பக்தி செய்ய வேண்டுமா? முதலில் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
யார் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பக்தியாக வெளிப்படுத்துகிறாரோ, அவர் உலகத்தைப் பார்க்கிறார்.
உபாஸனா என்ற வார்த்தையைப் பல விதமாக மொழி பெயர்க்கலாம்.
எல்லோரிடமும் நாம் தெய்வீகத்தைப் பார்க்கும்பொழுது, ஆன்மீக அனுபவத்தின் ஸத்யத்தை நாம் வெளிப்படுத்தும்போது, நாம் செய்கிற எல்லாச் செயல்களும் உபாஸனாதான்.

நாம் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடத்தில் இருக்கும் தெய்வீகத்தைக் காண முடியாதபோது, விக்ரஹத்திலோ அல்லது குருவிடத்திலோ இருக்கும் தெய்வீகத்தையும் நம்மால் காண முடியாது.
வாழும் உயிர்களிடத்தில் நாம்
தெய்வீகத்தைக் காணவில்லையானால், நாம்
கடவுளிடத்திலோ அல்லது குருவிடத்திலோ
இருக்கும் தெய்வீகத்தையும் காண முடியாது.
மாபெரும் குருவான ராமானுஜர் மட்டும்
இல்லையென்றால், தென்னிந்தியாவே
தன்னுடைய ஆன்மீகத்தை முற்றிலுமாகவே
இழந்திருக்கும்.
சங்கரர் தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும்கூட, அவர் வட இந்தியாவிலேயே தங்கி விட்டார். அவர் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை வட இந்தியாவிலேயே கழித்தார். ராமானுஜரால்தான் தென்னிந்தியாவில் பக்தியும் ஆன்மீகமும் தழைத்தது.
தமது அந்திம காலம்வரை, ராமானுஜர் தென்னிந்தியாவிலேயே வாழ்ந்தார். அது மட்டும் அல்லாமல் சங்கரர் 32 வயது வரைதான் வாழ்ந்தார். ஆனால் ராமானுஜர் இந்தப் பூமியில் வெகுகாலம்வரை வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஆன்மீகத்திலும் த்யானத்திலும் ஈடுபடுத்தினார்.
ஒரு இளைஞன் இராமானுஜரிடம், "குருவே தயவுசெய்து நான் பக்தியை அடைவது எப்படி, கடவுளை அடைவது எப்படி, முழு ஈடுபாட்டை அடைவது எப்படி? என்பதைச் சொல்லுங்கள்," என்று கேட்டார்.
இராமானுஜர் அந்த இளைஞரிடம், "நீ இதற்கு முன் உன் வாழ்க்கையில் யாரையாவது நேசித்திருக்கிறாயா?" என்று கேட்டார்.
அந்த இளைஞர் அதிர்ந்து விட்டார். "நான் ஒரு ப்ரம்மசாரி, திருமணமாகாதவன், என்னைப் பார்த்து நீங்கள் எப்படி இந்தக் கேள்வியைக் கேட்கலாம்? நான் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வந்தேன். ஆனால் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்களே," என்று கேட்டார்.
"முதலில் போய் யாரையாவது நேசி. அப்படி யாரையாவது நேசிக்கும்போது, எப்படி உணர்கிறாய் என்பதைக் கவனி. பிறகு திரும்பி வா! நான் உனக்குக் கடவுளைப் பற்றிக் கற்றுத் தருகிறேன். நான் உனக்கு பக்தியைப் பற்றி, தெய்வீக அன்பைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறேன்," என்று இராமானுஜர் சொன்னார்.
அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். அவரால் இராமானுஜரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கண்களால் காண முடிகிற நபரையே நம்மால் நேசிக்க முடியவில்லை என்றால், நாம் இதுவரை காணாத ஒரு பொருளை எப்படி நேசிக்க முடியும்?
தினமும் நாம் காணும் மனிதர்களையே நம்மால் நேசிக்க முடியவில்லையென்றால், நாம் இதுவரை காணாத கடவுளின் உருவத்தை மட்டும் எப்படி நேசிக்க முடியும்?
வாழும் உயிர்களிடத்தில்
நாம் தெய்வீகத்தைக்
காணவில்லையானால்,
நாம் கடவுளிடத்திலோ
அல்லது
குருவிடத்திலோ இருக்கும்
தெய்வீகத்தையும்
காண முடியாது.
இராமானுஜர் சொல்வது முற்றிலும்
உண்மை. மேலும், நாம் இருக்கும் இடத்தில்
நம்மைச் சுற்றி இருப்பவர்களிடத்தில்
அன்பை வெளிப்படுத்தவில்லையென்றால்,
நம்மால் இந்த உலகத்தை நேசிக்க முடியாது
என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்வதுண்டு, உலகத்தை நேசிப்பது மிகவும் எளிது. உங்கள் மனைவியை நேசிப்பதுதான் கஷ்டமானது. உலகத்தை நேசிப்பது எளிதான செயல். ஏனென்றால் அதை நிரூபிப்பதற்கு நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை!
அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்றுதான் "நான் உலகத்தை நேசிக்கிறேன், நான் உலகத்தை நேசிக்கிறேன்," என்று சொல்வது மட்டும்தான்.
ஆனால் உங்களுடைய மனைவியை நேசிக்கும்பொழுது உங்களுடைய நடத்தையை மாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. நம்முடைய மனத்தை மாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. நம்முடைய வார்த்தைகளை மாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. நாம் எதையாவது செய்தே ஆக வேண்டியிருக்கிறது. அங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.
வாழ்க்கைத் துணையை ஒரு உடைமை ஆக்காதீர்கள்.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் யாருடன் சேர்ந்து வாழ்கிறோமோ, அவரிடம் உண்மையான அன்பைச் செலுத்த வேண்டுமானால், வளர்ந்துகொண்டே செல்லும் வெறுப்பை அகற்றி மனப்பூர்வமான நட்பை வளர்க்க வேண்டுமானால், நாம் முதலில் 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்தை விடவேண்டும்.
நம்முடைய வாழ்க்கைத்துணையை ஒரு உடைமைப் பொருளாகக் கருதும்வரையில், நம்முடைய மனத்திலும் இதயத்திலும் எழுவது வன்முறையாகத்தான் இருக்குமே தவிர, அது அன்பாக இருக்காது.
தினமும் நாம் காணும்
மனிதர்களையே நம்மால்
நேசிக்க
முடியவில்லையென்றால்,
நாம் இதுவரை காணாத
கடவுளின்
உருவத்தை மட்டும்
எப்படி நேசிக்க முடியும்?
நாம் எப்போதும் நம்முடைய துணையை
நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க
வேண்டும் என்றும், நாம்தான் அவருடைய
உரிமையாளர் என்பதை நிரூபிக்க வேண்டும்
என்றும் எண்ணுகிறோம்.
உண்மையான அன்பின் அர்த்தத்தைப்
புரிந்துகொள்ள வேண்டுமானாலும்கூட,
நாம்தான் உரிமையாளர் என்ற உணர்வையே
விட்டுவிட வேண்டும்.
லெபனான் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதியும் கவிஞருமான கலில் ஜிப்ரான் (Khalil Gibran) The Prophet என்ற தம்முடைய புத்தகத்தில், அன்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
உங்களுடைய உணவை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால் அந்த உணவிலிருந்தே எடுத்து நீங்கள் சாப்பிடாதீர்கள்.
நீங்கள் பருகுவதை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால் அந்தக் கோப்பையிலிருந்தே எடுத்துப் பருகாதீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது.
நம்மில் பலர், அந்நியரிடம் சொல்லத்
துணியாத வார்த்தைகளைத் தங்களுடைய
துணையிடம் சொல்வதோடு மட்டுமல்லாமல்,
அப்படிச் சொல்வதற்குக் தங்களுக்கு
உரிமையுள்ளது என்றும் நினைக்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கைத் துணையிடம் அப்படி
நடந்துகொள்வதற்கு நமக்கு உரிமையில்லை
என்று யாராவது நம்மிடம் சொன்னால், நாம்
மிகவும் வருந்துகிறோம்.
சமுதாயத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதையை, நம்முடைய வாழ்க்கைத் துணைக்கு கொடுக்க வேண்டியது இல்லை என்று எண்ணுகிறோம். ஏனென்றால் நாம் அவரை நேசிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் பொதுவாக கணவன் மனைவியிடையே தினமும் நிகழும் உரையாடல்கள் பெரும்பாலும் இந்தக் காலத்து குழந்தைகளால் பொறுத்துக்கொள்ள முடியாததாகவே இருக்கின்றன.
குறைந்தது 50% நேரத்திலாவது, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் பேசும் வார்த்தைகள், உங்களுடைய நிபந்தனையற்ற அன்பிலிருந்துதான் வெளிப்படுகின்றன என்று உங்களில் எத்தனை பேர் உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்ல முடியும்? எல்லா நேரங்களிலும் வேண்டாம், குறைந்தது 50% நேரத்திலாவது இதை நீங்கள் செய்கிறீர்களா?
புரிந்துகொள்ளுங்கள், உங்கள் மனைவியை
நேசிக்கும்போது மட்டுமே, நீங்கள் இந்த
உலகை நேசிப்பது எப்படி என்பதையே
புரிந்துக்கொள்ளத் தொடங்குகிறீர்கள்.
அப்போது மட்டுமே உங்களால் அதைச்
செயற்படுத்த முடியும்.
திருமணச் சடங்குகளின் மொத்தச் சாரமும் இதுதான்.
இதனால்தான் திருமணம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த உறவை வளர்ப்பதின் மூலம், இனிக் காலம் முழுவதும் சேர்ந்து வாழப்போகும் அந்த இரு மனிதர்களுக்கிடையே நிலவும் அன்பை வளர்ப்பதின் மூலம், எது ஸத்யமோ அந்த அன்பு எனும் அனுபவத்தை வளர்த்துக்கொள்வதற்கான எல்லாச் சாத்தியக்கூறுகளும் இங்கு இருக்கின்றன.
பிறகு இவை, அதே ஸத்ய அனுபவத்தை அன்பாக மனித இனத்திற்கே வெளிப்படுத்தும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
விழிப்புணர்வு நிலையிலேயே நிலைத்திருப்பதும் அல்லது அந்த விழிப்புணர்வை இந்தப் பிரபஞ்சத்தை நோக்கி வெளிப்படுத்துவதும் ஒன்றே.
ஒரு மனிதர் ஒன்றியிருக்கும்போது, ஒரு மனிதர் லயித்திருக்கும்போது அவர் தன்னிச்சையாகவே அதை வெளிப்படுத்துவார். அன்பு நிகழவில்லையென்றால், வெளிப்படுதல் நிகழவில்லையென்றால், அந்த மனிதர் அனுபவப்படவில்லை.
உண்மையான அனுபவம் நிகழும்போது அது தானாகவே வெளிப்படும். அனுபவம் என்பது ஒருவர் தம்முடைய அலமாரியில் வைத்து உரிமை கொண்டாடக்கூடிய ஒரு உடைமைப் பொருள் இல்லை. அனுபவம்தான் நம்மை உடைமையாக்கிக்கொண்டு, நம் மூலமாக வெளிப்படும்.
