KAILASA Library/பகவத்கீதை/முழுமையடைய சாதனை செய்யுங்கள்Sign in
பகவத்கீதை

முழுமையடைய சாதனை செய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தனஞ்ஜயா
தொடர்ந்து பயிற்சி செய்தல் என்னும் யோகத்தால் என்னை
அடைய முயற்சிசெய். ஒருவேளை இந்த யோகத்தைக்கூட செய்ய
முடியாவிட்டால், கடமைகளைச் செய்வது என்பதையே மேலான
இலட்சியமாகக்கொண்டு, உன்னுடைய எல்லாச் செயல்களையும்
எனக்கு அர்ப்பணித்துவிடு, நீ முழுமையை அடைவாய்.

நம்மை வழி நடத்தும் கடவுளின் உறுதிமிக்க வார்த்தைகள்

இங்கே கிருஷ்ணர் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். அப்யாஸ யோகம் என்றால் என்ன? அப்யாஸ யோகம் என்பது எப்போதும் தெய்வீகத்துடன் இணைந்த நிலையிலேயே மனத்தைத் தொடர்ந்து வைத்திருக்கச் செய்யும் ஒரு பயிற்சி முறை அல்லது ஒரு யோக முறை. இது கிருஷ்ண உணர்விலேயே முழுவதுமாக மூழ்கியிருக்கும் ஒரு நிலை.

அப்யாஸம் என்றால் தொடர்ந்து விடா முயற்சியுடன் பயிற்சி செய்தல் என்று பொருள்.

கிருஷ்ணர் ஏன் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்?

முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விச்ஸ்வரூப தர்சனத்தை பிரபஞ்ச விழிப்புணர்வின் கண நேரத் தோற்றத்தை, ஒரு துளியைக் காட்டினார். ஆனால் அர்ஜுனன் அந்த நிலையிலேயே தொடர்ந்து, நிலையாக இருக்கக்கூடிய சக்தி இல்லாதவராக இருக்கிறார்.

தம்முடைய கடந்தகால ஆசைகள் மற்றும் பயங்களைப் பற்றிய ஸம்ஸ்காரங்களின் காரணமாக அவர் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார். அந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வழுக்கி விழுகிறார். அதனால் மனத்தை எப்படி அந்த விழிப்புணர்வுக்குள் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றிய அப்யாஸ யோகத்தைக் குறித்து கிருஷ்ணர் பேசுகிறார். அதனால்தான் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

> கிருஷ்ணர், நம்முடைய மனத்தை விழிப்புணர்வில் நிலைநிறுத்துவதற்கு உதவும் ஒரு உறுதியான தீர்வைக் கொடுக்கிறார்.

"ஓ அர்ஜுனா! உன்னால் கவனத்தைச் சிதறச் செய்யாமல் உன்னுடைய மனத்தை என் மேல் நிலைநிறுத்த முடியாவிட்டால், பக்தியின் முறையான கோட்பாடுகளைக் கடைபிடி. இந்த அப்யாஸ முறையில் நீ என்னிடத்தில் நிலைத்து நிற்பாய்."

கிருஷ்ணர், நம்முடைய வாழ்க்கை முழுவதற்கும் பாதுகாப்பளிக்கக்கூடிய, நம்முடைய மனத்தை விழிப்புணர்வில் நிலைநிறுத்துவதற்கு உதவும் உறுதியான பாதையை, ஒரு உறுதியான தீர்வைக் கொடுக்கிறார்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் தொடர்ந்து
மீண்டும் மீண்டும் இந்தக் கருத்துக்களை
உள்வாங்கி நம்முடைய விழிப்புணர்வில்
அவற்றைக் கரைத்து, நம்முடைய உள்வெளி
முழுவதையும் அவற்றால் நிரப்ப வேண்டும்.
சில நிமிடங்களைக்கூட நாம் வீணடிக்க
வேண்டாம்.

நம்முடைய உள்தளம் முழுவதும் இந்த
உயர்ந்த எண்ணங்களால் நிறைந்திருக்க
வேண்டும். இதுதான் நம்மை அந்த மேலான
விழிப்புணர்வில் நிலைநிறுத்துவதற்கான
வழியாகும்.

மனதைப்
பயிற்றுவிக்க முடியும்.
இதற்கு
முக்கியமான தேவை
என்னவென்றால்
மனதை
ஒருமுகப்படுத்துதல்
மட்டுமே!

அடுத்து வரும் நான்கு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர், நம்மை நாமே அந்த விழிப்புணர்வில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும், பக்தியைப் பரவச் செய்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் மேலும் பல நுட்பங்களைத் தொடர்ந்து கொடுக்கிறார். அவரவர் விருப்பப்படி தேர்வு செய்வதற்கான பல்வேறு வழிகளை அவர் படிப்படியாக கொடுக்கிறார்.

அவர் சொல்கிறார்: "உன்னால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் அதைச் செய்; அதைச் செய்ய முடியவில்லையென்றால் இதைச் செய்." அவர் பல்வேறு வாய்ப்புகளையும் நெறிமுறைகளையும் நமக்குக் கொடுக்கிறார்.

முதல் விஷயமாக அவர் சொல்வது, "ஓ தனஞ்ஜயா! உன் மனத்தை என்னிடம் நிலைநிறுத்து. தொடர்ந்து பயிற்சி செய்து என்னை அடைய முயற்சிசெய். உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லையென்றால், எனக்காக வேலைகளைச் செய்," என்பதுதான்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு பெண்மணியிடம் காளிதேவியின் உருவத்தை த்யானம் செய்யுமாறு உபதேசம் செய்தார். எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் தம்மால் காளியைத் தியானிக்க முடியவில்லை என்று அந்தப் பெண்மணி சொன்னார். அவர் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தும் அவரது கவனம் சிதறியது. அந்தப் பெண்மணி மனம் சோர்வடைந்து, ராமகிருஷ்ணரிடம் வந்து, தன்னால் ஆன்மீகத்தில் முன்னேற முடியவில்லை என்று சொன்னார்.

Illustration

தியானத்தின் போது அந்தப்
பெண்ணின் கவனம் வேறு
எந்த நபர் மீதோ அல்லது
பொருள் மீதோ சிதறியதா என்று
ராமகிருஷ்ணர் விசாரித்தார். அந்தப்
பெண்ணும் தம்முடைய உறவுக்கார
குழந்தை ஒன்றையே நினைத்துக்
கொண்டிருந்ததாக உண்மையைக்
கூறினார்.

உடனே, ராமகிருஷ்ணர் அந்தப் பெண்ணிடம், "நீ அன்பு செய்யும் அந்தக் குழந்தை மீதே த்யானம் செய். அக்குழந்தை மீது உன் கவனத்தைச் செலுத்து," என்று அறிவுரை கூறினார். சில வாரங்கள் கழித்து திருப்தியுடன் அந்தப் பெண் வந்தார். அவர் விரும்பும் குழந்தையைத் தியானித்ததால், அவரால் த்யானம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர், த்யானம் என்கிற அந்த நுட்பத்தைச் செய்வதற்கான பயிற்சியை, திறமையைப் பெற முடிந்ததால், அவருடைய கவனத்தைக் காளி அன்னையின் மீது செலுத்த முடிந்தது.

மனத்தைப் பயிற்றுவிக்க முடியும். இதற்கு முக்கியமான தேவை என்னவென்றால் மனத்தை ஒருமுகப்படுத்துதல் மட்டுமே! நம்முடைய கவனத்தை ஏதாவது ஒரு பொருள் மீது முழுமையாகச் செலுத்த நாம் ஒருமுறை கற்றுக்கொண்டோமேயானால், பிறகு, எந்தப் பொருள் மீதும் நம்முடைய கவனத்தை முழுமையாகச் செலுத்த முடியும். நம்முடைய மனத்தை லேசர் ஒளிக்கற்றைப்போல பயிற்றுவிக்க முடியும். பிறகு, அந்த லேசர் ஒளிக்கற்றையை எந்தப் பொருள் மீதும் அதே செயல் திறனோடும், வெற்றிகரமாகவும் செலுத்த முடியும்.

எந்த ஒரு முயற்சியிலும்
பூரணத்துவம் அடைய
ஒழுக்கமும்
இடைவிடாத பயிற்சியும்
அவசியமாகும்.

"நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு
கையளவு களி மண்ணின் மீது உங்களுடைய
கவனத்தையெல்லாம் ஒன்று திரட்டி செலுத்தி
அதைப் பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமே.
அவ்வாறு அறிந்துகொள்ளும்போது,
உலகத்தில் உள்ள எல்லா களிமண்ணைப்
பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்," என்று
விவேகானந்தர் சொல்கிறார்.

எந்த ஒரு முயற்சியிலும் பூரணத்துவம்
அடைய ஒழுக்கமும் இடைவிடாத
பயிற்சியும் அவசியமாகும். பொருள் சார்ந்த

லட்சியங்களை ஏற்றுக்கொள்ளுவதற்குத்
தயாராக இருக்கிறோம். உடல் ஆரோக்கியம்,
செல்வம், பொருள் வளம் போன்ற
இலட்சியங்களை அடைய நாம் கஷ்டங்களை
அனுபவிக்கிறோம். ஆனால் ஆன்மீக
விஷயத்தில் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

பொதுவாக ஆன்மீக அனுபவங்கள்
சம்பந்தமாக இரண்டு விஷயங்களை
நினைப்போம். முதல் விஷயம், அது நமக்கு
சாத்தியமில்லாதது. இமயமலைக் குகைகளில்
வாழும் சில அரிய துறவிகளுக்கு மட்டும்
உரியது என்பதுதான்.

> த்யானம் என்பது
> கடவுள் மீது
> இடைவிடாது தீவிரமாகக்
> கவனம் செலுத்துவது.
> த்யானம் என்பது
> வாழ்க்கையின் வழி.

இரண்டாவது, அது சாத்தியம் என்பதை உணர்ந்தால்கூட, உண்மையில் நம்முடைய தினசரி வாழ்க்கைக்கு அது எந்த விதத்தில் உதவ முடியும் என்று தெரிந்துகொள்வதற்கு விரும்புவோம். அப்படியே அது ஏதோ ஓரளவிற்கு உதவியாக இருக்கக் கூடும் என்று உணர்ந்தால்கூட, காலப்போக்கில் தானாக நடக்கட்டும், இப்போதைக்கு அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று முடிவு செய்வோம்.

'இது இப்படி முடிவு செய்யக்கூடிய ஒரு விஷயம் அல்ல' என்று நமக்குச் சொல்கிற கடவுளின் உறுதிமிக்க வார்த்தைகள் நம்மிடம் இருக்கின்றன.

கூப்பிட்டால் போதும், உடனே வருவேன்...

யோகப் பாதையின் ஒரு பகுதியாக விளங்கும் தொடர் தியான பயிற்சியின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிக் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து தினமும் ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ செய்வது தியானம் இல்லை. தியானம் என்பது கடவுள் மீது இடைவிடாது தீவிரமாகக் கவனம் செலுத்துவது. தியானம் என்பது வாழ்க்கையின் வழி.

நம்மால் முழு மனத்துடன், பக்தியோடு, நம்மையே அவரிடம் கரைக்க முடியாமல், நம்மையே அவரிடம் அர்ப்பணிக்க முடியாமல் போகக் கூடும் என்பது கடவுளுக்குத் தெரியுமாதலால், அதற்கு மாற்றாக அவர் இந்த உபாயத்தைச் சொல்கிறார். "உன் மனத்தை என்னிடம் ஈடுபடச் செய்ய முடியவில்லை என்றால், இதை முயற்சிசெய். த்யானத்தின் மூலம் மீண்டும் மீண்டும் என்னை அடைய பயிற்சி செய்,” என்று அவர் சொல்கிறார்.

இந்த இரண்டுமே சாத்தியமே இல்லையெனும்போது கிருஷ்ணர் மற்றொரு நுட்பத்தைச் சொல்கிறார். “நீ எதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமோ அதைச் செய். உன்னுடைய கடமைகளை நீ விரும்பியபடி செய். உன்னால் முடிந்தவரை செய். ஆனால் நீ எதைச் செய்தாலும் செய்யும் அந்தச் செயல்களை என்னிடம் சமர்ப்பித்து விடு. எதைச் செய்தாலும் என் பொருட்டாகவே, எனக்காகவே அதைச் செய்.”

நாம் எதைச் செய்தாலும், சரி, அதை அவரிடம் முழு நம்பிக்கை வைத்து, ஆழமான சரணாகதி மனப்பாங்குடன் செய்வதன் மூலம் நாம் அவரை அடைவோம்.

text quote box

கிருஷ்ணர் இந்தக் கூற்றின் மூலம் இரண்டு
விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஒன்று,
சரணாகதி உணர்வுடன் நாம் எதைச்
செய்தாலும், அதனால் விளையும் பலன்கள்
அவரையே சாரும். இரண்டாவது, செயலைச்
செய்வதற்குத்தான் நமக்கு உரிமை உள்ளதே
தவிர, அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கு
அல்ல. நம்முடைய கடமை செயல்பரிவது,
அதைச் சிறப்பாகச் செய்வது, அவ்வளவுதான்.

அவருடைய சார்பாக நாம் செய்யும்
செயல்களின் பலன்களுக்குச்
சொந்தக்காரரும் அவரே.

இதைச் செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளும்போது, பலன்களின் மீது பற்று வைக்காமை என்ற கருத்தையும், ஸத்யத்தையும் நாம் தன்னிச்சையாகவே உள்வாங்கிக் கொள்கிறோம்.

நடப்பது எல்லாம் அவர் கையிலேதான் இருக்கிறதே தவிர நம்கையில் இல்லை. அதனால், நாம் இலட்சியத்தை விட்டு விட்டு, பாதையில் நம் மனத்தைச் செலுத்துவோம். நாம் செயல்முறையில் மனத்தை ஈடுபடுத்துவோம்; செயலின் பலனில் இல்லை. இதை நாம் செய்யும்போது, இறுதிப் பலன் எப்படி இருக்கக் கூடுமோ என்ற மன அழுத்தம் நமக்கு இல்லாததால், நம் செயலின் தரம் மேன்மையானதாக இருக்கும்.

பலன் பாதுகாப்பான கைகளில் இருப்பதால், இனியும் அதற்காகக் கவலைப்படுபவர்களாக நாம் இருப்பதில்லை. நிகழ்பவை எல்லாம் நன்றாகவும் அனைவரின் நலனுக்காகவுமே இருக்கும். இந்தத் தெளிவுடனும் விழிப்புடனும் நாம் பயணித்தோம் என்றால், நாம் தேர்ந்தெடுக்கும் பாதை எதுவாக இருந்தாலும், அது சரியான பாதையாகவே இருக்கும்.

இந்தச் சரியான பாதையின் மூலம் நாம் எந்த இடத்தை அடைந்தாலும், அது சரியான இடமாகத்தான் இருக்கும்.

பெரியபுராணம் என்கிற தமிழ்க் காப்பியம் அறுபத்தி மூன்று துறவிகளின் வாழ்க்கையைப் பற்றி விரிவாக விளக்குகிறது. அவர்கள் அனைவருமே ஞானமடைந்தவர்கள்தான். அவர்களுடைய வாழ்க்கையைப் படிக்கும்போது, அவர்களில் பலரும் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது தெரியும். அவர்கள் தங்களுடைய தினசரிக் கடமைகளை நம்மில் பலரும் செய்வதுபோல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவற்றைக் கடவுளைப் பற்றிய ஒரு தீவிரமான விழிப்புணர்வுடன் செய்தார்கள்.

அவர்கள் சிலைகளுக்காக மலரைப் பறித்தாலும்கூட, மனத்தை ஒருநிலைப்படுத்தி பக்தியுடன் செய்தார்கள். வேறு எதையும் பொருட்படுத்தவில்லை.

அவர்கள் பிரார்த்தனை செய்தாலும், பாடினாலும் அவர்களுடைய மனம், இதயம் மற்றும் இருப்புத் தன்மை ஆகிய மூன்றுமே அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அந்த மகிழ்ச்சியிலேயே மூழ்கி இருந்தன.

உருவமற்ற கடவுளின் உருவத்தை அவர்களின் உடல்களே உணர்ந்தன. உலோகத்தாலும் கல்லாலும் ஆன விக்கிரகங்கள் அவர்களோடு பேசின. கடவுளைப் பற்றிய அவர்களுடைய விழிப்புணர்வு அந்த அளவிற்குத் தெளிவாக இருந்தது.

நாம் பிரார்த்தனை செய்யும்போது, நம்முடைய பிரார்த்தனை ஒரு கடமையாக, ஒரு வேலையாக மாறுகிறது. ஆனால் இந்தத் குருமார்களுக்கோ அவர்களுடைய வேலையே பிரார்த்தனையாக மாறியது.

சடங்குகளைப் செய்யும் மனிதர்களை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் அதை முடித்து விட்டுக் கிளம்புவதிலேயே ஒருவித அவசரத்தைக் காட்டுவது தெரியும். எங்குப் போவது? கடவுளை விட்டு நாம் எங்குப் போக முடியும்?

பிரார்த்தனை நடக்கும் இடங்களில்தான் மோசமான குற்றவாளிகளைக் காண முடியும். அவர்களுக்குப் பிரார்த்தனை என்பது ஒரு வியாபாரச் செயலாகும். கடவுள் என்பவர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள், அவர்கள் வியாபாரிகள். உண்டியலில் ஒருவர் போடும் பணம்தான் அவருக்குக் கிடைக்க போகும் மரியாதையை முடிவு செய்யும்.

சொர்க்கத்தின் அரசாங்கம், பணத்தாலும் வியாபாரத்தாலும் முதல் வகுப்பு விலையிலும் கிடைக்கும். நீங்கள் நன்றாகத் தேடினால், சொர்க்கம் போவதற்கான சலுகைக் கட்டணங்கள் கூட உங்களுக்குக் கிடைக்கும்.

எது நடந்தாலும் நன்மையே!

பாலி (Bali) தீவில் வசிக்கும் மக்கள், இந்து நம்பிக்கைகளையும் ஜாதி முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் இவர்களுடைய முறையில் அர்ச்சகர் என்பவர் பிறக்கும் ஜாதியினால் முடிவு செய்யப்படுவது இல்லை. அவருடைய தகுதியினால் முடிவு செய்யப்படுகிறார். ஒருவர் அர்ச்சகர் ஆவதற்கு ப்ராஹ்மணராகப் பிறக்க வேண்டியதில்லை. இந்தத் தீவில் வழிபடுதல் என்பது வாழ்க்கைப் பாதையாகவே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஆண்களும், பெண்களும் தங்கள் வீடுகளில் வைத்திருக்கும் சிறிய விக்ரகங்களுக்கும், கடற்கரையிலும் சமுதாயக் கோவில்களிலும் அமைந்துள்ள கடவுள் விக்ரகங்களுக்கும் பழங்களையும் மலர்களையும் சமர்ப்பிப்பார்கள்.

> பலனில் பற்று வைக்காமல்
> செயல்புரியும்போது
> இறுதிப் பலன் எப்படி
> இருக்கக் கூடுமோ என்ற
> மன அழுத்தம் நமக்கு
> இல்லாததால்,
> நம் செயலின் தரம்
> மேன்மையானதாக
> இருக்கும்.

'கடவுளை வழிபடுதல்,' ஒரு வாழ்க்கைப்
பாதையாகவும் ஒரு வாழ்க்கை முறையாகவும்
மாறும்போது, ஆன்மீகம் தினசரி
வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறும்போது,
அங்கே கடவுளிடம் சரணடையும் ஒரு
மனப்பாங்கும் இருக்கும்.

எது நடந்தாலும் அது அனைவரின்
நலனுக்காகவே என்பதையும், அனைவரின்
நலனுக்காக எது நடந்தாலும் அது தம்முடைய

நலனுக்காகவும்தான் என்பதையும் அவர் தம்முடைய உள்ளுணர்வில் உணர்கிறார்.

அப்படி உணரும்போது, நம்முடைய பக்கத்து
வீட்டுக்காரர் நம்மைவிட அதிக வசதியுடன்
இருந்தால், நாம் அதைப்பொருட்படுத்த
மாட்டோம். உண்மையில் நம்முடைய
பக்கத்து வீட்டுக்காரர் நம்மைவிட அதிகமாக
வசதியுடன் இருப்பதைப் பார்த்து நாம்
மகிழ்வோம்.

பற்றற்ற, எதிர்பார்ப்பற்ற
தன்மைகதான்
செயல்களை
இறைவனிடம் ஒப்படைத்த
ஒரு கர்ம யோகியின்
விசேஷ குணமாகும்.

நமக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. நமக்குக் கிடைக்கும் என்று நாம் நம்புவதைப் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்காது. சரணாகதி நிகழும்போது, போராடி அடைய வேண்டிய குறிக்கோள், இலட்சியம், முடிவென்பது இருக்காது. பாதை எங்கு அழைத்துச் சென்றாலும், சேருமிடம் சரியானதாகவே இருக்கும்.

பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி, இலட்சியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது, என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு நம்மை விட்டு விலகும்.

எது நடந்தாலும் நன்மையே.

இந்த பற்றற்ற, எதிர்பார்ப்பற்ற தன்மைதான் செயல்களை இறைவனிடம் ஒப்படைத்த ஒரு கர்ம யோகியின் விசேஷ குணமாகும்.

கிருஷ்ணர் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். நாம் அவருக்காகச் சேவை புரிய வேண்டும் என்று சொல்கிறார். அவருடைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொல்கிறார், "எனக்காகவே உங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள், என்னை அடைவீர்கள்."

என்னுடைய பக்தர்களிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு: "நான் உங்களுடன் இந்த உடலோடு இருக்கிறேனா இல்லையா என்று கவலைப்படாதீர்கள். நான் வேறு ஒரு இடத்திற்குச் செல்லும்பொழுது, துக்கம் அடையாதீர்கள். என்னை நீங்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தீர்களானால், என்னுடன் ஒன்றாக இருக்க மாட்டீர்கள். எனக்காக வேலை செய்யுங்கள்.

உங்களால் எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் மனித குலத்தின் நலனுக்கான செயல்களைச் செய்யுங்கள். என்னுடைய சார்பாக வேலை செய்யுங்கள். அப்போது நீங்கள் என் பின்னால் வருவதைவிட நான் உங்கள் பின்னால் வருவேன். நான் எப்பொழுதும் உங்கள்கூடவே இருப்பேன்."

இறைவனுடைய பணிக்காக, குறிக்கோளுக்காகச் சேவையில் ஈடுபடுவது மட்டுமே இறைவனை அடைவதற்கான ஒரு நிச்சயமான உத்தரவாதம்.

நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள்

கேள்வி: மஹா சிவராத்திரி அல்லது ஏதாவது புனித நாட்களில் இறக்கும் ஒருவருடைய ஆத்மா நேராகச் சொர்க்கத்தை அடையுமா?

இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சிவராத்திரி மாதிரியான மங்களகரமான நேரத்தில் இறத்தல் அல்லது தக்ஷிணாயணம், உத்தராயணம் அன்று இறத்தல் போன்ற இவை எல்லாம் மன ரீதியான நம்பிக்கைகள்தான்.

கிருஷ்ணர் உத்தராயணம் என்று சொல்லும்போது, 'உங்களுடைய சக்தி மேல் நோக்கிச் செல்லும் நேரத்தையே, குறிக்கிறார். அதுதான் உத்தராயணம். நீங்கள் உங்களோடு சௌகரியமாக இருந்தால் அதுதான் உத்தராயணம். அது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதுடன் தொடர்புடையது இல்லை.

இறைவனுடைய குறிக்கோளுக்காகச் சேவையில் ஈடுபடுவது மட்டுமே இறைவனை அடைவதற்கான ஒரு நிச்சயமான உத்தரவாதம்.

அது, நாம் சொர்க்கத்திற்குப் போவதற்கான
ஒரு எளிதான நுழைவுச் சீட்டு என்பதெல்லாம்
மன ரீதியானதே தவிர, உண்மையில் அப்படி
எல்லாம் எதுவும் இல்லை. டிஸ்னி உலகம்
(Disney World) போன்ற இடங்களில்
செவ்வாய், புதன்கிழமைகளில் அதிகக்
கூட்டம் வராத காரணத்தினால், அந்த
நாட்களில் கட்டணக் குறைப்பு செய்வார்கள்.
அதனால் பல நாட்களில் விசேஷ சலுகைகள்
மற்றும் கட்டணக் குறைப்புகளும் இருக்கும்.

சொர்க்கத்தைப் பொறுத்தவரை சிறப்புச் சலுகையோ அல்லது தள்ளுபடியோ கிடையாது. இது முற்றிலும் நீங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்தது.

சொர்க்கம், இது முற்றிலும் நீங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்தது.

மதம் சம்பந்தப்பட்ட அகராதிகளில் தவிர, சொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை. சொர்க்கம் என்பது புவியியல் ரீதியான இடம் இல்லை.

அது உங்கள் மனத்தில் உள்ள ஓர் இடமாகும்.

நீங்கள் விழிப்புணர்வை அடைந்தால், ஆனந்தமாய் இருப்பீர்கள். பின் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.

சிவன் என்ற வார்த்தைக்கு, தன்னிச்சையாக, சுயமாகத் தோன்றுகிற மங்களத்துவம் என்று பொருள். அது காரணமில்லாமல், இயற்கையாகத் தோன்றும் தெய்வீக மங்களத்துவம்.

ராத்ரி என்றால் ஆழமான, தீவிரமான என்று பொருள்; நாம் பொதுவாகப் புரிந்துகொள்ளும் 'இரவு' என்ற அர்த்தத்தில் இங்குச் சொல்லப்படவில்லை.

சிவராத்ரி அல்லது மஹாசிவராத்ரி போன்ற சமயங்களில்தான் இந்தக் காரணமில்லாத மங்களத்துவம் அதன் உச்சத்தில் இருக்கும். இந்தச் சமயங்களில், இந்தப் பிரபஞ்சத்தின் நன்மைக்காக ஆழமான விழிப்புணர்வுடன் செய்யப்படும் ச்ரத்தையான பிரார்த்தனைகளை இறைசக்தி நிறைவேற்றும்.

சில வகை கிரக நிலைகள்தான், சில நாட்களை த்யானத்திற்கும் இறைவனோடு ஒன்றுவதற்கும் ஏற்ற விசேஷ காலமாக மாற்றுகிறது.

அதற்காக மற்ற நாட்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை என்றோ, விசேஷமான காலங்களில் நீங்கள் சாதாரண ஏதாவது ஒரு செயலை நினைத்தால்கூட, அது தாமாகவே நிறைவேறிவிடும்என்று அர்த்தம் இல்லை.

என்னுடைய சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் கோவிலில் திருவிழா உண்டு. இறைவனைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் தொடர்ந்து இருக்கச் செய்வதற்காக நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த முறை இது.

ஞானமடைந்த குருவைப் பற்றிய அழகான கதையொன்று இருக்கிறது.

இந்த குரு, இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பகிரஹத்தை நோக்கி தம்முடைய கால்களை நீட்டிப் படுத்திருந்தார். அர்ச்சகர் மிகவும் கோபப்பட்டு அவரைப் பார்த்து இறைவன் இருக்கும் திசையிலிருந்து அவருடைய கால்களை விலக்கி வைக்குமாறு அதட்டினார்.

அந்த குரு நிதானமாக மெல்லிய குரலில் தாம் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், தம்மால் கால்களை அசைக்க முடியாததால் அர்ச்சகரே கடவுள் இல்லாத திசையை நோக்கித் தம் கால்களை நகர்த்தி வைக்கலாம் என்றும் சொன்னார். அந்த அர்ச்சகர் மிகவும் முரட்டுத்தனமாக அவருடைய கால்களைப் பிடித்து இழுத்து மறுபக்கம் திருப்பினார்.

அவர் எந்தெந்த திசையிலெல்லாம் அந்த குருவின் கால்களை வைத்தாரோ அங்கெல்லாம் அவரே வியக்குமாறு சிவலிங்கம் தோன்றியது! அந்த அர்ச்சகர் குருவின் கால்களில் விழுந்து தம்முடைய அறியாமைக்காக மன்னிப்புக் கேட்டார்.

கடவுள் எங்கும் எப்போதும் இருக்கிறார். அவர் இல்லாத இரவும் அவர் இல்லாத இடமும் இல்லை. அவருடைய இருத்தல் ஒரு பிரச்சி னையாக இருப்பதில்லை; 'உங்களுடைய' இருத்தலே பிரச்சினையாக இருக்கிறது.

உங்களுடைய மனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டுவர முடியுமா? நிகழ்காலத்தில் நிலைநிறுத்த முடியுமா? அப்படியென்றால், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசியைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை. கடவுளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசிதான், நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்வரை!

Hands playing flute