நீங்கள் மீண்டும் பிறக்கத் தேவையில்லை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

12.6,7 ஆனால் யாரெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன் என்னையே பக்தியுடன் வழிபாடு செய்துகொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்ப்பணித்துவிட்டு, என்னையே அவர்களின் உயர்ந்த லட்சியமாகக்கொண்டு, என் மீதே மனத்தை நிலைநிறுத்துகிறார்களோ, அவர்களை நான் பிறப்பு இறப்பு சக்கரமான கடலிலிருந்து விரைவில் கரையேற்றுவேன்.

பிரார்த்தனைகள் நிறைவேறாததும் கூட, கடவுளின் கருணையினால்தான்!
கிருஷ்ணர் இங்கு ஒரு உறுதி மொழியைக் கொடுக்கிறார். "நான் அவர்களை, அவர்களுடைய உடல் வடிவத்திலிருந்து, ஸம்ஸார கடலிலிருந்து, பிறப்பு இறப்புச் சக்கரத்திலிருந்து விரைவில் கரையேற்றுவேன்," என்று கிருஷ்ணர் சிறிதும் சந்தேகத்திற்கிடமின்றி, உறுதியாகச் சொல்கிறார். இறைவன் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, பக்தர்கள் தம் மீது பூரண பக்தி கொண்டிருக்க வேண்டும், அவ்வளவுதான்.
"உங்கள் எல்லாச் செயல்களையும் அதனுடைய பலன்களையும் என்னிடமே சரணடைய செய்து, என்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு, என்னைத் தியானித்து, என்னுடைய விழிப்புணர்வின் மேல் மனத்தை ஒருமுகப்படுத்தி நீங்கள் என்னிடம் சரணடைந்தால், உங்களைக் கடைத்தேற்றி உங்களுக்கு முக்தி கொடுத்து, உங்களை விடுவிப்பேன். நீங்கள் மீண்டும் இங்குப் பிறக்கத் தேவையில்லை என்பதை உறுதிசெய்வேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது சிங்கத்தின் கர்ஜனை!
இது, இந்தப் பிரபஞ்சத்தின் அரசரான ஒருவருடைய கர்ஜனை: "என்னிடம் சரணடையுங்கள். நான் உங்களை மீட்பேன். என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை விடுவிப்பேன்," என்று கிருஷ்ணர் சொல்லுகிறார்.
ஒரு சின்ன கதை: ஒரு சமயம் ஒரு மனிதர் விமானத்தில் வெளிநாட்டிற்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். நடுவானில் விமான ஓட்டி, "நாம் பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இப்போது கடவுள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும். எல்லோரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கலாம்," என்று அறிவித்தார்.
> இந்தப் பிரபஞ்சத்தின் அரசரான ஒருவருடைய கர்ஜனை: > "என்னிடம் சரணடையுங்கள். என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை விடுவிப்பேன்."
ஒரு பயணிக்கு விமான ஓட்டி என்ன சொன்னார் என்பது புரியாததால் சக பயணியான இவரிடம் அதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இந்த மனிதர், "தப்பிப்பதற்கான வழியே இல்லை. இங்கு நம்பிக்கைக்கு இடமே இல்லை என்று விமான ஓட்டி சொல்கிறார்," என்று சொன்னார்.
நம்முடைய கடவுள் நம்பிக்கை என்பது மேலோட்டமானது. முதலில் நம்மில் பலருக்குக் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. நாம் அந்தக் கருத்தை வணங்குகிறோம்.
பல நேரங்களில் நாம் அந்தக் கருத்திடம் இறைஞ்சுகிறோம். "கடவுளே, எனக்கு இதைக் கொடு, கடவுளே, எனக்கு அதைக் கொடு," என்று வேண்டுகிறோம்.
நம்முடைய ஒரு பிரார்த்தனை நிறைவேற்றப்பட்ட உடனே நாம் மற்றொரு பிரார்த்தனையைச் செய்யத் தொடங்கிவிடுவோம்.
கடவுள் நம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றும்வரை, நாம் கேட்பதையெல்லாம் குருநாதர் கொடுக்கும்வரை, அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தொடரும்.

நம்முடைய பிரார்த்தனை நிறைவேறாத அந்தக் கணமே, நம்முடைய நம்பிக்கை கலைந்துவிடும். நாம் மற்றொரு கடவுளிடம் அல்லது குருவிடம் சென்று விடுவோம். 'நான் விரும்பும் பதிலைக் சொல்ல முடிந்த வேறு யாராவது வெளியில் இருக்கிறார்களா?' என்று தேடுவோம்.
நம் மீது வைத்திருக்கும் அளவு கடந்த கருணையினாலும் அன்பினாலும்தான், கடவுள் அவ்வப்போது நம்முடைய பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்ப்பதில்லை என்பதை நாம் உணருவதில்லை.
நம்முடைய அறியாமையினால் இடைவிடாது அவரைக் கேட்டுக்கொண்டும், அவரிடம் மன்றாடிக்கொண்டும் இருக்கிறோம். நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறினால், நம்முடைய நிலைமை சீராகுமா அல்லது இதைவிடமோசமாகி விடுமா என்பன போன்ற விளைவுகளைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. அதனால்தான், "நீ என்ன கேட்கிறாய் என்பதைப் பற்றிக் கவனமாக இரு. ஏனென்றால் அது ஒருவேளை கிடைத்து விடலாம்," என்று சொல்வார்கள்.
நாம் பணக்காரராக வேண்டும், நாம் நன்றாக நலத்துடன் இருக்க வேண்டும், எனக்குக் குழந்தைகள் வேண்டும் மற்றும் இது போன்ற நமது பிரார்த்தனைகளை அவ்வப்போது கடவுள் தம்முடைய அளவில்லாத ஞானத்தினால் நிராகரித்து விடுகிறார். உடனே நாம் அவரை விட்டுவிலகி விடுகிறோம். கடவுளிடம் சரணடைவது என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல. அது முழுமையானதாக இருக்க வேண்டும்.
'அப்படியென்றால்', 'ஆனால்', 'மற்றும்' என்பது போன்ற அந்த வார்த்தைகளுக்கே அங்கு இடமில்லை.
"நீ என்னுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றினால், நான் உன்னிடம் பக்தியுடன் இருப்பேன்," என்று சொல்வதாக இருக்கக்கூடாது. அது வெறும் வியாபாரமாகிவிடும். பெரும்பாலும் கடவுளிடம் நமக்கிருக்கும் உறவு ஒரு வியாபாரமாகத்தான் இருக்கிறது.
மூன்று விதமான சரணாகதி உள்ளது. முதலில் தங்களது பட்டறிவைச் சரணாகதி செய்வது. பல பேருக்கு இது சாத்தியம். நம்மைவிட மிகப்பெரிய ஒரு பிரபஞ்ச சக்தி உண்டு என்பதை நாம் புரிந்து கொண்டவுடன், நம்மில் பலர் அதை ஏற்றுக்கொண்டு, அறிவுப்பூர்வமாக அந்த மேலான சக்தியிடம் சரணடைந்து விடுவோம்.
குறைந்த பட்சம், "நான் சரணடைகிறேன்," என்று நாம் சொல்லிக்கொள்ளலாம். அப்படித்தான் நம்மில் பலரும் கோவிலில் அல்லது குருவின் முன்னால் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்வோம். நம்முடைய முழு உடலும் தரையில் வீழ்ந்து நம்முடைய சரணாகதியை விசேஷமாக்குகிறது. அந்தத் தருணத்தில், நம்முடைய அஹங்காரம் கொஞ்ச நேரம் நம்மை விட்டு விலகுகிறது.
அடுத்த நிலை சரணாகதி உணர்வுப்பூர்வமானது. இந்த உணர்வுப்பூர்வமான சரணாகதியில் கடவுள் அல்லது குருவின் நினைவே ஒருவரை உருகச் செய்துவிடும். நம்முடைய இதயத்திலிருந்து அன்பும், நன்றி பெருக்கும் பொங்கிக்கொண்டே இருக்கும்;

கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிகிறது. நாம் பக்தர்கள் ஆகிறோம்.
ராமகிருஷ்ணர் சொல்கிறார். "கடவுள் அல்லது உங்கள் குருவை நினைத்த மாத்திரம் உங்கள் கண்ணில் நீர் வழிந்தால், உங்களுக்கு இதுதான் கடைசி பிறவி என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விடுதலையடைய தயாராகி விட்டீர்கள்."
நாம் தயாராகி விடுகிறோம், ஆனால் மூன்றாவது மற்றும் இறுதி நிலையை அடையும்வரை, நாம் விடுதலை அடைவதில்லை. இந்த மூன்றாவது நிலை சரணாகதி என்பது புலன்களைச் சரணடையச் செய்வது. இந்நிலையில் நம்முடைய சரணாகதி முழுமையானதாக இருக்கும். அது நிபந்தனைக்குட்படாதது, தன்னிச்சையானது, உடனடியானது, இயற்கையானது.
"நீங்கள் என்னிடம் சரணடைந்தால், நான் உங்களை விடுவிக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். அவரை அடைய நாம் முழுமையாகச் சரணடைய வேண்டும்.
நம்முடைய புலன்களை அவரிடம் சரணடையச் செய்ய வேண்டும். முழு இருப்பும் அவருக்காக இருக்க வேண்டும், மொத்தப் புலன்களும் அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவரைத் தவிர வேறெதைப் பற்றியும் இருக்கக்கூடாது. நாம் செய்வதற்கென்று ஒன்றும் இருக்கக்கூடாது. இது மிகவும் எளிமையான நுட்பம்.
குரு சொல்கிறார்: "நான் உன்னைக் காப்பாற்றுவேன். காலம் தாழ்த்தாமல், உடனடியாகக் காப்பாற்றுவேன், என்னிடம் சரணடை!"
ஆனால் நாம், "என்னைக் காப்பாற்ற வேறு யாராவது இருக்கிறீர்களா?" என்று விசாரிக்கிறோம்.
கடவுள் இதை மிக எளிமையாக்குகிறார். இருந்தாலும், அவரை நம்புவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். இதை ஒரு கடினமான செயலாகக் கருதுகிறோம்.
சக்கரங்களும் ஸம்ஸ்காரங்களும்...
கேள்வி: ஸம்ஸ்காரங்களையும் (எண்ணங்களின் தொகுப்பு) மற்றும் பிற எல்லாவற்றையும் விட்டு விட்டு முழுமையாகச் சரணடைவது எப்படி என்பது பற்றி தயவுசெய்து விளக்குங்கள்.
நீங்கள் ஸம்ஸ்காரங்களைவிடுவது எப்படி என்பது பற்றியும், எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைவது எப்படி என்பது பற்றியும் கேட்கிறீர்கள்.
நாளையும் நாளை மறுநாளும் நடக்கப் போகும், ஸத்ஸங்கத்தில்கலந்துகொள்ள வாருங்கள். அப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன். அடுத்து வரப் போகும் இரண்டு நாள் ஸத்ஸங்கங்களிலும், ஸம்ஸ்காரங்களைப் பற்றித்தான் விளக்கப் போகிறேன்.
ஆனந்த ஸ்புரண த்யான முகாம், வாழ்க்கையின் மொத்த சாத்தியங்களையும் நமக்குத் திறந்து வைக்கிறது.
இப்போது உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு ஸம்ஸ்காரங்கள் மீதும் நாம் நன்கு ஆழமாக வேலை செய்வோம். ஆசை, ஸம்ஸ்காரம், குற்ற உணர்ச்சி ஸம்ஸ்காரம், வலி ஸம்ஸ்காரம் - என்று அனைத்து ஸம்ஸ்காரங்கள் மீதும் நாம் தனித் தனியாக வேலை செய்வோம்.
ஸத்ஸங்கம்மட்டும் இல்லை, கலந்துரையாடலும் இருக்கும். அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஸம்ஸ்காரங்கள் மீது நாம் ஆழ்ந்து செயல்பரிவோம். முக்கியமாக ஸம்ஸ்காரங்களைப் பற்றி விரிவாக விளக்கும் குணத்ரய விபாக யோக மற்றும் இந்த எல்லா அத்தியாயங்களைப் பற்றியும் ஆராய்வோம். நாம் அவற்றின் மீது வேலை செய்வோம்.
ஸம்ஸ்காரங்களைக் கரைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வகுப்புகளும் கூட நடத்தப்படுகின்றன. தீக்ஷை அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட ஆச்சாரியர்கள், அடிப்படை வகுப்பான ஆனந்த ஸ்புரண த்யான முகாமில் ஏழு சக்ரங்களுடன் மற்றும் சக்தி மையங்களுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சித் தடைகளை நீக்குவதற்காகப் பல செயல்முறைகளில் உங்களை ஈடுபடுத்துவார்கள். இது, உங்கள் சக்ரங்களைச் சுத்திகரித்து, அவற்றிற்குச் சக்தியூட்டி ஒரு நல்ல அஸ்திவாரத்தை அமைக்கும். ஒவ்வொரு சக்ரமும் சில எதிர்மறை உணர்ச்சிகளால் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தடைகள் உங்களை மன ரீதியாகப் பலவீனப்படுத்தி, உடல் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி விடுகின்றன.
உங்களை இந்த சக்ரங்களின் வழியாக அழைத்துச் செல்லும் ஒரு பயணம்தான் ASP வகுப்பு. நீங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வேத நுட்பங்களை உபயோகித்து, உங்கள் சக்ரங்களின் மீது தியானம் செய்வீர்கள். இந்த நுட்பங்கள் இந்தச் சக்கரங்களில் உள்ள தடைகளை நீக்கி அவற்றைச் சக்தியூட்டக்கூடியவையாக இருக்கின்றன.
சக்ரங்களைத் தடைப்படுவதனால் என்ன நிகழ்கிறது என்பது பற்றியும், இந்தத் தடைகளால் உங்கள் நடத்தையில் என்னென்ன பாதிப்புகள் நிகழ்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்.
பிறகு இந்த சக்ரங்களில் இருக்கும் தடைகள் நீக்கப்பட்டு, அவற்றிற்குச் சக்தியூட்டப்படும்போது, என்ன என்னவெல்லாம் நிகழ முடியும் என்பதைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்.
ASP-வகுப்பு, உங்களுடைய தனிப்பட்ட உருமாற்றத்திற்கான கதவுகளைத் திறக்கிறது. ஆன்மீக உருமாற்றத்திற்காக, உங்களை அறியாமலேயே நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் வழிதான் அது!
> NSP பயணம், உங்களுடைய எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்குகளையும் ஆழமாகத் தூய்மைப்படுத்தி விடுகிறது.
ஆனந்த ஸ்புரண தியான முகாம், வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் மொத்த சாத்தியங்களின் தொகுப்பையும் நமக்குத் திறந்து வைக்கிறது: உடல் ரீதியான, மன ரீதியான, உணர்ச்சி ரீதியான, பொருளாதார ரீதியான மேலும் நிச்சயமாக ஆன்மீகம் ரீதியான சாத்தியங்களை நமக்குத் திறந்து வைக்கிறது.
ஆன்மீகம் என்பது இந்த எல்லா விஷயங்களின் கூட்டுத் தொகுப்பே தவிர அதில் ஏதோ ஒன்று மட்டும் அல்ல!
அடுத்த நிலை வகுப்பான LBP-2 வகுப்பு, நித்யானந்த ஸ்புரண முகாம் (NSP) என்று அழைக்கப்படுகிறது. இதில் எங்கள் ஆச்சாரியர்கள் ஏழுநிலை சக்தி அடுக்குகளின் மீது செயல்பரிவார்கள். இந்தச் சக்தி அடுக்குகளில் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் எண்ணங்களின் தொகுப்பான ஸம்ஸ்காரங்கள் படிந்திருக்கின்றன.
இதில் கலந்துகொள்ளும் நபர்கள், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட த்யான நுட்பங்கள் மூலம் தங்களின் நினைவுப் பதிவுகளிலிருந்து விடுபட்டு விடுதலை அடைகிறார்கள். விடுதலை அடைகிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களின் உடல் மன அமைப்பில் பதிந்துள்ள, ஸம்ஸ்காரங்கள் சுத்திகரிக்கப்பட்டுவிடுவதால், தூய்மைப்படுத்தப்பட்ட உடல் - மன அமைப்புடன் அவர்கள் புதுப்பிறவி எடுக்கிறார்கள்.
நீங்கள் ஏற்கனவே பிடித்து வைத்திருக்கும் ஒழுக்க முறைகள் மற்றும் நம்பிக்கைகளைக் கரைப்பதன் மூலம் இந்த NSP பயணம் உங்களுடைய எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்குகளையும் ஆழமாகத் தூய்மைப்படுத்தி விடுகிறது.
உங்களுடைய சில கட்டுறு மனப்பாங்குகள் சிறந்தது என்றும், சில கட்டுறு மனப்பாங்குகள் தீயது என்றும் நீங்கள் நினைக்கக் கூடும். சில கட்டுறு மனப்பாங்குகள் நீங்கள் மகிழ்ச்சி என்று எதை உணர்கிறீர்களோ அதைக்கொண்டு வருகின்றன; சில கட்டுறு மனப்பாங்குகள் உங்களுக்குத் துக்கத்தைக் கொண்டுவருகின்றன.
உங்களிடம் நான் வெளிப்படையாகச் சொல்வது என்னவென்றால், நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களுக்குள் புகுத்தப்பட்ட ஒழுங்கு முறைகள், நல்லொழுக்க விதிகள், உங்களுடைய நம்பிக்கைகள் இவை எல்லாம் உங்களுக்குத்துக்கத்தையே தருகின்றன. எப்போதாவது அவை உங்களுக்குச் சந்தோஷத்தை அளித்திருந்தாலும், அந்தச் சந்தோஷம் தற்காலிகமானதாக மறைந்து விடுவதோடு மட்டுமின்றி, அந்தச் சந்தோஷத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையையும் உங்களுக்குள் ஏற்படுத்தி விடுகின்றன. விளைவு: மேலும் மேலும் துக்கங்கள்தான்! இந்த த்யான வகுப்புகளில் கலந்து கொண்டதால் வாழ்க்கையில் பல மாற்றங்களை அடைந்திருக்கும் மக்களிடமிருந்து இதற்கான சான்றுகளை நீங்கள் பார்க்கலாம்.
இது போன்ற த்யான வகுப்புகள் நிச்சயம் இந்த ஒரு எச்சரிக்கையுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. "ஜாக்கிரதை! இந்த த்யான வகுப்புகள், உங்கள் வாழ்க்கையை உங்களாலேயே திருப்பி மாற்ற முடியாத அளவிற்கு மாற்றிவிடும்."
ஆத்ம ஸ்புரண த்யான முகாம், பக்தி ஸ்புரண த்யான முகாம் என்று இந்தியாவிலும், LBP Level 3 மற்றும் Level 4 என்று வெளிநாட்டிலும் அழைக்கப்படும் உயர்நிலை த்யான வகுப்புகளும் உள்ளன. இந்த வகுப்புகள், அதில் கலந்துகொள்பவர்களை குருவின் கருணையைப் பெறும் அளவிற்கு அவர்களுடைய நிலையையும் மற்றும் மனநிலையையும் மாற்றிவிடும். இந்த வகுப்புகள் வெறுமனே வாழ்க்கை பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காண்பவர்களுக்காக அல்லாமல், உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்காக உருவாக்கப்ப்ட்டவை.
இறுதியாக இந்த எல்லா வகுப்புகளையும் முடித்தவர்களுக்கு விசேஷமான த்யான முறைக்கான தீக்ஷை அளிக்கப்படும். இந்த த்யானம் மூலம் சக்தி ஓட்டத்தின் வாய்க்காலாக மாறி பிற மக்களைக் குணப்படுத்தலாம். அவர்கள் நித்ய த்யான சிகிச்சையாளர்கள் ஆகிறார்கள்.
ஆனந்த கந்த த்யானம் என்று நான் அழைக்கும் இந்த த்யான நுட்பமானது, ஸம்ஸ்காரங்களைத் தொடர்ந்து அழிப்பதன் மூலம், புதிய கர்மாக்கள் அல்லது ஸம்ஸ்காரங்கள் சேராமல் தடுத்துவிடும்.
நீங்கள் எப்பொழுதும் த்யானத்திலேயே இருக்கலாம். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், நிகழ்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வுடனேயே வாழ்க்கையை வாழலாம். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, விழிப்புணர்வுடன் செயலாற்றும்பொழுது புதிய ஸம்ஸ்காரங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள்.
நீங்கள் எங்கள் த்யான வகுப்புகள் பற்றியும் அதன் சாரங்களைப் பற்றியும் எங்களுடைய இணைய தளத்தின் மூலமும், உங்கள் பகுதியில் இருக்கும் நித்யானந்த த்யான பீடத்தின் கிளைகள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.