KAILASA Library/பகவத்கீதை/சமநிலையான மனம்Sign in
பகவத்கீதை

சமநிலையான மனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

12.17 யார் ஒருவர் எதனாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ, துயரமோ,
ஆசைவயப்படுதலோ அடைவதில்லையோ, நல்லதும் தீயதுமான
செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, யார் ஒருவர் பக்தியால்
நிரம்பியவரோ, அந்த பக்தர் எனக்குப் பிரியமானவர்.

பழகப் பழக பாலும் புளிக்கும்

நிபந்தனைகளுக்குட்பட்டு அன்பு இருக்கும் வரை, அன்பும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஒட்டியே இருக்கும்.

கிருஷ்ணர் இப்போது மனத்தைக் கட்டுப்படுத்தும் அடுத்த நிலைக்குச் செல்கிறார். அவர் விருப்பு, வெறுப்பு இல்லாத ஒருவரின் நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் யாரையும் நேசிக்காததைப் பற்றிப் பேசவில்லை.

இப்போது நாம் நேசிக்கிற இந்த வழியில், அதாவது நிபந்தனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் நாம் நேசிக்கும்போது, அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும்வரை அது சுமுகமாகச் செல்லும்.

நாம் விரும்புகிற விதத்தில் ஒரு காரியம் நிகழவில்லையென்றால், சூரியனைக் கண்ட பனித்துளிபோல் அன்பு மறைந்துவிடும். அந்த இடத்தில் வெறுப்பு குடிகொள்ளும்.

நிபந்தனைகளுக்குட்பட்டு அன்பு இருக்கும் வரை, அன்பும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஒட்டியே இருக்கும். நம்முடைய எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படுகின்றன என்பதை உணர்ந்த கணமே, அன்பு வெறுப்பாக நொடிப்பொழுதில் மாறிவிடும்.

இந்த வகையான அன்பில் உணர்ச்சி இருக்கும் வரைதான், வெளிப்படையான கொண்டாட்டம், இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் പങ്കுகொள்ளுதல், பகிரங்கமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் ஆகியவை இருக்கும்.

பொதுவாக, நமது அன்பானது அல்லது அன்பு என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் அன்பானது காலம் மற்றும் இடத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். நாம் நேசிப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் சேர்ந்து இருக்கும் காலம் குறைவாகவும், இடைவெளி அதிகமாகவும் இருக்கும்வரையில், அந்த நபரிடம் நாம் சிறு சிறு குறைகளையே காண்போம்.

நம்முடைய எதிர்பார்ப்புகளை அவர் மீது திணிக்கும் வகையில் அவருடன் நாம் அதிக நேரம் சேர்ந்திருப்பதில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் நாம் நெருக்கம் அடைந்து அதிகமான நேரத்தை ஒன்றாகச் செலவழிக்கத் தொடங்கியவுடன், உண்மையான ரூபத்தைக் காண்போம்.

‘பழகப் பழக பாலும் புளிக்கும்’ என்று சொல்வதில் வியப்பேதுமில்லை. அது அன்பையும் வெறுப்பாக மாற்றிவிடும். நாம் புரிந்து கொண்டிருக்கும் ஒரே உண்மை நிலையின் இரு வேறு வெளிப்படுதல்களான அன்பு மற்றும் வெறுப்பைக் கடக்க, நாம் எதிர்பார்ப்புகளைக் கைவிட வேண்டும்.

நாம் ஒருவித பற்றற்ற தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய அன்பில் நிபந்தனைகள் விதிக்காதவராக நாம் இருக்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு உறவு நிலைகளைக் கடக்கிறோம். குழந்தைகளாக இருக்கும்போது பெற்றோர்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறோம். பெற்றோர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நம்முடைய பெற்றோர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கிறது. வேறு வழியில்லாததால் மட்டுமே நாம் அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

ஒரு குழந்தை வாழ்வதற்கு, தன்னுடைய பெற்றோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தையின் இயற்கையான சுபாவம் சுயநலத்தை ஆதாரமாகக்கொண்டே இருக்கும். மேலும் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் மீது கொண்டுள்ள அதனுடைய எல்லாவித இயற்கையான உணர்ச்சிகளும் சொந்த வாழ்வைக் காத்துக் கொள்வதற்காகவே இருக்கின்றன. அது முற்றிலும் சார்ந்திருக்கும் தன்மையில்தான் இருக்கிறது.

நாம் வளர்ந்து, வாலிப வயதை
அடையும்பொழுது, நாம் வெளிப்படையாக
உலகத்தைப் பார்த்து பேச ஆரம்பிப்போம்.
குழந்தைகளாக இருக்கும்போது எளிதாக
எடுத்துக் கொண்ட விஷயங்களை எல்லாம்
எதிர்த்துக் கேள்வி கேட்க ஆரம்பிப்போம்.
அதனால்தான், வாலிப வயதினர்
எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர்.

பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் மீதும்
தாங்கள் கொண்டிருந்த சார்ந்திருத்தலை,
வாலிபர்கள் தூக்கியெறிகின்றனர். அவர்கள்
சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர்.
அவர்கள் விதிகளை மீறுகிறார்கள்.

> குருவுடன் இணைந்து
> செயலாற்றுவதற்குரிய
> ஒரே ஒரு உறவுமுறை,
> முழுமையான மற்றும்
> எந்தவித நிபந்தனைகளும்
> இல்லாத அன்பே.
> அது ஒரு முழுமையான
> சரணாகதி நிலை.

வாலிப வயதைத் தாண்டி, ஒரு முப்பத்தைந்து வயதை அடையும்போது, இந்தச் சமுதாயத்தில் தொடர்ந்து வாழ்வதற்கும், பிறருடன் ஒருங்கிணைந்து செல்வதற்கும் கண்டிப்பாக நாம் சமுதாய விதிகளையும் மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.

கிருஷ்ணர் அளிக்கும் உறுதிமொழி

பிறரை அனுசரித்துச் செல்வதற்குத் தேவையான பண்புகளை வளர்த்துக்கொள்கிறோம். நாம் பிறருடன் சேர்ந்து வேலை செய்வதற்கும், இசைவான வழியில் தொடர்புகொள்வதற்கும் கற்றுக்கொள்கிறோம்.

இல்லையென்றால் நாம் இந்தச் சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்களாக மாறி விடுகிறோம். வாலிப வயதில் மக்கள் கற்றுக் கொள்ளும் முக்கியமான பாடம் மட்டுமல்ல, ஒரே பாடம் என்னவென்றால், பிற மக்களுடன் அர்த்தமுள்ள வகையில் தொடர்புகொள்வதுதான் மிக மிக முக்கியமானது என்பதுதான்.

நாம் வளர்ந்து மனமுதிர்ச்சி அடையும்பொழுது, இயல்பாகவே நமக்கு, நம்முடைய ஆத்மா மற்றும் அதன் வளர்ச்சி இவை முக்கியமானவையாக ஆகிவிடுகிறபொழுது, வழிகாட்டுதலைத் தேடுகிறோம். நாம் ஒரு குருவைத் தேடுகிறோம். குருவிடம் நமக்குள்ள உள்ள உறவு என்பது நம்முடைய குழந்தைப் பருவத்தை எப்படி ஆரம்பித்தோமோ, அதற்கு அப்படியே எதிரிடையான முறையில் இருக்கிறது.

நாம் மீண்டும் வாழ்தலைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ஆனால் அது உடல் மனத்தைப் பற்றியதாக இல்லாமல், ஆத்மாவினுடைய வாழ்தலைப் பற்றியதாக இருக்கிறது. ஆத்மா தொடர்ந்து வாழ்வதற்கு உதவ, குருவிடம் நாம் வைக்கவேண்டிய உறவானது, மீண்டும் முழுமையான சார்ந்திருத்தலையே அடிப்படையாகக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு வித்தியாசத்துடன்!

அந்த உறவு வெற்றியடைய வேண்டுமானால்,
அது முற்றிலும் நிபந்தனையற்றதாகவும்,
ஆழ்ந்த ச்ரத்தையின், நம்பிக்கையின்
அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க
வேண்டும்.

சரணாகதி,
அன்பையும் வெறுப்பையும்
கடந்த ஒரு நிலையாக
இருக்கிறது.

குருவுடன் இணைந்து செயலாற்றுவதற்குரிய
ஒரே ஒரு உறவுமுறை, முழுமையான மற்றும்
எந்தவித நிபந்தனைகளும் இல்லாத அன்பு
உறவுமுறையே. அது ஒரு முழுமையான
சரண்ாகதி நிலை.

சரண்ாகதி, அன்பையும் வெறுப்பையும் கடந்த ஒரு நிலையாக இருக்கிறது. ஒருவர் குருவிடமோ அல்லது கடவுளிடமோ முழுமையாக சரண்ாகதி அடையும்போது, நல்லது கெட்டது, பாவம் புண்ணியம் போன்ற கருத்துகள் மறைந்துவிடும்.

> பாவம், புண்ணியம் போன்ற
> கருத்துக்களைக்கொண்டு
> மதங்கள் நம்மைக்
> கட்டுப்படுத்த முயற்சி
> செய்கின்றன.
> கிருஷ்ணர் அந்த அச்சை
> உடைக்கிறார்.

ஆன்மீக ரீதியாகப் பார்க்கும்போது, பாவம் என்று சொல்லக்கூடியது எதுவும் இல்லை. யாரும் நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் வைத்துக்கொண்டு நாம் செய்த பாவங்களைக் கணக்கிட்டு நாம் சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா இல்லை நரகத்திற்கு போக வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு அங்கு உட்கார்ந்திருக்கவில்லை.

சொர்க்கமோ நரகமோ கிடையாது. சொர்க்கம் அல்லது நரகம் புவியியல் ரீதியானது இல்லை. அவை மன ரீதியானவை. நம்முடைய மனம் மற்றும் மனப்பாங்கு சம்பந்தப்பட்டது. நாம் நம்முடைய நரகத்தில் இருப்பதால்தான் பாவங்களைச் செய்கிறோம். நாம் நம்முடைய சொர்க்கத்தில், ஆனந்தத்தில் இருக்கும்பொழுது பிறருக்கு நன்மை செய்கிறோம்.

பாவம், புண்ணியம் போன்ற கருத்துக்களைக்கொண்டு மதங்கள் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்கின்றன. பாவம், நரகம் அல்லது புண்ணியம், சொர்க்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை என்பதைத் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களைப் பாவிகள் என்று யார் அழைக்கிறார்களோ அவர்கள்தான் பாவிகள். அவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த விரும்புவதால்தான் அப்படிச் சொல்கிறார்கள். எல்லா மதங்களும் உங்களை ஆசை மற்றும் அச்சத்தின் மூலமாகவோ, கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு மிரட்டியோ அல்லது இனிப்பைக் காட்டி வசீகரித்தோ உங்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்கின்றன.

கிருஷ்ணர் அந்த அச்சை உடைக்கிறார். அவர் "பாவ, புண்ணியத்தைக் கடந்து செல்லுங்கள்," என்று நம்மிடம் சொல்கிறார். நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லாததால் அவர் அப்படிச் சொல்கிறார். எல்லாம் நம்முடைய மனத்தில்தான் இருக்கிறது. நாம் இந்த ஸத்யத்தை உணரும்பொழுது நாம் அவருடைய இராஜ்ஜியத்தில் இருப்போம். இது அவர் அளிக்கும் உறுதிமொழி.

மஹாபாரதப் போர் - அன்றைய மக்களின் வாழ்க்கை முறை

கேள்வி: அன்புள்ள ஸ்வாமிஜி, மஹாபாரதப் போர் நடக்கும்பொழுது எல்லோருமே சட்டத்திற்குப் புறம்பான முறைகளைத்தான் பின்பற்றினார்கள். ஏன்?

மஹாபாரதப் போரின் தொடக்கத்தில் எல்லோரும் தர்மத்தையே கடைப்பிடித்தார்கள். ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு, இரவு நேரத்தில் கொல்லுதல் போன்ற அதர்ம நிகழ்ச்சிகள் நடந்ததைப் பார்க்கிறோம். பாண்டவர்களுடைய ஐந்து புத்திரர்களும் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கர்ணன் நிராயுதபாணியாக நின்றிருக்கும்பொழுது அர்ஜுனன் அவரைக் கொல்கிறார். அபிமன்யு, ஒரு பெரிய வீரர்களின் கூட்டத்தால் கொல்லப்படுகிறார். அவர் தேர் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்தபோது, அவருடைய சொந்த உறவினர்களே அவரைக் கொன்றனர். அவருக்கு அப்போது வயது பதினெட்டு மட்டுமே.

நீங்கள் கேட்கும் கேள்வி சரியானது. சரியாக என்ன நடந்தது என்றால் போரின் தொடக்கத்தில் அது தர்மம் சார்ந்த போராகவே இருந்தது. ஆனால் மெதுவாக கௌரவர்கள் அதை உடைத்து ஓர் அடி முன் வைத்தவுடன் பாண்டவர்களும் தர்மத்தைத் தாண்டி ஓர் அடி முன் வைத்தார்கள்.

கௌரவர்கள் தார்மீக விதிகளை அதிகமாக
மீறினார்கள். அவர்களுக்கு இணையாக
பாண்டவர்களும் நடந்தார்கள்.

பதினெட்டாவது நாள் நெருங்குவதற்குள்
எல்லா தர்மங்களும் மீறப்பட்டு, அந்தப்
போர் கொலைக்களமாக மாறியது. பத்து

நாட்களுக்குப் பிறகு அது தர்ம க்ஷேத்ரமாகத் திகழவில்லை. பீஷ்மர் படைத்தலைவராக இருந்தவரையில் அது தர்ம க்ஷேத்ரமாக இருந்தது. பீஷ்மர் போர்க்களத்தை விட்டு விலகிய நாளிலிருந்து அது தர்ம க்ஷேத்ரமாகத் திகழவில்லை. அது போர்க்களமாக இல்லாமல் வெறும் கொலைக்களமாக மாறியது.

மகாபாரதப் போர் அப்போதைய
மக்களுடைய வாழ்க்கை முறை எப்படி
இருந்ததோ அதை அப்படியே சுட்டிக்
காட்டுவதாக இருக்கிறது.

உலகத்தின்
மிகப்பெரிய காவியம்
மஹாபாரதம்.
கிரேக்க காப்பியங்களைவிட
பெரியது.

அன்றைய வாழ்க்கை முறையின் ஒரு எடுத்துக்காட்டுதான் மஹா பாரதப்போர். மஹாபாரதத்தை இயற்றிய வியாஸர் எந்தவிதத்திலும் அதைப் பூசி மறைக்கப் பார்க்கவில்லை. அதை உள்ளது உள்ளபடியே எழுதி வைத்தார்.

மக்கள் மஹாபாரதப் போர் என்ற ஒன்று நிகழ்ந்ததா என்று கேட்பார்கள்.

உங்களுக்கு இதைச் சொல்கிறேன், "மஹாபாரதப் போர் உண்மைக் கதையாக இல்லாமல் கற்பனைக் கதையாக இருந்தால், வியாஸரின் படைப்புத் திறனுக்காக அவருக்கு இலக்கிய உலகின் மிகப்பெரிய விருதான புலிட்சர் (Pulitzer prize) விருதுகள் பல அளிக்கப்பட வேண்டும்!"

உலகத்தின் மிகப்பெரிய காவியம் மஹாபாரதம். கிரேக்க காப்பியங்களைவிட பெரியது. வியாஸரிடம் கணினியோ அல்லது பேச்சைப் பதிவு செய்து, பின்பு எழுத்து வடிவத்தில் எடுத்து வருவதற்கு ஏதுவான டேப் ரிக்கார்டரும் இல்லை. அவர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் எழுதினார்.

Figure

மஹாபாரதத்தில் நடுநடுவே
குறைந்தது பத்தாயிரம் கிளைக்
கதைகளாவது பின்னப்பட்டு
இருக்கிறது.

இந்த எல்லாக் கிளைக் கதைகளும் தனித்தனி நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட, அவை இலகுவாக பிரதானக் கதையுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கான கதாபாத்திரங்களை உருவாக்கி, காவியம் முழுவதிலும் அவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்பு குறையாமல், ஒன்றோடு ஒன்றை இணைத்து, அதனதன் முழுமை குறையாமல் கொடுப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! அதிலும் ஒரு தொகுப்பாளரின் (Editor) உதவிகூட இன்றி இதைப் படைத்திருக்கிறார்! இன்று யாராவது இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?

இப்படிப்பட்ட கற்பனைக் காவியத்தை உருவாக்க முடியாது என்ற காரணத்தினால், நம்முடைய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது யுகமான த்வாபர யுகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்குற உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் மஹாபாரதம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் இப்படித்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள். இந்தக் காலத்திலும் இப்படித்தான் வாழ்கிறார்கள்.

Illustration of hands playing a flute