பலமனிதர்கள், பலவழிகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சிலர், தியானத்தின் மூலமோ அல்லது கர்மயோகத்தின் மூலமோ
தூய்மை படுத்தப்பட்ட மனம் மற்றும் அறிவின் துணைகொண்டு,
தங்கள் ஆழ்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.
வேறு சிலர், போதிய ஆன்மிக புத்திசாலித்தனம்
இல்லையென்றாலும், மற்றவர்கள் சொல்லக்கேட்டு,
ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் தொடங்குகிறார்கள்.
ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே சிலர்
பிறப்பு, இறப்பு என்னும் பாதையைக் கடக்கிறார்கள்.
பரத குலத்துதித்தவர்களில் தலைசிறந்தவனே, பிறக்கிற
அனைத்துமே, அது அசைகிறதோ அசையவில்லையோ, அது
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றின.
எந்த வழியாக இருந்தாலும், இலக்கு ஒன்றே
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர், ‘தம்மை அறிதல்’ பாதையில் செல்வதற்கான பலவிதமான நுட்பங்களைத் தருகிறார். நம் ‘சுய’த்தை அறிய, நாம் பல்வேறு விதமான செயல்முறைகளை அல்லது வழிகளைப் பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.
‘எவ்வளவு குருமார்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு வழிகள்’ என்று மக்கள் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில், ‘எவ்வளவு சீடர்களோ அவ்வளவு வழிகள்’ என்றே இருக்க வேண்டும்!
ஒவ்வொரு சீடனும், அவருக்கென்று ஒருவழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுவே கிருஷ்ணர் சொல்ல விரும்புவது. நாம், இறுதி விழிப்புணர்வை பல்வேறு வழிமுறைகளின்மூலம் அடையலாம்.
கிருஷ்ணர், "தியானம், யோகா, ஞானம், ஆழ்ந்த சிந்தனை இறைத்தன்மையிடம் சரணாகதி ஆகிய வழிகளின் மூலமாக நீங்கள் விடுதலை அடையலாம்," என்கிறார்.
எல்லா விதமான முறைகளும், ஒரே இலக்குக்குத்தான் அழைத்துச் செல்கின்றன. பகவத்கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும், இருப்பை அறிவதற்கான, ஒவ்வொரு தனித்துவமான நுட்பத்தைத் தருகிறது. கிருஷ்ணர், நான்காவது அத்தியாயத்தில், ஞான யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். பிறகு அத்தியாயம் பன்னிரண்டாவது அத்தியாயத்தில், பக்தி யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்.
கிருஷ்ணர் சொல்ல
விரும்பும் செய்தி:
ஒவ்வொரு சீடனும்,
அவருக்கென்று
ஒருவழியைத்
தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்.
எந்த வழியாக இருந்தாலும் இலக்கு ஒன்றே றதான். ராமகிருஷ்ணர் பல மதங்களையும் பல நுட்பங்களையு ம பயிற்சிசெய்து இந்த ஸத்யத்தை நிரூபித்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தீர்களானால், அவர் இஸ்லாம், கிருத்துவம், இந்துத்துவம், இந்துத்துவத்தின் உட்பிரிவுகளான தந்திரம், வைஷ்ணவம் போன்ற பல மார்க்கங்களையும் பின்பற்றிப் பார்த்திருக்கிறார் என்பது தெரியும். அந்த எல்லா வழிமுறைகளும் ஒரே இறுதி விழிப்புணர்வுக்குத்தான் அழைத்துச் செல்கின்றன என்று உறுதிசெய்கிறார்.
அவர், தம்முடைய சீடர்கள்
ஒவ்வொருவருக்கும், அவரவர்கள்
உணர்வுக்கேற்றவாறு, வெவ்வேறு
வழிகளைப் போதித்தார். அவர்
விவேகானந்தரை, அத்வைத கோட்பாட்டை
வலியுறுத்தும் புத்தகங்களைப் படிக்கச்
சொன்னார். சில சீடர்களை, தேவி பக்தியில்
மூழ்கச் சொன்னார்.
நாம், இறுதி
விழிப்புணர்வை பல்வேறு
வழிமுறைகளின்மூலம்
அடையலாம்.
அவர், குறிப்பிட்ட அந்தச் சீடரின் மனப்பாங்கைப் பொறுத்து, வெவ்வேறு வழிகளைக் குறிப்பிட்டார். ஒருவர், விவேகானந்தரைப் போன்று, தர்க்க ரீதியானவராகவும், கேள்விகள் அதிகம் கேட்பவராகவும் இருந்தால், அவரைப் புத்தகங்களைப் படிக்க ஊக்குவித்தார். பிரார்த்தனை, வழிபாடு போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடு கொண்டவராக ஒருவர் இருந்தால், அவருக்கு _பக்தி_ வழியையே காட்டினார்.
செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும் ஆன்மிகப் பெயர்
நமது இரண்டாம் நிலை தியானப் பயிற்சியான நித்யானந்த ஸ்பூரண நிகழ்ச்சிக்குப் பிறகு ஆன்மிகப் பெயர் விரும்பி கேட்பவர்களுக்கு, ஓர் ஆன்மிகப் பெயர் நான் கொடுக்கின்றேன். அப்பெயர், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும்!
_பக்தர்களின்_ சக்தி நிலையைப் பொறுத்து, அவர்களுக்குப் பெயர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். அவர்கள் எவ்வாறு பிரபஞ்ச _நித்யானந்தாவோடு_ தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அந்தப் பெயர்கள் இருக்கும்.
ஒருவர், _பக்தி_ போன்ற உணர்ச்சி நிலை செயல்பாடுடையவராக இருந்தால், அவருக்கு அந்தக் குறிப்பிட்ட சக்திக்குத் தகுந்த மாதிரி பெயர் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். சிலர், பட்டறிவு நிலையில் இருப்பார்கள். இவர்கள் பிரபஞ்ச நித்யானந்தாவோடு மன அளவில் தொடர்பு கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு, ஒவ்வொன்றுக்குமே தர்க்க ரீதியான விளக்கம் தேவைப்படுகிறது.
இருப்பு அளவில் தொடர்புகொண்டவர்கள் மூன்றாவது வகையினர்.
ஒவ்வொருவரின் சக்தி நிலைகளின் மேல் தியானம் செய்து, அவற்றுக்கு தகுந்த மாதிரி பெயர்களை அவர்களுக்குக் கொடுக்கிறேன். அந்த ஆன்மிகப் பெயர் அவர்களுக்கு ஒரு பாதையைத் தருகிறது, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான தனித்தனி பாதையைத் தருகிறது.

ஆன்மிகப் பெயருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தப் பெயர் உங்கள் பாதையை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
நாம் பொதுவாக நம் பெயர்களோடுதான் நம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டிருப்போம். அதனால் எப்பொழுதெல்லாம் உங்கள் பெயரைச் சொல்கிறீர்களோ அல்லது மற்றவர்கள் அந்த ஆன்மிகப் பெயர் கொண்டு அழைக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் அந்தப் பெயர் உங்கள் தலைக்குள் ஒரு மணி அடிக்கிறது; நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
கிருஷ்ணர், அர்ஜூனனிடம் வழிகளைப் பற்றிச் சொல்கிறார். அவர் அர்ஜூனனுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தருகிறார். கிருஷ்ணர், தியானம், யோகா, மந்திர ஜபம், கற்றல், அறிவை வளர்த்தல், பிரபஞ்சத்திடம் சரணாகதியடைதல் போன்ற பல்வேறு மாற்று வழிகளைத்தருகிறார்.
ஒரு முக்கியமான விஷயம், ‘எந்தப் பாதை உங்களுக்கு ஏற்றது’ என்பதை நீங்கள் தெரிந்துகொண்டாக வேண்டும். ஆனால் பொதுவாக மக்கள், ஆன்மிகப் பாதையைப் பற்றிய போதிய அறிவு இல்லாமலேயே, ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். நீங்கள் உங்கள் பாதையைப் புரிந்துகொள்ள வேண்டும். பலதரப்பு மக்களும் ஆச்ரமத்திற்கு வந்து தியான வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். அவர்கள், அந்த சில நாட்களுக்கு என்னைச் சுற்றியிருப்பதால், ஆனந்தமாக இருக்கிறார்கள். அது அவர்களுக்குப் பிடித்துப் போவதால், உடனே ஆச்ரமத்தில் சேர்ந்துவிட நினைக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய பாதை எது என்பதும் தெரியாது; ஆச்ரம வாழ்க்கைதான் அவர்களுடைய பாதையா என்பதையும் அறிய மாட்டார்கள்.
ஆனால் ஆச்ரமத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று மட்டும் விருப்பப்படுவார்கள். அவர்கள், "ஸ்வாமி, நான் ஆச்ரமத்தில் வந்து சேர்ந்துகொள்கிறேன். தயவுசெய்து, நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்," என்று கேட்பார்கள்.
வேறுசிலர், மற்றவர்கள் எதைச் செய்கிறார்களோ, அதையே அவர்களும் பின்பற்றிச் செய்வார்கள், ஏனென்று தெரியாமலேயே! பெற்றோர் ஏதாவது ஒரு குருவைப் பின்பற்றினால், குழந்தைகளும் அதே குருவைப் பின்பற்றுவார்கள்.
ஆரம்பத்தில் யாரையாவது ஒருவரைப் பின்பற்றுவதில் தவறில்லை. நீங்கள் ஒரு இடத்தை ஆரம்பமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என்பதை, நீங்கள்தான் கண்டுபிடித்தாக வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர் அந்த குருவைப் பின்பற்றுகிறார் என்பதற்காக, நீங்களும் குருட்டுத்தனமாக, அதையே பின்பற்றக்கூடாது.
ஒரு சின்ன கதை :

ஒரு நாள் ஒருவர், நள்ளிரவில் காரோட்டிச் சென்று கொண்டிருந்தார். திடீரென அந்தக் காரின் முகப்பு விளக்குகள் பழுதடைந்துவிட்டன. பிறகு, அவர் தன்முன்னே சென்று கொண்டிருந்த வேறொரு காரையே பின்பற்றிச் செல்ல முடிவுசெய்து, அப்படியே அதன் பின்னாலேயே சென்றுகொண்டும் இருந்தார். வெளியே காரிருள் அப்பிக் கொண்டிருந்தது. ஒன்றுமே தெரியவில்லை. முன் செல்லும் கார் எந்தப் பக்கம் திரும்பியதோ, அந்தப் பக்கமெல்லாம் இவரும் திரும்பி திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்படியே முன்செல்லும் காரின் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தே வெகுதூரம் சென்றார்.
திடீரென, முன்சென்ற அந்த காரின் விளக்குகள் அணைந்தன. காரும் சட்டென நிறுத்தப்பட்டது. இதை எதிர்பார்க்காத இரண்டாவது காரின் ஓட்டுநர், முன்சென்ற காரின் மீது மோதிவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவர், முன்சென்ற காரின் ஓட்டுநரைப் பார்த்து, "ஏன் காரை இப்படித் திடீரென நிறுத்தினீர்கள்?" எனக் கோபமாகக் கேட்டார்
"என் வீடு வந்துவிட்டது. நான் வேறென்ன செய்ய வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாய்?" என்று பதிலுக்குக் கேட்டார், அந்த முதல் காரோட்டி.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் எதையாவது, யாரையாவது குருட்டுத்தனமாகப் பின்பற்றினால், நீங்கள் சரியான இலக்கை அடைய முடியாது. உங்கள் பாதையை நீங்கள்தான் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாக, நம்மில் பலரும் செய்யும் செயல்: ஒரு குரு நடத்தும் பல்வேறு தியான வகுப்புகளுக்குச் செல்வார்கள். பிறகு வேறொரு குரு நடத்தும் தியான வகுப்புகளுக்கும் செல்வார்கள் அங்கும் அனைத்து வகுப்புகளையும் முடிப்பார்கள். ஒரு குருவிடமிருந்து மற்றொரு குருவிடம் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
உண்மையில் இன்று, இது ஒரு நாகரிகமாகவே ஆகிவிட்டது. ஒருவருக்கொருவர் சந்திக்கும்பொழுது, "நீங்கள் எத்தனை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டீர்கள்?" என்று பரஸ்பரம் கேட்டுக்கொள்கிறார்கள்! எல்லாக் குருமார்களிடமிருந்தும் சான்றிதழ்களாக வாங்கிச் சேகரிக்கத் தொடங்குகிறார்கள்.
நீங்கள் செல்ல வேண்டிய பாதையை அறிந்தவர் அவர் ஒருவரே!
ஸத்யத்தை அறிவதற்குப் பலவழிகள் உள்ளன. எனினும் நம்முடைய பாதை எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கேதான், ஒரு ஜ்ஞானகுரு நமக்கு உதவ முடியும். உங்களுக்குரிய சரியான பாதை எது என்று அவர் அறிவார். நீங்கள் தவறான பாதையில் சென்றால், அவர் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவார். உங்கள் பாதைக்கேற்ப உங்களின் தவறுகளையும், உங்கள் நுட்பங்களையும் சரிசெய்வார்.
நம்முடைய மேம்படுத்தப்பட்ட தியான சிகிச்சையாளர் பயிற்சியில், சீடர்களை மேடை மீது அமரச்செய்து, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்குமாறு செய்வேன். அவர்கள் விடையளிக்கும்பொழுது, அவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்பதைக் கவனித்து, அவற்றைச் சரிசெய்வேன்.
இந்த ஸ்லோகத்தில், கிருஷ்ணர், தியானம், யோகா, ஜ்ஞானம் போன்ற பலவிதமான நுட்பங்களைத் தருகிறார். பலர் இவற்றைச் செய்தும் வருகிறார்கள். சிலர் கேட்கின்றனர், “ஸ்வாமி, தினமும் 21 நிமிடங்களுக்கு தியானம் செய்து வருகின்றேன். இன்னும் என்னால் ஒன்றையும் உணர முடியவில்லை. இது ஏன்?”
நான் அவர்களிடம், “உண்மையாகச் சொல்லுங்கள், நீங்கள் முழுத் தீவிரத்துடனும், முழு விழிப்போடும்தான் தியானத்தைச் செய்கின்றீர்களா? நீங்கள் தியானிக்கும்பொழுது, உங்கள் உடல் இருக்கும் இடத்தில்தான் உங்கள் மனதும் இருக்கிறதா அல்லது உங்களின் அலுவலகத்தை நினைத்துக் கொண்டிருக்கிறதா?” என்று கேட்டால், அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடிவதில்லை.
எல்லா நுட்பங்களும் சரியான
முறையில் செய்யப்பட்டாக வேண்டும்.
நீங்கள் தியானம் செய்யும்பொழுது
தூங்கினீர்களானால், நீங்கள் 21

நிமிடங்களென்ன, 21 நாட்கள் தொடர்ந்து அமர்ந்தாலும், சரியான விளைவுகள் ஏதும் இருக்காது.
ஒரு தியான வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
"இந்தத் தியான நுட்பம் அநாஹத சக்ரத்துக்கு உரியது - அதாவது இதயப் பகுதியில் உள்ள சக்தி மையத்துக்கு உரியது. இந்தத் தியானத்தின்பொழுது நம் கவனத்தை இதயத்தின் மத்தியில் வைப்போம்," என்று சொல்லி முடித்தேன்.

பங்கேற்பாளர்களுள் ஒருவர் நேராக அமர்ந்து, தியானத்தை நன்றாகவே ஆரம்பித்தார். ஆனால் நேரம் செல்லச் செல்ல, அவர், தூக்கத்தில் ஒரு பக்கமாகச் சாய ஆரம்பித்தார். கடைசி 10 நிமிடங்களின்பொழுது, நான் அவரை கூப்பிட்டுக் கேட்டேன், "என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" அதற்கு அவர், "நான் அநாஹத தியானம் செய்துகொண்டிருக்கிறேன், ஸ்வாமி!" என்றார்.
நான் அவரைக் கேட்டேன்: "நீங்கள்
தியானிப்பது உங்கள் அநாஹதத்தின் மேலா,
இல்லை, உங்கள் பக்கத்திலிருப்பவரின்
அநாஹதத்தின் மேலா?"
நன்கு கவனியுங்கள், தியானம் என்பது விழிப்புணர்வோடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொன்றையுமே தியானமாக ஆக்கலாம், நீங்கள் விழிப்போடும் ஆழமான உத்வேகத்தோடும் செய்வது எல்லாமே தியானம்தான்.
விழிப்புணர்வின் அந்தஸ்தைடுத்துவதற்கே, தியானமும் யோகமும்
பெரும்பாலான மக்கள் மந்த்ர ஜபம் செய்வார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து பிரார்த்தனை அறையில் அமர்ந்து ஜபம் செய்கிறார்கள். அதை அவர்கள் விழிப்புணர்வோடு ஜபித்தால், நல்லதுதான். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த நேரத்தில் பால்காரன் வந்து குரல் கொடுத்தால், "சரிப்பா, பாலை கதவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போ. நான் பிறகு எடுத்துக்கொள்கிறேன்," என்று பதில் கொடுப்பார்கள். பிறகு ஜபத்தை ஆரம்பிப்பார்கள்!
அடுத்து, வீட்டு வேலைக்கார அம்மா வருவார். அவர் பக்கத்து வீட்டு வேலைக்கார அம்மாவுடன் நின்றுகொண்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். இவர்கள், மந்த்ர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், அந்த அரட்டையைக் காதுகொடுத்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். சில சமயம், ஜபத்திற்கு இடையில், வேலைக்காரர்கள் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை இடைமறித்து, அதைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கும் உயர்ந்த அபிப்பிராயங்களைக்கூட பகிர்ந்து கொள்வார்கள்.
இது த்யானமே அல்ல.
இதைப் போலவே யோகாவைப் பற்றியும் நிறைய தவறான கருத்துகள் இருக்கின்றன. மக்கள், யோகா வகுப்புகளை உடற்பயிற்சி வகுப்புகளாக மாற்றிவிட்டனர். இன்று யோகா என்பது ஒரு நாகரிகமாகிவிட்டது. பவர் யோகா, டீலக்ஸ் யோகா, 'சூப்பர் டீலக்ஸ்' என்று வித விதமான யோகா முறைகள் உள்ளன. ஒரு யோகா கூடமானது, ஒரு நாகரிக நடை, உடை கலை அரங்காகத்தான் இருக்கிறது.
யோகா, ரஸவாதத்தை நிகழ்த்திடும் சக்தி வாய்ந்த கருவி!
யாராவது ஒருவர், "நான் தினமும் யோகா செய்து கொண்டிருக்கிறேன்," என்று சொன்னால், அது "நான் ஒரு மெர்சிடிஸ் கார் வைத்திருக்கிறேன்," என்று சொல்வதைப் போல இருக்கிறது. அப்படித்தான் இப்பொழுது யோகா ஆகிவிட்டது.
ஆனால், உடல் மற்றும் நம் அந்தஸ்துக்கு உயர்வு சேர்க்கும் பயிற்சிகளையெல்லாம்விட மேலானது, யோகா. கிருஷ்ணர், இறுதி விழிப்புணர்வை அடைவதற்கான வழியாக அதைக் கொடுத்திருக்கிறார். இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர், ஸாங்க்யோ - அறிவு அல்லது வேதாந்த கலந்துரையாடல்கள் மூலம் நம்மைப் பிரபஞ்ச நித்யானந்தத்தோடு இணைத்துக்கொள்ளும் வழிமுறையைப் பற்றிப்பேசுகிறார்.
நீங்கள் ஒன்றை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். அறிவைச் சேகரித்தல் மற்றும் வேதாந்த கலந்துரையாடல்களையும் இரண்டு வழிகளில் மேற்கொள்ள முடியும்.
ஒன்று, நிறைய புத்தகங்களைப் படிப்பது. சிலர், வேதாந்த புத்தகங்கள், மத புத்தகங்கள், ஆன்மிகப் புத்தகங்கள், குருமார்களின் சுயசரிதங்கள் என்று ஒரு பெரிய நூலகத்தையே தங்கள் வீட்டில் வைத்திருப்பார்கள். யாராவது ஏதாவது சொன்னால் போதும், உடனே புத்தகங்களிலிருந்து நிறைய மேற்கோள்கள் எடுத்துச் சொல்லி, நீண்ட நேரம் பேச்சினை வளர்ப்பார்கள். இவர்கள் அறிவு ஜீவிகள்.
> படித்ததை
> அறிந்துகொள்வதற்கு,
> நாம் அதை
> அனுபவபூர்வமாக
> உணர வேண்டும்.
சிலர், தபால் தலைகள், நாணயங்கள் போன்றவற்றைச் சேகரிப்பதுபோல அறிவைச் சேகரிப்பார்கள். ஆனால் நீங்கள் ஆழமாகப் பார்த்தீர்களானால், அவர்களின் அறிவு, அவர்களுடைய அஹங்காரத்தின் மற்றொரு வெளிப்பாடே! அவர்கள், தங்களை உயர்ந்தவர்களாக மற்றவர்கள் முன்னிலையில் காட்டிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள், உண்மையில் அந்த அறிவை ஜீரணித்திருக்கமாட்டார்கள், அவர்கள் அதை உண்மையில் உள்வாங்கியிருக்க மாட்டார்கள்.
கிருஷ்ணர், அறிவைப் பயன்படுத்தி, உங்கள் இலக்கை அடைய முடியும் என்று சொல்கிறார். இதற்கு படிப்பதும், அறிவைச் சேகரிப்பதும் மட்டுமே போதாது என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும். படித்ததை அறிந்துகொள்வதற்கு, நாம் அதை அனுபவ பூர்வமாக உணர வேண்டும்.
நாம் பலவித தத்துவங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும்வரை, வெறும் சேகரித்தலை மட்டுமே செய்கிறோம். இதனால் நாம், நமக்கென்று எந்த மதிப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. நாம் அவற்றை உள் வாங்கிக்கொள்ளும்பொழுது, நமக்குள் ரஸவாதம் நிகழ்கிறது.
நம்முடைய அறிவையும் அஹங்காரத்தையும் காட்டுவதற்காகவே உரையாடினால், நாம் அந்த அறிவினால் எந்தப் பயனும் அடையப்போவதில்லை. அறிவையும் கலந்துரையாடல்களையும் நமது வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதை நாம் அறிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, அது நமக்கு ஒரு சக்தி வாய்ந்த கருவியாக ஆக முடியும்.
அனுபவிக்கத் தெரிந்தவர்களுக்கே ஆன்மிகம்
அந்த ஸ்லோகத்தின் கடைசியில், கிருஷ்ணர் ஒரு மிக அழகான நுட்பத்தை, சரணாகதி என்னும் உச்ச நுட்பத்தைத் தருகிறார். அவர், "உங்களின் செயல்களுடைய விளைவுகளை என்னிடமே விட்டுவிடுங்கள்," என்கிறார். இதுதான் மிகவும் சரியான பயனளிக்கும் நுட்பமாகும். இதைப் பற்றித்தான் அவர் கீதை முழுவதும் பேசுகிறார்.
பிரபஞ்ச விழிப்புணர்வாகிய அவரிடமே உங்கள் செயல்களின் பலனை விட்டுவிடுங்கள்.
நாம், மீண்டும் மீண்டும், நம் செயல்களுக்கு நாமே பொறுப்பை எடுத்துக் கொள்கிறோம். அப்பொழுதுதான் நமக்கு மன இறுக்கங்களும், பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. பிரபஞ்ச சக்தியான கிருஷ்ணரிடமே எல்லாவற்றையும் சமர்ப்பியுங்கள்! இதை ஒருமுறை செய்துவிட்டோமானால், நாம் சுதந்திரமாக உணர்வோம். நாம் விடுவிக்கப்பட்டதாக உணர்வோம். ஸத்யத்தை அடைவதற்கான மிக சுலபமான வழி இதுவே.
ஸத்யத்தை அடைவதற்கோ அல்லது ஒரு ஆன்மிக வழியைத் தொடர்வதற்கோ ஏதேனும் முன் நிபந்தனைகள் உண்டா?
கிருஷ்ணர் இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறார். ஒருவர் ஒரு குறிப்பிட்ட
நாம் பலவித தத்துவங்களை உள்வாங்கிக் கொள்ளும்பொழுது, நமக்குள் ரஸவாதம் நிகழ்கிறது.
பாதையில் செல்ல ஆரம்பிப்பதற்கு, எந்த
ஒரு ஆன்மிக அறிவும் தேவையில்லை.
முன் நிபந்தனைகள் ஏதும் கிடையாது.
ஒருவர், ஆன்மிகத்திற்கு முற்றிலும்
புதிதானவராக இருந்தாலும், அவர்,
ஒரு குறிப்பிட்ட ஆன்மிகப் பாதையைப்
பின்பற்றலாம்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால், பலர், ஒரு தியான முகாமில் கலந்துகொண்ட உடனேயே, தாங்கள் ஞானமடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள், தியானம் போன்ற எதையாவது செய்வது பற்றிப் பேசி சந்தோஷமடையட்டும். ஆனால் பிரச்சினை என்னவென்றால், அதை அனுபவ பூர்வமாக உணராமலேயே மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள், தியானம் செய்யாத மற்றவர்களைக் கீழ்த்தரமாக நினைப்பது மட்டுமல்லாமல், அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பார்கள்.
கிருஷ்ணர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறார். ஒரு உணர்வு மாற்றம் மட்டுமே நிகழ வேண்டும். அது இப்படித்தான்: ஒரு பிறவிக் குருடர், வெளிச்சம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறியமாட்டார். நிறங்களைப் பற்றியும் அறியமாட்டார். அவற்றை அவர் பார்த்ததேயில்லை, அவற்றைப் பற்றிய எந்த முன் அனுபவமும் அவருக்கில்லை. யாருமே வசிக்காத ஒரு பகுதியில் அவர் விடப்பட்டால், அவர் உலகமே இருட்டுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பார்.
ஆனால் வெளிச்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களிடையே அவர் வசிப்பதால், வெளிச்சம் என்று ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் அறிகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை சக்தியான சக்தி தூண்டிவிடப்பட்டால், தம் முன்னால் இருக்கும் எல்லாவற்றையும் பார்க்கிறார். ஒளியையும் நிறங்களையும் பார்த்து மகிழ்கிறார். பார்வை கிடைப்பதற்கு முன்னால், அவையெல்லாம் என்னவென்றே அவருக்குத் தெரியாது. இருப்பினும் பார்வை கிடைத்த உடனேயே அவற்றை அவரால் அனுபவித்து மகிழ முடியும்.
இந்த மாற்றம் நிச்சயம் நிகழ்ந்தாக வேண்டும் அவ்வளவுதான். ஜ்ஞாந குருமார்களுள் பலர், ஆன்மிகத்தைப் பற்றிய முன்னறிவைப் பெற்றிருக்கவில்லை. பெருங்காப்பியமான இராமாயணத்தை எழுதிய வால்மீகி என்னும் ஒரு ஜ்ஞாந குருவைப் பற்றிச் சொல்கிறேன்.
உணர்வு மாற்றம் மட்டுமே நிகழ வேண்டும்
ஜ்ஞாநமடைவதற்கு முன்னர் அவர் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத்தான் இருந்தார். காடுகளில் ஒளிந்திருப்பார். யாரேனும் செல்வந்தர்கள் அந்தக் காட்டைக் கடக்கும்பொழுது, அவர்களைக் கொன்று, அவர்கள் வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடித்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவரே, அந்தக் காட்டின் வழியாக வந்தார். நாரதர், மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவிடம் அளவு கடந்த பக்திகொண்டவர். அவரிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு தம்புராதான். அதைக்கொண்டு எப்பொழுதும் விஷ்ணு புகழைப் பற்றித்தான் பாடிக் கொண்டிருப்பார்.
வால்மீகி அவரை வழிமறித்து "உன்னிடமிருப்பதை எல்லாவற்றையும் என்னிடம் கொடு. இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்," என்றார்.
நாரதர் அவரிடம், "இந்தத் தம்புராவையும் கடவுள் நாமத்தையும் தவிர, உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறொன்றுமேயில்லையே," என்றார்.

நாரதர் பொய் சொல்கிறார் என வால்மீகி
நினைத்தார். "எப்படி ஒன்றுமில்லாமலிருக்க
முடியும்?" என்று நாரதரைக் கேட்டார்.
நாரதர் சிரித்துக்கொண்டே,
"மற்றவர்களிடமிருந்து பறித்தவற்றை
வைத்துக்கொண்டு நீயென்ன செய்வாய்?"
எனக் கேட்டார்.
"என்னுடைய குடும்பத்தினரைக் காப்பாற்றுவேன், என்னுடைய குழந்தைகள், மனைவி பெற்றோர் ஆகியோருக்காகத்தான் நான் இப்படிச் கொள்ளையடிக்கிறேன்,'' என்றார் வால்மீகி.
நாரதர், "நீ இதையெல்லாம் உன் பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்காகச் செய்கிறாய், சரி, அவர்களெல்லோரும் எப்பொழுதுமே உன்னோடுதான் இருக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டார்.
வால்மீகி “ஆம், நிச்சயமாக, அவர்கள் என்னோடுதான் இருக்கப் போகிறார்கள். நான் அவர்கள் உயிர்வாழ உணவைக் கொடுப்பேன், அவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பேன், அவர்கள் எப்பொழுதும் என்னோடுதான் இருக்கப் போகிறார்கள்," என்று பதிலுரைத்தார்.
நாரதர், வால்மீகியை
பேச்சிலேயே,
கலந்துரையாடலிலேயே
இருக்கச்செய்து,
வாழ்க்கையை வேறு
கோணத்தில் உற்றுநோக்க
வைத்தார்.
நாரதர், மறுபடியும் “அவர்கள் எப்பொழுதும்
உனக்காக, உன் பக்கம் இருப்பார்கள் என்று
உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?'' என்று
கேட்டார்.
நாரதர் இவ்வாறு மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைக் கேட்பது வால்மீகிக்கு எரிச்சலைத் தந்தது. “உனக்குப் புரியவில்லையா? அவர்கள் எப்பொழுதும் என்னோடுதான் இருக்கப் போகிறார்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருப்பது உன் காதில் விழவில்லையா?'' என்று கோபமாகக் கேட்டார்.
உண்மையில் நாரதர், அந்த மாதிரி கேள்விகளாகக் கேட்டு, நேரத்தைத்தான் கடத்திக் கொண்டிருந்தார். அவர் வால்மீகியைப் பேச்சிலேயே, கலந்துரையாடலிலேயே இருக்கச்செய்து, வாழ்க்கையை வேறு கோணத்தில் உற்றுநோக்க வைத்தார்.
கடைசியாக, நாரதர், “சரி, உன் குடும்பத்தார் உனக்குத் தங்கள் ஆதரவை எந்தச் சூழ்நிலையிலும் கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறாய். அவர்கள் உன்னுடனேயே இறுதிவரை இருப்பார்களா? நீ இறக்க நேரிட் டால், உன்னுடனேயே சாகச்சொன்னால், அவர்கள் சம்மதிப்பார்களா? அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா?'' என்று கேட்டார். வால்மீகி நம்பிக்கையோடு பதில் சொன்னார்: "ஆம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் கேட்டால் குறைந்தது அவர்களுள் ஒருவராவது என்னோடு வருவார்கள். நான் அவர்களைக் காப்பாற்றத்தான் கொள்ளையடிக்கிறேன். அவர்களும் நான் இந்த செல்வத்தைக் கொடுப்பதால்தான் உயிர் வாழ்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் கேட்டால் அவர்களும் என்னோடு சாவார்கள்!"
நாரதர் அதற்கு, "சரி அவர்கள் உனக்காக அதையும் செய்வார்கள் என்று நீ நினைத்தால், நீயே போய் இதைப் பற்றி அவர்களைக் கேள். பிறகு என்னிடம் வா. யாராவது ஒருவர் உன்னோடு வர ஒத்துக்கொண்டால்கூட, நீ என்னைக் கொல்லலாம். நான் எங்கும் போய் விடமாட்டேன். நான் இங்கேயே இருக்கிறேன்," என்று சொன்னார்.
வால்மீகியும் ஒத்துக்கொண்டு, வீட்டிற்குச் சென்றார். முதலில் தம் மனைவியை, தன்னோடு இறக்கத் தயாரா என்று கேட்டார். மனைவி உடனே அதற்கு, "நான் உங்களுடைய மறுபாதி என்பது உண்மைதான், அதற்காக உங்களுடனேயே என்னையும் இறக்கச் சொல்வது நியாயமாக எனக்குப் படவில்லை. இறப்பு என்று வரும்பொழுது, அது உங்களுடையது மட்டுமே," என்று பதில் சொன்னார்.
சில சமயங்களில்,
நிதர்சனம்கூட,
நமக்கு
வருத்தத்தைக்
கொடுக்கிறது!
வால்மீகி அதிர்ச்சி அடைந்தார். எப்படியோ, தம்முடைய குழந்தைகள் தம்மை மிகவும் நேசிப்பதால், அவர்களாவது தம்மோடு வருவார்கள் என்று நினைத்தார் அதனால் அவர்களைக் கேட்டார். அவர்கள், "அப்பா, நாங்கள் மிகவும் இளையவர்கள். நாங்கள் இன்னும் உலகத்தை அனுபவிக்கவே இல்லை. நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டீர்கள் உங்களோடு நாங்கள் எப்படிச் சாக முடியும்?" என்று கேட்டார்கள்.
வால்மீகி மிகவும் மனம் வருந்தினார். அவர் இறக்கும்பொழுது, மனைவியும் குழந்தைகளும் அவரோடு வர மறுத்ததால், தம் பெற்றோர்களாவது நிச்சயம் தம்மோடு வருவார்கள் என நினைத்தார். ஏனெனில் அவர்கள்தான், அவரை நன்கு கவனித்து அக்கறையுடன்
வளர்த்தவர்கள். அதனால் அவர்
அவர்களிடம் சென்று, அதே கேள்வியைக்
கேட்டார்.
ஆனால் அவர்களோ, "நாங்கள் ஏன்
உன்னோடு சாக வேண்டும்? நாங்கள்
எங்கள் பேரக் குழந்தைகளோடு எங்கள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம். உன்னோடு நாங்கள்
ஏன் சாக வேண்டும்?" என்று கேட்டனர்.
பெற்றோர்கள் இப்படிக் கேட்டதுதான் அவரை அதிகம் அதிர்ச்சியடைய வைத்தது.
அவர் நாரதரிடம் திரும்பிச் சென்று, நடந்தவற்றை முழுவதுமாகக் கூறினார். அவற்றைக் கேட்ட நாரதர், "உன்னோடு எப்பொழுதும் இருக்கக் கூடிய ஒரே ஒருவர் இருக்கிறார், கடவுளே அவர்!" என்று சொன்னார்.
இந்தக் கூற்று, வால்மீகியின் முழு வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அவர், தாம் செய்து கொண்டிருப்பது எதுவுமே பயனற்றது என்று உணர்ந்தார்.
பிறகு நாரதர் அவருக்கு, இராம நாமத்தை தீக்ஷையாகக் கொடுத்தார். அவர் அந்தக் காட்டிலே அமர்ந்து தீவிரமாக தியானத்தில் ஆழ்ந்து விட்டார். பல காலமாக அப்படியே அமர்ந்திருந்ததில், அவர் மேலேயே ஒரு எறும்புப் புற்று அமைந்தது. இப்படித்தான் அவர் 'வால்மீகி' என்றழைக்கப்பட்டார். வால்மீகி என்றால் 'எறும்புப் புற்றிலிருந்து தோன்றியது' என்று பொருள்.
அவர் தியானத்திலிருந்து வெளிவந்தபொழுது, ஒரு ஜ்ஞான குருவாக மலர்ந்திருந்தார்.
நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயமென்னவென்றால், ஒருவருக்கு ஆன்மிக அறிவு இருப்பதாலேயே, அவர் உண்மையிலேயே, ஒரு தேடல் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. நான் பலரையும் பார்த்திருக்கிறேன், அவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு, அவசியமே இல்லாத நேரத்தில்கூட, ஆன்மிகத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களுக்கு பெரிய ஆன்மிக அறிவு இருப்பதாக நினைத்து, தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் அவர்களுக்கு இருப்பது தர்க்க அறிவு மட்டுமே, பட்டறிவு மட்டுமே, ஆன்மிக அறிவு அல்ல. அவர்கள் பேசும்பொழுது, சுய அனுபவத்திலிருந்து பேசுவதில்லை. இதுதான், ஒரு ஜ்ஞான குருவுக்கும், ஒரு சாதாரண மனிதருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம்.
ஒரு ஜ்ஞான குரு ஆன்மிகத்தைப் பற்றிப் பேசும்பொழுது, அவர் தம்முடைய உண்மை அனுபவத்திலிருந்து பேசுகிறார். அவர் ஸத்யத்தை உணர்ந்து அனுபவம் பெற்றிருக்கிறார்.
சராசரி மனிதருக்கு, அவருடைய அஹங்காரம்தான் பேசுகிறது. 'ஆன்மிக அறிவு' என்று சொல்லிக்கொள்ளும் அவருடைய அந்த அறிவு, அஹங்காரத்திலிருந்து வருகிறது, பட்டறிவிலிருந்து வருகிறது.
தயாரானால் போதும், தகுதியானவராக்குவேன்
மக்கள் என்னைக் கேட்பதுண்டு, "ஸ்வாமி, நான் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் இந்தப் பயிற்சிக்குத் தகுதியுள்ளவன் தானா?"
அப்பொழுது நான் அவர்களுக்குச்
சொல்லும் பதில் இதுதான்: "நீங்கள்
திடமாகவும், பெற்றுக்கொள்வதற்கான
தயார் நிலையிலும் இருந்தீர்களானால் நான்
உங்களைத் தகுதியானவராக்குகிறேன்."
இந்த ஒன்றே ஒன்றுதான் முன் தேவை:
நீங்கள் திடமாகவும், தயார் நிலையிலும்
இருந்தீர்களானால், இறுதி ஸத்யத்தை
அடைவதற்கு நீங்கள் தகுதியானவர்தான்.
இரண்டே இரண்டு தகுதிகள்தான்

தேவை. ஒன்று, திடமாக சமநிலையோடு
இருங்கள்; இரண்டு, திறந்த மனத்தினராக,
அணுகக்கூடியவராக இருங்கள்.
முதலில் நீங்கள் திடமாக இருக்க வேண்டும்.
நீங்கள் அமைதியற்று இருந்தால், உங்கள்
மனம் குரங்கு போல இங்குமங்கும் தாவிக்
கொண்டிருந்தால், உங்கள் பாதையில்
கவனம் செலுத்த முடியாது. உங்களுடன்
நீங்களே அமர்ந்து, உங்களுக்காக நீங்களே,
உங்களுடைய நேரத்தைச் செலவிட
முடியாது. தேவையான முதல் விஷயமே
திடம்தான்.
நீங்கள்,
உடலாலும்
மனத்தாலும்
இருப்பினாலும்
குருவோடு
இருக்க வேண்டும்.
அடுத்தது, நீங்கள் திறந்த மனத்தினராக, அணுகக்கூடியவராக இருக்க வேண்டும். இது, நீங்கள் அங்கு உடலளவில் மட்டும் இருந்தால் போதும் என்று அர்த்தம் அல்ல. நீங்கள், உடலாலும் மனத்தாலும் இருப்பினாலும் அங்கு இருக்க வேண்டும். நீங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைத் திறந்து வைக்க வேண்டும்.
ஆன்மிகத்தைப் பற்றி எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் என்னுடைய பயிற்சி வகுப்பிற்கு வரும்பொழுது பல கேள்விகளைக் கேட்கின்றனர். ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கின்றனர் என்பதும் எனக்குத் தெரிந்துவிடும். அவர்களுடைய கோப்பை ஏற்கெனவே நிறைந்திருக்கிறது. வேறு புதியவை உள்ளே நுழைவதற்கு அங்கே இடமே இல்லை. அவர்கள் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை.
உண்மையில் ஆன்மிகத்தைப் பற்றி ஏதும் தெரியாமல் இருப்பதே, மிக நல்லது, மிக எளிது. பின்பு அவர்கள், குருவிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளை, உடனே பிடித்துக்கொள்கிறார்கள். இதுவே சிறந்தது, ஏனெனில், அப்பொழுதுதான் குப்பையை அகற்றும் வேலை இருக்காது.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். நீங்கள் ஆன்மிகம் என்னும் பாதையில் அடியெடுத்து வைக்க, முன்னறிவு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. யாராவது ஒருவர் உங்களுக்கு அதைப் பற்றிச் சொன்னவுடன், நீங்கள் உடனே அந்தப் பாதையைப் பின்பற்றினால், அது போதும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். எதையும் குருட்டுத்தனமாகச் செய்யாதீர்கள். இதற்கு முந்தைய ஸ்லோகத்தில், நாம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். நமது பாதை எதுவென்று தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
நாம் நினைப்பதுபோல், ‘நாம் சாதாரணமானவர்கள்’ அல்ல
நீங்கள் பார்ப்பது எதுவானாலும், அது, பொருள் மற்றும் சக்தியும் சேர்ந்திருக்கிற ஒரு சேர்க்கைதான். இந்த முழுப் பிரபஞ்சமும் க்ஷேத்ர மற்றும் க்ஷேத்ரஜ்ஞனாகவும், மாயா மற்றும் ஆத்மனாகவும், ப்ரக்ருதி மற்றும் புருஷனாகவும், பொருள் மற்றும் சக்தியாகவும், உடல்-மன அமைப்பு மற்றும் விழிப்புணர்வாகவும் அறியப்படுகிறது.
‘இருப்பது’ அனைத்துமே, நாம் நினைப்பதுபோல், இந்த இரண்டில் ஒன்றினால் மட்டுமே ஆனது அல்ல; இவ்விரண்டின் சேர்க்கையே!
நாம் பார்ப்பது வெறும் பொருள்தான் என்று நாம் நம்பினால், அது வெறும் மாயைதான். ‘நாம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமது உடலானது க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞ இந்த இரண்டினுடைய சேர்க்கைதான். விழிப்புணர்வு இல்லையென்றால், இந்த உடல் பயனற்றதாகிவிடும். நாம் உடல் என்று அழைக்கும் இந்தப் பொருளானது, விழிப்புணர்வால்தான் உயிர் வாழ்கிறது. இந்த இரண்டுமே இருந்தாக வேண்டும்.

ப்ரக்ருதி என்பது வெளிப்படுவது, புருஷ
என்பது வெளிப்படாதது. ப்ரக்ருதி என்பது
நாம் பார்க்கக் கூடிய வெளிப்பாடு. நாம்
பார்க்கும் இந்த வெளிப்பாட்டிற்குப்
பின்னால் வேறொன்றும் இருக்கிறது.
அதுவே புருஷ அல்லது வெளிப்படாதது,
அதாவது பொருளின் பின்னால் உள்ள
நம்மால் பார்க்க முடியாத சக்தி!
நாம் முந்தைய ஸ்லோகங்களில்,
இலட்சக்கணக்கான நட்சத்திரங்கள்,
கிரகங்கள், மற்றும் விண்வெளிப்
பொருட்கள் எல்லாமே வெகுதுல்லியமான கதியில் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதையும், அங்கு, இது போன்ற எண்ணற்ற பால்வெளிகள் இருக்கின்றன என்பதையும் பார்த்தோம்.
அவை எல்லாமே, எல்லையே இல்லாத வெளியில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை எப்படி இத்தனை ஒழுங்கோடு ஓடிக் கொண்டிருக்கின்றன? நம்முடைய சூரிய மண்டலத்தைப் பாருங்கள், எல்லாக் கோள்களும் சீரான பாதையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாம், அவற்றைப் பாறைகள், தூசுகள், அல்லது பனிப்படலங்கள் என்று நினைத்தால், அவை வெறும் பொருள்தான் என்று நினைத்தால், அங்கு எப்படி இம்மாதிரி ஒரு ஒழுங்குமுறை இருக்க முடியும்?

அவை பொருள் மட்டுமே அல்ல. அந்தப் பொருட்களின் இருப்பின் பின்னால், வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அங்கு, பல குழப்பங்கள் உள்ளன. இருந்தாலும், அந்தக் குழப்பங்களின் நடுவே ஒரு அழகான ஒழுங்குமுறை உள்ளது. அந்த ஒழுங்கு முறைக்குக் காரணம், க்ஷேத்ரஜ்ஞன்.
அது, ஒரு பொருள் மட்டுமாகவே இருந்தால் அல்லது க்ஷேத்ரம் மட்டுமாகவே இருந்தால், இந்தப் புத்திசாலித்தனம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் அந்தப் பொருளுள் ஒரு புத்திசாலித்தனம் அமைந்துள்ளது. அந்தப் புத்திசாலித்தனம் அல்லது விழிப்புணர்வுதான், அந்த ‘இருப்பை’ உருவாக்குகிறது. அதனால் க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றின் சேர்க்கை அவசியமாகிறது.
நவீன விஞ்ஞானம், பொருளும் சக்தியும் ஒன்றேதான் என்றும், அவை ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளத் தக்கவைதான் என்றும் நிரூபித்துள்ளது. ஆனால் நம் உள்ளுலக விஞ்ஞானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இதை நிரூபித்துவிட்டனர்.
‘இருப்பை’ உருவாக்குவதற்காகவே, பொருளும் சக்தியும் ஒன்றாக இணைகின்றன. நமது உடம்பின் ஒவ்வொரு அணுவும் எவ்வாறு புத்திசாலித்தனத்தைப் பெற்றிருக்கிறது என்று நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். விஞ்ஞானம், நமது மனித உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் புத்திசாலித்தனம் பொதிந்துள்ளது என்று நிரூபித்திருக்கிறது. ஒவ்வொரு அணுவும், வெறும் சில வேதியப் பொருட்களால் மட்டும் ஆனது அல்ல; அது, புத்தி அல்லது சக்தியையும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஒருங்கிணைப்புதான், உடல்-மன அமைப்பை உருவாக்குகிறது.
மாயையை விட்டு நிஜத்தை விரும்பினால் வாழ்வே இனித்திடும்
நாம் இன்னும் ஆழமான நிலையில் ஆராய்ந்து பார்த்து, க்ஷேத்ரமும் க்ஷேத்ரஜ்ஞனும் தனித்தனியான அமைப்புகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
க்ஷேத்ரமும் க்ஷேத்ரஜ்ஞனும் ஒரே மூலத்தைக் கொண்டவைதான். க்ஷேத்ரம் என்பது சக்தியின் ஸ்தூல வடிவம், அதே சக்தியின் ஸூக்ஷ்ம வடிவம் க்ஷேத்ரஜ்ஞன்.
க்ஷேத்ரஜ்ஞனின் 'இருப்பு' நிகழ்வதற்கு, ஸூக்ஷ்ம அமைப்பும் ஸ்தூல அமைப்பும், அங்கே இருந்தாக வேண்டும்.
நம்மைச் சுற்றியிருப்பவற்றை, நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதே நம் வாழ்க்கை முறையை நிச்சயிக்கிறது.
> ஒவ்வொரு அணுவும்,
> வெறும் சில
> வேதியப் பொருட்களால்
> மட்டும் ஆனது அல்ல;
> அது,
> சக்தியையும் உள்ளடக்கி
> இருக்கிறது.
நாம் எல்லாவற்றையுமே பொருளாக
மட்டுமே பார்க்கிறோம். நாம் இந்த ஸ்தூல
நிலையை மட்டுமே பார்க்கும்பொழுதுதான்
பயமும் பேராசையும் நமக்குள்
புகுந்துகொள்கின்றன.
மேலும் நாம், இந்தப் பொருளைத்தான்
மேலும் மேலும் பெற விழைகிறோம். நாம்
பார்ப்பதெல்லாம் பொருள்தான் என்று நாம்
நினைக்கும்பொழுது, நாம் பொருளுலக
வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். நாம்
க்ஷேத்ரா நிலையில் வாழும்பொழுது, நாம்
மாயையில்தான் வாழ்கிறோம். அதுதான் பிரச்சினையே.
நாம் இந்த மாயையில் வாழும்பொழுது, நாம் நம்மை, இந்தப் பொருள் உலகத்தை அடிப்படையாக வைத்துத்தான் வரையறுத்துக் கொள்கிறோம். இதன் காரணமாகவே நாம், இந்தப் பொருளின் பின்னால் ஓடி, ஓடி, அதைச் சேகரிக்கத் தொடங்குகிறோம்.
நாம் இந்தப் பொருளை நம் உடைமையாக்கிக்கொள்ள விழைகிறோம். ஆனால் இதுவே சக்தியும்கூட என்று அறிந்துகொள்ளும்பொழுது, 'சக்தியை எப்படி நம் உடைமையாக்கிக்கொள்ள முடியும்? அதை சொந்தமாக்கி நம்மிடமே பிடித்து வைத்துக்கொள்ள முடியுமா?' என்று நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.
'இல்லை, நாம், சக்தியை ஒரு பைக்குள் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது' என்ற இந்தப் புரிதல் நிகழும்பொழுது, விஷயங்களை வெறும் 'பொருளாக' மட்டுமே கருதிக்கொண்டு, அவற்றின் பின்னால் ஓடுவது வீணே என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
