பூவை, பூக்க வைக்க முடியாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கேள்வி: ஒரு நோக்கமும் இல்லையென்றாலும்கூட ஆனந்தத்தை அடைவது என்பதும்கூட அதனளவில் ஒரு நோக்கம்தானே? தயவுசெய்து எனக்குப் புரிய உதவுங்கள்?

ஆனந்தத்தை அடைவது என்பதை மற்றொரு
நோக்கமாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.
நீங்கள் அதை இழப்பதோடு மட்டுமல்லாமல்,
குழப்பமும் அடைவீர்கள். உங்களுடைய
எல்லா இலக்குகளையும் கை விடுங்கள்.
ஆனந்தம் தானாக நிகழும்.
தாமரையைப் பூக்க வைக்க உங்களால்
முடியாது. அது பூப்பதற்குத் தேவையான
சூழ்நிலைகளை உருவாக்கிக் காத்திருக்க
முடியும். பிறகு தாமரை தம்முடைய
விருப்பத்திற்கேற்ப பூக்கும்.

உங்களால் எதையும் செய்ய முடியாது. நீங்கள் முரட்டுத்தனமாக அதன் இதழ்களைப் பிரித்தால் அதில் உயிர் இருக்காது. அது உயிரோட்டத்துடன்கூடிய மலராக இருக்காது. செயற்கைப் புன்னகையுடன் உயிரற்ற ஆனந்தத்தை அனுபவிக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களுடைய இருப்பிலிருந்து புன்னகை வர வேண்டும்.
உங்களுடைய உள்ளத்தில் இருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாக அது பொங்கி வழிய வேண்டும்.
நீங்கள் ஒரு விதையை நட்டு, சரியான சூழ்நிலைகளை ஏற்படுத்தினீர்களென்றாலே போதும், அது தானாகவே வளர்ந்து மலரும். அது ஆனந்தமாக நிகழும். அப்படியில்லாமல், நீங்கள் அந்த விதையை வெளியே எடுத்து அது மலர்ந்துவிட்டதா என்று தினமும் பார்த்துக் கொண்டிருந்தீர்களானால், எதுவும் உங்களுக்குக் கிடைக்காது, நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.
மூன்று குரங்குகளுக்கு ஒரு மாம்பழம் கிடைத்தது. அந்த மாம்பழத்தைப் பங்கு போட்டுக்கொள்ள அவை விரும்பவில்லை. அதை முழுதாகச் சாப்பிடவே ஒவ்வொரு குரங்கும் விரும்பியது. அதனால் அந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவது என்றும் முடிவுசெய்ய முடியவில்லை.
அவை ஒரு படித்த தலைமைக் குரங்கிடம் சென்று பிரச்சினையை எடுத்துச் சொல்லிற்று. அந்தப் படித்த குரங்கு, "நான் இந்த பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, இதன் மாங்கொட்டையைத் தருகிறேன். நீங்கள் அதை எடுத்துச்சென்று நடுங்கள். அது மரமாக வளரும். அதில் நிறைய பழங்கள் காய்க்குமாதலால், பங்கு போட்டுக்கொள்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது," என்று சொன்னது.
> ஆனந்தம் என்ற இலக்கை விட்டு விடுங்கள். > ஆனால் அதை அடையும முயற்சியைக் கைவிடாதீர்கள்.
அதற்கு அந்தக் குரங்குகள் சம்மதித்தன; பழத்தைச் சாப்பிட தலைமைக் குரங்கை அனுமதித்தன. பிறகு விதையை எடுத்து வந்து ஒரு இடத்தில் நட்டு வைத்தன.
ஒரு குரங்கு விதையை நட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றியது. மற்றொரு குரங்கு உரத்தைத் தூவியது. மூன்றாவது குரங்கு காவல் காத்தது. பல வாரங்கள் கழிந்த பிறகும் விதை முளைக்கவில்லை. ஏமாற்றமடைந்த குரங்குகள் தலைமைக் குரங்கிடம் சென்று, "நீங்கள் எங்கள் பழத்தைச் சாப்பிட்டு விதையை விதைக்குமாறு சொன்னீர்கள், எதுவும் நிகழவில்லை. நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள்," என்று புகார் சொல்லின.
அந்தத் தலைமைக் குரங்கு ஒவ்வொரு குரங்கிடமும் என்ன செய்தீர்கள் என்று கேட்டது. முதல் குரங்கு, தான் தினமும் தண்ணீர் ஊற்றியதாகச் சொன்னது. இரண்டாவது குரங்கு, தான் உரத்தை இட்டதாகச் சொன்னது. மூன்றாவது குரங்கு தான் யாரும் விதையை எடுத்துச் சென்று விடாமல் தீவிரமாகக் காவல் காத்தாகச் சொன்னது.
தலைமைக் குரங்கு, "நீ சரியாகக் காவல் காத்தாயா? யாராவது அந்த விதையை எடுத்துச் சென்றுவிடவில்லையே?" என்று கேட்டது. உடனே அதற்கு அந்த மூன்றாவது குரங்கு, "இல்லை இல்லை, யாரும் அதை எடுத்துச் சென்றுவிடவில்லை, நான்தான் அது பத்திரமாக இருக்கிறதா இல்லையா என்று மண்ணைத் தோண்டி ஒவ்வொரு நாளும் பார்த்து விடுகிறேனே!" என்றது.
நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் மனத்தைத் திறந்து உங்களுக்குள் ஆனந்தத்தை அடைந்து விட்டீர்களா என்று பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் ஆனந்தம் ஏற்படாது.
ஆனந்தம் என்ற இலக்கை விட்டு விடுங்கள். ஆனால் அதை அடையும் முயற்சியைக் கைவிடாதீர்கள். த்யான பாதையைப் பின்பற்றுங்கள், ஆனந்தம் தானாகவே மலரும்.
