எனக்குப் பிரியமானவர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யார் ஒருவர் எந்த உயிர்களிடத்திலும் வெறுப்பும்,
பொறாமையும் இல்லாதவராகவும் எல்லோரிடத்திலும்
நட்புடனும் கருணையுடனும் இருப்பவராகவும் 'நான்' மற்றும்
'எனது' என்ற உணர்விலிருந்தும், அஹங்காரத்திலிருந்தும்
விடுபட்டு, இன்ப துன்பங்களில் மனத்தை சமநிலையில்
வைத்துக்கொண்டு, மன்னிக்கும் தன்மை உடையவராகவும்,
எப்போதும் திருப்தியுடன் இருப்பவராகவும், யோகத்தில்
இணைந்தவராகவும், என்னிடத்தில் ஒரு உறுதியான கட்டுப்பாடு
உள்ளவராகவும், தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என்
மீது வைத்திருப்பராகவும் இருக்கிறாரோ, அந்த பக்தர் எனக்கு
மிகவும் பிரியமானவர்.
தாழ்வுமனப்பான்மையும் அஹங்காரத்தின் மற்றொரு வடிவமே!
முன் சொன்ன எல்லா ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இதைச் செய் அல்லது அதைச் செய் என்று சொன்னார். ஆனால் இப்பொழுது இதைச் செய் அல்லது அதைச் செய் என்று சொல்லவில்லை.
"யாரெல்லாம் இவற்றைச் செய்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். இவற்றை நீங்கள் செய்யவில்லை என்றால்கூட அதுவும் எனக்குச் சரிதான். ஆனாலும் நீங்கள் அவற்றைச் செய்யும்பொழுது எனக்கு மிகவும் பிரியமானவர்களாகிறீர்கள்," என்று சொல்கிறார். ஒரு விதத்தில் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான மிரட்டல்தான். நேரிடையாக இல்லாத ஆனால் மறைமுக மிரட்டல். ஆனாலும் அது ஒரு நல்ல காரணத்திற்காகத்தான்!
"யார் பொறாமையில்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் கருணைமிக்க நண்பராக உள்ளாரோ, யார் தம்மைச் செயல்களுக்குரியவராக நினைக்காமல் இருக்கிறாரோ, யார் பொய்ையான அஹங்காரத்திலிருந்து விடுபட்டு இருக்கிறாரோ, யார் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக இருக்கிறாரோ, யார் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறாரோ, எப்போதும் திருப்தியுடன் இருக்கிறாரோ, மனம் புலன்களோடுகூடிய உடலைத் தம் வசப்படுத்தி இருக்கிறாரோ, யார் பக்தி சேவையில் உறுதியுடனும் முழு மனத்துடனும் ஈடுபட்டுள்ளாரோ, தம்முடைய புத்தியை என்னிடம் ஈடுபடுத்தி உள்ளாரோ, அப்படிப்பட்ட ஒரு பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவராகிறார்."
> எல்லா உயிர்களுக்கும்
> கருணை மிக்க
> நண்பராக இருங்கள்
> -கிருஷ்ணர்.
"யார் பிறர் மீது பொறாமையில்லாமல், எல்லா உயிர்களுக்கும் கருணை மிக்க நண்பராக இருக்கிறாரோ," என்று கிருஷ்ணர் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இவையிரண்டும் முக்கியமான குண நலன்கள்.
இப்போது நாம் நம் மனத்தை நேர்மையாக ஆராய்வோம். நாம் நம் மனத்தை நேர்மையாக ஆராயும்போது இவற்றைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். யாராவது உங்களிடம் வந்து அவர் உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்று சொன்னால், நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள்.
அப்போது நீங்கள் செய்யும் முதல் காரியம் என்னவாக இருக்கும்? அந்த நபர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வீர்கள். ஏனென்றால் நீங்களும் நேசிக்கப்படுவதற்குத் தகுதியான ஒரு நபர்தான் என்பதை நீங்கள் நம்புவதில்லை.
அடுத்து, உங்களை ஒருவர் நேர்மையாக, உண்மையாக நேசிக்கக்கூடும் என்பதை நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் யாரையும் நேர்மையாக நேசிப்பதில்லை. நீங்கள் எதையும் கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவராக இருப்பதால், மற்றவரும் அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
நம்முடைய அன்பெல்லாம் தோலின் ஆழம் வரைதான். தோலின் ஆழம் எவ்வளவு என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!
கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார், "எல்லோரிடமும் அன்பான நண்பனாக இருக்கும் ஒருவர், நேர்மையுடன் சேவை செய்யும் ஒருவர், எல்லோரிடத்திலும் நட்பை உணரும் ஒருவர் போலியான அஹங்காரத்திலிருந்து விடுபட்டவராக இருக்கிறார்."
இங்கு நாம் 'போலி அஹங்காரம்' என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இல்லாததை வெளிக்காட்டுவது மட்டும் அஹங்காரம் இல்லை. நம்மிடம் இருப்பதை மறைப்பதும் அஹங்காரமே.
இரண்டு வகை அஹங்காரங்கள்
இருக்கின்றன. செயல்படும் அஹங்காரம்,
செயல்படுத்தப்படும் அஹங்காரம்.
செயல்படும் அஹங்காரம் என்பது இருப்பதை
வெளிக்காட்டுவது. செயல்படுத்தப்படும்
அஹங்காரம் என்பது, "ஓ! நான் என்ன செய்ய
முடியும்? நான் ஒரு சாதாரண மனிதன்.
என்னால் எதையும் சாதிக்க முடியாது,
என்னால் எதையும் செய்ய முடியாது' என்ற
எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது.
> உங்களை ஒருவர்
> நேர்மையாக,
> உண்மையாக
> நேசிக்கக்கூடும் என்பதை
> நம்ப மாட்டீர்கள்.
> ஏனென்றால் நீங்கள்
> யாரையும் நேர்மையாக
> நேசிப்பதில்லை.
செயல்படுத்தப்படும் அஹங்காரத்தின்
விளைவுதான் ஒருவர் தம்மைத்தானே
மறைத்துக்கொள்வது. தாழ்வு மனப்பான்மை
செயல்படுத்தப்படும் அஹங்காரத்தின் ஒரு
வெளிப்பாடே.
உயர்வு, தாழ்வு இரண்டையும் கடப்போம்
நிகழ்ச்சிகளை
அதனதன் வழியில்
நிகழ அனுமதிக்கும்
ஒருவர்தான்
நிஜத்தில் வாழ்கிறார்.
உயர்வு மனப்பான்மையில் குறைந்தது ஒரு
நல்ல விஷயம் உண்டு. தம்மைப் பற்றிய
உயர்ந்த எண்ணங்களைக்கொண்டு ஒருவர்
எங்குச் சென்றாலும், அங்கு ஒரு பெரிய
அடியையாவது பெற்றுக்கொள்கிறார்!
இந்தச் சமுதாயம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிசெய்யும். பிறகு நீங்கள் உங்களுடைய உயர்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும் முயற்சியை எடுப்பீர்கள்.
ஆனால் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால், சமுதாயம் உங்களைத் திருத்த முயற்சி செய்யாது. அது வாழ்க்கையிலிருந்து உங்களை நீங்களே மறைத்துக்கொள்ளும் ஒரு கபடப் பாதையே.
உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக்கூட நீங்கள் தெரிந்துகொள்ள மாட்டீர்கள். தம்முடைய தாழ்வு மனப்பான்மையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவர், உயர்வு மனப்பான்மையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவரைவிட ஆழமாக அவதிப்படுகிறார்.
பெயர் புகழை விரும்பும் மனிதர், பெயர் புகழை விரும்பாத மனிதர்- இருவருமே அஹங்காரத்தை உடையவர்கள்தான். நீங்கள் பெயரை விரும்பினீர்களானால், அஹங்காரம் கொண்டவர். பெயரை விரும்பவில்லையானால், அது போலி அஹங்காரத்தை, செயல்படுத்தப்படும் அஹங்காரத்தைக் காட்டுகிறது.
ஆனால் நிகழ்ச்சிகளை அதனதன் வழியில் நிகழ அனுமதிக்கும் ஒருவர் தான், நிகழ்ச்சிகளைப் பொங்கி ஓட அனுமதிக்கும் ஒருவர்தான் நிஜத்தில் வாழ்கிறார்.
கிருஷ்ணர் இங்கு ஒரு விளக்கமளிக்கிறார்:
"நீ யார் என்று தெரிந்துகொள்ள இங்கு
யார் விரும்பப் போகிறார்கள்? நீ உன்னை
ஒரு பெரிய மனிதனாகவும், உன் பெயரை
எல்லோரும் அறிந்திருப்பதினால், உன்
பெயரை அந்த அளவிற்குப் பெரியதாகவும்
ஏன் நினைக்கிறாய்?"
உன்னை மிகவும் உயர்ந்தவன் என்று நீ
நினைப்பதால்தான் பெயரும் புகழும்
வேண்டாம் என்று நினைக்கிறாய். யாருக்கும்
உன் பெயர் தெரியாது, தளர்வாக இரு,"
என்று கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார்.
"யாருக்கும் உன் பெயர் தெரியாது, தளர்வாக
இரு."' '
நீங்கள்
அஹங்காரத்திலிருந்து
மட்டும்
விடுபட்டிருக்காமல், போலி
அஹங்காரத்திலிருந்தும்
விடுபட்டிருக்க
வேண்டும்.
பெயர், புகழை விரும்புவது மற்றும் பெயர், புகழ் வேண்டாம் என்று சொல்வது ஆகிய இரண்டும் அஹங்காரத்தின் மாறுபட்ட நிலைகளே! மாறுபட்ட விதங்களே!
தாழ்வு மனப்பான்மை கொண்ட அஹங்காரமும் அஹங்காரமே. அதனால்தான் அவர் அதை 'போலி அஹங்காரம்' என்று சொல்கிறார். நீங்கள் அஹங்காரத்திலிருந்து மட்டும் விடுபட்டிருக்காமல், போலி அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் உங்களை நீங்களே மறைத்துக்கொள்ளக்கூடாது.
ஒரு சின்ன கதை:
ஒரு குரு தம்முடைய சீடரிடம், "தயவுசெய்து என்னுடைய பாதத்தை பிடித்து விடு," என்று சொல்கிறார். சீடர், "ஓ! நான் ஒரு பாவி. நான் எப்படி உங்கள் பாதத்தைத் தொட முடியும்?" என்று சொல்கிறார்.
அவர் ஒரு சோம்பேறியாக இருந்ததால் அதைச் செய்ய விரும்பில்லை. அதனால்தான் அவர், "நான் ஒரு பெரிய பாவி, நான் எப்படி உங்கள் பாதத்தைத் தொட முடியும்? நான் எப்படி அதைச் செய்ய முடியும்?" என்று சொல்கிறார்.
சிறிது நேரம் கழித்து ஒரு பக்தர் பழங்களையும் ப்ரஸாதத்திற்குத் தேவையான பொருட்களையும்கொண்டு வந்தார். குரு ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து தம் வாயில் போட்டு விட்டு, மிச்சத்தை வைத்து விட்டார்.

அடுத்த நாள் தட்டில் ஒன்றும் இல்லாததை
அவர் கண்டார். அவர் தம்முடைய சீடரைப்
பார்த்து, "பழங்களும் ப்ரஸாதமும் என்ன
ஆயிற்று?" என்று கேட்டார்.
அதற்குச் சீடர், "அது குருவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ப்ரஸாதம். அதனால் அது வீணாகப் போவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. அது குருவினுடைய ப்ரஸாதம் என்பதால், நான் அதை முழுமையாகச் சாப்பிட்டு விட்டேன்," என்று சொன்னார்.
மனத்தின் நிலையைப் பாருங்கள், எவ்வளவு அருமையாக அது சூழ்நிலைகளை வேறு வேறு கருத்துக்களுடன் கையாளுகிறது.
எங்கெல்லாம் நமக்குத் தேவையோ, அங்கெல்லாம் நமக்கு எதுவெல்லாம் சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கிறதோ அதை நாம் புகுத்தி விடுகி றோம். சீடருக்கு வேலை செய்ய விருப்பம் இல்லாதபோது, "இல்லை, நான் எப்படி உங்களுடைய பாதத்தைத் தொட முடியும்? நான் தகுதியானவன் இல்லை. நான் ஒரு தூய ஆத்மா இல்லை," என்று சொன்னார். ஆனால் அவருக்கு உணவு தேவையாக இருந்தபோது, குருவின் உணவு, குரு ப்ரஸாதம் ஆகிவிட்டது அதனால் அதைச் சாப்பிட்டு விட்டார்!
நம்முடைய கொள்கைகளுக்கு ஏற்ற கருத்துகளையே நாம் சேகரிக்கிறோம். இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்கிறோம். சாத்தான்கள்தான் வேதம் ஓதும். நீங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை ஓத மட்டுமே செய்தீர்களேயானால், நீங்கள் சாத்தானாகிறீர்கள். வேதத்தின் சாரத்தைப் புரிந்துகொள்ளும்பொழுது, நீங்கள் கடவுளாகிறீர்கள்.
வேதத்தின் சாரத்தைப்
புரிந்துகொள்ளும்பொழுது,
நீங்கள் கடவுளாகிறீர்கள்.
நீங்கள் அப்போது வேதத்திலிருந்து எதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் உங்கள் வார்த்தைகளை வேதமாகக் குறிப்பிடுவார்கள்.
நீங்கள் வேதத்தை நன்றாகப் புரிந்து உள்வாங்கியிருந்தால், நீங்கள் வேதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை. மக்கள் உங்கள் வார்த்தைகளைக் குறிப்பிடுவார்கள்.
நீங்கள் வேதத்தை உள்வாங் காமல், அதைக் குறிப்பிடும்பொழுது, நீங்கள் சாத்தானாகிறீர்கள். சாத்தான் வேதம் ஓதுமே தவிர வேதத்தைப் புரிந்து கொள்ளாது.
கவலையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்
உங்களுடைய இலட்சியம் மற்றும் செல்வத்தின் பயனற்ற தன்மையை நீங்கள் புரிந்துகொண்ட அந்தக் கணமே, உங்களுடனேயே எப்போதும் இருக்கக்கூடிய பொருள் என்று எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அந்தக் கணமே, இந்த எல்லாத் தெய்வீக குணங்களும் உங்களுடைய இருப்பிலிருந்து வெளிப்பரவும்.
மன்னிக்கும் குணமுடையவராகவும்
மனத்தைச் சீராக, சமநிலையுடன்
வைத்திருக்கக்கூடியவராகவும்
திருப்தியுடையவராகவும் யோகத்துடன்
தொடர்பு உடைய ஒரு மனிதராகவும் நீங்கள்
உருமாற்றமடைந்து விடுவீர்கள்.
உண்மையில் உங்களுக்குள் நீங்கள் ஆனந்தமயமாக இருந்தீர்களேயானால், இந்தக் குணங்களைப் பரவச் செய்வீர்கள். தமக்குள் முழுவதும் ஆனந்தமாக உள்ள ஒரு மனிதர் இனிமையை, காரணமேயில்லாமல் பரவச் செய்வார்.
நாம் எப்போதும் நமக்குள் ஒருவித எரிச்சலைத் தாங்கிக்கொண்டு இருக்கிறோம். நாம் மக்கள் மீது எரிந்து விழுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
நமக்கு வாய்ப்பு கிடைத்த அந்தக் கணமே, கத்தி, சத்தம் போட்டு, கோபத்தை வெளிப்படுத்துவோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரிவதில்லை.
ஒரு சிறு காரணத்திற்காகக்கூட நாம் மக்கள் மீது பாய்ந்து கடித்து விடுகிறோம். ஏனென்றால் நாம் நமக்குள் ஒருவித எரிச்சலை சுமந்து கொண்டிருக்கிறோம்.
நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களையும் துக்கங்களையும் பிறர் மீது வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
நமக்குள் இருக்கும் நிலையான கவலை, தொடர்ந்த உள்முகப் பேச்சு ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த எரிச்சல் தோன்றுகிறது. நாம் விரும்பியது கிடைக்காமல் போய்விடுமோ, நாம் எதை அடைய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோமோ அதை அடைய முடியாமல் போய்விடுமோ என்று நினைக்கிறோம்.
எதிர்காலமே
ஒரு கற்பனை என்பதால்
விளைவுகளைப் பற்றிய
எதிர்பார்ப்பு
தேவையற்றது.
நம்முடைய எல்லாக் கவலைகளுமே,
கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை
அடிப்படையாகக்கொண்டு எழுந்த
எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளாகத்தான்
இருக்கின்றன.
எதிர்காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் எழுந்த கவலைகளாகத்தான் இருக்கின்றன. நம்முடைய எதிர்பார்ப்பிற்கும், நம்மால் இந்த அளவிற்குத்தான் பெற முடியும், நமக்கு அந்த அளவிற்குத்தான் சக்தி இருக்கிறது என்று நாம் நினைப்பதற்கும் உள்ள இடைவெளியினால்தான் கவலை ஏற்படுகிறது.
அதனால் நாம் நிகழ்ச்சிகள் எப்படி நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ, அதேபோல் நடைபெறுமா என்று நாம் கவலைப்படத் தொடங்கி விடுகிறோம்.
கவலைப்படுதல் என்பதே தேவையற்ற ஒன்றுதான், ஏனென்றால் நாம் செய்யும் செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பது நம்முடைய செயல்திறன் மட்டுமல்ல அதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன.
எதிர்காலமே ஒரு கற்பனை என்பதால் விளைவுகளைப் பற்றிய எதிர்பார்ப்பு தேவையற்றது. நம்முடைய சுவாசத்தைக்கூட நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
ஆனந்தமே நம் மூச்சுக்காற்றாகட்டும்
நாம் அடுத்த மூச்சை இழுப்போமா என்பதைப் பற்றிக்கூட நம்மால் ஒரு உறுதியுடன் சொல்ல முடியாது.
அப்படியிருந்தும், நாம்தான் நம்முடைய எதிர்காலத்தையோ அல்லது நம்முடைய செயல்களின் பலன்களையோ நிர்ணயிக்கிறோம் என்று நினைப்பது எவ்வளவு செருக்குத்தனமானது!
நாம் நிகழ்காலத்தில் நிலைத்துவிடும்போது, கவலைகளும் எதிர்பார்ப்புகளும் எரிச்சல்களும் கரைந்துவிடும். நாம் நிகழ்காலத்தில் இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய செயல்களின் மீதும், அவற்றின் உடனடி விளைவுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
நாம் நிகழ்காலத்தில் நிலைத்திருக்கும்போது எண்ணங்கள் இல்லாமல் போகும். கவலைகளும் எரிச்சலும் மறைந்துவிடும். அப்பொழுது மட்டுமே நாம், கவலை எப்படித் தேவையற்றது, பயனற்றது என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
த்யான வகுப்புகளில், நான் பங்கேற்பாளர்களிடம் அவர்களுடைய வாழ்க்கையில் அப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கவலைகள், எரிச்சல்கள் பற்றி எழுதச் சொல்வேன்.
நிறைய மக்கள் ஒரு புத்தகமளவிற்கு எழுதுவார்கள். நான் அவர்களிடம் அந்தப் பக்கங்களை அப்படியே வைத்திருந்து, ஆறு மாதங்கள் கழித்து அவர்களுடைய கவலைகளில் எத்தனை நிஜமானது என்பதைச் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்வேன். உங்களுக்கு நான் சொல்லப் போவது ஆச்சரியமாக இருக்கும், இருபது சதவிகிதத்திற்கும் குறைவான அவர்களுடைய கவலைகள்தான் உண்மையாகியிருக்கும்.
கவலையும் எரிச்சலும் தேவையற்றவை. ஒருமுறை எரிச்சலின் உபயோகமின்மையை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் சில சமயங்களில் எதற்காவது ஏதோ ஒரு வழியில் எரிச்சல் அடைந்து, அந்த எரிச்சலினால் அல்லது அழுத்தத்தால் நீங்கள் எதைச் செய்தாலும், அது உங்களிடம் தங்காது.
நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் வாழ்கிறீர்கள், வாழ்வை வாழ்வதற்கு எந்த வகை விழிப்புணர்வை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் இது மட்டும்தான் உங்களுடன் தங்கும்.
நீங்கள் உங்களுடைய இருப்பு நிலையின் முக்கியத்துவத்தை உணரும்போது, தானாகவே இனிமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தத் தொடங்கி விடுவீர்கள்.
நான் மக்களுக்கு பக்தி யோகத்தை அனுபவிப்பதற்கான ஒரு எளிய தியான நுட்பத்தைக் கொடுக்கிறேன்.
இனிமையைப் பரவச் செய்கிற அந்த நுட்பத்தை வெறுமனே பயிற்சி செய்யுங்கள்.
அதை எப்படிப் பயிற்சி செய்ய வேண்டும்?
காலைையிலிருந்து இரவு வரை, எப்பொழுதெல்லாம் உங்கள் நினைவிற்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆனந்தத்தின் இனிமையான தன்மைகளை உள்ளிழுங்கள், உள்ளிழுங்கள், உள்ளிழுங்கள். ஆனந்தத்தை உள்ளிழுத்து, வெளிவிடுவதைக் காட்சியாக நினைத்துப் பாருங்கள். உங்களுடைய முழு இருப்புத் தன்மையும் மகிழ்ச்சியால் நிரப்பப்படும். ஆரம்பத்தில் நீங்கள் உருவகப்படுத்தியும் கற்பனை செய்துகொண்டும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் சில நாட்களில் அதுவே உங்களுடைய தன்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் பகல் நேர நட்சத்திரங்கள்
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், ஒரு விஷயத்தை மனத் திரையில் உருவாக்கப் பார்ப்பதும், கற்பனை செய்து பார்ப்பதும் இரு வேறு விஷயங்கள்.
கற்பனை என்ற வார்த்தை ஸம்ஸ்க்ருதத்தில் கல்பநா என்றும், உருவாக்கிப் பார்த்தல் என்ற வார்த்தை பாவநா என்றும் மொழி பெயர்க்கப்படுகிறது. பாவநா என்பது கல்பநா என்பதிலிருந்து வேறுபட்டது.
கல்ப்நா என்றால் இல்லாத விஷயங்களைக் கற்பனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு பத்து தும்பிக்கைகள் உள்ள யானையை நீங்கள் நினைத்துப் பார்த்தால் அது கல்ப்நா. அதாவது இல்லாத ஒன்றைக் குறிக்கிற வார்த்தை.
ஆனால் பாவநா என்பது இருப்பதை,
ஆனால் உங்களிடம் இருந்து திறமையாகத்
தப்பித்துக்கொண்டிருக்கும் ஒன்றை
நினைத்துப் பார்த்தல்.
பாவநா என்பது
இருப்பதை, ஆனால்
உங்களிடம் இருந்து
திறமையாகத்
தப்பித்துக்கொண்டிருக்கும்
ஒன்றை
நினைத்துப் பார்த்தல்.
உதாரணத்திற்கு, நீங்கள் பகல் நேரத்தில் உட்கார்ந்துகொண்டு, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் அது கற்பனை ஆகாது. அது பாவநா!
ஏனென்றால் உங்களால் பார்க்க முடியாவிட்டால்கூட வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதனால் நட்சத்திரங்களை நினைத்துப் பார்த்தல் கற்பனை ஆகாது. அங்கு என்ன இருக்கிறதோ அதை நீங்கள் உங்கள் மனத்தால் உணர முடியும். ஆனால் அந்தக் கணத்தில் நீங்கள் அதைப் பார்க்க முடியாது, அதைத்தான் 'உருவாக்கிப் பார்த்தல்' என்கிறோம்.
இருக்கவே முடியாத விஷயத்தை நீங்கள் காண முயற்சிப்பதுதான் கற்பனை. கடவுள்களையும் தேவிகளையும் நினைத்து த்யானம் செய்வது கற்பனை ஆகாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அது உருவாக்கிப் பார்த்தலே!
அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாது. அவ்வளவுதான். நீங்கள் அவர்களைப் பார்க்க வேண்டுமானால், உங்களுடைய தொலைக்காட்சியை இசைவு செய்வதுபோல், அவர்களுடைய அலைவரிசையோடு உங்களை இசைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியை டியூன் செய்யும்போது, உடனடியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள். அதுபோல பாவநா என்பது உங்களை நீங்களே இசைவு செய்துகொள்வது. வெறுமனே ஆனந்தத்தை உள்ளிழுத்து வெளியில் விடுவதாகத் தொடர்ந்து பாவநா செய்து பாருங்கள். ப்ராண என்கிற உயிர்க்காற்று உள்ளே போய் வெளியில் வருவதாக பாவனை செய்யுங்கள்.
ப்ராண என்பது சஃக்தியும் ஆனந்தமுமே. ப்ராண என்பது வெறும் காற்று மட்டும் அல்ல என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
ப்ராண என்பது காற்றின் வழியாக உள்ளே போகும் சஃக்தி. உதாரணத்திற்கு, ஒரு வண்டி, உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை இறக்கி விட்டுப் போகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த வண்டி போன்றதுதான் காற்று. அதில்கொண்டு வரப்பட்ட பொருள்தான் ப்ராண என்கிற பிராணன். ப்ராண என்பது வெறும் காற்று இல்லை.
காற்றை ஒரு சாதனமாக உபயோகித்து ப்ராண நம்முள் நுழைகிறது. ப்ராண சஃக்தி என்பது காற்றின் மிக நுண்ணிய பகுதி. ப்ராண சஃக்தி என்பது ஆனந்த சஃக்தி.
அதனால் நீங்கள் மூச்சை இழுக்கும் போதெல்லாம் ஆனந்தத்தை உள்ளிழுப்பதாக பாவனை செய்யுங்கள்.
நீங்கள் மூச்சை வெளியேவிடும்போதெல்லாம் ஆனந்தத்தை வெளியே விடுவதாக பாவனை செய்துகொள்ளுங்கள்.
வெளிச்சத்தை உள்ளிழுத்து வெளிச்சத்தை வெளியேற்றுங்கள். உங்கள் உடல் ஆனந்தத்தாலும் வெளிச்சத்தாலும் நிரப்பப்பட்ட ஒரு கோணிப்பை என்று பாவனை செய்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு, இயல்பாகவே எரிச்சலுக்குப் பதிலாக ஆனந்தத்தைப் பரப்பத் தொடங்குவீர்கள்.
கோபம் மற்றும் பொறாமை ஆகிய விஷத்தை மற்றவர்கள் மீது வாந்தி எடுப்பதற்குப் பதிலாக ஆனந்தத்தையும் அன்பையும் பரப்புவீர்கள்.

ப்ராண என்பது வெறும் காற்று மட்டும் அல்ல, ப்ராண என்பது சஃக்தியும் ஆனந்தமுமே.