KAILASA Library/பகவத்கீதை/யார் முழுமையானவர்?Sign in
பகவத்கீதை

யார் முழுமையானவர்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

12.1 அர்ஜுனன் கேட்கிறார், "உங்களுடைய வடிவத்தை ச்ரத்தையுடன் வழிபடுபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத உங்களுடைய அருவ வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா?"

பிரபஞ்ச சக்தியினால் தூண்டப்பட்டு, கண்களைத் திறப்பவர்கள்

அர்ஜுனன் இப்போது முற்றிலும் வேறுபட்ட நிலையிலிருந்து பேசுகிறார். இப்போது அர்ஜுனனின் போக்கு புதிதாக இருக்கிறது.

அவர் கேட்கிறார், "இந்த இருவித மனிதர்களில் யார் மேலானவர் என்று கருதப்படுகிறது. உங்களை பக்தியுடன் வழிபடுவதிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மேலானவர்களா அல்லது ப்ரஹ்மத்துடன், மனத்திற்குப் புலப்படாத, வடிவமில்லாத அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் தங்களை இணைத்துக்கொள்கிறவர்கள் மேலானவர்களா?"

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனன் தமக்காக இதைக் கேட்கவில்லை. இங்கிருந்து, இந்த உரையாடல் மிகவும் எளிமையானதொரு விவாதமாக மாறிவிடுகிறது. இது எதிர்கால சந்ததியினர்களுக்காக உண்மைகளைப் பதிவு செய்யும் ஒரு முயற்சி போன்றே பெரும்பாலும் இருக்கிறது.

இங்கிருந்து கேட்கப்படும் கேள்விகள் சந்தேகங்களைப் போக்குவதற்காகவோ அல்லது விசாரணை செய்வதற்காகவோ எழுப்பப்படவில்லை. அர்ஜுனன் மொத்த விஷயத்தையும் உரையாடல் வடிவமாகப் பதிவு செய்யவே முயற்சிசெய்கிறார்.

அப்படியென்றால் மட்டுமே அவை ஒரு உபயோகமான மேற்கோள்களாக, ஒப்பீடு செய்துகொள்ளத் தக்க வகையில் அமையும் குறிப்புகளாக எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்படும்.

Nirvikalpa Samadhi text note

மனித குலத்தின் மீது அர்ஜுனன்
கொண்டுள்ள அன்பும், அவருடைய தெய்வீக
அனுபவத்தின் வெளிப்பாடும் சேர்ந்துதான்,
மனித குலத்திற்கே துக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் இந்தக் கேள்விகளுக்கான
பதில்களைத் தேடவும், அதற்குரிய பதில்களை
அந்த மேலான இறைவனிடமிருந்தே
பெற்று பதிவுசெய்து வைக்கவும் அவரைத்
தூண்டிவிடும் தூண்டுகோள்களாக
இருக்கின்றன.

அர்ஜூனன் கேட்கிறார், "உன்னுள் யார்
முழுமையாக நிலைபெற்று இருக்கிறார்கள்?
உன்னுடைய பக்தர்களா அல்லது
ஞானமடைந்தவர்களா?"

உள்ளுக்குள்
பொங்கிக்கொண்டே
இருக்கும் ஆனந்தத்திற்கு
எந்தவொரு
புலனின்பமும் ஈடாக
முடியாது.

தங்களைச் சமயவாதிகள் என்று
சொல்லிக்கொள்ளும் மக்கள், உருவ
வழிபாடு சிறந்ததா அல்லது உருவமற்ற
வழிபாடு சிறந்ததா என்பது பற்றி அர்ஜூனன்
கேட்கும் கேள்வியாக அமைந்திருக்கும்
இந்த ஸ்லோகத்திற்குத் தவறான விளக்கத்தைக்
கொடுப்பதன் மூலம் மற்றவர்களைக்
குழப்புகிறார்கள்.

சரி, தவறு பற்றிய ஒரு தெளிவு இல்லாமல் இவர்களே அதைப் பற்றிய குழப்பத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய தவறான புரிதல் மற்றும் பட்டறிவு அகந்தை இவற்றைக்கொண்டு மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், அர்ஜூனன் இதைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அவருடைய கேள்விக்கான அர்த்தமே வேறு. நாம் கிருஷ்ணரின் பதில்களை ஆழ்ந்து பார்த்தோமானால் நமக்கு இது விளங்கும்.

அர்ஜூனன் கேட்கிறார், "தெய்வீக விழிப்புணர்வின் அனுபவத்திலேயே நிலைத்திருந்து, அந்த அனுபவத்திலிருந்து பொங்கிக் கொண்டிருக்கும் முடிவில்லாத ஆனந்தத்தை வெறுமனே அனுபவித்துக் கொண்டிருப்பது நல்லதா?

அல்லது விழிப்புணர்வு அனுபவத்தின் காரணமாக பொங்கிக் கொண்டிருக்கும் அந்த அன்பையும் நன்றியுணர்வையும் உலகம் முழுவதும் உள்ள உயிர்களிடத்தில் வெளிப்படுத்துவது நல்லதா?

எது சரியானது? எது மேலானது என்று கருதப்படுகிறது?"

சிலர் ஆன்மீக அனுபவம் ஏற்படும்போது, அந்த அனுபவதிலேயே ஆழ்ந்து மூழ்கி, கண்களை மூடிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். அவ்வளவுதான். மூடிய கண்களுக்குள் மட்டுமே அவர்களால் கடவுளைக் காண முடியும். அவர்கள் கண்களைத் திறக்க விரும்புவதே இல்லை. அவர்கள் தங்களுடைய புலன்களைப் பயன்படுத்த விரும்புவது இல்லை.

ஏனென்றால் அவர்களுக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்தமானது அந்த அளவிற்குச் சிறப்பானது, அழகானது. எந்தவொரு புலனின்பமும் இந்த ஆனந்தத்திற்கு ஈடாக முடியாது.

ஆனால் வேறு சிலரோ பிரபஞ்ச சக்தியினால் தூண்டப்பட்டு தங்கள் கண்களைத் திறக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த ஆனந்தமயமான அனுபவத்தை அவர்கள் மூலமாகவே பிறருக்கு வெளிப்படுத்த பிரபஞ்ச சக்தி விரும்புவதால் கண்களைத் திறக்கிறார்கள்!

Feather graphic

ஞானம், பக்தி இரண்டுமே சமமான பாதைகள்தான்

தங்களைப் பண்டிதர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், எப்போதும் ஸவிகல்ப சமாதி மற்றும் நிர்விகல்ப சமாதி பற்றிய முடிவில்லாத விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். நிர்விகல்ப சமாதி என்றால் தொடர்ந்து சமாதி நிலையிலேயே இருத்தலைக் குறிக்கிறது. சமாதி நிலையின் அனுபவம் வெளிப்படத் தொடங்கும்போது, அதை நிர்விகல்ப சமாதி என்கிறோம்.

ஸவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி நிலையைக் காட்டிலும் சற்று குறைவானதுதான். ஒருவர் தம்மை நிர்விகல்ப சமாதி நிலைக்கு உயர்த்திக்கொள்ள உழைக்க வேண்டும். ஆனால் இது திட்டவட்ட விதிமுறை அல்ல.

> ஒருவர் தம்மை
> நிர்விகல்ப சமாதி நிலைக்கு
> உயர்த்திக்கொள்ள
> உழைக்க வேண்டும்.
> ஆனால் இது
> திட்டவட்ட விதிமுறை
> அல்ல.

என்னுடைய விஷயத்தில் இது இரண்டும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. நான் இரண்டு நிலைகளையும் தனித் தனியாகச் சென்று கடக்கவில்லை. நான் ஒரு நிலையை (ஸவிகல்ப சமாதி) அடைந்தவுடன், எங்கு அனுபவங்கள் வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறதோ, அந்த அடுத்த நிலையையும் (நிர்விகல்ப சமாதி) அடைந்து விட்டேன். அது தெய்வீகத்தின், பராசக்தியின் விருப்பம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், யாரும் இதைத் தாங்களாகத் தேர்வு செய்வதில்லை! இந்த அனுபவங்களுக்குள் நுழைந்தவர்களுக்கு எந்தவித தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள்தான் தாங்கள் எந்தச்
செயலைச் செய்ய விரும்புகிறார்களோ, அதைத்
தீர்மானிக்கும் சுதந்திரம் படைத்தவர்களாக
இருக்கிறார்கள். இதன் விளைவாக
ஏற்படும் கர்மாவும் அவர்களைப்
பின்தொடர்கிறது. அவர்களுடைய நல்ல தீய
செயல்களின் பலன்களைத்தான் கர்மா என்று
குறிப்பிடுகிறோம்.

பகவத் கீதை,
ஓர்
உயிரோட்டமுள்ள
வேத நூலாக
இருக்கிறது.

தெய்வீகத்தை உணர்ந்தவர்கள் விருப்பம்போல் செயல்படும் அந்தப் புள்ளியை, அந்த நிலையைக் கடந்து விடுகிறார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், பிரபஞ்ச சக்தியான பராசக்தியால், மேலான விழிப்புணர்வின் தெய்வமான கிருஷ்ணரால் வழிநடத்தப்பட்டு எடுத்து வைக்கப்படும் அடிகளாகவே இருக்கின்றன.

கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருப்பத்தையோ அல்லது கண்களைத் திறந்துகொண்டு மனித குலத்திற்குச் சேவை செய்வதையோ அவர்களால் தேர்வு செய்ய முடியாது.

அர்ஜூனனுக்கு இது தெரியாது என்றில்லை.

தெய்வீக அனுபவத்தைப் பெற்றவர்கள் எதையும் தேர்வு செய்ய முடியாது என்று அர்ஜூனனுக்குத் தெரியும். தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிருஷ்ணர்தான் முடிவு செய்வார் என்பதும் அர்ஜூனனுக்குத் தெரியும்.

இருந்தாலும் இந்த உண்மையை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் அதனால்தான் பகவத் கீதை ஓர் உயிரோட்டமுள்ள வேத நூலாக இருக்கிறது.

கிருஷ்ணர் பேசி 5000 அல்லது 10000 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அதன் வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தேடுதல் உள்ள ஒரு மனிதருக்குள் எழக்கூடிய, எழுவதற்குச் சாத்தியமான எல்லாக் கேள்விகளுக்கும் இந்த உரையாடல் பதில் அளிக்கிறது. இதில்

eyes closed

அர்ஜூனனின் பங்கு ஆன்மீகத்
தேடுதல் உள்ளவர்களின்
பிரதிநிதியாகச்
செயல்படுவதாகத்தான்
இருக்கிறது.

"எவ்விதமான மனிதர் சிறந்தவர்? கண்களை மூடிக்கொண்டு தமக்குள்ளேயே கடவுளைக் காண்பவரா அல்லது கண்களைத் திறந்துகொண்டு எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காண்பவரா? யார் சிறந்தவர்?" என்று அர்ஜூனன் கேட்கிறார்.

அருவ வழிபாடு சிறந்ததா அல்லது உருவ வழிபாடு சிறந்ததா என்று அர்ஜூனன் கேட்கவில்லை என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இருப்பினும் பெயரளவிலான சமயவாதிகள் இதை இந்த வழியில் மொழிபெயர்த்து வைத்ததன் மூலம், இரண்டு மிகச் சிறந்த ஞானகுருமார்களான ஆதிசங்கரரின் போதனைக்கும் இராமானுஜரின் போதனைக்கும் இடையே குழப்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சங்கரர் ஜ்ஞான யோகத்தையும் இராமானுஜர் பக்தி யோகத்தையும் கடைப்பிடித்தார்கள். பட்டறிவுத் தன்மையுடன்கூடிய கேள்விகளால் அருவக் கடவுளின் மீது கவனத்தைச் செலுத்துவது பற்றி ஜ்ஞானயோகம் சொல்கிறது. அந்த இறைவன் உண்மையில் உடலும் உயிரும்கொண்டு வாழ்ந்து, நம்மோடு விளையாடி மகிழ்வதுபோல் பாவித்து, அந்த உருவத்தின் மேல் மனத்தை ஒருமுகப்படுத்தி, தூய்மையான அன்பு செலுத்துவதைப் பற்றி பக்தி யோகம் சொல்கிறது!

உண்மையான ஜ்ஞானம்
பக்தியில்லாமலும்,
உண்மையான பக்தி
ஜ்ஞானமில்லாமலும்
இருக்க முடியாது.

சங்கரரையும் இராமானுஜரையும்
ஆழமாகப் படித்து உள்வாங்கியவர்கள்,
சங்கரரின் அணுகுமுறையில் ஆழமான
பக்தி இருப்பதையும், இராமானுஜரின்
அணுகுமுறையில் உயர்ந்த பட்டறிவு
மிளிர்வதையும் உணர்ந்துகொள்கிறார்கள்!

இரண்டு பாதைகளும் ஒன்றுடன் ஒன்று
சங்கமிக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று
பலன் தராது.

தர்ம சக்கரம், அது சத்தியத்திற்கான பாதை

ஞான குருவான ஆதி சங்கரர், அன்னை பராசக்தியின் மீது தனக்கிருக்கும் _பக்தி_யை, அன்பை வெளிப்படுத்தும் விதமாகப் பாடியிருக்கும் ஸௌந்தர்ய லஹரியைப் படித்தவர்கள், அதில் ஆதிசங்கரரின் ஆழமான அன்பு வெளிப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்து மெய்மறந்து நின்று விடுவார்கள். அதற்கு உருகாதவர்களே இருக்க முடியாது.

சங்கரருடைய மற்ற படைப்புகளைப்போலவே இந்தப் படைப்பிலும் தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவை உருவகமாக மிகச் சிறப்பான முறையில் சொல்லப்பட்டிருந்தாலும், தம்முடைய அன்பினால், தாம் முதலாவதாகக் கடந்து வந்த உருவ வழிபாடு பாதைக்குப் போய், அன்னையின் உருவத்தின் மீது தமக்கிருக்கும் ஆழ்ந்த _பக்தி_யை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அன்னையின் அழகை, தலை முதல் பாதம் வரை, அவர் தம் முன் அன்னையை எப்படிப் பார்த்தாரோ அப்படியே விளக்குகிறார். இந்தப் படைப்பு, தம்முடைய உணர்வுகளை _பக்தி_பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு ஓவியமாக, அன்பின் வர்ணனையாக, ஒரு விழிப்பாக, ஒரு அர்ப்பணிப்பாகவே இருக்கிறது.

இன்னொரு பக்கம் இராமானுஜரின் உரைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தத்துவ ஞானத்தின் ஆழமும் உள்நோக்கு பார்வையும், சமய தத்துவங்களுக்கே சிகரமாகக் கருதப்படும் சங்கரரின் தத்துவங்களோடு எளிதாகப் போட்டியிடுகின்றன.

உண்மையான ஞானம் _பக்தி_யில்லாமலும், உண்மையான _பக்தி_ ஞானமில்லாமலும் இருக்க முடியாது.

விவாதம் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் கிருஷ்ணரின் பதில்களைப் பார்க்கும்போது, அர்ஜுனன் கேட்டது இந்த அர்த்தத்தில் இல்லை என்று தெளிவாக விளங்குகிறது. அர்ஜுனன், தாம் அடைந்த தெய்வீக அனுபவத்தில் லயித்திருக்க வேண்டுமா அல்லது தமக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டுமா என்று கேட்கிறார். அனுபவத்தினால் பொங்குகிற நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் பக்தி. அனுபவத்தைப் பெற்று அதைக் கொண்டாடி, அந்த அனுபவத்திலேயே லயித்திருப்பதுதான் ஞானம், அவ்வளவுதான்.

இரண்டு பாதைகளுமே ஒன்றே என்பதுதான்
கிருஷ்ணருடைய பதிலாக இருக்கிறது.
இரண்டு பாதைகளும் ஒன்றோடொன்று
பிணைக்கப்பட்டுள்ளன. முதல் பாதை
இரண்டாவது பாதையை நோக்கி அழைத்துச்
செல்லும். இரண்டாவது பாதை முதல்
பாதையை நோக்கித் திரும்பி வரும்.

நம்முள் பொங்கும்
நன்றியுணர்வையும்
சேவையையும்
வெளிப்படுத்துவதற்கு
நம்மை
அழைத்துச் செல்லும்
அனுபவத்தையே
ஆனந்தம் என்கிறோம்.

நாம் விஷச் சுழலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். முதலாவது இரண்டாவதை நோக்கியும் இரண்டாவது மீண்டும் முதலாவதை நோக்கியும் அழைத்துச் செல்லும்.

நான் இப்போது தர்ம சக்ரம் என்ற பதத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறேன். விஷச் சுழலானது தாழ்ந்த சக்தி நிலை அல்லது தாழ்ந்த விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும்.

தர்ம சக்ரம் உயர்ந்த சக்தி நிலை, அது நம்மை மேலான விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஆனந்தம், அது நம்மை பக்தி மற்றும் நன்றியுணர்வை நோக்கியும், பக்தியும், நன்றியுணர்வும் நம்மை ஆனந்தத்தை நோக்கியும் அழைத்துச் செல்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து தர்ம சக்ரத்தை உருவாக்கி, நம்மை உயர் விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்கின்றன.

நம்முள் பொங்கும் நன்றியுணர்வையும் சேவையையும் வெளிப் படுத்துவதற்கு நம்மை அழைத்துச் செல்லும் அனுபவத்தையே ஆனந்தம் என்கிறோம். நன்றி மற்றும் சேவை உணர்வின் வெளிப்பாடு நம்மை மீண்டும் ஆனந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஒன்று மற்றொன்றை நோக்கி அழைத்துச் செல்வதால் இது தர்ம சக்ரம் ஆகிறது. நாம் பொதுவாக அச்சம் ஆசையை நோக்கியும், ஆசை அச்சத்தை நோக்கியும் அழைத்துச் செல்லும் அதர்ம சக்ரத்தின் பிடியில் இருப்போம். அதிக பயம் அதிக ஆசையை நோக்கியும், அதிக ஆசை அதிக பயத்தை நோக்கியும் அழைத்துச் செல்லும். இதுதான் அதர்ம சக்ரம். இந்த இடத்தில் கிருஷ்ணர் தர்ம சக்ரத்தை அறிமுகம் செய்கிறார். நாம் ஸத்ய பாதையில் நடக்கும்போது, நம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தர்மம் மற்றும் நல்லொழுக்கத்தைத்தான் கிருஷ்ணர் தர்ம சக்ரம் என்று குறிப்பிடுகிறார்.

தர்மம் என்ற நீதிச் சக்ரம். நம்மை மேலும் மேலும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழவும் அதை வெளிப்படுத்தவும் அழைத்துச் செல்கிறது. அதன் மூலம் அது நம்மை மேலும் மேலும் உயர்ந்த ஆனந்த அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது. நம்முள் பொங்கும் ஆனந்தமும் விழிப்புணர்வும் நம்மை அந்த ஆனந்ததையும் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தச் செய்கிறது. இந்த வெளிப்பாடு, நம்மை உயர்ந்த நிலை அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

கற்பனை, நீங்கள் விரும்புவதுபோல் நிஜமாவதில்லை

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் ஸம்ஸ்க்ருதத்தில், ‘விவாகரத்து’ என்ற வார்த்தையே இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது ஒரு உண்மை நிலையாக இருக்கிறது.

நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தீர்களேயானால், அங்கு விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமில்லை; அதற்குத் தேவையும் இல்லை. உங்களுக்கு விவாகரத்து தேவைப்படுகிறது என்றால், உங்களிடம் மிகப்பெரிய குறை இருக்கிறது என்று அர்த்தம்.

உண்மையான ஆன்மீகம், உங்களை ஒரு மேலான கணவனாகவோ, ஒரு மேலான மனைவியாகவோ உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இடப்பக்க உரைச்சுருக்கம்

"அவரிடம் ஆன்மீகம் இல்லை. அவர் என்னுடன் இசைந்து போவதில்லை," என்றெல்லாம் உங்கள் கணவரைக் குறை சொல்லாதீர்கள். இந்த எதிர்மறை உணர்ச்சிகளும் வெளிப்படுத்துதல்களும் உங்களுடைய எதிர்பார்ப்பினால்தான் தோன்றும்.

நம்முடைய ஸம்ஸ்காரங்களின் (கடந்தகால எண்ணங்களின் தொகுப்பு) அடிப்படையிலும்,

நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்தும்
நாம் ஒவ்வொருவரும் ஒரு ‘மாதிரி
உருவ’ங்களையும் ஒரு நகலையும்
உருவாக்கி, அந்தக் கற்பனையை வளர்த்துக்
கொள்கிறோம். அவற்றையே நம்முடைய
வாழ்க்கைத் துணையிடம் பார்க்க
விரும்புகிறோம்.

வாழ்க்கைத் துணையைத் தேடும் இந்தத்
தேடுதல் மரபு வழியானது. மனித குலம்
நீடித்து தொடர வேண்டுமென்பதற்காகவும்
மனித இனம் நிலைத்திருப்பதை
உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தத்
தேடுதலை இயற்கையே வடிவமைத்துள்ளது.

அந்த மனிதர்
எப்படி இருக்க வேண்டும்
என்று நினைத்து
கடவுள் படைத்தாரோ,
அவரை அதைவிட
ஒரு மேலான மனிதராக்க
நம்மால் முடியுமா?

ஆனால் நாம் எல்லோருமே நமக்கு எது கிடைத்துள்ளதோ அதைப் பார்ப்பதில்லை. நாம் பசுமையான தோற்றத்தைப் பார்த்து, காதலில் விழுகிறோம். புரிந்துகொள்ளுங்கள், நாம் காதலில் எழுவதாகச் சொல்வதில்லை. நாம் எப்போதும் காதலில் விழத்தான் செய்கிறோம்.

நாம் ஒருவரை ஒருவர் நெருங்கும்போது, நாம் சேர்ந்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது, நமக்குள் இருக்கும் இடைவெளி குறைய ஆரம்பிக்கிறது. அப்போது பச்சை நிறம் மஞ்சளாக மாறிவிடுகிறது. பொய்த் தோற்றம் கலைந்து, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. இதுதான் திருமணத்தைப் பற்றிய இரகசியம்.

ஒரு சின்ன கதை:

புதிதாகத் திருமணமான தம்பதியருக்கு, ஒருவர் ஒரு நாய்க் குட்டியைப் பரிசாக அளித்தார். ஆறு மாதங்கள் கழித்து அவர், அந்தக் கணவரைப் பார்த்து, "நீங்களும், உங்கள் மனைவியும் எந்த அளவுக்கு இணக்கமாக வாழ்கிறீர்கள்," என கேட்டார்.

அதற்கு அந்தக் கணவர், "ஆரம்பத்தில் நாய்க்குட்டி என்னைப் பார்த்து குரைக்கும். என் மனைவி செய்தித்தாளைக் கொண்டுவருவாள். இப்பொழுது நாய்க்குட்டி செய்தித்தாளைக் கொண்டுவருகிறது, என்னுடைய மனைவி குரைக்கிறாள்," என்று சொன்னார்.

ஒருவரை அவராகவே இருக்க அனுமதியுங்கள்

நாம் எதிர்பார்ப்புகளால் நிறைந்திருக்கிறோம்; கற்பனைகளால் நிறைந்திருக்கிறோம். நாம், அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்க அவர்களை அனுமதிப்பது இல்லை; அவர்களை மதிப்பதும் இல்லை. கடவுள்தான் நம் எல்லோரையும் படைத்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அந்த மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து கடவுள் படைத்தாரோ, அவரை அதைவிட ஒரு மேலான மனிதராக்க நம்மால் முடியுமா?

இருந்தாலும் நாம் வண்ணத்தையும் தூரிகையையும் எடுத்துக்கொண்டு, அவரை நமக்கு ஏற்ற வண்ண அமைப்பில் அவரை நிற மாற்றம் செய்ய முயற்சிசெய்கிறோம். அல்லது ஒரு சுத்தியலையும் உளியையும்நிகொண்டு அவரை நமக்குப்ப் பிடித்த உருவத்தில் செதுக்க ஆரம்பிக்கிறோம்.

உயிருள்ள ஒரு மனிதனைச் செதுக்கினால் என்ன ஆகும்? துக்கம் மட்டுமே தொடரும்.

சிவபெருமான் தம்முடைய தேவி பார்வதிக்கு விளக்கிய ஒரு பழமையான இந்து வேத நூல், சிவஸூத்ரம். அதில் தேவி சிவபெருமானிடம், "ஸ்வாமி, எது தம்பதியரைச் சந்தோஷமாக வைத்திருக்கும்?" என்று கேட்கிறார்.

அதற்குச் சிறந்த குருவான சிவபெருமான், "தேவி ஒவ்வொரு திருமணத்திலும் நான்கு பேர் இணைகிறார்கள்; கணவன், மனைவி, கணவனின் கற்பனை மனைவி மற்றும் மனைவியின் கற்பனைக் கணவன்' என்று ஒவ்வொரு தம்பதியரின் வாழ்க்கையிலும் நான்கு பேர் இருக்கிறார்கள். இரண்டு பேர் இல்லை.

நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது.

எப்போது கணவனும் மனைவியும் தங்களது கற்பனைக் கணவன் மற்றும் கற்பனை மனைவியை துறக்கிறார்களோ, எப்போது கணவன் மனைவியாகிய இருவர் மட்டுமே வாழ்கிறார்களோ அப்பொழுதுதான் திருமண வாழ்க்கை இனிதாக இருக்கும்," என்று சொல்கிறார்.

நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன்: நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ, அதைத்தான் நாம் பார்க்கிறோம்.

உள்நோக்கிப் பார்த்தால் உங்களுக்கே புரியும். உங்களுடைய அத்தனை கஷ்டங்களிலும் உங்களுடைய பங்களிப்பு இருப்பது புரியும். நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் நம்மைத் துன்புறுத்த முடியாது.

நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது. நம்முடைய அனுமதி இல்லாமல் யாரும் நம்மை உடைமையாக்கிக்கொள்ள முடியாது; நம்மை உரிமை கொண்டாடவும் முடியாது.

நமக்கும் அதில் ஏதோ கொஞ்சம் சுயநலமும் இருக்கும். அதனால்தான் அந்த மாதிரியான நபரை நம்முடைய வாழ்க்கையில் நுழைய நாம் அனுமதிக்கிறோம். நம்முடன் இயைந்து செல்லாத ஒரு மனிதரைக் கவர்வதோ நம் வாழ்க்கைக்குள் அவரை அனுமதிப்பதோ, ஆன்மீகம் ஆகாது. அப்படி நடந்தால் நமக்குள் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம்.

தேடுங்கள், அதன் மீது வேலை செய்யுங்கள், அதைக் குணப்படுத்திக்கொள்ளுங்கள். எல்லாமே தெளிவாகிவிடும்.

Illustration