்திகள்’ (The Hidden Messages in Water) என்று தேடினால், மசுரு எமோடோ (Masuru Emoto) என்னும் ஒரு ஜப்பானிய விஞ்ஞானி தண்ணீர் மாதிரிகளின் மேல் நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவுகளைப் பற்றிப் படிக்கலாம்.

அவர் ஒரே நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளை, பல பாட்டில்களில் ஊற்றி, ஒவ்வொரு பாட்டிலின் மீதும் அன்பு, வெறுப்பு, கருணை என்று வெவ்வேறு உணர்ச்சிகளின் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுக்களை ஒட்டினார். பின்பு தினமும் ‘அன்பு’ என்று சீட்டு ஒட்டப்பட்ட பாட்டிலின் முன் நின்று, அன்புணர்ச்சியோடு பல வார்த்தைகளைப் பேசினார். அதைப் போலவே, ‘வெறுப்பு’ என்ற சீட்டு ஒட்டப்பட்ட பாட்டிலின்முன் நின்று, பழிவாங்குதலைப் போலவும், கொடூரமாகவும் பேசினார்.
பிறகு அவர் அந்தத் தண்ணீர் மாதிரிகளை உறையவைத்து பனிக்கட்டிகளாக்கி, அவற்றை ‘எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்’ கருவியின் மூலமாக பார்க்கும்பொழுது, ‘அன்பு’ என்று எழுதப்பட்ட தண்ணீர் மாதிரி, மிக அழகான ஸ்படிகமாக ஒளிர்ந்து மின்னியது. அந்த ‘வெறுப்பு’ என்று எழுதப்பட்ட தண்ணீர் மாதிரியின் பனி உருவம், மிகவும் அசிங்கமாகவும் கொடூரமாகவும் தெரிந்தது.
ஒரு மனிதருடைய எண்ணங்களே, தண்ணீரில் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால், மொத்த மனிதகுலத்தின் மனக்கிளர்ச்சிகளும்

சேர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தின் மீது எவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
இன்றைய நாளில் கூட்டு விழிப்பற்ற தன்மையும், கூட்டு எதிர்மறை எண்ணங்களும் அளவில் பெருகிக் கிடக்கின்றன. பிரபஞ்சமும் அதற்குப் பதில்செயல் புரிகிறது. மக்கள், “ஸ்வாமி, ஏன் இந்த சுனாமி ஒன்றுமறியா பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லுகிறது?” என்று கேட்கிறார்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள், பூகம்பங்கள், சுனாமிகள், போர்கள், மற்றும் பல பேரழிவுகளும் நம் கூட்டு விழிப்பற்ற நிலையின் வெளிப்பாடுகளே!
இந்த வழியில்தான், கூட்டு விழிப்புணர்வு நிலையானது எதிர்மறை தன்மைகளை மொத்த அளவில் தூய்மைப்படுத்துகிறது. கொல்லப்பட்ட மக்களெல்லாமே கெட்டவர்கள் என்று சொல்வதற்கில்லை. மொத்த கூட்டு எதிர்மறைகளும் இந்த மாதிரி இயற்கைப் பேரழிவுகளின் மூலமாக எந்த வழியிலாவது, எந்த இடத்திலாவது, எப்படியாவது வெளிப்பட்டாக வேண்டும்.
கூட்டு எதிர்மறை தன்மைகளையும், கூட்டு விழிப்பறு நிலையையும் குறைக்க, நமது முன்னோர்களான ரிஷிகளும் யோகிகளும் சேர்ந்து கும்பமேளா என்னும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
பல லட்சக்கணக்கான ஞானிகளும் மகான்களும் ஒன்று கூடி கங்கை, யமுனை போன்ற புனிதமான ஆறுகளுக்கு வருகிறார்கள். இந்த ஆறுகளின் தண்ணீரை லட்சக்கணக்கான ஞானிகள் தொடும்பொழுது, அந்த ஆற்று நீரானது எந்தளவிற்கு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதமாக்கப்படும் என்று நினைத்துப்பாருங்கள். இந்தப் புனித நீராடல், அந்த எதிர்மறைகளையெல்லாம் சமநிலைப்படுத்துகிறது. இதனால்தான், கும்பமேளாவின்பொழுது, அந்தப் புனித நதிகளில் முழுக்குப்போடுவது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பூமித்தாயும் பூரிக்கிறாள் - குருவைச் சுமப்பதால்!
சென்றவருடம் செப்டம்பர் 21 -ம் நாள், ஐக்கிய நாடுகளின் உலக அமைதி தினத்தன்று, உலகம் முழுவதும் உள்ள நித்யானந்த மிஷனின் தியான மையங்களில் 24மணி நேர தியானப் பேரணிகள் நடத்தப்பட்டன.
மையக் கருத்து இதுதான்: அமைதியுடனும் ஒத்திசைந்து வாழும் நோக்கத்துடனும் இருக்கும் பலருடைய எண்ணங்கள் ஒன்று சேரும்பொழுது, அங்கு இனிமையான அமைதி நிலை நிகழ்கிறது. அது, பூமிக் கிரகத்தின் கூட்டு நேர்மறை விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
நாம்,
மாறிக்கொண்டேயிருக்கும்
க்ஷேத்ரம் அல்ல;
என்றுமே மாறாத
க்ஷேத்ரஜ்ஞன்தான்
என்பதை அறிந்துகொண்ட
அக்கணமே நாம்
சுதந்திரமடைகிறோம்!
நேர்மறை மற்றும் எதிர்மறை, படைத்தல் மற்றும் அழித்தல் இவையெல்லாமே, க்ஷேத்ரம் என்னும் நாம் வாழ்கிற, எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கிற, இந்த உலகத்தினுடைய இயல்பான உடைமைகள். நாம், மாறிக்கொண்டேயிருக்கும் அந்த க்ஷேத்ரம் அல்ல; என்றுமே மாறாத க்ஷேத்ரஜ்ஞன்தான் என்பதை அறிந்துகொண்ட அக்கணமே நாம் சுதந்திரமடைந்து விடுகிறோம்.
கிருஷ்ணர் இந்த அழியாத நிலையான ஆனந்தத்தைத்தான் க்ஞேய,
அறிந்துகொள்ளப்பட வேண்டியது என்று
அழைக்கிறார். அறிதல் நிகழும்பொழுது,
அறியப்படும்பொருள் (ஜ்ஞேய), அறிபவன்
(ஜ்ஞாதா), அறிவு (ஜ்ஞாநம்) ஆகியவை
ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
இந்த அனுபவத்தில் அறிபவன்,
அறியப்படும்பொருள், அறிவு ஆகிய
மூன்றும் ஒருங்கிணைந்து விடுகிறது.
அனுபவம், அனுபவிப்பவர் மற்றும்
அனுபவிக்கப்படும் பொருள் என்று
தனித்தனியாக எதுவுமில்லை. அது த்ருப்தி
என்று அழைக்கப்படுகிறது; அங்கே இந்த
மூன்று அம்சங்களுக்கு இடையே எந்த
வித்தியாசமும் இருப்பதில்லை.
அறிதல் நிகழும்பொழுது,
அறியப்படும்பொருள்
(ஜ்ஞேய),
அறிபவன் (ஜ்ஞாதா),
அறிவு (ஜ்ஞாநம்)
ஆகியவை ஒன்றாகக்
கலந்துவிடுகின்றன!
இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்: காரோட்டுவதில் மிகவும் விருப்பமுடைய நீங்கள், ஒரு புதிய தானியங்கி காரில் அமர்ந்து, நெடுஞ்சாலையில் முழு வேகத்தில் ஓட்டிச்சென்று கொண்டிருப்பதாக கற்பனைசெய்து கொள்ளுங்கள். உங்களை மறந்து காரை ஆனந்தமாக ஓட்டுவதிலேயே மெய்மறந்து மூழ்கியிருக்கின்றீர்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, சட்டென்று உணர்வீர்கள்: நீங்கள் காரோட்டிக் கொண்டிருக்கவில்லை; 'ஓட்டுதல்' சுலபமாக தானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்!
நீங்கள் காரோட்டும் அனுபவமாக மாறிவிட்டீர்கள்; 'நான் காரோட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு இல்லை. கார் தானாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அனுபவமாக மாறிவிட்டீர்கள்.
அதே போலவே, நீங்கள் வேறேந்த உணர்ச்சியிலாவது செயலிலாவது ஆழமாக மூழ்கி விட்டீர்களானால், அங்கு அனுபவம், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது ஆகிய மூன்றுமே ஒன்றாகி நிலையான விழிப்புணர்வில் கரைந்திருக்கும்! நீங்கள் இதைத்தான், 'தளத்தில் இருப்பது' (In the Zone) என்று சொல்வீர்கள்.
கிருஷ்ணர், தம்முடைய முடிவற்ற இயல்பு, நிலையான இருப்புத்தன்மை காலத்தினால் கட்டுப்பட்டதல்ல என்று விளக்குகிறார். இப்பொழுது, அவர் 'தாம் எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், தாம் இடத்தால் கட்டுப்படுத்தப்படாதவர்' என்றும் சொல்லுகிறார்.
சாதாரணமாக நாம், ஒரு பொருள் அல்லது ஒரு நபர் இருப்பத்தையோ அல்லது இல்லாததையோ அதனுடைய அல்லது அவருடைய ஸ்தூல ரூபத்தை அடிப்படையாகக்கொண்டுதான் தெரிந்துகொள்கிறோம்.
நாம் நம் வாழ்க்கையை, நாம் எதைப் பார்க்கிறோமோ, நாம் எதைக் கேட்கிறோமோ, எதைத் தொடுகிறோமோ, எதை நுகர்கிறோமோ, எதைச் சுவைக்கிறோமோ அவற்றின் அடிப்படையில்தான் வாழ்கிறோம். நமது ஐம்புலன்களான பஞ்ச இந்திரியங்களால் ஒரு பொருளை உணர முடியவில்லையென்றால், அந்தப் பொருளை இல்லை என்றே நினைத்துக் கொள்கிறோம்.
ஒரு முக்கியமான, ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஜ்ஞான குருவின் ஸாந்நித்யத்தை அவருடைய அருகாமையில், ஸ்தூல உடலின் முன் உணர்வதைவிட, அவர் இல்லாதபொழுது அதிகம் உணரமுடியும்.
இதன் அர்த்தம் என்னவென்றால், குருவினுடைய சக்தி என்றும் அழிவதும் இல்லை; அதை எதுவும் தடுப்பதும் இல்லை. அது எந்தத் தடைகளையும் அறியாது.
உலகின் பல பகுதிகளிலுமுள்ள சீடர்கள், ''ஸ்வாமி, நாங்கள் தங்களோடு இருப்பதையே விரும்புகிறோம், தயவுசெய்து எங்களிடத்திற்கு வருகை தாருங்கள்'' என்று கேட்பதுண்டு. அப்பொழுது நான் அவர்களிடம் சொல்வது: ''உண்மையில், நித்யானந்தாவுடைய 66% ஸாந்நித்யம் அருள் பணிகளிலும் போதனைகளிலும் இருக்கிறது; வெறும் 33% ஸாந்நித்யமே இந்த உடலில் இருக்கிறது.''
நாம் ஒரு ஜ்ஞான குருவை அவருடைய ஆறடி உருவத்திற்குள் கட்டுப்படுத்தினோமேயானால், நாம் அவரை முழுமையாகத் தவறவிட்டு விடுவோம். அவருடைய சக்தியானது காலம், இடம் இவற்றையெல்லாம் கடந்தது; அவர் எப்பொழுதும், எங்கும் நமக்குக் கிடைக்கக்கூடியவராக இருக்கிறார்!

குரு, இல்லாமலும் இருக்கிறார்
ஒரு ஜ்ஞான குருவின் உடல் அமைதிகொள்ளும் ஜீவ समाதியின் அருகாமையில் இருந்தாலுமே, நீங்கள் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே, அமைதியாகிவிடுவீர்கள்; உங்களுக்குள் இருக்கும் அந்த அமைதி தளத்தையும் அனுபவிப்பீர்கள்.
பல பெரிய கோயில்களான திருப்பதி, திருவண்ணாமலை, மந்த்ராலயம், பழனி போன்றவை ஜ்ஞானிகளின் ஜீவ சமாதியின் அருகாமையில் கட்டப்பட்டவைதான். அதனால்தான் இன்றளவும் பல லட்சக்கணக்கான பக்தர்களைத் தம்பால் ஈர்க்கும் சக்தி வாய்ந்த தலங்களாக இருக்கின்றன.
குரு, தம் உடலில் இல்லாதபொழுதும், நாம் அவருடைய இருப்பை உணருகிறோம். ஏன்? ஏனெனில், அவர் உடலால், குறிப்பிட்ட இடத்திற்குள் இருப்பவர் அல்ல; உடலாலும் இடத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவர். குரு, வெளிப்படுத்தும் அந்தப் பிரபஞ்ச சக்தி, காலம் மற்றும் இடத்தைக் கடந்தவை. நமக்கு ஸ்தூல ரூபத்தில் இருக்கும் தடைகளை மட்டுமே தெரியும். இங்கு கிருஷ்ணர், 'எல்லா இடத்திலும் கண்களை உடையவன்' என்ற சொற்றொடரை உபயோகப்படுத்துகிறார்.

என்னுடைய பரிவிராஜகத்தின்பொழுது, ஹிமாலயத்தில், ஒரு நாகா பாபாவுடன் சில காலம் தங்கியிருந்து கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாகா பாபா என்பது நாகர்களின் வழிவந்தவர்களைக் குறிக்கும். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உடேயேதும் அணியாத பழக்கத்தைக்கொண்டவர்கள்.
இந்த பாபா, தம்மிடம் கற்க வருபவர்களுக்கு, கற்பிப்பதற்குத் தனிப்பட்ட பாணியைக் கொண்டிருந்தார். மக்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வரும்போதெல்லாம், தன்னுடைய திரிசூலத்தை நிலத்தில் நாட்டி, அவர்களை அதன் மூன்று நுனிகளையும் ஒரே நேரத்தில் உற்றுப்பார்க்கச் சொல்வார். சில சமயங்களில் அந்த மாணவர்கள், இந்தக் கலையில் முழுமைத்துவம் பெற மூன்று மாதங்களுக்கும் மேலாகவேகூட ஆகும். அவர்கள் நாள் பூராவும் அமர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்வார்கள்.
உங்களுக்கு இப்பொழுது இதைக் கேட்கும்பொழுது வேண்டுமானால், இது மிகவும் எளிமையான நுட்பம்போல் தோன்றும். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் இது அவ்வளவு எளிதானது அல்ல; இது மிகவும் கடினமானதொரு பயிற்சி.
ஒரு நேரத்தில் நம்மால் ஒரு நுனியை மட்டுமே பார்க்கமுடியும். அடுத்த கணம் அடுத்த நுனி, அதற்குடுத்த கணம் மூன்றாவது நுனி. ஒரே நேரத்தில் மூன்று நுனிகளையும் பார்ப்பது மிகக் கடினம்.

நானும் முதலில் அது சுலபம் என்றுதான்
நினைத்து விட்டேன்! ஆனால் நான் பயில
ஆரம்பித்தபொழுது, எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. 'ஓ கடவுளே, ஒரே நேரத்தில்
என்னால் இந்தச் சிறிய சூலத்தைக்கூட
முழுதாகப் பார்க்க முடியவில்லையே!'
என்று நினைத்தேன். கண்பாவையை
உருட்டாமல், பார்வையை நகர்த்தாமல்,
ஒரே நேரத்தில் ஒரு புள்ளிக்கு மேல்
நம்மால் பார்க்க முடியாது என்பதைப்
புரிந்துகொண்டேன்.
மூன்றாவது கண்ணை (புருவ மத்தியில் இருக்கும் சக்தி மையம்) விழிக்கச் செய்வதற்கு திரிசூலம் ஒரு சிறந்த ஆயுதம். அது நம் விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான ஒரு நல்ல கருவி.
இப்பொழுது, உங்களுடைய பார்வையின் கோணம் 120 டிகிரி அளவில் இருக்கும். நீங்கள் உங்கள் கவனத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவித்தால், ஒருமுகப்படுத்தினால், உங்கள் பார்வையின் பரப்பு 30 டிகிரி அளவிற்குக் குறைந்துகொண்டே வரும். கவனத்தைக் குவிக்கக் குவிக்க, உங்கள் பார்வையின் பரப்பளவு குறைந்துகொண்டே வரும். அதேசமயத்தில், உங்கள் விழிப்புணர்வு, மெதுவாக 120 டிகிரியிலிருந்து 180 டிகிரி, பிறகு 240 டிகிரி என்று அதிகரித்துக்கொண்டே வந்து இறுதியில் 360 டிகிரியாகிவிடும்!
மூன்றாவது கண்ணின் மேல் மையப்படுத்தி,
உங்கள் விழிப்புணர்வை உருவாக்குதல்
என்பது உங்களின் விழிப்புணர்வை
விழிப்பிக்கச்செய்வதுதான்.
‘எல்லா இடத்திலும் கைகளும்
கால்களும் கண்களும் தலைகளும்
காதுகளும் வாய்களும்’ என்று கிருஷ்ணர்
சொல்லும்பொழுது அவர் எதைக்
குறிப்பிடுகிறார்?
இது, மனித மனம் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது; உள்வாங்கி, சிரத்தையுடன் ஆராய்தல் என்ற அம்சம் ஒரு சிறிது இதற்குத் தேவைப்படுகிறது. நமக்கு ஒரே ஒரு உடலைத்தான் தெரியும். அது இந்த ஸ்தூல உடல்
- ஏனெனில் நாம் அதனோடுதான் முழுவதுமாக நம்மை இணைத்து வைத்திருக்கிறோம். ஒரு சிறுபடத்துடன் இதை விளக்குகின்றேன்.
ஏழு சரீர அடுக்குகளின் வரைபடம்
இந்தப்படம், நமக்குள் இருக்கும் ஏழு விதமான சக்தி அடுக்குகளைக்

காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் வெளியில் இருக்கும் முதல் அடுக்கு நம் ஸ்தூல உடல். இதனோடுதான் எல்லா நேரத்திலும் நம்மை இணைத்துக்கொண்டுள்ளோம். ஒரு ஜோடி கைகள், கால்கள், கண்கள்,
காதுகள், ஒரு வாய், ஒரு தலை, இன்னும்
பலவற்றைக் கொண்ட இந்த உடலை
மட்டும்தான் நமக்குத் தெரியும்.
இப்பொழுது அந்த வெளி அடுக்கின் மேல் ஒரு சில புள்ளிகளை எடுத்துக்கொள்வோம். அந்தப் புள்ளிகளை நாம் 'நீ', 'நான்', 'உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்', 'கிருஷ்ணர்', 'புத்தர்' என்றெல்லாம் அழைக்கலாம். அதனால் உங்கள் மொத்த அடுக்கில், நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து வேறுபடுகிறீர்கள்; உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் என்னிடமிருந்து வேறுபடுகிறார்; பல்வேறு வடிவங்களிலிருக்கும் கடவுளர்களும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து தனித்தே இருக்கிறார்கள்.
நாம் இந்த ஸ்தூல உடலிலேயே ஆழமாக வேரூன்றி இருப்பதால், நாம் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றுக்கும் இடையில் பல தடைகள் இருப்பதைப் பார்க்கின்றோம். ஏனெனில் இந்த அடுக்கைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வேறாகத் தெரிகிறது; ஒவ்வொன்றையும் வேறாக உணர்கிறோம்.
இப்பொழுது, ஒவ்வொரு புள்ளிக்கும், நம் உள் அடுக்குகளில் தொடர்பு புள்ளிகள் இருக்கின்றன. அந்தத் தொடர்பு புள்ளிகளைப் பின்பற்றி மிக ஆழமாகச் சென்றால், இறுதியில் நாம் அனைவரும் நிர்வாண அடுக்கில் ஒன்றாக இணைவதை உணர்வோம். இங்குதான் பிரபஞ்ச சக்தி ஒவ்வொரு இருப்பையும் இணைக்கிறது. இந்தப் பகுதியில்தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லை.
விழிப்புணர்வின் இந்தப் பகுதியைத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். இங்கு, கிருஷ்ணரும் புத்தரும் வேறுவேறானவர்கள் இல்லை. எல்லோரும் கடவுளின் வேறு வேறு வடிவங்கள், எல்லாமே அதே தெய்விகத்தின் வெளிப்பாடுகளே.
கிருஷ்ணரின் சிறந்த பக்தைகளான கோபியர்கள், அந்த இடையர் குலப் பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும்கூட, எப்பொழுதும் கிருஷ்ண பக்தியிலேயே மூழ்கியிருந்தார்கள்; கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார்கள்.
அந்தக் கோபியர்களுக்கு பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தைக் கொடுக்க, கிருஷ்ணர் இராஸலீலா என்னும் தெய்விக நாடகத்தை நடத்தினார். இராஸலீலாவின்பொழுது, ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான கிருஷ்ணர்களாக வெளிப்பட்டு, ஒவ்வொரு கோபிகையுடனும் தனித்தனியாக நடனமாடினார்.
இறைவன் உங்களின் வழியாகவும் வாழ்கிறார்
இதில் உள்ள ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கோபியருமே, அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன், கிருஷ்ண விழிப்புணர்வுடன் ஆழமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியே கிருஷ்ணரின் ஸாந்நித்யத்தை உணர்ந்தனர்.
நாமும் நமக்குள்ளே பயணிக்கும்பொழுது, நமது மையப்பகுதியில், எங்கும் எதிலும் தெய்விகத்தையே காண்கிறோம். அந்தக் கோபியர்கள் எங்கும் எதிலும் கிருஷ்ணரையே கண்டனர்.
பிரபஞ்ச விழிப்புணர்வுக்கு எவ்விதமான உடல் தடைகளும் கிடையாது; அது எந்தவித ஸ்தூல தடைகளையும் அறியாது! அதனால்தான் கிருஷ்ணர் சொல்லுகிறார், "நான் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறேன்; அனைத்தையும் என்னுள் கொண்டுள்ளேன்; எங்கும் நிறைந்திருக்கிறேன்."

அதனால்தான் நான் சொல்கிறேன், "நான்
தியான சிகிச்சையாளர்களாக தீக்ஷை அளித்த
அனைவருமே என்னுடைய கைகள்; நம்
அனைத்து ஆசிரியர்களும் என்னுடைய
வாக்கு; எல்லா அமைப்பாளர்களும் என்
மனம்!"
என்னுடைய இரண்டு கைகளைக்கொண்டு
ஒரு சில மக்களை மட்டுமே நான்
குணப்படுத்த முடியும். என்னுடைய ஒரு
வாயை வைத்துக்கொண்டு ஒரு சில சொற்பொழிவுகளை மட்டுமே கொடுக்க முடியும். இந்த ஒரு மூளையைக்கொண்டு ஒரு சில நிகழ்ச்சி களையே நடத்தித்தர முடியும்.
அதனால்நான் நான், என்னுடைய தியான சிகிச்சையாளர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் மூலமாகச் செயலாற்றுகிறேன். பிரபஞ்ச நித்யானந்தா, இவர்கள் மூலமாகச் செயற்படுகிறது!
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒரு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்த வேண்டுமானால், தேவையான கட்டமைப்புகள் வேண்டும். கடலுக்கு அடியில் அதற்கான இணைப்புக் கம்பிகளைப் பொருத்த வேண்டும். இதைச் சார்ந்த பல வேலைகள் செய்தாக வேண்டும். ஆனால் இந்தப் பிரபஞ்சத் தொடர்புக்கு, எதுவும் தேவையில்லை. நமக்குள் இருக்கும்ிருப்பினோடு தொடர்புகொண்டோமானால் போதும், உடனே எந்தத் தடைகளும் இருக்காது, நாம் எளிதாகப் பறக்கலாம்!
கிருஷ்ணர், 'பிரபஞ்ச சுய'த்தின் பண்புகளை மேலும் தருகிறார். ஆனால் புரிந்துகொள்ளுங்கள், முதலில் இதை நாமே அனுபவித்துத் தெரிந்துகொள்ளவே இவையனைத்தும் சொல்லப்படுகின்றன. இதற்குமுன் இனிப்பையே சுவைத்திராத ஒருவர் உங்களிடம், “சர்க்கரையின் ருசி எதைப்போல இருக்கும்?” என்று கேட்டால், அவருக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பீர்கள்?
“வெள்ளை சதுரவில்லைகளாக, கண்ணாடிபோல் தெளிவாக, வெகு
ஒரு குருவின் கருணை
அளவு கடந்தது. சீடனுள்
அவநம்பிக்கையும்
சந்தேகங்களும்
இருந்தாலும், அவர்
அவனுடன் அமைதியுடனும்
பொறுமையுடனும்
அமர்கிறார்!
இனிப்பாக இருக்கும்,” என்று நீங்கள் சொல்லலாம். உடனே அவர், “இனிப்பு என்றால் என்ன?” என்று கேட்கக்கூடும். அதற்கு நீங்கள், “கரும்பிலிருந்து சர்க்கரை செய்யப்படுகிறது. அந்தக் கரும்பில் சர்க்கரைபாகு நிறைந்து இருக்கும். அதைக் கடித்தும் சுவைக்கலாம்…” என்று, அதைப் பற்றிய விதவிதமான தகவல்களைச் சொன்னாலும் என்ன பயன்?
அதற்குப் பதிலாக சிறிது சர்க்கரையை
எடுத்து, அவர் வாயில்போட்டால்,
அவர் தானாகவே இனிப்பின் சுவையை
அறிந்துகொள்வார்.
இனிப்பு என்றால் என்ன அர்த்தம் என்பதை
அவரே அனுபவிக்காதவரை, ‘சர்க்கரையின்
ருசி’ என்ற வார்த்தை அவருக்கு வெறும்
வார்த்தையளவில் மட்டுமே இருக்கும்;
ஆனால் சர்க்கரை பற்றித் தெரிந்துகொள்ளும்
ஆவல் மட்டும் அவருக்குள்ளே
வளர்ந்துகொண்டேயிருக்கும்.
> நம் மனத்திலிருந்து
> எழும் சந்தேகங்களும்
> கேள்விகளும் நம் மீது
> ஒரு கனமான படலத்தை
> உருவாக்குகிறது.
> குருவின் அருள்
> இந்தப் படலத்தை
> மென்மையாகக்
> கரைத்துவிடுகிறது!
ஆனால் பட்டறிவாளர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்கள், சந்தேகங்களாலும் அவநம்பிக்கைகளாலும் குழப்ப்ட்டு இருளில் மூழ்கியுள்ளார்கள். அதனால் அவர்களுக்கு வார்த்தைகள் ரீதியான விளக்கமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. நாம் எல்லாவற்றையும், நமக்குத் தெரிந்த ஒன்றை வைத்துத்தான் மதிப்பீடு செய்ய விரும்புகிறோம். கிருஷ்ணர், கருணை மிகுந்தவர். அவர் மிகப் பொறுமையானவர்.
அத்தியாயம் 11-ல் அவர் தம் பிரபஞ்ச உருவத்தோற்றத்தை, விஶ்வரூப தர்ஶனத்தை வெளிப்படுத்தினார். ஆனால், விஶ்வரூப தர்ஶனத்திற்குப் பிறகு அர்ஜூனன் அச்சத்திற்குள்ளானார். அந்தச் சக்தியை அவரால் கையாள முடியவில்லை. அவர் கிருஷ்ணரிடம் “என்னால் உங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் பேரொளியை என்னால் தாங்க முடியவில்லை,” என்று மன்றாடுகிறார்.
ஆனாலும் அர்ஜூனன், கிருஷ்ணர் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அதனால் மறுபடியும் அர்ஜூனனின் சந்தேகங்களையும் பயங்களையும் துடைப்பதற்காக, எல்லாவித விளக்கங்களையும் கிருஷ்ணர் தருகிறார்.
ஒரு குருவின் கருணை அளவு கடந்தது. சீடனுள் அவநம்பிக்கையும் சந்தேகங்களும் இருந்தாலும், அவர் சீடனுடன் அமைதியுடனும் பொறுமையுடனும் அமர்கிறார்; எல்லாச் சந்தேகங்களும் ஒவ்வொன்றாக நீங்கும்வரை! நம் மனத்திலிருந்து எழும் சந்தேகங்களும் கேள்விகளும், நம்மீது ஒரு கனமான படலத்தை உருவாக்குகின்றன. ஒரு குருவின் அருள் இந்தப் படலத்தை மென்மையாகக் கடினமில்லாமல் கரைத்துவிடுகிறது.
ஆனந்தத்தை அனுபவிக்க மட்டுமே முடியும்
இப்பொழுது புத்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றிச் சொல்கிறேன்.
ஒரு குருடர் ஒவ்வொருவரோடும், 'வெளிச்சம் என்று ஒன்று கிடையவே கிடையாது' என்று வாதாடிக் கொண்டிருந்தார். யாராவது ஒருவர் வெளிச்சம் இருக்கிறது என்று சொன்னால், அதைத் தம்முடைய கையில் பிடித்துத் தருமாறு கேட்பார்.
பிரபஞ்ச சக்தியின் இழை
ஒவ்வொன்றிலும் ஊடுருவிச்
செல்வதால்தான்
எல்லா உயிர்களும்
இயங்குகின்றன!
மேலும் அவர், “வெளிச்சம் என்று
ஒன்றிருந்தால், நான் அதைத் தொட
விரும்புகிறேன்; அதனோடு வெளியே
செல்ல ஆசைப்படுகிறேன்; அதனோடு
விளையாட விரும்புகிறேன்; அதன்
பிறகுதான் வெளிச்சம் என்று ஒன்று
இருக்கிறது என்று நம்புவேன்,” என்று
வீம்பு பேசினார். ஒவ்வொருவரோடும்
வாதாடிக்கொண்டேயிருந்தார், அவர்கள்
அவருக்காக விட்டுக் கொடுத்து,
அவர் சொல்வதே ‘சரி’ என்று
ஒப்புக்கொள்ளும்வரை!
ஒரு நாள் அவர் புத்தரிடம் சென்றார். புத்தர் அவரோடு வாதாடவில்லை, ஒரு வார்த்தையும் அவரிடம் பேசவில்லை, அவரைப் பரிசோதித்து அவருக்குச் சிகிச்சை கொடுக்குமாறு ஒரு மருத்துவரைக் கேட்டுக்கொண்டார்! மருத்துவரின் சிகிச்சையால் அவருக்குப் பார்வையும் கிடைத்தது. பார்வை கிடைத்தவுடன் அவருடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. எல்லா விஷயங்களையும் பார்த்து அதிசயித்து மகிழ்ந்தார். பிறகு அவர் சில மலர்களையும் கனிகளையும் கொண்டுவந்து புத்தருடைய காலடியில் வைத்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
அந்தக் குருடர் தம் இதயத்தின் ஆழத்திலிருந்து பேச ஆரம்பித்தார்: “ஓ, புத்தர் பெருமானே, குருட்டுத்தனமாக, நான் எல்லோரிடமும் வாதாடிக் கொண்டிருந்தேன். மற்றவர்களும் என்னிடம் வாதாடி, என்னை அழித்து விட்டனர். நீங்கள் என்னோடு வாதாடாதது நல்லதாகிப் போயிற்று. நீங்களும் என்னிடம் வாதாடியிருந்தால், நானும் திருப்பி வாதாடி என்னை அழித்துக் கொண்டிருந்திருப்பேன். ஆனால், இப்பொழுது வெளிச்சம் இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்!”
புத்தர், அந்தக் குருடரிடம் காட்டியது போன்ற அதே கருணையோடு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒரே ஸத்யத்தை மீண்டும் மீண்டும் பலவாறு எடுத்து விளக்குகிறார், அப்படியாவது, அர்ஜுனனின் மனத்திற்குள், ஏதோவொரு விதத்தில், ஸத்யத்தின் பொறி தட்டக்கூடும் என்ற கருணை உணர்வோடு கிருஷ்ணர் அர்ஜுனனின் சந்தேகங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.
பல விஷயங்கள்,
நம்மைச் சுற்றி
நம்மையறியாமலேயே
தானாகவே இயங்கிக்
கொண்டிருக்கின்றன!
கிருஷ்ணர், இந்த ஸ்லோகத்தில்...
எல்லாப் புலன்களும் வேலைசெய்வதற்கு
தாமே பொறுப்பு என்றும், ஆனாலும்
அதற்கெல்லாம் தாம் அப்பாற்பட்டவர்
என்றும்...
வாழ்க்கை எப்படி நிகழ்ந்தாலும் தாமே
பொறுப்பு என்றும், ஆனால் அதில் எந்தவித
பற்றுதலும் கொள்ளாதவர் என்றும்...
பேராவல், சோம்பேறித்தனம், நற்குணம் ஆகிய முக்கிய பண்புகளுக்கும் அவரே காரணமாயிருக்கிறார் என்றும், ஆனாலும் அந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டவர் என்றும்...
பிரபஞ்ச சக்தியின் இழை ஒவ்வொன்றிலும் தாம் ஊடுருவிச் செல்வதால்தான், எல்லா உயிர்களும் இயங்குகின்றன என்றும் சொல்கிறார்.
இதன்மூலம் கிருஷ்ணர், மிக சூட்சுமமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறார்: எந்தவொரு நிகழ்வு நிகழ வேண்டுமென்றாலும், நாம், பிரபஞ்ச விழிப்புணர்வான அவரையே சார்ந்திருக்கிறோம், ஆனால் அதே சமயத்தில், பிரபஞ்ச சக்தி, எதிலும் ஈடுபடாமல், எல்லா உயிர்வகைகளுக்கும், அவற்றின் எல்லா நடவடிக்கைகளுக்கும், ஒரு ஸாக்ஷியாக இருக்கிறது.
பல விஷயங்கள், நம்மைச் சுற்றி நம்மையறியாமலேயே தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ரொட்டித் துண்டை எடுத்து நம் வாயில் வைத்து அதை மெல்லுகிறோம், விழுங்குகிறோம். அதன் பிறகு, நம் உத்தரவுகள் ஏதுமின்றியே தானாகவே அதைச் சக்தியாக மாற்றும் பல நிகழ்ச்சி கள் நடக்கின்றன. உத்தரவுகள் கொடுப்பது பற்றி விடுங்கள், நமக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்றுகூட நமக்குத் தெரியாது.
> ஒரு குறிப்பிட்ட
> சூழ்நிலைக்கு,
> நமது மனம் எதிர்ச்செயல்
> புரியும் விதமே,
> நமக்குள் வலியோ
> மகிழ்ச்சியோ ஏற்பட
> காரணமாகிறது!
இன்று விஞ்ஞானிகள் வேதியியல்
மாற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கலாம்.
ஆனாலும் இறந்துவிட்ட ஒரு உயிரணுவை
இயங்கும் உயிரணுவிலிருந்து எது
வேறுபடுத்தி காட்டுகிறது என்பதை இன்னும்
அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை.
பிறகு எப்படி அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தையும், மிகத் துல்லியமான ஒத்திசைவாக ஓடிக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பால்வெளி மண்டலங்களையும் புரிந்துகொள்ள முடியும்? அண்டவெளியில் ஏதேனும் காவலர் அமர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறாரா என்ன?
இல்லையே!
இறைவன் அறியாமல் ஒரு புல்கூட அசைய முடியாது
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த முழு நாடகத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் வாழ்வின் சக்தி, நம் ஒவ்வொரு சுவாசத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி, அண்டவெளியில் நிகழும் குழப்பங்களின் இடையிலும் ஒரு ஒழுங்குமுறையைக் காப்பாற்றும் சக்தி - ஆகிய இவை எல்லாமே தூய்மையான புத்திசாலித்தனம்தான்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் ஒரு பொன்மொழி: இறைவனின் சித்தம் இல்லாமல் ஒரு புல்கூட அசைய முடியாது!
நாம் சற்று ஆழமாகப் பார்த்தோமானால், நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, எதையெல்லாம் ஒரு பொருளாக உணர்கிறோமோ, அவையனைத்துமே, நம் மனம், நம் புலன்களோடு இணைந்து படைக்கும் படைப்புகளே என்னும் புரிதல் நமக்குள் மலரும்.
நமக்கான, நமது சொந்த உலகத்தை
நாமேதான் உருவாக்குகிறோம்.
அடித்தளத்தில், நம் ஆத்மா எதிலும்
ஈடுபடாமல், எல்லாவற்றையும் சாட்சியாகக்
கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு, நமது
மனம் எதிர்செயல்புரியும் விதமே,
நமக்குள் வலியோ மகிழ்ச்சியோ ஏற்பட
காரணமாகிறது.
நமது மனம், சிலரை நல்லவர்கள் என்றும், சிலரை கெட்டவர்கள் என்றும், சில நிகழ்வுகளை மகிழ்ச்சியளிப்பதாகவும், சில நிகழ்வுகளை வலி உண்டாக்குவதாகவும் தோற்றம் காண்பிக்கிறது. அது, தான் நல்லவர் என்று கருதும் நபரின் பின் ஓடுகிறது, கெட்டவர் என்று கருதும் நபரைக் கண்டு விலகி ஓடுகிறது. அதேபோல் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குப் பின் ஓடுகிறது, துன்ப நிகழ்வுகளிடமிருந்து விலகி ஓடுகிறது.
முன்பு கிருஷ்ணர் மூன்று பண்புகளைப் பற்றி விளக்கியிருந்தார். அவை, தமஸ் (மந்தத் தன்மை), ரஜஸ் (செயல்கள்), ஸத்வ (சாத்வீகம்). இவை மூன்றும் சேர்ந்து த்ரிகுண - மூன்றுபண்புகள் எனப்படும்.
நாம் உண்ணும் உணவாகிலும், செய்யும் செயலாகிலும், எந்த ஒரு பொருளுமே இந்த மூன்றில் ஒருவகையாக வகைப்படுத்தப்படும். நாம் நம்மை, இந்த உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும்வரை, ஒவ்வொருவரையும் பெயர்களாகவும் உருவங்களாகவும் பார்த்துக் கொண்டிருக்கும்வரை, அவற்றை வகைப்படுத்திக் கொண்டிருப்போம். உதாரணத்திற்கு, ‘தியானம் மிக நல்லது’, ‘அதிகம் உண்பது நல்லதல்ல’
- என வகைப்படுத்திக் கொண்டிருப்போம்.
ஞானமடைந்த ஒருவருக்கு, ஸத்யத்தை அறிந்துகொண்ட ஒருவருக்கு, எல்லாமும் ஒன்றேதான். அவர் வகைப்படுத்துவதை நிறுத்திவிடுகிறார். ஏனெனில், அவர் பெயர்களுக்கும் உருவங்களுக்கும் அப்பாற் சென்றுவிட்டார்; நல்லது, கெட்டது என்ற இருவகைகளுக்கும் அப்பாற் சென்றுவிட்டார்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒரு அழகான உதாரணத்தைக் கொடுக்கிறார். நாம் ஒரு பள்ளத்தாக்கில் நின்றுகொண்டு, குனிந்து நம் காலடியருகில் பார்த்தால் குண்டுங்குழியுமாக மேடுபள்ளங்களையும், மேல் நோக்கி அண்ணார்ந்து பார்த்தால் மலைமுகடுகளையும் பார்ப்போம். ஆனால் நாம் அந்த மலை உச்சிக்கு ஏறினால், கீழே இருக்கும் மேடுபள்ளங்களும் மலைமுகடுகளும் நமக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. கீழே நின்றுபார்த்தபொழுது தெரிந்த மேடுபள்ளம், மலைமுகடுகளையெல்லாம் இப்பொழுது கடந்துவிட்டோம்.
எப்படி உச்சிக்கு ஏறுவது? எல்லா மேடு, பள்ளங்களையும் கடந்து ஆகாயத்தில் பறப்பது எப்படி?
நீங்கள் சாந்தமனத்துடனும் தளர்வாகவும் இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே உச்சியில்தான் இருக்கின்றீர்கள் என்பதை உணர வேண்டும், அவ்வளவுதான். நீங்கள் அந்த மேடு, பள்ளங்களைக் கடந்தவர்; நீங்கள் அந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்; ஆனாலும் நீங்கள் அதை நம்பிவிட விரும்பவில்லை.

உங்கள் மனம், ‘இவர் என்ன சொல்கிறார்?
வாழ்க்கையில் இன்னும் நான் செய்ய
வேண்டிய பல முக்கிய காரியங்கள்
இருக்கின்றன. எப்படி நான் ஓய்வாக
இருக்க முடியும்?' என்று சொல்கிறது.
நாம், நம் மன உளைச்சல்களையும் பிரச்சி
னைகளையும் மிகவும் நேசிக்கிறோம். நாம்
நமது வாழ்க்கையை பற்றிக்கொள்ளத்தான்
விரும்புகிறோம். நாம் அதை விட்டுவிட
விரும்புவதில்லை. ஏனெனில், அதுவே
அனைத்தும் என்று நாம் நினைக்கிறோம்.
நாம் தளர்வாக, அமைதியாக
இருப்பதில்லை; நாம் தளர்வாக இருந்தால்,
நாம் பறக்க முடியும் என்பதை நாம்
உணர்ந்துகொள்வதில்லை.
நாம், அந்த மூன்று தன்மைகளையும் கடந்து, கிருஷ்ணர் சொன்ன, அந்த நிர்குணராகி விடமுடியும்.
மனம் என்னும் வேடனின் வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு வேடன் காட்டைக் கடந்து வரும்பொழுது, ஓரிடத்தில் பறவைகளின் கூட்டத்தைப் பார்க்கிறான். அவற்றைப் பிடிக்க நினைத்த அவன், ஒரு மரக் குச்சியை எடுத்து, அதன் நடுவில் ஒரு கயிற்றைக் கட்டி, அந்தக் கயிற்றின் இரு முனைகளையும் இரண்டு மரங்களின் கிளைகளில் கட்டிவிட்டு, அதைச் சுற்றி சிறிது தானியங்களை தெளித்துவிடுகிறான். இப்பொழுது அந்தக் குச்சி அந்தக் கயிற்றின் குறுக்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. புத்திசாலியான அந்த வேடன், அதன்பிறகு பறவைகளைப் பற்றிய கவலையில்லாமல் சந்தோஷமாக ஒரு குட்டிப் பகல் தூக்கம் தூங்கப்போய்விடுகிறான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தத் தானியங்களால் கவரப்பட்ட ஒரு பறவை, அவற்றை உண்ண, கயிற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் குச்சியின் மீது வந்து அமருகிறது. பறவையின் எடைதாளாமல், உடனே அந்தக் குச்சி புரண்டு விட, அந்தப் பறவையும் தலைகீழாகத் தொங்க ஆரம்பித்தது. அது இந்த உலகத்தையே தலைகீழாகப் பார்த்துப் பயந்து போனது. தான் பிடிக்கப்பட்டுவிட்டோம் என்று தெரிந்து மிகவும் கலவரப்பட்டது. ஆனாலும் அந்தக்க குச்சியை விட்டுவிடாமல், முன்பைவிட இறுக்கிப் பிடித்துக்கொண்டது, தன்னை இதிலிருந்து விடுவிக்குமாறு கடவுளைப் பிரார்த்தித்தது.
ஒரு மணிநேரம் கழித்து, அந்த வேடன் மெதுவாக வந்து எந்தவித கஷ்டமும் படாமல் அந்தப் பறவையைப் பிடித்து, பைக்குள் போட்டு எடுத்துச் சென்றான். அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
நாமும் நம் வாழ்க்கையில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அந்தப் பறவை, தன் சுதந்திரத்தை உணரவேயில்லை. அது செய்ய வேண்டியதெல்லாம் அந்தக்க குச்சியை விட்டுவிட்டு, பறந்து விடுவதே.
ஆனால் அதற்கு பதிலாக அது என்ன செய்தது? தான் பிடிபட்டுவிட்டதாகவும், தான் அந்தக் குச்சியை விட்டுவிட்டால், தலைகீழாக விழுந்து, தன் தலை தரையில் மோதி தான் இறப்பது உறுதி என்றும் நினைத்து, குச்சியை விட்டுவிடாமல் இறுகப்பிடித்துக்கொண்டது.
நாமும் கடந்தகாலத்தை இப்படித்தான் பிடித்துக் கொண்டிருக்கிறோம்; வலிகளையும் சந்தோஷங்களையுமே பிடித்துக்கொண்டு, எதைப்பிடிக்க வேண்டுமோ அதைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறோம். நாம் இந்த நிகழ்கால நிமிடத்தைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறோம். நாம் 'முடிவற்ற நிலை'யைத் தவறவிடுகிறோம். நாம், நம்முள் நிலைத்திருக்கும் நம் 'விழிப்புணர்வை' தவறவிடுகிறோம்.
> வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கு
> உள்ளேயும் வெளியேயும் உன்னதமான
> ஸத்யம் இருக்கிறது.
> ஸூக்ஷ்மமாக இருப்பதனால்,
> அது, அசைந்துகொண்டும் அசையாமலும்
> இருக்கிறது. அது, அருகிலும் இருக்கிறது,
> தூரத்திலும் இருக்கிறது.
கிருஷ்ணர், அசைவது அசையாதது, சமீபம்
தூரம், உள்ளே வெளியே என்பது போன்ற
எல்லாவித சொற்களையும் கையாளுகிறார்.
ஏனெனில் இந்தச் சொற்களைக்கொண்டே,
அனைத்தையும் நாம் புரிந்துகொள்கிறோம்,
அறிந்துகொள்கிறோம்.
அதாவது உன்னதமான விழிப்புணர்வானது, நமக்குத் தெரிந்த இந்த வார்த்தைகள், கருத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று சொல்லி, நமக்கு அதைப் பற்றிய ஒரு கருத்தைக் கொடுக்கிறார்!
நாம் எப்பொழுதுமே நமக்குத் தெரிந்த ஏதாவது ஒன்றை வைத்தே, அதாவது அண்மை தொலைவு, உள்ளே வெளியே போன்ற குறிப்புகளை வைத்தே மதிப்பீடு செய்கிறோம். புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பெயரெச்ச சொற்கள் எல்லாம், ஏதோ ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மட்டுமே உதவுபவை.
ஒருவருக்கு அண்மை என்று தெரிவது, மற்றொருவருக்கு, தொலைவாகத் தெரியலாம்.
ஏதோ ஒன்றிற்குள்ளே இருப்பதாக இருக்கும்
ஒரு பொருள், மற்றொன்றிற்கு, வெளியே
இருக்கும் பொருளாக இருக்கலாம்.
ஒரு உதாரணத்திற்கு, தொலைக்காட்சி
பெட்டி உங்கள் வீட்டுக்குள்ளே
இருப்பதாகவும், மரம், வீட்டுக்கு வெளியே
இருப்பதாகவும் நீங்கள் சொல்லலாம்.
ஆனால் அதே சமயத்தில், அந்த மரம்,
அந்நகரத்திற்கு உள்ளே இருப்பதாகவும்
நாம் சொல்லலாம் அல்லவா. வீட்டோடு
ஒப்பிட்டால், மரம் வெளியே இருக்கிறது,
நகரத்தோடு ஒப்பிட்டால், உள்ளே இருக்கிறது.
உன்னதமான
விழிப்புணர்வானது, நமக்கு
தெரிந்த வார்த்தைகள்,
கருத்துக்களுக்கெல்லாம்
அப்பாற்பட்டது!
ஆகவே இந்தப் பெயரெச்ச சொற்களெல்லாம், நாம் எந்தப் பொருளோடு அல்லது எந்த இடத்தோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்த தொடர்புச் சொற்களாக இருக்கின்றன.
ஒரு எல்லையோடு நின்று விடாதீர்கள்
நீங்கள் உலகம் முழுவதும் விதவிதமான குணாதிசயங்களுடன் கூடிய விதவிதமான பொருட்களைப் பார்க்கிறீர்கள். இது ஏனென்றால், உங்களை நீங்களே ஒரு குறிப்பிட்ட அடையாளத்தோடு இணைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலை, ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் கூடிய ஒரு உருவமாக நினைத்து, அது உலகத்தில் மற்றதையெல்லாம் பார்க்கிறது என்று நினைக்கின்றீர்கள்.
உங்களைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களிலிருந்தும் உங்களைத் தனியாகப் பிரித்து, உங்களை வேறாக உணர்ந்தீர்களென்றால், இப்படித்தான் எல்லாவற்றையும், உங்களுக்குத் தெரிந்த பெயரெச்ச சொற்களைப் போட்டு முத்திரை குத்திக் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் உடல் எல்லையை அடிப்படையாக வைத்து, மற்றதையெல்லாம் அண்மை, தொலைவு என்று சொல்கின்றீர்கள். நீங்கள் மேற்கோள் குறிப்புகளை உருவாக்கிவிடுகிறீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும், எதை நினைத்தாலும், இந்தக் குறிப்புக்களை வைத்துத்தான் செய்கின்றீர்கள். நீங்கள், கடாகாசம் என்று சொல்லப்படும் உங்கள் உடல் எல்லைக்குள்தான் வசிக்கின்றீர்கள்.
நாம் வாழக்கூடிய 'வெளி'கள் மூன்று உள்ளன. ஒன்று - உடலால் சூழப்பட்ட வெளி, இரண்டு- மனத்தால் சூழப்பட்ட வெளி, மூன்று - உடலாலும் மனத்தாலும் சூழப்படாத வெளி.
முதலாவது, கடாகாசம் - இந்த உடலால் சூழப்பட்ட வெளி. இந்த வெளி, நமது ஸ்தூல உடலுக்குள் இருக்கிறது. நம்மில் பலர், கிட்டத்தட்ட எல்லா நேரமும், இந்த வெளியில்தான் வாழ்கிறோம்.
அடுத்தது, சிதாகாசம் - நீங்கள் 'உணர்கிற வெளி'யாகும். இங்கே, இப்பொழுது நீங்கள் இந்தக் கூடத்தை உணர்ந்தால், இது உங்கள் சிதாகாசம், இது 'மனம் மற்றும் எண்ணங்களின் வெளி'யாகும்.
மூன்றாவது மகாகாசம் - எல்லாமே
அடங்கிய பெருவெளி, அண்டவெளி,
பிரபஞ்ச வெளி.
கடாகாசம் என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் என்னும் ஐந்து தனிமங்களால் ஆனது; நாம் நிலத்திலிருந்து நீருக்கு, நெருப்புக்கு, காற்றுக்கு, வெட்டவெளிக்கு என்று மேல்நோக்கிச் செல்லச் செல்ல இந்தத் தனிமங்கள் ஸூக்ஷ்மமாகின்றன.
'ஆகாச'த்தைத் தவிர மற்ற நான்கு
தனிமங்களும் விழிப்புணர்வைப்
பிரதிபலிக்காது. ஆகாசம் மட்டுமே
விழிப்புணர்வைச் சேர்ந்தது. இது
விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிறது.
நாமெல்லாம் உயிரோடு இருப்பதற்கு
இதுவே காரணம்.
பிரச்சினை என்னவென்றால், நம் விழிப்புணர்வு கடாகாச'த்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். இந்த உடலுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம்.
அதனால்தான் வெளியுலகத்தைப் பார்க்கும்பொழுது, நாம் இந்த உடலையே ஒரு அடையாளக் குறிப்பாக எடுத்துக்கொள்கிறோம். வெளியுலகத்தைப் பார்க்கும் இந்த உடலே 'நான்' என்று நினைக்கிறோம். உடல் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தனித்தனி அடையாளங்களே, அதாவது தனித்தனி ஜீவன்களே 'நான்' என்கிற கருத்தைத்தான் எல்லா விஞ்ஞானமும் அடிப்படை ஆதாரமாகக் கொண்டுள்ளன.
இந்த கடாகாச'த்தைக் கடந்து மஹாகாச'த்திற்குள் நுழைந்த ஞானிகள், இந்த எல்லாப் பிரிவுகளுக்கும் காரணம் நம்முடைய 'அறியாமை'தான் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த 'வெளி'யை எப்பொழுதும் பிரிக்கவே முடியாது. இருந்தாலும் நாம், நம் குறுகிய புரிதலின் அடிப்படையில், உள்ளே வெளியே, அண்மை தொலைவு போன்ற சொற்களைக்கொண்டு எல்லைகளை உருவாக்கி அதைப் பிரிக்கிறோம். இதுவே நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம்.
முதலாவதாக, இந்த வெளியை நம் அறியாமையால் பிரிக்கிறோம்.
இரண்டாவதாக, 'வெளி' என்பது நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு, அதை நமக்கே சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறோம். மூன்றாவதாக, நம்மிடமிருந்து இந்த வெளி பறிக்கப்பட்டு விடும் என்று நாம் அஞ்சுகிறோம்.
நமக்கு, மரண பயம் உட்பட, எல்லாவித பயங்களும் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால், உடலாலும் மனத்தாலும் சூழப்பட்ட வெளியைப் பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சிப்பதுதான்.
‘வெளியைப் பிரிக்கவே முடியாது’ என்ற இந்த அடிப்படை ஸத்யத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாமே மறாகாஸம் என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது, நாம் எல்லா எல்லைகளையும் கடந்தவராகிவிடுகிறோம்.
நாமே மஹாஸா'ம்
என்பதைப்
புரிந்துகொள்ளும்பொழுது,
நாம் எல்லா
எல்லைகளையும்
கடந்தவராகிவிடுகிறோம்.
- கடாகாஸத்திலிருந்து சிதாகாஸத்திற்கும், சிதாகாஸத்திலிருந்து மஹாஸாஸத்திற்கும் மாற்றம் நிகழும்பொழுது, அங்கு, உள்ளே-வெளியே, அண்மை-தொலைவு என்று எதுவுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
நாம் எந்த ‘வெளி’யில் இருந்தாலும், அதைவிட உயர்ந்த வெளியை அடையக்கூடிய சாத்தியம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. மனிதன், இயல்பாகவே, உள்ளார்ந்த ஆற்றல்களைக்கொண்டவன்! ஆனால் இப்பொழுது, அவன் ‘உண்மை நிலை’யில் இல்லை; அவன் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படியில்லை.
தற்சமயம், நாம் ‘விதை’ நிலையில்தான் இருக்கிறோம். நம்முடைய உள்ளடங்கிய செயல்திறத்தை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. நாம் இன்னும் மரமாகவில்லை. அதற்காக நாம் வளரவே முடியாது, மரமாகவே முடியாது என்று அர்த்தமில்லை.
‘அந்த மஹோன்னதமான ஸத்யம், வாழும் எல்லா உயிர்களின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது’ என்கிறார், கிருஷ்ணர். நாம் இந்தத் தொடர்பு எல்லைகளை, பெயரெச்ச சொற்களைக் கடந்தோமானால், நாம், கிருஷ்ணர் சொல்வதை, அனுபவங்கள் வாயிலாகப் புரிந்துகொள்வோம்! அது, நுண்ணியதாக இருப்பதால் இயங்கிக்கொண்டும் இயங்காமலும் இருக்கிறது. இதுதான் எல்லா வெளியையும் உள்ளடக்கிய மஹாகாச் என்னும் வெளி.
இந்த வெளி ஒன்றே, முழுமையானது, எல்லையற்றது. எல்லாமே இந்த வெளியில் அடக்கம். அங்கு 'இரண்டு' என்பதே இல்லாதபொழுது, எப்படி நாம் அதை ஒப்பிடமுடியும்? இருப்பது ஒன்றுதான் எனும்பொழுது, அதை எப்படி நாம் அண்மை, தொலைவு என்றெல்லாம் சொல்ல முடியும்?
நாம் எந்த ‘வெளியில் இருந்தாலும், அதைவிட உயர்ந்த வெளியை அடையக்கூடிய சாத்தியம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
அது ஸத்யமானது, முழுமையானது, மேலும் ஒன்றே ஒன்றுதான்.
வடிவத்தைக் கடன்றும் வாழும் சக்தி
பரமாத்மா, பிரபஞ்சமாகவும் மற்றும் தனித்தனி உயிர்களாகவும் பிரிந்திருப்பதாக நமக்குத் தோன்றினாலும், அது எப்பொழுதும் பிரிக்கப்பட முடியாததாகும். இதுவே வாழ்வின் தோற்றம், வாழ்தல் மற்றும் அழிவு என்பவற்றின் அடிப்படை என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
பெயரோ அல்லது உருவமோ இல்லாத அதே பிரபஞ்ச சக்திதான் இந்த உலகத்தில் பல வடிவங்களாகவும், பெயர்களாகவும் வெளிப்படுகிறது. எது இணைந்து ஒன்றாக இருக்கிறதோ அதுவே பலவாகவும் தோன்றும்ிறது.
நாம் தண்ணீரை பல அளவும், வடிவமும்கொண்ட ஜாடிகளில் ஊற்றும்பொழுது, அதுவும் அதே வடிவங்களை எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு ஜாடியிலுள்ள தண்ணீரும் ஒவ்வொரு வடிவமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் நன்றாகக் கவனித்தால், எல்லாமே அதே தண்ணீரைத்தான் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
அதைப்போலவே உலகிலுள்ள கோடிக்கணக்கான ஜீவராசிகள், பல்வேறு வடிவங்களாகவும் அளவுகளாகவும் தோன்றிக் கொண்டிருந்தாலும், அத்தனைக்குள்ளும் அதே சக்திதான் இருக்கிறது. ஒவ்வொன்றிற்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் ப்ராண சக்தி - 'உயிர் சக்தி' ஒன்றே!
உபநிஷத்தில், கடலையும் அலைகளையும் பற்றி வரும் உருவகத்தைப் பற்றி நான் முன்பே பேசியுள்ளேன். பெருங்கடலிலிருந்து எழும் ஒவ்வொரு அலையும், பிறகு அதிலேயே விழுந்து கலந்துவிடுகிறது. அது, மேலேழுவதற்கும், கீழே விழுவதற்கும் இடைப்பட்ட இந்தக் குறுகிய கால இடைவெளியில், அது தன்னை அந்தக் கடலிலிருந்து வேறாக நினைக்கிறது.
அதைப் போலவே, ஒவ்வொரு அலையும் தன்னைத் தனித்ததாகவும், மற்றதிலிருந்து வேறாக இருப்பதாகவும் நினைக்கிறது. புதிதாக எழுந்த அந்தச் சிறிய அலைக்கு, முன்னமே எழும்பியிருந்த மற்ற அலைகளெல்லாம் சேர்ந்து ஒரு பெயர் வைத்தன. அதோடு மட்டுமல்ல, சிறிது காலத்திற்குப் பிறகு, அந்தச் சிறிய அலை, 'இது என் தந்தை அலை', 'இது என் தாய் அலை', 'அவையெல்லாம் என் நண்பர்கள்', 'இதெல்லாம் என் ஆசிரியர்கள்', 'அவை என்னுடைய எதிரிகள்', என்று இன்னும் பல அடையாளங்களை, தானே ஏற்படுத்திக்கொண்டது.
சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த அலை, தான் அந்தக் கடலிலிருந்து எழுந்ததையே மறந்துவிட்டது. அது, தனக்கென்று இப்படிப்பட்ட பொய்யான அடையாளங்களைச் செதுக்கிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டது. அதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே, அது மீண்டும் அந்தக் கடலுக்குள் விழுந்து விட்டது!
> ஒவ்வொன்றிற்குள்ளும்
> ஓடிக் கொண்டிருக்கும்
> ப்ராண சக்தி - 'உயிர் சக்தி'
> ஒன்றே!
அந்த அலை விரும்புகிறதோ இல்லையோ,
இதையும் நம்புவதற்கு விரும்புகிறதோ
இல்லையோ, அது மீண்டும் கடலுக்குள்
விழத்தான் வேண்டும். ஏனெனில்,
அது அங்கிருந்துதான் வந்தது. அதற்கு
வாய்ப்பு, விருப்பம் என்றெல்லாம் எதுவும்
கிடையாது. அலை, கடலிலிருந்து வந்தது;
அது அதே கடலுக்குத்தான் திரும்பிச்
சென்றாகவேண்டும்.
அது, தன்னை அந்தக் கடலிலிருந்து வேறாக நினைத்து, அதைத் தடுக்கும்பொழுதுதான்,
எல்லாப் பிரச்சினைகளும் எழுகின்றன.
அதுமட்டுமல்ல, வெவ்வேறு அலைகளும்,
எது மற்றதைவிட சிறந்தது என்று
ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து, ஒன்றோடு
ஒன்று போரிடவே ஆரம்பித்துவிடுகின்றன!
அந்த அலை கடலில் விழுந்தாலும்கூட, அது கடலின் வேறொரு பகுதியில் மற்றொரு அலையாக எழப்போகிறது என்பதைப் புரிந்து கொண்டிருந்தால், பிறகு, தான் கீழே விழுவதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அது தளர்வாக இருக்கலாம், இன்பமாக இருக்கலாம்! இது புரிந்தவுடன் அந்த அலை, கடலில் தன் விளையாட்டை மகிழ்வுடன் விளையாட ஆரம்பிக்கலாம்.
மேலும், அந்த அலை, அந்த மாபெரும் கடலில் இருக்கும் மற்ற அலைகளும்கூட, அதே கடலின் தண்ணீர்தான் என்பதைப் புரிந்துகொண்டால், உடனே மற்ற அலைகளோடு ஒரு ஆழமான தொடர்பை தனக்குள் உணரும், ஏனெனில் மையப் பகுதியில், அவையெல்லாம் ஒன்றேதான் என்பதை அது அறிந்துகொள்ளும்!
'நாமனைவரும் ஒரே மூலத்திலிருந்துதான் வந்தோம், அங்கேயே திரும்பி விடுவோம்' என்ற இந்த எளிய வாழ்க்கைக் கோட்பாட்டை நாம் புரிந்துகொண்டால், நம் தனி 'சுய'த்தைவிட, மிகப்பெரிய ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வோம்.
ஒரு சின்ன கதை:
ஒரு சிறுவன், ஒருமுறை, ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தைக் கயிறு கட்டி இழுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்தான். இரண்டு வாகனங்களுமே மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால், போக்குவரத்து தடைபட்டது. அந்தச் சிறுவன் அந்த இரண்டு வாகனங்களையும் பார்த்துப் பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அந்த வாகன ஓட்டுநருக்கு ஒன்றும் புரியாததால், அந்தச் சிறுவனிடம், "ஏன் சிரிக்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுவன், "ஒரு கயிற்றை தூக்கிக்கொண்டு போவதற்கு இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறீர்களே, அதனால்தான் சிரித்தேன்!" என்று பதிலளித்தான்.
அந்தச் சிறுவனுக்கு, பழுதடைந்திருக்கும்
ஒரு வாகனத்தைத்தான் அந்த மற்றொரு
வாகனம் கயறுகட்டி இழுத்துச் செல்கிறது
என்பது தெரியவில்லை. அதனால் அவன்
அறியாமையில் சிரித்தான். நம் வாழ்க்கையும்
இப்பொழுது இப்படித்தான் இருக்கிறது.
நாம் அறியாமையில் இருக்கும்பொழுது,
உலகிலுள்ள அனைத்தாலும் நாம்
முட்டாளாக்கப்படுகிறோம்; உண்மையைத்
தவறவிடுகிறோம்.
ஒரு யானையைத் தொட்டுப்பார்த்த நான்கு குருடர்கள், 'யானை முரம் போன்றது; தூண் போன்றது; பானை போன்றது; உருட்டுக்கட்டையைப் போன்றது' - என, தாங்கள் தொட்டுப் பார்த்த உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர், ஏனெனில், அவர்கள் தொட்டு உணர்ந்த நான்கு வேறு வேறு உறுப்புகளும், ஒரே யானையைச் சேர்ந்தவைதான் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதேபோல் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் இணைக்கும் ஒரு இழையைப் பிடிக்க முடியவில்லையென்றால், நாமும் அந்த அழகையும் ஆனந்தத்தையும் தவறவிடுகிறோம். நாம் ஒவ்வொருவரும் அதே தெய்விக சக்தியின் ஒரு வெளிப்பாடுதான் என்பதை அறிந்துகொள்ளும்பொழுது, நாம் ஒவ்வொன்றோடும், ஒவ்வொருவரோடும் ஒரு ஆழமான இணைப்பை, தொடர்பை உணருகிறோம்.
பெயருக்கும் தோற்றத்திற்கும் அப்பாற்பட்டவர்...
பிரபஞ்ச விழிப்புணர்வு, எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது. மேலும் அதுவே அழிவுக்கும் காரணமாயிருக்கிறது. அதே பிரபஞ்ச சக்தி வெளிப்படாமல் இருக்கும்பொழுது, அது உள்ளடங்கிய சக்தியாக இருக்கிறது. வேதங்கள், இந்தச் சக்தியை புருஷ என்று குறிப்பிடுகின்றன. இந்தச் சக்தியே, தன்னை விதவிதமான பெயர்கள், உருவங்கள், வடிவங்களாக வெளிப்படுத்திக்கொள்ளும்பொழுது, ப்ரக்ரு'தி என்றழைக்கப்படுகிறது. புருஷனின் படைத்தல் சக்தியே ப்ரக்ரு'தி!
புருஷ அல்லது இந்த வெளிப்படாத சக்தியானது, பிரம்மா-படைப்பவர், விஷ்ணு - காப்பவர், சிவா- புதுப்பிப்பவர் இவர்களையெல்லாம் கடந்தது; எல்லா இருப்புகள்ளுக்குள்ளும் ஓடுகிற பிரபஞ்ச விழிப்புணர்வு, பெயர்களுக்கும் தோற்றங்களுக்கும் அப்பாற்பட்டது!
எனினும் அதே பிரபஞ்ச விழிப்புணர்வு வெளிப்படும்பொழுது, பிரம்மா, விஷ்ணு, சிவா என்று ஆகிவிடுகிறது. அதாவது புருஷ சக்தி, ப்ரக்ரு'தியாக வெளிப்படும்பொழுது- படைத்தல், காத்தல், அழித்தல் நிகழ்கிறது.
நம்மையும் பிறக்க வைத்த அதே உயிர்சக்திதான், நம்மைக் காக்கவும் செய்கிறது. நமக்குள் நடக்கும் ஒவ்வொரு சின்ன நிகழ்வையும் நம்மை இவ்வுலகிற்குக் கொண்டுவந்த, அதே புத்திசாலித்தனம்தான் நடத்திக்கொண்டு வருகிறது. அதைப் போலவே, நாம் இந்த உடலை விட்டுச் செல்லும்பொழுது, அந்தப் புத்திசாலித்தனம், நம்மோடு சேர்ந்து வருகிறது.
பெருங்கடலின் தண்ணீர்தான் புருஷன். நடனமாடி விளையாடும் அலைகள்தான் ப்ரக்ரு'தி. அந்தத் தண்ணீமானது, பல உருவங்களையும் வடிவங்களையும் கொண்ட அலைகளாகத் தோற்றமளிக்கிறது; ஆனால் உண்மையில் அது ஒரே தண்ணீர் கொண்ட பெருங்கடல்தான்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நினைவூட்டுகிறார்: ப்ரக்ரு'தியின் வெவ்வேறு படைப்புகள் மற்றும் வெளிப்பாடுகளின் காரணமாகவே, அந்த ஒப்புயர்வற்ற ச க்தியானது- புருஷன் என்றும் ப்ரக்ரு'தி என்றும் பிரிக்கப்பட்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறது. எனினும் அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், பிளவுபடாதவர். அனைத்துப் படைப்புகளுமே, அவற்றின் மையங்களை நோக்கும்போது, அவை பிரபஞ்ச சக்தியின் படைப்புகளே!
கிருஷ்ணர் சொல்கிறார்: நானே மேலான
இருப்புத்தன்மையாகவும், ஒளிரும்
பொருட்களின் ஒளிக்குக் காரணமான ஒளி
ஆதாரமாகவும் அதாவது ஸாக்ஷியாகவும்
இருக்கிறேன்.
கடோபநிஷத்தில் உள்ள ஓர் அழகான சுலோகம்:
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோ யமாக்நி
தமேவ பாந்தமநு பாதி ஸர்வம்
தஸ்ய பாஷா ஸர்வமிதம் விபாதி
இதற்கு அர்த்தம்: சூரியன், சந்திரன், நட்ச த்திரங்கள் ஆகியவற்றால்கூட சுயமாக ஒளிரும் அந்த விழிப்புணர்வை பிரகாசிக்க வைக்க முடியாதென்றால், நெருப்பைப் பற்றி என்ன சொல்வது?
ஆனால், சுயமாக ஒளிரும் விழிப்புணர்வை பின்பற்றிச் சென்றால், சூரியன், சந்திரன், மற்றவை எல்லாமே பிரகாசமாக ஆகிவிடும். பரமாத்மாவான இறைவனின் உடலிலிருந்து வெளிப்படும் பிரகாசத்தால் இந்த முழுப் பிரபஞ்சமும் பிரகாசமடைகிறது.
நாமறிந்தவரையில், ஒளிக்கு ஆதாரங்கள் என்று சொல்லும்பொழுது, சூரியன், சந்திரன், மின்னல், நெருப்பு மற்றும் மின்சாரம் போன்ற செயற்கை ஒளிகளைக் குறிக்கிறோம். இவையே வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஒரு பொருளை, ஒளிச் சக்தியின் உதவிகொண்டுதான் பார்க்க முடிகிறது.
உள்ளதை உள்ளபடியே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்
சக்ஷு என்னும் பார்வைக்குப்பின் இருக்கும் சக்தியால் சுற்றுப்புறம் ஒளியேற்றப்படும்பொழுது மட்டுமே, பொருட்களை உணர்ந்து, அறியமுடிகிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளிச் சக்திதான், எல்லா உயிர்களின் பிறப்புக்கும், வளர்ச்சிக்கும் காரணம். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும், தாம் வாழ்வதற்கு, சூரியனையே சார்ந்திருக்கின்றன.
இந்த ஒளி ஆதாரங்களுக்கு எது சக்தியைத் தருகிறது? எது அவற்றைத் தூண்டுகிறது? அந்தப் பிரபஞ்ச சக்திதான்! ஆம், ஒளியினுடைய எல்லா ஆதாரங்களுக்கும் தேவையான சக்தியை பிரபஞ்ச இருப்பே கொடுக்கிறது.
கிருஷ்ணர், இந்த இருப்புத்தன்மையை 'ஒளியின் ஆதாரம்' என்று அழைக்கிறார். ஒளியின் மூலங்களான சூரியன், சந்திரன், மின்னல் ஆகியவை, சுயமாக ஒளிரும். தன்மைகொண்ட இருப்புத்தன்மையிலிருந்தே, தங்களின் சக்தியைப் பெறுகின்றன. அதனால்தான், இருப்புத்தன்மையை, 'தானே பிரகாசிப்பது' அல்லது 'சுயமாக ஒளிவிடுவது' என்று அழைக்கிறோம்.
ஆழ்ந்த கருத்தின்படி, இருப்புத்தன்மையை 'ஒளிபொருந்திய' என்று குறிப்பிடும்பொழுது, அது, நாம்ாதாரணமாகப் புரிந்துகொள்ளும் அர்த்தத்தில் குறிக்கப்படவில்லை. இருப்புத்தன்மை என்பது தூய புத்திசாலித்தனம்; அது நம் அறியாமையைப் போக்குகிறது.
ஒரு ஜ்ஞான குரு ஒவ்வொன்றையும் மிகத்தெளிவோடு பார்க்கிறார். அவர் ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கிறார். நீங்கள் ஒரு இருட்டான அறைக்குள் இருக்கும்பொழுது, அந்த அறையில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். விளக்கைப் போட்டபிறகு, சுற்றிலும் இருப்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
ஒரு ஜ்ஞான குரு, 'விழிப்புணர்வு' என்னும் விளக்கைப் பயன்படுத்தி, ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே, எந்த வடிகட்டியையும் பயன்படுத்தாமலேயே பார்க்கிறார். அவர், விழிப்புணர்வு விளக்கைப் பயன்படுத்தி, தம்மைச் சுற்றி நிலவும் சூழலை முழுமைத்தன்மையில் உணர்கிறார்.
அனைத்துப் படைப்புகளுமே, அவற்றின் மையங்களை நோக்கும்போது, அவை பிரபஞ்ச சக்தியின் படைப்புகளே!
இந்த விழிப்புணர்வு விளக்கு, மற்ற விளக்குகளைப் போன்றது அல்ல; இது அறியாமையின் அடுக்குகளை, அவை எவ்வளவு ஆழத்தில் இருப்பினும், அவற்றை வெட்டிவிடுகிறது! அதனால்தான் குருவானவர், தம்மைச் சுற்றி, 360 டிகிரியும் பார்க்கிறார். அவர், தாம் பார்க்கும் எதையும் நாம் செய்வதைப்போல, வடிகட்டி பார்ப்பதில்லை. நாம் செய்யும் இந்த வடிகட்டுதல்தான், நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். நாம், உள்ளதை உள்ளபடி பார்ப்பதேயில்லை. நமது நினைவுப்பதிவுகளிலிருந்து விளைந்த கருத்துக்களுக்குத் தக்கவாறு, நாம் அவற்றைத் திரித்துக்கொள்கிறோம்.
நம்முடைய உணர்ச்சிகளாலும் நினைவுகளாலும் பாரம் ஏற்றப்பட்ட நம்முடைய அஹங்காரம், ஸத்யத்தை உள்ளபடியே பார்க்கவும், அனுபவிக்கவும் நம்மை அனுமதிப்பதில்லை. இது, உங்கள் கணினியில் ஏராளமான உயர்-அடர்த்தி படங்கள் ஏற்றப்படும்பொழுது நடப்பதைப்போலத்தான் நடக்கிறது! அதற்குப் பிறகு அதனுள் எந்தச் செய்தியைப் போட்டாலும் அதனால் சரியாகச் செயல்பட முடியாது.
அதைப்போலவே, நாம் கடந்தகால உணர்ச்சிகள், மனக்கிளர்ச்சிகள், கருத்துகள், நினைவுகள் ஆகியவற்றாலான ஒரு வடிகட்டியை உருவாக்கி, அதன் வழியே உலகத்தைப் பார்க்கிறோம்; விளைவு... உள்ளதை உள்ள படியே பார்ப்பதை நாம் நிறுத்திவிடுகிறோம்.
நாம் அஹங்காரத்திலிருந்து செயல்படும்பொழுது, உண்மையில் என்ன இருக்கிறதென்று அறிந்துகொள்ளாமலேயே, நாம் நம் சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறோம்.
இந்த அஹங்காரம், இருளைப் போன்றது, அதற்கென்று ஒரு இருப்பு இல்லை, அதற்கென்று ஒரு நேர்மறை இருப்பு கிடையாது. ஒளி இல்லாத நிலையே இருள் என்பதுபோல், விழிப்புணர்வற் ற நிலையே அஹங்காரம் எனப்படுகிறது. அஹங்காரத்தை அழிக்கப் போராடுவது என்பது அறையிலிருந்து இருட்டை, நம் கைகளால் தள்ளி, விரட்டிவிட முயல்வது போன்றதுதான்.

நாம் விஷயங்களை, உள்ளது உள்ளபடியே பார்த்து, அதிலுள்ள ஸத்யங்களை அப்படியே உணர்வது எப்படி?
இருளை நீக்குவதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இருளுடன்
போராடுவதைப் பற்றிய எண்ணத்தை
மறந்துவிட வேண்டும். அதற்குப்
பதிலாக, உங்கள் சக்தியை ஒளியின்மேல்
குவியுங்கள். அந்த அறைக்குள் ஒரு
விளக்கைக் கொண்டுவாருங்கள், இருள்
தானாகவே போய்விடும். விழிப்புணர்வு
எனும் இந்த விளக்கு, நம் எல்லோரிடமும்
இருக்கிறது; இது நமக்குள்ளேயே
இருக்கிறது.
ஒளி இல்லாத நிலையே
இருள் என்பதுபோல்,
விழிப்புணர்வற் ற நிலையே
அஹங்காரம்
எனப்படுகிறது.
அஹங்காரத்தைப் பற்றிய அனைத்தையும் மறந்து விடுங்கள். பதிலாக விழிப்புணர்வு என்ற விளக்கை உங்கள் இருப்புத்தன்மைக்குள் எடுத்து வருவதில் கவனம் செலுத்துங்கள். எப்பொழுது உங்கள் முழு விழிப்புணர்வும் ஒளிச்சுடராக மாறுகிறதோ, அப்பொழுது அங்கு அஹங்காரம் என்பது இல்லை.
சத்தியங்கள் எளிமையானவையே!
கேள்வி: ஸ்வாமிஜி, புருஷ, ப்ரக்ரு’தி என்பதைப் பற்றி படித்தபொழுது நான் குழம்பிவிட்டேன். நீங்கள் புருஷ என்பது கடலின் தண்ணீர் என்றும் ப்ரக்ரு’தி என்பது அலைகள் என்றும் சொன்னீர்கள். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. ஆனால் மற்ற விளக்கங்கள் ஏன் அவ்வளவு குழப்பமாக இருக்கின்றன?
எல்லா ஸத்யங்களுமே மிக எளிமையானதுதான். நாம் ஸத்யங்களைப் புரிந்துகொள்ளவில்லையாதலால், அவற்றை சிக்கலாக்கிவிடுகிறோம், நாம் முழுவதுமாக சுய-சந்தேகத்தால் நிரப்பி இருப்பதனால், எல்லா சாத்தியக் கூறுகளையும் வைத்து, அவற்றை மறைக்க விரும்புகிறோம்.
நாம் படிப்பவரையும் கேட்பவரையும் குழப்பவே விரும்புகிறோம். அவர்கள், குழப்பத்தில் இருந்தால்தான், மேலும் கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். தத்துவவாதிகளின் நோக்கமே மற்றவர்களைக் குழப்பிவிடுவதுதான்! அப்படியானால்தான், அவர்களே எந்த அளவிற்கு குழப்பத்திலிருக்கிறார்கள் என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்க இயலாது!
இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமப்படாதீர்கள். அதற்கு அவசியமேயில்லை! மெத்தப் படித்தவர்களும், தத்துவவாதிகளும் அதைப் பற்றிக் கவலைப்படட்டும்.
நீங்கள் அறிய வேண்டியதெல்லாம், ஒரு ஆதார சக்தி இருக்கிறது, இந்த ஆதார சக்திதான் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் நம் ஒவ்வொருவரையும் இயக்குகிறது. இந்த விழிப்பு இல்லாததுதான் நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் காரணம்.
இந்த ஆதார சக்தியைத்தான் கிருஷ்ணர், பரமாத்மன் என்று அழைக்கிறார். அதை எளிமையாக மொழிபெயர்க்க வேண்டுமானால், மேலான ஆத்மா என்று சொல்லலாம்.
பிரபஞ்சம் அனைத்தும்
புருஷனின் வெளிப்பாடே
என்பதைப்
புரிந்துகொள்வதே
‘தன்னை அறிதல்’!
இதை, ‘கிருஷ்ண விழிப்புணர்வு’,
‘கடவுள்’ அல்லது உங்கள் விருப்பப்படி
வேறு எப்படி வேண்டுமானாலும்
அழைத்துக்கொள்ளுங்கள். இது
எல்லாவற்றுள்ளும், எல்லொருள்ளும்
ஊடுருவியுள்ளது. இந்தச் சக்தியில்லாமல்
எதுவும் இயங்க முடியாது. இந்தச் சக்திதான்
புத்திசாலித்தனம். இதுவே புத்தி மற்றும்
சக்தி, அல்லது சக்தியுள்ள புத்தி.
ஸாங்கிய தத்துவஞானிகள், கபிலர் போன்றவர்கள் இந்தக் கருத்தை இன்னும் பிரித்தார்கள். இயங்காமல் இருக்கும், அசையாமல் இருக்கும் புத்தியின் சக்தியை, அவர்கள் புருஷ என்று குறிப்பிட்டார்கள். இதுவே அடிப்படையான, ஆதாரமான, பார்க்க முடியாத, வெளிப்படாத ச க்தி. உருவகமாகச் சொன்னால், இதுதான் ‘வெளி’யில் உள்ள ஆகாசம், கடலின் நீர், பூமியின் மண்.
புருஷ என்பது தூய சக்தி. இந்தத் தூய சக்தியின் வெளிப்பாடே ப்ரக்ப்'தி. ப்ரக்ப்'தி என்பது இந்த உள்ளடங்கிய சக்தியின் வெளிப்பாடு. புருஷ சக்தி, பருப்பொருளாக வெளிப்படுவதைத்தான் ப்ரக்ப்'தி எனச் சொல்கிறோம். உருவகமாகச் சொல்ல வேண்டுமானால், ப்ரக்ப்'தி என்பது கடலில் உள்ள அலைகள்; மண்ணில் உள்ள தாவரங்கள். இவையனைத்துமே வேறுபடுத்த முடியாத புருஷனின் வெளிப்பாடுகளே என்பதைப் புரிந்துகொள்வதே 'தன்னை அறிதலே' தவிர, வேறு ஏதோ ஒன்று அல்ல.
ஞானமடைதல் என்பது நீங்களும் பரமாத்மன் எனப்படும் புத்திசாலித்தனமான சக்தியும் ஒன்றுதான் என்பதை நேரிடையாக அனுபவமாகப் பெறுவதுதான். அதனால்தான் ஞானத்தை அடைய வேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறேன். நீங்கள் அறிய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்றுதான், 'நீங்கள் அதுவே' என்பதுதான்.
நீங்கள் அந்தப் பெருங்கடலின் தண்ணீரைக் காட்டினாலும் வேறான ஒரு தனி அலை என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் உணர வேண்டியது இதுவே: நீங்கள்தான் அந்தப் பெருங்கடல்! அலையும் கடலும் நீங்கள்தான்!
தத்துவவாதிகளே ப்ரகருதியின் பண்புகளைப் பற்றியும், அதுபோன்றவற்றைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கட்டும். நீங்கள் தளர்வாக இருங்கள்!
