KAILASA Library/பகவத்கீதை/அமைதி அடையுங்கள்Sign in
பகவத்கீதை

அமைதி அடையுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

வெறும் பயிற்சியைவிட அறிவு பெரியது. அறிவைவிட த்யானம்
பெரியது. செயலின் பலனைத் துறப்பது த்யானத்தைவிட பெரியது.
செயலின் பலனைத் துறந்தவுடன், ஒருவர் தாமதமின்றி
அமைதியை அடைகிறார்.

குருமார்கள், எந்தக் கதவையும் மூடுவதில்லை

குருமார்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அதீத அளவில் சமயோசித புத்தி, தன்னிச்சையான இயல்பு இருக்க வேண்டும்.

கிருஷ்ணர் பலவிதமான நெறிமுறைகளை அளிக்கிறார். படிப்படியாக பல்வேறு வாய்ப்புகளைக் கொடுக்கிறார். உண்மையில் இது அர்ஜுனனின் மனத்திற்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாவிதமான மனநிலையை உடையவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.

ரமண மஹரிஷியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

ஒருவர் ரமண மஹரிஷியிடம் சென்று, ''பகவானே, நான் எந்தவிதமான தியான நுட்பத்தைப் பயிற்சி செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

அதற்கு ரமணார், ''நான் யார்? என்று ஆத்ம விசாரணை செய்யத் தொடங்கு,'' என்று சொன்னார்.

சில நாட்கள் கழித்து, அந்த பக்தர் திரும்பி வந்து, ஆத்ம விசாரணை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் வெறுமனே தியானம் செய்யலாமா?'' என்று கேட்டார். அதற்கு பகவான், ''சரி தியானம் செய்யுங்கள்,'' என்று சொல்லிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த மனிதர் திரும்பி வந்து, ''தியானம் செய்வதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் மந்திரங்களை உச்சரித்தும், ஸ்லோகங்களைச் சொல்லியும் ஜபம் செய்யலாமா?'' என்று கேட்டார்.

பகவானும் ''சரி அப்படியே செய்.'' என்று சொல்லிவிட்டார்.

சில நாட்கள் கழித்து அந்த மனிதர் மீண்டும் திரும்பி வந்து ''பகவானே ஜபம் செய்வதும் கடினமாக இருக்கிறது. நான் பூஜை செய்யலாமா?'' என்று கேட்க, பகவான் அதற்கும், ''சரி பூஜை செய்,'' என்றார்.

ஒரு வாரத்திற்குள் அந்த மனிதர் அங்கு வந்து ''பூஜை செய்வதும் கஷ்டமாக இருக்கிறது. நான் கோவிலுக்குச் செல்லலாமா?'' என்கிறார். பகவான் அதற்கும் "சரி நீ என்ன விரும்புகிறாயோ அதைச் செய்," என்று சொன்னார்.

குருமார்கள் யாருக்காகவும் எந்தக் கதவையும் மூடுவதில்லை. அவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த ஸ்லோகங்கள் மூலம் கிருஷ்ணர் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கிறார்.

இதெப் புரிந்துகொள்ள உங்களுக்கு அதீத அளவில் சமயோசித புத்தி, தன்னிச்சையான இயல்பு இருக்க வேண்டும். தன்னிச்சையான இயல்பு இருந்தால் மட்டுமே, இந்த நெறிமுறைகளைக் கையாள முடியும்.

உதாரணத்திற்கு, உங்களுக்கு த்யானம் செய்ய விருப்பமில்லையென்றால், உங்களுக்கு மனச்சோர்வாக இருந்தால், கதவையும் கண்களையும் மூடிக்கொண்டு உட்கார்ந்து த்யானம் செய்ய முயற்சிசெய்ய வேண்டாம்.

வெளி்யே செல்லுங்கள், கோவிலுக்குச் செல்லுங்கள், அங்குமிங்கும் காலார நடந்துச் சென்று வாருங்கள். அது உங்களை ஆசுவாசப்படுத்தும். பிறகு நீங்கள் த்யானத்திற்குள் நுழையலாம். உங்களால் அதையும் செய்ய முடியவில்லையென்றால், வேறு எதையாவது செய்யுங்கள். உங்களைத் தளர்வாக உணர வைக்கக்கூடிய, தளர்வான மனநிலையில் இருக்கச் செய்யக்கூடிய வேறு எதையாவது செய்யுங்கள். பிறகு நீங்கள் த்யானத்திற்குள் நுழைய முடியும்.

> உங்களைத் தளர்வாக
> உணர வைக்கக்கூடிய,
> எதையாவது செய்யுங்கள்.
> அப்போது மட்டுமே
> நீங்கள் த்யானத்திற்குள்
> நுழைய முடியும்.

இங்கே கிருஷ்ணர் முடிவான இறுதியான நிலையை அடைவதற்கான பல நெறிமுறைகளைப் படிப்படியாகக் கொடுக்க முயற்சிசெய்கிறார். ஆனந்தத்தில் நிலை பெற்றிருப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும்தான் இறுதி நிலை. உங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக முயற்சிசெய்வதையே முழுமையாக நிறுத்தி விடாதீர்கள். எதையாவது செய்யுங்கள்.

த்யானம், ஆத்ம சாதனை போன்ற பல்வேறு சிக்கலான விஷயங்களைப் பற்றிப் பேசுகின்ற மக்களை நான் பார்த்திருக்கிறேன்.

இவற்றைப் பயிற்சி செய்யும்போது, அவர்கள் த்யானத்தைப் பற்றி மட்டுமே நினைத்து, மற்ற எல்லாவித சடங்குகளையும் நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால் முடிவில் அந்த தியானத்தையும்
செய்வதில்லை. அவர்கள் "ஸ்வாமிஜி, எனக்கு
நேரம் கிடைக்கவில்லை, என்னுடைய
மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.
என்னால் அமைதியாக உட்கார
முடிவதில்லை," என்றும் சொல்வார்கள்.

அவர்கள் முதலில், தியானம் செய்கிறேன் என்ற பெயரில் மற்ற அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள். பின்பு தியானத்தையும் வேறு பல காரணங்களுக்காக விட்டு விடுவார்கள். பிறகு அவர்கள் எதையும் செய்வதில்லை. அப்படி நடப்பதை கிருஷ்ணர் விரும்புவதில்லை.

"நமக்கு எது தேவை? ஒவ்வொரு கணமும் நாம் என்ன செய்ய வேண்டும்?" என்று முடிவுசெய்யும் தன்னிச்சையான இயல்பு நமக்குத் தேவைப்படுகிறது.

தன்னிச்சையான இயல்பே ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும்

நான் எப்போதெல்லாம் தன்னிச்சையான இயல்பு என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய சொந்த அனுபவம் ஒன்று நினைவிற்கு வரும்.

இது கதையல்ல. நான் பிறந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி. அந்தக் காலத்தில் அது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. இப்பொழுது மாவட்டமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. மஹாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகளை ஆண்டுதோறும் நாடகமாக நடத்துவார்கள்.

இந்தியாவிலுள்ள கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் மஹாபாரதப் பாராயணம் நடைபெறும்.

மஹாபாரதக் கதைகளைப் பாராயணம் செய்தால் மழை வரும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் அந்தப் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

> இந்தியாவிலுள்ள
> கிராமங்களில்
> ஒவ்வொரு வருடமும்
> மஹாபாரதப்
> பாராயணம்
> நடைபெறும்.

பரமஹம்ஸ நித்யானந்தர்

வட இந்தியாவில், மற்றொரு
இந்து இதிகασமான பாகவதமும்
சொல்லப்படும். தென்னிந்தியாவில்,
மகாபாரதம் அல்லது இராமாயணம்
கதை வடிவில் மக்களுக்குச்
சொல்லப்படும்.

என்னுடைய கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 60 நாட்களுக்கு மஹாபாரதக் கதைகள் சொல்வார்கள். பகல் நேரங்களில் கதைகள் சொல்லப்படும். இரவு நேரங்களில் அந்தக் கதைகளை மையமாக வைத்து சிறு நாடகங்களை நடத்துவார்கள். கிராமத்து மக்களே நாடகங்களை நடத்துவார்கள். அவர்கள் நடத்திய நாடகங்களைவிட அவர்கள் செய்கிற தவறுகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்!

மக்கள் நாடகத்தைவிட, அதில் நடக்கும் வேடிக்கையான தவறுகளைப் பார்த்து ரசிப்பதற்காகவே வருவார்கள். அவர்களிடம் நாடகத்திற்குத் தேவையான எல்லா உபகரணங்களும் இல்லாததால் சரஸ்வதியின் வீணையே, திருப்பி வைக்கப்பட்டு பீமன் அல்லது ஹனுமானின் கதாயுதமாக உபயோகிக்கப்படும். அது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களின் தேர்வு அதைவிட வேடிக்கையாக இருக்கும். வெறும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் சேர்ந்து எல்லாக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பார்கள்.

85 வயது ஆன கிழவர் கையில் தடியுடன் கிருஷ்ணர் வேடமிட்டு வருவார். அவரைக் கைத்தாங்கலாக ஒருவர் அழைத்து மேடையில் ஏற்றியதும், அவர் அர்ஜூனனைப் பார்த்து, “ஓ அர்ஜூனா! எழுந்து நில்,” என்று சொல்வார்.

அர்ஜூனன் எழுந்து நிற்பதற்குள் இவர் நிற்க
முடியாமல் கீழே விழுந்து விடுவார்! முழு
நாடகத்தையும் பல்வேறு குளறுபடிகளுடன்
பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

தன்னிச்சையான இயல்பு
என்பது
ஆன்மீகத்திற்குரிய
குணம்.

நாடகங்களில் நடித்த நடிகர்கள் மணிக்கட்டில் காப்புக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி ஒரு சடங்காகவே நடத்தப்படும். நான் ஒவ்வொரு இரவிலும் நாடகத்தைப் பார்ப்பேன். பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று முழுக்க முழுக்க ஆண்களே பங்கேற்று நாடகங்களை நடத்துவார்கள். அவர்கள் பாடல்களை முழுவதுமாக ஒப்புவிப்பார்கள்.

ஒரு நாள் மகாபாரதக் கதையின் நெஞ்சைப் பிசைய வைக்கும் திரௌபதியின் துகில் உரியப்படும் காட்சி நடித்துக் காட்டப்படுவதாக இருந்தது. திரௌபதி வேடமிட்டு நடித்த நடிகர் ஏழு மெல்லிய புடவைகளை அணிந்திருந்தார். மேடையில் கௌரவர்களின் இளவரசனான துச்சாதனன், பாண்டவர்களின் அரசியாகிய திரௌபதியின் துகிலை ரித்து, சபையினர் முன்னே அவரை அவமானப்படுத்த முயற்சிப்பான்.

துச்சாதனனாக நடிக்கும் நடிகர், ஆறு புடவைகளை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்தபின் களைத்துக் கீழே விழுவதுபோல் நடிக்க வேண்டும். அந்தச் சமயத்தில் திரௌபதி வேடமிட்டு, நடிக்கும் நடிகர் "கிருஷ்ணா, கிருஷ்ணா என்னைக் காப்பாற்று," என்று கதற வேண்டும்.

இந்த வேளையில் துச்சாதனனாக நடிக்கும் நடிகர் புடவைகளின் எண்ணிக்கையை மறந்துவிட்டார். அவர் மொத்தம் ஆறு புடவைகளைத்தான் இழுக்க வேண்டும். ஆறாவது புடவையை இழுக்கும்பொழுது களைத்துப் போய்க் கீழே விழ வேண்டும். அவர் விழும்பொழுது, திரௌபதி 'கிருஷ்ணா' என்று கதறியதும், கிருஷ்ணர் வேடமிட்டவர் மேடையில் தோன்ற வேண்டும். இப்படித்தான் காட்சி நடக்க வேண்டும்.

துச்சாதன நடிகர் எப்படியோ புடவைகளை எண்ண மறந்து ஏழாவது புடவையையும் இழுக்கத் தொடங்கி விட்டார். திரௌபதி வேடமிட்டவர் தம் கண்களாலேயே சைகை செய்து அது ஏழாவது புடவை என்பதை துச்சாதனனுக்கு முயற்சித்தார். ஆனால் துச்சாதனன் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

அவர் திரௌபதி மிகவும் நன்றாக நடிப்பதாக நினைத்துப் புடவையை இழுப்பதிலேயே கவனமாக இருந்தார்.

> யாரால் தம்முடைய
> கடந்தகால
> வாழ்க்கையிலிருந்து
> மீண்டு வர முடிந்ததோ
> அவரிடம்தான்
> தன்னிச்சையான இயல்பு
> இருக்கும்.

உடனே திரௌபதி வேடமிட்டவர் துச்சாதனன் வேடம் தாங்கிய நடிகரை அடித்துக்கொண்டே, “என்னுடைய புடவையை விடு, என்னுடைய புடவையை விடு,” என்று சத்தமிட்டார்.

திரௌபதி துச்சாதனனை நேரடியாகத் தாக்கத் தொடங்கி விட்டார். காலையில் சொல்லப்பட்ட கதை வேறாக இருந்தது, இப்போது மாலையில் நடக்கும் நாடகத்தில் நடக்கும் நிகழ்ச்சியோ முற்றிலும் மாறுபட்டிருக்கிறதே என்று நாங்கள் எல்லோரும் ஆச்சரியமடைந்தோம்.

ஆனால் கிருஷ்ணராக வேடமிட்டவர் திரைக்குப் பின்னால் காத்துக் கொண்டிருந்தார். அவர் திரௌபதியின் ‘கிருஷ்ணா’ என்ற அபயக் குரலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் திரௌபதியோ, “ஏய் துச்சாதனா, என்னுடைய புடவையை விடு,” என்று கத்திக் கொண்டிருந்தார். அவள் கிருஷ்ணரைக் கூப்பிடவில்லை.

கிருஷ்ணராக வேடமிட்டவர், துகில் உரியும் காட்சி இன்னமும் நடந்து கொண்டிருப்பதாகவும் ஆறாவது புடவை இன்னும் இழுக்கப் படவில்லை என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் மேடையில் தோன்றவே இல்லை.

திரௌபதி எட்டி உதைத்த பிறகும் துச்சாதனன் தம்முடைய தவற்றை உணரவில்லை. ஆனால் உதைபட்டதால் கோபமடைந்து ஏழாவது புடவையை முழுவதுமாக இழுத்து விட்டார்.

இப்போது திரௌபதி, கீழே ஆண் உடையுடனும் மேலே பெண்களுக்குரிய முக ஒப்பனை, நீண்ட தலைமுடி மற்றும் ரவிக்கையுடனும் காட்சி அளித்தார்.

அதிர்ஷ்டவசமாக திரௌபதி வேடமிட்டு
நடித்தவருக்கு சமயோசித புத்தி இருந்தது.
அவர் உடனடியாகப் பார்வையாளர்களைப்
பார்த்து, “கிருஷ்ணா! உன்னுடைய கருணையே
கருணை! உன்னால் வர முடியாததால்
பெண்ணாக இருந்த என்னை ஆணாக மாற்றி
என் மானத்தைக் காப்பாற்றி விட்டாயே!’
என்றார்.

தன்னிச்சையான
இயல்புடன்
செயல்படவில்லை என்றால்
நாம் வாழ்க்கையைப்
பரிதாபகரமான முறையில்
இழந்து நிற்போம்

அவருடைய தன்னிச்சையான இயல்பினால்
நிலைமையைச் சமாளித்து துச்சாதனன் மற்றும்
கிருஷ்ணனின் பிழைகளை மறைத்தார்.

நீங்கள் சமயோசித புத்தியை உடையவராக இருந்தால் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க முடியும். 'சமயோசித புத்தி' என்ற வார்த்தையை நினைவில்கொள்ளும்பொழுதெல்லாம் எனக்கு இந்தக் கதைதான் நினைவிற்கு வரும்.

கடந்தகாலத்தைக் கடந்துவிடுங்கள்

தன்னிச்சையான இயல்பு என்பது ஆன்மீகத்திற்குரிய குணம்.

யார் தம்முடைய கடந்தகால வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளவில்லையோ, யாரால் தம்முடைய கடந்தகால வாழ்க்கையிலிருந்து மீண்டுவர முடிந்ததோ அவரிடம்தான் தன்னிச்சையான இயல்பு இருக்கும். நம்முடைய கடந்தகால முடிவுகளில் எந்தவித பற்றும் இல்லாமலிருந்தால்தான், நம்மால் தன்னிச்சையான இயல்புடன் செயல்பட முடியும்.

அதாவது நம்முடைய கடந்தகாலத் தவறுகளை முழு மனத்துடன் புரிந்துகொண்டு, நம்மைத் திருத்தி, மேம்படுத்திக் கொள்ள நாம் தயாராக இருப்போம்.

நம்முடைய கடந்தகால வாழ்க்கையின் மீது நாம் அதீதப் பற்று வைத்திருந்தால், 'இல்லை, இத்தனை வருடங்களாக நான் இந்தக் கொள்கையை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எல்லா விஷயங்களையும் இந்த வழியில்தான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இன்றைக்கு வேறு ஏதோ ஒன்று புதிதாகச் செல்லப்படுகிறது என்பதற்காக நான் மாற மாட்டேன். என்னால் மாற முடியாது! நான் மாறப் போவதில்லை.

வாழ்க்கை,
தன்னுடைய தரத்தைக்
காலத்திற்கேற்றவாறு
தானே
உயர்த்திக்கொள்கிறது.

என்னுடைய கடந்த 50 வருட வாழ்க்கையை நான் இந்தக் கொள்கையை ஆதாரமாக வைத்து வாழ்ந்து விட்டேன். என்னால் இப்போது மாற முடியாது' என்று நாம் நினைப்போம்.

இந்த வழியில் நாம் சிந்தித்துக் கொண்டிருந்தோமேயானால், அப்போது நம்மால் தன்னிச்சையான இயல்புடன் செயல்பட முடியாது. நாம் வாழ்க்கையைப் பரிதாபகரமான முறையில் இழந்துவிடுவோம், அதை இரங்கத்தக்க முறையில் இழந்து நிற்போம்.

வாழ்க்கை, தன்னுடைய தரத்தைக் காலத்திற்கு
ஏற்றவாறு தானே உயர்த்திக்கொள்கிறது.
அது தன்னைத்தானே காலத்திற்கு ஏற்றவாறு
உயர்த்திக் கொள்ளும்வரை மட்டுமே அதைப்
புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியும்.
அது தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளாமல்
நின்றுவிட்டால், அது பட்டறிவாகவே இருந்து
விடுகிறது. அதைப் புத்திசாலித்தனம் என்று
சொல்ல முடியாது.

> உங்களிடம்
> தன்னிச்சையாகச்
> செயல்படும் இயல்பு
> இருந்தால்
> எதுவும் உங்களை
> நிறுத்த முடியாது.

புத்திசாலித்தனம் என்பது உயிரோட்டமான சக்தி. புத்திசாலித்தனம் என்ற வார்த்தைக்கான ஸம்ஸ்க்ரு'த சொல் தீ.

தீ என்கிற ஸம்ஸ்க்ரு'த சொல்லுக்கு 'எது ஒன்று உயிரோட்டத்துடன் இருக்கிறதோ' என்று பொருள். தீ என்ற உயிரோட்டமான சக்தி, தன்னைத் தொடர்ந்து மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கும். இந்துக்களின் வழிபாட்டில் ஒரு மைய சக்தியாக இருக்கிற காயத்ரி மந்திரத்தில், நம்முடைய இந்தப் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும்படி இறைவனிடம் வேண்டுகிறோம்.

நம்முடைய கடந்தகால வாழ்க்கையில், நம்முடைய கடந்தகால முடிவுகளில், நாம் கடந்தகாலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையில் (பூர்வ ஜென்மமல்ல. இந்த நொடிக்கு முன்புவரை நாம் வாழ்ந்த வாழ்க்கை) நாம் அதிக ஈடுபாடு வைக்கவில்லை என்றால்தான், நாம் தன்னிச்சையான தன்மையுடன் இருப்போம். தன்னிச்சையான தன்மையுடன் செயல்படுவது என்பது ஆன்மீகத்தின் மிகப்பெரிய குணாதிசயம்.

தன்னிச்சையான இயல்பை விவரிக்கும் மற்றொரு நிகழ்ச்சி. நான் ஒரு சமயம் ஈசா'வாஸ்ய உபநிஷத்தைப்பற்றி ஸத்ஸங்கத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.

நன்கு கற்றறிந்த வித்வானைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெரியவர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்தார்.

என்னுடைய சொற்பொழிவின் இடையில் எந்தவிதமான ஒரு அடிப்படை மரியாதைகூட இல்லாமல் எழுந்து நின்று, "இவர்கள் எல்லோரும் எதுவுமே படிக்காத முட்டாள்கள். அதனால்தான், உங்களால் இவர்களை உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடிந்தது. உங்களால் என்னை உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடியுமா?'' என்றார். நான் சொன்னேன், "தயவுசெய்து அருகில் வாருங்கள் ஐயா, நீங்கள் சொல்வதை என்னால் கேட்க முடியவில்லை," என்று சொன்னேன்.

அவர் அருகில் வந்ததும், "ஐயா தயவுசெய்து இந்தப் பக்கம் வந்து நீங்கள் சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள்," என்று சொன்னேன்.

அவர் அந்தப் பக்கம் வந்தார். பிறகு நான், "ஐயா, வழியில் ஒரு மேசை இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தயவுசெய்து இந்தப் பக்கம் வாருங்கள்," என்று சொன்னேன். அவர் நடந்து அருகில் வந்தார்.

வந்ததும், "நீங்கள் இதுவரை என் பேச்சை மூன்று முறை கேட்டு விட்டீர்கள். உட்கார்ந்து, இனி நான் சொல்லப் போவதையும் கேளுங்கள்!" என்று நான் சொன்னேன்.

தன்னிச்சையான இயல்பிடமிருந்து உங்களால் ஒருபோதும் தப்ப முடியாது. இந்த நிகழ்ச்சி நடந்த சில தினங்களுக்குப் பிறகு நான் ஜென் துறவியின் வாழ்க்கையில் இதே மாதிரி நடந்த நிகழ்ச்சியைப் பற்றிப் புத்தகத்தில் படித்தேன்.

வரலாறு தன்னைத்தானே திரும்பவும் நிகழ்த்திக்கொள்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். உங்களிடம் தன்னிச்சையாகச் செயல்படும் இயல்பு இருந்தால் எதுவும் உங்களை நிறுத்த முடியாது. தன்னிச்சையாகச் செயல்படும் தன்மை ஆன்மீகத்தின் மிகப்பெரிய குணாதிசயம்.

இங்கே கிருஷ்ணர் நான்கு வித்தியாசமான நெறிமுறைகளைக் குறிப்பிடுகிறார்.

ச்ரத்தையோடு
முயற்சி செய்யும்போது
ஆச்சரியமான மாற்றங்கள்
நிகழ்கின்றன!

நீங்கள் உங்களை பக்தி யோகத்திலும்
ஈடுபடுத்திக்கொள்ளலாம் அல்லது
உங்களுடைய செயல்களின் பலன்களை
கடவுளிடம் சமர்ப்பித்துவிடலாம் அல்லது
விழிப்புணர்வுடன் வாழ்ந்து, செயல்களைச்
செய்யலாம். அல்லது உங்களுடைய தினசரி
வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாகவும்
வாழலாம். எதை விரும்புகிறீர்களோ அதை
உங்களால் செய்ய முடியும்.

"இதெச் செய்ய முடியவில்லையென்றால் அதைச் செய்யுங்கள், இவற்றையெல்லாம் செய்ய முடியவில்லையென்றால், அவற்றைச் செய்யுங்கள்,'' என்று அவர் சொல்கிறார்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கிருஷ்ணர் சொன்ன பல வழிமுறைகளில், கீழ்நிலையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு நில்லாமல், எப்போதும் நம்மை மேல் நோக்கி உயர்த்தி, நம்மை விரிவடையச் செய்யும் உயர்நிலை வழிமுறைகளைப் பின்பற்ற முயற்சிசெய்ய வேண்டும்.

உங்களால் உயர்ந்த நிலைக்கு முன்னேற முடியவில்லையென்றால், கீழ் நிலையில் இருந்துகொண்டாவது உங்களுடைய அனைத்து முயற்சி களையும் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இதனை நீங்கள் ச்ரத்தையோடு முயற்சிசெய்யும்போது, நிகழும் மாற்றங்களைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!