KAILASA Library/பகவத்கீதை/எதைச் செய்தாலும் எனக்காகச் செய்யுங்கள்Sign in
பகவத்கீதை

எதைச் செய்தாலும் எனக்காகச் செய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna

12.11. இந்த வழியில்கூட உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், என்னிடம் சரணடைந்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் கொடுத்து விடு.

'முடியாது' என்பதையும் சரணாகதி செய்துவிடுங்கள்

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறார். அர்ஜுனனின் ஆன்மீக எழுச்சிக்காக அவர் காட்டும் கருணை எல்லையற்றது. “உன்னால் இதைச் செய்ய முடியாவிட்டால், அதைச் செய். அதைச் செய்ய முடியாவிட்டால் இதையாவது செய்,” என்று கிருஷ்ணர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

முன்பு சொன்ன நான்கு ஸ்லோகங்களிலும் தொடர்ந்து அவர் அர்ஜுனனுக்குப் பல நுட்பங்களை அளிக்கிறார்.

> நம்மை நாமே நிரப்பிக்கொள்ள நாம் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டே ஆக வேண்டியுள்ளது.

“உன்னுடைய மனத்தை என் மேல் ஈடுபடுத்துவாயாக! என்னிலேயே வாழ்வாயாக!” என்று கிருஷ்ணர் சொல்கிறார். பிறகு அர்ஜுனனால் அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், அவருக்கு தாம் வேறு ஓர் உபாயத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்.

“உன்னால் மனத்தை என்னிடம் ஈடுபடுத்த முடிய வில்லை என்றால், மேலும் மேலும் உறுதியுடன் பயிற்சி செய்,” என்று அறிவுறுத்துகிறார். அவர், மேலும் இரக்கத்துடன், “உன்னால் இப்படித் தொடர்ந்து முயற்சிசெய்ய முடியாவிட்டால், உனக்கு அது மிகவும் கடினமானதாக இருந்தால், எனக்காகக் கடமைகளைச் செய், நீ எதைச் செய்தாலும் அதை எனக்காகச் செய்,” என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் இப்பொழுது “உன்னால் இதையும் செய்ய முடியவில்லை என்றால், அதாவது எனக்காக வேலை செய்ய முடியவில்லை என்றால், நீ எந்தச் செயல்களைச் செய்தாலும், உன்னுடைய அஹங்காரத்தை துறந்துவிட்டு, அந்தச் செயல்களின் பலனை என்னிடம் அர்ப்பணித்துவிடு,” என்று சொல்கிறார்.

அர்ஜுனன் கிருஷ்ணருடைய வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் முதலில் சொல்லுகிறார். பிறகு அவரே தாம் வலியுறுத்திச் சொல்லிய கருத்திலிருந்த கடுமையைக் குறைத்து மனம் இரங்குகிறார்.

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், அர்ஜுனனால் தம்முடைய முழு நேரத்தையும் கிருஷ்ணருக்கான செயல்களிலேயே செலவிடமுடியாமல் போகலாம் என்பதை கிருஷ்ணர் உணர்கிறார்.

கிருஷ்ணரின் போதனைகள் இந்தக் காலத்திற்கும் எப்படி ஒத்துப்போகிறது பாருங்கள். நாம் யாருமே, செயல்படாமல் சும்மா உட்கார்ந்துகொண்டு பிறரால் காப்பாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

நம்மை நாமே நிரப்பிக்கொள்ள நாம் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டே ஆகவேண்டியுள்ளது.

நம்முடைய தினசரி நிஜ வாழ்க்கையில், எல்லோராலும் எப்போதும் இறைவனின் செயல்களில் மட்டுமே ஈடுபட முடியாது.

பலனைக் கருதாமல், சுயநலமின்றி மனித
சமுதாயத்தின் நலனுக்காகவும் ஆன்மீகச்
சேவைக்காகவும் நம்மால் சிறிது நேரம்
மட்டுமே செலவழிக்க முடியும்.

நமக்காகவும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் நாம் அதிக நேரத்தை பொருளாதார வளர்ச்சிக்காகச் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் இழப்பு எதுவும் இல்லை என்று கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார். மேலும் நம்முடைய பொருளுக்கான தேடல் மற்றும் ஆன்மீகத் தேடல் ஆகிய இரண்டுக்குமிடையே பாலத்தை அமைக்கிறார்.

கிருஷ்ணருடைய
அறிவுரையினால்
நமக்குள் ஏற்படும்
சுதந்திரம்தான்
உண்மையான
விடுதலையாகும்.

கீதையின் மையக் கருத்தான துறவைப் பற்றிக் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார், "நீ எதைச் செய்ய வேண்டுமோ அந்தச் செயல்களை சரணாகதி மனப்பான்மையுடன் செய். உன்மீதும் உன்னுடைய அஹங்காரத்தின் மீதும் முழுக் கட்டுப்பாட்டை வைத்து, அந்தச் செயலின் பலன்களைத் துறந்து விடு."

நம்முடைய செயல்களினால் விளையும் பலன்களுக்கு நாம்தான் பொறுப்பு என்று நினைக்கிறோம். நாம் செய்கிற செயலில் வெற்றி அடைந்தாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, நாம் பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் அல்லது குற்ற உணர்ச்சியையும் துக்கத்தையும் அனுபவிக்கிறோம்.

உண்மையான விடுதலை

நம்முடைய அஹங்காரம்தான் நம்மைப் பொறுப்பேற்க வைக்கிறது. நாம் எந்தச் செயல்களைச் செய்தாலும் அவற்றோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். பலன்களோடும் நம்மை அடையாளப் படுத்திக்கொள்கிறோம். நம்முடைய செயலின் வெற்றியும் தோல்வியும் மிகப்பெரிய ஒரு வேறுபாட்டை, ஒரு வித்தியாசத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்கிற விதத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய உறவுகளிலும் நம்முடைய பொருளாதார வசதியிலும் அவை ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது அல்லது வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக நாம் உணர்கிறோம்.

‘நம்முடைய செயல்களின் விளைவை நாம்தான் முடிவு செய்கிறோம் என்று நினைப்பதுகூட நம் மனத்தின் மாயையே.

மேலும், கிருஷ்ணர், "நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னேனோ அவற்றையெல்லாம் செய்ய முடியாவிட்டால், இதைச் செய். உன்னுடைய அஹங்காரத்தை விட்டுவிடு. உன்னுடைய செயல்களின் பலனை என்னிடம் துறந்து விடு," என்று சொல்கிறார்.

கிருஷ்ணருடைய அறிவுரையினால் நமக்குள் ஏற்படும் சுதந்திரம்தான் உண்மையான விடுதலையாகும். நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் நாம் இல்லை என்று உணர்ந்தவுடன், நம்முடைய செயல்களின் பலனை முடிவு செய்பவர்கள் நாம் இல்லை என்று உணர்ந்தவுடன், நம்முடைய தோளில் இருந்து ஒரு பெரும் பாரம் இறங்கியதாக உணர்கிறோம்.

நம்முடைய செயல்களின் விளைவுகளுக்குப் பொறுப்பானவர் அவர்தான் (கடவுள்தான்) நாம் எப்போதுமே ‘செய்பவர்கள்’தானே தவிர, ‘சொந்தக்காரர்கள்’ அல்ல.

ஒருவரை ஒருவர் அழித்து வாழும் இந்த உலகில் எப்படித்தான் நான் பிழைப்பது? இந்தப் போட்டி மிக்க உலகத்தில் (எலிப் பந்தயத்தில்) நான் வெற்றியடைவது எப்படி? என்று மனிதர்கள் நினைக்கக் கூடும். நீங்கள் இந்த எலிப் பந்தயத்தில் வென்றாலும் நீங்கள் இன்னமும் எலிகளே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்மளுடைய செயல்களின் விளைவைப்
பற்றி நாம்தான் முடிவுசெய்கிறோம் என்று
நினைப்பதுகூட நம் மனத்தின் மாயையே.
மற்றவர்களோடும், மற்றவர்கள் என்ன
செய்கிறார்களோ அந்தச் செயலோடும்
பெருமளவிற்கு ஒன்றுக்கொன்று தொடர்பு
கொண்ட நம்முடைய ஒவ்வொரு செயலிலும்
நமக்கு ஏதோ சிறிதளவே கட்டுப்பாடு
இருக்கிறது அல்லது பெரும்பாலும்
கட்டுப்பாடு இருப்பது இல்லை.

நமக்கும்,
இந்த மனிதச்
சமுதாயத்திற்கும்
எது சிறந்தது என்று
முடிவு செய்யும்
பொறுப்பைக்
கிருஷ்ணரிடம்
ஒப்படைத்துவிட வேண்டும்.

நம்முடைய செயல்களின் விளைவை நாம்தான் தீர்மானிக்கிறோம் என்று நம்புவது முற்றிலும் கற்பனையே. அடுத்த மூச்சு விடுவதற்காக நாம் உயிருடன் இருப்போமா என்று கூட நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. நம் வாழ்க்கையே நம் கையில் இல்லை.

ஆனால் வெளி உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று கற்பனை செய்வது எவ்வளவு பெரிய அஹங்காரம்!

நம்முடைய செயல்களின் விளைவை முடிவு செய்வது நம்மைவிடஉயர்ந்த ஒரு சக்திதான். நாம் இதை உணர்ந்து அந்த உயர்ந்த சக்தியின் ஞானத்தை நம்பத் தொடங்கினால், பல அதிசயமான, புதிரான நிகழ்ச்சிகள் நமக்கு நிகழத் தொடங்கிவிடும்.

நாம் செய்யவேண்டியது என்னவென்றால் நமக்கும் இந்த மனிதச் சமுதாயத்திற்கும் எது சிறந்தது என்று முடிவுசெய்யும் பொறுப்பை, இந்தப் பிரபஞ்சத்திடம், பராசக்தியிடம், கிருஷ்ணரிடம், இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

நாம் செய்கிற எல்லாச் செயல்களின் பலனையும் அந்தப் புனித சக்தியிடம் ஒப்படைத்து விடுவோம். அதற்குப் பின் நமக்கு நடப்பது எல்லாம் நல்லதாகவே இருக்கும்; நமக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையாகவே இருக்கும். நம்முடைய செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நாம்தான் காரணம் என்று வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய பட்டறிவு சார்ந்த மனத்திற்கு இது அதிசயமாகவும் மாயமாகவும் தெரியக்கூடும்.

நாம் பிரபஞ்சத்தோடு இசைந்து செல்லத் தொடங்குகிறோம்; நம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்ச சக்தியிடம் நம்மை ஒப்படைக்கிறோம். அதனுடைய கருணையில்லாமல் நம்மால் வாழவோ, அடுத்த மூச்சை விடவோ முடியாது. முழுமையான விழிப்புணர்வுடன், "எது எனக்கு மிகச் சிறந்தது என்று நினைக்கிறாயோ அதைச் செய்," என்று சொல்லுங்கள். பிறகு என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.

உங்களுடைய இறுதியான இலக்கு பூர்த்தியடைவதுடன், அளவற்ற ஆன்மீக விடுதலை உங்களை ஆட்கொள்ளும்.

"என்னிடம் அனைத்தையும் துறந்து விடு, நீயே என்னிடம் சரணாகதி அடைந்து விடு. நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

peacock feather