KAILASA Library/பகவத்கீதை/எதனாலும்Sign in
பகவத்கீதை

எதனாலும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பாதிப்படையாதீர்கள்

Krishna

இந்த உலகம் யாரால் பிரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் இந்த உலகத்தால் பிரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் மகிழ்ச்சி, கோபம், கவலை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருக்கிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர்.

ஞானியின் இருத்தலே ஒரு ஆசீர்வாதம் தான்

கிருஷ்ணர் சொல்கிறார். "யார் இந்த உலகத்தால் மோசமாக பாதிப்படையவில்லையோ, குழப்பமடையவில்லையோ, அவர் , இந்த உலகைப் பாதிப்பதும் இல்லை; உலகில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணமாவதும் இல்லை."

தம்முடைய இருப்புத் தன்மையில் மையம் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டுமே, அந்த இறுதி விழிப்புணர்வில் மையம் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டுமே, இந்த உலகத்தில் எந்தவித அழிவையும் ஏற்படுத்துவதில்லை.

> தம்முடைய
> இருப்புத் தன்மையில்
> மையம் கொண்டிருக்கும்
> ஒரு மனிதர் மட்டுமே,
> இந்த உலகத்தில்
> எந்தவித அழிவையும்
> ஏற்படுத்துவதில்லை.

ஞானமடைந்த ஒருவரின் ஸாந்நித்யத்தில்
இருப்பதாலேயே நம்முடைய
மனது அமைதி அடைகிறது. நாம்
நிலையானவர்களாக, உறுதியானவர்களாக
மாறுகிறோம். இது போன்ற மனிதர்களால்
இந்த உலகம் துக்ககரமான பாதிப்புகளை
அடையாமல் இருப்பது மட்டுமல்ல, இந்த
உலகம் அவர்களுடைய இருத்தலினால்
ஆசீர்வதிக்கப்படுகிறது என்றும் என்னால்
உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு மனிதர் தெய்வீகத்துடனும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனும் தம்மை ஒன்றுபட்டவராக ஒருமுறை உணர்ந்த பிறகு, அங்குச் சண்டைக்கு இடமேது? அங்கு எந்தவிதமான நாடகத்திற்கும்தான் இடமேது?

அங்குச் சண்டையும் நாடகமும் இருக்க முடியாது! தம் மீதும், பிறர் மீதும் கொண்ட ஆழமான அன்பு மற்றும் கருணையின் அனுபவம் மட்டுமே இருக்கும்.

ஒருவர் தொடர்ந்து அழிவில்லாத ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அங்கு எப்படிச் சிறு சிறு சந்தோஷங்களோ அல்லது குழப்பங்களோ இருக்க முடியும்? சாத்தியமில்லை.

ஞானமடைந்த ஒருவருக்கு, இது எல்லாமே ஒரு விளையாட்டாக லீலாவாக

மாறிவிடுகிறது. அவர் அந்த விளையாட்டு
தன்னுள் நடப்பதைப் பார்ப்பது மட்டுமல்ல,
அந்த விளையாட்டில் தாம் இல்லாததையும்
பார்க்கிறார்.

எவர் ஒருவர் தம்மைச் சுற்றி நடக்கும்
நிகழ்ச்சியினால் பாதிப்பு அடையாமல்,
தம்முடைய மையத்திலிருந்து தம்மை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ,
அவர் எனக்குப் பிரியமானவர் என்று
கிருஷ்ணர் சொல்கிறார். ஏனென்றால் அவர்
கிருஷ்ணருக்குள் மையம் கொண்டிருக்கிறார்.

எதிர்பார்ப்புகள் மற்றும்
ஆசைகள்
நிறைவேறும்போது ஏற்படும்
துணை விளைவுதான்
மகிழ்ச்சி.

நம்மில் பலருடைய நிலை இது. நாம் எப்பொழுதும் நம்முடைய குணாதிசயங்களின் வெளிவட்டத்திற்குள்ளேயே, மேல் மட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம்மில் பலருக்கும் சந்தோஷம் என்பது ஒரு துன்பத்திற்கும் மற்றொரு துன்பத்திற்கும் இடையே உள்ள காலம்தான். நாம், இரண்டு போர்களுக்கு இடைப்பட்ட காலத்தை அமைதி காலம் என்று அழைப்பதைப் போன்றே, நம்முடைய இந்தச் சந்தோஷமும் இரு துன்பங்களுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கிறது. அதனால்தான் இது நிரந்தரமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது.

புலன்கள் மூலம் அனுபவிக்கப்படும் தற்காலிக இன்பங்கள் நிச்சயமாக துன்பத்தை நோக்கித்தான் நம்மை அழைத்துச் செல்லும். எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்போது ஏற்படும் துணை விளைவுதான் மகிழ்ச்சி.

நம்முடைய எதிர்பார்ப்பு முதல் முதலில் நிறைவேறும்போது மகிழ்ச்சி அடைவோம். பெரும்பாலும் அடுத்த முறை அது நடக்காது. அதனால் இன்பத்திற்கு மாறாக துன்பம் தொடரும்.

மகிழ்ச்சி என்பது நிரந்தரமாக இருந்தால், அது நம்முள் மட்டுமே அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். அந்த மகிழ்ச்சியைத்தான் மிகச் சரியாக ஆனந்தம் என்கிறோம்.

ஆனந்தம் நிரந்தரமானது, அழிவில்லாதது, அதற்கு மாறாக மகிழ்ச்சி நிரந்தரமற்றதாகவும் அழியக்கூடியதாகவும் இருக்கிறது. ஆனந்தம் அழிவதில்லை. நம்முடைய இருப்பில் நாம் மையம் கொண்டிருக்கும்போது, நம்முடைய எதிர்பார்ப்புகளைக் கைவிடும்போது, நாம் பற்றில்லாத தன்மையுடனும் மன நிலையுடனும் இருக்கும்போது ஆனந்தம் நம்முள் பொங்குகிறது.

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிஸ்சலத்வம் நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: - என்று ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்.

பற்றற்ற தன்மை, நம்மை ஆசைகளற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும். ‘ஆசையில்லா’ அந்த நிலையானது, ஒரு அமைதியான, ஆரவாரமற்ற, ஆனந்தம் நிறைந்த மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஆனந்தமான நிலை, நம்மை விடுதலையை நோக்கி, ஜீவன் முக்தி நிலையை நோக்கி எடுத்துச் செல்லும்.

மகிழ்ச்சியில்லா நிலை என்று கிருஷ்ணர் குறிப்பிடும்போது, நம்முடைய ஆசைகளின் துணை விளைவான வந்து போகிற ‘நிலையில்லாத மகிழ்ச்சி’ யைத்தான் குறிப்பிடுகிறார்.

அது நம்முடைய மாய எண்ணங்களினாலும் கற்பனைகளாலும் சக்தியூட்டப்படுகிறது. இந்த நிரந்தரமில்லாத மகிழ்ச்சியின் உச்சத்தையும் ஆழத்தையும் கடந்தால் மட்டுமே உண்மையில் ஒருவரால் ஆனந்தமான நிலையை அடைய முடியும். நாம் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமானால், இன்பம் துன்பம் என்கிற இந்த இரண்டையுமே நாம் கடந்தாக வேண்டியிருக்கிறது.

> நாம் ஆனந்தத்தை
> அனுபவிக்க
> வேண்டுமானால்,
> இன்பம், துன்பம் என்கிற
> இந்த இரண்டையுமே
> நாம் கடந்தாக
> வேண்டியிருக்கிறது.

கவலைதான் நம் ஆத்மாவைப் பிடித்திருக்கும் புற்றுநோய்! யோசிக்கக்கூடிய திறமை நமக்கு வந்த நாள் முதற்கொண்டு, நாம் கவலையில்தான் இருக்கிறோம்.

நாம் எல்லா நேரமும்
கவலைப்படுகிறோம். துக்கம், கவலை மற்றும்
இவற்றின் பக்கவிளைவான மன அழுத்தம்
இம்மூன்றும்தான் வாழ்க்கையில் நம்முடைய
ஊன்றுகோல்களாக இருக்கின்றன.

நம்முடைய எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தினால்தான் கவலை உண்டாகிறது. நமக்கு ஆசைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. நம்மிடம் பொதுவாக நமக்குத் தெரிந்த நம்முடைய திறமைகளும் இருக்கின்றன.

எதிர்காலம் பற்றிய எண்ணமே கவலைக்கான உணவு.

பெரும்பாலும் நம்முடைய ஆசைகளும் திறமைகளும் பொருந்திச் செல்வதில்லை. இந்த இரண்டிற்கும் இடையே ஒரு இடைவெளி இருந்தே தீரும். அந்த இடைவெளிதான் நமக்குள் கவலையை உண்டாக்குகிறது.

Peacock Feather Illustration

நாம் கண்களை மூடிக்கொண்டு ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சியைக் கவனத்தில் வைக்க முயற்சிசெய்யும்போது சில கணங்களுக்குப் பிறகு நம்மால் அதைத் தொடர முடியாமற் போவதை நாம் உணர்கிறோம்.

எந்த எண்ணமோ அல்லது சிந்தனையோ நம்முடைய உள்வெளியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாது. எப்பொழுதும் இன்னொரு எண்ணம் வந்து முதலில் தோன்றிய எண்ணத்தை ஒதுக்கிவிடும். இதுதான் நம்முடைய மனத்தின் உள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் 'உள் மனப் பேச்சு'

புத்தர், இதைக் 'குரங்கு மனம்' என்று குறிப்பிடுகிறார். இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே தாவிக் கொண்டிருக்கும் நம் மனத்தினுடைய தொடர் தாவல்தான் இந்த உள்மனப் பேச்சு.

கடந்தகாலத்தில் மனம் எதை அனுபவித்து, நினைவுப் பதிவுகளாகப் பதிந்து வைத்திருக்கிறதோ அதாவது கடந்தகால அனுபவங்களினால் ஏற்பட்ட நினைவுகளுக்கும், கடந்தகாலத்தை ஆதாரமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் யூகங்களான தெரியாத எதிர்காலத்திற்கும் இடையே நம்முடைய மனம் மேற்கொள்ளும் பயணம்தான் இந்த உள்மனப் பேச்சு. இந்தத் தாவலைத்தான், இந்தப் பயணத்தைத்தான் நாம் எண்ணங்கள் என்று சொல்கிறோம். நம்மளுடைய அஹங்காரம், அது விரும்பியது நிகழாது என்பதை உணரும்போது, நம்மளுடைய கவலை அதிகமாகிறது. உண்மையில், இந்த இழப்பு இன்னும் நிகழவே இல்லை, இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான ஒரு விஷயம்தான், இருந்தாலும் நமக்குள் ஆழமான உணர்ச்சிகள் ஏற்பட காரணமாக இது இருக்கிறது.

எதுவும் நிகழ்வதற்கு முன்பே மிகுந்த கவலையுடன் நாம் மோசமான விளைவு நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் மோசமான விளைவுக்காகக் காத்துக் கொண்டிருப்போம். பின்பு கவலைப் பெருமூச்சுடன் அந்த நிகழ்ச்சி நடந்து முடிவதற்காகக் காத்துக் கொண்டிருப்போம்.

நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புரியும், நீங்கள் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு மோசமான விளைவு உண்மையில் நிகழும்பொழுது, நீங்கள் ஒருவித விடுதலை உணர்வை அனுபவித்திருப்பீர்கள். அடிக்கடி இது போன்ற அனுபவம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடும். எதிர்காலம் நிகழ்காலத்திற்கு வந்தவுடன் கவலை அதற்கு மேல் தொடர்வதில்லை.

எதிர்காலத்தைப் பற்றிய எண்ணத்தில்தான்
கவலை வாழ்கிறது, வளர்கிறது. அதனுடைய
அடிப்பட ஆதார அஹங்காரம்.
அஹங்காரம் எதிர்பார்ப்புகளை
உருவாக்குகிறது.

நான், எனது, தனித்துவம் மற்றும் உரிமைகொண்டாடுதல் என்கிற இந்த நான்கு விஷயங்களோடு சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்புகள்தான் நாம் எதிர்பார்த்தது நிகழாமல் போய்விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தும். இந்தக் கவலையில் இருந்து வெளிவர, நாம் நிகழ்காலத்திற்குள் வர வேண்டும். அந்த ஒரு இடம் மட்டுமே நம்மளுடைய உள்பேச்சு நின்று, கவலை மறையும் இடம்.

"யார் கவலையில்லாமல் இருக்கிறாரோ அவரே என்னை அடைவார்," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவர் கிருஷ்ணரையே அடைகிறார் என்பதைத்தான் குறிப்பிடுகிறார்.

நிகழ்காலத்தில் நாம் எண்ணங்களே இல்லாமல் இருக்கும்போது,

நிகழ்காலத்தில் இருக்கும்
ஒருவர்
கிருஷ்ணரையே
அடைகிறார் .

நம்முடைய பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஸத்யத்தை, கிருஷ்ணர் விழிப்புணர்வை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும்; பிறகு நாம் அவருடன் இணைகிறோம்.

குற்ற உணர்ச்சியை உங்களால் விட்டுவிட முடியும்

கிருஷ்ணர், "கோபத்தை விடு, யார் கோபமில்லாமல் இருக்கிறாரோ அவர் என்னை அடைவார்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இந்தச் சொற்களின் நேரடியான அர்த்தத்தை மட்டுமே புரிந்துகொண்டால், நாம் கிருஷ்ணரை அடைய முடியாது. நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் இல்லையானாலும் இன்னொரு சமயத்தில் கோபத்தை வெளிக்காட்டுகிறோம்.

கோபம் என்பது நேர்மறை சக்தி. வெளிப்படும் கோபம், வெளிப்படுத்துபவருக்கும் சரி, பெறுபவருக்கும் சரி நன்மை தரக்கூடியதாக ஆக முடியும். இது மிகுந்த ஆச்சரியமாகத் தோன்றினாலும் உண்மையே.

பெரும்பாலும் நம்முடைய கோபம் என்பது நம் குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். நம்முடைய வாழ்க்கைத் துணை, அவர் எதிர்பார்த்தபடி நாம் நடந்துகொள்ளாததைச் சுட்டிக் காட்டும்பொழுது, நாம் நம்மைக் காத்துக்கொள்ள முயற்சிசெய்வோம்.

நாம் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குச் செல்வோம். நாம் தவறு செய்ததை உணரும்பொழுது குற்ற உணர்ச்சியை அடைகிறோம்.

ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்வதை
விட்டு விட்டு நாம் கோபம் அடைகிறோம்.
நம்முடைய குற்றத்தை நாம் ரகசியமாக
வைக்கவே விரும்புகிறோம்.

அதை வெளிப்படுத்திவிடும் நபரை நாம்
வெறுக்கிறோம். இது, ஒரு தொழுநோயாளி
தம்முடைய புண்களைப் பார்க்க
விரும்பாததுபோல இருக்கிறது.

ஒரு விதத்தில் இந்தக் கோபம் நம் மீதேகூட திருப்பப்படும். நம்முடைய

> வெளிப்படும் கோபம்,
> வெளிப்படுத்துபவர்க்கும்
> சரி,
> பெறுபவருக்கும் சரி
> நன்மை தரக்கூடியதாக
> ஆக முடியும்.

குறைபாடுகளுக்கு எதிராக நமக்குள் நடக்கும்
உணர்ச்சிக் கொந்தளிப்பான குமுறலின்
விளைவே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி
தான் நாம் செய்கிற மிகப்பெரிய பாவமே!

நாம் எதைச் செய்தாலும், அந்த
நேரத்தில் நமக்கிருக்கும் அறிவு மற்றும்
விழிப்புணர்வின் அடிப்படையில்தான்
செய்கிறோம். நாம் செய்வதை ஒருமுறை
செய்து முடித்துவிட்டோமானால், அதை
மாற்றக்கூடிய சக்தி நமக்கு இல்லை.

நாம் செய்வதை
ஒருமுறை செய்து
முடித்துவிட்டோமானால்,
அதை மாற்றக்கூடிய சக்தி
நமக்கு இல்லை.

உமர் கயாம் தம்முடைய ‘ருபையாத்’ (Rubaiyat) என்ற புத்தகத்தில் ‘அசையும் கை எழுதிவிட்டு, நகர்ந்துகொண்டே இருக்கும். எழுதுவதனாலேயே, அது நகர்ந்து சென்றுவிடும். உங்களுடைய கண்ணீரோ அல்லது உங்களுடைய எல்லா நற்பண்புகளுமோ அதைப் பின்னோக்கி தள்ள முடியாது,’’ என்று சொல்கிறார்.

இறந்தகாலத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் குற்ற உணர்ச்சி யை ஏதாவது செய்ய முடியும். ஆம், குற்ற உணர்ச்சியை விட்டுவிட முடியும். நீங்கள் செய்ததை ஒப்புக்கொண்டு முன்னால் போக முடியும்.

உங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்பதையும்கூட ஒப்புக்கொண்டு முன்னால் போக முடியும். உங்களால் உங்களுடைய குற்ற உணர்ச்சியை விட்டுவிட முடியும்.

நாம் நம்முடைய குற்ற உணர்ச்சியை விட்டுவிடும்போது, நம்முடைய கோபத்தையும் விட்டுவிட முடியும். நம்முடைய குற்ற உணர்ச்சியை விட்டுவிடும்போது, நம்முடைய அடக்கப்பட்ட உணர்ச்சிகளான கோபம், வருத்தம், தற்காத்துக்கொள்ளல் மற்றும் உள்குமுறல் அனைத்தையும் விட்டு விடலாம்.

அடக்கப்பட்ட கோபம் புற்று நோயை உருவாக்கும். தங்களுக்குள் உணரும் கோபத்தை வெளிக்காட்டாமல் வெளியில் அமைதியுடன் இருக்கும் மக்கள் வெடிகுண்டின் மீது அமர்ந்திருக்கிறார்கள்.

அது எதிர்பாராமல் வெடித்து அவர்களுக்கும் பிறருக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும் அல்லது அவர்களையே புற்று நோயால்

Illustration showing four facial expressions representing emotions

அழித்துவிடும். இது முற்றிலும் சாத்தியம்.

மலேசிய கலாச்சாரத்தில் சிறு வயது முதல் எதிர்மறை உணர்ச்சிகளான துக்கம், கோபம், எரிச்சல் போன்றவற்றை வெளியிடாமல் இருக்கக் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். எல்லோரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இருப்பினும் திடீரென்று அந்த இணைப்பு தகர்ந்து விடுகிறது. இதை அவர்கள் 'கட்டுப்பாடில்லாமல் முறையின்றி நடப்பது, (Running amok) என்று சொல்கிறார்கள். ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த வார்த்தை, தம் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து, குழப்பத்தை உருவாக்கிக் கொண்டு, முழுஃக் கட்டுப்பாட்டையும் இழந்த நிலையில் விளைவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்யும் ஒருவரைக் குறிக்கிறது.

“தெருக்களில் நடக்கும் சண்டைகளை என்ன செய்வது? கோபத்தின் மூர்க்கமான வெளிப்பாட்டினால் விளையும் நாசத்தைப் பற்றி என்ன சொல்வது?” என்று நீங்கள் கேட்கலாம். ஒருவர் தமக்குள் ஏற்படும் கோபத்தை விட்டுவிடக் கற்றுக் கொண்டால், பிறகு தெருச் சண்டை அல்லது வீட்டுச் சண்டை இருக்காது.

நாம் நம்முடைய உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்துகிறோம், அவை பிறகு
வெடிக்கின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து
பல்வேறு காரணங்களுக்காக நம்முடைய
உள்கோபம் வளர்ந்துகொண்டே வருகிறது.
சமுதாயத்தைப் பற்றி நம்மால் நினைக்க
முடிந்த எல்லா எதிர்மறை கருத்துகளையும்
நாம் திரட்டி வருகிறோம்.

நம்மால் இவற்றையெல்லாம் வெளிப்படுத்த
முடிவதில்லை. ஏனென்றால் அப்படிச்
செய்வது முறையற்றது, கலாச்சாரமற்றது,

> நம்முடைய
> குற்ற உணர்ச்சியை
> விட்டுவிடும்போது,
> கோபம், வருத்தம்,
> தற்காத்துக்கொள்ளல்
> மற்றும் உட்குமுறல்
> அனைத்தையும்
> விட்டு விடலாம்.

நாகரிகமற்றது என்று சமுதாயம் கருதுகிறது. பின்பு உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ, அது வெடித்துதான் ஆக வேண்டும். நம் கோபத்தை மக்களிடம் காட்டுவதைவிட பிரச்சினைகள் மேல் காட்டக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் மேல் கோபம் ஏற்படும்போது அதை மக்களிடம் காட்டுவதை விட, பிரச்சினையை நோக்கிச் செலுத்தவேண்டும். அந்த மனிதர்தான் இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த மனிதர்.

நீங்களும் அந்த மனிதருக்கு எதிராக உங்கள் கோபத்தைச் செலுத்தினீர்களானால், உங்கள் ஆழமான பிரச்சினை அப்படியே மூடி மறைக்கப்பட்டே இருக்கும். மிகவும் ஆபத்தான முறையில் பிறகு மீண்டும் எழுந்து வரும். கோபம், கோபத்தை வளர்க்கும். அது ஒரு விஷச் சுழல்.

ஆனால், நாம் நம்முடைய கோபத்தை முற்றிலுமாக அந்த நிகழ்ச்சி, சம்பவம் அல்லது பிரச்சினைக்கு எதிராக வெளிப்படுத்தி, அதை தனிப்பட்ட மனிதரோடு இணைக்காமல் இருந்தால், நமக்கும் பிறருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், நம்முடைய கோபத்தை வெளிப்படுத்த முடியும். அது சாத்தியம். நீங்கள் அதைப் பயிற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

கோபத்தின் உணர்ச்சி மிகுந்த நினைவுகள் வெளிப்படுத்தப்படும்பொழுது, அந்த நினைவுகள் கரைந்து விடுகின்றன. பிறகு கோபம் நிலைப்பதில்லை. நாளடைவில் கோபம் தோன்றுவதற்கு முன்பே அது மறைந்துவிடும். தம்மை அடைய வேண்டுமானால் ஒருவர் இந்தக் கோபத்தைத் தாண்டிய நிலையை அடைந்தே ஆக வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

illustration