சக்தியைப்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புரிந்துகொள்ளுங்கள்

13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பற்றியும், என்னால் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ள காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும்!
13.19 ப்ரக்ரு'தி புருஷன் - இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உணர்வுமாற்றங்களும் ப்ரக்ரு'தியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.
13.20 உடலையும் புலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் ப்ரக்ரு'தி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணமென்று கூறப்படுகிறான்.
பொருள் சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப்
பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான்.
மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த
ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக்
குணங்களே காரணம்.
இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிற ஜீவாத்மா ஸாக்ஷி,
அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஶ்வரன்,
பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.
இவ்வாறு புருஷனையும், குணங்களோடு கூடிய ப்ரக்ருதியையும் எந்த
மனிதன் தத்வ ரீதியாக அறிவானோ, அவனுடைய இப்போதைய
நிலை எதுவாகயிருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.
வாழ்க்கை ரதத்தை ஓட்டும் ஸாரதி நீங்களே!
கிருஷ்ணர், குருக்ஷேத்ர யுத்தகளத்தில், ரதத்தில் நின்றுகொண்டு, பகவத் கீதையைத் தருகிறார்.
நீங்கள் இதை ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், இது நம் ஒவ்வொருவருடைய அழகான சித்திரம் ஆகும். கிருஷ்ணர் தேரோட்டி, களம் அறிந்தவர், முழு நாடகத்தையும் நடத்துகிறார். தேரோட்டிக்குச் சரியாக ஓட்டத் தெரியவில்லையென்றால், குதிரைகள் ரதத்தைப் பல திசைகளிலும் இழுக்க ஆரம்பித்துவிடும்.
இந்த ஐந்து குதிரைகள், நம்மைப் பலவழிகளிலும் இழுத்துச் சென்று, நமக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் நமது புலன்களையும் மனத்தையும் குறிக்கின்றன. நமக்கு அந்தக் குதிரைகளை அடக்கத் தெரியவில்லையென்றால், குதிரைகள் நம்மை அடக்கிவிடும். நமது வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது. ரதத்தை எப்படி ஓட்டுவது என்று நமக்குத் தெரியாத காரணத்தினால், நாம் மிக எளிதாக அந்தக் குதிரைகளுக்கு அதிகாரத்தை கொடுத்துவிடுகிறோம்.
நம்மைச் சுற்றியுள்ள பொருள் ரீதியான உலகமான க்ஷேத்ரம் பற்றிய நம்முடைய தெளிவான புரிதலே, அவற்றை எப்படித் கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொடுக்கும். உடல்-மனமான க்ஷேத்ரத்தை அறிந்த அந்த நிமிடமே, நாம் அந்த க்ஷேத்ரம் அல்ல என்பதை உணருவோம்!
நாம் க்ஷேத்ரமாக இருந்தால், எப்படி நாம் அதை அறிந்திருக்கமுடியும்? உதாரணத்திற்கு நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். ஏனெனில், நாம் இந்தப் புத்தகம் அல்ல. புத்தகத்திற்கும், நமக்கும் இடையில் ஒரு இடைவெளி, ஒரு பிரிவு இருக்கிறது.
அதைப்போலவே, நாம் க்ஷேத்ரத்தை அறிந்துகொள்ளும்பொழுது, நாம் அந்த க்ஷேத்ரமே அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாம் க்ஷேத்ரம் அல்ல என்ற இந்தப் புரிதலே, நாம் க்ஷேத்ரஜ்ஞன் என்ற புரிதலைக் கொடுக்கும்.
நாம் க்ஷேத்ரஜ்ஞன் என்பதைப்
புரிந்துகொள்ளும் போதே, க்ஷேத்ரத்தைக்
கடந்துவிடுகிறோம்.
> நமக்கு புலன்களை
> அடக்கத்
> தெரியவில்லையென்றால்,
> புலன்கள் நம்மை
> அடக்கிவிடும்.
நாம் க்ஷேத்ரத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு நாம் பொருள் சார்ந்த இந்த உலகத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம். அதுவரை, நாம் அறியாமையில்தான் இருப்போம். நாம் அறியாமையில் இருக்கும்பொழுது, நமது புலன்களும், சமூகக் கட்டுறு மனப்பாங்குகளுமே நம்மை வழிநடத்தும்.
அவை வழிநடத்தும் வழியில் சென்றோமானால், இந்தப் பொருள் உலகமே நாம், இந்த உடலே நாம் என்று ஆழமாக நம்புவதில்தான் வந்து நிற்போம்.
நாம் இந்தப் பொருள் சார்ந்த உலகத்திலேயே மூழ்கி, நம்மை அதனுடனே முழுவதுமாக அடையாளப்படுத்திக் கொள்வோம். நாம் அதனுடைய ஒரு பாகமாக ஆகி விடுவோம். க்ஷேத்ரத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு ஒரு கடுமைத்தன்மையையும் சேர்த்துவிடுவோம்.ஏனென்றால், க்ஷேத்ரத்தை ஸாக்ஷியாயிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் க்ஷேத்ரஜ்ஞனை நாம் என்பதை, நாம் மறந்துவிட்டோம்.
உண்மையில், க்ஷேத்ரம் என்று எதுவுமே இல்லை. இதுவும் நமது கனவைப்போல, நம் மனத்தின் வெளிப்பாடே!
நாம் உறங்கச் செல்வதற்கு முன், நான் இன்னாருடைய கணவன் அல்லது இன்னாருடைய மனைவி, நான் இந்த அலுவலகத்தில் பணிபுரிகின்றேன் போன்ற நம்முடைய எல்லா அடையாளங்களையும் நாம் நன்றாக அறிவோம். நாம் உறங்கச் சொல்லும்பொழுதுகூட நம்முடைய அடையாளங்களைத் தெளிவாக அறிவோம்.
ஆனால் நாம் கனவுக்குள் நழுவும் அந்த நிமிடமே, அந்தக் கனவை உண்மை என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம். அந்தக் கனவுக்குள்

ஆழமாகச் செல்லச்செல்ல, கனவில் வரும் பாத்திரங்களோடு நம்மை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம். கனவில் நடப்பதெல்லாம் நம் நிஜ வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாததாகவே இருக்கும்! இருந்தாலும் நாம் அவற்றை நம்ப ஆரம்பித்துவிடுகிறோம்.
நம் கனவில், நம்மை ஒரு சிங்கம் தாக்கும்பொழுது நாம் பயத்தையும் கவலையையும் உணருகிறோம். அது உண்மையாகவே நடப்பதுபோல, பயத்தினால் வியர்த்து விறுவிறுத்துப் போகிறோம். ஆனால் கனவிலிருந்து விழித்தவுடன், கனவு உண்மை அல்ல என்பதைத் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.
அதனால்தான் மறுநாள் காலை எழுந்து, நம் அலுவலக வேலை, மற்ற வேலைகள், நம் குழந்தைகள் என்று அதே வாழ்க்கையைத் தொடர்கிறோம்.
அதைப்போலவே, நாம் இந்த வாழ்க்கையையும் உண்மை என்றே நினைக்கிறோம். நீங்கள் இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கையானது, உங்கள் மனத்தின் ஒரு படைப்பே தவிர வேறில்லை என்று நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் என்னை நம்புவீர்களா? இல்லை!
நீங்கள் நினைப்பதுதான் உண்மை என்னும் கனவில் அவ்வளவு ஆழமாக ஆழ்ந்திருக்கின்றீர்கள்.
நாம் நம் கனவிலிருந்து விழித்தவுடன், அது நிஜமில்லை என்று உடனே எப்படி அறிந்துகொள்கிறோம்? ஏனென்றால் கனவுக்கும், நமக்கும் நடுவில் ஒரு இடைவெளி இருக்கிறது என்பதை உடனே புரிந்துகொள்கிறோம். இது ‘வெறும் ஒரு கனவுதான்’ என்ற புரிதலேகூட நம்மை நிஜத்தில் வைக்கிறது. இதைப் போலவே, இந்த உலகம் நம் மனத்தின் ஒரு படைப்பே என்ற புரிதலானது, நம்மை நிதர்சனத்துக்குள் வைக்கிறது.
நாம் க்ஷேத்ரம் அல்ல
என்ற புரிதலே,
நாம் க்ஷேத்ரஜ்ஞன்
என்ற புரிதலைக்
கொடுக்கும்.!
நனவும் ஒரு ‘கனவே’
ஒரு சின்ன கதை:
ஒரு ஜென் குரு, ஒரு நாள் காலையில் அழுதபடியே விழித்தெழுந்தார். அவருடைய சீடர்கள் ஓடி வந்து, “என்ன நடந்தது குருவே?” என்று கேட்டனர். அதற்கு அந்த குரு, “நேற்றிரவு என் கனவில், நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன்,” என்று சொன்னார்.
அந்தச் சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள், “அதனால் என்ன குருவே? அது ஒரு கனவுதானே, அதுதான் முடிந்துவிட்டதே எதற்கு வருந்துகின்றீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு, அந்த குரு, “நீங்கள் என் பிரச்சினையைப் புரிந்துகொள்ளவில்லை. நான் இப்பொழுது, ‘நான் ஒரு பட்டாம் பூச்சி’ என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு ஜென் குருவா, அல்லது ‘நான் ஜென் குரு’ என்று கனவுகண்டு கொண்டிருக்கும், ஒரு பட்டாம் பூச்சியா?” என்று வினவினார்.
நாம் கனவு காணும்பொழுது, நாம் யார் என்பதை அறியாமல் இருக்கிறோம். ஏனெனில் கனவு நிகழும்பொழுது, அது உண்மைபோன்றே இருக்கிறது.
அதே போலத்தான் நாம் வாழ்கிற இந்த
உலகமும், உண்மையான உலகம்தான்
என்று நம்பும் அளவிற்கு இருக்கிறது.
'நம்முடைய கனவைப்போன்றே, இந்த
நனவுலகமும் உண்மையானது கிடையாது,
இதுவும் நம் மனத்தின் ஒரு படைப்பே'
என்ற இந்தக் கருத்தை இல்லையென்று
மறுப்பதற்கு நம்மிடம் ஏதேனும்
போதிய காரணங்கள் இருக்கின்றனவா?
நம்மிடம் போதிய காரணங்கள் இல்லை,
அதனால் இந்த உலகம்கூட, இன்னொரு
கனவாகக்கூட இருக்கலாம்.
இந்த உலகம் உண்மை
இல்லை என்று
உணர்ந்துகொண்ட
அந்த நிமிடமே, நாம், நம்
துன்பங்களுக்கும் நமக்கும்
ஒரு பெரிய இடைவெளியை
உருவாக்கிவிடுவோம்!
கனவில், அந்த உள்ளுலகம் முழுவதையும் நாமேதான் உருவாக்கிக்கொள்கிறோம்; அந்த முழுச் கட்டமைப்பும் நம் மனதால் உருவாக்கப்பட்டதே. நாம் நம் அடையாளத்தை மட்டும் உருவாக்கவில்லை; சுற்றுப்புறத்திலுள்ள எல்லாவற்றையும் சேர்த்துத்தான் உருவாக்குகிறோம்.
ஒரு விழாவில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால், நாம் ஏதோ ஒரு பரிசைப் பெறுவதாக ஒரு கனவு காண்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நடக்கும் முழுச் காட்சிகளையும் உருவாக்கிப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு மனத்திற்குச் சக்தி இருக்கிறது.
ஒரு அரங்கத்தினுள் பார்க்கக் கூடிய அனைத்தையும், அதாவது, அந்த அரங்கத்தின் அமைப்பு, கைத்தட்டிப் பாராட்டும் ஆயிரக்கணக்கான மக்கள், அவர்களது பேச்சுக்கள் என்று அனைத்தையுமே மனமே உருவாக்கிக் கொள்கிறது. கனவில் காணும் நம் அடையாளத்திற்கு மட்டுமல்ல, நம் கனவில் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துக் காட்சி களுக்கும்கூட உயிரூட்டக் கூடிய அளவு சக்திகொண்டது நம் மனம்.
இதே போன்றுதான் நாம் உண்மை என்று கருதிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலும்கூட, நம் மனம் எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், நாம் நமது இரவுக் கனவுகளிலிருந்து விரைவில் விழித்துக்கொள்கிறோம். ஆனால், நாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும், மிகப்பெரிய இந்தப் பகற்கனவிலிருந்து விழித்துக்கொள்வது எப்படி என்பதை மட்டும் நாம் அறியாமலிருக்கிறோம்.
இந்த உலகம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நாம் துன்பப்படுவோம். இந்த உலகம் உண்மை இல்லை என்று உணர்ந்துகொண்ட அந்த நிமிடமே, நாம், நம் துன்பங்களுக்கும் நமக்கும் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிவிடுவோம்.
ஸத்யத்தை உணர்ந்த ஒரு ஜ்ஞான குருவால் மட்டுமே, நம்மை ஸத்யநிலைக்கு எழுப்பிவிட முடியும்.
நம்மைச் சுற்றி நாம் பார்ப்பதெல்லாம் நம் மனத்தின் வெளிப்பாடே என்று உணர்த்துவதற்காகவே ஞானிகள் தங்களுடைய கருணையினால், இந்தப் புவியுலகத்திற்கு இறங்கி வருகிறார்கள்.
நம் மனத்தால் உருவாக்கப்பட்ட மாய உலகான க்ஷேத்ரத்தைப் பற்றிய புரிதல், உண்மை மற்றும் உண்மையல்லாதனவற்றை வேறுபடுத்திப் பார்க்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் ஸத்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், உணர்ந்துகொள்ள வேண்டுமானால், நாம் முதலில் க்ஷேத்ரம், க்ஷேத்ரஜ்ஞனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதுவரை நாம், நம் மனது காட்டும் காட்சிகளையே, நாடகத்தையே குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம்.
நமது சொந்த நாடகத்தை உருவாக்கி, அதில் நாமே நடித்துக் கொண்டிருக்கிறோம். படிப்படியாக, ‘நாம்தான் அந்த நாடகத்தை உருவாக்கினோம்’ என்பதையும், அந்நாடகத்தில் நாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் நாம் அல்ல என்பதையும் மறந்துவிடுகிறோம். அதனால்தான் நாம் அதைப் பற்றித் தீர்ப்பளித்துக்கொண்டும், அதற்கேற்றவாறு எதிர்ச்செயல் புரிந்துகொண்டும் இருக்கிறோம்.
நம்முடைய உண்மையான ‘சுய’த்தை

அறியாத அளவுக்கு, நாம் இந்தப் பொருள்
சார்ந்த உலகத்தில் மூழ்கியிருக்கிறோம்.
இது, நாம் வளர்க்கப்பட்ட விதத்தினால்
விளைந்த விளைவுதான்!
நாம் மனித ரூபங்கள்கொண்ட தெய்விக
இருப்புக்கள் என்பதையும், நம்மைச் சுற்றி
நடப்பது நாடகமே என்பதையும் நமக்கு
நம் பெற்றோரும் ஆசிரியர்களும் விளக்கிச்
சொல்வதில்லை.
திரை, அதன்
மீது காட்டப்படும்
திரைப்படங்களால்
பாதிக்கப்படுவதில்லை!
நம் ‘சுயத்தை அறிந்துகொள்ளும்’ வழியைப் பின்பற்றுவதற்கு, நம்மை, நம் குடும்பமும் சமூகமும், நாம் வளரும் சூழலும் உற்சாகப்படுத்துவதில்லை. ஏனென்றால், அவர்களும் பொய்யான அடையாளங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் க்ஷேத்ரஜ்ஞன் என்பதை அவர்கள் நமக்குச் சொல்வதில்லை, ஏனெனில், அவர்களுக்கே அது பற்றித் தெரியாது.
குழந்தையை, ஜீவன்முக்த்தராக்கும் பாரம்பரியம்
ஒரு குழந்தை, பிறந்ததிலிருந்தே தொடர்ந்து தெய்விகத்தைப் பற்றி நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தால், அது ஒரு ஜீவன்முக்த்தராகும் விதமாக வளருகிறது. இப்படித்தான், வேதப் பாரம்பரியத்தில் குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் விழிப்புணர்வின் நிலை, மிகவும் உயர்நிலையில் இருந்தது.
ப்ரக்ரு’தி எனப்படும் நாம் பார்க்கும் இந்தப் பொருள்சார்ந்த உலகத்திற்கு தொடக்கம கிடையாது. புருஷ எனப்படும் விழிப்புணர்வுக்கூட, தொடக்கம் இல்லாததுதான். எல்லா மாற்றங்களும் உணர்வுமாற்றங்களும் ப்ரக்ரு’தியால் விளைவிக்கப்படுபவையே!
ஒரு திரையரங்கில், அதே வெள்ளித்திரையில் வெவ்வேறு விதமான திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் அந்தத் திரை, அதன் மீது காட்டப்படும் திரைப்படங்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறது. திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்னும் பின்னும் அந்தத் திரை, காலியாகவும் வெண்மையாகவுமே இருக்கிறது. அந்தத் திரையில் காட்டப்படும் ஒரு காட்சியில் எல்லோரும் மகிழ்ச்சி யைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்; அடுத்த காட்சியிலேயே ஒரே துக்கமான நிகழ்வுகள் வரும். இருந்தாலும் திரை ஒன்றுதான். அந்தத் திரைப்படத்தின் மகிழ்ச்சி மற்றும் துக்கமான காட்சிகளால் அது பாதிக்கப்படாமல், தொடர்பற்று இருக்கிறது. அதன் மீது காட்டப்பட்ட பல தரப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளால், அது துளியும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது.
அதே விதமாக, நமக்குள்ளே ஆழத்தில், நம் மையமும் துளியும் தொடர்பற்றுதான் இருக்கிறது. கிருஷ்ணர் குறிப்பிடும் புருஷ என்பது இதுதான்! நம்மைச் சுற்றி மாறிக்கொண்டும் இடம் பெயர்ந்துகொண்டும் இருக்கிற பொருட்களெல்லாம் ப்ரக்ரு'தியின் நாடகந்தான்.
ஒரு குழந்தை,
பிறந்ததிலிருந்தே தொடர்ந்து
தெய்வீகத்தைப் பற்றி
நினைவுபடுத்தப்பட்டுக்
கொண்டேயிருந்தால், அது
ஒரு ஜீவன்முக்தராகும்
விதமாக வளர்கிறது.
நாம் பார்க்கும் எல்லா மாற்றங்களும்,
அதாவது பருவகால மாற்றங்கள்,
காலம் மற்றும் வெளியைப் பற்றிய
கொள்கைகள், நம் உடல்-மனம் மற்றும்
மாறும் தன்மைகொண்ட எல்லாமே,
ப்ரக்ரு'தியின் வேறுபட்ட பண்புகளே. இவை,
எழுதுவதும் வீழ்வதுமாக உள்ள கடலின்
அலைகள் போன்றவை. இந்தப் பண்புகள்
எழுந்தும் விழுந்தும் கொண்டிருப்பவை.
அலை, எழும், விழும் காலமும் இடமும்
முற்றிலும் ஒப்பீட்டுக்குரியவை.
இந்த எழுதல் விழுதல் இடையே உள்ள கால இடைவெளியைப் பற்றிய கருத்துகூட, ஒப்பீட்டுக்குரியவையே. ஏனெனில் இது முழுக்க முழுக்க நம் புலன்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்துதான்.
நமது புலன்கள், காலம் நகருவதாக உணருகிறது. அது, பொருள் உலகத்தைக்கொண்டும் கிரகங்களின் ஓட்டத்தைக்கொண்டும் காலம் நகருவதை ஒப்பிட்டு உணர்கிறது. நமது புலன்கள் உணர்வதற்காக, நாம், காலத்தைப் பற்றிய இந்தக் கருத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாம் வெளியையும் இடத்தையும்கூட, ஒப்பீட்டு கருத்துகளைக்கொண்டே (Concept of Comparative Reality) உருவாக்கி வைத்திருக்கிறோம்.
பொருள் சார்ந்த உலகத்தோடு நம்மை அதிகமாக இணைத்துக் கொள்ளும்பொழுதும், நிகழ்வுகள், உணர்ச்சிகள், அஹங்காரம், உடல், மனம் போன்றவற்றோடு பிரக்ருதி விளையாடும் விளையாட்டோடு நம்மை இணைத்துக் கொள்ளும்பொழுதும்தான், உலகியல் ரீதியான காலம் மற்றும் இடத்தோடு நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார், "காலமும் வெளியும் நம் எண்ணத்தின் பாங்குதானே தவிர, அது நம் வாழும் நிலையோ சூழ்நிலையோ அல்ல. இது எதை விளக்குகிறது என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் ஞானிகளும் ரிஷிகளும் சொன்னதை, இன்றைய நவீன விஞ்ஞானம் உண்மை என்று நிரூபித்தது மட்டுமல்ல, அதை ஏற்றுக்கொண்டதையுமே இது குறிக்கிறது.
காலமும் வெளியும் நம் மனத்தில்
உருவாக்கப்பட்ட சார்பியல் கருத்துகளே!
காலத்தின் நகர்வும், மனத்தின்
நகர்வும் ஒன்றுக்கொன்று நேரடியாகத்
தொடர்புகொண்டவை.
உதாரணத்திற்கு, நாம் நேசிக்கும் ஒருவருடன் அமர்ந்திருக்கும்பொழுது, எவ்வளவு நேரமானாலும் சரி, அது நமக்குச் சலிப்பைத் தருவதில்லை. நாம் அந்த நபருடன் குறைந்த கால அளவே செலவிட்டதாக உணர்வோம். நேரம் செல்வதுகூட நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதுவே, நமக்கு சலிப்பைத் தரும் ஒருவரோடு நாம் இருக்கும்பொழுது, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். காலம் ஊர்ந்து செல்வதுபோல் உணர்வோம்.
மனம் நகர்ந்து கொண்டிருக்கும்வரை, காலமும் நகர்கிறது. நாம் ஆழமாகப் பார்க்கும்பொழுது, மனம் என்பது இறந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம்தான் என்று நாம் புரிந்துகொள்வோம். மனம் என்றாலே சஞ்சலம்தான்; அது எப்பொழுதும் கடந்தகாலத்தை ஆய்வுசெய்துகொண்டும் எதிர்காலத்துக்கு திட்டமிட்டுக்கொண்டுமே இருக்கும். நாம் எப்பொழுதும் கடந்தகாலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ மாறி மாறி இழுக்கப்பட்டுக் கொண்டிருப்போம். ஆனால் நிகழ்காலத்தில் மட்டும் இருக்கவே மாட்டோம்.
காலச்சங்கிலி, உங்கள் பணியாள்
ஒரு சிறுபரிசோதனை செய்து பார்க்கலாம். ஓரிரு நாட்களுக்கு, கடந்தவற்றைப் பற்றியோ வருபவற்றைப் பற்றியோ கவலைப்படாமல் நிகழ்காலத்திலேயே முழுவதுமாக இருப்பதற்கு முடிவுசெய்வோம். நாம் நிகழ்காலத்திலேயே மூன்று நாட்கள் வாழ்வதால், நிச்சயமாக, நம் சொத்து, சுகங்களை நாம் இழந்துவிடமாட்டோம். அதனால் ஒரு மூன்றே மூன்று நாட்களுக்கு நிகழ்காலத்திலேயே இருப்பதற்கு முடிவுசெய்வோம். அப்படிச் செய்யும்பொழுது, நம்மால் சுலபமாக நிகழ்காலத்தில் நிலைகொள்ள முடியும்.
நாம் நிகழ்காலத்திலேயே இருக்கும்பொழுது, காலச்சங்கிலி நமக்கு ஒரு வேலையாள் ஆகிவிடுகிறது. நாம் இந்த காலச்சங்கிலியை ஊடுருவ முடியும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், மொத்த கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்குள்ளும் நுழைவதற்கு நமக்கு முடியும்.
நிகழ்காலத்திலேயே மூன்று நாட்கள் தங்கியிருக்க முடிவுசெய்வது என்பது, உள்ளுலகத்திலும் வெளியுலகத்திலும் நமக்கு கிடைத்ததை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
அது உள்ளுலகமோ அல்லது
வெளியுலகமோ, பேராசை பேராசைதான்.
எந்தப் பேராசையானாலும், நாம்
எதிர்காலத்திற்குள் இழுக்கப்படுகிறோம்
என்பதுதான் பொருள். ஞானமடைவதற்குப்
பேராசைகொள்வதும்கூட எதிர்காலத்தின்
மீது நாம் வைக்கும் ஒரு பேராசைதான்,
ஒரு நம்பிக்கைதான்.
பேராசைகளையும் கடந்தகாலத்தை ஆய்வு செய்வதையும் விட்டுவிடும் அந்தக் கணத்தில், நாம் நிகழ்காலத்தினுள் விழுந்து, அந்தக் காலச்சங்கிலியை ஊடுருவிச்
> நாம் நிகழ்காலத்தினுள்
> நுழையும்பொழுது,
> 'எல்லையற்ற'தற்குள்
> விழுகிறோம்.
செல்வோம். நிகழ்காலத்தினுள் விழுவது, இடைவெளிக்குள் விழுவது என்றும் சொல்லப்படுகிறது. இரு எண்ணங்களுக்கு இடையே வரும் இடைவெளியில், க்ஷணத்தில் விழுகிறோம்.
'எல்லையற்றது' என்பது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் ஒரு தொகுப்புதான்.
நாம் நிகழ்காலத்தினுள் நுழையும்பொழுது, நாம் 'எல்லையற்ற'தற்குள் விழுகிறோம். அந்த 'எல்லையற்றது' என்பது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் ஒரு தொகுப்புதான். அங்கே வேறுபாடே இல்லை. இந்நிலையில் நாம், கால, வெளி சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் ஸாக்ஷியாகி விடுவோம். நாம் ஸாக்ஷியாகப் பார்க்கும் விழிப்புணர்வாக ஆகிவிடுகிறோம். நாம் அறிபவன் ஆக ஆகிவிடுகிறோம்.
நாம் களத்தை அல்லது க்ஷேத்ரத்தை எந்தவொரு பற்றுதலும் இல்லாமல், ஒரு ஸாக்ஷியாகயிருந்து கவனிப்போம். வெளியுலகில் இருக்கும் ஒவ்வொன்றுமே ஒரு நாடகமே, ஒரு கனவே என்பதையும், நம் வாழ்க்கையில் எதைச் செய்ய முயற்சித்தாலும், அது, அந்தக் கனவை நடத்திச்செல்லும் ஒருவழிமுறைதான் என்பதையும் நாம் உணர்வோம்.
எந்த முயற்சியை செய்தாலும், அது, இந்தக் கனவில் செய்யும் இன்னொரு செயல்தான்!
இதன் மொத்தக் கருத்தும் என்னவென்றால், இந்தக் கனவில் சிக்கிக்கொள்ளாமல், அதாவது, அதை நடத்திச் செல்வதில் உங்களை உணர்ச்சி ரீதியாக இணைத்துக்கொள்ளாமல், உங்கள் உண்மை நிலையோடு ஒன்றிணைந்து, அதை அனுபவித்து மகிழ்வதும், அதை ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதும்தான்.
மே க்ஷேத்ரம் என்னும் களத்தோடு நாம் வீணாக சிக்கியுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ளவும், இந்தக் கனவிலிருந்து நாம் விலகவும், நமக்கு உதவுவதில், பொருள்சார்ந்த உலகத்தைப் பற்றிய புத்திசாலித்தனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. களத்தில் ஏற்படும் எல்லா உணர்வுமாற்றங்களும் காலத்தோடும் இடத்தோடும் சம்பந்தமுள்ளவை. இது நம் மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாம் காலச்சங்கிலியை ஊடுருவும்பொழுது, காலம் நம்முடைய வேலையாள் ஆகிவிடுவதையும், முழுக் காலச்சங்கிலியும் நம்முடைய மனத்தின் காட்சியே என்பதையும் பார்க்கிறோம். நாம் காலச்சங்கிலியை ஊடுருவி, ஸாக்ஷி விழிப்புணர்வாகிவிடும்பாழுது, நாம் நமது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நம்முடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம்.
மனத்தை விட்டுவிடுங்கள்
கடந்தகாலமும், எதிர்காலமும் பொருள் உலகத்தின் உணர்வுமாற்றங்களாகும். எல்லா உணர்வுமாற்றங்களும் ப்ரக்ரு'தி என்னும் களத்தின் நாடகமே. மனமும் ப்ரக்ரு'தியின் ஒரு பகுதிதான்.
ப்ரக்ரு'தியின் ஸாக்ஷியாகவும், முழு விழிப்புணர்வுள்ளவராகவும் ஆக வேண்டுமென்பதன் பொருள்: நமக்குள் முன்னதாகவே உருவாக்கிவைத்திருக்கும் கருத்துகள், எண்ணங்கள்,கொள்கைகள், அஹங்காரம், மனத்தின் பற்று, அது மட்டுமல்ல மனத்தையே விட்டுவிடுதல் ஆகும்.
நம் புலன்கள் மூலமாகச் செய்திகளை உள்வாங்கும்பொழுதெல்லாம், நமக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்தால், அப்பொழுது, நாம் ஸாக்ஷி ஆகிவிடுகிறோம்.
ஒரு நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தவுடன், மனமானது நின்றுவிடுகிறது. நம் கவனத்தை அதன்மீது வைக்க முடிவுசெய்த கணமே, நாம் ஸாக்ஷியாக இருப்பதற்கு முடிவுசெய்து விடுகிறோம்.
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளிலோ அல்லது காட்சியிலோ சிக்கிக்கொள்ளாமல், எவ்வளவு நேரம் ஸாக்ஷியாக இருக்க முடிகிறது என்பதைப் பொறுத்தே, ஸாக்ஷி பாவனை திடப்படும். நாம் இதைத் தொடர்ந்து பயிற்சி செய்ய செய்ய,

ஸாக்ஷி பாவனையின் அனுபவம் ஆழப்படும். நாம் புருஷ என்பதையும் உணர்ந்துகொள்கிறோம்.
"பொருள் சார்ந்த செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் காரணம், இயற்கையே. ஆனால் சுக துக்கம் போன்ற உலகியல் ரீதியான விஷயங்களுக்கு, ஜீவாத்மாதான் மூலகாரணமாக இருக்கிறது." - இந்த வார்த்தைகளின் வழியாக, கிருஷ்ணர் நம்மை மறுபடியும் நமது விழிப்புணர்வுக்குள் கொண்டுவருகிறார்.
அவர் முந்தைய ஸ்லோகங்களில் சொன்னவற்றின் சாரத்தை இது உள்ளடக்கியிருக்கிறது. அவர், 'நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, அது நாம் அல்ல' என்ற ஒரு தெளிவான வாக்குமூலத்தை அளிக்கிறார்.
"கடந்து, கடந்து, கடந்து, அதற்கு மேலும் கடந்து செல்லுங்கள். நீங்கள் உங்கள் உடலைப் பார்க்க முடிந்தால், அதையும் கடந்து செல்லுங்கள்; உங்களின் எண்ணங்களைக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள்; உங்கள் மனத்தின் போக்கைக் கவனிக்க முடிந்தால் இன்னும் கடந்து செல்லுங்கள்; உங்கள் உணர்ச்சிகளைக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள்; இவை எதுவுமே நீங்கள் இல்லை!" - என்ன ஒரு அருமையான வாக்குமூலம்!
ஒரு கட்டத்தில், நம்மால் அதற்கு மேல் செல்ல முடியாது, அதற்கு அப்பால் ஒன்றுமே இல்லை என்பதையும், நாம் ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதெல்லாம் 'நாம்' அல்ல என்பதையும் உணர்ந்துகொள்வோம். சட்டென, அந்தக் கணமே, தூய விழிப்புணர்வு நமக்குள் நிகழ ஆரம்பிக்கிறது.
பொருள் சார்ந்த செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் காரணம், இயற்கையே.
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஜ்ஞான குரு ரமணமஹரிஷி, மிக அழகாகச் சொல்லுகிறார், "எதையெல்லாம் கீழே போட முடியுமோ எல்லாவற்றையும் கீழே போட்டுவிடுங்கள். ஒரு கட்டத்தில், நாம் எதையும் கீழே போட முடியாமல் இருப்போம். கீழே போடுவதற்கு அங்கு எதுவுமே இருக்காது. அப்பொழுது அதைப் பிடித்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்!"
ஸாக்ஷியாகயிருந்து விழிப்புணர்வைக்
கவனித்துக் கொண்டிருங்கள், அதுவே
ஸாக்ஷியாகயிருந்து கவனித்தல். அவ்வாறு
கவனித்துக் கொண்டிருக்கும்பொழுதே,
உங்கள் எண்ணங்களிலிருந்து
விலகிவிடுங்கள், அமர்ந்துகொள்ளுங்கள்,
தளர்வாகுங்கள், கவனியுங்கள். உங்கள்
எண்ணங்களை உருவாக்கவோ,
வளர்க்கவோ, அழிக்கவோ முயற்சி
செய்யாதீர்கள்.
எண்ணங்களை
உருவாக்கவோ,
வளர்க்கவோ,
அழிக்கவோ
முயற்சி செய்யாதீர்கள்.
ஸாக்ஷியாகப் பார்க்கும் அந்த இறுதி
விழிப்புணர்வு, பிரம்மா (படைப்பவர்),
விஷ்ணு (காப்பவர்), சிவா (புதுப்பிப்பவர்)
ஆகியவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
வரவேற்கக் கற்றுக்கொள்ளும்பொழுது,
வந்துபோகின்றன.
நாம் எண்ணங்களை அவை வெறுமனே
இது, ஆகாயத்தில் மிதக்கும் மேகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது. அடுத்தமுறை, ஒரு ஜன்னலருகே உட்கார்ந்து, ஆகாயத்தில் மிதந்து செல்லும் மேகங்களைப் பார்த்து, இந்தப் பயிற்சியை செய்து பாருங்கள். எந்தவிதமான தகுதிகளும், குணங்களும் அவற்றுக்குத் தராமல் அவற்றை வெறுமனே பாருங்கள்.
பொதுவாக, நாம் மேகங்களைப் பார்க்கும்பொழுது, 'ஒ, அந்த மேகம் இந்த விலங்கைப்போல இருக்கிறது. இந்த மேகம் ஒருவருடைய முகத்தைப் போல இருக்கிறது. இதன்நிறம் எனக்கு அந்த மலைத்தொடரை நினைவூட்டுகிறது' என்று பலவிதமாக நாம் நினைக்கிறோம். அவற்றுக்கு எந்தவிதமான உருவங்களையும் குணங்களையும் கொடுக்காமல், எதிலும் பற்றில்லாத வழியில் அவற்றைப் பார்ப்போமானால், ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிற்கும் அது, 'நான் மேகங்களைப் பார்க்கிறேன்' என்ற எண்ணம்!
ஸாக்ஷி பாவனையையும் கடந்து செல்லுங்கள்
நீங்கள், ஒரு முழுமையான ஸாக்ஷியாக இருக்க வேண்டுமானால், இந்த ஒரு நினைப்பும்கூட கரைந்து போக வேண்டும்.
‘நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று ஒரு எண்ணம் சொன்னாலும்கூட, அந்த எண்ணத்தையும் கவனியுங்கள். அந்த எண்ணம்கூட மறைந்து போகும்வரை கவனியுங்கள்.
இன்னும் ஆழமாகக் கடந்து கடந்து உங்கள் இருப்புக்குள்ளே செல்லுங்கள், ‘நான் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லும் எண்ணத்தையும் கடந்து செல்லுங்கள்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், ‘நான் ஸாக்ஷியாகயிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று நீங்கள் உங்கள் மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் பார்க்காமல் இருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள், ‘நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்னும் இந்த எண்ணத்தில் சிக்கிக்கொண்டீர்கள்! இந்த எண்ணத்தையும் கீழே போடுங்கள்!
'நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'
என்ற அந்தக் கடைசி எண்ணமானது,
கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு
பாலம்போல் இருக்கிறது. எண்ணமில்லாத
இடத்திற்கும், உங்களுக்கும் நடுவில் ஒரு
பாலம்போல் இருக்கிறது.
முதன்குமுதலில், நீங்கள் உங்கள் செயல்களையும் எண்ணங்களையும் பார்க்க முயற்சிசெய்யும்பொழுது, ‘நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்ற எண்ணம் வருவது இயற்கையே. அது அப்படியே இருக்கட்டும். நூற்றுக்கணக்கான எண்ணங்கள் உங்களின் உள்ளுலகத்தைத் தகர்த்துக் கொண்டிருப்பதை விட, இந்த ஒரு எண்ணம் இருப்பது, நல்லதுதான்.
ஆனாலும் அப்பால் கடந்து செல்லுங்கள். அங்கும் நிற்காதீர்கள், ‘நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்ற எண்ணத்தையும் கவனியுங்கள். பிறகு, அந்தத் தூய, தொடப்படாத உள் வெளி உங்களுக்குள் நிகழும்; களங்கப்படாத தூய உள்வெளியில்தான் கடவுள் மலர்வார்; தெய்விக விழிப்புணர்வும் உணரப்படும்.

சாதாரணமாக, எண்ணங்கள் நிகழும் நம் ‘உள்வெளி’யில் ஸம்ஸ்காரங்கள், மனப்பதிவுகள் எனப்படும் கட்டுறு மனப்பாங்குகளும் கடந்தகால ஞாபகங்களும், நிரம்பியிருக்கின்றன.
நமது உள்உலகத்தில் இருக்கும் தெய்விகம், சொக்கத் தங்கம் அதாவது 24 காரட் தங்கம் போன்றது. ஆனால் நாம், தூய்மையான தங்கத்துடன் தாமிரம் சேர்த்துக் கலக்கப்பட்டு, அது ஆபரணத் தங்கமாக அதாவது 22 காரட் அல்லது அதற்கும் கீழ், தரமாக்கப்படுவதுபோல, நமக்குள் இருக்கும் தெய்விகத்துடன் கட்டுறு மனப்பாங்குகளைச் சேர்த்து, அதன் தரத்தைக் குறைத்துவிடுகிறோம்.
சில சமயம், அந்தத் தங்கமானது தூய தாமிரமாகவே வெளிவரும் அளவுக்கு, அதனோடு அதிகமான தாமிரம் கலக்கப்படுவதுபோல், நம் உள்வெளியில் அளவுக்கதிகமான கட்டுறுமனப்பாங்குகள் கலக்கப்படுவதால், நமக்குள் இருக்கும் தெய்விகம், கட்டுறு மனப்பாங்காகவே வெளிப்படுகிறது.
இந்த வெளியில் விழிப்புணர்வை வெள்ளமாகப் பாயச்செய்யும்பொழுது, இந்த வெளியை விழிப்புணர்வால் நிறைக்கும்பொழுது, அது தூய்மைப்படுத்தப்படுகிறது. நம்முடைய உள்உலகத்தைச் சுத்தப்படுத்தும்பொழுது, நமக்குள்ளே மீண்டும் உள்ளே 24காரட் தங்கம் நிகழ அனுமதிக்கிறோம்.
பிறகு, நாம் என்ன நினைத்தாலும் பேசினாலும் செய்தாலும், அது பிரபஞ்ச விழிப்புணர்வின் நேரிடையான விருப்பத்துடன் இணைந்ததாகவே இருக்கும். பிறகு, தெய்விகத்துடன் இணக்கமாகிவிடுவோம். நாம், காலியான மூங்கில் ஆகி, தெய்விகம் என்னும் காற்று நம்முள்ளே பாய்வதற்கு அனுமதிப்போம்.
இங்கு, கிருஷ்ணர் ஒரு நுட்பத்தைத் தருகிறார். இப்பொழுதுவரை, நாம் தாமிரமும் தங்கமும் கலந்த 18 காரட் தங்கமாக, இருக்கிறோம். அந்த 18 காரட் தங்கத்தைத் தீயில் போட்டு, தொடர்ந்து உருக்கினால், அது 22 காரட் தங்கமாக மாறும். இதேபோல, ஸாக்ஷியாகவிருந்து கவனிக்கும் விழிப்புணர்வு எனும் தீயினில் நம்மை மீண்டும் மீண்டும் தொடர்ந்து போடுவோமானால், நமது உள்வெளி முழுமையாகத் தூய்மையாகிவிடும்; 22 காரட் தங்கம் 24 காரட் தங்கமானதுபோல!
நான் இமயத்திலிருந்தபொழுது என் வாழ்வில் நடந்த ஒரு நிஜமான சம்பவத்தை, உங்களுக்கு இப்பொழுது சொல்கின்றேன்.
ஒரு வயது முதிர்ந்த நாக ஸாதுவை அங்குச் சந்தித்தேன். நாக ஸாது என்பவர்கள் ஆடைகள் ஏதும் அணியாத, தங்களுக்கென்று எந்தவிதமான உடைமைகளும் இல்லாமல் சுற்றித்திரியும் ஸந்நியாஸிகள். அவர் காட்டில், புனித நதியான கங்கையின் கரையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அமைதியாக ஏகாந்தமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தபொழுது, நான் அவரருகே சென்று சிறிது நேரமாவது அவரோடு இருக்க வேண்டுமென்று உணர்ந்தேன். அவர் ஒரு கஞ்சா புகைக்கும் குழாய் வைத்திருந்தார்.
அவர் என்னைப் பார்த்ததும், 'உட்கார், உட்கார்' என்று ஹிந்தியில் சொன்னார். அந்தப் புகைக் குழாய்க்குள் ஒருசில தாமிர நாணயங்களைப் போட்டார். அதற்குப் பிறகு கஞ்சாவை அதனுள் போட்டு தீப்பற்ற வைத்தார்; பிறகு புகைக்கவும் ஆரம்பித்தார்! புகைத்து முடித்த பின்பு, அந்தக் குழாயைக் கவிழ்த்தார். அப்பொழுது அந்தக் குழாயிலிருந்து தங்க நாணயங்கள் விழுந்தன!!!
என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் அந்தத் தங்கக் காசுகளைக் கொண்டுபோய் விற்று, அந்தப் பணத்திற்குச் கஞ்சா வாங்கினார். பிறகு மீண்டும் அதேபோல, புகைக் குழாய்க்குள் தாமிர நாணயங்களைப் போட்டு, தங்க நாணயங்களாக மாற்றிக் காண்பித்தார். நான் அவரோடு சில நாட்கள் தங்கியிருந்தேன். அவர் அது மாதிரி செய்ததை 10 தடவைகளுக்கு மேலாகவே பார்த்தேன்.
தரம் குறைந்த உலோகங்களை உயர் ரக
உலோகங்களாக மாற்றும் நுட்பத்தை
ரஸவாதம் எனச் சொல்வார்கள். அதை அந்த
பாபா, மிக எளிதாகச் செய்தார்.
நான் அவரிடம், "பாபா, இதை எப்படி உங்களால் செய்ய முடிகிறது?" என்று கேட்டேன். அதுவரை நான் அவரிடம், நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன் என்று சொல்லவில்லை; மேலும் என்னுடைய தாய்மொழியான தமிழில் பேசாமல், அரைகுறை இந்தியில்தான் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
ரசவாதம்,
தரம் குறைந்த
உலோகங்களை உயர் ரக
உலோகங்களாக மாற்றும்
நுட்பம்.
ஆனால், நான் கேள்வி கேட்டவுடன், அந்தப் பாபா தூய தமிழில், "அங்கம் பழுத்தால், தங்கம் பழுக்கும்," என்று பதிலளித்தார். அதற்கு அர்த்தம், 'உன்னுடைய இருப்பு பழுத்தால், தங்கத்தை வரவழைக்கலாம்' என்பதே. அவர் தமிழில் பதில் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்!
அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம், நம்முடைய உள்வெளியை ஸாக்ஷி விழிப்புணர்வால் நிரப்பினால், நம்முடைய தாழ்ந்த சக்தி, ஆன்மிக சக்தியாக மாறிவிடுகிறது. இந்த உள் ரசவாதம், வெளி ரசவாதத்தைச் சாத்தியமாக்குகிறது.
ஸாக்ஷி விழிப்புணர்வை, ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதால், உங்களுடைய உள்வெளி மலரத் தொடங்குகிறது.
உணவுப் பட்டியல் அட்டவணையோடு நின்றுவிடாதீர்கள்
கிருஷ்ணர் சொல்கிற இந்த ஒரு ஸ்லோகத்தில், அனைத்து மதங்கள் மற்றும் ஆன்மிகத்தின் சாரமும் உள்ளடங்கிவிட்டது. எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் மிகச்சிறந்த சாவியை இந்த அத்தியாயத்தில் தருகிறார்.
கிருஷ்ணர் தரும் அந்தப் பிரதான சாவி... ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதே! உங்கள் உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பது; உங்கள் இருப்பை ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பது.
ஸாக்ஷியாகவிருந்து கவனிக்கும் நுட்பத்தில் நுழைந்து, ஸாக்ஷி நிலையை ஒருசில நிமிடங்களுக்கு அனுபவிக்க முடிந்தால், நாம் அதன் ருசியைப் பெறுவோம். நாம், ஸாக்ஷியாகவிருந்து கவனிக்கும் கலையைப் பற்றி எவ்வளவுதான் கேட்டாலும், எவ்வளவுதான் பேசினாலும் அல்லது எவ்வளவுதான் பகுத்து ஆராய்ந்தாலும், அதை நாமாக அனுபவித்து உணரவில்லையென்றால், அதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.
ஒரு சின்ன கதை :
ஒருவர், நடு இரவில், நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு காவலர் அவரை நிறுத்திக் கேட்டார், “ஐயா, நீங்கள் குடித்திருக்கின்றீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொல்லது சரியா?”
“ஆம், நான் இப்பொழுதுதான் ஆறுவகை மதுபானங்கள் குடித்தேன். அவற்றின் பெயர்களைச் சொல்லட்டுமா? கொஞ்சம் பீர், கொஞ்சம் பிராந்தி...,” என ஒரு பட்டியலை வாசிக்க ஆரம்பித்தார்.
அந்தக் காவலர், “நிறுத்துங்கள், உங்களிடம் மூச்சு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தயவுசெய்து, காரை விட்டு வெளியே வாருங்கள்,” என்றார்.
அதற்கு அந்தக் காரோட்டி, “சோதனை ஏன்? நான் சொல்லுவதை நீங்கள் நம்ப மாட்டீர்களா?” என்றார்.

அந்தக் காவலர், அந்தக் காரோட்டி
சொல்வதை நம்பினாலும்கூட, அவர் அந்தச்
சோதனையைச் செய்தாக வேண்டும்.
அதைப் போலவே, நீங்கள் என்னுடைய
வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்ள
முடியாது. நீங்களே அதனைச் சோதனை
செய்தாக வேண்டும். அதை உங்கள் மீதே
நீங்கள் சோதனை செய்தாக வேண்டும்.
உங்கள் இருப்பைக்கொண்டு சோதனை
செய்தாக வேண்டும்.
படிப்பதோ அல்லது கேட்பதோ உங்களை உணர்வுமாற்றம் பெறச் செய்யாது. படிப்பதும் கேட்பதும், ஒரு உணவகத்தில் உணவுவகைகளின் அட்டவணையைப் பார்த்துப்பார்த்து விட்டு, பின் ஒன்றும் சாப்பிட்டுப் பார்க்காமலேயே, அந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்வதைப் போன்றது. நான் சொல்வதைப் பயிற்சி செய்து பார்க்காமல், வெறுமனே கேட்டுவிட்டுச் செல்வது என்பது, உணவுப் பட்டியலை மட்டும் படித்துவிட்டு, எதுவுமே சாப்பிடாமல் அந்த உணவகத்தை விட்டுச் செல்வது போன்றதே!
அதனால், இப்பொழுது நீங்கள் அந்த அட்டவணையைப் படித்துப் பார்த்து விட்டதனால், உணவை ருசிப்பதற்கான நேரம் இது.

கிருஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். இதுவரை அவர், நம் உள்வெளியைத் தூய்மையாக்குவது எப்படி, நமக்குள் இருக்கும் தெய்வீக விழிப்புணர்வை உணர்ந்துகொள்வது எப்படி என்பதைச் சொல்லிக்கொண்டு வந்தார். இப்பொழுது, இந்தக் கடைசி ஸ்லோகத்தில், அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று, இப்படிச் செய்பவர்கள், இப்பொழுது எந்த நிலையிலிருந்தாலும் முக்தி அடைவார்கள் என்று சொல்லுகிறார்.
ஒவ்வொரு இருப்பும் தெய்வீகத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அதை அந்த இருப்பு அறிந்திருக்கிறதோ, இல்லையோ, அது, அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
சில ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, நாம் இந்த உடலை எடுத்து வந்திருக்கிறோம். நாம் உண்மையிலேயே, நம் சக்திகளையெல்லாம் இந்த ஆசைகளைக் கரைப்பதற்கென்றே பயன்படுத்திக்கொண்டால், இதே ஆசைகளை நிறைவேற்றுவதற்கென்று, நாம் இன்னொரு பிறவி எடுப்பதற்கான காரணமே இருக்காது.
நாம் இன்னொருவருடைய வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும்பொழுதும், நம்முடைய ஆசைகளைத்தான் வாழவந்தோமே தவிர, மற்றவர்களின் ஆசைகளை அல்ல என்பதை மறந்துவிடும் பொழுதும்தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நாம் தொடர்ந்து மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்கி, நமக்குள்ளே மலைபோல் சேர்த்து வைத்துக்கொள்கிறோம்.
பின், நம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொள்வதற்கு முன்பாகவே, இந்த உடலைவிட்டுப் பிரிவதற்கான நேரம் வந்துவிடுகிறது; பூர்த்தியாகாத எல்லா ஆசைகளையும் மூட்டைக் கட்டி எடுத்துச்சென்று, அடுத்த உடலை எடுத்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரபஞ்சம், நமது ஆசைகளைக் கரைத்து, நாம் இந்தப் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபட, நமக்கு உதவுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது. ஆனால், நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் நடப்பவற்றை, நாம் ஏற்க மறுக்கிறோம்.
புரிதல் - விடுதலைக்கான மார்க்கம்
கிருஷ்ணர், க்ஷேத்ரம் அல்லது ப்ரக்ரு தியைப் பற்றிய புரிதல் நம்மை நேரிடையாகவே விடுதலைசெய்து விடுகிறது என்கிறார். நாம், நம்மை இந்த உடலோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளும்வரை, இந்தப் புலன் இன்பங்களிலும் ஆசைகளைச் சேர்த்துக்கொள்வதிலும் சிக்கிக்கொள்கிறோம்.

'நாம் இந்த உடலையும் மனத்தையும் கடந்தவர்கள்' என்பதைப் புரிந்துகொண்ட அந்தக் கணமே, நாம், 'பேர், பணம், புகழ், அந்தஸ்து பின் ஓடுவது எவ்வளவு முட்டாள்தனம்' என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
நம்முடைய உண்மையான இயல்பைப் பற்றிய அறியாமையின் காரணமாகவே, நம்முடைய எல்லாப் பிரச்சினைகளும் எழுகின்றன. இந்தப் பேர், புகழ், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்காக நாம் சண்டையிட்டுக் கொள்ளல் போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்கிற புரிதல், நம்மை அவற்றிலிருந்து விடுவிக்கிறது. ஒரு உணர்வு மாற்றம் நிகழ்ந்து, இந்தப் பொருட்களின் பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. உலகியல் ரீதியான உடைமைகளையும் சொந்தங்களையும் சேகரிப்பதெல்லாம் வீணே என்ற புரிதல் நிகழும்பொழுது, உள் விழிப்புணர்வில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது.
இந்தப் புரிதல் எந்த நேரத்திலும் எவருக்கும் நடக்கலாம்! அதற்கு நீங்கள் ஆச்ரமத்தில்தான் வளர வேண்டும், கடவுளின் நாமத்தைத்தான் எல்லா நேரத்திலும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம்.
உணர்வுப் பெருமாற்றம் எவருக்கும், எந்த நேரத்திலும் நிகழலாம். மேலும் அது நிகழும்பொழுது, விழிப்புணர்வின் அளவில் ஒரு பெருமாற்றமாக, ஒரு பெருந்தாவலாக இருக்குமே தவிர, அது படிப்படியாக நிகழ்வதில்லை. விளக்கேற்றியவுடன் அறை முழுவதும், 'சட்டென' ஒரே சமயத்தில் வெளிச்சம் பரவுவதைப் போன்றதாகும்.
நம் இந்தியாவில் ஏகப்பட்ட ஸாதுக்களுக்கு இந்த உணர்வுப் பெருமாற்றம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்திய ஸாதுவான புரந்தரதாஸர் ஞானமடைவதற்கு முன்னர், ஒரு பொற்கொல்லராகத்தான் இருந்தார். பணம் சம்பாதிப்பதிலேயே இரவு பகலாக மூழ்கியிருந்தார். அவருடைய செல்வத்தைத் தேவையுள்ளோருடன் பகிர்ந்துகொள்ளாமல், மிகக் கருமிஸாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் மனைவியோ மிகப் பெருந்தன்மை மிக்கவராயும், தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவராயும் இருந்தார். ஆனால் அது அவருடைய கணவருக்குப் பிடிக்காதென்பதால், அவர் ரகசியமாகவே உதவிக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு நாள், பண உதவி கேட்டு
வந்த ஒருவருக்கு, தன்னுடைய வைர
மூக்குத்தியைக் கொடுத்துவிட்டார்.
மூக்குத்தியைப் பெற்றவர் புரந்தரதாஸர்
கடையிலேயே அதை விற்கச் செல்ல,
மூக்குத்தியைப் பார்த்த புரந்தரதாஸருக்கு
விஷயம் புரிந்துவிட்டது. தம் மனைவி
> உணர்வுப் பெருமாற்றம்
> எவருக்கும்,
> எந்த நேரத்திலும்
> நிகழலாம்.
அவ்வளவு விலையுயர்ந்த பொருளைத்
தானமாகக் கொடுத்தது அவருக்குப்
பிடிக்கவில்லை. அதனால், அவருடைய
ஆட்சேபத்தைத் தெரிவிக்க, கோபமாக
வீட்டுக்குச் சென்றார்.
இதற்கிடையில், அவர் மனைவியோ,
கணவரிடம் இவ்விஷயத்தை மறைக்க
முடியாதே, என்ன செய்வது என்று
செய்வதறியாது திகைத்து, கடவுளிடம்
உதவியை வேண்டினார். கடவுளும்,
அதே போன்றதொரு மூக்குத்தியைக்
கொடுத்தார்.
நாம் பொருள்
இன்பங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள்
என்ற புரிதலே, நம்மை
விடுவித்துவிடும்!
வீட்டிற்கு வந்த புரந்தரதாஸர், தம் மனைவியிடம் மூக்குத்தி இருப்பதைப் பார்த்து, திகைத்தார். இது எப்படி நிகழ்ந்தது என்று மனைவியிடம் கேட்க, மனைவியும் நடந்த விஷயத்தைச் சொன்னார்.
அதைக் கேட்ட புரந்தரதாஸருக்குள் சட்டென ஒரு மாற்றம் நிகழ்ந்தது. செல்வத்தைச் சேர்க்க, தம் சக்திகளை எவ்வளவு தூரம் வீணாக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்தார். தாம் இதுநாள்வரை, தம் வாழ்க்கையை வீணாக்கியிருப்பதை உணர்ந்தார். பிறகு தம்மை அறிந்துகொள்ளும் பேராவலில், வீட்டைவிட்டு வெளியேறினார்.
அதனால், நாம் எந்த வேலைசெய்பவராயிருந்தாலும், ஆன்மிகத்தில் எந்தப் படியிலிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டாலே போதுமானது, விரைவில் குணமடைந்து விடலாம். நாம் பொருள் இன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற புரிதலே, நம்மை விடுவித்துவிடப் போதுமானது.
புரிதலை மேலும் உயர்த்துங்கள்
கேள்வி: ஸ்வாமி, நாம் புத்திசாலித்தனம் சார்ந்த புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்னுடைய எந்த சொத்து சுகங்களும் நிலையானவை இல்லை என்று நான் அறிகின்றேன். எதுவாக இருந்தாலும் நான் இறக்கும்பொழுது என்னோடு எதையும் எடுத்துப் போக முடியாது. ஆனால் நான் இந்த உடலில் வாழும்வரை, எனக்குப் பொருள் அவசியம். நான் பொருளீட்டியாக வேண்டும். அதற்கு வேலையும் செய்தாக வேண்டும். அந்த வேலை உண்மை, கற்பனை அல்ல. இதற்கு என்ன பதில்?
பதில்: பதிலையும் நீங்களே கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் இறக்கும்பொழுது எதையும் எடுத்துப் போக முடியாது என்பதை, நீங்களே அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் சேகரிக்கும் எதுவும் நிலையானதில்லை என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். இதுவே ஒரு நல்ல புரிதல்தான்.
நீங்கள் வேலைசெய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பட்டறிவின் மீதுதான். இந்தப் புரிதலை மேலும் உயர்த்துங்கள். அது உங்களை விரைவிலோ அல்லது மெதுவாகவோ ஊடுருவிவிடும்.
பொருளீட்டுதல் என்னும் விஷயத்தை, ஒவ்வொருவரும், அவரவர்களின் இயல்புக்கேற்றவாறு, வெவ்வேறு கோணத்தில் நோக்கலாம்.
பொதுவாக பலர், அவர்களுக்குத் தேவையோ இல்லையோ, சொத்துகளை வாங்கிக் குவித்துக் கொண்டே இருப்பார்கள். பேர், புகழ், அந்தஸ்திற்காகவே இதைச் செய்வார்கள். ஏனெனில், சமூகம் நம்முடைய செல்வத்தை வைத்துத்தான் நம்மை மதிக்கும். இதற்கு ஒரு முடிவே கிடையாது. இது ஒரு போட்டி, இந்தப் பந்தயத்தில் நீங்கள் ஜெயித்தாலும்கூட, உங்கள் நிலை அதேதான்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான் வேலைசெய்கிறீர்கள், ஆனால் தேவையான அளவு பணம் சம்பாதித்த பிறகும், நீங்கள் மகிழ்ச்சியடைவதே இல்லை. ஏனெனில், மேலும் மேலும் பொருள் சேர்ப்பதில் சிக்கிக்கொள்கின்றீர்கள்.
உங்களைவிட அதிக பொருள் வைத்திருக்கும் வேறொருவர் ஊரில் இருக்கத்தான் செய்வார்; அவரைப்போல சம்பாதிக்கவே நீங்களும் விரும்புவீர்கள்; அதனால்தான் உங்களால், பொருளுக்குப் பின்னால் ஓடும் மனப்பாங்கை நிறுத்த முடிவதில்லை. 'நிறுத்துவதற்குரிய நிறுத்தல்
நீங்கள் வேலைசெய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பட்டறிவின் மீதே. பொத்தான்' நீக்கப்பட்ட ஓர் இயந்திர மனிதன்தான் நீங்கள்!
இப்போது, இவ்விஷயத்தைத் தர்க்க ரீதியாகப் பார்க்கலாம்; நீங்கள் இப்பொழுது செய்து கொண்டிருப்பது நல்லதே. பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் எதையும் சேர்க்கவில்லை. ஆனால், வாழ்வாதார தேவைக்காகச் சம்பாதிக்கிறீர்கள்.
‘வாழ்வாதாரத் தேவை’ என்று சொல்லும்பொழுது இங்கே எழும் ஒரு பிரச்சினை என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும், ‘வாழ்வாதாரத் தேவை’ என்பதற்கு அவரவருக்குரிய ஒரு விளக்கம் வைத்திருக்கிறோம்.

ஒருவர், தம்முடைய அலுவலங்களுக்கு
நடந்துசெல்வதே போதும் என்று
நினைப்பார், இன்னொருவர், காரில்
செல்வதே தம்முடைய அடிப்படைத் தே
தவை என்று நினைப்பார், மற்றொருவர்,
பேருந்தில் ஒரு பயணியாகச் செல்வதே
தமக்குப் போதுமானது என்று நினைப்பார்!
நீங்கள், இன்னமும் ஒரு பலனை நோக்கித்தான் வேலைசெய்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள், இன்னமும் செயலினால் விளையும் பலன்களில் பற்று கொண்டிருக்கின்றீர்கள். விளைவு, நீங்கள் விரும்பியபடி நிகழ்வுகள் நிகழ்ந்தால், நீங்கள் சந்தோஷப்படுகின்றீர்கள். இல்லையென்றால், துக்கத்தில் விழுகின்றீர்கள். நீங்கள், இன்னமும் அடிமைத்தனத்தில்தான் இருக்கின்றீர்கள்.
நீங்கள், இதையே மூன்றாவது விதத்திலும் பார்க்கலாம். நீங்கள் ஒரு புத்திசாலித்தனம் மிகுந்த சக்தியால் இந்த உலகுக்குக் கொண்டுவரப்பட்டீர்கள்; அதனால் அந்த சக்தியே உங்களைக் காப்பாற்றவும் செய்யும் என நம்பிக்கை கொள்ள முடியும்.
நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது, ஏதோ ஒன்றைச் கேட்டுத்தான் பிரார்த்திக்கின்றீர்கள். கடவுள் கொடுப்பார் என்று உங்களுக்குத் தெரியும்; எனினும் கடவுளுக்கு, உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் என்பதை நீங்கள் நம்புவதில்லை. அதனால், நீங்கள் அவரிடம் ஒரு மனு போடுகிறீர்கள்!
கடவுளுக்கு, 'கொடுக்கும் சக்தி' இருக்கும்பொழுது, உங்களுக்கு என்ன தர வேண்டும் என்ற 'புத்திசாலித்தனமும்' அவருக்கு இருக்கும் என்று நீங்கள் ஏன் யோசிப்பதில்லை?
நீங்கள் பணிபுரிய வேண்டியதிருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். யாரும் வெகு காலத்துக்கு சோம்பேறியாக இருக்க முடியாது. எனினும் நீங்கள் விளைவுக்கு, பலனுக்கு முக்கியத்துவம் தராமலேயே வேலைசெய்யலாம். நீங்கள் இதைச் செய்யும்பொழுது, ஒரு ஸாட்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் வேலை செய்கிறீர்கள், ஆனால் வேலையின் விளைவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. என்ன நடந்தாலும், அது நல்லதே என்று உங்களுக்குத் தெரியும். புத்திசாலித்தனம் உள்ள சக்தி உங்களைக் காப்பாற்றும் என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்வீர்கள்.

