KAILASA Library/பகவத் கீதை/பட்டறிவு ஓய்வெடுக்கட்டும்Sign in
பகவத் கீதை

பட்டறிவு ஓய்வெடுக்கட்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna and Radha illustration

கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவுமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். அர்ஜுனன், போர் ஆரம்பிப்பதற்கு முன்பு கிருஷ்ணருடன் நட்பு ரீதியான சகபாவத்தில் இருந்தார் என்று இதற்கு முன் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் இப்போது கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவுமுறை எப்படி மாறி அமைந்துள்ளது?

குருவிற்கும், சிஷ்யருக்கும் இடையே ஐந்து விதமான உறவுகள் உண்டு. இந்த உறவுகளை, பாவனைகள் என்று சொல்வார்கள்.

குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே நடக்கும் மன ரீதியான நாடகத்தில், இந்த பாவனைகள் ഇവர்களின் பாத்திரங்களை நிர்ணயிக்கின்றன.

வாத்ஸல்ய பாவம், மாத்ரு பாவம், தாஸ பாவம், ஸக பாவம், மதுர பாவம் என்று ஐந்து பாவங்க‌ள் உண்டு.

யசோதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் இருந்ததுபோல ஒரு தாய் குழந்தையிடம் வைத்திருக்கும் பாவம் வாத்ஸல்ய பாவம். எனப்படுகிறது. அந்தத் தாய், அக்குழந்தையைப் பெற்றவராக இருக்கவேண்டியதில்லை. யசோதை, கிருஷ்ணரைப் பெற்றெடுத்த தாய் இல்லை. இது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக மற்றொரு ஜீவனுக்கான பொறுப்பெடுத்தலைக் குறிக்கும் உறவாக இருக்கிறது.

குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே நடக்கும் மன ரீதியான நாடகத்தில், இந்த பாவனைகள் இவர்களின் பாத்திரங்களை நிர்ணயிக்கின்றன.

ஒரு குழந்தை தாயிடம் வைத்திருக்கும் உறவு, மாத்ரு பாவம். இராமகிருஷ்ணர் அன்னை காளியிடம் இது மாதிரியான உறவைத்தான் வைத்திருந்தார்.

இராமகிருஷ்ணர் அன்னை காளிக்கு உணவு படைப்பதற்கு முன்னால், காளி சிலையின் மூக்கின் கீழ் நூலை வைத்து அன்னை சுவாசிக்கிறாளா என்று பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம். இந்த உறவுமுறை முழுமையாக நம்பிக்கையைச் சார்ந்தது.

அனுமானுக்கு இராமரிடம் இருந்த முழுமையான பக்தி தாஸ பாவத்திற்கு உதாரணம். அதாவது, இது எஜமானர்-வேலைக்காரர் இடையில் இருக்கும் உறவு.

இந்த எல்லா உறவுகளிலுமே, தாஸ பாவமே
அடிப்படையான, நிலையான உறவாக
இருக்கிறது. மேலும் ஏற்றுக் கொள்ளும்
தன்மையும் சரணாகதியும் கொண்டதாகவும்
இருக்கிறது.

கிருஷ்ணரிடம்
அர்ஜுனனுக்கு
இருந்த நட்பு ரீதியான
உறவுமுறைதான்
ஸகபாவம்.

கிருஷ்ணரிடம் அர்ஜுனனுக்கு இருந்த நட்பு ரீதியான உறவுமுறைதான் ஸகபாவம். இது நட்பு ரீதியாக ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் சமமான உறவுமுறையை அளிக்கும் உறவு.

இறுதியாக, மதுர பாவம் என்பது காதலனிடம் காதலிக்கு இருக்கும் அன்பு. மீராவிற்கும், கோபிகைகளுக்கும்க்கும் கிருஷ்ணரிடம் இருந்த அன்பு மதுர பாவமே. 'தான்' என்ற உணர்வு முழுமையாகக் கரைந்த நிலையே மதுர பாவம் எனப்படுகிறது.

எல்லா நேரங்களிலும், இடங்களிலும் ஒரே பாவமே முழுமையாக இருப்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அனைத்து பாவங்களும் கலந்தே இருக்கின்றன.

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், அர்ஜுனன் கிருஷ்ணருடைய விஸ்வரூப தர்சனத்தைப் பார்த்த அந்த நொடியில் நட்பைப் பற்றிய எல்லா நினைவுகளும் மறைந்தது; அவர் ஒரு வேலைக்காரராகவே, தாஸராகவே மாறினார்.

கைகள் நடுங்க, ரோமம் சிலிர்க்க, கண்ணில் நீர்வழிய, தாம் என்ன பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் அர்ஜுனன் மலைத்துப் போனார்.

தம்முடைய நண்பரான கிருஷ்ணர் முன்னால், கைகளைக் கூப்பி, தலை வணங்கி, தம்மை மறந்த பரவச நிலையில் பேசத் தொடங்கினார்.

அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்துப் பயப்படவில்லை. இப்போது கிருஷ்ணரைப் பற்றி அவருள் தோன்றிய சிந்தனைகள் அவருடைய மனத்திலிருந்து வரவில்லை. அவரையும் அறியாமல், அவருடைய உள்ளுணர்வில் இருந்து வந்தது.

இரவும் பகலுமாக முயற்சி செய்தாலும், உங்களால் உங்களுடைய முடியைச் சிலிர்க்க வைக்க முடியாது. தம்மை மறந்த பரவச நிலையை வரவழைக்க முடியாது. அர்ஜுனன் பக்திப் பூர்வமான பயத்தில் இருந்தார். ஈடு இணையல்லாத ஒரு சக்தியின் முன்னால் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார்.

இதற்கு முன்னால், இது போன்ற எதையும் அவர் அனுபவித்ததில்லை. அவர் மனம் செயல்படாத போது, அவர் இருப்புத் தன்மை முழுமையாகத் திறந்து கொண்டது.

உண்மையில் அர்ஜுனன் அந்தக் கணத்தில் எல்லா பாவங்களையும் (Bhava) கடந்திருந்தார். ஐந்து பாவங்களையும் கடந்து, அவர் அதற்கும் மேலான மஹா பாவத்தில் இருந்தார்.

Illustration of Krishna's hands playing flute