KAILASA Library/பகவத்கீதை/ஞானக்கருத்துக்களே உங்களைக் காக்கும் கேடயங்கள்Sign in
பகவத்கீதை

ஞானக்கருத்துக்களே உங்களைக் காக்கும் கேடயங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எந்தப் பேயும் ஒரு ஸ்தூல உடலுடன் உங்களைத் தேடி வராது, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர! ஆவிகள் இருப்பது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும்கூட, உங்களின் திறமையில் அவற்றிற்கு 66%தான் இருக்கிறது. ஏனென்றால் அவற்றின் சக்தி இரண்டு உடல்களில் மட்டுமே. அதாவது ஸூக்ஷ்ம மற்றும் காரண உடல்களில் மட்டுமே உள்ளது.

உங்களுக்கு மூன்று உடல்கள் இருப்பதால். உங்களுக்கு 100% சக்தி உள்ளது. ஆனால் ஆவிகளுக்கு அதிக பட்சம் 2 உடல்கள் மட்டுமே இருப்பதால் அவற்றிற்கு 66 சதவிகித சக்தி மட்டுமே உள்ளது. அவை உங்களை விடச் சக்தி குறைந்தவையே. அப்படியே ஆவிகள் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை.

இதனை நன்றாகத் தர்க்க அறிவோடு புரிந்துகொள்ளுங்கள். ஆவிகள் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. அவை தாழ்ந்த நிலைிருப்புகள். அவை தாழ்ந்த நிலையில் இருப்பவை.

முதலில் அவை இல்லை. ஆனால் வாதம் செய்ய வேண்டிய காரணத்திற்காக நான் வாதம் செய்தாலும், அவை தாழ்ந்த நிலையில் இருப்பவையே. நீங்கள் அவற்றைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதனால் ஆவிகளுடன் பேசுவது, ஊடகங்களுடன் பேசுவது, இறந்த உங்கள் உறவினர்களுடன் பேசுவது என்பதெல்லாம் உண்மையில் கதைகள். ஒரு கதையின் மேல் இன்னொரு கதை எழுப்பப்படுகிறது. அடுத்த கதை மூன்றாவது கதைக்கு மேல் எழுப்பப்படுகிறது. முழுவதும் கற்பனைதான். கற்பனையைத் தவிர வேறல்ல.

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம் தம் கணவரை விவாகரத்து
செய்ய ஒரு பெண்மணி முடிவு செய்தார்.
அவர் ஒரு வக்கீலை தம்முடைய வழக்கு
சம்மந்தமான வேலைகள் செய்வதற்காக
நியமித்தார். தம்பதியரை சில முறை சந்தித்த
பின் அந்த வக்கீல் அந்தப் பெண்மணியிடம்,
"நான் உங்கள் இருவருக்குமே சாதகமாக

> இதை நன்றாகத்
> தர்க்க அறிவோடு
> புரிந்துகொள்ளுங்கள்.
> ஆவிகள் இருந்தாலும்,
> நீங்கள்
> அவற்றைப் பற்றிப்
> பயப்படத் தேவையில்லை.
> அவை தாழ்ந்த நிலை
> இருப்புகள்.

இருக்கக்கூடிய ஒரு தீர்வை முடிவு செய்துள்ளேன்," என்று சொன்னார்.

மனைவி அழுதுகொண்டே சொன்னார்,
"என்ன! அதை நானே செய்திருப்பேனே.
எதற்காக நான் வக்கீலை நியமித்தேன் என்று
நினைக்கிறீர்கள்?"

உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை, எந்த எண்ணமும், எந்தச் செயலும் சரியாக இருக்கிறது. இல்லையென்றால், அது உங்களுக்கு அபாயகரமாக இருக்கிறது. அதனால் ஊடகங்கள் போன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கைகொள்ளாமல் இருப்பது நன்று என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

இறந்து போனவர்களிடம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் பேசுவதற்கே நமக்கு நேரம் இல்லை. பிறகு எதற்கு இறந்து போனவர்களிடம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? நம்முடைய வாழ்க்கையுடனும் வியாபாரத்தினுடனும் சம்பந்தப்பட்ட மக்களோடு முதலில் பேசுவோம்; முதலில் அவர்களோடு பேசுவோம்; நாம் ஏன் பிற விஷயங்களில் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

உங்களுடைய விழிப்புணர்வில் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவித பயங்கரமான விஷயங்களையும் அனுமதிக்காதீர்கள். உங்களுடைய ஐம்புலன்களின் ஆகாரங்களும் தூய்மைப்படுத்தப்படட்டும், இது உங்களுக்குள் நிகழட்டும்.

நீங்கள் இம்மாதிரி விஷயங்களை உங்களுடைய விழிப்புணர்வில் அனுமதிக்கவில்லையென்றால், தாமாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்வீகத்தில் நிலை பெற்றுவிடும்.

நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்கள்தான், உங்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

கிருஷ்ணரின் கருத்தான, "உங்களுடைய புத்தியை என்னில் நிலைநிறுத்துங்கள்," என்கிற ஒரு கருத்தை மட்டும் உங்கள் எண்ணத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எதையெல்லாம் உட்கொள்கிறீர்களோ, அவற்றின் மீதுதான் உங்கள் மனத்தை நிலைநிறுத்துகிறீர்கள். அதனால் நீங்கள் உட்கொள்ளும் கருத்துகள் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தாமாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்வீகத்தில் நிலைபெற்றுவிடும்.

பேசுவதை வெறுமனே கேளுங்கள்...

மீண்டும் மீண்டும் இந்த எண்ணங்களைக் கிரகித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்தக் கருத்துகள் உங்களைச் ஊடுருவிச் செல்லட்டும். உங்களைச் சோகமாக்கும் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் எந்தவிதமான கருத்துகள் பின்னாலும் போக வேண்டாம்.

> ஸத்ய கருத்துகளை நினைவில் வைத்துக்கொள்வதைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம். வெறுமனே கேளுங்கள்.

உதாரணத்திற்கு கடந்த பதினொரு நாட்களாக நீங்கள் இந்தக் கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால், உடனே நீங்களாகவே,

"ஸ்வாமிஜி! இதைச் சொன்னார் நான் இந்தக் கருத்தைக் கேட்டிருக்கிறேன். இப்போது நான் இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று ஞாபகப்படுத்திக் கொள்வீர்கள். இது உங்களுடைய இருப்புத் தன்மையில் இருந்து தோன்ற ஆரம்பிக்கும். உங்களுக்குள் இருக்கும் ஸத்யம் உங்களுக்கு ஆதரவாகச் செயல்பட தொடங்கிவிடும். உங்களுக்குள் இருந்து இது தோன்ற ஆரம்பித்தால், நான் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டுமே இருப்பீர்கள்.

அமைதியான பார்வையாளர் என்பவர் இங்கு உட்கார்ந்துகொண்டு வேறு எதையோ பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பார் அல்லது என்னுடைய பேச்சுத் திறமையைப் பற்றிய தீர்ப்புகளை மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருப்பார்!

நீங்கள் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டும் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் உண்மையில் ஒரு அமைதியான கேட்பாளராக இருக்கிறீர்களா என்பதை, எந்த அளவிற்கு இந்த வார்த்தைகள் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எழும்புகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்க முடியும்.

நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால், ஞானமடைந்த விழிப்புணர்விலிருந்து வார்த்தைகள் வெளிப்படும்போது அவை உங்களுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடியவையாகவும், எப்போதெல்லாம் அவற்றின் உதவி தேவையோ, அப்போதெல்லாம் அவை தானாகவே உங்கள் மனத்திற்குள் எழுந்து உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.

மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது: "ஸ்வாமிஜி, நாங்கள் எப்படி இந்தக் கருத்துகளை நினைவிகொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது?"

அப்போது நான் அவர்களிடம் சொல்லும் பதில்: "நினைவில் வைத்துக்கொள்வதைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம். வெறுமனே கேளுங்கள்," அது போதும்.

இந்த வார்த்தைகள் என்னுடைய அனுபவத்திலிருந்து வருகின்றன. அதனால் இயற்கையாகவே அவை உங்களுடைய இருப்புத் தன்மையை ஊடுருவிச் சென்றுவிடும் என்பதுதான்.

எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் இந்த வார்த்தைகளை நினைவிகொள்ள வேண்டாம்; வார்த்தைகளே உங்களை நினைவிகொள்ளும். எந்தவித முயற்சியும் இல்லாமல் இந்த வார்த்தைகள் உங்களுக்குள் அடி ஆழத்திலும், உங்கள் மனத்தின் மேல் மட்டத்திலும் நிலைத்து நிற்கும். தேவைப்படும்போது அவை தானாகவே மேலேழும்பும்.

உங்களுடைய விழிப்புணர்வுக்குள் அவை
திடீரென பாப்-அப் (pop-up)போல
வெடித்துக் கிளம்பும். உங்களுடைய
கணிணித் திரையில் உள்ள 'பாப்-அப்'போல
அவை உங்களுடைய விழிப்புணர்வுக்குள்
வந்து உங்களை வழி நடத்தும்.

நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
இந்தக் கருத்துகளை கேட்பது மட்டுமே.

side note

'கேட்டல்' மட்டுமே உங்கள் இருப்புத் தன்மைக்குள் இந்தக் கருத்துகளைப் போடுவதற்கான ஒரே கருவியாக இருக்கிறது.

இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேளுங்கள். தானாகவே உங்களுடைய விழிப்புணர்வு இறைவனிடத்தில் நிலைகொள்ளும்.

கிருஷ்ணர் சொல்கிறார், உன்னுடைய மனத்தை என்னிலேயே மூழ்கச் செய். உன்னுடைய முழுஃ கவனத்தையும் என்னிடத்தில் நிலைகொள்ளச் செய். எந்தச் சந்தேகமும் இல்லாமல் நீ ஆனந்த நிலையை அடைவாய்.

உங்கள் வாழ்வே தியானக்காலம்தான்...

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி! ச'வாஸனம் (பின்புறம் தரையில் படுமாறு படுத்துக்கொள்வது) நிலையிலிருந்துகொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ தியானிக்கலாமா?

நீங்கள் படுத்துக்கொண்டு த்யானம் செய்தீர்களானால் தூங்கிவிடுவீர்கள். நீங்கள் உட்கார்ந்து இருக்கும்போதே தூங்குவீர்கள்! அதனால் நீங்கள் படுத்துக்கொண்டு செய்யும்போது, இயல்பாகத் தூங்கிவிடுவீர்கள். அதனால் தயவுசெய்து படுத்துக்கொண்டு த்யானம் செய்ய வேண்டாம்.

நீங்கள் தூங்கும்பொழுது த்யானம் செய்யலாம். ஆனால் த்யானம் செய்யும்போது, நிச்சயம் தூங்கக்கூடாது! நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது த்யானம் செய்வது தவறல்ல. ஆனால் நீங்கள் த்யானம் செய்யும்பொழுது தூங்கினால், ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நீங்கள் த்யானம் செய்யும்பொழுது ச'வாஸனத்தில் இருக்க வேண்டாம். ஆனால் ச'வாஸன த்யானம் செய்யுங்கள்!

> நான் பொதுவாக,
> கால்களை மடித்து
> தரையில் உட்கார்ந்து
> த்யானம் செய்வதையே
> பரிந்துரைக்கிறேன்.

நான் பொதுவாக, கால்களை மடித்து
தரையில் உட்கார்ந்து த்யானம் செய்வதையே
பரிந்துரைக்கிறேன். உங்களால் தரையில்
இலகுவாக உட்கார முடியவில்லை என்றால்
நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளுங்கள்.

நித்ய த்யானம் செய்யும்பொழுது வஜ்ராஸனத்தில் (உங்களுடைய பின்புறம் குதிகாலில்படுமாறு உட்காருவது) உட்காருவதைத்தான் பரிந்துரைக்கிறேன்.

முக்கியமாக உங்கள் தலை, கழுத்து, முதுகு ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் இருக்க வேண்டும். தலையைச் சாய்க்கக்கூடாது. தலையைச் சாய்த்தால் அது உங்களுக்குள் மந்தத்தன்மையை உருவாக்கிவிடும், பிறகு நீங்கள் உட்கார்ந்துகொண்டே தூங்கிவிடுவீர்கள்.

நீங்கள் தூங்குவதற்கு சவாஸனம்கூட தேவையில்லை. ஒரு முடிவோடு இருப்பவர்களை பத்மாஸனம், மற்றும் வஜ்ராஸனம் எல்லாம் கூட தூங்க வைத்துவிடும்!

தேவையான அளவிற்கு தேர்ச்சியடைந்து விட்டால், த்யானம் செய்வதற்கென்று எந்தவித தனிப்பட்ட ஆஸனமும் தேவையில்லை. ஆரம்ப நிலையிலிருக்கும் வரைதான் இந்தக் கோட்பாடுகள் தேவையானதாக இருக்கும். ஆனந்தகந்தத்யானம் செய்வதற்காக நித்யத்யானசிகிச்சையாளருக்கான தீக்ஷை அளிக்கப்பட்ட பின், எப்போது வேண்டுமானாலும் கண்களைத் திறந்துகொண்டு கூட த்யானம் செய்யலாம்.

த்யானம் என்பது விழிப்புணர்வு, அவ்வளவுதான். நீங்கள் நிகழ்காலத்தில் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்ட பின், விழிப்புணர்வு தானாகவே நிகழும்.

உங்கள் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதற்காகத்தான், இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆஸனத்தில் உட்கார்ந்துகொண்டு செய்கிறீர்கள்.

த்யானம் என்பது உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக ஒரு முப்பது நிமிட நடவடிக்கையாக இல்லாமல், உங்கள் வாழ்க்கையின் பாகமாகவே அது மாற வேண்டும்.

Illustration