KAILASA Library/பகவத்கீதை/ஞானி பேசுவாரா?... இல்லை... பாடுவார்!Sign in
பகவத்கீதை

ஞானி பேசுவாரா?... இல்லை... பாடுவார்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு சீடர் ஜென் குருவிடம், "ஞானமடைந்த குரு பேசுவாரா?" என்று கேட்டார். "இல்லை, ஞானமடைந்த குரு ஒருபோதும் பேசமாட்டார். பேசத் தெரியாத ஒரே மனிதர் அவர்தான்," என்று குரு சொன்னார். அதற்குச் சீடர் கேட்டார், "அப்படியானால் ஞானமடைந்த குரு அமைதியாக இருப்பாரா?"

"இல்லை, ஞானமடைந்த குரு ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. அவர் அப்படி அமைதியாக இருந்தாரேயானால், அவர் ஞானமடைந்தவரே இல்லை. அவர் ஞானம் அடைந்திருக்கவில்லை," என்று குரு சொன்னார்.

சீடர் குழப்பமடைந்து, "அவர் பேசவும்
மாட்டார், அமைதியாக இருக்கவும் மாட்டார்
என்று நீங்கள் சொல்கிறீர்கள். பிறகு அவர்
என்னதான் செய்வார்?" என்று கேட்டார்.

"அவர் பாடுகிறார். அவருடைய இருப்புத்
தன்மை பாடுகிறது. அவர் பேசுவதும்
இல்லை. அமைதியாக இருப்பதும் இல்லை.
அவருடைய மொத்த இருப்புத் தன்மையுமே
பாடுகிறது," என்று குரு சொன்னார்.

இது ஏனென்றால் அனுபவத்தை நம்மால்
உரிமைகொண்டாடமுடியாது. அனுபவம்தான்
நம்மை உரிமையாக்கிக்கொள்ளும்.

அனுபவத்தை நம்மால்
உரிமை கொண்டாட
முடியாது.
அனுபவம்தான் நம்மை
உரிமையாக்கிக்
கொள்ளும்.

அனுபவம், நம்மை உரிமையாக்கிக்கொள்ளும்போது, நாம் எது செய்தாலும் சரி, அது ஒரு கவிதையாக இருக்கும். நம்மிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாக இருக்கும். நம்முடைய இருப்பு நிலையே மிகவும் லேசானதாகிவிடும். நாம் வெறுமனே மிதப்போம். நம்முடைய நடையே நடனமாக இருக்கும். நம்முடைய அங்க அசைவுகள் நளினத்தை வெளிப்படுத்தும். நம்முடைய வெளிப்பாடுகள் அனைத்துமே மனித இனத்திற்குச் செய்யும் ஒரு சேவையாக இருக்கும்.

"ஞானமடைந்த குரு பேசுவதும் இல்லை. அமைதியாக இருப்பதும் இல்லை. வெறுமனே பாடுகிறார்," என்று ஜென் குரு அழகாகச் சொல்கிறார். அதனால்தான் கீதை கவிதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீதை உரைநடையல்ல, அது கவிதை. உயர்ந்த ஸத்யங்களைத் தர்க்கத்திற்குட்பட்டு விளக்க முடியாது. அவற்றை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். உரைநடை தர்க்கத்திற்குட்பட்டது. அது குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டது. அது கடினமானது. ஆனால் கவிதை உணர்வுப்பூர்வமானது. அது அன்புமயமானது, அது பாய்ந்து பரவுகிறது.

கிருஷ்ணர் சொல்கிறார், "விழிப்புணர்வில் லயித்திருக்கும் ஒரு மனிதர் சிறந்தவராகிறார். இருப்பினும் யார் ஒருவர் விழிப்புணர்வை வெளிப்படுத்தி, அதைப் பகிர்ந்துகொண்டு, அதைத் தன்னிச்சையாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாரோ அவரும்கூட விழிப்புணர்வில் லயித்திருப்பவர் போன்று சிறந்தவராகிறார்.

சுருள் தாள்

ஸத்யம் என்னவென்றால், ஒரு மனிதர்
விழிப்புணர்வில் லயித்திருந்தாரேயானால்,
நிலைத்திருந்தாரேயானால், அவர் அதை
பரவச் செய்கிறார். மேலும் அவர் பாடுகிறார்
.

எவ்வளவு நாள் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்?

வாரணாசியில் வாழ்ந்த கிருஷ்ண பக்தரைப் பற்றிய ஒரு சின்ன கதையைச் சொல்கிறேன்.

அவர் கிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தர்.
அவரிடம் ஒரே ஒரு சின்ன பகவத் கீதை
புத்தகம் மட்டுமே இருந்தது. அவருடைய
ஒரே சொத்து அது மட்டும்தான்.

ஒவ்வொரு நாளும் காலையில் பகவத் கீதையை மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்துகொண்டே புனித கங்கையில் நீராடுவார். அவர் நாள் முழுதும் கிருஷ்ணரையே தியானித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். அவர் எப்போதும் கிருஷ்ணரின் பரவச உணர்விலேயே இருந்தார். அவர், கிருஷ்ணர் மீது தமக்கிருந்த பக்தியை வெளிப்படுத்திக்கொண்டே யிருந்தார்.

ஆம், நாம் இத்தகைய ஆத்மாக்களை இந்தியாவில் மட்டும்தான் காண முடியும். அந்தச் சமுதாயம் பரவச நிலையில் அமர்ந்திருப்பவர்களை தொந்தரவு செய்வதில்லை. அது மட்டுமல்ல, அந்தச் சமுதாயமுமே அவர்களைக் கவனித்துக்கொள்ளும். ஆனால் பிற நாடுகளில், அந்த

மாதிரி அமர்ந்திருக்கும் நபர்களை வீடு
இல்லாதவர்கள் என்று சொல்லி, அந்த
நாட்டுக்காவலர்களும் மக்களும் அவர்களை
வேட்டையாடுவதுபோல் தேடிப் பிடித்து,
ஏதாவது ஒரு புகலிடத்தில் அடைத்து
அவமரியாதை செய்வார்கள்.

இந்தியக் கலாச்சாரம் அழகானது. நாம் நம்மை
மறந்து பரவச நிலையில் அமரும்போது, நாம்
மதிக்கப்படுகிறோம், வழிபடப்படுகிறோம்.

இந்தக் கதையில் வரும் பக்தர், எப்போதும் தம்மை மறந்த பரவச நிலையில் கிருஷ்ணரின் நாமத்தை பாடிக்கொண்டும், கிருஷ்ணரைத் த்யானித்துக்கொண்டும், கிருஷ்ணரையே ஸ்மரணம் செய்துகொண்டும், கிருஷ்ணனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டும் இருப்பார். அவர் கிருஷ்ண விழிப்புணர்விலேயே மெய் மறந்திருந்தார்.

ஒரு நாள் பிச்சைக்காரர் ஒருவர் வந்து, “ஸ்வாமி, தயவுசெய்து எனக்கு ஏதாவது கொடுங்கள். நான் கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை,” என்று சொன்னார். இது பக்தரை மிகவும் சங்கடப்படுத்தியது. அவரே ஒரு பிச்சைக்காரர்தான் ; அவரிடம் கீதையைத் தவிர, வேறு எதுவும் இல்லை.

யாராவது அவருக்கு உணவு வழங்கினால், உண்பார். இல்லையென்றால் கிருஷ்ணனின் நாமத்தை பாடிக் கொண்டிருப்பார். அவருடைய ஒரே சொத்து கீதை மட்டுமே.

மூன்று நாட்களாக உணவு சாப்பிடாத ஒரு பிச்சைக்காரர் வந்து உணவு கேட்டபொழுது, பக்தர்வேதனைப்பட்டார். அவர் தம்மிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். பல வருடங்களாக அவர் பாதுகாப்பாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கும் பகவத் கீதைதான் இருந்தது. கடவுளுக்குச் சமமாகக் கருதிய அந்த பகவத் கீதைதான் அவருடைய ஒரே சொத்தாக இருந்தது. அதுதான் அவருக்கு எல்லாமுமாக இருந்தது.

உடனே அவர் தைரியத்தைத் திரட்டி, கீதையை கையில் எடுத்துக்கொண்டு, அந்தப் பிச்சைக்காரரைப் பார்த்துச் சொன்னார், “என்னிடம் எதுவும் இல்லை. இந்தப் புத்தகம் மட்டும்தான் இருக்கிறது. இருந்தாலும் நீ இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நகரத்திற்குச் சென்று, மக்களிடம் ‘இது

என்னுடைய உடைமை' என்று சொல்லி
ஏலத்திற்கு விடு. கண்டிப்பாக யாராவது
இதை ஏலத்தில் வாங்குவார்கள்.

ஏனென்றால் பலரும் என்னை மதிக்கிறார்கள். என்னிடம் கொஞ்சம் பக்தியும் கொண்டுள்ளார்கள். அதனால் கிருஷ்ணனின் ஆசீர்வாதம் இருக்கிறது. கடை வீதிக்குச் சென்று இந்தப் புத்தகத்தை ஏலத்தில் விற்று, கிடைக்கிற பணத்தில் வயிறாறச் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இரு,'' என்றார்.

அந்தப் பிச்சைக்காரர் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அடுத்த நாள் காலையில், கீதையைப் பாராயணம் செய்யும் நேரம் வந்தவுடன் அந்த பக்தர், “ஹே கிருஷ்ணா! உன்னுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்காக உன்னுடைய வார்த்தைகளையே கொடுத்துவிட்டேன். நீ என்ன சொன்னாய்? 'பக்தியை வெளிப்படுத்த வேண்டும், அன்பை வெளிப்படுத்த வேண்டும், சேவையை வெளிப்படுத்த வேண்டும்' என்று சொன்னாய் அல்லவா, அந்த 'உன்னுடைய வார்த்தைகளைக் காப்பாற்றுவதற்காக உன்னுடைய வார்த்தைகளையே கொடுத்துவிட்டேன்,'' என்றார்.

அந்த மனிதர் ஓர் உண்மையான பக்தர். அவர் உண்மையை உணர்ந்திருந்தார். அதை அனுபவித்திருந்தார். அதனால் அவரால் அதை வெளிப்படுத்த முடிந்தது.

அவர், கிருஷ்ணர் மீது தாம் கொண்டிருந்த பக்தியையே, அன்பாகவும் சேவையாகவும் தம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கும் கொடுத்தார்.

கிருஷ்ணரின் புத்தகத்தை வைத்திருப்பதைவிட அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. உண்மையில் நாம், கிருஷ்ணனின் வார்த்தைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தோமேயானால், நமக்கு அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அனுபவம் கிடைத்துவிடும். நாம் அவருடைய வார்த்தைகளை நம்மைச் சுற்றியும் பரப்ப ஆரம்பித்து விடுவோம்.

Peacock Feather

உங்களுக்கு மரணம் என்பதே இல்லை

கேள்வி: நான், மரணத்தின் வாசல்வரை சென்று, அந்த அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றியும் மற்றும் உடலைத் தாண்டிய அனுபவம் பெற்ற மக்களைப் பற்றியும் படித்தும் கேட்டும் இருக்கிறேன். அந்த மக்கள் எல்லோரும் அந்த அனுபவங்கள் மிகவும் அழகாக இருந்ததாக விவரித்திருக்கிறார்கள். ஆனால் ஆயிரம் தேள்கள் ஒன்றாகக் கொட்டும்போது ஏற்படும் வலியைப் போன்றே, மரணத்தின்போது ஏற்படும் வலியும் இருக்கும் என்று நீங்கள் அதை விவரித்துள்ளீர்களே, ஏன்?

நான் சொன்னது சாதாரண மனிதரின் மரணத்தைப் பற்றி என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். "நான், மரணத்தின் வாசல்வரை சென்று அந்த அனுபவத்தைப் பெற்று வந்த மக்களைப் பற்றிப் படித்தும், அறிந்தும் உள்ளேன்' என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

நான் படித்திருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்வதிலிருந்து அவர்களின் அனுபவத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

avர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அதனுடைய பொருள் என்னவென்றால், அவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் த்யானம் செய்பவர்களாகவோ அல்லது ஆன்மீக வாதிகளாகவோ இருப்பார்கள் என்பது புரிகிறது. அதனால்தான் அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள், பிறகு திரும்பி வந்துள்ளார்கள்.

நான் இந்த உலகத்தை விட்டு போவதைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். நீங்கள் மரண அனுபவத்தைப் பெற்று திரும்பி வருவதைப் பற்றி பேசுகிறீர்கள்.

மரண வேதனையிலிருந்து தப்ப ஒரே வழி, வாழ்நாளில் ஒருமுறையாவது ஸத்யத்தின் ஒரு கண நேர தரிசனத்தைப் பெறுவதுதான்.

மரண அனுபவத்தைப் பெற்று திரும்பி வருதல் என்றால், அந்த அனுபவம் ஆன்மீக அனுபவம் ஆகும். அது மரண அனுபவம் அல்ல. நான் சொன்னது இந்த உடளவிலான மரணத்தைப் பற்றித்தானே தவிர, விழிப்புணர்வில் ஏற்படும் உருமாற்றத்தை அல்ல.

ரமண மஹரிஷி, மிகப்பெரிய ஞானி. அவர் விழிப்புணர்வுடன்கூடிய உடலைத் தாண்டிய அனுபவத்தைப் பெற்றார். ஆனால் நான், சாதாரண மனிதரின் உண்மையான மரணத்தைப் பற்றி, சாதாரண மனிதரின் உடலளவு மரணத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

என்னுடைய இந்த ஸத்ய அனுபவத்தைப் பொறுத்தவரை மரணத்தின்போது, ஆத்மாவானது ஏழு சக்தி அடுக்குகளைத் தாண்டிச் செல்கிறது. அப்பொழுது, ஒரே ஒரு விஷயம்கூட விடுபடாமல், அவர் வாழ்ந்த மொத்த வாழ்க்கையுமே மீண்டும் அவருக்குள் வேகவேகமாக முன்னோக்கி ஓடுகிறது.

வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருந்த துன்பங்கள், இன்பங்கள், குற்ற உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் எல்லாவித உணர்ச்சிகளையும் மீண்டும் அந்த ஆத்மா வாழ்கிறது. அப்படித்தான் நீங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் கடக்கிறீர்கள். நீங்கள் கடக்கும் அந்தத் தருணங்களின் வலிதான், ஆயிரம் தேள்கள் சேர்ந்து கொட்டினால் போன்று இருக்கும்.

உடலைத் தலையிலிருந்து கால்விரல்வரை கிழித்துப் பிரித்ததுபோல் இருக்கும். இந்த வேதனையிலிருந்து தப்ப ஒரே வழி, வாழ்நாளில் ஒருமுறையாவது ஸத்யத்தின் ஒரு கண நேர தரிசனத்தைப் பெறுவதுதான். அந்த தரிசனத்தைப் பெறுவது த்யானத்தினால் மட்டும்தான் சாத்தியம்.

நித்யானந்த ஸ்புரண நிகழ்ச்சியில் நான் இதைத்தான் செய்கிறேன். மரணத்தின்போது உங்கள் உயிர் பயணிக்கக்கூடிய பாதையில் அழைத்துச் சென்று, படிப்படியாக உங்கள் ஸம்ஸ்காரங்களை (எண்ணப் பதிவுகளை) எரிக்க வேண்டுமென்பதற்காக, அந்த எண்ணப் பதிவுகளின் மீது உங்களைத் தியானிக்கச் செய்வேன். இது, நீங்கள் வலியில்லா மரணத்தை அடைவதற்கும், பிறவா நிலையை அடைவதற்கும் உரிய சாத்தியத்தை உங்களுக்குத் திறந்து வைக்கிறது.

hands playing a flute