KAILASA Library/பகவத் கீதை/வார்த்தைகளால் விவரிக்கமுடியாதுSign in
பகவத் கீதை

வார்த்தைகளால் விவரிக்கமுடியாது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்திற்கு எல்லையே இல்லை. விஷ்ணு என்கிற சொல்லுக்கு எல்லையில்லாமல் விரிவடைபவர் என்றுதான் அர்த்தம். அதுதான் அவருடைய உண்மையான வடிவம்.

ஸஞ்சயன் சொல்லும் இந்த அற்புதக்காட்சி, மனித மனத்திற்கு தெரிந்த அத்தனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருந்தது. ஏனென்றால் அதுவே அற்புதங்களின் பிறப்பிடமாக இருக்கிறது.

கவனியுங்கள், இந்த வார்த்தைகளை அர்ஜுனன் சொல்லவில்லை, ஸஞ்சயன் சொல்கிறார். போர்க்களத்தில் நடப்பதை எல்லாம் பார்க்கும் சக்தி ஸஞ்சயனுக்கு கொடுக்கப்பட்டிருந்ததால், அவர் போர்க்களத்திற்கு வெகு தூரத்தில் இருந்துகொண்டு இதையெல்லாம் மன்னர் திருதராஷ்டிரருக்குச் சொல்கிறார்.

இப்போது ஸஞ்சயனும் விச்வரூப தர்ச‘னம் காணும் கிடைத்தற்கரிய பாக்கியம் பெறுகிறார். அர்ஜுனனுக்கு மட்டுமே விச்வரூப தர்ச‘னம் வழங்கப்பட்டதாகக் கிருஷ்ணர் சொன்னாலும், அதிர்ஷ்டவசமாக ஸஞ்சயனுக்கும் அந்தக் காட்சியைக் காண்பதற்கரிய பெரும் பேறு கிடைத்தது.

அர்ஜூனன் பயபக்தியில் அமைதியாக இருந்தார். அவர் இனிமேல்தான் பேசவேண்டும். எதை அவர் சாட்சியாகயிருந்து பார்த்தாரோ, அது அவரின் கற்பனைக்கெட்டாத, அவர் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருந்தது.

ஆனால், அந்த அமைதி செயல்திறன் மிக்க அமைதியாக இருந்தது. அந்த அமைதியில்தான் அவர் கிருஷ்ணரின் ஸத்யத்தை உணர்ந்தார். அது, செயல்திட்டத்தில் மிகத் திறனோடு கலந்துகொண்டு அதிலேயே கரைந்துவிட்ட ஒரு அமைதியாக அர்ஜூனனுக்கு இருந்தது.

யாரெல்லாம் இதை மனத்தின் மூலம் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். அவர்களால் இதெப் புரிந்துகொள்ள முடியாது. அது அனுபவத்தின் வெளிப்பாடாகவே இருந்தாலும்சரி, அது தர்க்கத்திற்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

தமிழில் இதுபோன்ற அனுபவங்களைச் சொல்வதற்கு ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்று சொல்வார்கள்.

மிகப் பெரும்பாலான விஷயங்களில் அதுவே உண்மை. ஆனால் இந்த நிகழ்வு விதிவிலக்கானது. என்ன அனுபவமாகப் பெறப்பட்டதோ, அது மனிதகுல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டது.

மனிதகுலத்திற்கு ஒரு நம்பிக்கையை அளிக்க வேண்டுமென்பதற்காகவே வெளிப்படுத்தப்பட்டது. அர்ஜூனனால்கூட, கடவுளின் கருணை இருந்ததால் மட்டுமே அதை அனுபவமாகப் பெற முடிந்தது.

இப்படிப்பட்ட அனுபவம் குறிப்பிட்ட
ஒரு மதத்திற்கே மட்டும் உரியதல்ல.
இதுவரையில், அர்ஜூனன் கிருஷ்ணரது
தெய்வீக வடிவத்தை அவருக்குத் தெரிந்த
வகையில் மட்டுமே பார்க்கிறார்.

கிருஷ்ணர், அர்ஜூனன் சௌகரியமாக உணர
வேண்டுமென்பதற்காகவே படிப்படியாகச்
சிரமமில்லாமல் அழைத்துச் செல்கிறார்.

text box

மௌனம் செயல்திறன் மிக்க மௌனமாகும்போது நமக்கு ஸத்யங்கள் புரிபடத் தொடங்குகின்றன.

வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் உருவமில்லா இந்தத் தெய்வீக சக்தியை வேறு ஒரு வகையில் அனுபவமாகப் பெறுவார்.

அனைத்திற்கும் ஆதாரமாகவும், அனைத்தையும் கடந்ததாகவும் இருப்பது ஒரே இறைசக்திதான்.

கிருஷ்ணரின் விச்'வரூப தர்ச'னத்தைக் கண்ட அர்ஜுனனின் நிலையை ஸஞ்சயன் கடைசி சில வரிகளில் விவரிக்கிறார். அர்ஜுனன் தொடர்ந்து ஆழ்ந்த அமைதியில் இருக்கிறார். ஸஞ்சயனே என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.

அர்ஜுனன் கண்ட காட்சி, அவருடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவருக்கு, எங்குப் பார்த்தாலும் கிருஷ்ணரின் வடிவமே தெரிந்தது. கிருஷ்ணர், பல்வேறு உருவங்களாகவும், உருவமே அற்றவராகவும் தெரிந்தார்.

அர்ஜுனன் பார்த்ததை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மனத்தைத் தாண்டி, தர்க்க அறிவைத்தாண்டி, வார்த்தைகளைத் தாண்டி, நம்முடைய எல்லாப் புரிதல்களையும் தாண்டி இருக்கும் ஒன்றை ஒருவர் எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்?

பரமாத்மாவின் உடலில் இந்த முழுப் பிரபஞ்சமும் பலவிதங்களில் பிரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் ஒரே வடிவத்தில் ஒன்று கூடி இருப்பதையும் அர்ஜுனன் பார்த்தார்.

சூரியன், சந்திரன், பூமி, கிரகங்கள் மற்றும் அண்ட வெளியிலுள்ள பிற பொருட்கள் என பல்வேறு விதமாக இந்தப் பிரபஞ்சம் பிரிந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கே ஒரே வடிவமாக அவர் பார்க்கிறார்.

தர்க்க அறிவைத்தாண்டி,
நம்முடைய எல்லாப்
புரிதல்களையும் தாண்டி
இருக்கும் ஒன்றை
வார்த்தைகளால்
விவரிக்க முடியாது.

இந்த அழகான வர்ணனையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு நாம் த்யானத்திற்குள் நுழைவோம். அர்ஜுனன் பெற்ற காட்சியின் ஒரு துளி தர்ச'னத்தை நாமும் பெற பரப்ரம்ம கிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்.

அர்ஜுனனால் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையானதாகவும், அதேசமயம்

பிரிவினைகளோடும் பார்க்க முடிந்தது. ஒரு
பொருளின் உடைந்த துண்டு பகுதியிலேயே
கூட, அப்பொருளின் முழுமைத்தன்மை
பாதுகாக்கப்படுகிறது. இதனைப் பற்றி
விளக்குவதற்கு இன்று நாம் பரவலாகப்
பயன்படுத்தும் இந்த ஹாலோகிராம்
என்ற வார்த்தையால்கூட அர்ஜூனன்
கண்ட காட்சியை விவரிக்க முடியாது.
ஹாலோகிராமில், ஒருவர் ஒரு பொருளின்
முழுமைத்தன்மையை அதன் ஒரு
இழையிலேயே பார்க்க வேண்டும் என்றால்,
அதற்காக அவர் பெருமுயற்சி எடுத்தாக
வேண்டும்.

விச்வரூப தர்சனத்தில்,
அந்த
முழுமைத்தன்மையானது
எந்தப் பிரிவுமில்லாமல்,
அத்தனை பாகங்களுடன்
முழுமையாக
வெளிப்படுத்தப்பட்டது.

ஆனால் அர்ஜூனனுக்கு வழங்கப்பட்ட விச்வரூப தர்சனத்தில், அவர் எந்தவித பெருமுயற்சியும் எடுக்காமல் அந்த முழுமைத்தன்மையானது எந்தப் பிரிவுமில்லாமல், அத்தனை பாகங்களுடன் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது.

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அத்தனை பேர் இருந்தாலும், அர்ஜூனனுக்கு மட்டும்தான் விச்வரூபதர்சனத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு மட்டுமே பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணருக்குள் பார்க்கும் வரம் கிடைத்தது.

அர்ஜூனன் பார்த்த காட்சி அவரை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவரும் அந்தக் காட்சியின் ஒரு பாகமாகவே மாறிவிட்டார். அவரே பார்வையாளராகவும், எது பார்க்கப்பட்டதோ அதுவாகவும் இருந்தார்.

மேலும் அவரே அந்த அனுபவமாகவும் இருந்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே அர்ஜூனனும் கிருஷ்ணரும் ஒன்றாக வளர்ந்தார்கள். கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரைதான் அர்ஜூனனின் மனைவி. இருவருக்கும் இடையில் ஆழமான நட்புறவு இருந்தது.

இந்த ஒரு நொடியில்அந்த உறவு மாற்றி அமைக்கப்பட்டது.