KAILASA Library/பகவத்கீதை/உங்கள் மனத்தை என்னிடம் வையுங்கள்Sign in
பகவத்கீதை

உங்கள் மனத்தை என்னிடம் வையுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna playing flute

12.2. உங்கள் மனத்தை என் மீது நிலைநிறுத்தியவர்களாக யார் இருக்கிறார்களோ, மேலான ஶ்ரத்தையுடன் என்னை வழிபடுவதிலேயே உறுதியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்களை யோகத்தில் பூரணத்தன்மை அடைந்தவர்களாகவும், என்னுள்ஐக்கியமாவதற்குத்தயார்நிலையில்இருப்பவர்களாகவும் நான் கருதுகிறேன்.

அனுபவம் அடைந்தபின் போதியுங்கள்

பகவான் சொல்கிறார், "பக்திப்பூர்வமான நன்றியுணர்வையே வெளிப்படுத்திக் கொண்டு, தங்களுடைய விழிப்புணர்வில் நிலை கொண்டிருப்பவர்கள், எப்போதும் என்னிடத்திலேயே தங்கள் கவனத்தை வைத்தவர்களாகிறார்கள்."

பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தின்போது தாங்கள் அடைந்த அந்த அனுபவத்தின் மீது, புலனுணர்வுகளைக் கடந்த அந்த ஸத்யமான அனுபவத்தின் மீது தங்களுடைய முழு மனத்தையும் யாரெல்லாம் ஒருமுகப்படுத்துகிறார்களோ அவர்கள் எப்போதும் என்னிடத்திலேயே தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களாகிறார்கள். இருவருமே உச்சநிலையை, இறுதி நிலையை அடைந்தவர்கள்தான். இருவருமே என்னிடத்தில் ஒன்றியிருக்கிறார்கள்.

ஸம்ஸ்க்ரு'தம் ஓர் அழகிய மொழி. நாம் எந்த வார்த்தையிலிருந்தும் எந்த அர்த்தத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம். அதனால்தான், கீதையின் மீது ஆயிரக்கணக்கான விளக்க உரைகள் சாத்தியமாகின. இருந்தும் கீதை இன்னும் புதியதாகவே இருக்கிறது. வேறு எந்தப் புத்தகமும் இந்த அளவிற்கு குருமார்களால் உரை எழுதப்பட்டதில்லை. ஒவ்வொரு குருவும் கீதைக்குத் தம்முடைய சொந்த கருத்தை அளிக்கிறார்.

நான் மீண்டும் தெளிவாக விளக்க விரும்புவது என்னவென்றால், ஞான அனுபவம் அடையாத மனிதர் ஒருவர் கீதையை விளக்கவும, பிரசங்கம் செய்யவும் தொடங்கினாரேயானால் இயற்கையாகவே அவர் தம்மையும் கஷ்டப்படுத்திக்கொண்டு, பிறருக்கும் கஷ்டத்தை உருவாக்கி விடுகிறார். ஒரு குருடர் மற்றொரு குருடருக்கு வழிகாட்டினாரேயானால், என்ன நடக்குமோ அதுவேதான் இங்கேயும் நடக்கிறது.

எந்தவித ஆன்மீக அனுபவமும் இல்லாத ஒரு
மனிதர் கீதைக்கு உரை எழுதினாலோ அல்லது
அதைப் பற்றி பேசினாலோ இயற்கையாகவே
அவர் மூல வாக்கியங்களை 'வதை' மட்டுமே
செய்வார்.

யார் ஒருவர் உண்மையான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றவரோ, யார் ஒருவர் தம் மனத்திற்குள் ஓடிக் கொண்டிருக்கும் 'உள்

உளற'லில் இருந்து விடுபட்டவரோ, அவரே
தமக்கும் பிறருக்கும் உண்மையாக இருப்பார்.
அப்போது மட்டுமே ஒரு மனிதர், தம்மைப்
பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற
எண்ணமில்லாமல் தம்மைத் தெளிவாகவும்
நேர்மையாகவும் பிறருக்கு வெளிப்படுத்த
முடியும்.

அதுவரை அங்கு 'உள் உளறல்' என்பது இருந்து
கொண்டே இருக்கும் ; உங்கள் வார்த்தைகளை
வடிகட்டுவதற்கான முயற்சியும்
உங்களுக்குள் நடந்துகொண்டே இருக்கும்.
அங்கு ஒத்திகை பார்ப்பதற்கான முயற்சியும்
இருக்கும்.

> தம் மனத்திற்குள்
> ஓடிக் கொண்டிருக்கும்
> 'உள் உளற'லில்
> இருந்து
> விடுபட்டவரோ, அவரே
> தமக்கும் பிறருக்கும்
> உண்மையாக
> இருப்பார்.

நமக்குள் நடக்கும் உள்பேச்சின் ஸத்யங்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான தைரியம் நம்மிடம் இல்லை. நாம் வெளிப்படுத்தும் விஷயங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்று பயப்படுவதால், அதை வடிகட்டிவிட்டு, அதற்குப் பதிலாக சமுதாயம் எதை ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறோமோ அந்தப் பொய்களை மட்டும் வெளிப்படுத்துகிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை பொய்களாலேயே வடிவமைக்கிறோம்.

இந்தச் சின்ன உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நான் என்னுடைய அனுபவத்தின் சாரத்தை ஒரு படமாக வரைந்து உங்களுக்கு விளக்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில நாள்கள் கழித்து நீங்கள் இந்த நிகழ்ச்சியின் குறுந்தகட்டினை (CD) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத உங்களுடைய நண்பர் ஒருவருக்கு கொடுக்கிறீர்கள்.

நீங்கள் இன்னும் அனுபவத்தைப் பெறவில்லை. நீங்கள் என்னுடைய அனுபவத்தை வெறுமனே மாற்றம் செய்கிறீர்கள். இதை உங்களால் எந்த அளவிற்கு நன்றாக விளக்க முடியும்? உங்கள் விளக்கத்தைக் கேட்கும் அந்த நபர் எந்த அளவிற்கு அதைக் கிரகிக்க முடியும்? நிச்சயமாக அவரால் அதிகம் கிரகித்துக்கொள்ள முடியாது.

நான் வரைந்து காட்டிய படத்தில் இருக்கும் பல விஷயங்களை அவர் இழக்கிறார். என்னுடைய உடல்மொழியை முற்றிலுமாக அவர் இழக்கிறார். நீங்கள் அனுபவம் அடைந்தவராக இல்லாததால், உங்களாலும் அதை மிகச் சரியாக விளக்க முடியாது.

நான் படத்தின் மூலமாக விளக்கிக்
கொண்டிருக்கிறேன். நீங்கள் இந்த இடத்தில்
இருப்பதால் என்னைப் பார்த்தும், நான்
சொல்வதை நேரடியாகக் கேட்டும் நீங்கள்
புரிந்துகொள்கிறீர்கள். அப்போதும்கூட
நீங்கள் ஸத்யத்தைக் கிரகித்து அதைப்
புரிந்துகொள்வது என்பது கொஞ்சம்
கடினமான விஷயம்தான். இப்படியிருக்க,
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத உங்கள்
நண்பருக்கு நீங்கள் நிகழ்ச்சியின்
குறுந்தகட்டினை மட்டும் கொடுத்தால், அதை
அவர் எந்த அளவிற்குப் புரிந்துகொள்வார்?

> ஸத்ய அனுபவத்தைத்
> தாமே அனுபூதியாக
> அனுபவித்தறியாத
> ஒரு மனிதர்
> வெளிப்படுத்துகிற எதையும்
> படிக்கவும் கேட்கவும்
> வேண்டாம்
> - விவேகானந்தர்

அதேபோல், அவரும் அந்தக் குறுந்தகட்டின் மூலம் ஏதோ கொஞ்சம் புரிந்துகொள்ள முயற்சிசெய்து, இந்த விஷயத்தைப் பற்றி அவர் இன்னொருவருக்கு வகுப்பு எடுத்தால், அது எந்த அளவிற்குச் சரியாக இருக்கும்?

சொற்பொழிவை நேரடியாகக் கேட்காத ஒரு மனிதர் வெறும் அந்தக் குறுந்தகட்டினை மட்டுமே வைத்துக்கொண்டு அல்லது அந்தச் சொற்பொழிவுடன் புத்தகப் பிரதியை மட்டுமே வைத்துக்கொண்டு அதிகமாகப் புரிந்துகொள்ள முடியாது.

அதுபோல பகவத் கீதையும், ஒரு ஒலிப்பதிவின் எழுத்துப் பிரதிதான்.

ஒருவேளை, பகவத் கீதையின் ஒலிப்பதிவு குறுந்தகடு கிடைத்திருந்தால்கூட வார்த்தை உச்சரிப்பின் ஏற்ற இறக்கத்தை வைத்து கொஞ்சம் அதிகமாகப் புரிந்துகொள்வீர்கள். ஆனால் அது ஒரு ஒலிப்பதிவின் வெறும் எழுத்துப் பிரதியே! அதில் உச்சரிப்பின் ஏற்ற இறக்கம் இல்லை. நீங்கள் அதனை எந்த அளவிற்கு மொழிபெயர்க்க முடியும் அல்லது அதற்கு அர்த்தம் சொல்ல முடியும்?

அதனால்தான் ஸத்ய அனுபவத்தைத் தாமே அனுபூதியாக அனுபவித்தறியாத ஒரு மனிதர் வெளிப்படுத்துகிற எதையும் படிக்கவும் கேட்கவும் வேண்டாம் என்று விவேகானந்தர் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். மிகவும் முக்கியமாக, "யார் பேசுகிறார்கள் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள். அவர் என்ன பேசுகிறார் என்பதை விட!" என்று சொல்கிறார். அவர் தனி மனிதரின் அனுபவத்தை வலியுறுத்துகிறார்.

Bookshelves

“இந்த உலகில் உள்ள புத்தக
நிலையங்களில் அடுக்கி
வைக்கப்பட்டிருக்கும் எல்லாப்
புத்தகங்களையும் நீங்கள் படித்தாலும்
சரி, அவற்றால் உங்களை ஸத்யத்திற்கு
அழைத்து செல்ல முடியாது.
ஒருமுறை நீங்கள் ஸத்யத்தை உணர்ந்து
விட்டால் போதும், அதற்குப் பிறகு
உங்களுக்குப் புத்தகத்தின் அவசியம்
இருக்காது,” என்று விவேகானந்தர்
மேலும் சொல்கிறார்.

பட்டறிவின் மூலம் புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவமாகாது.

புரிந்துகொள்ளுதல் என்பது மனத்தினுடைய
ஒரு செயல், அவ்வளவுதான். அது
நம்முடைய அஹங்காரத்தின் ஒரு
உபபொருளே. நம்முடைய மனம் மற்றும்
அஹங்காரம் என்னும் வடிகட்டிகள்தான்,
நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு
வண்ணம் தீட்டுகின்றன.

இருப்புத் தன்மையால் புரிந்துகொள்ளப்படும் ஸத்யமே ஆன்மீக அனுபவம். ஆன்மீக அனுபவம் என்பது மனத்தையும் அஹங்காரத்தையும் கடந்தது. அது புனிதமானது, நிரந்தரமானது, வண்ணம் எதுவும் பூசப்படாதது.

பிறருடைய அனுபவத்தைப் புரிந்து கொண்டதைப் பற்றி விவரிக்கும் ஒருவர், நடந்த நிகழ்ச்சியை அல்லது கருத்தை வேண்டுமானால் மிகவும் நன்றாக விளக்குவாரேயொழிய, அவரால் ஒருபோதும் ஸத்யத்தை விளக்க முடியாது.

ஸத்யம் விளக்கப்பட வேண்டுமானால் அது நமக்குள் அனுபூதியாகியிருக்க வேண்டும்.

இங்கு _பகவான்_ சொல்கிறார்.

மய்யாவேச்ய மனோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே |
ச்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: ||