KAILASA Library/பகவத் கீதை/சுடர்விடும் சூரியன்கள்Sign in
பகவத் கீதை

சுடர்விடும் சூரியன்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

ஸஞ்சயன் சொன்னது:

11.9 அரசனே, அர்ஜுன் இவ்வாறு சொன்ன பிறகு, யோகத்திற்கே தலைவனாக விளங்கும் கிருஷ்ணர் பார்த்தனுக்குத் தம்முடைய மேலான பிரபஞ்ச வடிவைக் காட்டி அருளினார்.

11.10. அந்த வடிவம் அநேக வாய்களோடும் கண்களோடும் உடையது; பல அதிசயக்கத்தக்க அற்புதக் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, அநேக தெய்வீக ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தது.

11.11 திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்து, திவ்யமான வாசனை திரவியங்கள் பூசி, பெரும் வியப்பூட்டுவதாக, பிரகாசிப்பதாக, முடிவில்லாததாக, எங்கும் முகமுடையதாக ஜொலித்துக் கொண்டிருந்த இந்தப் பிரபஞ்ச வடிவத்தை அர்ஜுனன் கண்டார்.

11.12 வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.

11.13. அங்கு தேவ தேவனுடைய தேகத்தில், மொத்தப் பிரபஞ்சமும் தன்னுடைய எல்லையற்ற பாகங்களுடன், திகழ்ந்துகொண்டிருப்பதை பாண்டவனான அர்ஜூனன் பார்த்தார்.

11.14 பிறகு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கி, கைகூப்பிப் பேசினார்.

peacock feather

முழுப் பிரபஞ்சமும் உங்களுக்குள் இயங்குகிறது

இந்த வரிகள், எல்லையில்லாத, முடிவில்லாத, வியப்பூட்டும், எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் தன்மையைக் காட்டுகிறது.

இராமகிருஷ்ணர் இந்தப் பிரபஞ்சவடிவ அனுபவத்தை உணர்ந்தபோது, அவரால் செடியில் இருந்து ஒரு பூவைக்கூட பறிக்க முடியவில்லை என்றும், அவருக்கு எல்லாப் பூக்களுமே கடவுளுக்குச் சூட்டப்பட்ட மாலையாகவே தெரிந்ததாகவும் சொல்கிறார்.

இந்த அனுபவத்தைப் பெற்ற ஒவ்வொருவரும் மறுபடியும் புதிதாகப் பிறக்கிறார்கள். ஒரு நிலையில் இந்த அனுபவம் எல்லையில்லா தன்மையோடு இருக்கிறது. உடல் விரிவடைந்து எல்லாவற்றையும் நிரப்புகிறது. இந்த முழுப் பிரபஞ்சமுமே உடலின் ஒரு பாகமாக மாறுகிறது. முழுமைக்கும், தனிப்பட்டதற்கும் எந்தப் பிரிவினையும் இல்லை, ஒரு பாகமே முழுமையாகவும், முழுமையே ஒரு பாகமாகவும் இருக்கிறது.

மற்றொரு நிலையில் முழுப் பிரபஞ்சமும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. உங்களைச்சுற்றி நீங்கள் பார்க்கும் எல்லாமே நீங்களாகவே இருப்பீர்கள். குடிசைக்கு வெளியில் இருக்கும் புல், தூரத்தில் இருக்கும் நாய், பின்னால் இருக்கும் மரம், ஒவ்வொரு தனித்தனி பொருளும், உயிருள்ள, மற்றும் உயிரற்ற பொருள் என எல்லாமே உங்களின் ஒரு பாகமாகவே மாறி உங்களுக்குள் எதிரொலிக்கும்.

நான் என் த்யான சிகிச்சையாளர்களிடம் பேசும்போது, மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்வது, மிருகங்களுக்கும் உடம்பு, மனது, ஆன்மா இருக்கிறது. அதனால் அவற்றைக் கொன்று சாப்பிட்டால் பாவம் வந்துசேரும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அல்ல;

இறந்த மிருகங்களின் மாமிச சக்தியானது, த்யானசிகிச்சை சக்திக்கு உதவாது என்ற என்னுடைய அனுபவத்திலிருந்துதான் அதைச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

இது ஒழுக்க நெறிகளோடு சம்பந்தப்பட்டதில்லை. இந்தக் கோணத்தில் பார்த்தால், மாமிசம் சாப்பிடும் மிருகங்கள் என்ன பாவிகளா? நிச்சயமாகக் கிடையாது!

நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் உயிர் இருக்கிறது. ஒவ்வொரு பொருளிலும் உயிர் இருக்கிறது. அது கல்லானாலும் பூமியானாலும், மரம், பூச்சி, மிருகம் என்றுஎதுவாக இருந்தாலும் சரி, அதில் உயிர் இருக்கிறது!

நாம் ஒரே சக்தியைத்தான் பகிர்ந்து கொள்கிறோம்; நாம் அவற்றோடு பகிர்ந்துகொள்ளும் சக்தியும், அவை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சக்தியும் ஒன்றுதான். ஒருவர் பிரபஞ்சக் கூட்டு விழிப்புணர்வை அனுபவமாகப் பெறும்போது, நாம் எல்லோரும் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார். நாம் எல்லோரும் ஒன்றே.

அந்த மனநிலையில் பூக்களைப் பறிப்பதுகூட வலி ஏற்படுத்தும். ஒரு கொடிய மிருகம்கூட உங்கள் சாநித்தியத்தில், உங்களுடன் அமைதியாக ஒத்துப்போகும். இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வில் எந்த வன்முறையும் இல்லை; எதையும் ஏற்றுக் கொள்ளும் மற்றும் சேர்த்துக்கொள்ளும் தன்மை மட்டுமே அதனிடம் இருக்கிறது.

இதைத்தான் அர்ஜுனன் விச்வரூப தர்சனத்தில் பார்த்தார். அந்தப் பிரபஞ்ச வடிவில் கணக்கிலடங்காத வாய்களும் கண்களும் அற்புதமான காட்சிகளும் அடங்கியிருக்கக் கண்டார்.

அந்த வடிவம் பல தெய்வீக ஆபரணங்களை
அணிந்திருந்தது. தெய்வீக ஆயுதங்களை
ஏந்தி இருந்தது. திவ்யமான மாலைகளும்,

> ஒருவர் பிரபஞ்சக்
> கூட்டு விழிப்புணர்வை
> அனுபவமாகப் பெறும்போது,
> நாம் எல்லோரும்
> ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்
> என்பதை
> உணர்ந்து கொள்கிறார்.

ஆடைகளும் அணிந்திருந்தது.

பலவிதமான தெய்வீக வாசனை
திரவியங்களை உடலெங்கும் பூசியிருந்தது.
எல்லாமே பெரும் வியப்பூட்டுவதாகவும்
பிரகாசிப்பதாகவும் எல்லையற்றதாகவும்
எல்லாமுமாக வியாபித்தும் இருந்தது.

அர்ஜுனன், கிருஷ்ணரிடம் எண்ணற்ற வாய்களையும் கண்களையும் மட்டுமல்ல, இடது வலது, மேல் கீழ், முன் பின் என்று 360 டிகிரியில் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பக்கங்களிலும் உள்ளவற்றைப் பார்த்தார்.

பிரபஞ்ச
விழிப்புணர்வில்
எந்த வன்முறையும்
இல்லை; எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மற்றும்
சேர்த்துக்கொள்ளும்
தன்மை மட்டுமே
அதனிடம் இருக்கிறது.

அவர் இந்த முழுப் பிரபஞ்சத்தையும், போர்க்களத்தில் உள்ள எல்லா மக்களையும் எல்லோரையும் பிரபஞ்ச விழிப்புணர்வாக இருந்த கிருஷ்ணருக்குள் பார்த்தார்.

அவர் முழு உலகையும் தம்முடைய சொந்த ‘இருப்பா’கவே உணர்ந்தார் .