ஆத்மாவும் உடலும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
13.31 குந்தி புத்திரா, மனத்திற்கெட்டாத, அநாதியான, நிர்குணமான இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்தபோதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.
13.32 எங்கும் நிறைந்திருந்தாலும் ஆகாசம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் கலப்பதில்லையோ, அவ்வாறே ஆத்மாவும் இவ்வுடலில் வசித்தாலும், இந்த உடலோடு அது கலப்பதில்லை.
13.33 பரத குலத்தில் உதித்தவனே, எப்படிச் சூரியன் ஒருவனே இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே இந்த க்ஷேத்ரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது.
13.34 இவ்விதம் க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் - இவற்றின் வேறுபாட்டையும் செயல்முறையையும் எவர்கள் ஜ்ஞானக்
கண்களால் தத்துவ ரீதியாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல் ரீதியான பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமாத்மாவை அடைகிறார்கள்.
ஆத்மா அமைதிக்கும் அப்பாற்பட்டது
கிருஷ்ணர், மீண்டும் மீண்டும் பரமாத்மாவின் உண்மை நிலையைப் பற்றிப் பேசுகிறார். அவர், 'ஆத்மாவானது எந்தப் பிடிப்புகளிலும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்கிறது, அது எல்லையற்றது, முடிவற்றது. மனம் கடந்தநிலையில் உள்ளது. இந்த ‘ஸ்தூல உடலோடு தொடர்பு கொண்டிருந்தாலும்கூட, அது இன்னமும் சுதந்திரமாகத்தான் இருக்கிறது' என்று அர்ஜூனனிடம் சொல்கிறார்.
முந்தைய ஸ்லோகங்களில், நம் உடல், எப்படி ஆத்மாவின் கோயிலாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசினோம். கடந்த பிறவிகளின் ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே, இந்த ஆத்மா எப்படி இந்த உடலை எடுக்கிறது என்பதைப் பார்த்தோம்.
உண்மையில் ஆத்மா, எதையுமே செய்வதில்லை. அது பயம், பேராசை என்னும் சிக்கல்களில் தன்னைச் சிக்கவைத்துக்க கொள்வதில்லை. நம் மனம்தான், புதுப்புது ஆசைகளை, தொடர்ந்து பட்டியலில் சேர்த்துக்கொண்டேயிருக்கிறது. உடலையும் அவற்றின் பின்னாலேயே ஓட வைத்துக்கொண்டும் இருக்கிறது. ஆனால், உள்ளுக்குள் ஆத்மா எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறது. அதற்கு பந்தமே கிடையாது.
ஆத்மா
எப்பொழுதும்
சுதந்திரமாகவே இருக்கிறது.
அதற்கு
பந்தமே கிடையாது!
அது, தடாகத்தில் மிதக்கும் தாமரையைப் போன்று இருக்கிறது. தாமரை இலைகளின் மேல் விழுகிற நீர்த்துளிகள், அதில் ஒட்டுவதில்லை. அவை அப்படியே உருண்டோடி விடுகின்றன. அதைப் போலவே, உடலின் உள்ளே உறையும் ஆத்மாவினிடத்து, உலக சுகதுக்கங்கள் ஒட்டுவதில்லை.
உடல் மட்டுமே உலக நடப்புகளில் தொடர்புகொள்கிறது. ஆத்மா தொடர்புகொள்வதே இல்லை. ஆத்மாவானது பரமாத்மாவுடன் எளிதில் கலந்துவிட முடியும்.
கிருஷ்ணர், நிர்குணம் என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறார். அதற்கு, 'மூன்று
குணங்களுக்கும் அப்பாற்பட்டது' என்று
அர்த்தம்.
மூன்று குணங்களாகிய அமைதி, பேராசை, சோம்பல்தனம் ஆகியவை உடலோடும் மனத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆத்மா, இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டது. அது அமைதியானதும் அல்ல; சோம்பலானதும் அல்ல; தூய்மையானது. உண்மையில், அது தூய்மைக்கும் அப்பாற்பட்டது.
ஆத்மாவிற்குத் 'தூய்மை' என்னும் அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்தும்பொழுது, அதனை அமைதி என்னும் குணத்தோடும் சம்பந்தப்படுத்தலாம் என்று அர்த்தமாகிறது. ஆனால் ஆத்மாவானது அமைதிக்கும் அப்பாற்பட்டது. அதனால்தான் நான், 'தூய்மைக்கும் அப்பாற்பட்டது' என்று சொல்கிறேன். அதனை எதுவுமே சுற்றி வளைத்துக் கட்டுப்படுத்த முடியாது.
நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், நம் மனத்தால் பார்க்கப்படும் ஒரு விஷயத்தைத்தான், வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறோம். நம் மனத்தில் ஓடும் உள் அரட்டையின் வெளிப்பாடே சொற்கள். மனம் இல்லாதபொழுது சொற்களே இல்லை.
மலைகளால் சூழப்பட்ட இமயத்திற்குச் செல்லும்பொழுது, முதலில் நிகழ்வது 'பெரும்வியப்பு'. வார்த்தைகளே வெளி வராது. நாம் மிக அமைதியாக இருக்கிறோம். நம்முடைய இருப்பு, அந்த அழகை அனுபவிக்கிறது; நமது இருப்பு, அதனை வேறு எதனோடும் சம்பந்தப்படுத்திப் பார்க்க முயலாது. நம் மனது, இன்னமும் அதனை வேறு எந்த வார்த்தையோடும் சம்பந்தப்படுத்தவில்லை. ஒரு சில நொடிகள் கழித்தே 'ஆஹா' என்னும் உணர்ச்சியை அனுபவிக்கிறோம். அதை விவரித்துச் சொல்ல இயலாது.
அதெப் போலவே, ஞானமடைதலையும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. ஞானம் என்பது என்ன என்பதை வார்த்தைகளால் விவரிக்க எந்த ஒரு ஞான குருவாலும் முடியாது.
ஆத்மாவை, அமைதி என்ற சொல்லுடன் தொடர்புபடுத்திச் சொல்வதற்குக்கூட, நமது மனம் தேவைப்படுகிறது. ஆனால் ஆத்மா, அதற்கும் அப்பால் உள்ளது. எந்தச் சொல்லும், அதை விவரிக்க முடியாது. அது வெறுமனே ‘இருக்கிறது’ அவ்வளவுதான்.
ஞான குருமார்கள், த்ரிகுண ரஹிதர்களாக இருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு நிலையில் வாழ்கிறார்கள் என்பதாகும். முக்குணங்களுக்கும் அப்பால் அவர்கள் சென்று விட்டனர். ஆத்மா, எதிலும் பந்தப்படாமல் சுதந்திரமாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த உடல், ஆத்மாவின் கோயில் என்பது அவர்களுக்குத் தெரியும்; உடல், ஆத்மாவைப் பாதிக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

கிருஷ்ணர் இந்த விஷயத்தைத் தெளிவாக்குவதற்கு, ஒரு உதாரணத்தைச் சொல்கிறார்: ஆகாசம், அதில் இருக்கும் எந்த ஒரு பொருளாலும் பாதிக்கப்படுவதில்லை!
ஸூக்ஷ்ம சக்தியான ஆகாசம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மூலக் கூறிலும் அணுவிலும் கூட, இந்த ஸூக்ஷ்மமான சக்தி உள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் அது நிறைந்திருந்தாலும், அவற்றின் தன்மைகளை அது சுவீகரித்துக் கொள்வதில்லை. அது, ஒரு மலரில் இருந்தாலும், அதன் நறுமணத்தைக்கூட அது எடுத்துக் கொள்வதில்லை.
அதெப் போலவே ஆத்மா, அதன் உறைவிடத்தின் குணங்களால் பாதிக்கப்படுவதேயில்லை.
மக்கள், தாங்கள் பாவங்கள் செய்தால், தங்களின் ஆத்மா நரகத்திற்குச் செல்லும் என்று நினைக்கிறார்கள். தெய்வ பக்தியுடன் வாழ்ந்தால்,
சொர்க்கத்திற்குச் செல்லும் என்று
நினைக்கிறார்கள். உடல் செய்யும்
செயல்களால் ஆத்மா பாதிக்கப்படுகிறது
என்று நினைக்கிறார்கள்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள்,
வெளியே தெரியும் செயல்கள்,
நம் ஆத்மாவைப் பாதிப்பதில்லை.
இன்னுமொன்றை நான் மீண்டும்
உங்களுக்குச் சொல்கிறேன், சொர்க்கம்
என்றோ, நரகம் என்றோ எதுவுமே
கிடையாது. அவை புவியியல் ரீதியான
இடங்கள் அல்ல; அவை மன ரீதியான
நிலைகள்.
> உடலின்
> வெளிச் செயல்கள்,
> ஆத்மாவின்
> இறுதி இலக்கைப்
> பாதிப்பதில்லை.
நாம் விழிப்பில்லாமல் எதையாவது செய்தால், நாம் நரகத்தில் இருக்கிறோம். நாம் விழிப்புணர்வுடன் ஒரு செயலைச் செய்தால், நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். அப்பொழுது நமது செய்கைகள் அனைத்துமே, இயல்பாகவே, எல்லோருடைய நன்மைக்காகவே அமையும்.
உடலின் வெளிச் செயல்கள், ஆத்மாவின் இறுதி இலக்கைப் பாதிப்பதில்லை. நமது பாவங்கள், நமது ஆத்மாவின் தன்மையை பாதிப்பதில்லை. ஆத்மா, அவற்றிலிருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறது. ஆத்மா எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
பிரபஞ்சத்திற்கே ஒளியேற்றிடும் க்ஷேத்ரஜ்ஞன்
கிருஷ்ணர் சொல்கிறார், "சூரியன் உலகையே பிரகாசிக்கச் செய்வது போல, க்ஷேத்ரஜ்ஞன், பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் - அவை உயிருள்ளவையோ உயிரற்றவையோ - பிரகாசிக்கச் செய்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுமே, அதே விழிப்புணர்வைத்தான் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணர், மேலும் மேலும் உதாரணங்களைத் தருகிறார். சூரியன், சுற்றியுள்ள கிரகங்களின் மேல் ஒளியைப் பொழிகிறது, கிரகங்களின் மேலுள்ள இருளை சூரிய ஒளி விலக்குகிறது. அதைப் போலவே, பரமாத்மா, க்ஷேத்ரஜ்ஞன், பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா இருப்புக்குள்ளும் இந்தப் பரமாத்மா இருக்கிறது.
கிருஷ்ணர் ஏன் இதை மீண்டும் மீண்டும்
சொல்கிறார் என்று நாம் ஆச்சரியப்படலாம்.
ஆனால் அவர், க்ஷேத்ரம், க்ஷேத்ரஜ்ஞனைப்
பற்றிய கருத்தை, அர்ஜூனனுடைய
சந்தேகத்தைப் போக்கும் விதத்தில்
விளக்க முயற்சிக்கிறார். இது மிகவும்
முக்கியமானது என்று கிருஷ்ணருக்குத்
தெரியும். அதனால் அதை, அர்ஜூனன்
முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்
என்று விரும்பினார்.
நம் உடலுக்குள் இருக்கும்
விழிப்புணர்வுக்கும்,
செடி அல்லது பாறைகளில்
இருக்கும் விழிப்புணர்வுக்கும்
எந்தப் பிரிவும் இல்லை.
அனைத்தும் ஒரே சக்திதான்.
எப்படியோ கிருஷ்ணர் இங்குப் புதிதாக ஒன்றைச் சொல்கிறார். சூரியன் பிரபஞ்சத்தைப் பிரகாசிக்கச் செய்வதைப் போல, இந்த உடலிலுள்ள ஆத்மா, இந்த உடலை மட்டுமல்லாமல், இந்த உடலைச் சுற்றியிருப்பவற்றையும், இந்த முழுப் பிரபஞ்சத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது!
அவர் சொல்கிறார்.
யதா ப்ரகாஸ'யத்யேக: க்ரு'த்ஸ்நம் லோகமிமம் ரவி: /
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ரு'த்ஸ்நம் ப்ரகாஸ'யதி பரத //13.34
க்ஷேத்ரீ என்பது பரமாத்மா; அதுவே இந்த எல்லா க்ஷேத்ரத்தையும் - எல்லா உடல்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. நம்முடைய க்ஷேத்ரம்
- உடல் மட்டும் ஒளியூட்டப்படுவதில்லை, எல்லா க்ஷேத்ரங்களும் ஒளியூட்டப்படுகின்றன.
நம் அனைவருக்குள்ளிருக்கும் விழிப்புணர்வும், அந்தப் பரமாத்மாவின் ஹோலோகிராமே! அதனால் நம் உடலுக்குள் இருக்கும் விழிப்புணர்வுக்கும், செடி அல்லது பாறைகளில் இருக்கும் விழிப்புணர்வுக்கும் எந்தப் பிரிவும் இல்லை. அனைத்தும் ஒரே சக்தியே.
சூரியன், தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. அது எந்தப் பாகுபாட்டையும் காண்பிப்பதில்லை; அது எதையும் வேறுபடுத்திக் காண்பதில்லை. அதன் வழியே எது வந்தாலும், அது, அதிலிருக்கும் இருளை நீக்கிவிடுகிறது. அதைப் போலவே, நம்முள் இருக்கும் பரமாத்மா, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. நம்முடைய அறியாமையே, பரமாத்மாவிலிருந்து ஆத்மாவைப் பிரிக்கிறது.
பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுமே பரமாத்மாதான்!
உண்மையிலேயே, இரு வேறு சொற்களை - ஆத்மா, பரமாத்மா என்று பயன்படுத்துவதேகூட சரியல்ல.
ஆத்மா, பரமாத்மா என்று இரு தனித்தனியானிருப்புகளே இல்லை. இருப்பது ஒரு ஆத்மாவே. இருப்பது ஒன்றே.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுமே பரமாத்மாவைக் கொண்டிருக்கிறது. 'இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுமே 'அதே' பரமாத்மாவைக் கொண்டிருக்கிறது' என்றுகூட நாம் சொல்ல முடியாது. ஏனெனில் நாம், 'அதே' என்னும் சொல்லைப் பயன்படுத்தும்பொழுது, பரமாத்மாவின் நகல்கள்தான் நம் எல்லோப்பினுள்ளும் இருக்கிறது என்று அர்த்தமாகிறது.
இல்லை, அது அப்படி இல்லை. ஒரே ஒரு பரமாத்மாதான் இருக்கிறது, அதைத் தவிர வேறெதுவுமில்லை. நம்முடைய மனம்தான் எல்லைகளை வரையறுக்கிறது. இரு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடுகளை உருவாக்குவதுபோலத்தான் இது இருக்கிறது. பல நாடுகள் எல்லைகளுக்காகச் ச ண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலத்தை எடுத்துக் கொள்ள போரிடுகிறது. அவை, எல்லைக் கோடுகளை வரைந்துகொண்டும் அழித்துக் காண்டும் இருக்கின்றன.

நாம், நமக்குள்ளிருக்கும் ஆத்மாவுக்கும்
பரமாத்மாவுக்கும் இடையில் எல்லை வகுக்க
முடியும் என்று நினைக்கிறோம். நாம் நம்
ஆத்மாவை, பயம் மற்றும் பேராசைகளைக்
கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு
பெட்டியினுள் வைத்துத் தாழிட முயற்சிக்கிறோம். அதை மூடியும் விடுகிறோம், பிறகு அதைத் திறக்கவே பயப்படுகிறோம்.
உண்மையில் நாம், நம்முடைய அடையாளத்தை இழக்கப் பயப்படுகிறோம். நாம், நம்முடைய தனிப்பட்ட அஹங்காரத்தோடு நம்மை இணைத்துக் கொள்கிறோம். நாம் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறோம் என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்தவே விரும்புகிறோம்.
நம் மனத்திற்குத் தெரியும், அது திறந்துகொண்டால் ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாகிவிடும் என்று! இந்த உடலில் உள்ள ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே, இரண்டிற்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதை மனம் அறியும். அதனால்தான் நம் மனம், அது ‘முடியைத் திறந்தால், நம்முடைய அடையாளங்களை இழந்து, மற்ற எல்லோரையும் போல ஆகிவிடுவோம்’ என்று அஞ்சுகிறது; இது நிகழ, அது விரும்புவதில்லை.
அதனால், நாம் நம் தனி அஹங்காரத்தை இறுகப் பற்றிக்கொள்கிறோம். நாம் எல்லோருமே ஒன்றாக இணைக்கப்பட்டவர்கள்தான் என்பதையும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுமே ஒரே பிரபஞ்ச விழிப்புணர்வுதான் என்பதையும் உணர்ந்தால் மட்டுமே, நாம் அந்தப் பெட்டியை உடைத்துத் திறந்து, பரமாத்மாவுடன் இணைவோம்.
உடலிற்கும் மனத்திற்கும் சினேகிதனாக இருங்கள்

கிருஷ்ணர், நித்ய விழிப்புணர்வை உணர்வதற்கான ஒரு நுட்பத்தைத் தருகிறார். அவர் இதைச் சொல்லி முடிக்கிறார்: தூய்மையான விழிப்புணர்வாக இருந்து, ஸாக்ஷியாகயிருந்து கவனித்தால், உடல்-மனம் என்ற அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைவோம், அழிவற்ற விழிப்புணர்வை அடைவோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், க்ஷேத்ரத்தை, ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதுதான், உடல்- மனப் பற்றிலிருந்து நம்மை
விடுவித்துக் கொள்வதற்கான ஒரே வழி.
நாம் க்ஷேத்ரஜ்ஞனாக, அனைத்தையும்
ஸாக்ஷியாகயிருந்து கவனிக்க வேண்டும்.
நாம் அதைச் செய்யும்பொழுது, நம்
உடல்-மனத்திலிருந்து தனித்திருக்கும்
ஆத்மாவைக் காண்போம்.
புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய அசைவுகள், எதிர்ச்செயல்கள், மனவெழுச்சிகள் எல்லாமே, நமது 'உடல்-மனம்' அமைப்போடு தொடர்புள்ளவையே. நமது உடலை நாம் அசைக்கும் விதமே, நமது உடல்-மன அமைப்பின் ஒரு எதிர்ச்செயல்தான். நமது மன எழுச்சிகளான கோபம், சிரிப்பு, சோகம், மகிழ்ச்சி ஆகியவை, நம் மனத்தின் எதிர்ச்செயல்களே. அவையனைத்துமே நமது உடல்-மன அமைப்பினால் உருவாக்கப்பட்ட அசைவுகளே.
நமது உடலை
நாம் அசைக்கும் விதமே,
நமது
உடல்-மன அமைப்பின்
ஒரு எதிர்ச்செயல்தான்.
நம்முடைய உடல்-மன அமைப்பில் நிகழ்கிற இந்த அசைவுகளை, நாம் ஒரு ஸாக்ஷியாக இருந்து பார்க்கும்பொழுது, நம் உடல்-மன அமைப்பிலிருந்து நம்மை விலக்கிக்கொள்கிறோம். விண்ணில் தவழ்ந்து செல்லும் மேகங்கள், விண்ணைப் பாதிப்பதில்லை; திரையில் ஓடும் காட்சிகள், திரையைப் பாதிப்பதில்லை; அதேபோல் உடல்-மன அமைப்பில் ஏற்படும் மனவெழுச்சிகள், நம் ஆத்மாவைப் பாதிப்பதில்லை.
நமது எண்ணங்களையும் மன எழுச்சிகளையும் ஸாக்ஷியாகயிருந்து கவனிக்கிறோம் என்ற எண்ணமும்கூட, நம் மனத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு எண்ணமே. அதுவும்கூட நமது எண்ணமே. மனம், இன்னமும் மறைமுகமாக வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. அந்த ஒரு எண்ணத்திற்கும் அப்பால் சென்றால்தான், நித்ய விழிப்புணர்வை நாம் அனுபவமாகக் காண்போம்.
அந்த நுட்பத்தை இப்பொழுது நான் உங்களுக்கு விளக்குகின்றேன். அந்த நுட்பத்தைச் செய்ய குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும்.
நீங்கள் உங்களுடைய உடல் அசைவுகளை, மூச்சின் அசைவுகளை, மன அசைவுகளைக் கவனிக்கப் போகின்றீர்கள்.
உடலின் அசைவுகள், மூச்சின் அசைவுகள், மனத்தின் அசைவுகள் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.
புரிந்துகொள்ளுங்கள், உள்மூச்சின்பொழுதும், வெளிமூச்சின்பொழுதும், உங்கள் வயிறு சற்று மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருக்கும். உங்கள் மூச்சுகளின்பொழுது, உங்கள் வயிறு மிக மெதுவான அசைவுகளோடு இருக்கும்.
ஸாக்ஷியாகயிருந்து அந்த அசைவுகளையே கவனியுங்கள்.
இரண்டாவதாக, உங்கள் உள் மூச்சு, வெளி மூச்சுகளின்பொழுது, அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், உங்கள் மூச்சின் ஓட்டத்தையே கவனியுங்கள்.
மூன்றாவதாக, உங்கள் மனத்தைக் கவனியுங்கள். அங்கே எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும், உங்கள் எண்ணங்களெல்லாம் சரியா, தவறா என்றெல்லாம் கணித்துக் கொண்டிருக்காதீர்கள். ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு நெருங்கிய சினேகிதனைப்போல, உங்கள் மனத்திற்கு அருகில் அமருங்கள். அது என்ன சொல்ல விரும்பினாலும், அதைச் சொல்ல அனுமதியுங்கள். அது என்ன பேச விரும்பினாலும், அதைப் பேச அனுமதியுங்கள்.
எந்தவிதமான பற்றும் இல்லாமல், அவை எல்லாவற்றையும் கவனியுங்கள், அவற்றை நிறுத்தாதீர்கள்; எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாதீர்கள். அவற்றின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்காதீர்கள்.
நாம் தொடர்ந்து உடலோடும் மனத்தோடும் போராடிக்கொண்டே இருக்கிறோம். அவற்றோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதால் மட்டுமே, அவற்றின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. நட்புத்தன்மையுடன் அணுகுவதன் மூலமாகவே, அவற்றுக்கப்பால் கடந்துசெல்ல முடியும். உடல்-மனத்தோடு எதிர்மறை மனோபாவம் காட்டினால், இயற்கையாகவே, அவற்றை அவதூறு செய்வோம்; அவற்றுடனான உறவு வன்முறைப்போக்குடன்தான் இருக்கும்.
உடலையும் மனத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனத்தை ஒரு நல்ல நண்பனைப்போன்று கவனியுங்கள். உள்ளிருந்து எது வேண்டுமானாலும் வெளிவர விடுங்கள்; அதில் தவறேயில்லை. மனத்தை ஆதரிக்கவும் செய்யாதீர்கள். அடக்கவும் செய்யாதீர்கள். நாம் அதை ஆதரித்தால், வெறும் குப்பைகளின் பின்னால்தான் செல்வோம்.

நாம் அதை அடக்கினால், அந்தக் குப்பைகளைக் கிளறி ஆராய்ந்துவிட்டு, மீண்டும் அவற்றை உள்ளே தள்ளுவதில்தான் போய் முடியும். ஆக, இந்த இரண்டு வழிகளுமே பயன்தராது. அதனால் வெறுமனே கவனியுங்கள்.
'கவனித்தல்' என்பது நெருப்பைப்போல்
வேலைசெய்கிறது. எல்லா
எண்ணங்களையும் எரித்து விடுகிறது.
புரிந்துகொள்ளுங்கள், உங்கள்
எண்ணங்களை ஆதரிப்பதோ அல்லது
அடக்குவதோ உதவாது, 'கவனித்தல்'
மட்டுமே பயன்தரும்.
நாம் நம் இருப்பினுள் இன்னும் ஆழமாகச் செல்லும்பொழுது, இந்த ஸாஷி பாவனை, இயல்பாகவே புத்திசாலித்தனத்தை உருவாக்குகிறது. புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நாள் முழுக்க, 24 மணி நேரமும், அதே மன நிலையில் இருக்க வேண்டியதில்லை. ஒரு கண நேரக் காட்சி கிடைத்தாலே போதுமானது. அந்தச் சக்தியானது நமது மொத்த வாழ்க்கைக்குமே வழிகாட்டியாகத் திகழும்.
சாதனைகளுக்குச் சாத்தியமான சக்தியைப் பெறுங்கள்
நாம் ஒரு ஸாஷியாக இருக்கும்பொழுது, நமக்குள் நிகழும் அமைதியைப் புரிந்துகொண்டோமேயானால், அது ஒரு சில நொடிகளேயானாலும்கூட, நாம் அந்த இனிமையைச் சுவைப்போம்; பின்பு, அதை அடிப்படையாகக்கொண்டு செயல்படத் தொடங்குவோம். அந்த ஒரு சில நிமிட நேரத்திலிருந்துதான், பெரிய பெரிய சாதனைகளுக்குச் சாத்தியமான சக்தி நிகழ்கிறது.
மிகப்பெரிய சாதனைகளும், கண்டுபிடிப்புகளும், உடல்-மனம் கடந்த விழிப்புணர்வாலும் உள்ளுணர்வாலும்தான் கிடைக்கப் பெற்றன. ஸாக்ஷி விழிப்புணர்வின் படைப்புகளே அவை.
இது விஞ்ஞான உலகிற்கு மட்டுமல்ல, கலை, ஆன்மிகம் போன்ற எல்லாத்துறைகளுக்குமே பொருந்தும். உடல் - மன அமைப்பைக் கடந்த நிலையில், நாம் நம் ‘இருப்பி’லிருந்து உச்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவோம்.
மிகப்பெரிய சாதனைகளும்,
கண்டுபிடிப்புகளும்,
உடல்-மனம் கடந்த
விழிப்புணர்வாலும்
உள்ளுணர்வாலும்தான்
கிடைக்கப் பெற்றன!
நாம் முழுமையாக இருக்கும்பொழுது,
நமது இருப்பின் உச்ச வெளிப்பாடு
நிகழ்கிறது. நாம் எப்போதெல்லாம்
முழுமையாக இருக்கிறோமோ,
அப்பொழுது நாம் புனிதமாக இருக்கிறோம்.
புரிந்துகொள்ளுங்கள், முழுமைக்கோ
அல்லது புனிதத்திற்கோ ஒரே வழி,
ஸாக்ஷியாக இருத்தல் மட்டுமே.
தூய்மையான உள் வெளியை அருளுமாறும், ஸாக்ஷி பாவனையை அருளுமாறும், ஒப்புயர்வற்ற இறுதி அனுபவத்தை அருளுமாறும், நித்யானந்தத்தை நம்முள் நிலைநிறுத்துமாறும், பரப்ரஹ்ம கிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்.
கேள்வி: ஸ்வாமி, எதனால் உங்களுடைய சீடர்களும், ஆசிரமத்தில் இருப்பவர்களும் வெண்மை நிற ஆடைகளையே அணிகிறார்கள்? காவி உடைகள் உடுக்க வேண்டுமானால், அதற்கான தகுதி என்ன?
வெவ்வேறு நிறங்கள், உடலளவிலும் மனதளவிலும் வெவ்வேறு விளைவுகளை நிகழ்த்த வல்லவை. வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு வழிகளில், உங்களுடைய சக்தியைப் பாதிக்கின்றன.
வெண்மை நிறம், உங்களை அமைதிப்படுத்துகிறது; நேர்மறை சக்தியை எளிதில் ஈர்த்து தக்கவைத்துக் கொள்கிறது. இப்போது நான் ஒளியையும் வெப்பத்தையும் பிரதிபலிக்கும் பொதுவான வெண்மை கோட்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை.
பிரபஞ்சத்தின் வெளிப்பாடான குருவின் மீதோ அல்லது பிரபஞ்ச சக்தியின் மீதோ நீங்கள் தியானம். செய்யும்பொழுது, வெண்மையான ஆடைகள் அணிந்திருந்தால், உங்களை ஒருமுகப்படுத்துவதற்கோ, உங்கள் கவனத்தை ஒருங்கிணைப்பதற்கோ ஆன திறன் அதிகரிக்கும். தியானப் பயிற்சி வகுப்புகள் நடக்கும்பொழுது, மக்களை வெண்மை நிற ஆடைகளை அணியுமாறு நாங்கள் பரிந்துரைப்பதற்கான காரணம் இதுவே.
நகைச்சுவையாகச் சொல்வதென்றால்,
அவர்கள் வெண்ணிற ஆடைகளை
அணியும்பொழுதுதான், அவர்கள்
தங்களுடைய ஆடைகளை எந்தளவிற்குச்
சுத்தமாக வெளுக்கிறார்கள் என்பதைக்
கண்டுகொள்ள எளிதாக இருக்கிறது!
வெளிர் நிறங்கள், அமைதியை, ஸ்merged/ஸத்வ மன நிலையை மேம்படுத்தும்.
பிரகாசமான நிறங்கள், உங்களுள் உள்ள,
எதிர்த்துப் போராடும் தன்மை, பேராசை
போன்ற ரஜோ குண அம்சங்களை
வெளிக்கொணரும்.
கருப்பு போன்ற ஆழ்ந்த நிறங்கள், உங்களுடைய மந்தத்தன்மையை அதிகரிக்கும்.
நீங்கள் அடைய வேண்டுமென போட்ட திட்டத்தைப் பொறுத்து, அதை அடைவதற்கான மனோ நிலையை நீங்கள் அடைய உதவும் நிறத்தை, நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
சங்கீதம், ஒலி, நறுமணம், வாசனை, உணவு, ருசி ஆகியவற்றுக்கும் அதே அடிப்படை உண்மைகள் பொருத்தும். அதனால்தான் பக்திப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட இராக தாளங்களையும் ‘ராக்’, சங்கீதம் வேறு விதமான இராக தாளங்களையும் பின்பற்றுகின்றன. ‘டெக்னோ’ போன்ற சங்கீதம் மன ஆரோக்கியத்துக்கும், கேட்கும் சக்திக்கும் கேடு விளைவிப்பவை என்று ஆராய்ச்சிகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
‘காவி’ நிறம், ஒரு சிறப்பு மிகுந்த நிறம். இது, இந்தியாவைத் தவிர, வேறெந்த தேசத்திலும், இவ்வளவு பிரசித்தமான ஒரு நிறமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். இது துறவுக்கான நிறம். இது, நீங்கள் பிரபஞ்ச சக்தியிடம், உங்கள் அடையாளத்தை இழந்து, சரணாகதி அடைவதையே குறிக்கிறது; உங்களுடைய மனத்தை இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
சீடர்களுக்குள்ளிருக்கும் வெவ்வேறு துறவு நிலைகளுக்கு ஏற்ப, அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்கள் தொடர்ந்து அப்பாதையில் முன்னேறிச் செல்ல உதவுவதில் காவிநிறம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குருவால் சக்தியூட்டப்பட்டு, அவருடைய ஆசீர்வாதத்துடன் தரப்படும்போது, அந்தக் காவிநிறம் மேலும் புனிதத் தன்மை மிக்கதாகிறது.
இந்த நிறம் தனக்கே உரிய மேன்மையும் கம்பீரமும் கொண்டதாகும். இந்த நிறம், ஒரு தகுதியான நபர் அணியும்போது, அரசாட்சியோடு சம்பந்தப்பட்ட ஊதா நிறத்தைக் காட்டிலும், இன்னும் அதிக மேன்மையையும் கம்பீரத்தையும் தருகிறது. இந்த நிறம், பிரபஞ்சத்தோடு உங்களை ஒன்றிணைக்கிறது.
ஓம் தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரம்ஹவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஶ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகோ நாம த்ரயோதஶோ'த்யாய: ॥
இது ஓம் தத் ஸத், ஶ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ‘க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம்.