நாம் பிரஹ்மம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறாரோ, அந்தத் தனிப்பட்ட ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்துகொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.
ஒருவர் மனத்தால் இழிவுபடுத்தப்படாமலோ அல்லது தூண்டப்படாமலோ இருக்கும்பொழுதும், அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்திலும் ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை பார்க்க முடியும்பொழுதும் அவர் மனம் கடந்தநிலையை அடைகிறார்.
பொருட்களினால், பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை என பார்க்கமுடிந்த ஒருவர்தான் உண்மையில் பார்க்கிறார்.
எல்லா உயிர்களிடத்தும் ஒப்புயர்வற்ற ஆத்மாவைக் காண முடிந்த ஒருவர், உயிர்களிடத்தே வேற்றுமை காணும் தன்மையை விட்டுவிடுகிறார். அவர், இந்த முழுப் பிரபஞ்சமும் அந்த ஒரே ஸத்யத்தின் விரிவாக்கமும் வெளிப்பாடும்தான் என்பதைப் பார்க்கிறார்.
நீங்களும் பிரஹ்மம், நானும் பிரஹ்மம்
"தன்னை உணர்ந்துகொண்ட ஒருவர் அதாவது மேலான விழிப்புணர்வை அடைந்த ஒருவர், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் மேலான பரமாத்மாவின் ஸாந்நித்யத்தை, இருப்பைப் பார்க்கிறார். பரமாத்மாவை அழிக்கப்பட முடியாததாகவும், ஆரம்பமே இல்லாததாகவும், ஸாக்ஷியான விழிப்புணர்வாகவும் அவர் உணர்கிறார்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் காணும் இந்தப் பிரபஞ்ச இருப்பு, தனிப்பட்ட அடையாளங்களால் ஆனது அல்ல. நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று, நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், நாம் அனைவரும் ஒன்றே. கிருஷ்ணர் சொல்லும் பிரபஞ்ச இருப்பு, நம் எல்லோருள்ளும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கிறது.
'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் இங்கு வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிக்கவே நான் இங்கு இருக்கிறேன்! - என்று நான் சொல்வதுண்டு.
> நீங்கள் பாவங்கள் செய்திருக்கின்றீர்கள் என்பதினால், 'நீங்கள் கடவுள் இல்லை' என்று ஆகிவிடமுடியாது.
இதுதான் உண்மை. நான் இதைச் சொல்லும்பொழுது, மக்கள், "இல்லை, இல்லை ஸ்வாமி. நாங்கள் எப்படி கடவுளாக முடியும்? நாங்கள் நிறைய பாவங்கள் செய்தவர்கள். நீங்கள் கடவுள், ஏனெனில் உங்களுக்கு வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. ஆனால் நாங்கள் எப்படிப் கடவுளாக இருக்க முடியும்?" என்று கேட்கிறார்கள்.
ஆழ்ந்து ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பாவங்கள் செய்திருக்கின்றீர்கள்
என்பதினால், 'நீங்கள் கடவுள் இல்லை' என்று
ஆகிவிட முடியாது. புரிந்துகொள்ளுங்கள்,
நீங்கள் ஒரு பாவத்தை செய்ததாலேயே,
நீங்கள் பேய், பிசாசு ஆகிவிடமாட்டீர்கள்.
நீங்கள் இன்னமும் கடவுள்தான். நீங்கள்
கடவுளாயிருப்பதற்கு, உங்கள் பாவங்கள்,
உங்களைத் தகுதியானவராகவோ அல்லது
தகுதியற்றவராகவோ செய்துவிட முடியாது.
நாமேதான்
கடவுளுக்கும் நமக்கும்
நடுவில் ஒரு தடையை
உண்டுபண்ணிக்
கொள்கிறோம்.
'கடவுள் தன்மை'தான் உங்கள் இயற்கையான பண்பு. 'பாவம்' என்பது சமூகத்தால் மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு கருத்துதான். கோவிலில் பணியாற்றும் ஒரு அர்ச்சகரின் ஆத்மாவுக்கும், ஒருகொள்ளையனின் ஆத்மாவுக்கும் ஸத்யத்தை அடைவதற்கு ஒரே மாதிரியான தகுதிதான் இருக்கிறது.
நாமேதான் கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு தடையை உண்டுபண்ணிக்கொள்கிறோம். கடவுள் எனப்படுபவர், நமக்குள்ளேயும் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு, நாம் தயாராயில்லை. நம்முன் நிற்கும் யாரோ ஒருவரைக் 'கடவுள்' என்று ஒத்துக்கொள்கிறோம், எனினும் அதே கடவுள்தான் நம்முள்ளும் இருக்கிறார் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
நம்மை நாமே கடவுள் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், சமூகத்திற்கு நம்மைக் கட்டுப்படுத்துவதற்குக் கடினமாகிவிடும்!
என்னுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினேழாவது வயதில், எனக்கென்று எவ்வித உடைமையும் எடுத்துக்கொள்ளாமல், வீட்டைவிட்டு வெளியேறினேன்.
இந்தியாவில் வடக்கு நோக்கிப் பயணம் செய்தேன். நான் பணம், காசு எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உறுதி கொண்டிருந்திருந்ததால், டிக்கெட் இல்லாமல்தான் ரயில்களில் பயணம் செய்தேன். இந்தியாவின் வட பகுதியில், என்னுடைய காவி உடைதான் என்னுடைய இலவச
பயணங்களுக்கு ஒரு பயணச்சீட்டாக
இருந்தது. யாரும் என்னைத் தொந்தரவே
செய்யவில்லை.
எனினும் ஒருதடவை கொல்கத்தா நோக்கிப் பயணஞ்செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு டிக்கெட் பரிசோதகர் என்னுடைய பயணச்சீட்டைக் கேட்டார். நான் தப்பும் தவறுமாக, வங்காள மொழியையும் இந்தியையும் கலந்து அவருக்குப் பதில் சொன்னேன்: "என்ன டிக்கெட்? நான் ப்றஹ்மம், இந்த ரயில் ப்றஹ்மம், நீயும் ப்றஹ்மம், ஏன் டிக்கெட்?"
அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். டிக்கெட் இல்லாமலேயே தொடர்ந்து என்னைப் பயணம் செய்ய அனுமதித்ததுமல்லாமல், அவரே எனக்கு உணவும் வாங்கிக் கொடுத்தார்!
ஆம், நாம் எல்லோரும் ப்றஹ்மம். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்விக சக்தி, எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரே பிரச்சினை என்னவென்றால், நாம் அதைப் பார்ப்பதில்லை. நாம் ஒரு சமயத்தில் ஒன்றைத்தான் பார்க்கிறோம். நாம் கடவுளை, வேறு யாரோ ஒருவராகவும், சக்திமிகுந்தவராகவும் பார்க்கிறோம். நாமே கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிக்கொள்கிறோம்.
இறைவனோடு தொடர்புகொள்ள உதவும் கருவி, விக்ரஹம்
மேலைநாட்டு மக்கள், இந்துக்களை, 'விக்ரஹ வழிபாட்டுக்காரர்கள்' என்று அழைக்கிறார்கள். அவர்கள் அதைக் கேலி செய்கிறார்கள். உண்மையில், நம் இந்திய நாட்டிலேயே விக்ரஹ வழிபாட்டைக் கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாப் பட்டறிவாளர்களும் விஞ்ஞானிகளும் விக்ரஹங்களை வழிபடுபவர்களைக் கீழ்த்தரமாகத்தான் பார்க்கிறார்கள்.
சில புதிய வேதாந்திகள், வேதாந்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனாலும் விக்ரஹ வழிபாட்டை, அறிவியல் முறையில்லாதது என்று கருதுகிறார்கள். ஹோமங்களைப் பற்றியும் அபிஷேகங்களைப் பற்றியும் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.
நாம் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம் முன்னால் இருக்கும் விக்ரஹங்களுக்கும் மேலானதாக ஒன்று இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் வழிபடும்பொழுது, நாம் விக்ரஹங்களை மட்டும் வழிபடுவதில்லை; அந்த விக்ரஹங்களின் 'மூலமாக' வழிபடுகிறோம். விக்ரஹங்களுக்கு அப்பால் இருக்கும் மேலான சக்தியை உணர்ந்து, அந்தச் சக்தியை வழிபட்டால், நம் வழிபாட்டில் அர்த்தம்
நாம் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம் முன்னால் இருக்கும் விக்ரஹங்களுக்கும் மேலானதாக ஒன்று இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளது. அதுவே விஞ்ஞானமும்கூட. நாம், கல்லின் பின்னாலுள்ள சக்தியை வழிபடாமல், குருட்டுத்தனமாக, கல்லை மட்டும் வழிபட்டால் அதில் அர்த்தமே இல்லை.
நான் உங்களை ஒன்று கேட்கின்றேன், நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்ட பின்பு, நமக்குள்ளிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியதாக உணர்கிறோம், அது ஏன்?
பிரார்த்தனைகளுக்குப் பிறகு கோயிலிலிருந்து வெளியே வரும்பொழுது, ஒரு மனத்திருப்தியை உணர்கிறோமே, அது ஏன்?
நம் மனது மிகவும் லேசாகிவிட்டது போல உணர்கிறோம் அது ஏன்?
நாம் விக்ரஹத்துக்கு அப்பாலுள்ள சக்தியை உணர்ந்து, அந்தச் சக்தியை வழிபடும்பொழுது, நாம் அந்தச் சக்தியோடு தொடர்புகொள்கிறோம்.
'நாம் அந்தச் சக்தியோடு தொடர்புகொள்கிறோம்' என்று நான் சொல்லும்பொழுது, நமக்குள் இருக்கும் ஆத்மாவுக்கு, அந்த மேலான பரமாத்மாவுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொடுக்கிறோம் என்பதையே தெளிவுபடுத்துகிறேன். இந்தக் குறுகிய நேரத் தொடர்பு, நமக்கிருக்கும் பொறுப்புகளின் சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது. நாம் அந்த விக்ரஹத்தினுள் பிரபஞ்ச சக்தியைக் கண்டு, பிரார்த்தனை என்னும் உருவில், நம் பிரச்சினைகளைக் கொட்டிவிடுகிறோம்.
நாம் பரமாத்மாவிடம் முழு நம்பிக்கை வைத்திருப்பதால், நமக்குள் ஒரு ஆழமான நிம்மதியை உணருகிறோம். அந்தப் பரமாத்மா நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்று முழுநம்பிக்கை கொள்கிறோம்.
நாம் அந்தப் பரமாத்மாவை நம்புகிறோம், ஆனால் நமக்குள் இருக்கும் ஆத்மாவும், அந்தப் பரமாத்மாதான் என்பதை நாம் நம்புவதில்லை. நம்மால் அந்த ஸத்யத்தை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை.
கிருஷ்ணர், 'நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவும், மற்றவர்களுக்குள் இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாதான்' என்று சொல்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நாம் நம்முடைய ஆத்மாவை தனிப்படுத்தி விடுகிறோம்.
நாம் நம்முடைய ஆத்மாவுக்கு ஒரு எல்லை வகுத்து, பரமாத்மாவிடமிருந்து பிரித்துவிடுகிறோம். இது இப்படித்தான் இருக்கிறது: தண்ணீர் நிரப்பப்பட்ட பத்துப்பானைகள் இருக்கின்றன. அந்தப் பத்துப்பானைகளிலும் சூரியன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பானையுமே, அந்தச் சூரியனைத் தானே பிடித்து வைத்திருப்பதாக நினைத்துக்கொள்கிறது. அந்தப் பத்துப்பானைகளுமே, தாங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சூரியனைப் பிடித்து வைத்திருப்பதாக நினைத்துக்கொள்கின்றன.
> நாம்
> அந்தப் பரமாத்மாவை
> நம்புகிறோம்,
> ஆனால் நமக்குள் இருக்கும்
> ஆத்மாவும்,
> அந்தப் பரமாத்மாதான்
> என்பதை நாம்
> நம்புவதில்லை.
அதைப் போலவே நாமும், நமக்குள்
இருக்கும் ஆத்மா, வெளியிலிருக்கும்
ஆத்மாக்களிலிருந்து வேறுபட்டது என்று
நினைத்துக்கொள்கிறோம். நாம் அதே
ஆத்மாவை, எல்லா இடங்களிலும்,
எல்லாவற்றிலும் பார்க்கும்பொழுது,
அந்த எல்லாப் பானைகளையும் உடைத்து
விடும்பாழுது, பரமாத்மா என்பது என்ன
என்பதைப் பார்க்கிறோம்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வெகு அழகாகச் சொல்கிறார், 'பிண்டாண்டத்தில் என்ன இருக்கிறதோ, அதுவேதான் பிரம்மாண்டத்திலும் இருக்கிறது''.
பிண்டாண்டத்தில் அல்லது ஸ்தூலபொருளில்
இருக்கும் அதே சக்தி, பிரம்மாண்டம்
அல்லது நாம் புரிந்துகொள்ள முடியாத
ஸூக்ஷ்மமான பொருளிலும் இருக்கிறது. நாம்,
நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலுமே
இந்தச் சக்தியை பார்க்கும்பொழுதே,
நாம் உண்மையிலேயே 'பார்க்கிறோம்'
என்கிறார், கிருஷ்ணர்!
"நமக்குள்ளும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உறையும் ஆத்மாவானது அழிக்கப்பட முடியாதது என்பதை நாம் பார்க்கும்பொழுதே, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்,'' என்கிறார், கிருஷ்ணர்.
எப்பொழுதுமே இருப்பது ஒன்றே ஒன்றுதான், அது ஆத்மா! நாம் இதәп் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற ஒவ்வொன்றும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும்.
இந்த ஆத்மா ஒன்றே அழிவில்லாதது என்ற இந்த ஸத்யத்தை நாம் அறியும்பொழுது, மேலும் மேலும் பொருள் சேகரிக்க ஓடும் நம்முடைய எல்லா ஓட்டமும்கூட வீணே என்பதைப் புரிந்துகொள்வோம். எப்படியாயினும் நம்மோடு என்றென்றும் இருக்க முடியாத பொருள்களின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதைப் புரிந்துகொள்வோம்.
இதை உணரும்பொழுது, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்.
மனத்தடை நீங்கினால் வாழ்வின் எல்லாத் தடைகளும் தகர்ந்துவிடும்
இறுதி இலக்கை அடையும் பாதையில் இருக்கும் ஒரே தடை, மனம்தான்!
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில், கிருஷ்ணர், நாம் ஸத்யத்தை எப்படிப் பார்க்க முடியும் என்பதைச் சொன்னார். இங்குக் கிருஷ்ணர், நாம் தாண்ட வேண்டிய தடையைப் பற்றிப் பேசுகிறார். நம் மனம், நம்மைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டாதபொழுது, நாம் மனத்தால் ஆளப்படாதபொழுது, பரமாத்மாவை ஒவ்வொன்றிலும் காணலாம். நம்மால் அப்படிச் செய்ய முடியும்பொழுதுதான், நாம் அந்த இறுதி இலக்கை அடைய முடியும்.
ஸத்யத்தைப்பார்க்கவொட்டாமல் நம்மைத் தடுப்பது, நம்முடைய மனமே.
நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் ஆத்மாவும், அதே பரமாத்மாவின் பிரதிபலிப்புதான் என்று நான் சொன்னாலும்கூட, உங்கள் மனம் ஒப்புக்கொள்ளாது. 'அதை நம்ப வேண்டாம்' என்றுதான் உங்களுக்கு அறிவுறுத்தும்.
முடிவுகளை எடுக்கும் பாதையில் மனம் குறுக்கே வரும்வரை, நாம் சரியான காட்சியைக் பார்க்க மாட்டோம்.
நீங்கள் முதலில், 'மனம்' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் வெறுமனே அமர்ந்திருக்கும் நேரத்தில், ''என்ன விஷயம்?'' என்று நாம் கேட்டால், அவர்கள் சொல்வதெல்லாம் மனம் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும். சிலர், ''எனக்கு மனசு சரியில்லை,'' என்று சொல்வார்கள் சிலர், ''ஓ, உள்ளே என்னென்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது, அதை நினைத்தாலே மிகவும் பாரமாக இருக்கிறது,'' என்று சொல்வார்கள்.
நாம் மனத்தைப் பற்றிப் பேசும்பொழுது, ''இது நிறைய நினைக்கிறது,'' என்று, அதை நம்மிலிருந்து ஒரு தனித்த பொருளாகத்தான் பேசுவோம்.
| | |---| | மனம், கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட, சீரான அமைப்புகொண்ட ஒரு கருவி. |
நாம், மனம் என்றால் என்ன என்று
புரிந்துகொள்வதில்லை, ஆனாலும் அதைப்
பற்றிப் பேச ஆரம்பிப்போம்.
உண்மையில் 'மனம்' என்றால் என்ன?
அது, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட,
சீரான அமைப்புகொண்ட ஒரு கருவி.
மனம், மனிதனுடைய வேலையாள்.
அவனுடைய தேவைகளையும்
அடிப்படைகளையும் பூர்த்திசெய்வதற்கு
உதவிசெய்கிறது. இதன் மூலம் அவன்,
ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு உறுதிசெய்கிறது.
இப்பொழுது இந்தப் பிரச்சினைகளுக்குக்
காரணம், மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள்
இருக்க வேண்டிய மனம், அவனையே
கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாக
ஆகிவிட்டது.
ஒரு வேலையாள், முதலாளியைப்போல் நடந்துகொண்டால் என்ன ஆகும்?
ஒரு பக்குவப்படாத வேலையாள், முதலாளியாக ஆகும்பொழுது, அது ஒரு குரங்கைப் பிடித்து சிம்மாசனத்தில் அமரவைத்தது போலத்தான் இருக்கும். அதனால்தான் ஜ்ஞான குருமார்கள், மனத்தை ‘குரங்கு மனம்’ என்று ஒரு குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள். அந்தக்க் குரங்கை, சிம்மாச னத்திலிருந்து துரத்தும்வரை, பிரச்சினைகளும் கவலைகளும் நிச்சயம் இருக்கும்.
> யோக ஸூத்ரங்களில்
> அடங்கியுள்ள
> ஜ்ஞானக் கருத்துக்கள்,
> இன்றைய தலைமுறைக்கு
> மட்டுமல்ல,
> எதிர்கால தலைமுறைக்கும்
> பொருத்தமுள்ளவையாக
> இருக்கின்றன.
ஸத்யத்தை உணரத் தடைசெய்யும் ‘அவித்யாவின் நான்கு கிளைகள்’
இங்குக் கிருஷ்ணர், நம் மனத்தால், எப்படி நம் புலனுணர்வைத் தூண்டிவிடவோ அல்லது இழிவுபடுத்தவோ முடியும் என்பதை விளக்குகிறார்.
யோக ஸூத்ரங்களில், பதஞ்சலி முனிவர் மனத்தைப் பற்றியும் புலனுணர்தலைப் பற்றியும் எழுதுகிறார். யோக ஸூத்ரங்கள், மிகத் தெளிவோடு எழுதப்பட்ட ஒரு அற்புத புத்தகமாகும். இந்தப் புத்தகத்திலுள்ள ஜ்ஞானக் கருத்துகள் அடங்கிய ஸூத்ரங்கள், இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்கும் பொருத்தமுள்ளவையாக இருக்கின்றன.
பதஞ்சலி, நம் மனம், தவறான அறிதலாலும், தவறான புரிதலாலும் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்.
| நம் மனமானது, தான் தீர்மானிப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் பயன்படுத்தும் அவித்ய - தவறான புரிதலைப் பற்றி, பதஞ்சலி விளக்குகிறார். நம் மனம், இந்த அவித்ய - தவறான புரிதலை அடிப்படையாக வைத்தே, தன் தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்கிறது என்று சொல்கிறார். | அஹங்காரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தீர்மானம், ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கும்! |
நாம் பார்க்கும் ஒன்றைப் பற்றிய அல்லது உணரும் ஒன்றைப் பற்றிய புரிதல் என்பது, இந்தத் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அவித்ய, நான்கு கிளைகளைக் கொண்டிருக்கிறது. முதல் கிளை, அஸ்மித - 'நான் எப்பொழுதுமே மற்றவர்களைவிட உயர்ந்தவன்' என்கிற அஹங்காரம்.
நம் மனம், அஹங்காரத்தை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுத்தாலோ அல்லது 'நான்' என்பதைப் பற்றி மட்டுமே அது நினைத்தாலோ, நம்முடைய எல்லாத் தீர்மானங்களும் ஒருதலைப்பட்சமானவையாகவே இருக்கும்; நாம் முழுமையான காட்சியைக் காணமாட்டோம்.
அடுத்த கிளை, ராக - பற்றுதல். இந்தக் கிளை வளர, நமது கடந்தகால அனுபவங்களும் தேவைப்படுகின்றன. நமது கடந்தகால அனுபவம் சிறப்பானதாக இருந்தால், அதே அனுபவத்தை, நம் மனம் மீண்டும் மீண்டும் விரும்பும். அது நமக்குத் தேவையில்லாத ஒரு விஷயமாக இருந்தாலும்கூட, நம் மனம் மேலும் மேலும் அதையே கேட்கும்!
உதாரணத்திற்கு, வயிற்றில் இனி இடமே இல்லை என்னுமளவுக்கு, அப்பொழுதுதான் உணவுண்டு முடித்திருப்போம். எனினும், பத்து நாட்களுக்கு முன் ருசித்த, ஏதோ புதுவகையான இனிப்பின் ஞாபகம் வந்துவிட்டால், உடனே நம் மனம், "அதை முன்பு மிகவும் ருசித்து மகிழ்ந்தேன், எனக்கு இப்பொழுது அது வேண்டும். அதை எனக்குக் கொடு," என்று கேட்கும். இதுவே மனத்தின் விளையாட்டு. கடந்தகால அனுபவத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, மனம் இப்பொழுதும், அதையே மேலும் மேலும் அடைய விரும்புகிறது.
மூன்றாவது கிளை, த்வேஷம் - வெறுப்பு. இது ராக என்பதின் எதிர்ச்சொல். கடந்தகால அனுபவத்தை அடிப்படையாக வைத்து, இப்பொழுதும் அதே அனுபவத்தை வெறுப்பது.
நாம் கடந்தகாலத்தில், ஏதோ ஒரு அனுபவத்தை விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதையே மறுபடியும் இப்பொழுது பார்க்கும்பொழுது, உடனே நம் மனம், 'கடந்த முறை இது எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இதனுடனான என்னுடைய அனுபவம் இனிமையானதாக இல்லை. அதனால் இதை எடுக்காமல் விட்டுவிடுவதே நல்லது' என்று முடிவுசெய்கிறது.
இதனுடனான நமது முந்தைய அனுபவம் கசப்பானதாக இருந்தது என்ற காரணத்திற்காகவே, நாம் இம்முறை அதைத் தவிர்க்க முடிவுசெய்கிறோம். இதையே நாம் மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஒருமுறை கசப்பான அனுபவத்தைத் தந்துவிட்ட ஒரு விஷயத்தை, அதன்பின் முற்றிலுமாகத் தவிர்த்து விடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
நான்காவது கிளை, அபிநிவேசம் - பயம். இது, நமக்குள் சந்தேகங்களைக் கிளப்பிவிடும். நாம் செய்பவற்றை மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ என்று, எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்போம்.
பலரும், முக்கியமாகப் பெண்கள்,
இளமையாகத் தோன்ற விரும்புவார்கள்.
அவர்களுக்கு வயது ஐம்பதாகியிருக்கும்,
ஆனாலும் தங்களுக்கு முப்பது வயதுதான்
என்று சொல்லிக்கொள்வார்கள்.
மற்றவர்களைவிட அவர்கள் இளமையாகக்
காட்சியளிக்க வேண்டுமென்று
விரும்புவார்கள். இவ்விருப்பம், 'நாம்
வயதானவர்களாகத் தோற்றமளித்தால்
நம்மை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ
மாட்டார்களோ' என்ற பயத்தை
அடிப்படையாகக் கொண்டது.
> ஒருமுறை கசப்பான
> அனுபவத்தைத் தந்துவிட்ட
> ஒரு விஷயத்தை,
> அதன்பின் முற்றிலுமாகத்
> தவிர்த்து விடுவதையே
> வழக்கமாகக்
> கொண்டுள்ளோம்.
நமது மனம், தவறான புரிதல் மற்றும் தவறான தூண்டுதல்களின் அடிப்படையில் வேலைசெய்யும்பொழுது, நமது முடிவுகள், கருத்துகள் அனைத்துமேகூட தரம் தாழ்ந்துவிடுகின்றன.
முதல் நிலை தியானப் பயிற்சி வகுப்புகளில், நம் மனம் எப்படி வேலைசெய்கிறது என்பதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறோம்.
நாம் எதையாவதை பார்க்கிறோம், உடனே அதற்கென்று ஒரு எதிர்ச்செயல் செய்கிறோம். அந்த எதிர்ச்செயல்கள், பொதுவாக, ஸம்ஸ்காரம் எனப்படும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் புரியப்படுபவையாகவே இருக்கும். நமது பழைய அனுபவங்கள் இனிமையானதாக இருந்ததென்றால், நமது மனம், 'நல்லது, நான் அதைத் தொடரலாம்' என முடிவுசெய்கிறது இல்லையென்றால், அது அதை ஒதுக்கிவிடுகிறது.

கிருஷ்ணர் சொல்கிறார்: 'உண்மை எது'
என்று ஆராய்ந்து பார்க்கும் வழியில்
நம் மனமானது குறுக்கிட்டால், நமது
முடிவுகள் அனைத்துமே, தவறான
புரிதலை அடிப்படையாக வைத்தே
எடுக்கப்படும். நாம், நம் மனத்தின்
தாக்கத்திற்குள்ளாகும்பொழுது, நம்மைச்
சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உள்ள
பரமாத்மாவைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.
நாம் சிறிது நேரம் மனத்தை ஒதுக்கி வைத்தால், ஸத்யத்தை, உள்ளது உள்ளபடியே பார்க்க முடியும்.
பரமாத்மா, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்ற உண்மை, நம் உள்ளே உறைந்திருக்கும் ஆத்மாவுக்குத் தெரியும். ஆனால் நம் மனதோ, அதைச் சுற்றிலும் ஒரு உறுதியான உறையை உருவாக்கிவிடுகிறது. நமது மனம், நம்மைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கிறது. அது கடந்தகால நினைவுகளில் நிலைகொண்டு, மேலும் மேலும் தவறான முடிவுகளுக்கு அழைத்துச் செல்லும் விதமாக, மாயத் தோற்றங்களையே உருவாக்குகிறது. நாம் குழந்தைகளாக இருந்தபொழுது, நமது மனத்திற்கு இவ்வளவு சக்தி இருக்கவில்லை; நாம் புதிய ஸம்ஸ்காரங்களை உருவாக்கவில்லை. ஆனால், வளர வளர, சமூகக் கட்டுறு மனப்பாங்குதான், மனத்திற்குச் சக்தி கொடுக்கும் ஸம்ஸ்காரங்களை அடுக்குஅடுக்காக உருவாக்கிச் சேமித்து வைக்கிறது.
உண்மையில், ‘ஒரு குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்று மக்கள் சொல்லும்பொழுது, அது, குழந்தை, ‘மெது மெதுவாகச் சுருங்குவதில்’ வளர்ச்சி அடைவதையும், மனம், ‘மேலோங்கி வளர்வதில்’ வளர்ச்சி அடைவதையுமே குறிக்கிறது. அதாவது, குழந்தை, சுருங்கிக்கொண்டே போகிறது; மனம், வளர்ச்சி அடைந்துகொண்டே போகிறது! ஆத்மா ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு, மனத்திற்கு மேலும் மேலும் சக்தி கொடுக்கப்படுகிறது.
ஸத்யத்தைப் பார்க்கவொட்டாமல் நமது மனம் நம்மைத் தடுக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உறைந்துள்ள பரமாத்மாவைப் பார்க்கவொட்டாமல், அது தடுக்கிறது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் மனத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே, நாம் ஸத்யத்தைப் பார்க்க முடியும்.
உடலின் நோக்கம் புரிந்தால், உடலை வருத்தமாட்டோம்
உலகியல் ரீதியான விஷயங்களுக்கு எதிர்ச்செயல் புரிவது நம் உடலேயன்றி, பரமாத்மா அல்ல என்ற ஸத்யத்தைப் பார்க்க முடிந்தால் போதும், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
ஆத்மா மேலானது என்பதையும், உடலானது நமது உலக ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்கான ஓர் கருவியே என்பதையும் நாம் அறிந்திருக்கும்வரை, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். நாம் மிகச்சரியான பாதையில் இருக்கிறோம்.
ஆனால் இதற்கு மாறாக நாம், ஆத்மாவுக்கான இடத்தை உடலிற்குக்

கொடுக்கும்பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிவிடுகிறது.
நாம், இந்த உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் உண்மையில், நாம் அதை மதிப்பதே இல்லை; அதைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை நம் சுகங்ளுக்காகவே பயன்படுத்திக் கொள்கிறோம்.
நாம், இந்த உடலுக்கு
அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறோம்,
ஆனால் உண்மையில்,
நாம் அதை
மதிப்பதே இல்லை
நாம் நம் உடலை இழிவுபடுத்துகிறோம். நமது கண்கள் ஓய்வுக்கு கெஞ்சும்வரை, இரவில் வெகுநேரம் தொலைக்காட்சி பார்க்கிறோம். அது கெஞ்சுவதை, நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஏனெனில், அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நம்முன் சிற்றுண்டி வகைகளைப் பரப்பிக்கொள்வோம். நம் வயிறு நிறைந்திருந்தாலும், இனி இடமில்லை என்று அது அலறினாலும், நாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்போம், ஏன்? நாம் அந்த ருசியை அனுபவிக்க விரும்புகிறோம். அதனால், உடல் அதை வேண்டாமென்று அறிவுறுத்தினாலும்கூட, தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.
இன்று பலரும், அழகு நிலையங்களுக்கும், ‘ஸ்பாஸ்’ என்னும் நீராவிக் குளியல் நிலையங்களுக்கும் சென்று, பூச்சின் மேல் பூச்சாக முகத்தில் போட்டு, தங்களைப் பலவிதங்களில் ஒப்பனைசெய்து கொள்கிறார்கள். செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்கிறார்கள். இது அத்தையும், தங்களின் தோற்றம், மற்றவர்களின் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான்!
ஒரு சின்ன கதை:
ஒரு புதுமணத் தம்பதிகள் திருமணத்திற்குப் பின் முதல் தடவையாக, கணவருடைய கிராமத்துக்குச் செல்கிறார்கள். மனைவி, நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அதற்கு முன் அவர், எந்தக் கிராமத்திற்கும் சென்றதே இல்லை. அவர்கள் மறுநாள் காலை, அந்தக் கிராமத்துக் கோயிலுக்குச் சென்றுவர திட்டமிட்டார்கள்.
பொதுவாக இந்தியாவில், மக்கள், தங்கள் தினசரி வேலைகளைத் தொடங்குவதற்கு முன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதனால், காலை ஏழு மணிக்கே கோயிலில் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். மறுநாள் காலை ஐந்து மணியிலிருந்தே, மனைவி, தம் ஒப்பனையை ஆரம்பித்துவிட்டார்.
எப்படியோ, அவர் ஒப்பனையை முடித்த பின்பு கோயிலுக்குச் சென்றனர். இந்திய கிராமத்துக் கோயில்களில் குரங்கு, மயில், முயல் போன்ற பல விலங்குகளையும் பறவைகளையும் காணலாம். முதல் தடவையாக மனைவி அப்படிப்பட்ட ஒரு கோயிலைப் பார்ப்பதால், அவருக்கு அந்த விலங்குகளைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. உடனே அவர், தம் கணவரிடம் குரங்குகளைப் பற்றி விமர்சனம் செய்தார்.
கணவர், ஒரு புன்முறுவலுடன் சொன்னார், "ஆம், ஒரு பெரிய குரங்கை என்னருகிலேயே பார்க்கிறேன்!"
பெண்கள், ஒப்பனை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழகு நிலையங்களுக்கும், நீராவிக் குளியல்களுக்கும் சென்று தங்கள் உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்வதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், தங்கள் தோலின் மேல் நிறைய வேதிப் பொருட்களைப் பூசி, அவர்கள் தங்கள் உடலைத்தான் கெடுத்துக்கொள்கிறார்கள்.
நாம் ஏன் இப்படிப்பட்ட நாகரிக
மோகத்தில் நம் உடலை அவதூறு
செய்கிறோம்? ஏனெனில், புலன்களின்
வாயிலாக, நாம் சில இன்பங்களை
அனுபவிக்கிறோம். இவை நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. அதனால்
தொடர்ந்து, அந்தப் புலனின்பங்களைப்
பிடித்துக்கொண்டு, அதன் பின்னாலேயே
ஓடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவையெல்லாம் கண நேரம்தான் என்பதைப் புரிந்துகொள்ளத்
> உடலைச்
> சரியான முறையில்
> பயன்படுத்துவதற்குப்
> பதிலாக,
> அதை நம்
> சுகங்களுக்காகவே
> பயன்படுத்திக்
> கொள்கிறோம்.
தவறிவிடுகிறோம். நாம் புலன்கள் மூலம் இன்பத்தை அனுபவிப்பதாக உணர்ந்தால், அதே புலன்கள் மறுநாளே நம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிடும். அது, சுழலும் கதவுகள்போல இருக்கிறது.
நாம், சுழற்கதவின் ஒரு முனையை வேகமாகத் தள்ளினால், அதன் மறுமுனை சுற்றிவந்து, நம்மை அறைக்கு வெளியில் தள்ளிவிட்டுச் செல்லும்! அங்கிருந்து நகராமல், அந்தக் கதவின் அருகேயே நின்று கொண்டிருந்தால், அந்தக் கதவு மீண்டும் சுழன்று வந்து, நம்மை மீண்டும் அறைக்கு உள்ளே தள்ளிவிட்டு விடும்.
வெளியுலக புலனின்பங்களை அனுபவிப்பதற்கு, நமது உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். அந்தப் புலனின்பங்களையே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்கு விரும்புகிறோம். நாம், நம் உடலை அதற்குத்தான் பாதுகாப்போம்.
நாம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு, நம் உடல் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதைப் பாதுகாக்க விரும்புகிறோம். நாம், நம் உடல் எல்லா நேரத்திலும் அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென விரும்புகிறோம்.
நாம் ஒரு உடலை அல்ல, பல உடல்களை எடுத்திருக்கிறோம்
நாம் இப்புவிக்கு, இந்த மனித உடலெடுத்து ஏன் வந்திருக்கிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அப்படியென்றால் மட்டுமே, நாம் இந்த உடலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளும் வழியை அறிவோம்.
முதலில், நம் ஆத்மா
இதுவரை எடுத்திருக்கும்
பல உடல்களில்
இந்த உடலும்
ஒன்று என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்.
முதலில், நம் உடலைப் பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டிய மிக
முக்கியமான விஷயம், நம் ஆத்மா இதுவரை
எடுத்திருக்கும் பல உடல்களில் இதுவும்
ஒன்று என்பதே. நீங்கள் நம்பினாலும்
நம்பாவிட்டாலும், ஒப்புக்கொண்டாலும்
ஒப்புக்கொள்ளாவிட்டாலும்,
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
இதுவே உண்மை.
நாம் இந்த வாழ்க்கைக்கு முன்னரே, பல பிறவிகளை எடுத்திருக்கிறோம். இந்தப் பிறப்புக்கு முன்னாலேயே பல உடல்களைக் கொண்டிருந்தோம். நாம் அடுத்த பிறவி எடுப்போமா என்பது இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.
நாம் எடுத்திருக்கும் இந்தப் பிறவியானது, கடந்த பல பிறவிகளில் பூர்த்தியாகாத ஆசைகளையெல்லாம் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே எடுக்கப்பட்டதாகும். பூர்த்தியாகாத ஆசைகளைத்தான் ப்ாராரப்த கர்மம் என்று சொல்கிறோம்.
நம் ஆத்மாவானது, இந்த ப்ாராரப்த கர்மாவை நிறைவேற்றுவதற்காகவே, இந்த உடலை இப்பொழுது எடுத்திருக்கிறது. நாம் இறக்கும்பொழுது, எண்ணும் நமது கடைசி எண்ணம்தான் நமது அடுத்த பிறவியை முடிவுசெய்கிறது. நமது ஆத்மா, சென்ற பிறவியின் ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே இந்த உடலைத் தேர்ந்தெடுத்தது, இதுதான் உண்மை.
புரிந்துகொள்ளுங்கள், நாம், நம் கடந்த
பிறவியிலிருந்து எடுத்து வந்த ஆசைகளைப்
பூர்த்திசெய்து கொள்வதற்காகவே, ஒரு
புது உடலை எடுக்கிறோம். எனினும்
என்ன நடக்கிறது என்றால், நாம் இந்தப்
பிறவியிலும் மேலும் பல புதுப்புது
ஆசைகளைச் சேர்த்துக் கொள்கிறோம்.
நாம், நம் உடலை புலனின்பங்களுக்காகவே பயன்படுத்தி, மேலும் மேலும் பல புதுப்புது ஆசைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இதனால்தான், நாம் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் விழுகிறோம்.
நம்முடைய சென்ற பிறவியில் நிறைவேறாத ஒரு நோக்கத்தை முடித்துக்கொள்ளவே, நம் ஆத்மா இந்த உடலை எடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மாத்திரத்திலேயே, நம் உடலைப் பற்றிய மனோபாவம் முற்றிலுமாக மாறிவிடும்; அதனை நாம் அணுகும் முறையே மாறிவிடும்!
நமது உடல், ஒரு உடையைப் போன்றது. நாம் ஒவ்வொரு நாளும் பழைய உடைகளைக் களைந்துவிட்டு, புது உடைகளை அணிந்துகொள்கிறோம் இல்லையா? அதைப் போலவே, நாம் இறக்கும்பொழுது, இந்த உடலை விட்டுவிட்டு, நம் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற வேறு ஒரு புது உடலை எடுத்துக்கொள்கிறோம், அவ்வளவுதான்.
விருப்பமே இல்லையென்றாலும் அவர் இங்கிருப்பது நமக்காகவே!
மக்கள் என்னைக் கேட்கிறார்கள், “ஸ்வாமி, ஒரு ஞானகுரு எதற்கு மனிதப் பிறவி எடுக்க வேண்டும்? அவர் எல்லா ஆசைகளையும் பூர்த்திசெய்திருந்தால், அவர் ஏற்கனவே ஞானம் அடைந்திருந்தால், இப்போது உடல் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?”
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்க்கையிலிருந்து ஓர் அழகான நிகழ்ச்சி. ஒருநாள் அவர், தம்முடைய சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, தம் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை, தம் சீடர்களுடன் பகிர்ந்துகொண்டார்: “நான் ஒருமுறை என் கிராமத்திலிருந்து கல்கத்தாவிற்கு வந்து கொண்டிருந்தபொழுது, சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் என்னை நிறுத்தினார்கள். நான் உடனே எல்லாக் கடவுள்களின் பெயர்களையும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படியானால்தான் அதில் ஒன்றாவது வேலைசெய்யும் என்று நினைத்தேன்!” .
ஒரு ஞான குரு,
மற்றவர்களின்
நன்மைக்காகவே,
அஹங்காரத்தின் ஒரு
மெல்லிய இழையை மட்டும்
வைத்துக்கொண்டு,
இந்த உடலைக்
கொண்டிருக்கிறார்.
மேலும் அவர், ஞான குருமார்கள் ஏன் உடலைத் தாங்கி, பிறப்பெடுக்கிறார்கள் என்பதை அழகாக விளக்கினார்.
அவர் மிக அழகாக, “என் மனத்தின் ஒரு சிறுபகுதி, இந்த என் உடலோடு ஒட்டியிருக்கிறது. அதனால்தான், இது கடவுளின் அன்பையும், பக்தர்களுடன் இணைந்திருக்கும் இனிமையையும் அனுபவிக்க முடிகிறது,” என்று சொன்னார்.
எவ்வளவு அழகாக அதைச் சொல்லுகிறார். என்பதைப் பாருங்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரு ஜ்ஞான
குரு, மற்றவர்கள் மீது கொண்டிருக்கும்
தூய கருணையினால்தான் இந்த உடலைக்
கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்குள்
உணர்வுமாற்றம் நிகழ வேண்டும் என்று
விரும்புகிறார். மேலும் அவர், இந்த உடல்
உருவில் இருந்தால்தான், அதை மிகவும்
பயனுள்ள வழியில் செய்ய முடியும்
என்று நம்புகிறார். அவருக்கு மற்ற எந்த
விருப்பமும் இல்லை.
ஆத்மாவின் கோயில், நம் உடல்!
இந்த உடலை, அவர் எப்பொழுது விரும்பினாலும் நீத்து விடமுடியும். அவர், அஹங்காரத்தின் ஒரு மெல்லிய இழையை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களின் நன்மைக்காகவே இந்த உடலைக் கொண்டிருக்கிறார்.
நாம் எப்பொழுதுமே இந்த உடலின் மூலமாக, ஏதாவது ஒன்றை மேலும் மேலும் பெற்று அனுபவிக்கவே விரும்புகிறோம். நாம் அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க, நம் கண்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நம் வயிறு, அதிக கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். காதுகள், இரைச்சலான இசையைக் கேட்கத் தக்கதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நாம் இவற்றையெல்லாம் பேராசையின் காரணமாகச் செய்கிறோம். நாம் மேலும் மேலும் புலனின்பங்களைத்தான் அனுபவிக்க விரும்புகிறோம்.
அதற்கு பதிலாக, நாம் இந்த உடலை நன்றி உணர்வோடு பார்க்க ஆரம்பிக்கும்பொழுது, இந்த உடல் நமக்கு நல்கும் ஆதரவுக்காக, அதற்கு ஒவ்வொரு கணமும், நாம் நன்றி சொல்லும்பொழுது, நம் உடலுடன், ஒரு ஆழ்ந்த தொடர்புகொள்வோம்.
நமது ஆத்மாவின் கோயில்தான் இந்த உடல். நாம் நமது உடலை மதிக்க வேண்டும். நாம் நமது உடலை மிகுந்த நன்றியோடு கவனித்துக்கொள்ள வேண்டும்; வெறும் பேராசையால் அல்ல. நமது உயிரையும் ஆத்மாவையும் வைத்திருப்பதற்காக, இந்த உடலினிடம் நாம் மிகுந்த நன்றியுணர்வுகொள்ள வேண்டும். பிறகு, நாம் நம்முடைய உடலை, ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் பார்க்கத் தொடங்குவோம்.
நமது ஆத்மா, தூய பிரபஞ்ச விழிப்புணர்வு. அதற்கு, ஆனந்தமாக இருப்பதற்கு வெளியிலிருந்து எதுவுமே தேவையில்லை!
நம்முடைய தியானப் பயிற்சி வகுப்புகளின் முடிவில், ஒரு அழகான தியானத்தைச் செய்வோம். அது, 'உடலுக்கு நன்றி சொல்லும் தியானம்' என்றழைக்கப்படுகிறது.
இந்தத் தியானத்தில் நீங்கள் தரையில் படுத்து, கால்கட்டை விரல்களிலிருந்து தலைவரையிலும், ஒவ்வொரு உறுப்பாகத் தளர்வாக்கிக் கொள்வீர்கள். அதே சமயம், நீங்கள் ஒவ்வொரு உறுப்புக்கும் நன்றி சொல்வீர்கள். உங்களுக்கு இதுவரை அனைத்துவகையிலும் ஒத்துழைப்புத் தந்து உதவி செய்வதற்காக, இந்த முழுஉடலுக்கும் உங்களின் மனமார்ந்த நன்றியைச் செலுத்துவீர்கள்.
இது, மிக அழகான ஒரு தியானமாகும். இந்தத் தியானத்தின் முடிவில், உங்களுக்குள் ஸத்யம் 'பளிச்'சென உறைக்கும். நீங்கள் உண்மையில், உங்கள் உடல் என்றால் என்ன என்பதை உணர்வீர்கள்.
ஆத்மாவிற்கு எந்த ஒரு தேவையும் இல்லை
இங்குக் கிருஷ்ணர் சொல்கிறார், 'நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று எதை நினைத்தாலும், உண்மையில் அதை, நம் உடல்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது; நம் ஆத்மா அல்ல!'
நமது உடல், எல்லா வகையான பொருள் சுகத்தையும் அனுபவிக்கிறது. நமது ஆத்மா, அவையெல்லாம் இல்லாமலேயே ஆனந்தமாக இருக்க முடியும்.
நமது ஆத்மா, தூய பிரபஞ்ச விழிப்புணர்வு. அதற்கு ஆனந்தமாக இருப்பதற்கு வெளியிலிருந்து எதுவுமே தேவையில்லை.
உண்மையில் நமது ஆத்மாவானது எப்பொழுதுமே ஒரு ஆனந்த நிலையில், ஒரு பேரானந்தத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது. நமக்குத் தேவை என்று எந்தெந்தப் பொருட்களையெல்லாம் நினைக்கிறோமா, நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று எந்தெந்தப் பொருட்களையெல்லாம் நினைக்கிறோமோ, அவற்றையெல்லாம் நமது உடல்தான் அவசியம் என்று நினைக்கிறது, அனுபவிக்கிறது. நமது ஆத்மாவுக்கு, அவை எதுவுமே அவசியமில்லை.
'நமது ஆத்மா, இந்தப் பொருட்செல்வங்களை விரும்புகிறது' என்று நாம் நினைக்கும்பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிறது.
நாம், நம்முடைய ஆத்மாவை, வெளியுலகப் பொருட்களிலிருந்து பெறுகிற மகிழ்ச்சியுடன் சம்பந்தப்படுத்துகிறோம். இங்குதான், பிரச்சினை ஆரம்பமாகிறது.
பொருள் சுகங்களிலிருந்து கிடைக்கப் பெறும் மகிழ்ச்சியை, நம்முடைய ஆத்மா விரும்புகிறது என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் மேலும் மேலும் இந்தப் பொருட் சுகங்களைச் சேகரிப்பதற்காக, நாம் அவற்றின் பின்னாலேயே ஓடுகிறோம்.
கிருஷ்ணர், இங்கு ஒரு நுட்பத்தைத் தருகிறார்: புலனின்பங்களை அனுபவிக்கும் நம் உடலை, நாம் ஒரு ஸாக்ஷியாக இருந்து கவனிக்கும்பொழுது, வெளியுலக பொருள் சுகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது நம்முடைய உடலே அன்றி, நம்முடைய ஆத்மா அல்ல என்று நாம் கவனிக்கும்பொழுது, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்.
உடலை, ஒரு ஸாக்ஷியாக இருந்து கவனியுங்கள். உங்கள் உடலைப் பற்றிய விழிப்புடன் இருங்கள். வெளியுலகப் பொருட்களுக்கு உங்கள் உடல் எப்படி எதிர்ச்செயல் புரிகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். 'நீங்கள் இந்த உடலைக் காட்டிலும் வேறானவர்' என்ற ஒரு உணர்வு எழுவதை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். உங்கள் உடல் என்பது என்ன என்பதைக் காண்பீர்கள். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பங்களால், உங்கள் ஆத்மாவுக்கு ஆகப்போவது எதுவுமில்லை என்பதைக் காண்பீர்கள்.
நீங்கள் இதைச் செய்யும் சமயம், நீங்கள்
ஒரு வெளி ஆள்போல இருந்து, இந்த
உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாகயிருந்து
> நாம், நம்முடைய
آத்மாவை, வெளியுலகப்
பொருட்களிலிருந்து
பெறுகிற மகிழ்ச்சியுடன்
சம்பந்தப்படுத்துகிறோம்.
இங்குதான், பிரச்சினை
ஆரம்பமாகிறது.
கவனிப்பீர்கள். இது, நீங்கள் ஒரு திரைக்காட்சியைக் காண்பதைப் போன்றதுதான்.
நீங்கள் ஒரு திரைக்காட்சியைக் காணும்பொழுது, அந்தத் திரையின் மீது என்ன நிகழ்கிறது என்பதைக் கவனிக்கின்றீர்கள். அதைப் போலவே, உங்கள் உடலையும் மனத்தையும் கவனிக்கும்பொழுது, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பது உங்களுக்குப் புரியும்.
புலனின்பங்களை உடல்தான் அனுபவிக்கிறது என்பதையும், உடல்தான் ஒவ்வொன்றையும் செய்கிறது என்பதையும், ஆத்மாவுக்கு எதுவும் அவசியமில்லை என்பதையும் நீங்கள் கவனிக்கும்பொழுது மட்டுமே, நீங்கள் ஸத்யத்தைப் பார்க்கிறீர்கள்.
நம் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பிரபஞ்சம் தொடர்ந்து பதிலளிக்கிறது
மிகத் தெளிவாக இருங்கள், நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம்.
கிருஷ்ணர், இந்த ஸ்லோகத்தில் மிகப்பெரிய ஒரு ஸத்யத்தைத் தருகிறார். 'கூட்டு விழிப்புணர்வை'ப் பற்றிப் பேசுகிறார்.
ஒவ்வொரு ஜீவனிலும் நாம் பரமாத்மாவையே காணும்பொழுது, நமக்குப்பிரிவினைகள் தென்படுவதில்லை. நாம் அனைத்தையும் ஒரே 'இருப்பாக'க் காண்போம். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஒரே உடலாகவும், அதே ஸத்யத்தை வெளிப்படுத்தும் ஒரே இருப்பாகவும் காண்போம்.
மிகத் தெளிவாக இருங்கள், நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம். உங்களுடைய எண்ணங்கள் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடைய எண்ணங்களையும் பாதிக்கின்றன. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இது முற்றிலும் உண்மையே.
நாம் நம்மை, ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வாக நினைக்கிறோம். நாம் நம்மை, தனித்தனி தீவுகளாக நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய எண்ணங்கள் நமக்குள் மட்டுமே இருக்கின்றன என நினைக்கிறோம். நம்முடைய எண்ணங்களை வேறு ஒருவரும் கவனிப்பதில்லை என்றும் நினைக்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய எண்ணங்களுக்கு, இந்த முழுப் பிரபஞ்சமும் தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முழுப் பிரபஞ்சமுமே, ஒரே பிரபஞ்ச விழிப்புணர்வால் செய்யப்பட்டதுதான்.
உண்மையில், இங்குப் பிரபஞ்ச விழிப்புணர்வைத் தவிர, வேறெதுவும் இல்லை. தனிப்பட்ட விழிப்புணர்வானது, மொத்தக் கூட்டு விழிப்புணர்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, ஒரு சிறு மாதிரி வடிவம்தான், ஒரு சிறு பிரதிபலிப்புதான், ஒரு சிறு ஹோலோகிராம்தான்!
ஹோலோகிராமைப் (Holo-
gram) பார்த்திருக்கின்றீர்களா? ஒரு
ஹோலோகிராமை ஐந்து துண்டுகளாகக்
கத்தரித்தால் என்ன நிகழும்? ஒவ்வொரு
துண்டுமே ஒரு ஹோலோ கிராமாகத்தான்
மாறும். ஹோலோகிராம் முழுதாக
இருந்தபொழுது எதைக் காட்டியதோ, அதே
அம்சங்களை அந்த ஐந்து துண்டுகளும்
தன்னகத்தே கொண்டிருக்கும்.
நம்முடைய தனிப்பட்ட விழிப்புணர்வும் அந்த ஹோலோகிராமைப் போன்றதே! இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு ஹோலோகிராமானது, எண்ணற்ற சிறு சிறு ஹோலோகிராம் துண்டுகளாக அல்லது தனித்தனியான உயிருள்ள ஜீவன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும், பிரபஞ்ச விழிப்புணர்வைப் போன்ற அதே விழிப்புணர்வைத்தான் பெற்றிருக்கிறோம்.
நாம் அனைவருமே இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வால் இணைக்கப்பட்டிருக்கிறோம். இதைத்தான் நான், ‘கூட்டு விழிப்புணர்வு’ என்று அழைக்கின்றேன். இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா வாழும் உயிரினங்களுமே, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடைய எந்த எண்ணங்களுமே என்னையும் தூண்டிவிட முடியும்; என்னுடைய எந்த எண்ணங்களும் உங்களையும் தூண்டிவிட முடியும்.

நாம், உடலளவில் மட்டுமே தனித்தனியானவர்கள்!
எண்ண அளவில், மனதளவில் மட்டுமல்ல, ஆழமாகச் செல்லச் செல்ல, இன்னும் ஆழமாக நீங்கள் மற்றவரோடு இணைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்பதே ஸத்யம்.
நாம் நம்முடைய சரீர அமைப்பில், वेगवेगறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறோம். அதாவது ஸ்தூல சரீரம், ப்ராண சரீரம், மன சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம், ஆத்ம சரீரம், நிர்வாண சரீரம் என்பனவாகும்.
உடல் அடுக்கில், அனைவரையும் தனித்தனி மனிதர்களாகப் பார்க்கிறோம். நாம் இந்த அடுக்குகளின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல, நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் காண்போம். அடுத்தடுத்து ஆழமாகச் செல்லச் செல்ல, நம் இணைப்பும் மிகவும் ஆழமாகிறது.
இந்த உடலைச் சுற்றியிருக்கும் ஏழு சக்திப் படலங்களில், ப்ராண, மன சரீர അടുക്കளவில், ஒரு மனிதருடைய எண்ணங்கள், மற்றவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவர் ஏதும் பேசாதபொழுதும்கூட, அவருடைய எண்ணங்களின் அமைப்பு உங்கள் எண்ணங்களைப் பாதிக்கின்றது.
உங்களுடைய அலுவலகத்தில், உங்களுடைய மேலதிகாரியைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவருடைய எண்ண அமைப்பை அறிந்த மாத்திரத்திலேயே, உங்களுடைய எண்ணங்களிலும் சக்தியிலும் தாக்கம் ஏற்படுகிறது. அவர் எதுவுமே சொல்லக்கூட வேண்டாம்; அவர் உடலளவில் எதுவும் செய்ய வேண்டாம். அவருடைய எண்ணங்களே போதும், உங்கள் எண்ணங்களையும் சக்தியையும் பாதிப்படையச் செய்ய!
அதனால் நாம் இன்னும் ஆழமான
அடுக்குகளுக்குச் செல்ல, செல்ல,
மேலும் சற்று ஆழமான நிலையில் அங்கு
இணைக்கப்பட்டிருக்கிறோம். இறுதி அடுக்கான நிர்வாண சிங்கத்திற்குச் செல்லும்பொழுது, நாம் அனைவருமே விழிப்புணரளவில் இணைக்கப்படுகிறோம். அங்குக் கடவுளுக்கும், உங்களுக்கும், எனக்கும் உள்ள இடைவெளியானது பூஜ்யமாகிவிடும்.
நாம் நம்மை, இந்த ஸ்தூல சரீரத்துடன் இணைத்துக்கொள்வதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
நாம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே உண்மை என்று நம்பிவிடுகிறோம். இயற்கையாகவே, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு தனிநபர்கள் என்று நினைக்கிறோம். நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எல்லைகளை உருவாக்கிக்கொள்கிறோம். நாம் இந்த நிலையிலேயே தடைபட்டு நின்றுவிடும் பொழுது, நாம் ஒப்புயர்வற்ற ஸத்யத்தைத் தவறவிடுகிறோம்.
நம் மனத்தால் உருவாக்கப்பட்ட எல்லைகளையெல்லாம் நாம் உடைக்கும்பொழுது, நாம் எல்லோருமே ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கும்பொழுது, எல்லாத் தனிப்பட்ட உருவங்களும் ஒன்றேதான் என்பதைப் பார்க்கும்பொழுது, 'நாம் யார்' என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
> இறுதி அடுக்கான
> நிர்வாண அடுக்கிற்குச்
> செல்லும்பொழுது,
> நாம் அனைவருமே
> விழிப்புணரளவில்
> இணைக்கப்படுகிறோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய தனி மனித விழிப்புணர்வானது ஒரு வெங்காயத்தைப் போன்றது. நாம் ஒவ்வொருவரும் ஒரு வெங்காயம்தான். ஒரு வெங்காயத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? அதில் தோல்கள் அடுக்குடுக்காக இருக்கின்றன. அந்தத் தோல்களை, ஒன்றன் பின் ஒன்றாக உரிக்கும்பொழுது, உள்ளே என்ன மிஞ்சுகிறது? ஒன்றுமே இல்லை!
நீங்கள் அந்த வெங்காயத்தைப் போலத்தான் இருக்கிறீர்கள். நீங்கள், வெங்காயத்தை ஒரு திடப்பொருளாக நினைக்கிறீர்கள். அதை உரிக்கும்பொழுதுதான், அதனுள் ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதைப் போலவே நீங்கள் ஏழு
அடுக்குகளையும் உரிக்கும்பொழுது,
நீங்கள் கூட்டு விழிப்புணர்வாக இருப்பதை
அனுபவிப்பீர்கள்.
எல்லா அடுக்குகளையும் நீக்கிவிட்டால்,
உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு
உயிருமே, அதே விழிப்புணர்வைத்தான்
உள்ளடக்கியிருக்கிறது என்பதைப்
பார்க்கின்றீர்கள். அனைத்துமே ஒன்றுதான்.
ஆரம்பத்திலிருந்தே, நீங்கள் பிறந்ததிலிருந்தே, சமூகம் உங்கள் மேல் புதுப்புது அடுக்குகளை உருவாக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்பொழுது, ஒவ்வொன்றிலும் 'இருப்பை'யே பார்க்கும் கள்ளங்கபடமற்ற குழந்தைத் தன்மையை மெதுமெதுவாக இழந்துவிடுகிறீர்கள்.
ஒரு குழந்தையாக இருக்கும்பொழுது, இருப்புத்தன்மையோடு உங்களை இணைக்கும் நிறைய விஷயங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் உங்களை, இந்த மண்ணிலிருந்தோ, பூமியிலிருந்தோ வேறானவர்களாகக் கருத மாட்டீர்கள். அதனால்தான் நீங்கள் மண்ணோடும் சேற்றோடும் விளையாடி மகிழ்கின்றீர்கள். ஆனால் பெற்றோர்கள் என்னசெய்கிறார்கள்? "இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே, நீ அழுக்காகிவிடுவாய், உன்னுடைய உடைகள் அழுக்காகிவிடும்," என்று கடிந்துகொள்வார்கள். இவ்வாறு தொடர்ந்து, பல சமூகக் கட்டுறு மனப்பாங்குகளை அந்தக் குழந்தையின் மீது பெற்றோர்களும், சமூகமும் சுமத்திவிடுகின்றனர்.
அந்தக் குழந்தைக்கு எது அழுக்கு, எது சுத்தம் என்று தெரியாது. அந்தக் குழந்தை, தரையைப் பார்ப்பதைப் போலத்தான் மண்ணையும் பார்க்கிறது. அது எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை. சுத்தமான வீட்டினுள் ஆனாலும் சரி, புழுதியான வீதியானாலும் சரி, அந்தக் குழந்தை ஒரே சக்தியுடன்தான் இணைந்துகொள்கிறது. பெரியவர்கள், குழந்தைகளை வேறுபாட்டைக் காண்பதற்கான கட்டுறு மனப்பாங்குக்குப் பழக்கிவிடுகிறார்கள்.
குருகுல முறை - குழந்தையை, கடவுளாக்கும்
பழங்காலத்தில், நம் இந்தியாவில் பரந்து நிலவிய குருகுல முறையைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
குருகுல முறை, எல்லா உயிர்களோடும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள குழந்தைகளுக்கு மிகவும் உதவியது. குழந்தைகளுக்கு எந்தத் தடைகளையும் அவர்கள் போடவில்லை. மிகச் சிறு வயதிலேயே, கல்விக்காக குருமார்களிடம் கொண்டுவிடப் பட்டனர் குழந்தைகள். குருவானவர், அக்குழந்தைகளுக்கான பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு, பெற்றோரோ அல்லது உற்றாரோ யாருமே இல்லை. எல்லாக் குழந்தைகளுமே, நவீன மாணவர் விடுதிகளைப்போல இருந்த குருகுலத்தில்தான் வசித்து வந்தனர்.
ஏழு வயதாகும்வரை, அந்தக் குழந்தைகள் ஆடைகளேதும் அணியவில்லை. அவர்கள், இயற்கை வழியிலேயே தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள், இயற்கைச் சூழலோடு தங்களைச் சிறந்த வழியில் தொடர்புபடுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மிகச் சுலபமாக, கிருஷ்ணருடைய போதனைகளை அவர்கள் பரீட்சித்துப் பார்க்க முடிந்தது.
கூச்சம் மற்றும் ஆண் பெண் வேறுபாடு என்ற தடைகளேதும் இல்லாமல், பிரபஞ்சத்தோடு ஆழமான நிலைகளில் தங்களை இணைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
ஒரு குழந்தையை ஆண் - பெண் பாகுபாடு,
கூச்சம், வெட்கம் ஆகியவற்றின் மூலமாகக்
கட்டுப்படுத்தினால், அது தன்னை
முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாது.
அது தனக்குத்தானே விதிமுறைகளை
உருவாக்கிகொள்ள ஆரம்பித்துவிடும்.
அது, ‘நான் ஆண் பிள்ளையாக
இருப்பதால், இதைச் செய்யக்கூடாது,
பெண் பிள்ளையாக இருப்பதால் அதைச்
செய்யக்கூடாது’ என்றெல்லாம் நினைக்க
ஆரம்பித்துவிடுகிறது.
> குழந்தைகளின் நிலைக்கு
> நாம்
> உயர வேண்டும்!
இந்தக் கட்டுறு மனப்பாங்கு, கட்டுப்பாட்டு விதிமுறைகள், குருகுலத்தில் இல்லாமலிருந்தன. குழந்தைகள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர்கள், முழுமையாகத் தங்களை இயற்கையோடு, பிரபஞ்சத்தோடு இணைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள்.
ஏழு வயதில் அவர்களுக்கு, தங்களை இறுதி விழிப்புணர்வுடன் இணைத்துக் கொள்வதற்கான, ஒரு தியான நுட்பம் வழங்கப்பட்டது. தாங்கள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்னும் எண்ணம் அவர்களுக்கு வந்தால், இந்தத் தியான நுட்பம், அந்த எண்ணத்தைக் கரைத்து விடும்.
விழிப்பு நிலையிலிருந்து அவர்களை விலக்கிவைத்துவிடக் கூடிய எண்ணங்களிலிருந்து, இந்தத் தியானம் அவர்களை விலக்கிவைத்தது. மிக எளிதான, அதே சமயம் சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை ஐபிப்பதே அந்தத் தியான நுட்பம்!
குழந்தைகள், இந்த காயத்ரி மந்திரத்தின்
மூலமாக, கூட்டு விழிப்புணர்வுடன்
தொடர்ந்து இணைப்பை
ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பதினாங்கு வயதிற்குள் அவர்கள், கூட்டு விழிப்புணர்வின் ஒரு கணநேரக் காட்சியை, ஜ்ஞாந அனுபவத்தின் துளியை, ஸதோரி அனுபவத்தைப் பெற்றார்கள்.
நாம் இன்று என்ன செய்கின்றோம்? ஆண் குழந்தை என்றால், ஒரு கால் சட்டையும் டி-சர்ட்டையும், பெண் குழந்தை என்றால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி ஆடைகளையும் வாங்கி மாட்டுகிறோம். அதுவும் சிறுவர்களுக்கு நீலநிறத்திலும், சிறுமிகளுக்கு ரோஜா நிறத்திலும் ஆடைகளை வாங்கி மாட்டுகிறோம்.
பெரும்பாலும் அந்தக் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னரே, அதனுள் ஆண், பெண் பாகுபாட்டு அடுக்கை உருவாக்கிவிடுகிறோம். நாம் மீண்டும் மீண்டும் அவர்களை அவர்களிடமிருந்து வெளியே இழுக்கிறோம். அவர்களை அவர்களாகவே இருக்க நாம் அனுமதிப்பதே இல்லை.
நாம், இந்தக் கட்டுறு மனப்பாங்கினை, கட்டுப்பாட்டு விதிகளை விலக்கிக் கொள்ளும்பொழுதுதான், ஒவ்வொன்றுமே தூய விழிப்புணர்வுதான் என்பதைக் காண்கிறோம். இதுதான் கிருஷ்ணர் இங்கே சொல்வதாகும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் பரமாத்மாவைச் காணும்பொழுது, நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டிருப்பதைக் காண்போம். நாம் இந்த இணைப்பைக் காணும்பொழுது, ஸத்யத்தைக் காண்போம். இந்த முழுப் பிரபஞ்சமும், அதே விழிப்புணர்வின் விரிவுதான் என்பதைக் காண்போம். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே, அந்த ஸத்யத்தின் வெளிப்பாடுதான்.
கேள்வி : குருகுலம் என்னும் வேத முறைக் கல்வியைப் பற்றிப் பேசினீர்கள். குழந்தைகள் இயற்கையாக ஆடையெதும் அணியாமல் திரியக் கூடிய முறை உண்மையிலேயே சாத்தியமாகுமா?
நாம், கட்டுறு
மனப்பாங்கினை விலக்கிக்
கொள்ளும்பொழுதுதான்,
ஒவ்வொன்றுமே தூய
விழிப்புணர்வுதான்
என்பதைக் காண்கிறோம்.
பதில்: இந்த நாட்களில், ஆடையே உடுத்தாத கூட்டுக் குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அங்குப் புலனின்பங்கள்தான் நோக்கமாக உள்ளதே தவிர, நம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இயற்கையோடு தொடர்பு வைத்துக் கொள்வது அல்ல.
குழந்தைகளுக்கு ஆறு அல்லது ஏழு வயதாகும்வரை, கட்டுப்பாடுகள் என்று ஏதுமில்லை. அவர்களுக்கு ஆண் பெண் பாகுபாட்டைப் பற்றிய புரிதல் இருப்பதில்லை. அந்த வயதுவரை, அவர்கள் அவர்களுக்குள்ளாகவே ஆழ்ந்திருப்பார்கள். அவர்களுடைய வெளியுலக ஆர்வம் என்பது, அவர்கள் படிக்கும் முறைகளுள் ஒன்றே.
உங்களுடைய குழந்தையை, உங்கள் வீட்டினுள்ளாவது சுதந்திரமாக வளர அனுமதிப்பது சாத்தியமே.
உதாரணத்திற்கு, குழந்தைகள்
குளித்தவுடன், குளியலறையை விட்டு
ஆடைகள் ஏதுமில்லாமலேயே வெளியே
வர முடிவுசெய்யலாம். அந்த நேரத்தில்
அவர்களைத் தடைசெய்யாதீர்கள். சில
சமயம், குழந்தை, தன் உடலோடும்,
தன் பிறப்புறுப்புகளோடும் சுதந்திரமாக
விளையாடிக் கொண்டிருப்பதை
நீங்கள் பார்க்கலாம். அந்தச் சமயங்களில்,
அவர்களின் கைகளை அங்கிருந்து
தட்டிவிடாதீர்கள். இப்போதைக்கு இந்த
மாதிரியான சில சிறு சிறு விஷயங்களை
நீங்கள் அனுமதிக்கலாம்.
உங்களுடைய
குழந்தையை,
உங்கள் வீட்டினுள்ளாவது
சுதந்திரமாக
வளர அனுமதிப்பது
சாத்தியமே!
ஒரு தலைமுறை இது மாதிரி வளருவதை, அந்தப் புதிய தலைமுறையை நீங்களே கற்பனைசெய்து பாருங்கள். குழந்தைகள் இந்த மாதிரி வழிகளில் வளர்க்கப்பட்டால், அவர்கள் பயமில்லாமலும் முற்றிலும் சமநிலையோடும, மன உறுதியோடும் வளர்வார்கள்.
அவர்களுடைய பாலுணர்வு, காமத்தால் தூண்டப்பட்டதாக இருக்காது. அவர்கள், காமத்தால் விரட்டப்படாத, அதே சமயம், இப்புவியிலேயே அதிக புலனின்பத்தை அனுபவிக்கும் மக்களாக இருப்பார்கள்.
இப்போதைய நமது கல்விமுறை, குழந்தைகளை வளர்ப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கீழ்நோக்கித்தான் இழுத்துவிடுகிறது. அவர்கள், தடைகள், பயம், பேராசை, பொறாமை, மேலும் பல எதிர்மறை எண்ணங்களோடும்தான் வளர்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்காத, அடக்குமுறைகள் ஏதும் விதிக்காத புத்திசாலித்தனம்மிக்க பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட இளஞ்சிறார்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், அச்சிறுவர்களின் எல்லாச் சக்தி மையங்களும் மிக அழகாகத் திறக்கப்பட்டிருக்கும். அவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.
அவர்களுக்கு என்ன தேவையோ அது, அந்தக் கணத்திலேயே நிறைவேறும். அதனால் அவர்கள் பூர்த்தியாகாத ஆசைகளைக் கொண்டிருக்க மாட்டார்கள்; தங்களைக் கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக்கொள்ள மாட்டார்கள்; தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் ஆசைகளைக் கடன் வாங்கி, தேக்கி வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
குருகுலக் கல்வியில், குழந்தைகளுக்கு ஏழு வயதுவரை, திட்டவட்டமான பாட முறைகள் ஏதும் கற்பிக்கப்படுவதில்லை. இந்த வயதில், காயத்ரி மந்திரம் கற்பிக்கப்படுகிறது. இந்த மந்திரம் அவர்களின் உள்ளுலக புத்திசாலித்தனத்தை விழிப்பிக்கச்செய்கிறது. பிறகு, ஆன்மிக ஸத்யங்களுடன் பலவிதமான வாழ்க்கைத் திறன்களும் கற்பிக்கப்படுகின்றன. கல்வி முறை முழுமையானதாக இருக்கும்.
குழந்தைகள் அவரவர் திறமைகளுக்கேற்றாற்போல், ஊக்கமளிக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவுத்திறனை அளக்கும் ‘புத்திக்கூர்மை பரீட்சை’களின் (Intelligence tests) அடிப்படையில், அவர்கள் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.
அவர்களுடைய சொந்தத்திறமை, அவர்களின் தனிப்பட்ட வேகத்திறன் ஆகியவற்றிற்கேற்ப, தாங்கள் திறம்படச் செயல்பட முடியும் என்று அவர்கள் நம்பும் துறைகளை, அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றாற்போல் அவர்கள் செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
மறுபடியும் நீங்கள் கேட்கலாம்: "இது எப்படிச் சாத்தியமாகும்? இந்தச் சிறுவர்கள் பிழைப்பதற்காகச் சம்பாதிக்க வேண்டுமே!"

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள். நீங்கள் செய்ய விரும்பாதவற்றையே செய்யும் கட்டாயத்தில் எவ்வளவு பேர் தள்ளிவிடப்பட்டிருக்கின்றீர்கள்? எவ்வளவு பேர் உங்களுடைய வேலைகளை வெறுக்கின்றீர்கள்? நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தீர்களானால், உங்களில் மிகப் பெரும்பாலோனோர் ‘ஆம்’ என்றுதான் சொல்வீர்கள். உங்களுடைய பெரியோர்கள், அவர்களுடைய கருத்துகளின்படி நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பினார்களோ, அந்தத் துறைக்குத் தள்ளிவிடப்பட்டீர்கள். நீங்கள் செய்ய விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, உங்களுக்கு ஒருபோதும் கிட்டியதே இல்லை.
நான் சந்திக்கும் பல இளைஞர்கள், "நான் விளையாட்டு வீரனாக விரும்பினேன். ஆனால் என்னுடைய பெற்றோர், நான் ஒரு பொறியாளர் ஆக வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பப்படி படித்த அந்தப் படிப்பை வெறுக்கிறேன்," என்றுதான் சொல்லுகிறார்கள்.
இந்தியாவில் அல்லது ஆசியாவில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.

தங்களுடைய கல்விக்காக, தாங்களே சம்பாதித்துக்கொள்ளும் இளைஞர்களைக் கொண்டுள்ள அமெரிக்காவில்கூட, நிர்பந்தத்தினாலோ அல்லது தன்னோடு இருப்பவர்களால் தூண்டப்பட்டோ, தங்களுக்குப் பிடிக்காத, கல்வித் துறைகளில் தள்ளப்படுகிறார்கள்.
இறுதியில், அந்தத் துறையையே வெறுக்கும்
அவல நிலைக்கு ஆளாகிறார்கள்.
பிறகு அவர்கள், சமூகத்திலிருந்து
கட்டறுத்துக்கொண்டு ஓடும் ஒரு
தலைமுறையாக வளர்கிறார்கள்.
உங்களுக்குப் பிடித்த ஒன்றை நீங்கள் செய்யும்பொழுது, அச்செயலின் இறுதி விளைவே, அச்செயலின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆழமான விருப்பத்தைக் காட்டும்.
நீங்கள், ஒரு செயலை எப்படிச் செய்கின்றீர்கள், செயலின் விளைவாக எதை அளிக்கின்றீர்கள் என்பது, உங்கள் ஆழமான விருப்பத்தின் பிரதிபலிப்பு. உங்கள் செயல்கள் அனைத்தும், நிச்சயமாக, வெற்றியடையும்.
சமூகத்தின் கட்டுப்பாட்டு விதிகளை, புரிந்துகொள்ளாமலும், அவற்றை மனதார ஏற்றுக்கொள்ளாமலும், பயம் மற்றும் பேராசையின் காரணமாகப் பின்பற்றினீர்களானால், நீங்கள் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியாது.
உங்களுடைய ஆழமான விருப்பம், ஆசை என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பின்பு அதையே பின்பற்றுங்கள்.
உங்களுடைய குழந்தைகளுக்கும், அவர்களுடைய சொந்த ஆசைகளை, விருப்பங்களைப் பின்பற்றுவதற்குக் கற்பியுங்கள். உங்களைக் கட்டுப்படுத்திய கட்டுறு மனப்பாங்கினை அவர்களின் மேலும் சுமத்தி, அவர்களையும் கட்டுப்படுத்தாதீர்கள்.

