KAILASA Library/பகவத்கீதை/உங்களால் முடிந்தால் செய்யுங்கள்...Sign in
பகவத்கீதை

உங்களால் முடிந்தால் செய்யுங்கள்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"அப்படிப்பட்ட ஒரு பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். யாராவது இந்த வகையில் வாழ்ந்தார்களானால், அந்த பக்தர் அவருக்கு நெருக்கமானவராகிறார் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

"இதைச் செய் அல்லது அதைச் செய்யாதே," என்று அவர் சொல்லவில்லை. பல சட்டங்களை உருவாக்க அவர் விரும்பவில்லை.

சட்டங்களை உருவாக்கி உருவாக்கி அவர் சோர்ந்து விட்டார். அர்ஜூனனுடைய மனநிலை எதுவோ அந்த நிலைக்கு அவர் சென்று, "உன்னால் முடிந்தால் செய். இல்லையென்றால் வேறு என்ன செய்ய முடியும்?" என்று சொல்லிவிட்டு கிருஷ்ணர் தளர்வான மனநிலையில் இருக்கிறார்.

இது எல்லா குருமார்களுக்கும் நிகழும் என்று நான் நினைக்கிறேன். எல்லா குருமார்களும் இந்த நிலையை ஒரு சமயத்தில் அடைகிறார்கள்.

ஆனந்தத்தினாலும் மகிழ்ச்சியாலும்தான் குருமார்கள் தங்களிடம் எது உள்ளதோ அதைப்பகிர்ந்துகொள்கிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, "சரி உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்யுங்கள். வேறு என்ன செய்ய முடியும்?" என்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் வழி நடத்துவார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட தூரம்வரை மட்டுமே வழிகாட்டுவார்கள். அதற்கு மேல் அவர்கள் மக்களை வற்புறுத்தினால், மக்களை ஞானமடையச் செய்வதில் குருமார்களுக்கு ஏதோ தனிப்பட்ட நலன் இருக்கிறது என்று மக்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள்.

ஏதோ ஒரு பத்துப்பயிரை அதிகமாக ஞானமடையச் செய்துவிட்டால், குருமார்களுக்குச் சொர்க்கத்தில் சிறப்பான ஒரு இடம் கிடைக்கும் என்றோ அல்லது கடவுள் அவர்களுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி விடுவார் என்றோ மக்கள் எண்ணுகிறார்கள். ஆனந்தத்தினாலும் மகிழ்ச்சியாலும்தான் குருமார்கள் தங்களிடம் எது உள்ளதோ அதைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு கைதி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

Illustration of a man carrying a heavy sack with a dollar sign on it

"உனக்கு இந்த மனிதரைத் தெரியுமா?" என்று வக்கீல் கேட்டார்.

"எனக்கு எப்படி இவரைத் தெரியும்?" என்று கைதி பதில் சொன்னார்.

"இவர் உன்னிடமிருந்து பணம் கடன் வாங்கினாரா?" என்று வக்கீல் கேட்டார்.

"இவர் ஏன் என்னிடமிருந்து பணத்தைக்
கடன் வாங்க வேண்டும்?" என்று கைதி பதில்
சொன்னார்.

> சீடரானவர் தம்மை
> குருவிடம் ஒப்படைப்பதாக
> ஒருமுறை
> வாக்களித்து விட்டால்,
> குருவும் சீடருடைய
> பொறுப்பை
> ஏற்றுக்கொள்வதாக
> வாக்களிக்கிறார்.

இதற்குள் எரிச்சலடைந்த நீதிபதி கைதியை பார்த்து, "நீ ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கிறாய்? நீ ஏன் வக்கீலின் கேள்விகளுக்கு வெறுமனே பதில் அளிக்கக்கூடாது?" என்று கேட்டார்.

"நான் ஏன் கேள்விகள் கேட்கக்கூடாது?" என்று கைதி பதில் சொன்னார்.

இதுதான் வாழ்க்கையில் நடக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள்
குருவை நம்பத் தயாராக இல்லை. அவரை
நீங்கள் தடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

'நான்', 'எனது' ஆகியவற்றைக் கைவிடுங்கள் என்று கூறும்பொழுது மக்கள் ஏதோ குரு அவற்றை எடுத்து தன்னுடன் வைத்துக் கொள்வாரோ என்று பயப்படுகின்றனர்!

ஒருவேளை அவர் அவற்றை எடுத்துக்கொண்டு போய்விடக்கூடும். அவருக்கு அவை தேவையாக இருப்பதால்தான், அவற்றைக் கைவிடும்படி சொல்வதாக மக்கள் நினைக்கிறார்கள். "அவர் நம்மைக் கைவிடும்படி சொல்கிறார். அப்படியானால்தான் அவரால் அவற்றை எடுத்துக்கொள்ள முடியும்," என்று நினைக்கிறார்கள். மக்கள் சந்தேக மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.

அதனால்தான் குருமார்கள் சில சமயம், "இதுதான் சரியான பாதை. ஆனால் உங்களுக்கு எப்படிச் செய்ய விருப்பமோ அப்படிச் செய்துகொள்ளுங்கள்,'' என்று சொல்லி விடுவதுண்டு.

குரு-ஆன்மீக அறுவை சிகிச்சை நிபுணர்

"யார் தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என்னிடம் நிலைப்பெறச் செய்கிறார்களோ,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஒரு பக்தருக்கோ அல்லது சீடருக்கோ பிரபஞ்சத்திடமோ அல்லது குருவிடமோ இந்த அளவிற்கு சரணாகதி செய்யும் மனநிலையைக்கொள்வது என்பது கடினமான காரியம்தான்.

அந்த மனிதர் விரும்பியபடி நிகழ்ச்சிகள் நடக்கும்வரை, ஒரு குருவானவர் அந்த பக்தரை அவர் எதை விரும்புகிறாரோ, அதைச் செய்துகொள்ள அனுமதிக்கும்வரை மட்டுமே அவர் ஒரு சிறந்த குரு ஆகிறார். வழிபடத் தகுதியானவராகிறார்.

ஆனால் குரு கண்டிப்பானவராக மாறி, சீடருக்கு ஆன்மீக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதன் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டால், சீடர் அவரிடமிருந்து விலகி ஓடிவிடநினைக்கிறார்.

நான் மக்களிடம் சொல்வதுண்டு, "நான்தான் உங்களுடைய சரியான குருவா இல்லையா என்பதை முன் கூட்டியே நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். குரு தம்முடைய பொறுப்பைக் கடுமையான முறையில் அக்கறையுடன் எடுத்துக்கொள்வார். அவருடைய முக்கியமான பொறுப்பு அறுவை சிகிச்சை. அது அஹங்காரம் என்ற புற்றுநோயை அறுக்கும் சிகிச்சை.

நீங்கள்
அருவக் கடவுளை
வணங்கினால்தான்,
என்னுடன் எளிதாகத்
தொடர்புகொண்டு,
என்னை உண்மையாகப்
பின் தொடர முடியும்.

சீடரானவர் தம்மை குருவிடம் ஒப்படைப்பதாக
ஒருமுறை வாக்களித்து விட்டால், குருவும்
சீடருடைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக
வாக்களிக்கிறார். அறுவை சிகிச்சை
நடக்கும் மேசையிலிருந்து தப்பிச்
செல்வது ஆபத்தானது. அப்படி ஓடுவதால்
நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும்
இழந்து விடுவீர்கள்.

இன்னொரு சந்தர்ப்பம் இதுபோல்
கிடைப்பதற்கு நீங்கள் பல ஜென்மங்கள்
காத்திருக்க வேண்டியிருக்கும்.”

இங்கே கிருஷ்ணரும் அதே மன நிலையில்
இருந்துதான் சொல்கிறார். "இந்த மாதிரியான
என்னுடைய பக்தரே எனக்குப் பிரியமானவர்."
அவ்வளவுதான். பக்தர் அவரிடம் கொடுக்கும்
வாக்குறுதியைப் பற்றி அவர் பேசுகிறார்.

அவர் சொல்கிறார், "யார் என்னிடம் அவரை ஒப்படைப்பதாக உறுதியளிக்கிறாரோ, அவருடைய மனம் மற்றும் பட்டறிவையும் என்னிடம் பொருத்திக்கொள்கிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர். அவர் விடுதலை செய்யப்படுவார்." இப்படி அந்தச் சிறந்த குரு சொல்கிறார்.

> ஞானமடைந்த குரு
> கடவுளைவிட மேலானவர்.
> ஏனென்றால், அவர் ஒரு
> ஸத்யமாக ஒரு நிஜமாக
> உங்களுடன் இருக்கிறார்

குரு மட்டுமே கடைசிவரை வருவார்

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி! நான் அருவக் கடவுளை வணங்குகிறேன். இருந்தாலும் நான் உங்களுடைய சீடராகலாமா?

நீங்கள் அருவக் கடவுளை வணங்கினால்தான், என்னைப் புரிந்துகொண்டு, என்னுடன் எளிதாகத் தொடர்புகொண்டு, என்னை உண்மையாகப் பின்தொடர முடியும்.

நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னதுபோல, நான் விதிமுறைகளைக் கொடுத்து இருக்கிறேன். என்னுடைய சீடர்கள் என்னுடைய உருவத்தை த்யானம் செய்ய முடியாது. அவர்கள் என்னுடைய உருவத்தை த்யானம் செய்யக்கூடாது.

அவர்கள் விழிப்புணர்வு அனுபவ நிலைக்குள் மட்டுமே செல்ல வேண்டும். அவர்கள் என்னுடைய உருவத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதை நான் விரும்புவதில்லை.

என்னுடைய உருவம் மட்டுமல்லாது வேறு எந்த குருவின் உருவத்துடனும் அவர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.

உங்களில் பெரும்பான்மையினருக்கு கடவுள் என்பது கருத்துதான். ஞானமடைந்த குருவிற்கு கடவுள் என்பது ஸத்யம். ஞானமடைந்த குரு கடவுளைவிட மேலானவர். ஏனென்றால், அவர் ஒரு ஸத்யமாக ஒரு நிஜமாக உங்களுடன் இருக்கிறார், அவர் ஒரு கருத்து இல்லை. குரு எதிரில் இருக்கிறாரோ இல்லையோ அவருடைய ஸாந்நித்யம் வேலை செய்யும்.

உடலில் இல்லாத குருமார்கள் ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவ முடியுமா? என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. தயவுசெய்து இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உடலில இல்லாத குருமார்கள் நீங்கள் நினைப்பதுபோல் இறந்துவிடவில்லை.

அவர்களுடைய சக்தி, அவர்கள் உடலில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதே அளவு வலிமையுடையதாகவே இருக்கும். அதனால்தான் வேத பாரம்பரியத்தில் குருமார்களுடைய உடல் எரிக்கப்படாமல் ஸமாதீயில் வைக்கப்பட்டது.

அவர்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள ஜீவ ஸமாதிகள் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக Nuclear reactors போன்றவை.

மிகப் பிரசித்திப் பெற்ற இந்தியக் கோயில்கள், குறிப்பாகத் தென்னிந்தியக் கோவில்கள் எல்லாம் ஞானமடைந்த குருமார்களின் ஜீவஸமாதிக்கு மேல் கட்டப்பட்டிருப்பதால் அவை உயர்நிலை சக்தி வாய்ந்த ஸ்தலங்களாக இருக்கின்றன.

அதனால் உடலில் இல்லாத குருமார்கள் உங்கள் அருகில் இல்லை என்று நினைக்க வேண்டாம். இந்த பூமியில் இருக்கும் தீய சக்திகளைக் கட்டுப்படுத்தி அதன் செயல்பாடுகளைத் தடுத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய சக்திதான். அவர்கள் உங்களுடைய செயல்களுக்குப் பதில் செயல்பரிகிறார்கள். உங்களுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கிறார்கள்.

அதே தர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு, உடலில் இருக்கும் குருமார்களுடைய உடலோ அல்லது உருவம்தான் உங்களுடைய தேடுதலின் முடிவு என்று நினைத்து விடாதீர்கள்.

வாழ்ந்து கொண்டிருக்கும் குரு தம்முடைய உருவத்தைவிட மிகவும் பெரியவர். என்னை இந்த ஆறு அடி உருவத்திற்குள் அடக்கி அதில் மயங்கி நின்று விடாதீர்கள்.

நான் உங்கள் முன்பு இருக்கும்போது மட்டும்தான் உங்களுடன் இருப்பதாக நினைக்காதீர்கள். எனக்கு முன்னால் நீங்கள் இல்லாதபோது, நான் உங்களுடன் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்.

நான் என்னுடைய சீடர்களிடம் சொல்வதுண்டு: “நீங்கள் வெறுமனே என்னைப் பின் தொடர்வது உங்களுக்கு உதவாது. ஸங்கத்திற்காக உழையுங்கள். இது, இருப்புத் தன்மையின் ஸங்கம். பிறகு உங்களை நான் பின் தொடர்வேன். நான் உங்களுடைய இதயத்தில் இருப்பேன்.”

இதுதான் அந்த உயர் விழிப்புணர்வாகிய கிருஷ்ணரின் செய்தி.

Illustration