KAILASA Library/பகவத்கீதை/உங்களுக்காகவே அவதரித்தவர்Sign in
பகவத்கீதை

உங்களுக்காகவே அவதரித்தவர்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: தம்மையறிந்த ஞானிகளின் மறுபிறவியின் அர்த்தம் என்ன?

'தன்னையறிந்த நிலை' அல்லது 'ஞானமடைந்த நிலை' என்கிற அந்த நிலையில் ஒருவர் தம்முடைய கர்மா, ஸம்ஸ்காரம் அல்லது வாஸநா போன்றவற்றால் கட்டுப்பட்டிருப்பதில்லை. அவரை மீண்டும் இந்தப் பூமிக்கு அழைத்து வரக்கூடிய நிறைவேறாத ஆசைகள் எதுவும் இருப்பதில்லை; இந்தக் கிரகத்தில் நுழைவதற்கான விதிகளை நிர்ணயிக்கக்கூடிய மனநிலையும் இருப்பதில்லை. ஸம்ஸாரம் என்கிற பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபட்டவர் அவர்.

இந்த ஞானமடைந்த ஆத்மாக்கள் பிரபஞ்ச சக்தியான பராசக்தியிடம் கலந்து விடுகின்றன. அவர்கள் மற்ற உயிர்கள்போல் இந்த உடல் என்கிற வடிவத்திற்குள் நிறைவேறாத ஆசைகளோடு நுழைவதில்லை.

மனம் - உடல் என்ற அமைப்பு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதைவிட, பிரபஞ்ச சக்திதான் அவர்களுக்கு என்ன நிகழ வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

தம்முடைய கருணையினால் பராசக்தி இந்த உலகத்திற்கு உதவி செய்ய சில ஞானமடைந்த சக்திகளை அனுப்புகிறாள். இந்தப் பூமிக் கிரகத்திற்கு உதவி செய்ய சில ஞானமடைந்த உடல்களைச் செயலாற்ற வைக்க அவள் முடிவு செய்கிறாள். அதை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

மேலும், அவள் எதை அடிப்படையாக வைத்து இந்த முடிவை எடுக்கிறாள் என்றுகூட நமக்குத் தெரியாது. நம்மால் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே போட முடியும். அது எப்படி வரும், எப்பொழுது வரும், ஏன் வரும் அல்லது ஏன் வராது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

அது அமெரிக்காவின் விசாவைப் போன்றது! நீங்கள் வெறுமனே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து விட்டுக் காத்திருக்க வேண்டும். அது எப்படி கிடைக்கும், ஏன் கிடைக்கும், ஏன் கிடைக்காது என்று எதுவும் தெரியாது. உங்களிடம் முடிவு மட்டும் இருக்கும். அவ்வளவுதான்.

அது கிடைக்குமா இல்லையா என்பது பற்றி மட்டும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களால் வேறு எதுவும் பெரிதாகச் செய்துவிட முடியாது. அதேபோல, இது பராசக்தியின் முடிவு. அதைப் பற்றி எதுவும் தெரியாது.

ஞானமடைந்த ஞானி தம்முடைய ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிட்டார். மறுபிறவி எடுப்பதற்குத் தேவையான காரணங்களான மனநிலையோ வாஸனாக்களோ அவரிடம் இல்லை.

மீண்டும் பிறப்பதென்பது அவருடைய விருப்பம் இல்லை.

இந்தப் பூமியில் கிரகத்தில் ஒரு வெற்றிடம் இருந்து, அது குருவின் சக்தி இருப்பை உறிஞ்சி, இந்தப் பூமிக்குப் பிடித்து இழுத்து வந்து, ஒரு கருவில் வைப்பது போன்றது.

நான் பிறந்தபொழுது, அருணாச்சலம் என்ற இடத்திலிருந்து வந்த ஒரு ஒளிதான் என்னுடைய சக்திக்கு வழிகாட்டியது. நான் பிறந்த ஊர் அருணாச்சலம்.

Hands playing flute