KAILASA Library/பகவத்கீதை/அவர்களும் என்னைSign in
பகவத்கீதை

அவர்களும் என்னை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடைவார்கள்...

Lord Krishna

12.3,4 ஆனால் அழிவற்றதும், உருவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததும், மாற்றமில்லாததும், அசையாததுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; தம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்தி, சமநிலையான மனத்துடன் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்கிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.

பக்தி என்னும் ‘மை’யே கண்ணுக்கு உகந்தது

கிருஷ்ணன், ஸகுண ப்ரஹ்மமாக; பிரபஞ்ச சக்தியின் மனித உருவமாக இருக்கிறார். அவரே விச்ரூப தர்சனத்தில் தம்முடைய இந்த உருவத்தைக் காட்டுகிறார். கிருஷ்ணர் நிர்குண ப்ரஹ்மமாகவும் அதாவது அருவமாகவும் அவரே இருக்கிறார்.

கிருஷ்ணரால் இங்குச் சொல்லப்பட்ட எல்லாக் குணங்களையும், உருவமாக இருக்கும்போதும் சரி, அருவமாக இருக்கும்போதும் சரி தெய்வீக விழிப்புணர்வான கிருஷ்ணர் பெற்றிருக்கிறார்.

> தெய்வீகத்தின் கண நேர தரிசனத்தைப் பெறவேண்டுமானால், ஒருவர் தம்முடைய உடல் - மனதைத் தாண்டியாக வேண்டியுள்ளது.

தெய்வீகம் அழிவற்றது. இது அக்ஷரம் ஆக இருக்கிறது. இந்தப் பொருள் சார்ந்த பிரபஞ்சத்தில் இருப்பவை எல்லாமே வந்து போகக்கூடியவையாகவும், தோன்றி மறையக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஆனால் தெய்வீகம் எப்போதும் நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கிறது. அது எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதுவே மேலான பரம்பொருளாக இருப்பதால், எதனோடும் அதனை அடையாளப்படுத்த முடியாததாக இருக்கிறது.

அது உருவமற்றதாகவும், மனத்தால் உணர முடியாததாகவும் இருக்கிறது. அதனால் அது புலன்களால் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அதனை எண்ணங்களாலும் மனத்தாலும் கிரகிக்க முடியாது, ஏனென்றால் தெய்வீகத்தின் கண நேர தரிசனத்தைப் பெறவேண்டுமானால், ஒருவர் தம்முடைய உடல் - மனதைத் தாண்டியாக வேண்டியுள்ளது.

தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறது.

இளவரசனும் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரஹ்லாதனை, அவனுடைய தந்தையும் அரக்க அரசனுமாகிய ஹிரண்ய கசிபு மிரட்டுகிறான். ஏனென்றால் தன் மகன் தன் எதிரியான ஹரியின் நாமத்தை சொல்வதை அவன் விரும்பவில்லை. அப்போது பிரஹ்லாதன், “நாராயணன் எங்கும் இருக்கிறார். அவர் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்," என்று தன் தந்தையிடம் சொன்னான்.

இந்த சமயத்தில் வைகுண்டத்தில் தம்முடைய மனைவி லக்ஷ்மியுடன் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன் அவசர அவசரமாக தம்முடைய விளையாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்து ஓடி வருகிறார். அவர் அவ்வாறு திடீரென்று எழுந்து ஓடுவதைப் பார்த்த அவருடைய லக்ஷ்மி, "இந்த அந்தி நேரத்தில் எங்கு கிளம்பி விட்டீர்கள்?" என்று கேட்கிறாள்.

அதற்கு விஷ்ணு பகவான் "என்னுடைய ப பக்தன் பிரஹ்லாதன் என்னை அழைக்கப் போகிறான். அவன் தன்னுடைய விரலைத் தூணை நோக்கி நீட்டுவானா அல்லது துரும்பை நோக்கி நீட்டுவானா என்று எனக்குத் தெரியாது. அவன் எங்குச் சுட்டிக் காட்டினாலும் நான் அந்த இடத்தில் தோன்ற தயாராக இருக்க வேண்டும். அவனை நான் ஏமாற்ற முடியாது," என்று பதில் சொன்னார்.

உண்மையான பக்தர்கள் இறைவனை எங்கும் காண்கிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் உண்மையான பக்தனின் அன்பைப் பற்றி விளக்கும்போது, "கற்புள்ள மனைவிக்கு கணவன் மீதிருக்கும் அன்பு, கஞ்சனுக்குத் தான் சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு, உலகியல் மனிதனுக்கு புலனின்பத்தில் உள்ள நாட்டம் ஆகியவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து இறைவனை நோக்கிச் செலுத்தும்போது ஏற்படுவதே உண்மையான ப பக்தி," என்று சொல்கிறார்.

பக்தி, உங்கள்
'கண் மை'யாக இருந்தால்
நீங்கள் யாரைப்
பார்த்தாலும்
அவர் கிருஷ்ணராகவே
காட்சி அளிப்பார்.

விழிப்புணர்வோடும், தம்முடைய மனத்தையும் புலன்களையும் இறைவன் மேல் ஒருமுகப்படுத்தியும் யார் ஒருவர் இந்த இரண்டு பாதைகளையும் பின்பற்றுகிறாரோ, அந்த உண்மையான பக்தர் இறைவனையும் அனுபவிக்கிறார், மேலும் மனித குலத்திற்குச் சேவை செய்வதால் ஏற்படும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறார்.

அந்த பக்தர், தாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இறைவனைக் காண்கிறார். இறைவனைக் கண்ட அவருடைய அந்த அனுபவம், எல்லோரிடத்திலும் அன்பாக வெளிப்படுகிறது.

கிருஷ்ணரின் தோழியான ராதை கோபியர்களிடம், "எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எனக்குள் என்ன மாற்றம் ஏற்பட்டது என்றே தெரியவில்லை. நான் எல்லோரிடத்திலும் கிருஷ்ணரையே பார்க்கிறேன். எல்லோரையும் கிருஷ்ணராகவே உணர்கிறேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை," என்று சொல்கிறார்.

அதற்கு கோபியர்களில் ஒருவர், "பக்தி என்னும் 'மை'யையே உன் கண்களுக்கு 'மை'யாகத் தீட்டியிருக்கிறாய், அதனால்தான், உனக்குப் பார்க்கும் இடங்களில் எல்லாம் கிருஷ்ணர் தெரிகிறார்," என்று சொல்கிறார்.

இது எப்படி என்றால், நீங்கள் கருப்புக் கண்ணாடி அணியும்போது, இந்த உலகமே கருப்பாகத் தெரியும். பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்தால் இந்த உலகமே பச்சையாகத்தான் தெரியும். அதைப்போல பக்தி, உங்கள் 'கண் மை'யாக இருந்தால் நீங்கள் யாரைப் பார்த்தாலும் அவர் கிருஷ்ணராகவே காட்சி அளிப்பார். தெய்வமாகவே காட்சி அளிப்பார்.

தம்முடைய குருவிடம்
முழுமையாகச்
சரணடைகிறாரோ,
அவர்
தம்முடைய
இதயத்தில்
இறைவனைக் காண்கிறார்.

நாணலாக மாறுங்கள்

இங்கே கிருஷ்ணர், "மேலான விழிப்புணர்வில் நிலைபெற்றிருக்கும் மனிதரும், பக்தியுணர்வை வெளிப்படுத்துகிற மனிதரும் சமமே. அவர்கள் இரு வேறு பிரிவுகள் இல்லை," என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் இரண்டு பிரிவுகளை உருவாக்கவில்லை. அர்ஜுனன், நிஜத்தில் தாம் பார்க்கிற இரு குழுவினரைப் பற்றியும் கிருஷ்ணரிடம் விவரிக்கிறார். ஒரு குழு விழிப்புணர்விலே நிலைபெற்றிருப்பவர்கள், மற்றொரு குழு, பக்தியுணர்வை வெளிப்படுத்துபவர்கள். கிருஷ்ணர், "இந்த இரு பிரிவினரும் ஒன்றே," என்று சொல்கிறார். அவர் நிலைபெற்றிருப்பவர்களையும் வெளிப்படுத்துபவர்களையும் இரு பிரிவாகப் பிரிக்கவில்லை.

கிருஷ்ணர் சொல்கிறார், "யார் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் வெளிப்படுத்துகிறார், யார் வெளிப்படுத்துகிறாரோ அவர் நிலைபெற்றிருக்கிறார்."

நான் முன்பு சொன்னதுபோல் இது ஒரு தர்ம சக்ரம்.

ராமகிருஷ்ணர் சொல்கிறார், "ஒரு மணியை அடித்து ஓசை எழுப்பும்போது, ஒவ்வொரு அடியும் அதற்கென இருக்கும் ஒரு தனித்துவமான ஒலியை உருவாக்குகிறது. மணி அடிப்பதை நிறுத்திய பின்பும் சிறிது நேரத்திற்கு தொடர்ந்து நாம் ஒருவித ஓசையைக் கேட்கிறோம். அப்படித்தான் கடவுளும் உருவத்துடனும் உருவமில்லாமலும் தோன்றும்றார்.''

சங்கரர் தம்முடைய பஜகோவிந்தம் பாடலில் சொல்கிறார்...

குரு சரணாம்புஜ நிர்பர பக்த: ஸம்ஸாராதசிராந்பவ முக்த: |
ஸேந்த்ரிய மானஸ நியமாதேவம் த்ரக்ஷ்யஸி நிஜஹ்ரு தயஸ்த்வம் தேவம் || 31

யார் தம்முடைய புலன்களை ஒடுக்கி,
மனத்தை ஒரு நிலைப்படுத்தி தம்முடைய
குருவிடம் முழுமையாகச் சரணடைகிறாரோ,
அவர் தம்முடைய இதயத்தில் இறைவனைக்
காண்கிறார். கிருஷ்ணர் மீண்டும் இந்தக்
கருத்தைக் குறிப்பிடுகிறார்.

யார் ஒருவர் தம்முடைய புலன்களை அடக்கி,
தெய்வீகத்தின் அருவ இயல்பினையும்
அதன் அழிவற்ற தன்மையையும்,
மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அதன்
வெளிப்படுத்தப்படாத இயல்பினையும்
உணர்ந்திருக்கிறாரோ, அவர் மனித
குலத்தின் நன்மைக்காகவே வேலை
செய்கிறார்.

அருவக் கடவுளை உணரும் அனுபவம் ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் கூட போதும், அது உருவக் கடவுளை அறியும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்வோம். இந்த இரண்டு அனுபவங்களுமே நாம் அந்தப் பிரபஞ்ச கூட்டு விழிப்புணர்வின் ஒரு அங்கம்தான் என்கிற ஸத்ய அனுபவத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.

இந்த உணர்தலின் வெளிப்பாடே கருணையும் பணிவும். மேலும் இது ஆழ்ந்த நன்றியுணர்வாகவும் சரணாகதியாகவும் வெளிப்படுகிறது. இதன் மூலம் ஒருவர், பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செல்லக் கற்றுக்கொள்கிறார். அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையின் ஓட்டத்தை எதிர்த்துத் துன்பப்படுவதில்லை.

சீனத் தத்துவமான தாவோ இந்த ஓட்டத்தைப் பற்றிச் சொல்கிறது. ஓடுகிற நீருக்கேற்ப வளைந்து கொடுக்கும் நாணல் ஆபத்திலிருந்து தப்பித்து உயிர் வாழ்கிறது; தழைத்து ஓங்குகிறது. ஆனால் வளைந்து கொடுக்காமல், நிமிர்ந்து நிற்கிற மரக்கன்றோ, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போய்விடுகிறது.

Photograph of reed grass by a lake

நாம் நாணலைப் போன்று வளைந்து கொடுக்கும் தன்மையோடு, நம்மைச் சுற்றி என்ன இருக்கிறதோ அதனிடம் முழுமையாகச் சரணடைந்து, நடப்பனவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு கணமும் இயற்கையை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்காமல் இருந்தால் ஆனந்தமாக இருப்போம்.

நாம் முழுக்க முழுக்க அஹங்காரத்துடன் இருக்கும்போது, மற்றவர்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறோம். இல்லையென்றால், குழப்பம் நிறைந்த இந்த உலகை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சமும், பூமிப் பந்தும் நாம் இயக்குவதனால் இயங்குவதில்லை. மாறாக நாம் இருந்தும் இந்த மொத்தப் பிரபஞ்சமும் தானாகவே இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு கணம் போதும்.

> ஓடுகிற நீருக்கேற்ப
> வளைந்து கொடுக்கும்
> நாணல்
> ஆபத்திலிருந்து தப்பித்து
> உயிர் வாழ்கிறது;
> தழைத்து ஓங்குகிறது.

இலட்சக்கணக்கான நட்சத்திரங்களும்
கோள்களும் பெரும் குழப்பமான
முறையில் இந்தப் பிரபஞ்சத்தில்
இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும்
புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சம்
எப்போதும் ஓர் ஒழுங்கில்தான் இயங்குகிறது.

நாம் உண்மையிலேயே குழப்பத்தில்
இருக்கிறோம், ஆனாலும் ஒழுங்காக
இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
பிரபஞ்சத்தின் நோக்கம் அல்லது விருப்பம்
எதுவோ அதனிடம் நாம் சரணடையும்போது

மட்டுமே பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டிற்குள் விழுகிறோம். நமக்கு எல்லாச் செயல்களும் நன்றாக நிகழும். நாம் விருப்பங்களை விட்டுவிடும்போது மட்டுமே, நமக்குத் தேவையானவை எல்லாம் கிடைக்க ஆரம்பிக்கும்.

நாம் உண்மையாக எதை விரும்பினோமோ அதைப் பெறும்போது, அது மனித குலத்திற்கு நன்மையை விளைவிக்கிறது. ஏனென்றால் நாம் சரணடையும்போது, கிருஷ்ணர் பொறுப்பெடுத்துக்கொள்கிறார்.

Feather illustration

ஆளப்பிறந்தவர்கள்

நீங்கள்...!

கேள்வி: ஸ்வாமிஜி, "என்னுடைய பக்தர் என்றுமே அழிவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் எங்கும் நிறைந்திருப்பது கடவுளே என்றால் அழிவது எது? கிருஷ்ணர் சொல்வதைப் பார்த்தால் அவருடைய பக்தர்கள் மட்டும் அழிவதில்லை என்றும், மற்றவர்கள்தான் அழிகிறார்கள் என்றும் எச்சரிப்பதுபோல் தோன்றுகிறது. தயவுசெய்து விளக்கமளித்து என்னுடைய சந்தேகத்தைத் தீருங்கள்.

'நாம் அழிவற்றவர்கள்' என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே, நீங்கள் கிருஷ்ணரின் பக்தர்கள் ஆகிவிடுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதில் கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவர்கள் மற்றும் பக்தி இல்லாதவர்கள் என்ற பிரிவுகளோ அல்லது கிருஷ்ணரின் பக்தர்கள் அழிவற்றவர்கள், மற்றவர்கள் அழியக்கூடியவர்கள் என்ற பாகுபாடுகளோ இல்லை.

யாரெல்லாம் தாங்கள் அழிவற்றவர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் இயல்பாகவே கிருஷ்ணரின் பக்தர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இந்தக் கருத்தைப் புரிந்து கொண்ட கணமே நீங்கள் அவருடைய பக்தர் ஆகிவிடுகிறீர்கள்.

எல்லாமே இறைவன்தான் என்பதை
நீங்கள் புரிந்து கொண்டீர்களானால்
எதுவுமே அழிவதில்லை என்பதையும்
புரிந்துகொள்வீர்கள்.

பிரபஞ்சத்தின் விருப்பம்
எதுவோ அதனிடம்
நாம் சரணடையும்போது
மட்டுமே
பிரபஞ்சத்தின்
கட்டுப்பாட்டிற்குள்
விழுகிறோம்.

கிருஷ்ணர் சொல்கிறார், "என்னுடைய பக்தன் அழிவதில்லை." இது ஒரு தொடர்புள்ள வாக்கியம். எல்லாமே கடவுள்தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால் பிறகு எதுவுமே அழிவதில்லை.

நீங்கள் இதைப் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் இந்த நிலையை அடைந்து விட்டீர்களானால் கிருஷ்ணரின் வாக்கியம் உங்களைப் பாதிக்காது. கிருஷ்ணரின் இந்த வாக்கியம், உண்மை நிலையை புரிந்துகொள்வதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கும் மற்றும் அதைப் புரிந்துகொள்வதற்காக முயற்சிசெய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதருக்காகச் சொல்லப்பட்டது.

முதல் விஷயம், எல்லாமே கடவுள்தான் என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து விட்டீர்களானால், இந்த வாக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

எல்லாமே இறைவன் தான்
என்பதை நீங்கள்
புரிந்து
கொண்டீர்களானால்
எதுவுமே அழிவதில்லை
என்பதையும்
புரிந்துகொள்வீர்கள்.

அடுத்து, எதுவுமே அழிவதில்லை என்பதை
நீங்கள் புரிந்து கொண்ட கணமே நீங்கள்
கிருஷ்ணரின் பக்தர் ஆகிவிடுகிறீர்கள்.
அதனால் கிருஷ்ணர் பாரபட்சமாக எதையும்
சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

கிருஷ்ணர் பாரபட்சத்துடன், "என்னுடைய பக்தர்கள் அழிவதில்லை. மற்றவர்களின் பக்தர்கள் அழிகிறார்கள்," என்று சொல்லவில்லை.

அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. யாரெல்லாம் இந்தத் தத்துவத்தை உணர்கிறார்களோ, அவர்களெல்லாம் அழிவதில்லை. அதைத்தான் அவர் சொல்கிறார்.

யாரெல்லாம் இந்த விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் அழிவதில்லை.

நீங்கள் இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொண்டீர்களானால், புல்லாங்குழலும் மயில் இறகு பொருந்திய கிரீடமும் அணிந்த கிருஷ்ணரை வழிபடவில்லையென்றாலும்கூட, நீங்கள் அழியமாட்டீர்கள். அதனால் கவலைப்படாதீர்கள்.

புல்லாங்குழலையும் மயில் இறகு கிரீடத்தையும் பொருந்திய ஒரு உருவம்தான் கிருஷ்ணர் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களானால், இது போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

புல்லாங்குழலையும் மயிலிறகையும் தாண்டியவர்தான் கிருஷ்ணர் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், உங்களுக்குள் இந்தச் சந்தேகமே எழாது. கிருஷ்ணர் சொல்வது, "என்னுடைய பக்தன் எப்போதும் அழிவதில்லை. அவன் இந்த ஸத்யத்தைப் புரிந்து கொண்டானேயானால், அவனுக்கு ஒருபோதும் அழிவில்லை," இதைத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணர் என்பவர் நீங்கள் நினைக்கும் கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் நீங்கள் உபயோகப்படுத்துவதற்குரிய ஒரு தனி உருவம் இல்லை. அவர், மேலான விழிப்பு சக்தியாக, பராசக்தி எனப்படும் பிரபஞ்ச சக்தியாக இருக்கிறார்.

நாமும் கிருஷ்ணராக மாற முடியும்

> கிருஷ்ணர்,
> மேலான விழிப்பு சக்தியாக,
> பராசக்தி எனப்படும்
> பிரபஞ்ச சக்தியாக
> இருக்கிறார்.

கிருஷ்ணரின் பக்தர்கள் (கிட்டத்தட்ட எல்லை மீறிய பற்றுள்ளவர்கள்) ஒருமுறை என்னுடைய ஸத்ஸங்கத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் என்னிடம், "நீங்கள் கீதையைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள், உங்களுக்குக் கிருஷ்ணரிடம் நம்பிக்கை உள்ளதா?" என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "ஆமாம், எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று சொன்னேன். உடனே அவர்கள், "அப்படியென்றால், நீங்கள் மற்ற கடவுள்களும் தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்? கீதையில் கிருஷ்ணர், 'அனைத்தும் தாமே' என்றுதானே சொல்கிறார். ஆனால் உங்கள் ஆச்ரமத்தில் தக்ஷிணாமூர்த்தியின் சிலையுள்ளது என்று கேள்விப் பட்டோம். நீங்கள் எப்படி அதை பிரதிஷ்டை செய்யலாம்?" என்று கேட்டார்கள்.

நான் அவர்களுக்கு விளக்கினேன்... மஹாபாரதப் போர் முடிந்தவுடன், ஒரு நாள் அர்ஜூனனும் கிருஷ்ணரும் பேசியபடியே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது அர்ஜூனன் கிருஷ்ணரைப் பார்த்து, "போர்க்களத்தில் போர் நிகழ்வதற்கு முன், நீங்கள் எனக்குச் சொல்லியவற்றில் பெரும்பாலான விஷயங்கள் எனக்கு மறந்து விட்டன. அதனால் தயவுசெய்து அவற்றை எனக்கு மீண்டும் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, “ஓ! அர்ஜூனா அவற்றை நீ மறந்துவிட்டாயா? நானும் மறந்துவிட்டேன்,” என்று சொல்கிறார்.

கிருஷ்ணருடைய இந்த வார்த்தை அர்ஜூனனுக்குள் திகைப்பை ஏற்படுத்தியது. அவர் அதே திகைப்புடன், “கிருஷ்ணா, அது எப்படிச் சாத்தியமாகும்?” என்று கேட்கிறார். அதற்குக் கிருஷ்ணர் சொல்லும் பதில், நாம் ஆழ்ந்து உள்வாங்க வேண்டிய ஸத்யம்.

கிருஷ்ணர் சொல்கிறார்: “போர்க்களத்தில் உனக்கு உபதேசித்தபோது நான் மேலான விழிப்புணர்வாக, பரப்ரம்ம கிருஷ்ணராக இருந்தேன். இப்போது வஸுதேவரின் மகனான வாஸுதேவ கிருஷ்ணராக மட்டுமே இருக்கிறேன். உருவமற்ற பிரபஞ்ச சக்தி நிலையில் இருந்துகொண்டு நான் உனக்குச் சொல்லியவற்றை என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது,” என்றார்.

இருந்தாலும் கிருஷ்ணர் கருணை வடிவமாததால், அவர் மீண்டும் ஒருமுறை அர்ஜூனனுக்கு எல்லா ஸத்யங்களையும் விளக்குகிறார். அதுவே அனு கீதை என்ற பெயரால் அறியப்படுகிறது.

கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மையை, தெய்வீக உணர்வைப் பற்றிய இந்தக் கோட்பாட்டை அந்தக் கிருஷ்ண பக்தர்கள் புரிந்துகொண்டபோது, வெவ்வேறு வடிவங்களை நாம் வெவ்வேறு விதமாக வழிபட்டாலும், அதே தெய்வீகத் தன்மைதான் எல்லாக் கடவுள் வடிவங்களிலும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் அதனால் திருப்தி அடைந்தனர்.

“என் பக்தர் ஒருபோதும் அழிவதில்லை,” என்று சொல்லும் கிருஷ்ணர் பரப்ரம்ம க்ருஷ்ணரை. அந்த நிலையில் அவர் நம் ஒவ்வொருவரிடமும் குடி இருக்கிறார்.

நாம் இந்த ஸத்யத்தை உணர்ந்தோம் என்றால் நாம் அவரின் பக்தர் ஆகி விடுவோம். கிருஷ்ணராகவே மாறிவிடுவோம்; நாம் கிருஷ்ணரின் விழிப்புணர்வோடு ஒன்றாகி விடுவோம்; ஒருபோதும் அழிக்க முடியாத கிருஷ்ண உணர்வாகி விடுவோம்!