ஸத்யத்தைப் பரிசோதிக்கும் துணிவு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- அது அடிப்படை ஆன்மிகத் தகுதி
வீட்டிற்குப் போனதும், உண்மையிலேயே எனக்கு வலிக்குமா, வலிக்காதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க, என்னுடைய தொடையைக் கத்தியால் ஆழமாகக் கீறிக் கொண்டேன். இரத்தம் கொட்டத் தொடங்கியது.
வலி மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு என்னை அழைத்துப் போய்க் காயத்திற்குத் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது; மேலும் என்னுடைய அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது!
எனக்கு வலியும் துக்கமும் இருந்தது. 'ஸ்வாமிஜி, உடலுக்கு வலியும், துக்கமும் இருக்காது' என்று சொன்னாரே என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
மற்றவர்களை வைத்துப் பரிசோதனை
செய்வது ரொம்பவும் சுலபம். அர்ஜூனன்
புத்திசாலி. எல்லாவற்றையும் புரிந்துகொண்ட
பிறகு மற்றவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்;
அவர் தம்மீது பரிசோதனை செய்து
பார்க்கவில்லை.
நான் ஸ்வாமிஜியிடம் போய், எனக்கு நடந்ததைச் சொன்னேன்.
முதலில் அவர் என்னைக் கேட்டது, "நான் உன்னைக் கத்தியால் கீறிக் கொள்ளச் சொன்னேனா?" என்பதே. பிறகு எனக்கு அவர் ஓர் ஆழமான ஸத்யத்தைச் சொல்லித் தந்தார். அது என்னுடைய வாழ்க்கையையே உருமாற்றியது.
"உனக்கு இப்போது வலியும், வேதனையும்
இருக்கலாம். ஆனால் கவலைப்படாதே,
ஸத்யதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
என்ற தேடலும், அதை ஆராய்ந்து பார்க்க
வேண்டும் என்ற உன்னுடைய தீவிரமான
மனோபாவமும், ஸத்யத்தைப் பரிசோதித்து
பார்க்க வேண்டும் என்ற உன்னுடைய
துணிச்சலும் எதிர்காலத்தில் உன்னை எல்லா
வலியிலும் இருந்தும் விடுவிக்கும். அதனால்
உன்னுடைய பாதையில் நீ தயங்காமல்
முன்னேறிச் செல்,"
என்று சொன்னார்.
பிறகு, எண்ணங்கள் எங்கு இருந்து
வருகிறதோ அதன் மூலத்தைத் தேடுமாறு
எனக்கு அறிவுரை கூறினார். அதற்கான
நுட்பத்தையும் கற்றுக்கொடுத்தார். அந்த
வயதில் இந்த அறிவுரைகள் உண்மையில்,
என்னை எரிச்சலடைய வைத்தது. என்னுடைய
கவனமெல்லாம் பக்தர்கள் சுவாமிஜிக்குக்
கொண்டுவந்து கொடுத்த பழங்களின் மீதும்,
இனிப்புகளின் மீதும்தான் இருந்தது.
> ஸத்யத்தை
> தெரிந்துகொள்ள வேண்டும்
> என்ற தேடலும்,
> பரிசோதித்து பார்க்க
> வேண்டும் என்ற
> துணிச்சலும்தான்
> ஆன்மீகத்திற்கான
> அடிப்படைத் தகுதி.
என்னுடைய ஆறுதலுக்காகப் பழமோ, இனிப்போ கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையில், அவர் சொன்னது எதுவுமே எனக்குப் புரியவும் இல்லை; நான் அவற்றால் சமாதானம் அடையவும் இல்லை.
எப்படியோ, சில நாட்கள் கழித்து விளையாட்டாக,ாதாரணமாக எண்ணங்கள் எங்கே இருந்து உருவாகின்றன என்ற அந்த த்யான நுட்பத்தைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். எந்த விதமான எதிர்பார்ப்போ, எண்ணமோ இல்லாமல் இதைச் செய்து கொண்டிருந்தேன்.
இந்த த்யான நுட்பத்தைச் செய்வதால், வலி துக்கத்தைக் கடந்து போக முடியும் என்று சுவாமிஜி சொல்லி இருக்கிறார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். ப்ரம்மம், ஆத்மா, ஞானம் என்று கடவுளைப் பற்றி எந்த ஒரு கருத்தும் எனக்குள் இருக்கவில்லை.
ஒரு மாலை நேரம், திருவண்ணாமலையின் அடிவாரத்தில், பவளப்பாறை என்று அழைக்கப்படும் பாறையில் கண்களை மூடி, இந்த த்யான நுட்பத்தை முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆழமான த்யான நிலையை அடைந்திருந்தேன்.
sிறிது நேரம் கழித்து, சட்டென ஏதோ ஒன்று திறந்து கொண்டது, எனக்குள்ளே என் இருப்புக்குள்ளே ஏதோ நிகழ்ந்தது. நான் ஆழமாக உள்ளே இழுக்கப்பட்டது போன்று உணர்ந்தேன். அடுத்த கணம், எனக்குள் ஒரு கதவு திறந்து கொண்டதைப்போல, என்னால் 360 டிகிரியிலும் மேலும் கீழும், வலமும் இடமுமாகப் பார்க்க முடிந்தது. என்னால் எனக்கு முன்னால் இருந்த மலையையும், பின்னால் இருந்த கோவிலையும், இடதுபுறமும் வலதுபுறமும் இருந்த நகரத்தையும், நான்கு திசைகளையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
மேலும், கீழும்கூட ஒரே நேரத்தில் என்னால் பார்க்க முடிந்தது. நான் அமர்ந்திருந்த பாறையையும் மேலே இருந்த வானத்தையும் பார்க்க முடிந்தது.
சாதாரண மக்களால் அதிகபட்சம் 120 டிகிரி வரைதான் பார்க்க முடியும். இதை நம்புவதற்குச் சிரமமாக இருக்கலாம். ஆனால் ஸத்யமாக இப்படி நடந்தது என்பதை மட்டும்தான் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
வேறு எந்த அறிவுப்பூர்வமான விளக்கமும் சாத்தியமில்லை. என்னால் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது மட்டுமல்லாமல், என்னைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் நானாகவே உணர்ந்தேன்.
பிரபஞ்ச அனுபவம்
செடிகளோ, பாறையோ, மலையோ, நகரமோ எதையெல்லாம் என்னால் பார்க்க முடிந்ததோ அவை எல்லாவற்றையும் நானாக உணர்ந்தேன்.
அந்த அனுபவம் ஆழமாக இருந்தது; அப்படியே மெய்மறந்த நிலையில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருந்திருப்பேன். ஆனந்த ஜுரம் அடித்தது போல் உணர்ந்தேன். இதே நிலை மூன்று நாட்களுக்கு நீடித்தது.
இது நடந்த பிறகு, நான் ஏதோ தப்பு செய்துவிட்டேன் என்ற பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. என்னை ஏதோ பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து, அந்தப் பாறைக்கு மறுபடியும் போகவே கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
வழக்கமாகப் போய்க்கொண்டிருந்த அந்தப் பாதை பக்கம் போவதைக்கூட

தவிர்த்துவிட்டேன். எனக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு வயதான ஸந்யாசினி அம்மாவிடம், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போய்ச் சொன்னேன்.
அவர் என்னுடைய கைகளைப் பிடித்து, என்னுடைய சக்தியைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு, “உன்னை எந்தப் பேயும் பிடிக்கவில்லை. உன்னைச் சாமிதான் பிடித்திருக்கிறார்!” என்று சொன்னார்.
அந்த த்யானத்தைத் தொடர்ந்து செய்யும்படி என்னை உத்வேகப்படுத்தினார். ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு, அந்த த்யானத்தைச் செய்ய எனக்குத் துணிவு வரவில்லை. இவ்வளவு ஏன், கண்களை மூடக்கூட பயந்து கொண்டிருந்தேன்!
கிருஷ்ணர்,
இயேசு,
புத்தர்
இவர்கள் எல்லோரும் ஒரே
தன்மையின்
பன்முக வெளிப்பாடுகளே!.
என்னுடைய நெருங்கிய நண்பனிடம் இந்த
அனுபவத்தைச் சொன்னேன். என்னால் 360
டிகிரி பார்க்க முடிந்த அனுபவத்தையும்,
எனக்குள் என்ன நடந்தது என்றே
தெரியவில்லை என்றும் சொன்னேன்.
அவன் என்னை நம்பாமல் பார்த்துக்
கொண்டிருந்தான்.
அவனிடம் நிரூபிப்பதற்காக, எனக்கு பின்னால் இருந்த மரத்தில் ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருந்ததையும், அவன் கையில் வைத்திருந்த நாணயத்தின் பக்கத்தையும் கண்களை மூடி கொண்டே சரியாகச் சொன்னேன். அவ்வளவுதான், அவன் பயந்து நடுங்கி என்னை விட்டு ஓடியே விட்டான்.
சமீபத்தில் அந்த நண்பர் ஆச்ரமத்திற்கு வந்திருந்தார். “ஸ்வாமிஜியிடம் இருந்து சஃக்தி தர்சநும் பெற்ற முதல் நபர் நான்தான்; ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்,” என்று ஆச்ரமவாஸி ஒருவரிடம் சொல்லி இருக்கிறார்.
நான் பயத்தை உணர்ந்தபோதிலும் கூட, என் முழு உடலும் பரவசத்தாலும் ஆனந்தத்தாலும் நிரம்பி வழிந்துகொண்டு இருந்தது.
இந்த உணர்வு வரவேற்கத்தக்கதாக இருந்ததால், அந்த இடத்திற்கு திரும்பவும் போய், பாறையின் மீது அமர்ந்து த்யானம் செய்ய, வேண்டுமென்ற ஒரு ஆவல் ஏற்பட்டது. உண்மையிலேயே என்ன நடந்தது என்று எனக்கு புரியவே இல்லை.
ஒரு வருடம் கழித்து ஞானமடைந்த ஒருவர் எனக்கு இதற்கான விளக்கத்தைச் சொன்னார். எப்படியோ, உண்மையான ஆன்மீகத் தேடுதல் இந்த அனுபவத்திற்குப் பிறகுதான் தொடங்கியது.
ஒன்பது வருட தவ வாழ்க்கை தொடர்ந்தது. இந்த எல்லாத் தவங்களுமே அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டுமென்பதற்காகத்தான். அந்த அனுபவம் மீண்டும் நிகழ்ந்தபோது, உடலும் மனமும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தயாராகி விடவே, அந்த அனுபவம் என் இருப்புநிலைக்குள்ளே நிரந்தரமாகத் தங்கிவிட்டது.
360 டிகிரியில் எல்லாத் திசைகளையும் ஒரே நேரத்தில் பார்க்கவும், உணரவும் முடிந்த இந்தப் பார்வையைத்தான், கிருஷ்ணர் திவ்யசக்ஷு, த்ரிநேத்ரம், ஞானக்கண், ஆஜ்ஞா சக்ரம் என்று சொல்கிறார்.
இந்த ஞானக்கண் திறக்கும்போது 360 டிகிரியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகப் பார்ப்பது மட்டுமல்லாமல், முழுப் படைப்புமே நீங்களாக இருப்பதையும், அந்த அனுபவமாகவும் நீங்களே இருப்பதாகவும் உணர்வீர்கள். இந்த அனுபவத்தைத்தான் கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வு என்று சொல்கிறார்.
> முழு பிரபஞ்சத்தையுமே
> உங்களுடைய
> சொந்த உடலை
> உணர்வதைப் போல
> உணர முடிந்தால்
> அதுதான்
> பிரபஞ்ச அனுபவம்.
உடல் உணர்வு நிலை விரிவடைந்து, விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு நிலையாக மாறியபோது உயிருள்ள உடல்களை நாம் எப்படி உணர்வோமோ, அப்படி என்னைச் சுற்றியிருந்த எல்லாமே உயிரோடு இருப்பதைப்போல உணர்ந்தேன்.
முழுப் பிரபஞ்சத்தையுமே, உங்களுடைய சொந்த உடலை உணர்வதுபோல உணர முடிந்தால், அதுதான் பிரபஞ்ச அனுபவம்.
துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய சொந்த உடலுக்குள்ளேயே நாம் உயிரோடு வாழ்கிறோம் என்பதை உணர முடியாமல் இருக்கிறோம்.
முதல் ஆன்மீக அனுபவத்தை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள்
என்னுடைய முதல் ஆன்மீக அனுபவத்தைப் பார்த்து நான் பயந்தது போலவே, கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைப் பார்க்கத் தொடங்கியதும் அர்ஜுனனும் பயப்படுகிறார்.
இந்த மாதிரியான சமயங்களில்தான், ஒரு வாழும் ஞானியின் உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.
"உங்கள் குரு யார்?" என்று என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். 'அருணாச்சலம்' என்று சொல்லுவேன்.
திருவண்ணாமலை எனப்படும் அருணாசலமே, ஒரு வாழும் ஞானிதான். அதுதான் நான் பிறந்த இடம்.
ஒரு குறை பிரசவ குழந்தை முழுவளர்ச்சி
பெற்று உயிர்வாழ, அதை இன்குபேட்டரில்
(incubator) வைப்பார்கள்.
அதே போலத்தான் ஞானமடைய
இருப்பவர்களுக்கான இன்குபேட்டர்தான்
அருணாசலம். ஒருவர் அதன் பக்கத்தில்
இருந்தாலே போதும், அருணாச்சலத்தின் சக்தி
வெளிப்பாடு அவரைப் பார்த்துக் கொள்ளும்.
"எனது பிரபஞ்ச உணர்வு நிலையை, நீ உணர உனக்கு ஞானக்கண் அளிக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இந்த வரிகளுக்குப் பிறகு கிருஷ்ணரோ, அர்ஜுனனோ பேசவில்லை. திடீரென்று ஸஞ்சயன் பேச ஆரம்பிக்கிறார்.
பகவத்கீதையின் முதல் அத்தியாயத்திற்குப் பிறகு இப்போதுவரை ஸஞ்சயன் பேசவே இல்லை. ஆனால் இங்கே அவர்தான் பேசுகிறார். இதுவொரு அடையாள குறியீடு.
அளவு கடந்த ஆனந்தத்தால், அர்ஜுனன் பேசமுடியாமல் இருக்கிறார். கிருஷ்ணரின் குரலோ, நம்மால் கேட்கமுடியாத, பிரபஞ்ச அலைவரிசையின் நிலையில் இருக்கிறது. ஆகவே சஞ்சயன் விளக்குகிறார்.

கடவுளை உணரலாம் வாருங்கள்
கேள்வி: சுவாமி, கடவுள் என்பது ஆனந்தம், கடவுள் என்பது அன்பு என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனந்தத்தையும், அன்பையும் அனுபவ ரீதியாக உணரும்போது நாமும் கடவுளாகி விடுகிறோமா?
ஆமாம். நீங்கள் உண்மையான அன்பையும், ஆனந்தத்தையும், உணரும்போது கடவுள் உணர்வில் இருப்பீர்கள். அதில் சந்தேகமே இல்லை.
> நீங்கள் உண்மையான
> அன்பையும்
> ஆனந்தத்தையும்,
> உணரும்போது
> கடவுள் உணர்வில்
> இருப்பீர்கள்.
> அதில் சந்தேகமே இல்லை.
கடவுள் அன்பு வடிவானவர் என்றுதான்
எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். நமக்கு
கடவுளைத் தெரியாது. கடவுள் நமக்கு
முன்பின் தெரியாத யாரோ ஒருவர். 'கடவுளே'
என்ற வார்த்தையை நாம் சொல்லும்போது,
அது வெறுமையாகவும் காலியாகவும்தான்
இருக்கிறது. ஏனென்றால் கடவுளைப் பற்றிய
அனுபவம் நமக்கு இல்லை.
ஆனால் 'அன்பு' என்ற வார்த்தையில்
அர்த்தம் இருக்கிறது. அதிலொரு
உயிர்ப்பு இருக்கிறது. அதை முழுமையாக
அனுபவிக்காவிட்டாலும் கூட,
ஏதோவொரு சமயமாவது நாம் அன்பை
அனுபவித்திருக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை, கடவுள் என்பது ஒரு கருத்தாக மட்டும்தான் இருக்கிறது; அது நமக்குள் அனுபவமாக மலரவில்லை.
ஆனால் அன்பை எல்லோரும் கொஞ்சமாவது அனுபவித்திருக்கிறோம். அது கலப்படமான அன்பாக இருந்த போதிலும், களங்கமில்லாத அன்பாக இல்லாத போதும், அன்பு உணரப்பட்டு இருக்கிறது.
கலங்கிய குட்டை நீராக இருந்தாலும், அதுவும் தண்ணீர்தான் என்பதைப்போல காம இச்சையோடு இருந்தாலும் அன்பு, அன்புதான். தெய்வீகத்தின் ஸாந்நித்யம் அதில் கொஞ்சமாவது இருக்கும்.
இருட்டில் கொஞ்சம் ஒளி இருந்தாலும், அதை இருட்டு என்று சொல்ல முடியாது. அதே போலத்தான் அன்பும்.
அன்பு செலுத்த, செலுத்த நீங்கள் பிரபஞ்ச உணர்வின் புரிதலுக்கு அருகில் வருகிறீர்கள்.
ஒரு இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ இருப்பதால் மட்டுமே, நாம் எதையும் சாதிப்பதில்லை. அது வெறுமனே காலாவதியாகிப்போன கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகும். அவ்வளவுதான்.
அன்பு செலுத்த, செலுத்த நீங்கள் பிரபஞ்ச உணர்வைப் பற்றிய புரிதலுக்கு அருகில் வருகிறீர்கள்.
ஆனால் ஒரு குருவிடம் அன்பு செலுத்தும் போதோ, கடவுளிடம் அன்பு செலுத்தும் போதோ உங்களுக்குள் கண்டிப்பாக ஏதோ ஒன்று திறக்கும். உங்களுடைய இதயம் வளர்ச்சி அடையத் தொடங்கும். உங்கள் இதயம், உன்னதமான தன்னுடைய மஹிமையில் மலரும்போது, நீங்கள்தான் இயேசுவாகவும், நீங்கள்தான் கிருஷ்ணராகவும் மலர்கிறீர்கள்.
நான் இங்கே கிறிஸ்தவர்களை உருவாக்குவதற்காக வரவில்லை; கிறிஸ்துவை உருவாக்குவதற்காகவே வந்திருக்கிறேன். நான் புத்தர்களை உருவாக்க முயற்சி செய்கிறேனே தவிர, பௌத்தர்களை உருவாக்க அல்ல.
மரங்களோடு நீங்கள் தர்க்க ரீதியாகத் தொடர்புகொள்ள முடியாது; ஆனால் அவற்றோடு தொடர்புகொள்ள வேறு வழிகள் இருக்கின்றன. நீங்கள் திறந்த தன்மையோடு இருந்தீர்களானால், மரத்தின் இருப்பை உணர்ந்தீர்களானால், அந்த மரத்தின் தன்மையை உணர்ந்தீர்களானால், அந்த மரத்தை நீங்கள் ஆரத்தழுவினீர்களானால் அதனுடைய இருப்புத்தன்மையை உங்களால் உணரமுடியும். கண்களை மூடி எளிமையாக அதனுடைய இருப்புத் தன்மையை உணருங்கள், இது போதும். நீங்கள் அதனோடு முழுவதுமாக வேறு ஒரு தளத்தில் தொடர்பு கொண்டிருப்பீர்கள். பிறகு பாறைகளும்கூட உங்களோடு பேச ஆரம்பித்துவிடும்.

திடீரென்று, இந்த முழுப் பிரபஞ்சமுமே உயிரோடு இருப்பதைப் பார்ப்பீர்கள். எல்லாமே உயிர்ப்போடுதான் இருக்கிறது; எப்போதுமே எதுவுமே இறப்பதாக இல்லை. அந்த வாழ்க்கைத்தான் பிரபஞ்ச விழிப்புணர்வு என்பதாகும்.
கீழை நாடுகளில் நாங்கள் இதைப் 'புத்தத் தன்மை' என்று சொல்கிறோம். கிறிஸ்துவ மதத்தில் இதைக் 'கிறிஸ்துவின் விழிப்புணர்வு உணர்வுநிலை' என்று சொல்கிறார்கள். இந்துக்கள் இதைக் 'கிருஷ்ண விழிப்புணர்வு உணர்வுநிலை' என்று சொல்கிறார்கள்.
கிருஷ்ணர், இயேசு, புத்தர் இவர்கள் எல்லோரும் ஒரே தன்மையின் பன்முக வெளிப்பாடுகளே. அவர்கள் மனிதர்கள் என்ற எல்லைக்குள் அடங்க மாட்டார்கள். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் இருப்புநிலையில் இருப்பவர்கள்.
யாரையும் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. நிஜமான விஷயம் என்னவென்றால், ஒரு பின்பற்றுபவராக இல்லாமல், உடன் பயணிப்பவராக இருந்து இயேசுவை நேசிக்க வேண்டும், கிருஷ்ணரை நேசிக்க வேண்டும், புத்தரை நேசிக்க வேண்டும். ஏனென்றால் அதே புனித யாத்திரையில்தான், அதே பயணத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.
இயேசு கிறிஸ்துவாக மாறுவதற்கு முன்னால் அவர் எந்தப் பாதைகளைக் கடந்து போனாரோ, அதே பாதைகளைத்தான் நீங்களும் கடக்கப் போகிறீர்கள், அதன் பிறகுதான், நீங்கள் ஆனந்தத்தை அடைகிறீர்கள்.
ஆனந்தம் பிரபஞ்சம் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது
ஆனந்த அனுபவத்தை, ஒருவர்டைந்தே ஆக வேண்டும். ஒருவர் அந்த மகத்தான ஆன்மீக அனுபவத்திற்குத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். தியானம் அதற்காக வெறுமனே அடித்தளத்தைத் தயார் செய்கிறது. உங்கள் கண்களைத் திறக்க உதவுகிறது.
அதுவொரு குணப்படுத்தும் நிகழ்வு.
உங்கள் கண்கள் குணமாகிவிட்டால், பிறகு
அது என்னவென்பதை நீங்களே தெரிந்து
கொள்வீர்கள்.
புத்தரிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி: "ஆனந்தம் என்றால் என்ன?" என்பது தான்.
> யாரையும்
> பின்பற்றுவதால் எந்தப்
> பயனும் இல்லை.
> அவர்களை
> நேசிக்க வேண்டும்
> உடன் பயணிப்பவராக
> இருந்து!
அதற்கு புத்தர் எப்போதும் சொல்கிற பதில்: “சில மாதங்கள், சில வருடங்கள் என்னோடு வந்து மௌனமாக இருங்கள், நீங்கள் கனிந்து, சரியாக அதைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமடையும்போது, நானே சொல்கிறேன்,” என்பதுதான்.
பலர் அவரோடு தங்கினார்கள். ஆனால் புத்தர் ஒருமுறைகூட ஆனந்தம் என்றால் என்ன என்று அவர்களுக்குச் சொல்லவில்லை.
ஒருநாள் புத்தர் அவர்களைப் பார்த்து, “இப்போது ஆனந்தம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் “அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால், நாங்களாகவே புரிந்துகொண்டோம். நீங்கள் தந்திரமாக, எங்களை ஆனந்தத்திற்குள் அழைத்துச் சென்றதற்கு உங்களுக்கு நன்றி. நீங்கள் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் அமைதியோடு இருப்பதற்கும் சலனமில்லாமல் இருப்பதற்கும் உதவி செய்தீர்கள்,” என்று சொன்னார்கள்.
நீங்கள சலனமில்லாமலும் மௌனமாகவும் இருக்கும்போது உங்களுக்குள் ஏதோ பொங்குகிறது. அதுதான் ஆனந்தம். அதுதான் உங்களுடைய ஆழமான இயல்பான நிலை.
ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதுவொரு அனுபவம்; தத்துவம் கிடையாது. இதுவொரு கருத்தும் கிடையாது. இதை எந்த வேத நூல்களிலும் அடைத்து வைக்க முடியாது.
ஆனால் அது பிரபஞ்ச இருப்பு முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது; மரத்தின் ஒவ்வொரு இலையிலும், கடற்கரையின் ஒவ்வொரு கூழாங்கல்லின் மீதும் எழுதப்பட்டிருக்கிறது.
உங்களுடைய இருப்புத் தன்மையின் அடி ஆழத்தில் அதை அனுபவித்திருந்தால் மட்டுமே, அதை உங்களால் பார்க்க முடியும். அதன் பிறகுதான் எல்லா இடங்களிலும் பார்ப்பீர்கள். பிறகு இந்த முழுப் பிரபஞ்சமுமே ஆனந்தத்தால் உருவாக்கப்பட்டதுதான், வேறெதுவுமில்லை. என்பதைப் பார்ப்பீர்கள்.
உங்களுக்குள்ளே ஆனந்தம் பாடலாக எதிரொலித்துக் கொண்டிருக்கட்டும், உங்களுக்குள் அது நிரந்தரமாக நிலைக்கட்டும், உங்களுக்குள் நித்யானந்தமாய் இருக்கட்டும்.