KAILASA Library/பகவத்கீதை/உருவமற்றது கடினமானதுSign in
பகவத்கீதை

உருவமற்றது கடினமானது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna

12.5 யார் ஒருவருடைய மனம், மனத்தாலும் வாக்காலும் விளக்க முடியாத அருவ வழிபாட்டில் நிலைபெறுகிறதோ, அவருக்கு 'உருவழிபாடு' என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. உருவத்தில் பற்று கொண்டவர்களுக்கோ மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அருவத்தை அடைவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.

பட்டறிவும் அஹங்காரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

கிருஷ்ணர் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு உண்மையைச் சொல்கிறார். பட்டறிவாளர்கள், இறைவனைப் புரிந்துகொள்வது என்பதை மிகவும் கடினமான செயலாக உணர்கிறார்கள்.

ஒரு சமயம் பிரஹ்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே தங்களுள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் சமரசம் ஏற்படாததால், அவர்கள் சிவனிடம் மத்யஸ்தத்திற்காகச் சென்றார்கள்.

உடனே சிவன் அடியும் முடியும் இல்லாத அளவிடற்கரிய ஜோதிப் பிழம்பாக மாறி இந்தப் பிரபஞ்சத்தையே வியாபித்து நின்றார். "என்னுடைய அடி, முடி இந்த இரண்டு எல்லைகளுள் ஒன்றை முதலில் யார் காண்கிறாரோ, அவரே பெரியவர்," என்று அறிவித்தார்.

விஷ்ணு, பன்றி உருவெடுத்துக்கொண்டு, அந்த ஒளிப்பிழம்பின் அடியைத் தேடி பூமியைத் துளைத்துக்கொண்டு செல்கிறார்.

பிரஹ்மா, அன்னப்பறவை உருவெடுத்துக்கொண்டு, சிவனின் முடியைப் பார்ப்பதற்காக மேல்நோக்கி பறந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தம்மால் சிவனின் அடியைக் காண இயலாது என்பதை விஷ்ணு உணர்கிறார். சிவனின் அடியைக் காண முயற்சிசெய்த தம்முடைய முட்டாள்தனத்தை உணர்ந்து திரும்பி வந்து சிவனிடம் அவருடைய அடியைக் காண முயன்றதற்காக மன்னிப்புக் கோருகிறார்.

ஒரு பட்டறிவாளருடைய தேடுதல் பாதையில், அவருடைய பட்டறிவு, மனம் மற்றும் அஹங்காரம், இவை மூன்றுமே தடைக்கற்களாகி விடுகின்றன.

பிரஹ்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேலே போய்க் கொண்டிருந்தார்.

மேலே போகும் பாதையில் தாழம்பூ ஒன்று கீழே மிதந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தத் தாழம்பூவிடம் அது எங்கிருந்து வருகிறது என்று விசாரித்தார்.

தாழம்பூவும் தான் சிவனின் தலையிலிருந்து விழுந்ததாகவும் பல பிரஹ்மாக்களின் ஆயுட்காலமாக இப்படியே கீழே வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னது.

அதைஃ கேட்டு அதிர்ந்த பிரஹ்மா அந்த
ஒளிப்பிழம்பின் ஆரம்பத்தைக் காண வழியே
இல்லை என்பதை உணர்ந்தார்.

தன்னைச் சிவனின் முடியிலிருந்து
பிரஹ்மாவே எடுத்து வந்ததாக ஒரு பொய்ஃ
சொல்லுமாறு தாழம்பூவை வற்புறுத்தி
வேண்டிக்கொண்டார்.

சிறு தயக்கத்திற்குப் பின் தாழம்பூவும் இதற்குச் சம்மதித்து பிரஹ்மாவுடன் சேர்ந்து சிவனிடம் சென்றது.

பிரஹ்மா சிவனிடம் சென்று, தாம் அவருடைய தலையைப் பார்த்ததாகவும் அதற்குத் தாழம்பூதான் சாட்சி என்றும் சொன்னார்.

தாழம்பூவும் அமைதியாகத் தலையை அசைத்தது. பிரஹ்மா சொன்ன பொய்யைக் கேட்டதும் சிவன் கோபமடைந்து, பிரஹ்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி விட்டு, அவர் இனி வழிபாட்டுக்கு உரியவராகமாட்டார் என்று சாபம் கொடுத்தார். பொய்சாட்சி சொன்ன தாழம்பூ இனித் தம்முடைய பூஜையில் உபயோகப்படுத்தப்பட மாட்டாது என்று சாபம் கொடுத்தார்.

இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில், ஒரு உருவகப்படுத்தப்பட்ட பொருள் இருக்கிறது. விஷ்ணு செல்வத்திற்கு அதிபதியாகவும், பிரஹ்மா கல்வியறிவிற்கு அதிபதியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மிகுந்த பணத்தை உடையவர், கடவுளை அடையும் செயலைக் கடினமாக நினைப்பார். அதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள், தம்முடைய பணத்தால் இனி நடக்கப் போவது எதுவும் இல்லை என்பதைப் பரிபூரணமாக உணர்ந்து, பணத்தின் மீது தமக்கிருக்கும் ஈடுபாட்டை விட்டு விட்டு, இறைவனிடம், ஸத்யத்திடம் சரணடைவார். விஷ்ணு திரும்பி வந்து சிவனிடம் மன்னிப்பு கேட்கும் செயல் மூலம் இந்தக் கருத்துதான் விளக்கப்படுகிறது.

ஆனால் பட்டறிவு உள்ள ஒரு மனிதரால், ஸத்யத்தைத் தேடும் தம் முயற்சியில் ஏற்படும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. அவருடைய அஹங்காரத்தை விட்டுக் கொடுக்க இயலாமல் போகிறது. அதனால் அவர் ஸத்யத்தை அடைவது இல்லை.

இருந்தாலும் அவர் மிகுந்த தந்திரத்துடன் தாம் ஸத்யத்தை அடைந்து விட்டதாகப் பிறரை நம்ப வைக்க முயற்சிசெய்வார்.

இந்தக் கருத்துதான், பிரஹ்மா தாழம்பூவையும் தம்முடன் அழைத்து வந்து, சிவனிடம் தாம் அவருடைய தலையைப் பார்த்ததாகப் பொய்சாட்சி சொல்லச் சொல்வதன் மூலம் விளக்கப்படுகிறது.

ஸத்யத்தையும் தெய்வீகத்தையும் புலன்களால் உணரமுடியாத அருவநிலையையும் தேடிச்செல்லும் ஒருபட்டறிவாளருடைய பாதையில், அவருடைய பட்டறிவு, மனம் மற்றும் அஹங்காரம், இவை மூன்றுமே தடைக்கற்களாகி விடுகின்றன. இவை, அந்தப் பாதையைக் கடப்பதற்கரிய கடினமான பாதையாக ஆக்கி விடுகின்றன.

தனி மனிதன் உடலை மட்டுமல்ல, மனத்தையும் சுமந்து கொண்டிருக்கிறான். அந்த மனம் தன்னுடன் அஹங்காரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் குறிப்பிடுவதுபோல மனத்தையும் உடலையும் கடந்து செல்லாவிட்டால் ஆன்மீகத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினமான காரியம்தான்.

உடல் - மன அமைப்பிற்கு அஹங்காரத்தைத் துறப்பதுதான் கஷ்டமான செயல். ஏனென்றால் உடல் - மன அமைப்பிற்கான அடையாளத்தையும் இருப்பையும் அஹங்காரம்தான் அளிக்கிறது.

பிரான்ஸ் தத்துவ மேதை ரெனே டெஸ்கார்டெஸ் (Rene Descartes) சொல்லும் பிரபலமான வாக்கியம், “நான் நினைக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்.” இந்த வாக்கியம்தான் பட்டறிவுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் செய்கைக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

மனத்தையும் உடலையும் கடந்து செல்லாவிட்டால் ஆன்மீகத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினமான காரியம்தான்.

இந்த உலகம், இந்தக் காலத்திலும் சரி அல்லது கிருஷ்ணரின் காலத்திலும் சரி, எண்ணத்தின் சக்தியை மையமாகக்கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சக்திதான் நமக்குத் தேவையான அறிவையும் திறமையையும் தருவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது, மற்றவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் ஒரு அந்தஸ்தைப் பெறுவதற்கும் மிகவும் அவசியமாக இருந்தது.

பட்டறிவைத் தாண்டினால் பக்தியானாவீர்கள்

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஓர் அவதார புருஷராக இருந்தாலும், அவர் மிகுந்த பணிவுடன் மூன்று பேரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.

ஆனால் உண்மையில், அவர்களுடைய அகங்காரங்களைத் துறப்பதற்கு அவர்களுக்கு உதவியதன் மூலம், அம்மூவரின் முக்திக்கான காரணமாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரே இருந்தார்!

பைரவி பிராஹ்மணி என்கிற ஒரு பெண்மணி
ராமகிருஷ்ணருக்கு தாந்த்ரீக நுட்பங்களைக்
கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பைப்
பெற்றார், ஆனாலும் அவர் ஒரு சீடராகவே
அங்கு இருந்தார். அவர் தம்முடைய
அஹங்காரத்தைத் துறப்பதற்கு பல வருடங்கள்
பிடித்தது. பல வருடங்களுக்குப் பிறகுதான்
அவர் தம்முடைய அஹங்காரத்தைக்
கைவிடமுடிந்தது. ராமகிருஷ்ணரின்
உதவியால்தான் அதைச் சாதிக்க முடிந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
ஓர் அவதார புருஷராக
இருந்தாலும், அவர்
மிகுந்த பணிவுடன்
மூன்று பேரைத்
தம் குருவாக
ஏற்றுக் கொண்டார்.

தோதாபுரி என்ற மிகப்பெரிய அத்வைத (எல்லாம் ஒன்றே என்ற தத்துவம்) ஞானி, அவர் மூன்று இரவுகளுக்கு மேல் ஓரிடத்தில் தங்க மாட்டார். அவர், இருப்புத் தன்மையின் அத்வைத குணத்தைப் பற்றி இராமகிருஷ்ணருக்குக் கற்றுக் கொடுக்க விருப்பப்பட்டார்.

தம்முடைய விருப்பத்தை ராமகிருஷ்ணரிடம் சொன்னதும், உடனே ராமகிருஷ்ணர் தம் அன்னையிடம் அனுமதி கேட்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார். ஆச்சரியமடைந்த தோதாபுரி அவரைப் பின் தொடர்ந்தார். ராமகிருஷ்ணர் காளிக்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர் காளியைத்தான் தம்முடைய அன்னை என்று குறிப்பிட்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.

தோதாபுரி ராமகிருஷ்ணரை உருவமற்றதைத் தியானிக்கும்படி வற்புறுத்திச் சொன்னபோது, ராமகிருஷ்ணர் அன்னையைப் பிரிய தம்மால் முடியாது என்று சொல்லி அருவ தியானத்தை மறுத்துவிட்டார். ராமகிருஷ்ணர் எப்போதும் அன்னையின் உருவத்தையே தியானித்து வந்தார். மிகவும் கோபமடைந்த தோதாபுரி,டைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்து ராமகிருஷ்ணரின் புருவங்களுக்கு இடையில் உள்ள அவரது மூன்றாவது கண் இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தமாகக் கீறி, அங்கு இருக்கும் அன்னை காளியின் உருவத்தைப் பல பாகங்களாக வெட்டும்படி ஆணையிட்டார்.

குருவின் ஆணைப்படி இராமகிருஷ்ணர் செய்தார். உடனே ஸமாதி நிலைக்குச் சென்ற ராமகிருஷ்ணர், மூன்று வாரம் ஸமாதி நிலையிலேயே இருந்தார். அவ்வளவு நெடிய ஸமாதி நிலையில் இருந்து விட்டு, திரும்பவும் வந்து இந்த உலகில் வாழ்பவர்கள் மிக மிகச் சிலரே.

ராமகிருஷ்ணர் உடல் - மனத்தைப் பற்றிய நினைவு நிலைக்குத் திரும்பிய பிறகும் தோதாபுரி அவருடன் பல மாதங்கள் தங்கினார்.

அத்வைத ஞானியான தோதாபுரி, த்வைத கருத்துகளை ஏற்றுக்கொள்ளவதில்லை. அதனால் அவர் அன்னை காளியை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, அன்னையை வணங்கும் ராமகிருஷ்ணரையும் சில சமயங்களில் கேலி செய்வதுண்டு. ஆனால் இறுதியில் அன்னை காளியே அவர் முன் தோன்றி அவருடைய அஹங்காரத்தை நீக்கினாள்.

இதற்கெல்லாம் காரணம் ராமகிருஷ்ணர்தான் என்று தோதாபுரி உளமாற நம்பினார். அவர் இறுதியில் இராமகிருஷ்ணரிடம் விடைபெற்றுக்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஜடாதரி என்னும் ராமருடைய பக்தர் ஒருவர், ராம்லாலா என்னும்

நீங்கள் ஆன்மீகவாதியாக
மாறும்போது,
உடலைத் தாண்டிய
ஒரு சிறப்பான
ஆரோக்கியத்தை
வெளிப்படுத்துவீர்கள்.

ராமரின் குழந்தை வடிவ விக்ரஹத்துடன்
ராமகிருஷ்ணரைக் காண வந்தார்.
ஜடாதரியைப் பொறுத்தவரை அந்த விக்ரஹம்
உயிருள்ளதாக இருந்தது. ஒவ்வொரு நாளும்
அவர் அந்த விக்ரஹத்தைக் குளிப்பாட்டி,
அதற்கு உணவளித்து, அதனுடன் நாள்
முழுவதும் பேசிக் கொண்டிருப்பார்.

சில தினங்கள் ராமகிருஷ்ணருடன் தங்கியிருந்த பின், ராம்லாலா ராமகிருஷ்ணருடன் அதிக நேரத்தைச் செலவிடுவதை ஜடாதரி கண்டார். அவருடைய செல்லப் பிள்ளையான ராம்லாலா இன்னொரு நபருடன் விளையாட முடிவு செய்ததை அறிந்து, மனம் கலங்கியவாறு ஜடாதரி அவரைத் தேடிக் கொண்டுவருவார். ராம்லாலா ராமகிருஷ்ணருடன் இருப்பதைத்தான் விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டஜடாதரி தக்ஷிணேசுவரத்தில் அதிக நாட்கள் தங்கினார். கடைசியாக ஒரு நாள் ராமகிருஷ்ணரிடம் வந்து, "ராம்லாலா உங்களோடு தங்க விரும்புவதாகச் சொன்னார். அவர் உங்களை நேசிக்கிறார். அவரை யாரென்று எனக்குத் தெரிய வைத்துவிட்டார். அது உங்களால்தான் நடந்தது. நான் மிகவும் மனநிறைவுடன் உள்ளேன். அவரை உங்களிடம் மகிழ்ச்சியுடன் விட்டு விட்டுச் செல்கிறேன். நான் ஆனந்தத்தால் நிறைந்துள்ளே ன்," என்று சொன்னார். அதற்குப் பிறகு ராம்லாலா ராமகிருஷ்ணரிடமே தங்கி விட்டார்.

மிகப்பெரிய அவதார புருஷரின் மனமில்லா எளிமைத்தனமே, கற்றறிந்த சான்றோர்களுக்கும் அவர்களுடைய அஹங்காரத்தைக் கைவிடுவதைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. உடல் மனம் பற்றிய சிந்தனை இருப்பவர்களுக்கு, குறிப்பாக பட்டறிவை சார்ந்தவர்களுக்கு, அஹங்காரத்தைக் கைவிடுவது என்பது மிகவும் கஷ்டமான செயலாகும்.

உடல் நலமும் ஆன்மீகமும் ஒன்றே

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, தங்களுடைய தற்போதைய லாஸ் ஏஞ்சலீஸ் பயணத்தின்போது ஏதாவது த்யான வகுப்பு எடுப்பீர்களா?

கீதா ஜ்ஞான யஜ்ஞய வகுப்பிற்குப் பிறகு, ஆரோக்ய ஸ்புரண முகாம் என்ற த்யான வகுப்பை எடுப்பேன். இந்த நிகழ்ச்சி, ஆரோக்கியமும் விழிப்புணர்வும் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சிறந்த உடல் ஆராக்கியத்தைப் பற்றியும், உடல் மனம் மற்றும் ஜீவனைத் தெய்வீகமான ஆரோக்கியத்தை நோக்கி வழிநடத்துவது பற்றியும், உங்கள் உடல், மனம் மற்றும் ஜீவனைக் குணப்படுத்துவதாகவும் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை உடல் நலமும் ஆன்மீகமும் ஒன்றே.

நீங்கள் ஆன்மீகவாதியாக மாறும்போது, உடலைத் தாண்டிய ஒரு சிறப்பான ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவீர்கள். இந்த உடலே ஒரு வியாதிதான்! நோய்கள் உடலைத் தாக்குவதில்லை! உடல் நலத்தை பாதிப்படையச் செய்வதில்லை; உடலே ஒரு நோய்தான்! அதனால் என்னைப் பொறுத்தவரை எல்லையில்லாத சுதந்திரத்தை நீங்கள் உணரும்போதுதான், உண்மையில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

இந்த இரண்டு நாள் முகாம், எல்லையில்லாத விழிப்புணர்வு மற்றும் எல்லையில்லாத சுதந்திரத்தை அடைவதை நோக்கி உங்களை வழி நடத்துகிறது.

இயற்கையாக, இது உங்கள் உடலையும் குணப்படுத்துகிறது.

ஆனந்த ஸ்பூரண பயிற்சி முகாம் என்ற நிகழ்ச்சியும் நம்முடைய ஆச்ரமத்தில் அதற்காக நியமிக்கப்பட்ட ஆச்சாரியார்களால் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியின்போது, ஒரு நாளில் ஒரு இரண்டு பிரிவில் நான் வந்து இணைந்துகொள்ளக் கூடும். நித்யானந்த ஸ்பூரண த்யான முகாமை நான் அமெரிக்காவில் நடத்துவதில்லையென்றாலும், ஒரே ஒரு முகாம் மட்டும் வான்கூவரில் (Vancouver) நடத்துகிறேன். ஆரோக்ய ஸ்பூரண த்யான முகாமை முழுக்க முழுக்க நானே இருந்து வழி நடத்துவேன்.

நான் எங்கள் ஆச்ரமவாசிகளுக்காக ஆழமான வகுப்புகளை நடத்துகிறேன். எல்லா ஆச்ரமவாசிகளுக்கும் தினசரி வகுப்புகள் உண்டு. அதில் த்யான சிகிச்சையாளர்களும் கலந்துகொள்ளலாம். நீங்கள் த்யான சிகிச்சை தீக்ஷை பெற்றிருந்தால், நீங்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

கீதா ஜ்ஞான யஜ்ஞாவிற்குப் பிறகு இரவில் நான் வகுப்புகளை எடுக்கிறேன். காலை நேர வகுப்புகளில் எல்லோரும் கலந்துகொள்ளலாம். ஆனால் மாலை நேர வகுப்புகளில் த்யான சிகிச்சையாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் உயர்ந்த மற்றும் ஆழ்ந்த நுட்பங்களைக் கொண்ட த்யானங்கள் இதில் கற்றுக் கொடுக்கப்படும்.

இந்தப் பயணத்தின்போது, நான் ஆச்ரமவாசிகளுடன் நேரத்தைச் செலவிடப் போவதால், ஆரோக்ய ஸ்பூரண முகாமைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்தப் போவதில்லை.