பயத்தால் உலகங்கள் நடுங்குகின்றன
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

11.15 அர்ஜுனன் சொன்னது :
கடவுளே, உம்முடைய உடலில் எல்லாக்கடவுள்களையும், பலவிதமான ஜீவன்களையும் பார்க்கிறேன், தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் படைப்பின் கடவுளான பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
11.16 எண்ணிலடங்கா கைகளோடும் வயிறுகளோடும் வாய்களோடும் கண்களோடும் உம்முடைய எல்லையில்லா உருவத்தை எல்லாப் பக்கத்திலிருந்தும் பார்க்கிறேன்.
ஓ பிரபஞ்சத்தின் வடிவானவனே, ஓ பிரபஞ்சத்தின் கடவுளே! உம்முடைய தொடக்கத்தையோ, இடைப்பட்டதையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.
11.17 கிரீடம் அணிந்து, கதாயுதம் தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், தகிக்கும் சூரியாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்கிறேன்.
11.18 தாங்கள் அழியாதவர், அறியத் தகுந்த பரம்பொருள் நீரே! இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம். தர்மத்தைக் காக்கும் மாறாத அழிவில்லாத ரட்சகர். நீங்கள் அழிவில்லாத பரமாத்மா என்பதை நான் நம்புகிறேன்.
11.19 ஆதி நடு அந்தம் இல்லாதவராகவும், எல்லையில்லாச் சக்தியை உடையவராகவும், எண்ணில்லாக் கைகளை உடையவராகவும், சூரிய சந்திரர்களையே கண்களாக உடையவராகவும், தீப்பிழம்பை வாயாகப் படைத்தவராகவும், உமது தேஜஸினால் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவராகவும் உம்மை நான் பார்க்கிறேன்.
11.20 விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் இந்த வெளியும், மற்ற அனைத்தும் உம்மாலே நிரம்பப் பெற்று இருக்கின்றன. மஹாத்மாவே, உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூன்று உலகும் நடுங்குகிறது.
11.21. தேவ கூட்டங்கள் உம்மிடம் புகுகின்றனர்; சிலர் அஞ்சி கைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். மகரிஷிகளும், முனிவர்களும் வாழ்க என்று உம்மைப் போற்றுகிறார்கள்.
11.22 உருத்திரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ஸாத்யர்கள், விச்வதேவர், அஸ்வினிதேவர்கள், மருத்கள், ஊஷ்மபர், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அஸுரர்கள், ஸித்தர்கள் இவர்கள் எல்லோரும்கூடி நின்று வியப்போடு உம்மையே பார்க்கிறார்கள்.
11.23 பெரிய தோள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் பல வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
11.24 ஓ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும் ஜொலிக்கிற பெரிய கண்களையும் பல நிறங்களோடு பிரகாசிக்கிற உம்மைக் கண்டு மனம் நடுங்குகிறது. என்னுள் தைரியத்தையும் அமைதியையும் என்னால் காண முடியவில்லை. நான் மிரண்டுபோய் இருக்கிறேன்.
எல்லா வாழும் உயிர்களையும் பார்க்கிறேன்
பரமாத்மா இருக்கும் அதே உணர்வுநிலையில் அர்ஜூனனும் இருப்பதால் இந்த வரிகள் 'பகவான் சொன்னது' (பகவான் உவாச) என்றே தொடங்கி இருக்க வேண்டும்.
இந்த வார்த்தைகள் நம்முடைய மனத்தில் நாம் பதிவு செய்து கொள்வதற்காகவே, பகவானிடம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவ்விதமாக அழகான முறையில் அவர் தெய்வீக ரூபத்தை வர்ணிக்கிறார். அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வியப்படையலாம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த தரிசனம் மற்றும் அனுபவத்தை அடைவதற்கும், இந்தப் பாதையில் செல்வதற்கான செயல்களைச் செய்வதற்கும் நம்மை உத்வேகமூட்டுவதற்காகவே அவர் இப்படிச் செய்கிறார்.
அர்ஜுனன், என்றும் அழியாத, எல்லாவற்றிற்கும் மூலமான, நிலையான, எல்லாம்வல்ல இருப்புத் தன்மையான புருஷரைப் பார்க்கிறார்.
அர்ஜுனன் நமக்கு வழிகாட்டுகிறார். அவர் சொல்கிறார், பகவானே, உமது உடலில் எல்லாக் கடவுளையும் பார்க்கிறேன்; எல்லா ஜீவ தொகுதிகளையும் பார்க்கிறேன்; தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவைப் பார்க்கிறேன்; எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
பிரபஞ்சக் கடவுளே, எண்ணிலாக் கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையிலா வடிவத்தைப் பார்க்கிறேன். பிரபஞ்ச வடிவே, உமது தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.
உண்மையிலேயே, நீங்கள் 360 டிகிரி கோணத்தில் மேலும் கீழும், இடதும் வலதும், எல்லாத் திசைகளிலும் பார்க்க ஆரம்பிக்கும்போது, தொடக்கம், முடிவு, நடுப்பகுதி என்பதே இல்லை. அது ஒரு தொடர்த் தொகுதி
ஒரு சிறப்பு திரைப்படத்தை ஒரு வட்ட வடிவமான திரையில் பார்ப்பது போன்றது. அதில் எந்த இடத்தை தொடக்கம், எது மத்திமம், முடிவு என்று NIRNAYIPPEERGAL. ADHUVORU MUDIVILLAADHA VATTAM.
முடிவில்லா அந்த வட்டத்திற்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, அதனால் நடுப்பகுதியும் இல்லை. தொடக்கமும், முடிவும் இல்லாதபோது நடுப்பகுதியைப் பற்றி பேசுவது அர்த்தமில்லாதது.

தகிக்கும் சூரியனைப் போல், அளவிடமுடியாத ஒளிப்பிழம்பாக எல்லாப் பக்கமும் பரவி இருந்த அந்த ரூபத்தின் பிரகாசத்தால் கண்கள் கூசின.
> பிரபஞ்ச இருப்புத்
> தன்மை,
> அது
> ஒரு முடிவில்லா வட்டம்!
இருந்தாலும், பல்வேறு கிரீடம் அணிந்தவராக,
கதாயுதங்களைத் தாங்கியவராக, சக்கரம்
ஏந்தியவராக, ஒளிப்பிழம்பாக விளங்கும்
கிருஷ்ணரை அர்ஜுனன் எல்லாயிடங்களிலும்
பார்க்கிறார்.
அர்ஜுனன் சொல்கிறார், "எல்லாப் பக்கமும்
பரவி ஜொலித்துக் கொண்டிருக்கும்
அற்புதமான ஒளிபொருந்திய உமது
ரூபத்தைக் கண்கொண்டு பார்க்க
முடியவில்லை. தகிக்கும் வெப்பம்கொண்ட
சூரியனைப்போல தகதகத்துக்கொண்டு
இருக்கிறீர்கள்."
புராணங்களில் வர்ணிக்கப்படும் விஷ்ணுவின் ஒரு பகுதி வடிவத்தையே அர்ஜுனன் இங்கே பார்க்கிறார். கிரீடம் தரித்தவராக, கதாயுதம்தாங்கியவராக, சங்கு சக்ரம் ஏந்தியவராகவே விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.
பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவராகவும், அவருடைய தொப்புளில் தோன்றிய தாமரைச் செடியில் மலர்ந்திருக்கும் பூவில் வீற்றிருக்கும் பிரம்மாவோடும் விஷ்ணு வடித்துக் காட்டப்படுகிறார்.
ஒரு வகையில் அர்ஜுனன், கிருஷ்ணரின் வடிவமில்லாச் சக்தியைப் பார்க்கிறார். ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் உதித்தாற்போல் பிரகாசி க்கின்ற, கண்களை கூசச் செய்யும் அந்த ஒளிப் பிழம்பானது, கிருஷ்ணரால் புதிதாக அருளப்பட்ட தெய்வீக கண்களால்கூட காணமுடியாததாக இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தார். அனுபவிக்க முடிந்த ஆனால் அனுபவித்ததை விளக்க முடியாத, புலன்களால் புரிந்துகொள்ள முடியாத அனுபவத்தை அர்ஜூனன் அடைகிறார். திடீரென்று இந்த வரிகளில் காட்சி மாறுகிறது.
அர்ஜூனனையும் அஞ்ச வைக்கும் விச்வரூப தர்சனம்
கிருஷ்ணரின் விச்வரூப தர்சனத்தைப் பார்த்த போது அர்ஜூனன் அதிர்ச்சியில் பீதியடைந்தார். இப்போது அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி, கிருஷ்ணருடைய தெய்வீக வடிவத்தைக் காட்டுமாறு பிரார்த்தித்தபோது அவர் என்ன எதிர்பார்த்தாரோ, அதிலிருந்து முழுமையாக வித்தியாசமாக இருந்தது!
அர்ஜூனன் இப்போது முரண்பாடுகள்
நிறைந்தவராய் இருந்தார். அவர் பேசும்
வார்த்தைகளில் தர்க்கமோ தெளிவோ
இல்லை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல்
ஏதேதோ சொல்லத் தொடங்கினார்.
அவரால் முடிந்தவரை, தாம் பார்ப்பதை
வார்த்தைகளால் சொல்ல முயற்சித்தார்.
தெய்வீகம் என்பது
நாம்
எதிர்பார்ப்பதுபோல்
இருப்பதில்லை.
கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்து, அர்ஜூனன் திருப்தி அடைகிறார். அவர் என்றும் அழியாத, எல்லாவற்றிற்கும் மூலமான, நிலையான எல்லாம் வல்ல இருப்புத் தன்மையான புருஷரைப் பார்க்கிறார்.
அவர் சொல்கிறார், "எல்லையில்லாச் சக்தியோடு, தொடக்கமும் இல்லாமல், நடுப்பகுதியும் இல்லாமல், முடிவும் இல்லாமல் இருக்கிறீர்கள். எல்லாத் திசைகளிலும் நீங்களே பரவி இருக்கிறீர்கள்.
ஓ பரமாத்மாவே, உங்களுடைய அதிசயத்தக்க இந்த ரூபத்தைப் பார்த்து எல்லா உலகங்களும், எல்லாப் பிரபஞ்சமும் பயத்தால் நடுங்குகின்றன. எல்லா தேவ கூட்டங்களும் அஞ்சி நடுங்கி, இந்த உருவமில்லா உருவத்திற்குள் புகுந்து கொள்கின்றனர். சிலர் அஞ்சி கைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். உம்மை உணர்ந்த ஞானிகள் உம்மைப் போற்றி புகழ்ந்து வியந்து ஏற்றுக் கொள்கிறார்கள்."
விஶ்வ ரூப தர்ஶனத்தின், பிரபஞ்ச வடிவத்தின் அதிர்வலையைப் பற்றி பகவத்கீதையில் விளக்கப்பட்டதுபோல வேறு எங்கும் சொல்லப்படவில்லை.
எதைச் சாதாரண கண்களால் காணமுடியாதோ அதை, கிருஷ்ணரை இப்போது எல்லாப் பரிமாணங்களிலும் எதையும் வடிகட்டாமல், உள்ளது உள்ளபடியே, உயர் மற்றும் குறைந்த அதிர்வலைகளிலும் அர்ஜுனன் பார்க்கிறார்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், இனிமையான அற்புதமான அந்த, வடிவம் திடீரென்று கலக்கத்தை அளிப்பதாகவும் மாறுவதாகவும் அர்ஜுனன் உணர்ந்தார்.
தெய்விக கண்களால் மட்டுமே தெய்விக வடிவத்தைக் காணமுடியும்.
நடப்பது என்னவென்று அர்ஜுனனுக்குப் புரியாவிட்டாலும், தாம் இனிமேல் பார்க்க இருப்பது இனிமையாக இருக்கப் போவதில்லை என்பதை மட்டும் உணர்ந்தார். அவர் கண்டது அவருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அர்ஜுனன், எத்தைக் கிரகித்துக் கொள்கிறாரோ, அதைத்தான் எப்போதும் வெளிப்படுத்துவார்.
"எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவே! பல நிறங்களோடு பிரகாசிக்கிற, கனல் வீசும் திறந்த வாய்களையுடைய, ஜொலிக்கிற மிகப்பெரிய கண்களையுடைய உமது வானளாவிய வடிவம் என்னை நடுநடுங்க வைக்கிறது. என் இதயம் பயத்தால் நடுங்கி, கலங்குகிறது. உம்மை இப்படிக் காணுவதால் தைரியத்தையோ, அமைதியையோ நான் அடையவில்லை."
இதுவரை தொடக்கமும், முடிவும், நடுவும் இல்லாத ரூபமென்று சொல்லி வந்த அர்ஜுனன், இப்போது உமது வடிவம் வானளாவி நிற்கிறது என்று சொல்கிறார்.
அவருடைய பரவசமான அனுபவத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாகக் கீழிறங்கி வருவதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. "கனல் வீசும் திறந்த வாய்களையும் அகலமான கண்களையும் உடைய உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும், அமைதியையும் காணாமல் பயத்தால் நடுங்குகிறேன். என் மனத்தைத் சமநிலையில் உறுதியாக வைத்திருக்க என்னால் முடியவில்லை,” என்று சொல்கிறார்.”
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மனத்தைச் சமநிலையில் வைத்திருக்க முயற்சித்தால், நீங்கள் இந்தக் குழப்பமான உலகத்தில்தான் இருப்பீர்கள். சமமான மனநிலை என்பதே கிடையாது. நாம் எதைச் சமநிலை என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அது சமநிலை கிடையாது.
மனம் சமநிலையில் இருக்க வேண்டும் என்று அர்ஜூனன் கேட்கிறார். அப்படியென்றால், அவருடைய புத்திசாலித்தனத்தின் கட்டுப்பாட்டில்தான் மனம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அவருக்குக் காரண காரியம் தெரிய
வேண்டும், எல்லாமே அவருடைய
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று
அவர் விரும்புகிறார்.
இதெல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டில்
இருந்தால், நீங்கள்தான் தலைவர் என்று
நினைப்பீர்கள். அது உங்களுடைய
அஹங்காரத்தைத்தான் இன்னும் பலமாக்கும்.
ஆனால், இவை அனைத்தும் உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட கணமே, நீங்கள் எதையோ இழந்துவிட்டதாகவும், இனி ஒரு தலைவராக நீங்கள் இருக்க முடியாது என்பதையும் உணர்வீர்கள். நீங்கள் வெறுமனே, கடலின் ஒரு துளியாக மட்டுமே இருப்பீர்கள்.
அந்த நிலையைப் பற்றிய பயம் அர்ஜூனனுக்கு இருந்தது. தொடர்ந்து அதே நிலையில் அவரால் இருக்க முடியவில்லை.
கடலலை என்பது கடலின் ஒரு பகுதிதான். அது, கடலின் ஒரு பாகமாகத் தன்னை உணரும்போது, அங்குப் பிரிவு என்பதே இல்லை. தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கும் போதுதான், தானும் கடலின் ஒரு பாகம்தான் என்பதை அது உணர்வதில்லை.
அது தன்னை ஒரு தனிப் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்கிறது. கடலோடு கலக்கும் நேரம் வரும்போது பயந்துவிடுகிறது. தான் ஒரு தனி பாகம்தான். என்ற உணர்வோடு கடலைப் பார்க்கும்போது, கடலலை தன்னொள் பயத்தை உணர்கிறது.
அர்ஜுனன், கிருஷ்ணரின் விச்வரூப தரிசனத்தின் ஒரு துளியை முதன்முதலாகத் தரிசித்தபோது, அந்தக் காட்சியோடு கலந்து இருந்தார். அங்கு எந்தப் பிரிவும் இல்லை. இப்போது திடீரென்று பிரிவு ஏற்பட்டதாக உணர்ந்தார். இந்தப் பிரிவுணர்வோடு, அவருக்குப் பய உணர்வும் வந்துவிடுகிறது.

நீங்கள் உணர்ந்ததையே எங்கும் பார்க்கிறீர்கள்
கேள்வி : ஸ்வாமிஜி, ஆனந்தமே கடவுள் என்று சொன்னீர்கள். நாங்கள் கடவுளை அனுபவமாகப் பெறவில்லை. எனவே கடவுள் என்பது ஒரு கருத்தாக (Concept) மட்டுமே இருக்கிறது. ஆனால் ஆனந்தத்தை அனுபவமாகப் பெற முடியும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். அப்படியென்றால் எங்களால் கடவுளை அனுபவமாகப் பெற முடியும் என்றுதானே பொருள் அப்படியென்றால் ஆனந்தத்தைப் பெறுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய இருப்பார்த் தன்மையே ஆனந்தமயமானதுதான்.
ஆனந்தம் என்பது ஒரு சாதனை கிடையாது. அது, ஒரு செயலின் விளைவும் கிடையாது. அதுவொரு லட்சியம் கிடையாது. எதிர்காலத்தில் நடக்க இருக்கும் ஒரு செயலும் கிடையாது.
ஒருவர் ஆனந்தத்தைப் பெற ஆசைப்பட முடியாது. ஒருவர் அந்த ஆனந்தத்தை அடைவதையே நோக்கமாகக் கொள்ள முடியாது. அது ஏற்கனவே நமக்குள் இருக்கிறது. நம்முடைய இருப்புத் தன்மையே ஆனந்தமயமானதுதான்.
வெறுமனே நமக்குள் திரும்பிப்பபார்க்க வேண்டியது மட்டும்தான் நாம் செய்யவேண்டியது. நாம் வெறுமனே நமக்குள் திரும்பிப் பார்த்தால் போதும், அதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனந்தம் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று; அடையப்பட வேண்டிய ஒன்று அல்ல.
இதுவே த்யானத்தின் மொத்த அடிப்படை கருத்து! த்யானம் என்பது அடையத் தகுதியானது என்று நாம் நினைக்கும் எல்லாமுமே, அடையப்பட வேண்டியவை அல்ல. அவை ஏற்கனவே நமக்குள்ளேயே இருக்கின்றன.
பணத்தை அடையலாம், அந்தஸ்தை அடையலாம்; ஆனால் அவை எல்லாமே அடையத் தகுதியானவை அல்ல. ஏனென்றால் அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகக்கூடிய காலம் ஒன்றும் வருகிறது; மரணம், உங்களை இவற்றிடமிருந்து பிரித்துவிடும்.
அதனால்தான் எது அடையமுடிவதாக இருக்கிறதோ, அது அடைவதற்குத் தகுதியானது கிடையாது; எது அடையத் தகுதியானதோ, அதை அடைய வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அது ஏற்கனவே நமக்குள் இருக்கிறது. நீங்கள் அதனால்தான் உருவாக்கப் பட்டிருக்கிறீர்கள்.
அன்பு, ஆனந்தம், கடவுள் - ഇവையெல்லாம் தான் நம்முடைய நுணுக்கமான மூலப்பொருள்கள். அவை ஏற்கனவே கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றிற்காக நாம் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.
ஆனந்தம், அது ஏற்கனவே உங்களுக்கு
உள்ளேயே இருக்கிறது. ஆனால், நீங்கள்
அதை மறந்து விட்டீர்கள். பல ஜென்மங்களாக
நீங்கள் அதை உபயோகப்படுத்தாமல்
இருக்கிறீர்கள். உபயோகப்படுத்த
ஆரம்பிக்காவிட்டால், அதைப்பற்றிய
விழிப்புணர்வு உங்களுக்குள் ஏற்படாது.
நீங்கள் இழந்துவிட்டிருப்பதாக நினைக்கும் அன்பு, கடவுள், ஆனந்தம் இவற்றை மறுபடியும் கண்டுபிடிக்க உதவுவதே, ஒரு குருவினுடைய பணியாக இருக்கிறது.
நீங்கள்
இழந்துவிட்டிருப்பதாக
நினைக்கும் அன்பு,
கடவுள், ஆனந்தம்
இவற்றை மறுபடியும்
கண்டுபிடிக்க
உதவுவதே,
ஒரு குருவினுடைய
பணியாக இருக்கிறது.
ஒரு சாதாரண மனிதனுக்கும் புத்தர் அல்லது கிருஷ்ணர் போன்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், அவர்களுடைய விழிப்புநிலை மட்டும்தான் வித்தியασப்படுகிறது. இரண்டு பேருமே ஆனந்தமயமானவர்கள்தான். ஒருவருக்கு அது தெரிந்திருக்கிறது, இன்னொருவருக்கு அது தெரியவில்லை, அவ்வளவுதான்.
நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளும்போது, உங்களுக்குள் ஒரு ஆழமான நன்றியுணர்வு பொங்குகிறது. அது தெரியாதபோது, எல்லா விஷயங்களிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். வாழ்க்கையே சுமைதான் என்பது போல தொடர்ந்து நீங்கள் தேவையில்லாத எரிச்சலைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
நம்முடைய உடல் வாழ்வதற்கு சுவாசமும்
இரத்த ஓட்டமும் உணவும் ஊட்டச்சத்தும்
தேவைப்படுவதுபோல, நம்முடைய ஆன்மா
உயிர் வாழ்வதற்கு ஆனந்தம் தேவை.
அதற்கு நாம். நமக்குள்ளே சிறிது தோண்டிப் பார்க்க வேண்டியுள்ளது. அப்படியானால் மட்டுமே அந்த ஆனந்தத்தை, அடிப்படை சக்தி ஓட்டத்தை நம்மால் கண்டுபிடிக்கமுடியும். ஒருமுறை ஆனந்தத்தின் ஊற்றை நீங்கள் உணர்ந்துவிட்டால், அதனுடைய மூலத்தைத் தெரிந்துகொண்டால் வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் பார்வையே முழுவதுமாக மாறிவிடும். முழுப் படைப்பையும், பிரபஞ்சத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குவீர்கள்.
உங்களுக்குள் நீங்கள் எதையெல்லாம் உணர்ந்தீர்களோ, அதையே எல்லா இடத்திலும் பார்ப்பீர்கள். ஏனென்றால், நாம் எதுவாக இருக்கிறோமோ, அதையேதான் பிரபஞ்சிருப்பிலும் பார்க்கிறோம்.

ஒவ்வொரு கணமும் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது
இந்தப் பிரபஞ்ச இருப்பு ஒரு கண்ணாடியைப் போன்றது. அது நம்முடைய இருப்பு தன்மையை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஆனந்தம்தான் உங்களுடைய இயல்பு என்று நீங்கள் ஒரு முறை உணர்ந்துவிட்டால், பிரபஞ்சத்தின் இந்த மொத்த இயற்கையும் ஆனந்தமயமாகிவிடும். இதைத்தான் விடுதலை, 'தன்னை உணர்தல்' என்று சொல்கிறோம்.
ஒரு சின்ன கதை......
ஒரு சிறுவன் எப்போதும் தன்னுடைய வறுமையைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பான்.
ஒருநாள் அவன் தன்னுடைய தந்தையிடம் "நான் ஏழையாக பிறந்ததே என்னுடைய துரதிர்ஷ்டம், என்னால் படிக்கவோ பிரார்த்தனை செய்யவோகூட முடியவில்லை," என்று சொன்னான்.
அதற்கு அவனுடைய தந்தை, "மகனே, மேலான பிரார்த்தனை, சிறந்த படிப்பு என்பது எல்லாம் வாழ்க்கையை உள்ளபடி அப்படியே ஏற்றுக் கொள்வதும், வரவேற்பதும்தான்" என்றார்.
சந்தோஷம் என்பது ஒரு விருப்பத் தேர்வுதான். அது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு கேள்விக்குரிய விடைதான் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், சந்தோஷத்தைத்தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். சந்தோஷம் வேண்டுமா, துக்கம் வேண்டுமா? என்கிற கேள்வி உங்கள் முன் வைக்கப்பட்டால் நீங்கள் சந்தோஷத்தைத்தானே விருப்பத்தேர்வாக தேர்ந்தெடுப்பீர்கள்.
மக்கள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாக
உணர்கிறார்கள். இது தவறு. நாம்
யாரும் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது
தீங்கிழைக்கப்பட்டவர்களோ இல்லை.
சூழ்நிலைகள்தான், நம்மை சிலசமயம் துக்கத்
திற்கும், சில சமயம் சந்தோஷத்திற்கும்
இழுத்துக்கொண்டு செல்கிறது என்பது
சரியில்லை, அதே சமயம் நம்மை மீறிய
ஏதோ ஒரு சக்தியின் தயையினால்தான்
நாம் சந்தோஷமாக வாழ்கிறோம் என்பதும்
இல்லை. அது அப்படி இல்லை. ஓராயிரம்
முறைகள் 'இல்லை'! ஒவ்வொரு கணத்தையும்
நாம்தான் தேர்வு செய்கிறோம்.
> சிறந்த படிப்பு
> என்பது எல்லாம்
> வாழ்க்கையை உள்ளபடி
> அப்படியே
> ஏற்றுக் கொள்வதும்,
> வரவேற்பதும்தான்.
நம்மளுடைய தேர்வு வேண்டுமானால் விழிப்புணர்வு இல்லாமல் நடந்திருக்கலாம். நாம் விழிப்புணர்வில்லாமல் தேர்வு செய்யாதிருக்கலாம்; ஆனாலும் அங்கே தேர்வு என்பது உண்டு.
இந்தக் கணத்தில் இருந்து இதைப் பற்றி விழிப்புணர்வோடு இருந்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் துக்கத்தால் சூழப்பட்டு இருக்கும்போது, நீங்கள்தான் கவலையைத் தேர்ந்தெடுத்தீர்கள், திடீரென்று சோக மேகங்கள் கலைந்து, தெளிவு என்னும் சூரிய வெளிச்சம் வந்துவிடும். ஏனென்றால், வருத்தப்பட தேவையே இல்லை என்பதை நீங்கள் உணரும்போது, உங்களுக்குள் ஒரு தெளிவு பிறந்துவிடும்.
आनந்தமாக இருப்பது என்று
முடிவெடுத்துவிட்டால், துக்கம் உங்களை
விட்டு மறைந்து விடுகிறது. ஆனால் அந்த
முடிவு முழுமையானதாக இருக்க வேண்டும்.
ஆனந்தமாக வாழ்வது என்று முடிவெடுப்பதை
விடவும் விலை மதிக்க முடியாதது வேறு
எதுவும் இல்லை.
உங்களுடைய எல்லாத் துக்கத்தையும்,
கடுமைத் தன்மையையும் விட்டுவிடுங்கள்.
எப்படி விடுவது என்று கேட்காதீர்கள்.
இப்படிக் கேட்பதேகூட, அவற்றைத்
தொடர்ந்து தன்னிடத்தே தக்கவைத்துக்க
கொள்வதற்காக மனம் போடும் திட்டம்தான்.
> துக்கமாக இருப்பது
> இயற்கைக்கு மாறானது.
> உண்மையில்
> துக்கப்படுவது என்பது
> ரொம்பவும்
> கஷ்டமான வேலை.
எப்படி விடுவது? என்று கேட்பதேகூட துக்கத்தை விடுவதைத் தள்ளிப்போடுவதே! வெறுமனே துக்கத்தை விட்டுவிடுங்கள். தயங்காதீர்கள், தள்ளிப் போடாதீர்கள். துக்கத்திற்கு விடைகொடுங்கள், மீண்டும் திரும்பி பார்க்காதீர்கள். பிறகு, இது இவ்வளவு எளிமையானதா என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
ஆனந்தமாக இருப்பதுதான் நம்முடைய இயல்பாக இருக்கும். துக்கமாக இருப்பது இயற்கைக்கு மாறானது. உண்மையில் துக்கப்படுவது என்பது ரொம்பவும் கஷ்டமான வேலை.
ஆனால் மிகவும் திறமையாகவும் அறிவுப்பூர்வமாகவும் எப்படித் துக்கப்படுவது என்று யோசித்துப் பார்த்து மனிதர்கள் துக்கப்படுகிறார்கள்.
அவர்கள் மிகச் சிறந்த துக்கக் கலைஞர்கள் ஆகிவிடுகிறார்கள். துக்கப்படுவதற்கு எதுவுமே இல்லாமல் போனால், எதையாவது கண்டுபிடித்துத் துக்கப்படுகிறார்கள்.
ஒரு மனநல மருத்துவர் தம்முடைய நோயாளி ஒருவரிடம், மலைவாச ஸ்தலத்திற்குச் சென்று மூன்று முதல் நான்கு வாரம் ஓய்வெடுக்கும்படி அறிவுரை சொன்னார்.
மூன்றாவது நாள் அந்த நோயாளியிடம் இருந்து அவருக்கு, "நான் மிக ஆனந்தமாக உணர்கிறேன், ஏன்?" என்று ஒரு தந்தி வந்தது. மனிதர்களால் ஆனந்தத்தை ஒத்து கொள்ளவே முடிவதில்லை. துன்பத்தை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே, உங்களுடைய வாழ்க்கை அமைகிறது. ஒருவர் ஒரே தாவலில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட முடியும்.
துக்கத்தைத் துறப்பதே துறவு
துறவு என்பது ஆனந்தமான வாழ்வை அடைவதற்கான பயிற்சி இல்லை. துக்கத்தைத் துறந்துவிடுவதே துறவு. ஆனந்தம் துணிச்சலைக் கொடுக்கும்.
புத்தரின் சீடர் போதிதர்மர், ஞானமடைந்தபோது சிங்கத்தைப்போல கர்ஜித்தார் என்று சொல்லப்படுகிறது. பக்கத்து கிராமத்தில் வசித்த மக்கள் சிங்கம் வந்துவிட்டதாக நினைத்து பயந்தே விட்டார்கள்.
பாதுகாப்புக் கருதி, வேறு ஏதாவது ஒரு இடத்திற்குத் தப்பித்துச் செல்ல நினைத்தபோது, அவர்களிடம் ஒருவர், "கவலைப்படாதீர்கள், அந்த வயதான துறவிதான் இப்படிச் சத்தம் போடுகிறார். அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்!" என்று சொன்னார்.
அவர்கள் எல்லோரும் மெதுவாகக் காட்டுக்குச் சென்று அவரிடம், "ஐயா, என்ன நடந்தது? தங்களுக்குப் புத்தி பேதலித்துவிட்டதா அல்லது வேறு ஏதாவது நடந்ததா?" என்று கேட்டார்கள்.
அவர் சொன்னார், "இதற்கு முன் நான் பைத்தியமாக இருந்தேன். என்னை நானே ஓர் ஆடாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, நான் ஒரு சிங்கம் என்பதை உணர்கிறேன்!"
ஒருவர் ஞானமடையும்போது சிங்கத்தைப்போல கர்ஜிப்பார் என்று புத்தரே சொல்லி இருக்கிறார். ஞானமடையும் போது ஒருவர் புரட்சியாளராக மாறுகிறார்; துக்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்வதே மிகச் சிறந்த புரட்சி.
ஆனந்ததைப் பார்ப்பதற்கு த்யானக் கண்கள் தேவைப்படுகின்றன. இப்போது நீங்கள் பெற்றிருக்கும் இந்த இரு கண்களும் அதற்கு உதவாது. அதற்கு மூன்றாவது கண் தேவை. இந்த இரு கண்களும் வெளி உலகைப் பார்க்கப் பயன்படுகின்றன.
இவை உள் உலகைப் பார்க்க பயன்படாது. இவற்றிற்கு உள் உலகைப் பார்க்கத் தெரியாது. அவை அதற்கானவை அல்ல! தியானிப்பவர், தமது மூன்றாவது கண்ணைச் செம்மையாக்குகிறார். இரண்டு கண்களுக்கு இடையில் இருக்கும் சூட்சமமான ஒரு மையப் புள்ளி, கண்ணாக செயல்பட ஆரம்பிக்கிறது. அது உள்முகமாகப் பார்க்கத் தொடங்குகிறது.
வெளி உலகம் இருமைத் தன்மையில் (இன்ப துன்பம்) இருப்பதால், வெளி உலகத்தைப் பார்க்க இரு கண்கள் தேவைப்படுகின்றன. உள் உலகம் இவற்றைக் கடந்த ஒருமைத் தன்மையில் இருப்பதால், உள் உலகத்தைப் பார்க்க ஒரே ஒரு கண் மட்டும் போதுமானதாக இருக்கிறது.
மூன்றாவது கண் இருக்கும் இடத்தில் தியானம் செய்யுங்கள். கண்களை மூடி, இரண்டு புருவங்களுக்கு மத்தியில், உங்களுடைய உடலின் ஆறாவது சக்திமையமான ஆஜ்ஞா சக்ரத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.
ஆஜ்ஞா சக்ரம் செயல்பட ஆரம்பித்து விட்டால், உங்களால் உள்முகமாகப் பார்க்க முடியும். அமைதியாக உட்கார்ந்து மூன்றாவது கண்ணை உற்றுப் பாருங்கள். உங்கள் முழு சக்தியையும் ஆஜ்ஞா சக்ரத்தில் ஒருமுகப்படுத்தும்போது, அது சுழல ஆரம்பிக்கும்.
உங்களுடைய உடலில் இதுவரை நடந்தேயிராத ஒரு நிகழ்ச்சி நடப்பதால், ஆரம்பத்தில் புதிதாக உணர்வீர்கள். ஆனால் வெகு விரைவிலேயே பழகிய பிறகு, உங்களுக்குள் இதற்கு முன் அனுபவித்திராத ஒருவித அமைதி குடிகொள்வதை உணர்வீர்கள்.
நிச்சயம், இது உங்களுக்கும் சாத்தியமானதுதான். கொஞ்சம் முயற்சி செய்தாலே போதும், ஆஜ்ஞா சக்ரம் சுழல ஆரம்பித்துவிடும். அதனால் கிடைக்கும் பலன் அபரிமிதமாக இருக்கும். வெறுமனே ஒரு சிறு முயற்சியே கூட, அதிக பலனைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, நீங்கள் செய்யும் சிறு முயற்சி ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆகவே மனத்தை ஒருமுகப்படுத்தி, மூடிய கண்களோடு ஆஜ்ஞா சக்ரத்தை உற்றுப் பாருங்கள்.
உற்றுப் பார்க்கும்போது, உங்களுக்குள்ளே ஒரு பேரொளி பரவுவதைப் பார்ப்பீர்கள். அந்த உள்ளொளியே ஆனந்தமாக மலரும்! நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தத்தை அடைவீர்களாக! நித்யானந்தம்.
