KAILASA Library/பகவத்கீதை/அன்பே உங்கள் முழுமையான வாழ்க்கைSign in
பகவத்கீதை

அன்பே உங்கள் முழுமையான வாழ்க்கை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முன் அத்தியாயத்தில், அர்ஜூனன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை, அதாவது கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைத் தமக்குக் காட்டும்படி கேட்டுப்பெறுகிறார்.

கிருஷ்ணர் மிகவும் பொறுமையுடன் அர்ஜூனனின் சந்தேகங்களைத் தீர்த்து, அவரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கையில், அர்ஜூனன் கிருஷ்ணரின் உண்மையான ரூபத்தை, அழிவற்ற நிலையான வடிவமில்லாத் தன்மைக்குப் பின்னால் விளங்கும் கிருஷ்ணரின் உண்மையான வடிவத்தைக் காண விரும்புகிறார்.

மனித குலத்தின் உண்மையான பிரதிநிதியும் தம்முடைய தோழனும் சீடனுமாகிய நரனின், அர்ஜூனனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார், கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் அந்த ஒளி மிகுந்த பிரபஞ்ச வடிவத்தைக் கண்ட அர்ஜூனன் அதன் சக்தியைத் தாங்க முடியாமல், தாம் எப்போதும் பக்தியுடன் வணங்கும் நான்கு கரங்களுடன்கூடிய கருணைமிக்க விஷ்ணுவின் வடிவத்தையே காட்டுமாறு கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்.

அர்ஜுனனுடைய பிரார்த்தனைக்கு இணங்கிய கிருஷ்ணரும், யாதவ குல அரசராகவும் அர்ஜுனனின் தேரோட்டியாகவும் விளங்கும் தம்முடைய மானிட வடிவத்தையே தாங்குகிறார். அர்ஜுனனுக்குத் தம்முடைய பிரபஞ்ச வடிவத்தைக் காண்பித்து, அவருக்குப் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை ஏற்படுத்திய பின், கிருஷ்ணர் பக்தியைப் பற்றி, தெய்வீக அன்பைப் பற்றி விவரிக்கிறார்.

அஹங்காரம் அழியும்போது அன்பின் ஆழத்தைத் தொடுவீர்கள்

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் காட்டிய அந்த விச்'வரூப தர்ச்'நம்தான், அந்தப் பிரபஞ்ச வடிவம்தான் அவருடைய பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறது. அதுவே நம்முடைய ஒட்டு மொத்தக் கூட்டு விழிப்புணர்வாகவும் இருக்கிறது.

இப்போது அர்ஜுனன் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்கிறார். ஒன்று, தாமும்கூட அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்துகொள்கிறார். மேலும் தம்மால் காண முடிகின்ற, தாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற கிருஷ்ணரின் அந்த மானிட வடிவம், கிருஷ்ணருடைய அந்த அழிவில்லாப் பிரபஞ்ச வடிவத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதையும் புரிந்துகொள்கிறார்.

| ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் பக்தி மலர்கிறது. | |---| | கிருஷ்ணரின் தெய்வீக வடிவத்தைக் கண்ட அர்ஜுனனின் அனுபவம் அவருடைய மனத்தில் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. | | தாம் சற்றுமுன் பார்த்த பிரபஞ்ச வடிவம்தான் அந்தப் பிரபஞ்ச சக்தியின் மஹோன்னதமான உண்மை வடிவமா? ஸத்யமான அந்த மஹோன்னதமான வடிவத்தின் மீது தம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமா? அல்லது கிருஷ்ணரால் இதற்கு முன் வலியுறுத்திச் சொல்லப்பட்ட உருவமற்ற |

சுயத்தின் மீது தம் மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமா?

பொதுவாக மக்கள், பக்தி மலர்ந்த பிறகுதான்
ஆன்மீக அனுபவம் ஏற்படுகிறது என்று
நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில்,
ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் பக்தி
மலர்கிறது.

ஆன்மீக அனுபவத்திற்கு முன்னால்,
உண்மையான பக்தி உங்களுக்குள் நிகழ
முடியாது.

மேலை நாட்டு மதங்கள், சமுதாய சேவை மூலமாக ஆன்மீக அனுபவத்தைப் பெறலாம் என்று நம்புகின்றன.

இல்லை! ஒருபோதும் இல்லை! நம்முள் உருமாற்றம் ஏற்படாமல், பிறருக்கு நம்மால் ஒருபோதும் உதவ முடியாது.

நமக்குள் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், நாம் பிறருக்குச் செய்யும் சேவையானது, ஆழமற்ற, மேலெழுந்தவாரியான சேவையாகத்தான் இருக்கும்.

மேலும், அந்தச் சேவையானது, நம்முடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும், பிறர் நம்மை நல்ல உள்ளம் படைத்தவர், கருணை மிகுந்தவர் என்று புகழ்ந்து பேசுவதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயலாக இருக்கும்.

நம்முடைய அஹங்காரம் அழியும்போது மட்டுமே, கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றவர்களுடன் இனிமையான அன்புடன் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த நிலையில் மட்டுமே, ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களும் நம்மில் ஒருவரே என்பதை உணர்கிறோம். அப்போது மட்டுமே நம்மால் அவர்களுக்குப் பயனுள்ள, அர்த்தமுள்ள ஒரு பங்களிப்பைத் தர முடியும்.

எவர் ஒருவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் என்பதை உணர்கிறாரோ, அவரால்

மட்டுமே தம்மைச் சுற்றி உண்மையான
அன்பைப் பரவச் செய்ய முடியும். அன்பு
என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்
மட்டுமே அறிவார்; வேறு எவரும்
அறிவதில்லை. எல்லோரும் தாங்கள் அன்பு
செய்வதாக நினைக்கிறார்கள் அல்லது அன்பு
செலுத்துவது போன்று நடிக்கிறார்கள்.

மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பலர், அன்பு செய்வதாக நடிக்கிறார்கள்!

சில சமயங்களில் நடிப்பதனாலேயே, தாங்கள்
அன்பு செய்வதாக நினைக்கிறார்கள். வெறும்
நடிப்பு, அன்பாகிவிட முடியாது!

> ஆன்மீக
> அனுபவத்திற்குப் பிறகு,
> நம் இருப்புத்
> தன்மையிலிருந்து
> அபரிதமான
> நன்றியுணர்வும் அன்பும்
> பொங்கிப் பரவுகிறது.

நம்முடையிருப்பிலிருந்து அன்பு வெளிப்பட வேண்டும். நாம் நம்முள் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை உணரும்போதுதான், நம்முள் ஆன்மீக அனுபவம் மலரும்போதுதான், நம்முடைய அஹங்காரம் மறையும்போதுதான், நமக்குள் உண்மையான அன்பு மலர்கிறது. படிப்படிப்பாக முழு நுட்பத்தையும் கிருஷ்ணர் நமக்காகத் திறந்து வைக்கிறார்.

ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு, நம் இருப்புத் தன்மையிலிருந்து அபரிதமான நன்றியுணர்வும் அன்பும் பொங்கிப் பரவுகிறது. அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமலேயே அவை பொங்கிக்கொண்டே இருக்கும். நம்மால் அதை நிறுத்த முடியாது. ஆன்மீக அனுபவத்தைப் பெற்றவர்களைத் தவிர வேறு எவராலும் அன்பை வெளிப்படுத்தவோ, உணரவோ முடியாது.

நிபந்தனைகள் அற்ற தூய்மையான அன்பை வற்புறுத்தி நிகழவைக்க முடியாது. நம்முடைய மனம் அமைதியும் தூய்மையும் அடையும்போதுதான், நமக்குள் நிபந்தனை அற்ற, கட்டுப்பாடில்லாத அன்பு மலர்கிறது. நாம் பொதுவாகச் சொல்லும் அன்பு என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. பிறரின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமே நாம் அன்பை உபயோகிக்கிறோம்.

நாம் மக்களை நேசிப்பது பற்றிப் பேசுகிறோம். நாம் இந்த உலகத்தையே நேசிப்பதாகப் பெருமைகொள்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையில், நாம் நம்முடைய அண்டை வீட்டுக்காரரைக்கூட, குறிப்பாக அவர் நம்மை விட பணக்காரனாக இருக்கும் பட்சத்தில், நம்மால் அவரை நேசிக்க முடிவதில்லை. நமக்கு ஒரு கண் போனால்கூட பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரனின் இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

பொறாமையினாலும் பேராசையினாலும் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் இப்படிக் கொடூரத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைக்கூட நேசிக்க முடியாத நம்மால் எப்படி இந்த உலகத்தை நேசிக்க முடியும்? உற்றார் உறவினரிடம் கருணையுடன் நடந்துகொள்ள முடியாத நாம் மனித குலத்திற்கே சேவை செய்வதைப் பற்றி எவ்வாறு பேச முடியும்?

அன்பின் ஆழம் தொட்டால், சேவையில் மலர்வீர்கள்

"ஸ்வாமிஜி, நீங்கள் எப்போதும் உங்களுடைய பக்தர்களிடம், 'தியானம் செய்யுங்கள்,' தியானம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அதனால் என்ன பயன்? அது சுயநலமான செயல் இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிடம் சேவை செய்யுமாறு சொல்லக்கூடாது ? அது நிறைய பேருக்கு உதவியாக இருக்குமே," என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு.

tgen நிறுவனத்தை 'ஆன்மீக நிறுவனம் என்றும், 'தொண்டு நிறுவனம்' என்றும் சொல்லிக்கொள்ளும் எத்தனையோ அமைப்புகள், தங்களுடைய பெயர், புகழ் மற்றும் சமுதாய அந்தஸ்திற்காக மட்டுமே சமுதாய சேவையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான தொண்டு நிறுவனங்களை
நடத்துகிற மக்களும் சரி, இவற்றில் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ளும் மக்களும் சரி
பத்திரிகைகளிலும், செய்தித்ாள்களிலும்
தங்களுடைய புகைப்படங்கள் வர வேண்டும்
என்பதற்காக முந்திக்கொண்டு ஓடுவதில்
தீவிரம் காட்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.

உங்களையும் மற்றவர்களையும்
ஏமாற்றிக்கொள்வதற்கான சிறந்த வழி,
தொண்டு நிறுவனங்களை நடத்துவதுதான்.
நீங்கள் இந்த முறையில் செய்யும் தொண்டு

> நம்முடைய மனம்
> அமைதியும் தூய்மையும்
> அடையும்போதுதான்,
> நிபந்தனை அற்ற
> கட்டுப்பாடில்லாத அன்பு
> நமக்குள் மலர்கிறது.

மூலமாக, உங்களின் அஹங்காரத்திற்கு நன்றாகத் தீனி போடுகிறீர்கள்.

சேவையை ஒருபோதும் நெறிமுறைகளுக்குள் ஒழுங்குபடுத்த முடியாது. அது உள்ளிருந்து இயற்கையாகப் பொங்கி வழிய வேண்டும். சேவை வெளி வெளிப்பாடு அல்ல; அது உள்ளிருக்கும் உறுதியான நம்பிக்கை. சேவையை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் அந்தக் கணமே, அதன் தரம், நோக்கம், நிறம் என்று மொத்த விஷயமுமே வேறுவிதமாக அமைந்து விடுகிறது. ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு வெளிப்படும் சேவையில்தான், உறுதியான அன்பின் வெளிப்பாட்டைக் காணமுடியும்; அது, அன்பின் உறுதியான வெளிப்பாடாக இருக்கும்.

பிறருக்குள் மாற்றத்தை ஏற்படுத்த நாம் உதவுவதற்கு முன் நம்முள் உருமாற்றம் நிகழ வேண்டும். நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணராதவரை, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணராதவரை உண்மையான அன்புடன் சேவை செய்வது என்பது முடியாத காரியம். நாம் கபட வேடதாரிகளாக மட்டுமே இருப்போம்.

இந்தப் பிரபஞ்சக் கடலின் ஓர் அங்கமே நாம். நாம் ஒவ்வொருவருமே அதன் துளிகள்தான்!

நாம் ஒரு தனித் துளியாகவே இருக்கும்வரை, நாம் எல்லோரும் அதே கடலின் ஒரு பகுதிதான் என்ற உண்மையை உணராதவரை நாம் தனியாகவே இருக்கிறோம்; பிறகு நம்முடைய உணர்ச்சிகள், 'நான்' 'எனது' என்ற அஹங்கார மற்றும் மமகாரங்களினால் தூண்டப்பட்டு செயல்படுகின்றன.

Drop in water

இப்படித் தனித்து நிற்கும் தன்மை,
நம்மிடம் இருக்கும்வரையில்,
அங்கு உண்மையான அன்பு இருக்க
முடியாது. நிபந்தனையற்ற அன்பின்
வெளிப்பாடும் அங்கு இருக்க முடியாது.

நன்மை, தீமை - அது செயல் செய்பவரைப் பொறுத்தது

peacock feather illustration

"புத்தர் என்ன செய்தாலும், ஞானமடைந்த ஞானி என்ன செய்தாலும், அவர் ஒரு மனிதரைக் கொன்றாலுமேகூட, அது அந்த மனிதருடைய நன்மைக்காகத்தான் இருக்கும். புத்தரின் செயல்கள் அவருக்கும் பிறருக்கும் நன்மையைத்தான் விளைவிக்கும். ஏனென்றால் புத்தர் பிரபஞ்ச விழிப்புணர்வினால் தூண்டப்பட்டுச் செயல்படுகிறார். அதனால் அவருடைய செயல்கள் எப்போதும் எல்லோருக்கும் நன்மையைத்தான் அளிக்கும்," என்று ஜென் புத்த மதம் அழகாகச் சொல்கிறது.

ஞானமடையாத ஒரு மனிதர் என்ன செய்தாலும் சரி, அது எவ்வளவு பெரிய சேவையாக இருந்தாலும் சரி, அது அவருக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ எந்தவித நன்மையையும் ஏற்படுத்தாமல் போகலாம். நன்மை தீமை என்பது 'செய்யும் செய'லைப் பொறுத்து முடிவு செய்யப்படுவது இல்லை.

'செயல் செய்பவ'ரைப் பொறுத்தே அது முடிவு செய்யப்படுகிறது.

ஞானமடைந்த ஞானி செயல்பரியும்போது, மிகச்சிறிய செயல்கள்கூட உலகில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். ஞானமடையாத ஒரு மனிதர் செயல்பரியும்போது, மிகப்பெரிய ஸத்யங்கள்கூட துக்கத்திற்கு சொல்லப்போனால், சில சமயங்களில் அழிவிற்கேகூட அழைத்துச் சென்று விடலாம்.

"உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே செல்வதையும் வெளியே செல்வதையும் சாட்சியாக இருந்து பாருங்கள்," என்று புத்தர் சொன்ன எளிமையான வார்த்தைகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

புத்தர் இந்த எளிமையான ஸத்யத்தைக் கண்டுபிடித்தார். அதைக் கடைப்பிடித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஞானம் அடைந்திருக்கிறார்கள்.

புத்தரின் இந்த த்யான நுட்பத்தின் பெயர்

> ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் நாம் நம்முடைய இருப்புத் தன்மையிலேயே நன்றியுணர்வை உணர முடியும். விபாசனா. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையே உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதன் விளைவாக, முழுப் பிரபஞ்சமுமே பயனடைந்து இருக்கிறது.

இந்தச் சாதாரண, எளிய ஸத்யத்தை புத்தர் உபதேசித்தபோது, அது ஆயிரக்கணக்கான மக்களை உயர்விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது;ன்றும் ஆயிரக்கணக்கான மக்களை எடுத்துச் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அதே சமயம் ஞானமடையாத ஒரு சாதாரண மனிதர் எவ்வளவு பெரிய ஸத்யத்தைக் கண்டுபிடித்தாலும் சரி, அது அழிவை நோக்கியே அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு, அணு தத்துவம் மிகச் சிறந்த ஒரு ஸத்யம்தான். சார்பியல் கோட்பாடு ஒரு சிறந்த ஸத்யம்தான். இருந்தாலும் அது ஒரு ஞானமடையாத மனிதரிடமிருந்து வெளிப்படும்போது, அழிவுப் பாதைக்கே எடுத்துச் செல்கிறது.

> புத்தர்,
> பிரபஞ்ச
> விழிப்புணர்வினால்
> தூண்டப்பட்டு
> செயல்படுவதால்
> அவரின் செயல்கள்
> அவருக்கும் பிறருக்கும்
> நன்மையைத்தான்
> விளைவிக்கும்.

இந்த உலகில் உள்ள அனைத்து
நாடுகளின் அரசாங்கங்களும் சேர்ந்து,
இந்தப் பூமிப் பந்தை ஆயிரம் முறைக்கு
மேல் அழிக்கக்கூடிய அளவிற்கு அணு
ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருப்பதாக
ஒரு பத்திரிகையின் புள்ளி விவர அறிக்கை
தெரிவிக்கிறது!

ஒருமுறை அல்ல, இரு முறை அல்ல ஆயிரம் முறைகளுக்கு மேல் இந்தப் பூமிக் கிரகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு அணு ஆயுதங்களை அவர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்!

இன்றைய தேதிக்கு நிச்சயம் இந்தச் சக்தி இரண்டு மடங்கு அதிகரித்திருக்கும். இதுதான் ஒரு ஞானமடையாத மனிதர் மூலம் வெளிப்படும் ஸத்யத்தின் விளைவு.

விஞ்ஞானிகள் இப்போது குలోనిங் (Cloning) மற்றும் ஸ்டெம் செல் (Stem Cell) சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித குலத்திற்குக் கிடைக்கப் போகும் பயன்களும் விளைவுகளும், ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் இருப்புத் தன்மையின் தரத்தைத் சார்ந்தே இருக்கும். ஆராய்ச்சியால் ஏற்படப் போகும் விளைவுகள், ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளின் 'மன'த்தைப் பொறுத்து அமைவது இல்லை.

மனித மனம், அஹங்காரத்தினால் இயக்கப்படுகிறது.

peacock feather icon

## அன்பு - நம்மை இயக்கும் சக்தியாகட்டும்!

இருப்புத் தன்மை, விழிப்புணர்வு மற்றும் பிரபஞ்சம் தழுவிய அன்பைப் பற்றிய விழிப்பு நிலையால்தான் இயக்கப்படுகிறது.

தவறான மனப்பான்மை கொண்ட ஒரே ஒரு மனிதனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினால்கூட போதும் அவன் மொத்த மனித குலத்தையே அபாயத்திற்குள்ளாக்கி விடுவான்.

அனைத்தும் தயாராக இருக்கிறது. இப்போது நமக்கு வேண்டியது எல்லாம், பட்டனை அழுத்த யாராவது ஒருவர் மட்டுமே! ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அந்த மனிதன் சற்று பைத்தியக்காரனாகவோ அல்லது மற்றவர்களைத் துன்புறுத்தி மகிழும் கொடுமைக்காரனாகவோ இருந்தானேயானால், மொத்த மனித குலத்தின் படுகொலையும் நிகழ்ந்துவிடும். அந்த அளவிற்கு அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன.

'அணுப் பிளவு' என்பது மிகப்பெரிய ஸத்யம். அணுப் பிளவுக் கொள்கை என்ன சொல்கிறதென்றால், ஒவ்வொரு அணுவையும் நாம் பிளவுபடுத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் மிகப்பெரிய சக்தி வெளிப்பாட்டை உருவாக்க முடியும் என்றும் சொல்கிறது.

இருப்புத் தன்மை,
விழிப்புணர்வு மற்றும்
பிரபஞ்சம் தழுவிய
அன்பைப் பற்றிய
விழிப்பு நிலையால்தான்
இயக்கப்படுகிறது.

இது மிகப்பெரிய ஸத்யம்தான். இருந்தாலும் ஞானமடையாத மனிதனின் மனத்திலிருந்து வெளிப்பட்டுள்ளது. பல ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு இந்த ஸத்யத்தைப் பயன்படுத்த முடியும். இந்த ஸத்யத்தைக்கொண்டு இந்த உலகை இன்னும் மேம்பட்டதாக மாற்ற முடியும்.

ஆனால் அஹங்காரத்தில் நிலைகொண்ட,
ஞானமடையாத ஒரு மனிதரிடமிருந்து
வெளிப்பட்டு, அப்படிப்பட்டவர்களாலேயே
செயல்படுத்தப்படும்வரை, இந்த ஸத்யம்
நம்மை அழிவுப் பாதைக்கே அழைத்துச்
செல்லும்.

வார்த்தைகளோ, செயல்களோ அவை தங்களளவில் எந்த நன்மையையும் தீமையையும் நிகழ்த்தப் போவதில்லை. எந்தவிதமான விழிப்புணர்விலிருந்து அவை வெளிப்படுகின்றனவோ, அதைப் பொறுத்துதான் அவை நன்மையோ, தீமையோ விளைவிக்கின்றன.

மற்றவர்களுக்காகச் செயல்படும் ஒருவருடைய உணர்வைப் பொறுத்தே அவருடைய விழிப்புணர்வின் தரமும் அமைகிறது. இந்தத் தரம்தான் இறுதி விளைவுகள் பயன் அளிக்கக்கூடியவையாக இருக்குமா அல்லது மனித குலத்தையே அழிக்கக்கூடியவையாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது.

ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் நாம் நம்முடைய இருப்புத் தன்மையிலேயே நன்றியுணர்வை உணர முடியும்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுள்தான் என்கின்ற திடமான அனுபவம் நமக்குள் நிகழ்ந்து விட்டால், நாம் அன்பை வெளிப்படுத்தத் தொடங்குவோம். நமது இருப்புத் தன்மை அன்பாகவே மாறிவிடும். அந்த ஆன்மீக அனுபவத்திலிருந்து பொங்கி வரும் வெளிப்பாடுகளே பக்தியும் அன்பும்.

விச்ஸ்வரூபதர்சனத்திற்குப்பிறகு, கிருஷ்ணர் பக்தியோகத்தைப்பற்றிய விளக்கத்தைத் தருகிறார். முதலில் விசுவரூபதரிசனம் என்கிற அனுபவத்தைக் கொடுத்த பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தெய்வீக அன்பைப் பற்றி விளக்குகிறார்.

Krishna's hands with flute