KAILASA Library/பகவத்கீதை/என்னுள்ளேயே எப்போதும் வாழுங்கள்Sign in
பகவத்கீதை

என்னுள்ளேயே எப்போதும் வாழுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna playing flute

12.8. உங்கள் மனத்தை என்னிடம் மட்டுமே வைத்து, என்னுள் நிலைநிறுத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்வீர்கள். இதில் சந்தேகம் இல்லை.

அன்பு - நிபந்தனை விதிக்காது

"சர்வ வல்லமைப் படைத்த தெய்வீகத் தன்மை கொண்ட என்னிடமே உங்கள் மனத்தை நிலைநிறுத்தி, உங்கள் மனம், உடல் மற்றும் புலன்களை என்மேல் ஈடுபடுத்துவதன் மூலம், நீங்கள் என்னிடமே வாழ்கிறீர்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை."

"ந ஸம்சய, எந்தச் சந்தேகமும் இல்லாமல்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். இப்பொழுது அவர் நுட்பத்திற்கு வருகிறார். ஏதாவது ஒரு தருணத்தில் தர்ம சக்ரம் சுழல ஆரம்பித்தாக வேண்டும். முதலில் அவர் இறுதி அனுபவம் மற்றும் வெளிப்பாட்டைக் கொண்ட தர்ம சக்ரத்தைப் பற்றி விளக்கினார். இப்பொழுது நுட்பத்திற்கு வருகிறார்.

Graph

அன்பு என்பது ஒரு 'மனநிலை' இல்லை
என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
அது வெறுமனே ஒரு சாதாரண உணர்ச்சி
இல்லை. அதுவே நம்முடைய இருப்புத்
தன்மை. அது வெறும் மனநிலையாக
இருக்கும்வரை வரும், போகும்.

இரண்டு வகையான அன்பு உண்டு. ஒன்று அன்பின் உச்சம் மற்றொன்று அன்பின் நீச்சம். இப்போது அதை விளக்குகிறேன்.

அன்பின் நீச்சம், படுக்கைக் கோடு போன்றது. அது காலத்தோடு தொடர்பு கொண்டது. அதற்குத் தொடக்கமும் உண்டு, முடிவும் உண்டு. தொடங்கிய எது ஒன்றும் முடியவும் வேண்டும். அது முடிவதற்கு அதிக நேரம்

> அன்பு என்பது
> ஒரு 'மனநிலை'
> இல்லை;
> அது வெறுமனே
> ஒரு சாதாரண
> உணர்ச்சியும் இல்லை.
> அதுவே நம்முடைய இருப்புத்
> தன்மை.

எடுத்துக் கொண்டால், அது நிரந்தரமானது
என்று எண்ண வேண்டாம். அது, சில
மாதங்கள் அல்லது சில வருடங்கள் எடுத்துக்
கொண்டாலும், முடிவுக்கு வந்துவிடும். அது
காலத்திற்குட்பட்ட மற்றும் தற்காலிகமான
ஒன்று. இதுதான் படுக்கைக் கோடு அன்பு.
அது காலத்தோடு தொடர்பு கொண்டதாகவே
இருக்கிறது.

செங்குத்துக்கோடு அன்பு விழிப்புணர்வுடன் தொடர்பு கொண்டது. செங்குத்துக்கோடு அன்பு தொடங்குவதும் இல்லை, முடிவதும் இல்லை. அது பாகுபாடு

பார்ப்பதில்லை. நம்முடைய சுபாவமான
குணமே அதுதான். அது பொங்கிப் பாய்ந்து
பரவுகிறது.

நாம் பாகுபாடு பார்த்து அன்பு செய்தால்,
அது அன்பாகாது. அது வெறும் ஒரு
சாதாரண ஈர்ப்புதான். நாம் அன்பு செய்யும்
நபர் நம்முடைய எதிர்பார்ப்பு என்னும்
வரையறைக்குள் பொருந்தும்வரை
அன்பு வளரும். அந்த நபர் நம்முடைய
வரையறைக்குள் பொருந்தாத அந்தக்
கணமே, அன்பு மறைந்துவிடும்.

என்னுடைய முதல் தியான வகுப்பில், நான் மக்களிடம், அவர்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே விரும்பும் நபர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்கும்படி சொல்வேன். பொதுவாக, மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய பட்டியலையே தயாரிப்பார்கள்.

கணவன், மனைவி, அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று அவர்கள் யாரையெல்லாம் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அந்த நபர்களுடைய பெயர்களையும், தாங்கள் மகிழ்ச்சியுடனும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், யாரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியுள்ளதோ அந்த நபர்களுடைய பெயர்களையும் அந்தப் பட்டியலில் இணைப்பார்கள்.

நான் என்னுடைய உரையைத் துவங்கியவுடன், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயராக நீக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் யார் பெயரை நீக்குகிறீர்களோ, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர் மீது நீங்கள் முதலில் வைத்திருந்ததுகூட உண்மையான அன்பு இல்லை. இருப்பினும் மக்கள் தங்களுடைய மகள் அல்லது மகன் பெயர் வரும்போது தயக்கம்கொள்வார்கள்.

உங்களுடைய எல்லாவித அன்பும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான். பொருளாதார ரீதியான உதவிக்காகவோ அல்லது மன ரீதியான ஆதாரத்திற்காகவோ நீங்கள் இந்த உறவுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு துன்பம் வரும் காலங்களில், பொருளாதார ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாக உங்களைத் தாங்குவதற்காக நீங்கள் யாரையோ, குடும்பம் என்ற பெயரிலோ அல்லது சமுதாயம் என்ற பெயரிலோ உங்களுடன் வைத்திருப்பீர்கள்.

நாம் பிறரை நேசிப்பதற்கான இரண்டாவது
காரணம், 'நாம் நல்லவர்கள்' என்ற
நற்சான்றிதழைப் பெறுவதற்காகவும்,
மற்றவர்களுடைய நேர்மறையான
அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும்
மட்டுமே!

சில சமயங்களில் பணம் அல்லது மன ரீதியான ஆதாரத்திற்காகப் பிறரை நேசிக்காவிட்டாலும், அவர்களிடம் நாம் அன்படனும் பரிவுடனும் நடந்துகொள்வதற்குப் பிரதிபலனாக, அவர்களுடைய நற்சான்றிதழையும் கவனத்தையும் நம் மீது செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

நமக்கு எப்போதும் எதையாவது சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது, அந்தத் தேவையே நம்முடைய அன்பை வெளிப்படுத்தத் தூண்டுகிறது. அது நிபந்தனைகளுக்குட்படாமல் ஒருபோதும் இருப்பதில்லை.

"இல்லை ஸ்வாமிஜி, நாங்கள் இந்த மூன்று காரணங்களுக்காக மட்டும் எங்கள் மகனையோ அல்லது மகளையோ நேசிப்பதில்லை," என்று மக்கள் என்னிடம் சொல்வதுண்டு.

நான் அவர்களிடம், "சரி, திடீரென்று உங்கள் மகன் தன்னிச்சையாக முடிவு எடுக்கத் துவங்ாகினாலோ, உங்களுடைய நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றாலோ, உங்களுடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றாலோ, உங்களுடைய விதிகளின்படி நடக்கவில்லையென்றாலோ, அவன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மாறாதிருக்குமா? நேர்மையுடன் ஆராயுங்கள்," என்று கேட்பேன்.

இயற்கையாகவே அவர்கள், "இல்லை, அது அப்படியே இருக்காது அன்பின் அளவு சிறிது குறைந்திருக்கும்," என்று சொல்வார்கள்.

Hands playing a flute

நம் குழந்தைகள் - நம்முடைய தொடர்ச்சி அல்ல

இதன் பொருள் என்ன? நம்முடைய அடுத்த சந்ததியினர் நம் வாழ்க்கையின் தொடர்ச்சியாக இருக்கும் வரை, அவர்களை நாம் நேசிக்கிறோம். நம்முடைய விருப்பங்களை அவர்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை அவர்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கிறோம்.

நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியவில்லையோ, அவற்றை அவர்கள் மூலம் சாதிக்க முயற்சிசெய்கிறோம். நம்முடைய வாழ்க்கையின் ஒரு நீடிக்கப்பட்ட பகுதியாக அவர்கள் வாழும் வரை, நடந்துகொள்ளும் வரை நம்முடைய உறவு அழகாகவே இருக்கும்.

ஆனால் அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்கத் தொடங்கிய அந்தக் கணமே, அவர்களுடைய வாழ்க்கையின் குறுக்கே நின்று, இறுகப் பிடித்து தடுப்பதன் மூலம் நாம் அவர்களை மூச்சு திணறச் செய்வதாக அவர்கள் நினைக்கத் தொடங்கிய கணமே, அவர்கள் எழுந்து நின்று ‘இல்லை’ என்று மறுப்புத் தெரிவித்த கணமே நம்முடைய உறவு வேறு ஒரு பாதையில் செல்லத் தொடங்கி விடுகிறது.

குழந்தைகளை, குழந்தைகளுக்காகவே நேசியுங்கள்!

குழந்தைகள், தங்களுடைய பெற்றோர்களை எதிர்க்கும்போதுதான்தங்களை வயதில் முதிர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். அது அடிப்படையான உந்துதல். அவர்கள் மறுப்பு சொல்லும்போதுதான் தங்களை தனி நபர்களாக நிலைநிறுத்திக் கொண்டதாக உணர்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘இல்லை’ என்று மறுப்புத் தெரிவிக்கும் ஒரு வார்த்தைதான். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அவர்கள் மறுப்புத் தெரிவிக்கும்போது தங்களை வலிமையானவர்களாக எண்ணுகிறார்கள். அதனால்தான் உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்த்துப் போராடுபவர்களாகவே இருக்கிறார்கள்.

மேற்கானாலும் சரி, கிழக்கானாலும், உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் எல்லாக் கலாச்சாரங்களிலும் உள்ள, இளைஞர்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மறுப்புத் தெரிவிக்கும்பொழுது தங்களைப் பலசாலிகளாக எண்ணுகிறார்கள், 'இல்லை' என்று மறுப்புத் தெரிவிக்கும் வார்த்தை, ஒருவித பலத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது.

ஆனால் நம்முடைய அன்போ 'ஆமாம்' என்பதைச் சொல்வதைத்தான் சார்ந்து உள்ளது. நமக்கு 'ஆமாம்' என்று பதில் கிடைத்தால், நம்முடைய அன்பும் 'ஆமாம்' என்ற நிலையிலே இருக்கும்.

நமக்கு 'இல்லை' என்ற பதில் கிடைத்தவுடன், நாமும் அவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லத் துவங்கிவிடுவோம். இதுதான் அன்பின் நீச்சம். அதனால்தான் அது ஏதோ சில காரணங்களுக்காக முடிந்து போய்விடுகிறது. ஆனால் அன்பின் உச்சம் முடிவதே இல்லை. ஏனென்றால் அது தொடங்குவதே இல்லை. திடீரென்று ஒரு தருணத்தில், நாம் நம்முடைய இந்த உடலில் வாழ்வதைப்போலத்தான், எல்லோருடைய உடலிலும் வாழ்கிறோம் என்பதை உணர்கிறோம்.

அன்பின் உச்சம் முடிவதே இல்லை. ஏனென்றால் அது தொடங்குவதே இல்லை.

நீங்கள் துறக்க வேண்டியதில்லை

உபநிஷதத்தில் ஓர் அழகிய உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

குரு தம்முடைய சீடரைப் பார்த்து கேட்டார்,
"நீ உன்னுடைய எல்லாப் புலன்களையும்
அனுபவிக்கிறாயா?"

சீடர், "ஆம்," என்று சொன்னார்.

குரு மேலும் கேட்டார், "உன்னுடைய புலன்களில் ஏதாவது ஒன்றில் குறையிருந்தாலும், உன்னிடம் அதே அளவு மகிழ்ச்சி இருக்குமா.'

அதற்குச் சீடர், "இல்லை, அது இருபது சதவீதம் குறைவாக இருந்திருக்கும். என்னுடைய இரண்டு புலன்களில் குறையிருந்தால் நாற்பது சதவீதம் மகிழ்ச்சி குறைந்திருக்கும்," என்று பதில் சொன்னார்.

குரு திடீரென்று கேட்டார், "உனக்கு இன்னும் ஐந்து புலன்கள் அதிகமாக

Illustration

இருந்தால்?'' சீடன் பதில் சொல்கிறார், "இயற்கையாகவே என்னுடைய இன்பம் இன்னும் ஒரு நூறு சதவீதம் அளவிற்கு அதிகமாக இருக்கும். எனக்கு மேலும் ஒரு உடல் இருந்ததானால், நான் எல்லாவற்றையும் இரு மடங்கு அதிகமாக அனுபவிப்பேன். எனக்கு ஐந்து உடல்கள் கொடுக்கப்பட்டால் நிச்சயமாக நான் எல்லாவற்றையும் ஐந்து மடங்கு அதிகமாக அனுபவிப்பேன்,'' என்றார்.

"இந்த உலகில் உள்ள எல்லா உடல்களிலும் நாம் வாழ்கிறோம் என்பதை அறிந்து கொண்டால், நாம் எந்த அளவிற்கு இன்பத்தையும் பெருமகிழ்ச்சியையும் அனுபவிப்போம்?"

"அது அளவிடமுடியாததாகவும் அழிவில்லாததாகவும் உச்சக்கட்ட பரவசமாகவும் இறுதியானதாகவும் இருக்கும்."

"இதைத்தான் ஞானமடைந்தவர்கள் எப்போதும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள்!"

இந்தப் பிரபஞ்சமே தாங்கள்தான் என்பதை உணர்ந்தவுடன், எல்லா உயிர்களிலும் தாங்களே இருப்பதாக உணர்ந்தவுடன், அவர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியை, இன்பத்தை, ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு வெளி உலகத்திலிருந்து எதுவும் தேவைப்படுவதில்லை.

எங்களுடைய நிகழ்ச்சியில் ஒரு வயதான
மனிதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்
முடிவில் அவர் என்னிடம், "நீங்கள்
இவ்வளவு சிறிய வயதில் ஸந்யாசியாகி,
குருவாகிவிட்டீர்கள். நீங்கள் உங்கள்
வாழ்க்கையை இழந்து விட்டீர்கள்,'' என்று
ரொம்பவும் அனுதாபத்துடன் சொன்னார்.
அவர் தம்முடைய அனுதாபத்தை
வெளியிட்டார். நான் எதையோ இழந்து
விட்டதாக அவர் எண்ணினார்.

> எல்லா உயிர்களிலும்
> தாங்களே இருப்பதாக
> உணர்பவர்கள்
> மிகப்பெரிய ஆனந்தத்தை
> அனுபவிக்கிறார்கள்.

"என்னைப் பார்த்து அனுதாபடாதீர்கள். உண்மையில் நான்தான் உங்களைப் பார்த்து அனுதாப்பட வேண்டும். அறுபது வருடங்கள் ஆகியும் உங்களால் உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள முடியவில்லை. அறுபது வருடங்களுக்குப் பின்பும், உலக வாழ்க்கை என்னும் ஸம்சார மாயையில் சிக்கிக்கொண்டு, அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். என்னைப் பார்த்து அனுதாப்பட வேண்டாம். நான்தான் உங்களைப் பார்த்து அனுதாப்பட வேண்டும்!" என்று அவரிடம் சொன்னேன்.

உண்மையான துறவு
என்பது
நாம் உலகத்தைத்
துறப்பதில்லை;
உலகம் நம்மைத்
துறப்பதுதான்!

நாம் நம்முள் அளவில்லாப் பரவசத்தையும் ஆனந்தத்தையும் உணரும்பொழுது, வெளி உலகத்திலிருந்து நாம் எதையோ இழந்து கொண்டிருப்பதாக நினைப்பதே இல்லை. நமக்கு ஏதோ ஒன்று தேவை என்று நாம் நினைப்பதேயில்லை.

உண்மையான துறவு என்பது நாம் உலகத்தைத் துறப்பதில்லை; உலகம் நம்மைத் துறப்பதுதான்!

நமக்குள் இன்பம், பெரு மகிழ்ச்சி, ஆனந்தம் இருக்கும்பொழுது, நாம் தன்னிச்சையாக அதை வெளிப்படுத்தத் தொடங்குவோம். நாம் எப்போதுமே நாம் எதையோ தவறவிடுவதாகவோ அல்லது எதையோ இழப்பதாகவோ நினைப்பதில்லை.

உள்ளுக்குள் ஆனந்தத்தை உணரும்வரை உலகத்தைத் துறக்க வேண்டாம் என்று நான் மக்களுக்குச் சொல்வதுண்டு. துறக்கவே வேண்டாம். ஆனந்தத்திற்காக வேலை செய்யுங்கள், அதை உணர முயற்சி செய்யுங்கள். அது நிகழும்போது, துறவு தானாக நிகழும். நீங்கள் உள் உலகத்தில் உறுதியாக நிலைகொள்ளாமல், வெளி உலகத்தைத் துறந்தீர்களானால், மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள், மனச் சோர்வில் விழுந்து விடுவீர்கள்.

உள் உலக அனுபவத்தைப் பெறாமல் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த பல ஸந்யாசிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சமுதாய சேவையில் சிக்கி, பின் மனச் சோர்வில் விழுகிறார்கள்.

நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை அடையும்போது அவர்கள் உளைச்சலுக்குள்ளாகிறார்கள். அவர்களே உளைச்சலில் இருக்கும்பொழுது, உலகத்திற்கு ஆலோசனை சொல்கிறார்கள். எத்தனையோ ஸந்யாசிகள் உளைச்சலுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

நல்ல உறுதியான அனுபவம் உள்ளுக்குள்
ஏற்படும்வரை நீங்கள் உலகத்தைத்
துறக்க வேண்டாம்.

உங்களுக்கு அனுபவம் கிடைத்தவுடன்,
நீங்கள் துறக்க வேண்டியதில்லை. தானாக
துறவு நிகழும். இந்த எல்லா விஷயங்களும்
உங்களைத் துறந்துவிடும்.

கிருஷ்ணர்
கற்றுக் கொடுக்கும்
கருத்துகளைத் தொடர்ந்து
உங்களுக்குள்
விதைத்துக்கொண்டே
இருக்க
முயற்சிசெய்யுங்கள்.

நீங்கள் அவற்றைத் துறக்க வேண்டாம், மாறாக அவை உங்களைத் துறந்துவிடும்! நீங்கள் அவற்றைத் துறக்கும்போது பிரச்சினைகள் உருவாகும். அவை உங்களைத் துறந்தால், அது சரியான வழிமுறையாக இருக்கும். உங்களுக்குள் அந்த குதூகலம் இருக்கும்போது, நீங்கள் அந்தக் கொண்டாட்டத்தை அனுபவிக்க தொடங்கும்போது எதையும் துறக்க வேண்டியதில்லை, தன்னிச்சையாகவே துறவு நிகழ்ந்துவிடும்.

படிப்பது, வாழ்வின் பழக்கமாகட்டும்

இங்கே கிருஷ்ணர் தர்ம சக்ரத்தைச் சுழல வைப்பதற்கான நுட்பத்தை வழங்குகிறார். "உங்களுடைய மனத்தை என்னுள் நிலைநிறுத்துங்கள். உங்களுடைய புத்திசாலித்தனத்தை என் மேல் நிலைநிறுத்துங்கள். எல்லையில்லாத விழிப்புணர்வை நீங்கள் அடைந்த பின் என்னுள் எப்போதும் வாழ்வீர்கள்."

நாம் நம்முடைய அறிவை அவரிடம் நிலைநிறுத்துவது எப்படி?

கிருஷ்ணர் கற்றுக் கொடுக்கும் இந்தக் கருத்துகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து உங்களுக்குள் விதைத்துக்கொண்டே இருக்க முயற்சி செய்யுங்கள். நாம் விடும் ஏப்பம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தது என்று ராமகிருஷ்ணர் சொல்கிறார். உதாரணத்திற்கு சில வகை காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டோமேயானால் அவற்றின் மணம் நாம்விடும் ஏப்பத்தின் மூலம் வெளிப்படும்.

அதே போன்று நாம் தொடர்ந்து இந்தக் கருத்துகளை நம்முடைய மனம் மற்றும் விழிப்புணர்வில் சேர்த்துக்கொண்டே வந்தால், நாம் இயற்கையாகவே அவற்றைத்தான் வெளிப்படுத்துவோம். அவை நம்முடைய இருப்புத் தன்மையின் மூலம் ஒளிவீசத் தொடங்கும்.

கிருஷ்ணர் உங்களிடம், உங்கள் புத்திசாலித்தனத்தை அவரிடம் நிலைநிறுத்தச் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், நாம் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும்போது, தாமாகவே இந்தக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அதற்குரிய தீர்வுகள், நம்மை வந்தடைந்துவிடும்.

இப்போதிருக்கும் நிலையில், நாம்ர்வுக்காக ஒரு புத்தகத்தைத் தேடி ஓடுகிறோம், அது எதைக் குறிக்கிறதென்றால், வெளி உலகில் மட்டுமே நம்முடைய குரு இருக்கிறார் என்பதையே குறிக்கிறது.

நமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லையென்றாலும்கூட இந்த கருத்துக்களை முயற்சிசெய்து உள்வாங்கிக்கொண்டோம் என்றால், அவை நமக்குள் நிலையாய்த் தங்கி, நம்மை மேலும் மேலும் உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்லும். நமக்குப்பிரச்சினைகள் ஏற்படும்போது, அவை நமக்கு வழிகாட்டும்.

நீங்கள் ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கும்பொழுது மட்டும் புத்தகங்களைப் படிப்பது அல்லது நீங்கள் ஒரு தீர்வைத் தேடும்பொழுது மட்டும் புத்தகங்களைப் படிப்பது என்றிருந்தீர்களானால், நீங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்களை உள்வாங்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் மனம் குழப்பத்தில் இருக்கும். நீங்கள் குழப்பத்தில் இருக்கும்பொழுது எப்படி உள்வாங்குவீர்கள்? நீங்கள் பிரச்சினையிலும் குழப்பத்திலும் இருக்கும்போது, அதை எப்படி நீங்கள் புரிந்துகொள்ள முடியும்? உள் வாங்கிக்கொள்ள முடியும்? இந்த வழியில் புரிதல் நிகழாது.

உங்கள் மனம் சாதாரண நிலையில்
இருக்கும்பொழுது, ஸத்யங்களை
உள்வாங்கும் பழக்கத்தை உங்களுடைய
வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்த
வழக்கம் உங்கள் வாழ்க்கையில் சாதாரண
நடைமுறையாக மாறட்டும். நீங்கள்
தினந்தோறும் உண்பது, குளிப்பதுபோல,
ஸத்யங்களை உள்வாங்குவதையும்
வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

சங்கரர், சாந்தோக்ய உபநிடதத்தைப் பற்றிய தம்முடைய உரையில், உணவைத் தூய்மைப்படுத்துவதைப் பற்றி மிகவும் அழகாகச் சொல்கிறார்.

ஆஹார சுத்ேதா ஸத்வ சித்ேதா த்ருவ ஸ்ம்ரு 'தி:

நம்முடைய ஆஹாரம், உணவு தூய்மையாக்கப்படும்போது, நமது நினைவுகளும் தூய்மை அடைகின்றன. ஆஹாரம் என்பது நாம் சாப்பிடும் உணவு மட்டும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஐந்து புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் எல்லாவற்றையும் அது குறிப்பிடுகிறது.

> நம் ஐம்புலன்கள் வழியாக
> நாம் உட்கொள்ளும்
> அனைத்து
> ஆஹாரங்களுமே
> தூய்மையாக
> இருக்க வேண்டும்.

தொலைக்காட்சி வழியாக நாம் பார்க்கும் நிகழ்ச்சிகளும் ஆஹாரமே! நாம் கேட்கும் இசையும் ஆஹாரமே! நாம் சாப்பிடும் உணவும் ஆஹாரமே! நாம் முகர்ந்து பார்க்கும் வாசனைகளும் ஆஹாரமே! நாம் அனுபவிக்கும் தொடுதலும் ஆஹாரமே!

அதனால் நம் ஐம்புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் அனைத்து ஆஹாரங்களுமே தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் தூய்மையை வெளிப்படுத்த முடியும்; ஆனந்தத்தை வெளிப்படுத்த முடியும்; பரவச நிலையை வெளிப்படுத்த முடியும்; தெய்வீக புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த முடியும்.

பிற புலன்கள் மூலமாக நாம் உட்கொள்ளும் உணவைத் தூய்மைப்படுத்தாமல், நம்முடைய நினைவுகளைத் தூய்மைப்படுத்திவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் அப்போது தொலைக்காட்சி இல்லாதது என்னுடைய பாக்கியமே. அதனால் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக நான் உணர்கிறேன்.

மக்கள் என்னைக் கேட்பதுண்டு: ''ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி இவ்வளவு சுலபமாக விஷயங்களைக் கிரகிக்கிறீர்கள்?''

ஆம், உண்மைதான் நான் எப்படியோ விஷயங்களை எளிதாகவும் விரைவாகவும் கற்றுக்கொள்கிறேன்.

ஒரு சின்ன உண்மை: சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். என்னுடைய பள்ளி நாட்களில் நான் சிறிது ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டேன். ஆனால் அதுவும்கூட என்னுடைய தாய்மொழியான தமிழ் மூலமே கற்றேன்.

தமிழ் மூலமாகத்தான் என்னுடைய பள்ளிப் படிப்பைப் படித்தேன். ஆகஸ்டு மாதம் 2003-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வந்தபிறகுதான் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.

நீங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரமாக விஷயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டார்கள். நான் தொடர்ந்து படிப்பதால் மட்டுமே அது நடக்கிறது. மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி: "நீங்கள் எப்படி இத்தனை புத்தகங்களைப் படிக்கிறீர்கள்?

அதற்கு காரணம்...நான் வளரும் பருவத்தில் தொலைக்காட்சி பார்த்ததே இல்லை.

தொலைக்காட்சியின் தூண்டல்...

தொலைக்காட்சி நேரடியாக நம்முடைய விழிப்புணர்வை அழிக்கிறது. அது நம்முடைய கண்களை மட்டுமல்ல, அது நேரடியாக நம்முடைய விழிப்புணர்வையும் அழிக்கிறது.

நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இந்த உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்பொழுது விளம்பரப் பலகைகளையும் அடையாளப் பலகைகளையும் சாலையில் உள்ள அனைத்தையும் பார்க்க முடிகிறது.

> தொலைக்காட்சி
> நம்முடைய கண்களை
> மட்டுமல்ல,
> அது நேரடியாக
> நம்முடைய
> விழிப்புணர்வையும்
> அழிக்கிறது.

சாலையில் பார்ப்பதற்கு என்னென்ன இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்பொழுது உங்களால் எதையாவது பார்க்க முடிகிறதா? உங்களால் பார்க்க முடியாது. நீங்கள் எதையும் தெளிவாகப் பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு கணத்திற்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற காட்சிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரித்து விட்டடது. அதனால்தான் உங்களால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.

தொலைக்காட்சியில் ஒரு கணத்திற்குள்,
பல காட்சிகளை நீங்கள் பார்க்கிறீர்கள்.
அதிகமான காட்சிகளை நீங்கள் ஒரு
கணத்திற்குள் பார்ப்பதால், உங்களுடைய
தர்க்க அறிவின் கட்டுப்பாடில்லாமலேயே,
உங்கள் மீது திணிக்கப்படுகின்ற செய்திகள்
உங்களுடைய விழிப்புணர்வு அல்லாத
பகுதிக்குள், புகுத்தப்படுகின்றன.

செய்திகள் உங்களை
நேரடியாக அடைவதால்,
நீங்கள் ஆராய்ந்து
பகுத்தறியும்
உங்கள் திறமையை
இழப்பதோடு,
உணர்ச்சிகளைச்
சமச்சீராக வைத்திருக்கவும்
தவறிவிடுகிறீர்கள்.

திருடர்கள் வராமல் இருப்பதற்காக உங்கள் வீட்டின் வெளியே காவலிருக்கும் காவல்காரருக்கு ஒப்பானது உங்களுடைய தர்க்க அறிவு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள்தான் திருடன். உங்கள் தர்க்க அறிவுதான் பணியில் இருக்கும் காவல்காரர்.

உங்களை வந்தடையும் எந்தவிதமான செய்திகளையும் தர்க்க அறிவு ஆராய்ந்து பார்த்து, "இது உண்மை. இது பொய். இது விளையாட்டுப் பொருள். இது நிஜ மனிதன். இது போலியானது மற்றும் இது ஒரு பொம்மை," என்றெல்லாம் சொல்கிறது. செய்திகள் ஆராயப்பட்டு பிறகு சேமிக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்பொழுது, செய்திகள் உங்கள் மீது திணிக்கப்படுவதால், உங்கள் தர்க்க அறிவு அதனுடைய பகுத்தறியும் திறமையை இழக்கிறது.

காட்சிகள், உங்கள் தர்க்க அறிவு என்கிற காவற்காரனைத் தாக்குகிற திருடனைப்போல இருக்கின்றன. உங்களுடைய தர்க்க அறிவு வேலை செய்யாதபோது, தாமதம் இல்லாமல் காட்சிகள் உங்களுடைய விழிப்புணர்வற் பகுதியை சென்றடைகின்றன; பதிவும் செய்யப்படுகின்றன.

திருடன் நேரடியாக உங்களின் விழிப்புணர்வற் பகுதிக்குள் நுழைகிறான். நேரடியாக உங்களுடைய விழிப்புணர்வற் பகுதி சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது, ஒரு திருடன் தம்முடைய கடமையைச் செய்து கொண்டிருக்கும் காவல்காரரைக் கொலை செய்துவிட்டு உங்கள் படுக்கையறைக்குள் நுழைவது போன்றது.

இன்னொரு முக்கியமான விஷயம், செய்திகள் உங்களை நேரடியாக அடைவதால், நீங்கள் ஆராய்ந்து பகுத்தறியும் உங்கள் திறமையை இழப்பதோடு, உணர்ச்சிகளைச் சமச்சீராக வைத்திருக்கவும் தவறிவிடுகிறீர்கள்.

அதனால்தான், அந்தக் குறிப்பிட்ட நடிகர் உண்மையான நிஜ வாழ்க்கையில் உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மை அறிந்தும், அவர் திரைப்படத்தில் கொல்லப்படுவதைப் பார்த்து அழுகிறீர்கள்! நீங்கள் தாமாகவே கண்ணீர் விடுகிறீர்கள். அது உண்மையல்ல. நிஜமல்ல என்று உங்களுக்குத் தெரிந்தும்கூட உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடத் தொடங்குகிறது. அவர்கள் சிரிக்கும்போது சிரிக்கிறீர்கள். அழும்பாது அழுகிறீர்கள்.

காட்சிகளுக்கு ஏற்றவாறு உங்கள் மனநிலையும் மாறுகிறது. நீங்கள் சோகமான காட்சியைப் பார்க்கும்போது சோகமாகிறீர்கள். ஏன்?

நீங்கள் கல்வி அறிவு படைத்தவர்தான். இது ஒரு நாடகம் என்றும் உங்களுக்குத் தெரியும். அந்த நடிகர் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெரியும். சில நாட்களுக்கு முன்பு நீங்கள் அவரை நேரடியாகச் சந்தித்திருந்தாலும்கூட, நீங்கள் படத்தைப் பார்க்கும்பொழுது அவர் இறப்பது போன்ற காட்சியைப் பார்த்தால், துக்கப்படுகிறீர்கள். ஏன்?

text overlay

ஏனென்றால் 'இது உண்மை, இது பொய்' என்று ஆராய்ந்து புரிய வைக்கும் உங்கள் தர்க்க அறிவை இயங்கவிடாமல் செய்து விட்டீர்கள், உங்கள் தர்க்க அறிவு ஒதுக்கப்பட்டுவிட்டது. விளைவு: செய்திகள் உங்களுடைய மன அமைப்பிற்குள் வெள்ளம்போல பாய்கின்றன. அதனால் உங்களுக்குத் துக்கத்தையும் சோகத்தையும் அளிக்கக்கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருபோதும் பார்க்காதீர்கள்.

illustration

இருந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி
தரக்கூடிய, உங்களைச் சிரிக்க
வைக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நீங்கள்
பார்க்கும்போது அது உங்களுடைய

விழிப்புணர்வை நேரடியாகத் தாக்காது. மிஞ்சிப் போனால் உங்களுடைய நேரத்தைக் கொஞ்சம் வீணடிப்பீர்கள் அல்லது கொஞ்சம் அதிகமாகச் சாப்பிடுவீர்கள். அதிக எடை போடக்கூடிய அபாயம்தான் இருக்கிறதே தவிர, மற்றபடி வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

எண்பது சதவிகித மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதுதான் சாப்பிடுகிறார்கள். அதனால் உடல் பருமானால் ஏற்படும் தொல்லைகளுக்கு ஆட்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு சிறிய பிரச்சினைதான். ஆனால் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது மனத்தைச் சோர்வடையச் செய்யக்கூடிய எந்த நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டாம். அது பெரிய பிரச்சினையாக மாறும்.

எண்ணத்தின் பிரதிபலிப்பு வாழ்க்கை!

| பூதம், ஆவி, பேய், பிசாசு என்றோ எதுவும் கிடையாது என்பதை நான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன். | |---|

நான் முக்கியமான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கப் போகிறேன். மக்கள் எப்போதும் என்னைக் கேட்கும் கேள்வி இது: "ஸ்வாமிஜி, ஆவி அல்லது பேய் என்று ஏதாவது இருக்கிறதா?"

பூதம், ஆவி, பேய் பிசாசு என்று எதுவும் கிடையாது என்பதை நான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன். இந்தக் கருத்திற்கு எதிரான ஆயிரக்கணக்கான குறிப்புகள் உங்களிடம் இருக்கலாம். எனக்குத் தெரியும் உங்கள் மனம் எப்போதும் குறிப்புகளைப் புத்தகங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் சேமிக்கிறது.

உங்களுடைய மனம் எப்போதும் மேற்கோள்களைத் திரட்டும் பணியிலேயே இருக்கிறது. உங்களுடைய விழிப்புணர்வற் ற பகுதி ஆவிகள் இருப்பதாக ஒருமுறை நம்பி விட்டால் போதும், நீங்கள் அதையே வெளிப்படுத்துவீர்கள், உண்மையில் ஆவிகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய விழிப்புணர்வற்ற பகுதி எதையெல்லாம் நம்புகிறதோ, அவற்றையே நீங்கள் வெளிப்பகுதியிலும் உருவாக்கிப் பார்ப்பீர்கள்.

ஹிப்னாடிசத்தைப் பற்றி (Hypnotism) மேற்கொள்ளப்பட்ட அதிகமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மிகப்பெரிய உண்மைகளை வெளிக் கொணர்கிறார்கள். அதாவது ஒரு மனிதரை ஹிப்னாடிசம் செய்துவிட்டு அவருடைய கையில் சூடான பொருளைத் தந்து அவரிடம் "நீ ஒரு மலரைக் கையில் ஏந்தியுள்ளாய், ஒரு ரோஜாவைக் கையில் ஏந்தியுள்ளாய்,'' என்று சொன்னால், அவர் கை புண்ணாவதில்லை என்பது மட்டுமல்ல, அந்தச் சூடான பொருள் கையிலிருந்து எடுக்கப்பட்டவுடன், அந்தக்கையில் ரோஜாவின் மணமும் வீசுகிறது!

wசியப்படுத்தும் கலை அதிக சக்தியைக் கொண்டது என்பதிலிருந்து, உங்களுடைய விழிப்புணர்வற் ற மனமும் அதிக சக்தியைக் கொண்டது என்பது புரிகிறது. நீங்கள் விழிப்புணர்வற் ற நிலையில் வசியப்படுத்தப்பட்டு, பூதங்கள் இருப்பதாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறீர்கள்.

நீங்களும் கற்றதையே வெளிப்படுத்தி,
பூதங்களைக் காண ஆரம்பிக்கிறீர்கள்.
உங்களுக்கு ஏதாவதைப் பற்றிய அனுபவம்
ஏற்படும்பொழுது, அது உறுதியான
நம்பிக்கையாகிறது.

இதவைிட ஒரு கலங்க வைக்கும் உண்மையைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில், குழந்தைகள், தங்கள் பெற்றோர்களே தங்களைப் பாலியல் ரீதியாகச் சீரழித்ததாகப் புகார்களை எழுப்பியுள்ளார்கள். பொதுவாக, அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி, மனச் சோர்வின் காரணமாக மனநிலை மருத்துவரிடம் சென்று மனோவசியத்திற்கு உட்படுத்தப்பட்டு, மேற்கொள்ளப்படும் விசாரணையின் போதுதான் இது போன்ற புகார்களை எழுப்பியுள்ளார்கள்.

உடனே காவல்துறை அதிகாரிகளாலும், ஒழுங்குமுறை அதிகாரிகளாலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கியமான விஷயம், பல புகார்களில், இந்த மாதிரி துஷ்பிரயோகங்கள் உண்மையில் நிகழவே இல்லை என்பது தெரியவந்துள்ளது. மனநிலை மருத்துவர்கள், நோயாளிகளை மனோவசியத்திற்கு உட்படுத்தி அவர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும்போதுதான், நோயாளிகள் தங்களுக்குள் இந்தக் கருத்துக்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையும் தெரியவந்துள்ளது. குணமளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், அவர்களுடைய நோயை குணப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுடைய நோயை வளர்த்து விடுவதில்தான் முடிகின்றன.

நீங்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் திகில் படங்களைப் பார்த்தீர்களானால், ஆவிகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். காற்றில் அசையும் திரைச்சேலைக்கூட ஆவிபோல் இருக்கும். உங்களைச் சுற்றி நடப்பவற்றையெல்லாம், உங்கள் விழிப்புணர்வற்ற மனத்தில் பதிந்துள்ள ஆவியின் பதிப்போடு அவற்றைத் தொடர்புபடுத்திப் பார்ப்பீர்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் திகில் படம் பார்த்தவுடனே, உங்களுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் சமையலறைக்குள் நுழைந்தவுடன்
பூனை ஒன்று உங்கள் மேல் திடீரென்று
குதிக்கும். இப்பொழுது முழுக் காட்சியும்
முழு வடிவம் பெற்றுவிடும். பூதம் இருப்பது
உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்துவிடும்.
ஆனால் அது முற்றிலும் உங்களுடைய
விழிப்புணர்வற்ற நிலையே.

எந்தப் பேயும்
ஒரு ஸ்தூல உடலுடன்
உங்களைத் தேடி வராது,
உங்கள்
வாழ்க்கைத்
துணையைத்
தவிர!

இது எப்படியென்றால் நீங்கள் அதை நம்பத் தொடங்கிவிட்டதால், அதை வெளியிலும் காணத் தொடங்கி விட்டீர்கள். நீங்கள் அதை வெளியில் காணத் தொடங்கியவுடன், உங்கள் நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டு விட்டது. இது ஒரு விஷச் சூழல். இப்போது இதில் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள். இன்னொரு விஷயம், உண்மையில் நீங்கள் நினைப்பது போன்று பேய்களுக்கு உடல் கிடையாது.

சாதாரண மனிதர்களாகிய உங்களுக்கு ஸ்தூல, ஸூக்ஷ்ம மற்றும் காரண உடல்கள் என்று மூன்று உடல்கள் இருக்கின்றன. ஆவிகள் இருந்தாலும், அவற்றிற்கு ஸ்தூல உடல் கிடையாது. உண்மையில் அவை இல்லை. ஆனால் உங்களுடைய எல்லா வாதங்களையும் சேர்த்து, நானும் வாதம் செய்து, வாதத்திற்காக ஆவிகள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும்கூட, அவை ஸூக்ஷ்ம உடலிலும், காரண உடலிலும்தான் இருக்கின்றன. அவற்றிற்கு ஸ்தூல சரீரம் கிடையாது.