சுயநலமற்ற செயலைச் செய்யுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யார் ஒருவர் ஆசைகளிலிருந்து விடுபட்டவராகவும், தூய்மையடனும் திறமையடனும், கவலையில்லாமலும், எதனாலும் பாதிக்கப்படாமலும், எதைச் செய்தாலும் அதைத் 'தன்னலம்' கருதாமல் செய்பவராகவும், என்னிடம் பக்தியுடையவராகவும் இருக்கிறாரோ, அவர் எனக்குப் பிரியமானவர்.
கடவுளுக்கு அருகில் செல்வதற்கான யுக்தி
கிருஷ்ணர் இப்போது உயர்ந்த நிலைக்குச் செல்கிறார். நீங்கள் உங்களுடைய சந்தோஷம், கவலை, கோபம் முதலிய உணர்ச்சிகளை விட்டுவிடும்போது, இவற்றைக் கடந்துவிடும்போது, நீங்கள் அமைதியான நிலையை அடைகிறீர்கள். அது உங்களை அவருக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
அவர் இப்பொழுது நிஸ்ஸங்கத்வத்தில் இருந்து நிர்மோஹத்வத்திற்கு அதாவது உணர்ச்சிகளின் மீதான பற்றற்ற நிலையிலிருந்து ஆசைகளின் மீதான பற்றற்ற நிலைக்குச் செல்கிறார்.
ஆசை மற்றும் தேவை இந்த இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பூமியில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை அவசிய விஷயங்களான உணவு, உறைவிடம் போன்றவைதான் தேவைகள்.
ஜைன மதத்தின் மேலான குருவான மஹாவீரர் சொல்கிறார். "நீங்கள் இந்தப் பூமியில் பிறக்கும் போதே, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்தப் பிரபஞ்ச சக்தி உங்களோடு அனுப்பி வைத்து விடுகிறது. உங்களுடைய அடிப்படை தேவைகளுக்கானவற்றை எல்லாமே அது கொடுத்தனுப்பி விடுகிறது.''
நமக்குத் தேவை, இந்தப் பிரபஞ்ச சக்தியின் மீதான நம்பிக்கை மட்டுமே, அப்போது நாம் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெறுவோம். வேறு எதற்கும் ஆசைப்பட மாட்டோம்.
ஆனாலும் நாம் மேலும் மேலும் கேட்டுக்
கொண்டிருப்பதிலேயே நம் வாழ்நாளைக்
கழிக்கிறோம். அடிப்படை தேவைகள்
நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை.
நாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைப்
பார்ப்போம். பிறர் நம்மைவிட மகிழ்ச்சியாக
இருப்பதைப் பார்க்க நமக்குப்பொறுக்காது.
பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இது, நம்முடைய சொந்த துயர நிலையையே மேலும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பிறரும் நம்மைப் போன்றே வாழ்ந்தால் நமக்கு ஆறுதலாக இருக்கும்.
நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் புதிய குளிர்சாதனப் பெட்டி வாங்கி விட்டால்போதும், உடனே நம்முடைய வீட்டின் உஷ்ணநிலை அதிகரித்துவிடும். நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக ஒரு குளிர்பதனப் பெட்டி வாங்கிவிட்டால் போதும், உடனே நம் வீட்டின் உணவுப் பொருட்கள் கெடத் தொடங்கும்.
நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் புதிய கார் ஒன்று வாங்கினால், உடனே நம்முடைய கார் திடீரென்று மெதுவாகச் செல்லத் தொடங்கிவிடும். நாம் வைத்திருப்பது எல்லாமே பிறர் வைத்திருப்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒரு ஒப்பீடு பொருளாகத்தான் இருக்கிறது. இது, அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேட்கக்கூடிய தொடர்ச் சக்கரமாக இருக்கிறது. நாம் வாங்கியவற்றை அனுபவிக்கத் தொடங்கும் முன், நாம் மற்றொன்றை அடைவதற்காகத் திட்டமிடத் தொடங்கிவிடுகிறோம்.
வைத்திருப்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை. பின்தொடர்வதில்தான் நம்முடைய மகிழ்ச்சி இருக்கிறது. பின்தொடர்தலுக்கு ஒரு முடிவு என்பதே கிடையாது.
நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடையே பணக்காரராக ஆகிவிட்டால், பின்பு தெருவிலேயே பெரிய பணக்காரராகாகவும், பின்பு ஊரிலேயே பெரிய பணக்காரராகாகவும், பின்பு நாட்டிலேயே பணக்காரராக ஆகவும், அதற்குப் பின் உலகத்திலேயே பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். அதற்கு முடிவேயில்லை.

ரமண மஹரிஷி மிக அழகாகவும்
வருத்தத்துடனும் சொல்கிறார், "இந்தப்
பிரபஞ்சத்தால் எல்லா மக்களின்
தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியும்.
ஆனால் ஒரே ஒரு மனிதரின் ஆசைகளைக்கூட
அதனால் பூர்த்தி செய்ய முடியாது." ஆசைகள்
முடிவற்றவை. ஆசைகள் துக்கமயமானவை.
பிறருடன் ஒப்பிடுவதனால் ஆசைகள்
பிறக்கின்றன. நம்முடைய அடிப்படை
தேவைகள், அவை பூர்த்தியடைவதற்கான
சக்தியையும் அவற்றுள்ளேயே
சுமந்து கொண்டிருக்கின்றன; ஆனால்
ஆசைகள் நம்முடைய துக்கங்களுக்கான
விதைகளைத்தான் சுமந்து
கொண்டிருக்கின்றன.
சொந்த ஆசைகள், சக்திக் களஞ்சியங்கள்!
நம்முடைய நித்யானந்த ஸ்புரண த்யான வகுப்பில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அன்பர்களை நாம் நம்முடைய உடலை விடும் பொழுது, நம்முடைய ஆத்மா பயணிக்கக்கூடிய ஏழு தளங்களாலான சக்தி உடல்களுக்குள் அழைத்துச் செல்வோம்.
இந்த முறையில் உடலைப் பிரிகிற ஆத்மா அந்தக் கணம் வரை அதனுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நினைக்கும். நினைவுப் பதிவுகளாக பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேகமாக மறு ஓட்டமாக (Replay) ஓடும். வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்ச்சி களின் ஒரு வேகமான மறு ஓட்டமாக இது இருக்கும்.
நான் அந்த த்யான வகுப்பில் மக்களை அவர்களுடைய ஆசைகள் தேவைகள், விருப்பங்களைப் பட்டியலிடுமாறு சொல்வேன். அவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள். நான் அவர்களுடைய பட்டியலைப் பலமுறை பரிசோதித்துப் பார்க்கும்படி சொல்வேன். பிறகு அவர்களை ஒரு குறிப்பிட்ட த்யானத்தைச் செய்யும்படி சொல்வேன்.
த்யானத்தின் முடிவில் அவர்களுடைய ஆசைகளின் பட்டியலை நினைவுப் படுத்திப் பார்க்கும்படி சொல்வேன். பொதுவாக அவர்களுடைய பட்டியலின் ஏதோ ஒரு பகுதியைத்தான் அவர்களால் நினைவுப்படுத்திப் பார்க்க முடியும்.
அவர்கள் த்யானத்தை ஆரம்பிக்கும்போது, அவர்களுடைய எல்லா ஆசைகளையே இலைகளாகக் கொண்ட, இலைகள் நிறைந்த ஒரு பெரிய மரத்தைப் போன்று இருப்பார்கள். த்யானத்தின்போது அந்த மரம் அதனுடைய பெரும்பாலான இலைகளை உதிர்த்துவிடும். காய்ந்த, மக்கிப் போன இலைகள் உதிர்ந்து போவதுபோல் அவர்களுடைய பெரும்பாலான ஆசைகள் உதிர்ந்துவிடும். மீதியுள்ள இலைகள் தங்கத்தினாலான இலைகள்

போன்று மின்னும்.
அவர்களுடைய நினைவில் இருக்கும் மீதமுள்ள ஆசைகள் தங்கத்தைப்போல் ஜொலிக்கும். அந்த ஆசைகள், அவை பூர்த்தியடைவதற்குத் தேவையான சக்தியைக் கொண்டிருக்கும். இந்த ஆசைகள்தான் அவர்கள் கொண்டுவந்த உண்மையான ஆசைகள்.
அந்த ஆசைகள், அந்தத் தனிப்பட்ட மனிதருக்கு நன்மை செய்யக்கூடும், ஆனால் அவை மனித சமுதாயத்திற்கு நிச்சயம் நன்மை செய்யும். இப்படிப்பட்ட சுயநலமில்லாத ஆசைகள் மட்டுமே அவை பூர்த்தியடைவதற்குத் தேவையான பிரபஞ்ச சக்தியை அவற்றுடன் எடுத்து வருகின்றன.
நம்முடைய ஆசைகள் நம்முடைய உண்மையான சொந்த ஆசைகளாக இருக்கும்போது, அவை நம்முடைய உண்மையான தேவைகளைப் பிரதிபலிக்கும்போது, நமக்குள் இருக்கும் சக்தியிலிருந்து வெளிப்படும்போது, அவற்றை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு எந்தவிதமான அவநம்பிக்கையையோ, தயக்கத்தையோ உணா மாட்டோம். இயற்கையான நிகழ்வுகளைப் போன்று உரிய காலத்தில் அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்ற தெளிவு நமக்குள் வரும்.
நாம் ஆசைகளால் விரட்டப்படவோ அல்லது தொந்தரவுபடுத்தப்படவோ மாட்டோம். இவையெல்லாம் நடக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்வோம். அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆலோசனை சொல்கிறார்: “ஆசைகளிலிருந்து விடுபட்டு, சுயநலமில்லாமல் இருந்தால் நீ தொந்தரவு இல்லாமல் விடுதலை பெற்று என்னை அடைவாய்.”
கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, நான் ஒவ்வொரு நாளும் அற்புதமான அறிவைப் பெற்று மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பிறகு வீட்டுக்குப் போனவுடன் சிறிது குழப்படைவதுடன், மனச் சோர்விற்கும் ஆளாகிறேன். என்ன நடக்கிறது?

> நீங்கள்
> மனச்சோர்விற்கும்
> குழப்பத்திற்கும்
> ஆளாகி இருக்கிறீர்கள்
> என்பதை நீங்கள்
> உணர்ந்தீர்களானாலே
> போதும், அதுவே நீங்கள்
> புத்திசாலிதான்
> என்பதைத்தான்
> காட்டுகிறது.
மனமற்ற நிலை என்பது வேறு ; மனம் - இல்லா நிலை என்பது வேறு
நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. கவலைப்பட வேண்டாம். எதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதோ அது எல்லாமே நல்ல விஷயங்கள்தான். ஆரம்ப நிலையில் அது அப்படித்தான் நடக்கும். நீங்கள் மனச்சோர்வு அடையும் கணங்களை நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்.
thன்னுடைய சொந்தவெளிச்சத்தினாலேயே நிலா தன்னுடைய களங்கத்தைக் காண்பிக்கிறது. தன்னுடைய வெளிச்சத்தைக்கொண்டே அதனுடைய கருப்புத் திட்டுக்களை அது காண்பிக்கிறது.
அதுபோல உங்களுடைய சொந்த புத்திசாலித்தனத்தைக்கொண்டே நீங்கள் எப்படி மனச் சோர்விற்கும் குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.
நீங்கள் மனச்சோர்விற்கும் குழப்பத்திற்கும் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களானாலே போதும், அதுவே நீங்கள் புத்திசாலிதான் என்பதைத்தான் காட்டுகிறது. நீங்கள் புத்திசாலித்தனமாக வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதையும், அறிவு ஒளி வெளிப்படத் தொடங்கி விட்டது என்பதையுமே இது காட்டுகிறது.
நீங்கள் எண்ணங்களற்ற நிலையில் இருக்கும்போது உங்களிடம் குழப்பம் இல்லை.
> நீங்கள் சிந்திக்கம்பொழுதுதான், பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறீர்கள்.
வாழ்க்கைகென்று ஒரு உயர்ந்த இலட்சியம் இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு செய்தியைக்கூட நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கும்போது, சாப்பிடுவது, குடிப்பது, விளையாடுவது, வேலை செய்வது போன்ற நீங்கள் எப்போதும் செய்து கொண்டிருக்கும் விஷயங்களைச் செய்வதிலேயே மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
எந்த எண்ணங்களும் அற்ற இல்லாத மக்கள் தங்கள் வழியில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் சிந்திப்பதே இல்லை.
அவர்கள் மிருகங்களைப்போல்
செயல்படுகிறார்கள். ஒரு விலங்கு
சுகத்தைத் தேடுவதைப்போல அவர்கள்
தேடுவதெல்லாம் சுகத்தைத்தான்.
அந்த நிலையிலேயே அவர்கள் திருப்தியாக
இருந்து விடுகின்றனர். அவர்கள் அப்படியே
வாழ்ந்து அப்படியே இறந்து விடுகிறார்கள்.
நீங்கள் சிந்திக்கும்பொழுதுதான், பிரச்சி னைகளில் சிக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை என்பதை உணர்கிறீர்கள். நீங்கள் லட்சியத்தைத் தேடத் தொடங்குகிறீர்கள். நீங்கள் குழப்பமடைகிறீர்கள். நீங்கள் நிலையில்லாமல் இருக்கிறீர்கள்.
உங்களை இதுவரையிலும் ஆட்கொண்டிருந்த சுகங்களினால் ஒரு கணம் ஈர்க்கப்படுகிறீர்கள். பிறகு அவை உங்களுடைய மகிழ்ச்சியை நீடிக்கச் செய்யாது என்று நினைப்பதால், அவற்றை ஒதுக்கி விடுகிறீர்கள்.
நீங்கள் வெளிச்சத்தைக் காணத் தொடங்குகிறீர்கள். படிப்படியாக, மெதுவாக, மிக மெதுவாக நீங்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குச் செல்கிறீர்கள்.
அங்குதான் குரு வருகிறார். அவர், உங்களை அறியாமை என்ற இருட்டிலிருந்து உண்மை நிலை, ஸத்யம் என்ற வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு நீங்கள் மனம்-இல்லா, எண்ணம்-இல்லா நிலையை அடைகிறீர்கள்.

இது அந்த எண்ணங்களற்ற நிலையைப்
போன்றதல்ல. எண்ணங்களற்ற நிலை என்பது
மிருகங்களின் நிலை, முயற்சி இல்லாது
தானே இயங்குகின்ற ஒரு இயல்பூக்க நிலை
மனம் இல்லா, எண்ணம் இல்லா நிலை
என்பதுதான் கடவுளுடைய நிலை,
உள்ளுணர்வு நிலை. எண்ணமுள்ள நிலை
என்பது மனிதர்களுடைய நிலை, தர்க்க
ரீதியான மனத்தின் நிலை.
கீதையில் இருக்கும் எல்லா உரையாடல்களும், எண்ணமுள்ள மனிதனாக இருக்கும் அர்ஜுனனுடைய குழப்பத்திலிருந்து தோன்றியவைதான். அவை மிக உயர்ந்த விழிப்புணர்வாகிய கிருஷ்ணனின் எண்ணம்-இல்லா நிலையில் இருந்து தீர்க்கப்படுகிறது. சந்தேகங்களும் குழப்பங்களும் மனிதனுக்குரியவையாக இருக்கின்றன. அவை எண்ணமுள்ள நிலையிலிருந்து எண்ணம் - இல்லா நிலைக்குச் செல்லும் மாற்றத்தின் விளைவுகள்.
மனிதர்கள் சுபாவத்தாலேயே விசித்திரமான போக்குடையவர்களாகவும் இயல்பான தன்மையிலிருந்து மாறுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள். நம்முடைய புலன்கள் எப்போதும் புலன்களால் அறியக்கூடிய, முக்கியத்துவம் பெறாத புற எல்லையை நோக்கியே நம்மை இழுத்து, நம்மை வெளி உலகை நோக்கியே வெளிப்படுத்துகிறது.
நாம் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து இரண்டிற்கும் அடிமையாகிறோம். திடீரென்று நம்மில் சிலர், உள்ளிருந்து ஒரு வலிமையான இழுப்பை உணர்கிறோம். அது நம்மை உள்நோக்கி இழுக்கிறது. அது ஏன், எப்படி என்று தெரியாமலேயே நம்மில் சிலர், நம்முடைய புலன்களின் வசீகரத்தை விட்டு விட்டு, தற்காலிகமாக உள்ளே செல்கிறோம். ஆனால் இது நீண்ட நேரம் நிலைப்பதில்லை. நாம் மீண்டும் விளிம்பிற்கு இழுக்கப்படுகிறோம்.
அதனால் நாம் உள்ளேயும் வெளியேயும் ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கி றோம். நம்மில் பலர், நிச்சயமாக எல்லோரும் இல்லை, ஆனால் பலர் நீண்ட காலத்திற்கு முன்பே நம்முடைய இயற்கையான சுபாவத்தின் ஒரு துளியை அதன் ருசியை அனுபவித்திருக்கிறோம்.
உள்ளேயும் வெளியேயும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்பொழுது, மையத்திலுமல்லாமல், விளிம்பிலுமல்லாமல் நடுவில் ஏதோ ஓர் இடத்தில் தங்கி விடுகிறோம். அதனால்தான், இயற்கையான தன்மையிலிருந்து மாறுபட்டவர்களாக, விசித்திரமானவர்களாக ஆகிவிடுகிறோம்!
இதுதான் இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஞான சத்குருவான கிருஷ்ணரின் வார்த்தைகளிலும் ஸத்யங்களிலும் மூழ்க மூழ்க, உள்ளே போவது எளிதானது என்பது மட்டுமல்ல, ஆனந்தமானது என்பதையும் கண்டுகொள்வீர்கள். முடிவில் உங்களுடைய மையமான, அழிவில்லாத ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைத்து விடுவீர்கள்.