KAILASA Library/பகவத்கீதை/வளர்ச்சியடைவதற்கான அடிப்படை விதி - சுதந்திரம்Sign in
பகவத்கீதை

வளர்ச்சியடைவதற்கான அடிப்படை விதி - சுதந்திரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"ஸ்வாமிஜி, இந்தியாவிலும் கிழக்குப் பகுதியிலும் ஏன் இத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள மதங்களில் உதாரணத்திற்கு இந்து மதம், புத்த மதம், ஜைன மதம் இந்த மதங்களில் பல கடவுள்கள், பல சந்நியாசிகள் மற்றும் பல குருமார்கள் உண்டு. ஆனால் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் உள்ள மதங்களில் ஒரே ஒரு கடவுள் மட்டும் இருக்கிறார். ஏன்?" என்று என்னிடம் ஒருவர் கேட்டார்.

விவேகானந்தர் தம்முடைய ஒரு சொற்பொழிவின் நடுவில் இதை மிகவும் அழகாக விளக்குகிறார். வளர்ச்சியடைவதற்கான அடிப்படை விதியே சுதந்திரம்தான். எந்தத் துறையாக இருந்தாலும் சரி, வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சுதந்திரம்தான் அடிப்படை ஆதார விதியாக இருக்கிறது.

கிழக்குப் பகுதியில் மக்கள் உள் உலக
சுதந்திரத்தைடைந்திருந்தார்கள். இங்கு
யாரும் உங்களுடைய மதத்தைத் தொந்தரவு

> ஆன்மீகப் பயிற்சி என்பது
> அவரவர்
> தனி விருப்பத்தைப்
> பொறுத்தது.

செய்வதில்லை. ஆன்மீகப் பயிற்சி என்பது
அவரவர் தனி விருப்பத்தைப் பொறுத்தது.
அதனால்தான் நம்மிடம் இஷ்ட தேவதை என்கிற
விருப்பமான கடவுளை வணங்கும் கருத்து
இருக்கிறது. இஷ்ட தேவதை என்றால் உங்கள்
மன நிலைக்கு ஏற்ற கடவுளை நீங்கள்
விரும்பிய வடிவத்தில் வணங்கலாம்.

நம்முடைய வேதங்கள் 33 கோடி தேவர்கள் என்று உப கடவுள்கள் அல்லது கடவுள்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

உண்மையில் இந்த எண்ணிக்கை அந்தக்காலத்து மக்கள் தொகை எண்ணிக்கையாக இருக்குமோ என்று நான் நினைக்கிறேன்! ஒவ்வொரு மனிதரும் தமக்கென்று சொந்தமாக ஒரு கடவுள் வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அதனால்தான் அவர்கள் 33 கோடி கடவுள்கள் என்று சொல்கின்றனர்!

வேதங்கள் இப்பொழுது இயற்றப்பட்டால், 600 கோடி கடவுள்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கும். தமக்குரிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது. தம்முடைய கடவுளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை அவர்கள் உணர்ந்திருந்தால், தங்களையே கடவுளாகக் கருதும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

மக்களுக்கு உள் உலகச் சுதந்திரம் இருப்பதால்தான் கீழை நாடுகள் ஆன்மீகத்தில் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளன. மேலைநாடுகளில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு சொந்தக் கடவுளை வைத்திருக்க முடியாது.

இந்தியாவில் ஓரிரவிலேயே ஒருவர் தம்மை ஸந்யாஸி என்று அறிவித்துக்கொள்ள முடியும். உங்களுக்குத் தேவையானதெல்லாம் விளம்பரப்பலகை தயாரிக்கத் தேவையான பத்து ரூபாய் அல்லது பத்து ரூபாயை உங்களுக்குத் தர முன் வருபவர். இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. நீங்களே உங்களை ஒரு துறவி என்று அறிவித்துக்கொள்ளலாம். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் மேலை நாடுகளில் அது நடக்காது.

நீங்கள் இறந்த பிறகுதான் மத நிறுவனங்கள் உங்களைப் புனிதர் என்று தீர்மானிக்கும். நிறுவனங்கள்தான் யார் புனிதர் என்று முடிவு செய்யும்.

இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட மனப்பாங்குகளாக இருக்கின்றன. இந்த இரண்டிலுமே நன்மை தீமைகள் இருக்கின்றன.

கீழை நாடுகளில் உள்ள சுதந்திரத்தால், நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இந்தச் சுதந்திரத்தின் காரணமாக மிகப்பெரிய உள் உலக ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

உள் உலகத்தில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உள் உலக சம்பந்தப்பட்ட பல ஸத்யங்கள் வெளிச்சத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளன; மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. பல மனிதர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதால்தான் இது சாத்தியமாயிற்று.

பலர் ஒரு விஷயத்தில் ஈடுபடும்போது,
இயற்கையாகவே அங்கு ஒருசில
போலிகளும் இருக்கக் கூடும்.
லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பாதையைத்
தேர்ந்தெடுத்து, இலட்சக் கணக்கான
விஷயங்களை வெளிப்படுத்தும் பொழுது,
ஒன்றிரண்டு மூட நம்பிக்கைகளும்
வெளிவரத்தான் செய்யும்.

ஆன்மீகத்தில் மட்டும்தான்
மூட நம்பிக்கைகள்
இருக்கின்றன என்று
நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் விஞ்ஞானத்தில்
இதைவிட அதிக
மூட நம்பிக்கைகள்
இருக்கின்றன.

ஆன்மீகத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞானத்தில் இதைவிட அதிக மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. குறைந்த பட்சம் ஆன்மீகத்தில் உள்ள குருமார்களுக்கு, தாங்கள் சொல்லும் கருத்தின் மீது தனிப்பட்ட சுயநலம், தனிப்பட்ட ஈடுபாடு என்று எதுவும் கிடையாது.

அவர்களின் சொந்த வாழ்க்கையில் எந்தவித முக்கிய மாற்றமும் ஏற்படாது. அவர்கள் எப்போதும்போல் குறைந்த அளவு உணவைச் சாப்பிட்டு விட்டு, எளிமையான உடைகளையே உடுத்திக்கொண்டு இருக்கப் போகிறார்கள்.

ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும், அவர்களுக்குப் பெயர், புகழ் மற்றும் கூடுதலான வாழ்க்கை வசதிகளைக் கொடுக்கும்.

அதனால் இயற்கையாகவே அவர்களுக்கு தங்களுடைய கண்டுபிடிப்புகளின் மீது தனிப்பட்ட சுயநலம் இருக்கும். ஆனால் ஆன்மீக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த அளவிற்கு வெளி உலகச் சுகங்களைக் குறைவாக அனுபவிக்கிறார்களோ, எந்த அளவிற்கு அவற்றைத் துறக்கிறார்களோ அந்த அளவிற்கு மதிக்கப்படுவார்கள்.

அதனால் இயற்கையாகவே எந்தவிதமான ஸத்யங்களை அவர்கள் வெளிப்படுத்தினாலும் சரி, எந்தவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டாலும் சரி, அவை அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்தவித புது விஷயத்தையும் சேர்க்கப் போவதில்லை. அவர்களுக்குத் தரப்படும் மரியாதை, அவர்களுடைய வாழ்க்கைமுறையைப் பொறுத்தே அமைகிறது, அவர்களுடைய வார்த்தைகளைப் பொறுத்து அல்ல.

கீழை நாடுகளில்
சமுதாயச் சுதந்திரம்
இல்லை.
ஆனால் அவர்களுக்கு
ஆன்மீகச் சுதந்திரம்
உண்டு.

ஆனால் விஞ்ஞானிகளின் விஷயத்தில்,
மரியாதை அவர்களின் வார்த்தைகளைப்
பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்
ஆன்மீகத்தைவிட விஞ்ஞானத்தில்தான்
அதிகமான மூடநம்பிக்கைகள் இருப்பதற்கான
சாத்தியம் இருக்கிறது.

மேலும் அதிக மக்கள் ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒன்றிரண்டு மூட நம்பிக்கைகள் தோன்றத்தான் செய்யும். இந்த ஒரு காரணத்திற்காக மதச் சார்பான சுதந்திரம் தவறானது அல்லது ஆன்மீகச் சுதந்திரம் தவறானது என்று நாம் சொல்ல முடியாது. அதில் மிக அதிகமான நன்மைகளும் உண்டு.

மேலை நாடுகளில் சமுதாயச் சுதந்திரம் உண்டு. நீங்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். உங்கள் வீட்டை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். உங்களுடைய தொழிலை எத்தனை முறையானாலும் மாற்றிக்கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி உடுத்திக்கொள்ளலாம். யாரும் கவலைப்பட மாட்டார்கள். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

House illustration

ஆனால் கீழை நாடுகளில் இன்றுகூட
குடும்ப பாரம்பரியத்தை மதித்து
தங்கள் குடும்ப வீட்டை விட்டு

வெளியேறாத மக்களை எனக்குத் தெரியும். அவர்கள் வீட்டை மாற்ற மாட்டார்கள். தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

ஆன்மீகச் சுதந்திரம்

கீழை நாடுகளில், சமுதாயச் சுதந்திரம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஆன்மீகச் சுதந்திரம் உண்டு. மேலை நாடுகளில் ஆன்மீகச் சுதந்திரம் இல்லை. ஆனால் சமுதாயச் சுதந்திரம் உண்டு. எந்தவித வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவை சுதந்திரம்தான்.

இங்கே கிருஷ்ணர் நான்குவித வாய்ப்புகளோடு ஆன்மீகச் சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறார். அவர் நமக்கு ஆன்மீகச் சுதந்திரத்தை அளிக்கிறார். அவர் பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்றும், அதில் நம்முடைய மன நிலைக்கு ஒத்துப்போகும் பாதையைத் தேர்ந்தெடுத்து அதையே பயிற்சி செய்யுமாறு சொல்கிறார். அவர் நம்மைக் குறைந்தது ஒரு வழியையாவது பயிற்சி செய்யுமாறு சொல்கிறார்.

நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்
என்பது முக்கியமல்ல. நாம் எதையாவது
ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம்!

> நாம் எந்த வழியைத்
> தேர்ந்தெடுக்கிறோம்
> என்பது முக்கியமல்ல.
> நாம் எதையாவது
> தேர்ந்தெடுப்பதுதான்
> முக்கியம்!

என்றாவது, குறைந்தது எழுபது சதவிகித மக்களாவது கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தக் கோயில் அவர்கள் தெருவிலோ அல்லது வீட்டிற்கு அருகிலோ இருக்கும். எழுபது சதவிகித மக்கள் ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்பாடுபட்டாவது அதைச் செய்து விடுவார்கள்.

கீழை நாடுகளின் கலாச்சாரங்கள், ஆன்மீகத்தில் அதிக வாய்ப்புகளை அளிக்கின்றன. நீங்கள் பட்டறிவு உடையவராக இருந்தால் சிவனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து உட்கார்ந்து த்யாணம் செய்யலாம்.

நீங்கள் புக்திமானாக இருந்தால் விஷ்ணுவைத் தேர்ந்தெடுக்கலாம். விஷ்ணுவின் பாதையில் சைதன்யர், மீராவைப் போல ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கலாம். ஆழ்வார்களைப்போல் இறைவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் யோகத்தைத் தேர்ந்தெடுத்தால் தேவியைத் தேர்வு செய்யலாம். அவளைத் தியானித்து, வணங்கி, தாந்த்ரீக பயிற்சி செய்யலாம்.

பல்வேறு விதமான நுட்பங்களும், தேர்ந்தெடுக்கும் முறையும் இருக்கின்றன. அதனால் உங்களுக்கு மறுபடியும் மறுபடியும் தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்படுகிறது. உங்கள் தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட வழிகள், பாதைகள் உங்களுடைய வளர்ச்சிக்காக இருக்கின்றன.

அதனால் ஒருவர் எந்தப் பாதையில் இருந்தாலும், தாம் வளர்ந்து, அடைய வேண்டிய நிலையை நிச்சயமாக அடைந்து விடுவார். அனைத்துவித ஏணிகளும் படிகளும் இருக்கின்றன. உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளும் தேர்வு செய்யும் முறைகளும் வழங்கப்படுகின்றன. அப்போது இயற்கையாகவே ஒருவர் ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கவே நினைப்பார்.

கீழை நாடுகள் தங்களுக்கிருக்கும் ஆன்மீகச் சுதந்திரத்தின் காரணமாக, உள் உலகைப் பற்றி அதிகமாகப் பரிசோதித்து அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்திருக்கின்றன. மேலை நாடுகள் தங்களுக்கிருக்கும் சமுதாயச் சுதந்திரத்தின் காரணமாகச் சமுதாய அளவில், சமுதாய ரீதியாகப் பலவற்றைச் சாதித்திருக்கின்றன.

உண்மையில், இந்தியாவில் சமுதாயச் சுதந்திரம் இல்லாத காரணத்தால், அது பலவித கடுமையான துன்பங்களையும் வேறுபாடுகளையும் சந்தித்து, பலவற்றை இழந்திருந்தாலும், ஆன்மீகச் சுதந்திரத்தால் அதீத லாபங்களை அடைந்துள்ளது.

கீழை நாடுகளில் உள்ள குருமார்களைவிட கருணையுடைய, அக்கறையுடைய, பரிவுடைய, தாராளமான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய ஒரு குருவை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது.

மேலை நாடுகளில் பல்வேறு உரிமைகளைக் கொடுப்பதால், சட்டம் கருணையுடன் இருக்கிறது. கீழை நாடுகளில் பல்வேறு வாய்ப்புகளைத் தருவதன் மூலம் ஆன்மீக அமைப்புகள் கருணையுடன் இருக்கின்றன.

மேலை நாடுகளில் ஒவ்வொரு மனிதரும்
மதிக்கப்படும் துறையாக சில இடங்கள்,
உதாரணத்திற்கு வாடிக்கையாளர் நலன்
போன்ற சில செயல்துறை்கள் இருக்கின்றன.
சமுதாயச் சூழலிலும் பல்வேறு உரிமைகள்
அளிக்கப்படுகின்றன.

ஒருவர், தம்முடைய வாழ்க்கைத் துணையுடன்
வாழ முடியாவிட்டால் அவர்கள் பிரிந்து
விடலாம். யாரும் சமுதாயத்திற்குக்
கட்டுப்பட்டவர்களல்ல. எல்லோருக்கும்
சுதந்திரம் உண்டு.

> கீழை நாடுகளில்
> உள்ள குருமார்களைவிட
> கருணையுடைய,
> அக்கறையுடைய,
> தாராளமான வாய்ப்புகளை
> அளிக்கக்கூடிய
> ஒரு குருவை
> நீங்கள் எங்கும்
> பார்க்க முடியாது.

ஆனால் இந்தியாவில் ஆன்மீகச் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீங்கள், _பக்தி யோகத்தில்_ ஈடுபடலாம் அல்லது உங்களுடைய செயல்களின் பலன்களை கடவுளிடம் சமர்ப்பித்துவிடலாம் அல்லது விழிப்புணர்வுடன் வாழ்ந்து, செயல்களைச் செய்யலாம். அல்லது உங்களுடைய தினசரி வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாகவும் வாழலாம்-இந்த நான்கு வாய்ப்புகளுமே சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆன்மீகச் சுதந்திரத்திற்கான எடுத்துக்காட்டுகளே.

குரு வாக்கியம், உள் உலக பூகம்பப் பெட்டி

இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பைத் தருகிறார், அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, அர்ஜுனன் மூலமாக நம் எல்லோருக்கும் தருகிறார்.

அப்யாஸேऽப்யஸமர்த்தோऽஸி மத்கர்மபரமோ பவ
மதர்த்தமபி கர்மாணி குர்வந்-ஸித்திமவாப்ஸ்யஸி 12.10.

உன்னால் _பக்தி யோகத்தின்_ வழிகளைப் பயிற்சி செய்ய முடியாவிட்டால் எனக்காகவே கடமைகளைச் செய்ய முயற்சிசெய். ஏனென்றால் எனக்காகச் செய்வதன் மூலம், நீ முழுமையான நிலையை, _ஸித்திமவாப்ஸ்யஸி_ அடைவாய்.

பிறகு அவர் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவித வாய்ப்புகளையும் அளித்து விட்டு, இறுதியில் சொல்கிறார்.

ச்'ரேயோ ஹி ஜ்ஞானமப்யாஸாஜ்-ஜ்ஞானாத்-த்ஸாநம் விசி'ஷ்யதே |
த்யாநாத்-கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம் ||12.12.

"உன்னால் இந்த எல்லாப் பயிற்சிகளையும் மேற்கொள்ள முடியாவிட்டால்கூட அறிவை வளர்த்துக்கொள்வதில் உன்னை ஈடுபடுத்திக்கொள்," என்று சொல்கிறார்.

மேலும் அவர், "குறைந்தது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய இந்த ஞானக் கருத்துகளையெல்லாம் ஒன்று திரட்டு," என்று சொல்கிறார்.

அறிவை வளர்த்துக்கொள்ளுதல் என்றால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துக்கங்களுக்குரிய தீர்வுகளை ஒன்று திரட்டுவதுதான். அதாவது மனச் சோர்வினைத் தவிர்ப்பது எப்படி, தைரியமாக இருப்பது எப்படி, மனோதிடத்துடன் இருப்பது எப்படி, தேவையற்ற ஆசைகளிலிருந்து விடுபடுவது எப்படி, உணர்ச்சி தடைகளை நீக்குவது எப்படி போன்ற வாழ்க்கைக்கான தீர்வாக விளங்கக்கூடிய இது போன்ற ஞானக் கருத்துகளைத் திரட்டினால் அது நம்மைப் பாதுகாக்கும்; நமக்கு உதவி செய்யும்.

அமெரிக்காவில் பூகம்பம் மற்றும் சூறாவளிச் சமயத்தில் பயன்படக்கூடிய உபகரணங்களைக் கொண்ட பூகம்பப் பெட்டி, சூறாவளி பெட்டி அனைவருக்கும் பரிச்சயமானது.

தண்ணீர் பாட்டில், மருந்து போன்ற பல முக்கியமான விஷயங்கள் அந்தப் பெட்டியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மக்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள்.

அறிவை
வளர்த்துக்கொள்ளுதல்
என்றால் வாழ்க்கையில்
ஏற்படக்கூடிய
துக்கங்களுக்குரிய
தீர்வுகளை ஒன்று
திரட்டுவதுதான்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், கார்களிலும்
கூட அந்தப் பெட்டி இருக்க வேண்டும்.
தீயணைப்புத் துறையின் இணைய
தளத்தில் பூகம்பம் ஏற்படும்போது, அதை
சமாளிப்பதற்கு ஒருவர் எப்படித் தயாராக
இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும்
என்பதற்காக ஒரு நீண்ட பட்டியலைத்
தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் அதைப் பூகம்பப் பெட்டி என்று
அழைக்கிறார்கள்.

மக்களை இது போன்ற நிகழ்வுகளுக்காக மேலைநாட்டுச் சமுதாயம் தயார் செய்கிறது. ஆனால் நாம் மனத்திற்குள் நிகழும் பூகம்பங்களை எதிர்கொள்ளவும், மனத்திற்குள் ஏற்படும் உணர்ச்சிகளின் சமச்சீர் இல்லாத நிலையைச் சமாளிக்கவும்கூட மக்களைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது.

வெளியில் நிகழும் பூகம்பத்தைச் சமாளிப்பதுபோல, உள்ளே ஏற்படும் பூகம்பத்தைச் சமாளிக்கவும் ஒருவர் உள் உலக பூகம்பப் பெட்டியுடன் தயாராக இருக்க வேண்டும். உள்ளே நிகழும் பூகம்பத்தைச் சமாளிக்க உதவும் பெட்டியைத்தான் நான் 'வாழ்வின் தீர்வுகள்' அல்லது ஞானக் கருத்துகள் என்று குறிப்பிடுகிறேன்.

ஞானக் கருத்துகள் உள்ளே நிகழும் பூகம்பத்தைச் சமாளிக்க உதவும் பெட்டி!

இப்போது இந்த ஞானக் கருத்துகளை நீங்கள் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால்தான், நீங்கள் வாழ்க்கையில் மனச் சோர்வினைச் சந்திக்கும்போது, அதைச் சமாளிப்பீர்கள்.

நாம் எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் உள்ளே ஏற்படும் பூகம்பத்தை எதிர்கொண்டே ஆகவேண்டியுள்ளது.

ஒருவர் இறந்து விட்டால் பிரச்சினை எதுவும் இல்லை. ஏனென்றால் அவருக்கு உள்ளே பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

நாம் உயிரோடு இருக்கும்வரை இயல்பாகவே ஏதாவது ஒரு தருணத்தில், சில நண்பர்கள், சில உறவினர்கள் அல்லது மிகவும் வேண்டப்பட்டவர்கள் மற்றும் பிரியமானவர்கள் நோய்வாய்ப்படுவதோ அல்லது இறக்க நேரிடவோ கூடும். இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை.

தவிர்க்க முடியாத ஒவ்வொரு கணத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத தன்மையைப் புரிந்துகொண்டு, அதற்குத் தேவையான ஞானக் கருத்துகளைத் திரட்டுவது, தவிர்க்க முடியாத நேரங்களில் நம்மைக் காக்கும் உபகரணங்களைத் திரட்டுவது, அந்தத் தருணங்களில் நம்முடைய மனத்தைச் சமநிலையில் வைக்கக்கூடிய எண்ணங்களைத் திரட்டுவது இவற்றைத்தான் ஜ்ஞாநம் என்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
பூகம்பங்களைச் சமாளிக்கத் தேவையான
பூகம்பப் பெட்டியை நாம் தயாராக
வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால்
நம்மால் அதிலிருந்து மீள முடியாமல்
போய்விடும். பின்விளைவுகள்
பயங்கரமானவையாக இருக்கும்.

அமெரிக்காவின் வளைகுடாக் கடற்கரை ஓரத்தில் தற்போது ஏற்பட்ட இந்த மோசமான சூறாவளியை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லையாதலால், அந்தப் பகுதியில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் மிகவும் போராடுகிறார்கள். மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பின் விளைவுகளுக்கு
உங்களைத்
தயார்படுத்திக்
கொள்ளுங்கள்.
அது
சேதாரத்தைக் குறைக்கும்.

அதுபோல, வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை நாம் எதிர்பார்க்காமல் இருந்தோமேயானால், எந்த நேரமும் உள்பூகம்பம் அல்லது புயல் மனத்தில் ஏற்படக்கூடும் என்பதை எதிர்பார்க்காமல் இருந்தோமேயானால், பின் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும். தயவுசெய்து பின் விளைவுகளுக்கு உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். அவை சேதாரத்தைக் குறைக்கும்.

கீழை நாடுகளில் இருக்கும் அமைப்பானது தொடர்ந்து மக்களை உள்ளே நிகழக்கூடிய புயல், சூறாவளி மற்றும் பூகம்பத்தை எதிர்கொள்ளத் தயார் செய்கிறது.

ஜ்ஞான கருத்துக்கள்தான் பூகம்பத்தைச் சமாளிக்கக்கூடிய பூகம்பப் பெட்டி. உள் உலகத்தில் நிகழக்கூடிய பூகம்பத்தை சமாளிக்கக்கூடிய பூகம்பப் பெட்டிதான் ஜ்ஞானம்.

Mாக்களைத் தயார்படுத்த வேண்டும். உள்ளே நிகழக்கூடிய பூகம்பத்திற்கா அல்லது வெளியே நிகழக்கூடிய பூகம்பத்திற்கா என்று தேர்வு செய்ய வேண்டியதில்லை.

வெளி உலக பூகம்பத்திற்காக காரில் ஒரு பூகம்பப் பெட்டியையும், உள் உலக பூகம்பத்திற்காக இதயத்தில் ஒரு பூகம்பப் பெட்டியையும் வைத்துக்கொள்ளுங்கள். நாம் இது அல்லது அது என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியதில்லை. நாம் இப்பொழுது இரண்டையும் வைத்துக்கொள்ளலாம். உலகளாவிய தகவல் தொடர்பு முறையால், இங்கு மேலை நாட்டிலும்கூட இந்த இரண்டையும் நாம் வைத்துக்கொள்ள முடியும்.

சரணடைவதே விடுதலை

ஒருவர் என்னிடம் வந்து, “ஸ்வாமிஜி, புத்தர் பத்தாயிரம் மக்களுக்கு ஞானமளித்தார். உங்கள் குறிக்கோள் என்ன?” என்று கேட்டார்.

“செய்தித்தாள், தந்தி, இணையதளம், விமானம்
மாதிரி எந்த வசதிகளும் இல்லாமலேயே
புத்தரால் பத்தாயிரம் மக்களுக்கு ஞானத்தை
அளிக்க முடிந்ததென்றால், இந்த எல்லா
வசதிகளுடன் இருக்கும் நம்மால் பத்து
லட்சம் பேருக்காவது ஞானத்தை அளிக்க
முடிய வேண்டும். அப்போதுதான் இந்த
வசதிகளைப் பெற்றிருப்பது மதிக்கத்தக்கதாக
இருக்கும்,” என்றேன்.

நம்மால் இப்பொழுது உள் உலகிலும் வெளி உலகிலும் அனைத்தையும் வைத்திருக்க முடியும். நம்மால் நம்முடைய காரில் பூகம்பப் பெட்டியையும் நம்முடைய இதயத்தில், நம்முடைய உள்வெளியில் ஒரு பூகம்பப் பெட்டியையும் வைத்திருக்க முடியும்.

உள் உலகில் பூகம்பம்
நிகழும்பொழுது
யாரையும்
குறை சொல்ல முடியாது.
நாம்தான் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாக
வேண்டும்.

உள்ளே ஏற்படும் பூகம்பங்களைச்ாதாரணமாக நினைக்க வேண்டாம். உள்ளே ஏற்படும் பூகம்பங்களைச் நிச்சயமாக எடுத்துக்கொள்வது என்பது நாம் அறியாமையில் செயல்படுவதையே குறிக்கிறது. இது, நாம் அதனால் ஏற்படும் விளைவுகளுக்காக நம்மைத் தயார் செய்துகொள்ளாமலேயே, பெரிய துக்கங்களை வரவேற்றுக் கொள்வதையே குறிக்கிறது.

பூகம்பங்கள் வெளி உலகில் நிகழும்பொழுது, நாம் அரசாங்கத் துறையைச் சார்ந்த இயக்குனர்களை, அதிகாரிகளை, அரசியல்வாதிகளைக் குறை சொல்லிவிட முடியும். நாம் யாரையாவது குறை கூறிவிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். நாம் பொறுப்பை பிறருடைய தோள் மீது சுமத்திவிட முடியும். ஆனால் உள் உலகில் பூகம்பம் நிகழும்பொழுது யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் பொறுப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

கிருஷ்ணர் முந்தைய ஓர் அத்தியாயத்தில் கூறுகிறார்.

உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: // 6.5

நம்மை உயர்த்திக்கொள்ள, நாமே உதவி செய்துகொள்ள வேண்டும். உங்களை உயர்த்த நீங்களே உங்களுக்கு உதவி புரிந்து கொண்டீர்களானால், உங்களுடைய சிறந்த நண்பர் நீங்கள்தான். இல்லையென்றால், நீங்கள் தான் உங்களுடைய மோசமான எதிரியாக இருக்கிறீர்கள்.

பயிற்சி செய்வது, ஞானத்தை
வளர்த்துக்கொள்வது, தியானிப்பது அல்லது
கர்ம பல த்யாகம், கர்மங்களின் பலனைத்
துறப்பது போன்ற பல்வேறு பாதைகளை
அவர் நமக்கு அளிக்கிறார்.

இந்தப்பாதைகளில் ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது. முதலில் அவர் த்யான பாதை, ஞானப் பாதையைவிடச் சிறந்தது என்கிறார்.

த்யானத்தைவிட எல்லாவற்றையும் இறைவனின் பாதங்களில் சமர்ப்பிப்பது சிறந்தது என்கிறார். கர்மத்தின் பலனைத் துறப்பதன் மூலம் ஒருவர் உடனடியாக அமைதியை அடைந்துவிட முடியும் என்று அவர் சொல்கிறார்.

'எல்லாம் என்னுடையது' என்று நினைக்கும்வரை நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். நாம் சமர்ப்பித்த அந்தக் கணமே, நம்முடைய எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடம் சமர்ப்பித்த அந்தக் கணமே உள்ளே குணப்படுத்துதல் நிகழ்கிறது. குணப்படுத்தும் தெய்வீகத் தென்றல் காற்றை நம்முடைய உள்வெளி அனுபவிக்கும்.

பொதுவாக மக்கள், சரணடைவது என்பது ஏதோ ஒரு வகையில் நம்முடைய கட்டுப்பாட்டை இழந்து விடுவது என்று நினைக்கிறார்கள். விட்டு விடுவது, பலவீனத்தின் வெளிப்பாடு. ஏதோ நடக்கட்டும் என்றிருப்பது பொறுப்பின்மை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கட்டுப்பாடுகள் என்பது அஹங்காரத்தின் வெளிப்பாடு.

எல்லாவித கட்டுப்பாடுகளும் 'நான்' அல்லது 'எனது' என்பவற்றின் தேவையிலிருந்துதான் உருவாகின்றன. கட்டுப்படுத்தும் எண்ணம் அதிகாரத்தைத் தேடும். அதிகாரம், நம்மைக் களங்கமானவராக ஆக்கிவிடும்.

சரணடைவதே விடுதலை. சரணடைவது என்பது தேர்வு செய்யமுடியாத நிலையின் வெளிப்பாடு. மேலும் அது ஒருவர் தம்மால் செய்ய முடிந்ததைச் செய்து முடித்து விட்டு, முடிவை இறைவனிடம் விட்டு விடுவது.

நம்முடைய செயல்களினால் விளையும் பலன்கள் மீது நாம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் பற்றையும் விட்டுவிடவில்லையென்றால், நமக்குள் நாம் பயனற்ற அழுத்தத்தையும் இறுக்கத்தையும் தொடர்ந்து உருவாக்கிக்கொள்கிறோம். இது நம்முடைய செயல்பாட்டின் தரத்தை உயர்த்தாது, குறைந்து விடுகிறது.

நாம் செய்ய வேண்டிய வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்தக் கற்றுக்கொள்ளும்பொழுது, அதன் செயல்முறையின் மீது முழுமையாக ஈடுபடும்பொழுது, அடைய வேண்டிய இலக்கைப் பற்றிக் கவலைகொள்ளாமல் பாதையில் நடக்கும்பொழுது நாம் எதைச் செய்தாலும் மேன்மையாகவும் வேகமாகவும் மிகத்திறமையாகவும் செய்து முடிப்போம்.

கிருஷ்ணரின் போதனைகள் ஆன்மீகமானது மட்டுமல்லாமல், மிகப்பெரிய அளவில் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. அவருடைய போதனைகள், இந்த வாழ்க்கைக்குப் பிறகான முன்னேற்றத்திற்கும் மட்டுமல்ல, நிகழ்காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கும் துணையாக இருக்கும்.

யார் ஒருவர் செயலின் பலனைத் துறக்கிறாரோ அவருக்கு அழிவற்ற அமைதி என்பது உடனடி விளைவாக இருக்கும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

சரணடைவது என்பது தேர்வு செய்யமுடியாத நிலையின் வெளிப்பாடு.

நாம் செய்யும் செயலைச் சொந்தம் கொண்டாடாமல், அதன் உரிமையை இறைவனிடம் ஒப்படைத்தால், அமைதியும் ஆனந்தமும் நம் மீது பொழியும். நம்முடைய செயல்களினால் விளையும் பலன் மீது இருக்கும் பற்றைத் துறக்கும்போது, நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாதபோது மட்டுமே நமக்கு இந்த விடுதலை கிடைக்கும். நம்முடைய செயலின் பலனிலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம்.

இது, நம் கையில் நாம் என்ன வைத்திருக்கிறோமோ, இந்த நிகழ்கால கணத்தில் நம்மிடம் எது இருக்கிறதோ, அதன் மேல் நம்முடைய கவனத்தை முழுமையாகச் செலுத்த நம்மை அனுமதிக்கிறது. நிகழ்காலத்தில் நிலைத்திருப்பதுதான் அமைதி, ஆனந்தம், விடுதலை அல்லது மோக்ஷம்.

பணக்காரர் என்பது பணத்தில் இல்லை

கேள்வி: அன்புள்ள ஸ்வாமிஜி, ஒருவர் தம் வாழ்நாள் முழுவதையும் பணத்தை நினைத்துக்கொண்டே வாழ்ந்தால், அவர் தம்முடைய அடுத்த பிறவியில் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்வார்? பணக்காராகவா அல்லது ஏழையாகவா?

இந்த வாழ்க்கையில், இந்தப் பிறவியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறையுடன் மட்டுமே நீங்கள் இருக்க வேண்டும்.

இந்தக் கணத்தை அசட்டை செய்து விட்டு, இறந்த பின்பு என்ன நடக்கும் என்று ஏன் கவலைப்பட வேண்டும்? நீங்கள் இப்போது எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் வருங்காலம் அமையும்.

இருந்தாலும், உங்களுடைய கேள்விக்கான பதில், உங்களுடைய மரணத்திற்குப் பிறகு என்ற நிகழும் என்பது. இந்தப் பிறவியில் பணம் உங்களுக்கும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் உண்மையான சந்தோஷத்தைக் கொடுத்ததா இல்லை துக்கத்தைக் கொடுத்ததா என்பதைப் பொறுத்துத்தான் அமையும்.

அது பெரும்பாலும், பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் உங்களுடைய புத்திசாலித்தனத்தைச் சார்ந்துதான் இருக்கும்.

நம்முடைய
செயல்களினால்
விளையும் பலன் மீதிருக்கும்
பற்றைத் துறக்கும்போது,
நமக்கு
உண்மையான விடுதலை
கிடைக்கும்.

நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அளவிற்குப் புத்திசாலியாக இருந்தால், அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

இந்தப்பிறவியிலேயே நீங்கள் ஒரு பணக்காரரைப் போன்றே வாழ்க்கையை வாழ்வீர்கள். நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அளவிற்குப் புத்திசாலியாக இல்லாமலும், அதை அடைய முயற்சி செய்யாமலும் இருந்தால், நீங்கள் இந்தப் பிறவியிலும் ஒரு செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழமாட்டீர்கள். மேலும் அடுத்தடுத்த பிறவியிலும் அதைத் தவறவிடுவீர்கள்.

வாஸனா, என்கிற அந்த மன அமைப்புதான் ஆத்மா உடலை விட்டுப் பிரியும்போது அந்த ஆத்மாவுடன் செல்லும்.

பணக்காரரின் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான எல்லாத் தன்மைகளையும் விஷயங்களையும் சேர்க்க நீங்கள் தயாராக இருந்தால், இப்பொழுதே பணக்காரராக வாழ்வீர்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவை சுவையாகத் தயாரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் நீங்கள் சேர்த்தாக வேண்டும். இல்லையென்றால் அது வேறுவிதமாக அமைந்துவிடும்!

ஒரு பெண்மணி மாலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் சமையலறைக்கு வந்து, "என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

அந்தப் பெண், "அதற்கு என்ன பெயர் வைப்பது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. உணவு தயாரான பிறகுதான் பெயர் வைக்க முடியும்," என்று பதில் சொன்னார்.

Honey From Flinty Rocks Photography

அதனால் சில வேளைகளில், நீங்கள் சேர்க்க வேண்டிய எல்லாப் பொருட்களையும் சேர்ந்த பிறகும் அது எதுவாக ஆக வேண்டுமோ அப்படி மாறுவதும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்த முடிவும் ஏற்படுவதில்லை. அது வேறு விஷயம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒரு குறிப்பிட்ட உணவுப் பதார்த்தத்தைச் செய்ய வேண்டும் என்றால், அதில் சில குறிப்பிட்ட பொருட்களைச் சேர்த்தே ஆக வேண்டியிருக்கும். அப்படிச் சேர்க்கும்போது மட்டுமே, அதனுடைய இறுதிப் பலனும் நாம் எதிர்பார்த்ததாகவே, நம்மால் கணிக்கக்கூடியதாகவே இருக்கும்.

அதுபோல், பணக்காரரின் வாழ்வு வாழ்வதற்காக, பொறுப்புணர்வு, முடிவெடுக்கும் திறன், வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம் போன்ற பல தேவையான விஷயங்களை நீங்கள் வாழ்வில் சேர்த்தாக வேண்டியிருக்கிறது.

உங்களிடம் இந்த எல்லாக் குணங்களும் இருந்தால், இன்றைக்கே உங்கள் வாழ்வை வளப்படுத்த முடியும். நீங்கள் அடுத்த பிறவிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

மக்கள் சில சமயங்களில் என்னிடம் கேட்பதுண்டு: “யாரும் பிச்சைக்காரனாகப் பிறக்க நினைப்பதில்லை. அது சாத்தியமில்லை. பிறகு ஏன் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்?”

ஒரு ஆத்மா கடந்த வாழ்க்கையில் ஒரு பணக்காரராகப் பிறந்து, வாழ்ந்திருந்தபோது, அதற்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் காரணமாக அவருடைய ஆத்மா செல்வத்தைச் சேர்க்கவோ, மீண்டும் ஒருமுறை பொறுப்பை ஏற்கவோ, விரும்புவதில்லை.

அதுதான் வாஸனா என்கிற அந்த மன அமைப்புதான் ஆத்மா உடலை விட்டுப் பிரியும்போது அந்த ஆத்மாவுடன் செல்லும்.

அந்த மனநிலைதான் அடுத்த பிறவியில் எந்தவித பொறுப்பும் இல்லாத பிச்சைக்காரராக இருக்க முடிவு செய்யும்.

நிறைய பணக்காரர்கள் தங்களது மனம் திறந்து அவர்களுடைய பிரச்சினைகளை என்னிடம் சொல்வார்கள். பெரும்பாலும் விதி விலக்குமில்லாமல் அவர்களது பிரச்சினைகளுக்குக் காரணமே செல்வத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மனப்பாங்குதான்.

உங்களுடைய மன அமைப்பு மட்டுமே உங்களுடைய அடுத்த பிறவியை முடிவு செய்யும். அவர்களுடைய செல்வம் அவர்களை மற்ற மக்களோடு இணைப்பதற்குப் பதிலாக, அவர்களை அவர்களிடமிருந்து பிரித்து தனித்தவர்களாக ஆக்கி விடுகிறது.

இந்த மாதிரி மனிதர்கள் உடலைவிடும்பொழுது, செல்வத்தின் மீது ஆழமான வெறுப்புடன் செல்வார்கள்.

செல்வம் அவர்களுடைய இந்த வாழ்க்கையில், அவர்களுக்கு துக்கங்களையேகொண்டு வந்திருக்கிறது. அவர்கள் இந்த மனநிலையுடன் உடலை விட்டார்களானால், அவர்கள் மற்றொரு உடலை எடுக்கும்போது செல்வம் சம்பந்தப்பட்ட எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்ற விருப்பத்துடன்தான் இந்த உலகத்தில் நுழைவார்கள்.

நீங்கள் இந்தப் பிறவியில் அடைந்துள்ள பொருளாதார நிலைமை உங்களுடைய அடுத்த பிறவியில் என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் எந்தவித பங்கும் வகிக்கப் போவதில்லை.

மாறாக உங்களுடைய பொருளாதார நிலை மீது நீங்கள் கொண்டிருக்கும் மனப்பான்மைதான் முக்கியமானது. நீங்கள் ஏழையாக இருந்தீர்களா அல்லது பணக்காரராக இருந்தீர்களா என்பது ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் சந்தோஷமாக இருந்தீர்களா அல்லது துக்கமாக இருந்தீர்களா என்பதுதான் ஒரு முக்கியமான விஷயமாகிறது. உங்களுடைய மன அமைப்பு மட்டுமே உங்களுடைய அடுத்தப் பிறவியை முடிவு செய்யும்.

Hands holding a flute