உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
11.25 தேவர்களின் தலைவா, பயமுறுத்தும், கோரமான பற்களை உடைய, பிரளய கால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குத் திசைகள் தெரியவில்லை. என்னால் அமைதியும் அடைய முடியவில்லை. உலகிற்கே அடைக்கலமாக, ஆதாரமாக இருப்பவரே, அருள் புரிவீராக.
11.26-27
திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஒட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன்.
சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன்.
11.28 எப்படி வெள்ளப் பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சேர்ந்த போர் வீரர்கள், அலை வீசும் உமது வாய்களுக்குள் வேகமாக நுழைகிறார்கள்.
11.29 எப்படி விட்டில் பூச்சிகள் சுடர்விட்டு எரியும் தீயை நோக்கி வேகமாகச் சென்று விழுந்து அழிந்துபோகின்றனவோ, அப்படியே இவ்வுலகின் ஜீவராசிகள் அனைத்தும் அழிவதற்காகவே விரைந்து வந்து உம்முடைய வாய்களில் நுழைகிறார்கள்.
11.30 ஜ்வாலை வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லாப் பக்கத்தில் இருந்தும் விழுங்கி சந்தோஷமாக ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது குரூரமான சுடர்கள் முழு உலகையும் நிரப்பிக்கொண்டு எரிகின்றன.
11.31. பயங்கரவடிவராகிய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, தயைபுரியுங்கள். மூலப் பொருளே, உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உமது செயல் எனக்குப் புரியவில்லை.
கீதையின் வரிகளில் அர்ஜுனன் தம்முடைய அசௌகரியத்தை வெளிப்படுத்துகிறார்.
அர்ஜுனன் முன்னதாகச் சொல்கிறார்:
"பரமாத்மாவே, சிவனுடைய வெளிப்பாடுகளான ஆதித்தியர்கள், வசுக்கள், விஷ்வ தேவர், அசுவினி குமாரர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், யக்ஷர்கள், அசுரர்கள் மற்றும் எல்லா தேவர்களும், அதிசயிக்கத்தக்க வகையிலே உன்னிடம் புகுவதையும் என்னுடைய, பிரபஞ்ச விழிப்புணர்வில் ஒடுங்குவதை நான் பார்க்கிறேன்.
நீர் எதுவாக இருப்பினும் அது தெய்வீக சக்தியே. பெருந்தோள்களையுடையவரே, பல முகங்கள், கைகள், கால்கள், கண்கள், தொடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல கோரப் பற்களென விளங்கும் உமது பெரிய வடிவத்தைக் கண்டு எல்லா உலகமும் அவற்றின் ஜீவராசிகளும் தேவர்களும் நடுங்குகிறார்கள். நானும் அப்படித்தான் நடுங்குகிறேன்."
இப்போது அர்ஜுனன் தெய்வீக நிலையிலிருந்து மெதுவாகக் கீழே இறங்கி வருகிறார். இந்த ஸ்லோகங்களில் இருந்து, "அர்ஜூன உவாச!" (அதாவது, அர்ஜூனன் சொல்கிறார்) என்றுதான் சொல்ல வேண்டும். தம்முடைய தெய்வீக நிலையிலிருந்து மெதுவாகக் கீழிறங்கி, அர்ஜூனன் அர்ஜூனனாகப் பேசத் தொடங்குகிறார்.
அச்சவுணர்வு வந்த உடனேயே, அவர் தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பி விடுகிறார்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய அச்சவுணர்வுதான், உங்களைப் பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையில் இருந்து பிரித்து வைக்கிறது.
எப்போது அர்ஜூனன், 'நானும் அப்படித்தான் நடுங்குகிறேன்' என்று சொன்னாரோ, அவருடைய அச்சவுணர்வை வெளிப்படுத்தினாரோ, அப்போதே அவர் 'அர்ஜூனன்' என்ற மனிதநிலைக்கு வந்துவிட்டார்.

பேரண்ட தர்ச'னம்
வாழவேண்டும் என்ற உள்ளுணர்ச்சியும், உடைமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற உள்ளுணர்வும் இணைந்தே மனித சுபாவத்தை உருவாக்குகிறது.
வாழவேண்டும் என்னும் உள்ளுணர்ச்சி அச்சத்தால், ஸ்வாதிஷ்டான சக்ரத்திலிருந்து உருவாகிறது. (நம்முடைய உடலில் பயம் உருவாகும் சக்தி மையம்)
பேராசையினால் உருவாகும் உடைமையாக்கிக் கொள்ளுதல் என்ற உணர்ச்சி, மூலாதார சக்ரத்திலிருந்து தோன்றும் கிறது.
இங்கே, உயிர்வாழ வேண்டும் என்ற உணர்வு
மேலோங்கியதால் அர்ஜூனன் ஆகிறார்.
மனிதனாக மாறுகிறார். உயிர் மேல் இருக்கும்
ஆசை, அச்சம் இவற்றை விட்டுவிடும்
அக்கணமே நாமும் கிருஷ்ண நிலையை
அடையலாம், நித்ய நிலையை அடையலாம்
என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை.
உங்களுடைய
அச்சவுணர்வுதான்,
உங்களைப்
பிரபஞ்ச விழிப்புணர்வு
தன்மையில் இருந்து
பிரித்து வைக்கிறது.
நாம் கிருஷ்ணராகி விடுவோம், நாம்
அழிவில்லாமல் இருப்போம். நாம் பகவானாக
பிரபஞ்ச விழிப்புணர்வாக ஆகிவிடுவோம்.
ஆனால் பெரும்பாலும், உயிர்வாழ
வேண்டும் என்னும் ஆசையே நம்மைப்
பற்றிக் கொள்கிறது. இப்போது அர்ஜுனன்
மெதுமெதுவாக பிரபஞ்ச விழிப்புணர்வு
நிலையிலிருந்து கீழ் இறங்கி மனித
தன்மைக்கு வந்துவிடுகிறார்.
"திருதராஷ்டிரின் புத்திரர்களையும் அவர்களது கூட்டாளிகளான பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் முக்கியமான போர் வீரர்களும் உமது பயங்கரமான வாய்களில் பரபரப்புடன் நுழைவதை நான் பார்க்கிறேன்.
சிலர் நசுக்கப்பட்ட தலைகளோடு உமது பல் இடுக்குகளில் அகப்பட்டு ஒன்றுமில்லாமல் போவதையும் நான் பார்க்கிறேன்," என்று அர்ஜுனன் வியப்படைடுகிறார்.
அர்ஜுனன் அந்த முழுக் காட்சியையும் மிகவும் துல்லியமாக விவரிக்கிறார். பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிகழும் பேரிழப்புகளைப் பார்க்கிறார்.
பாண்டவர்களைச் சேர்ந்த போர்வீரர்கள், படைத்தளபதிகள் போரில் இறப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறார். எதிர்தரப்பினரில் யாராலும் வெல்லமுடியாத பீஷ்மரும், எளிதில் வெற்றி கொள்ள முடியாத துரோணரும் கர்ணனும் இறப்பதைக் கண்ணெதிரில் பார்க்கிறார்.

முடிவில் தம்முடைய சொந்த வெற்றியையும் பார்க்கிறார்.
ஆரம்பத்தில், தாம் பார்க்க விரும்பிய
காட்சியையே அர்ஜுனன் பார்க்கிறார்.
விஷ்ணுவின் பிரபஞ்ச வடிவமாகப்
புராணத்தில் வர்ணிக்கப்பட்டதுபோல்,
பாரம்பரியமான ஆடைகளுடனும்
ஆயுதங்களுடனும், தேவர்களும்
முனிவர்களும் சூழ்ந்திருப்பதைப் பார்க்கிறார்.
அந்த திவ்யவடிவம் திடீரென்று மொத்தப் பிரபஞ்சமும் அச்சத்தில் கைகூப்பி வணங்கும் நடுக்கத்தை அளிக்கும் மரணக் காட்சியாகவும், அனைத்தையும் விழுங்கும் கோரமான உக்கிரமான ரூபமாகவும் மாறியது.
இத்தகைய பேரண்ட தரிசனத்திலிருந்து கீழ் இறங்கி குருக்ஷேத்ர போரின் நாச கரமான விளைவுகளையும் அர்ஜுனன் பார்க்கிறார். எப்படி விட்டிற் பூச்சிகள், விரைவாகப் பாய்ந்து வந்து சுடர்விட்டு எரியும் தீயில் விழுகின்றனவோ அப்படியே மகத்தான போர்வீரர்களான அவரது எதிரிகள் அழிவின் வாய்களில் விழுந்து மடிவதை அவர் பார்க்கிறார்.
வெல்லமுடியாத மாபெரும் போர் வீரர்கள் எல்லோரும் அழிந்து மடிவதை அர்ஜுனன் தம் கண்களாலேயே நம்பத்தக்க விதத்தில் பார்க்கிறார்.
எப்படியானாலும், அவர் பார்த்த காட்சி அவருக்கு தைரியத்தையும் மனஅமைதியையும் அளிக்கவில்லை. அழிவின் கோர சொரூபத்தைக் கண்டு அவர் நடுக்கமடைகிறார். தம்முடைய எதிரிகளாகக் கருதும் அந்த மனிதர்களின் அழிவுகூட அவருக்குக் கலக்கத்தையே அளிக்கிறது.
குரு உங்கள் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்
உண்மையில், அர்ஜுனன் தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. தமக்கும், தம்மைச் சுற்றியும் என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தத் தெளிவும் அவருக்கு இல்லை. ஆதி அந்தமில்லாச் சக்தியின் முன்பு தாம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் அவருக்கு நன்றாகப் புரிந்தது.
வெற்றியோ தோல்வியோ, அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை உணர்ந்தார். அழிவின் கோரக்காட்சி, 'அவரும் அழியக்கூடியவரே' என்பதை அவருக்கு உணர்த்தியது. அது அவரைப் பயத்திற்குள்ளாக்கியது.
"நீங்கள் யார்?" என்று அர்ஜுனன் மிகத் துக்கமான குரலில் கேட்கிறார்.

நாம் வாழும்
வாழ்வே ஒரு
நாடகம் தான்!
"தாங்கள் இங்கே வந்திருப்பதன் காரணம் என்ன? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பயங்கரமாக இருக்கிறீர்கள். நான் இந்த உருவத்தை கேட்கவில்லை. எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும்!
எப்படி விரைந்து ஓடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கிறதோ, அதேபோல தகிக்கும் உமது வாய்க்குள் மனிதர்கள் புகுவதைப் பார்க்கிறேன்.
எப்படி விட்டில் பூச்சிகள் வெகுவேகமாகத் தீயை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படியே உலக மக்களும் அழிவதற்கே வேகமாக உம்முள் நுழைவதை நான் பார்க்கிறேன்.
உமது மகிமைகளை நீரே சொல்லக் கேட்டேன். அந்த இரக்கத்தின் திருவுருவான பரமாத்மாவை இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. நான் நினைத்தவராக உம்மை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு மனச்சாந்தியை அளிக்கவே உம்மை நாடினேன். மாறாக என்னை நடுக்கமடையச் செய்கிறீர்கள்.
என்மேல் இரக்கம் கொள்வீர்களாக!"
'மரணம்' என்பதே இறுதியான பயம். மாபெரும் வீரரான அர்ஜுனனே மரணத்தைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறார். அர்ஜுனனுக்கு மரணம் தவிர்க்க முடியாதது என்பதோ, மரணத்தின் இயற்கை தன்மையைப் பற்றியோ தெரியாமலில்லை.
உடலும் மனமும் அழியக்கூடியது. ஆன்மா ஒன்றே அழிவில்லாதது என்று நீண்டகாலமாகவே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனுக்கு இது முழுவதும் புரிகிறது. இருந்தாலும் அவர் கலங்குகிறார்.
எத்தைக் கண்டு அர்ஜுனன் பயப்படுகிறார்? ஒரு விஷயம், அர்ஜுனன், கிருஷ்ணரின் கருணை மிகுந்த, தயை மிகுந்த பிரபஞ்ச வடிவத்தை பார்க்கவே விரும்பினார். இதைத்தவிர வேறு எந்த வகையிலும் அவர் எதிர்பார்க்கவில்லை.
அவர் ஏற்கனவே, கிருஷ்ணரைத் தமது கற்பனையில் தாம் விரும்பிய விதமாக வடிவமைத்து வைத்திருந்தார்.
கிருஷ்ணர் ஒரு நண்பராக, அன்பராக, குழந்தையாக, தாயாக மேலும் இவை எல்லாம் கலந்த ஒரு பாத்திரமாகவும் இருக்க முடியும். இந்த ஒவ்வொரு மனநிலையிலும், பாவத்திலும் கிருஷ்ணர் மென்மேலும் வசீகரமானவராகவும், அணுகக்கூடியவராகவும் இருக்கிறார்.
> கிருஷ்ணர்
> ஒரு நண்பராக,
> அன்பராக,
> குழந்தையாக,
> தாயாக மேலும்
> இவை எல்லாம் கலந்த
> ஒரு பாத்திரமாகவும்
> இருக்க முடியும்.
ஆனால் கிருஷ்ணர் தற்சமயம் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வடிவம், அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கும் கோரவடிவம், அர்ஜுனனால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. இந்த வடிவம் அவர் அறிந்த கிருஷ்ணன் என்கிற அம்சத்தின் பிரதிபலிப்பும் அல்ல.
இந்தப் பயமளிக்கும் மாயத்தோற்றம்; உண்மையிலேயே நடுக்கமளிக்கக் கூடியதாக இருந்தது.
அர்ஜுனனால் புரிந்துகொள்ளமுடியாத, அர்ஜுனன் எதிர்பார்ததிராத, அவருடைய ஸம்ஸ்காரங்களின் கற்பனைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முற்றிலும் பொருந்தாத ஒரு வடிவம் அவருள் பெரும் பயத்தை உருவாக்கியது.
ஒரு குரு என்பவர் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை அர்ஜுனன் முதன்முறையாக உணர்கிறார். எந்த ஆதர்ச் வடிவத்தோடும் ஒரு குருவைச் சுருக்க முடியாது.
ஆதி அந்தமில்லா அந்தத் தெய்வீக சக்தி, குருசக்தி எந்த வடிவில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அவ்வடிவையே எவ்வித எதிர்பார்ப்புகளும் பயமும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றும் அர்ஜுனன் உணர்கிறார்.

பிரபஞ்சத்தின் விதிமுறை பாரபட்சமற்றது
பிரபஞ்சமும் இயற்கையும் அன்பானவையும் இல்லை; கொடுமையானவையும் இல்லை.
பிரபஞ்ச அகராதியில் 'கருணை' என்னும் வார்த்தைக்கு உள்ள அர்த்தமே தனி. அது, நாம் ஒவ்வொருவரும் ஒருவொருக்கொருவர் உண்மையான உணர்வுப் பூர்வமாகவோ அல்லது உண்மையற்றோ காட்டிக் கொள்ளும் இரக்க உணர்வு போன்றது அல்ல.
அது கனிவு இல்லை; அது, நல்லது செய்யவேண்டுமென்ற நமது விருப்பத்தையோ அல்லது நல்லது போன்று தோன்றும் செயல்களோ அல்ல.
உண்மையான கருணை என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும், நாமே ஒரு பாகமாக இருக்கிறோம் என்ற அனுபவத்தைப் பெறுவது. அங்கு 'வேறு ஒன்று' என்று மற்றொரு பொருள் இல்லை.
அங்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணமோ அல்லது கெட்டது செய்ய வேண்டுமென்ற எண்ணமோ இருப்பதில்லை. ஆழமான ஆன்மீக அனுபவத்தின் பார்வையில் நல்லது கெட்டது என்று எதுவுமே இல்லை. அனைத்தும் உள்ளபடியே பார்க்கப்படுகிறது.
ஆகவேதான் மரணம் மிகப்பெரிய சமநிலையை அளிக்கிறது. மரணம் பாகுபாடு பார்ப்பதில்லை. இந்து மதத்தில், மரண தேவனான யமனே நீதி தேவனாகவும் வழிபடப்படுகிறார்.
அவர் பாரபட்சமற்றவர். யமன், நமக்குச் சாதகமாகச் செயல்படுபவராகவும் அன்புடையவராகவும் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.
பாரபட்சமின்றி இருப்பதனாலேயே அவர் பயத்தை உருவாக்குகிறார். அவர், ஆசை அச்சங்களால் கட்டுப்படுத்தப்படமுடியாதவராக இருப்பதனாலேயே கலக்கத்தையும் நடுக்கத்தையும் உருவாக்குகிறார்.
> எந்த ஆதர்ச வடிவாத்தோடும் ஒரு குருவைச் சுருக்க முடியாது.
இயற்கை சீர்கேடுகளினால்
இலட்சக்கணக்கானோர் இறக்க
நேரிடும்போது, இயற்கையின் நோக்கம்தான்
என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கு
எந்தப் பதிலும் அளிக்க முடியாது. அதுதான்
இயற்கை.
நம்முடைய அகராதியின்படி 'இரக்கம்'
என்பதற்கு நாம் கொடுக்கும் அர்த்தத்தின்
அடிப்படையில்தான், இயற்கைக்கு இரக்கமே
இல்லை என்று சொல்கிறோம்.
பிரபஞ்சமும் இயற்கையும்
அன்பானவையும் இல்லை,
கொடுமையானவையும்
இல்லை.
பிரபஞ்ச விதிமுறைகளின்படி, இயற்கையின்
கருணை அறிவுக்கெட்டாத, கணிக்க முடியாத,
பாரபட்சமற்ற தன்மை உடையதாக இருக்கிறது.
தொண்ணூறு வயது தாத்தா உயிருடன் இருக்கும் போது ஏன் பத்து வயது பேரன் இறக்க வேண்டும்?
வரைமுறைக்குட்பட்ட பந்தபாசங்களுடன் நாம் உருவாக்கிக்கொண்டு அனுபவிக்கும் உணர்ச்சிகளைத் தவிர, பிறப்பு இறப்பு பற்றிய பிரபஞ்ச இருப்பின் விதிகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
சில காலம் முன்பு அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு த்யான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். என் கைகளை அக்குழந்தையின் மீது வைத்தபோது, அந்தக் குழந்தை கொச்சைத் தமிழில் கையை எடுக்குமாறு சொல்லியது.
ஆனால் அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்குத் தமிழ்மொழி தெரியாது. நான் அந்தக் குழந்தையிடம், "உனக்குக் குணமடைய விருப்பம் இல்லையா?" என்று கேட்டேன்.
இந்த ஜென்மத்தில் எந்தவித பொறுப்பும் இல்லாமல் நிம்மதியாக இருக்க விரும்பியதனாலேயே, மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகத் (Autistic)தான் பிறந்திருப்பதாக அந்தக் குழந்தை சொன்னது.
"இதனால், உன்னுடைய அன்பான பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்களே, இது நியாயமா?" என்று கேட்டபோது, அந்த ஜீவன், "அதனால்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் அன்பானவர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள். என்னை நிம்மதியாக விட்டுவிடு,"' என்று சொன்னது.
ஒரு ஜ்ஞான குருவை வந்தடைவதற்காகவே பலர் நாள்பட்ட, தீராத வியாதிகளை இந்த வாழ்க்கையில் தேர்ந்தெடுத்துப் பிறக்கிறவர்களும் உண்டு. என்னுடன் இருக்கும் பலரும், முதன் முதலில் என்னைச் சந்திக்க வந்ததே குணமளிக்கும் த்யாண சிகிச்சைக்காகத்தான். அதன் பிறகு மற்ற எல்லாமே தோற்றுவிடும்.

உள்ளதை உள்ளபடியே பார்க்கவேண்டும்
ஜென்ம ஜென்மங்களாக, தம்மை உணரவேண்டும் என்ற தேடுதலில்
> கருணை என்பது
> பிரபஞ்சத்தில்
> உள்ள அனைத்திலும்,
> நாமே ஒரு பாகமாக
> இருக்கிறோம் என்ற
> அனுபவத்தைப் பெறுவது.
இருக்கும் அவர்களது ஆன்மா ஒரு குருவை அடைய முடிவு செய்கிறது. இறுதியாக, அந்த ஆன்மா உயிருக்கு ஆபத்தான நோய்களோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதே, அதை அடைவதற்கான வழி என்று தீர்மானித்து விடுகிறது.
பெரும்பாலும் நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை உள்ளது உள்ளபடியே, நாம் பார்ப்பது இல்லை. நாம் வாழும் இந்த வாழ்வே இன்னொரு நாடகம்தான். திரைப்படக் கருவியின் விளக்கை அணைத்தால்தான் திரையைப் பார்க்க முடியும்.
அதுவரையில், அது நாடகம் என்பதை அறியாமல், திரையில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறோம்.
வாழ்க்கை என்னும் விளக்கு அணைந்தபின்புதான், நாம் வேறு ஒரு தளத்தை அடைகிறோம். அங்குதான், நாம் விளையாடிய விளையாட்டு எதற்காக என்பதைப் பார்க்கிறோம். அதுவரை நாமும் அழுது, சிரித்து, கத்தி, சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒரு வசீகரமான குருவிடம் அன்பு வயப்படுவது மிகவும் எளிது. கிருஷ்ணர் எல்லாக் கடவுள்களையும் (தெய்வங்களையும்) விட அழகானவர். அவரிடம் காதல்வயப்படுவது எளிதானது.
pயமுறுத்தும் காளியிடமோ, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத சிவனிடமோ அன்பு வயப்படுவது என்பது எளிதானது இல்லை. அப்படி அன்பு செலுத்தும் போது, நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய உருவமும் மிகவும் மாறுபட்டதாகவே இருக்கும்.
நீங்கள் இராமகிருஷ்ணராக இருந்தால் மட்டுமே பிணங்களின் மீது நடனமாடும் அன்னைக் காளியை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த முடியும்.
நீங்கள் சங்கரராக இருந்தால் மட்டுமே (நித்யமான, நிரந்தரமான, நிச்சலனமான) ஆழ்ந்த அமைதியில் இருக்கும் சிவனுடன் காதல்வயப்பட முடியும்.
ஆனால் யார் வேண்டுமானாலும்
கிருஷ்ணரிடம் அன்பு செலுத்திவிடமுடியும்.
எல்லோரும் அதனால்தான் கிருஷ்ணரிடம்
அன்பு செலுத்துகிறார்கள். யாருமே
கிருஷ்ணரைப் பயமுறுத்துபவராக
எதிர்பார்ப்பதில்லை.
எனவேதான் கிருஷ்ணர் தம் கோர உருவத்தை வெளிப்படுத்தியபோது, அர்ஜுனனால் அதைத் தாங்கமுடியவில்லை; அவர் காலுக்கு கீழ் இருந்த பூமி நழுவியது. அவருக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. யாரிடத்தில் உதவி கேட்பது என்று தெரியவில்லை. எனவே அவர், "என் மீது கருணை காட்டுவீராக, தாங்கள் யார் என்று கூறுங்கள். தாங்கள் இங்கே எழுந்தருளி இருப்பதன் நோக்கம் என்ன? நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை வணங்குகிறேன்," என்று மன்றாடுகிறார்.

உங்களால் காதல் வயப்பட முடியும்
கேள்வி : சுவாமி, இது எப்படி நடக்க முடியும்? நமது இஷ்டதெய்வத்தைப் (Istadevata) பற்றிப் பேசும்போது நம்மால் அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. பயங்கரமான ஒரு வடிவத்தோடு எப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது?
ஆம். நீங்கள் சொல்வது சரியே. உருவமில்லா வழிபாட்டைவிட உருவத்தை நீங்கள் வழிபட காரணம், அந்த வடித்தோட உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதற்காகவே.
அந்த உருவத்தை உங்களுக்குப் பிரியமானதாக, சௌகரியமானதாக உணர்ந்தால்தான் உங்களால், அந்த உருவத்தோடு உங்களை அடையாளப் படுத்திக்கொள்ள முடியும். உங்கள் இஷ்டதெய்வம் அழகாக, இனிமையாக இருந்தால் மட்டுமே, அதனோடு உங்களால் காதல் வயப்பட முடியும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவரின் நிலை அது. ஆரம்ப நிலையில் இருக்கும் ஒருவருக்கு அன்பு வயப்படுவதற்கு இந்த சொகுசு, வடிவத்தின் மீதான ஈர்ப்பு இவையெல்லாம் தேவையாக இருக்கிறது.
> உங்கள் விழிப்புணர்வு மேம்பட மேம்பட உருவத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும்.
உங்கள் விழிப்புணர்வு மேம்பட மேம்பட உருவத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும். மீண்டும் மீண்டும் நான் என் பக்தர்களுக்குச் சொல்வதெல்லாம், த்யானத்தின்போது அனைத்து வடிவத்தையும், என் வடிவம் உட்பட, அனைத்தையும் விட்டுவிடுமாறு சொல்கிறேன்.
அர்ஜுனன் ஆரம்ப நிலையைக் கடந்த நிலையில் இருக்கிறார். விழிப்படைந்த ஆன்மாவாகிய அர்ஜுனன் தம் குருவின் உண்மையான வடிவத்தைக் காண விரும்புகிறார். ஆகவே குருவானவர் தம்முடைய உண்மையான, நிஜமான வடிவை அவருக்குக் காட்டுகிறார்.
கவிஞர்கள் ‘இயற்கையை’ அழகானதாக, அற்புதமானதாக, அதிசயக்கத்தக்கதாக, வசீகரமானதாக மற்றும் ஆனந்தமானதாக வர்ணிக்கிறார்கள். ஆம். இவையனைத்தும் இயற்கையின் தன்மையே.
பூகம்பம், எரிமலை வெடிப்புகள், சுனாமி, சுழற்காற்று மற்றும் இதர பயங்கரமான சீர்கேடுகள்கூட இயற்கையே. இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன.
எத்தனை கவிஞர்கள் இவற்றைப்பற்றி எழுதுகிறார்கள்? அப்படியே எழுதினாலும் எத்தனை மக்கள் இவற்றைப் படிக்க விரும்புகிறார்கள்?

"எங்களுக்கு ஏற்கனவே போதுமான
சோகங்கள் வாழ்க்கையில் உள்ளன. மேலும்
மேலும் நாங்கள் ஏன் இதில் ஆர்வம்
செலுத்த வேண்டும்?" என்று நீங்கள்
கேட்கலாம்.
உங்களில் பலர், இனிமையான வாழ்விற்கும் இனிமையற்ற வாழ்விற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். எது இனிமை என்று உணர்கிறீர்களோ அதையே பார்க்க விரும்புகிறீர்கள்.
இனிமையற்றதை இனிமையானதாக மாற்ற
முயற்சி செய்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக
இயற்கை இதற்கு ஒத்துக் கொள்வதே
இல்லை.
அதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் சரி
அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி
இயற்கை எப்படி இருக்கிறதோ அப்படியே
இருக்கிறது.
கிருஷ்ணர்
ஒரேயொரு பரிமாணம்
கொண்டவர் அல்ல;
பல பரிமாணங்கள்
கொண்டவராக
இருக்கிறார்.
கிருஷ்ணர்தான் இயற்கை அவரே இருப்புத்
தன்மை, அவரே பிரபஞ்சமும் கூட. அவர்
ஒரேயொரு பரிமாணம் கொண்டவர்
அல்ல; பல பரிமாணங்கள் கொண்டவராக
இருக்கிறார்.
ஆனந்தம் அளிப்பதை மட்டுமே உங்களுக்குத் தருகிறேன்
அர்ஜுனன் ஸத்யத்தைக் கேட்டதால், கிருஷ்ணர் ஸத்யத்தை அவருக்குக் காட்டினார்.
ஸத்யத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு அஸௌகரியமாக இருந்தால், உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ, உங்களால் எதுவரையில் நம்பமுடிகிறதோ, அந்த நிலையோடு நீங்கள் நின்றுகொள்ளலாம்.
என்னிடம் வரும் மக்களிடம் நான்
சொல்வதுண்டு: "உங்களுக்கு வேண்டியதை
நீங்களே தேர்ந்தெடுங்கள். என்னுடைய
வடிவத்தை மட்டுமே பார்த்து மகிழ்ந்து
கொண்டிருக்கும் வெறும் பார்வையாளராகக்
கூடநீங்கள்இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள்
கண்களுக்கும் மூளைக்கும் நான் விருந்து
கொடுப்பேன்.
ஸத்யத்தை அறிய
விருப்பம் இருந்தால்,
திறந்த மனத்தோடு
நெருங்கி வாருங்கள்.
பிறகு, நீங்கள் மகிழ்ச்சியோடு திரும்பிப் போகலாம். என்னுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் விரும்பியபடி அந்தப் புகைப்படத்திற்கு எது வேண்டுமானாலும் செய்துபார்த்து மகிழலாம். இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நீங்கள் ஸத்யத்தைத் தேடுகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
ஸத்யத்தை அறிய விருப்பம் இருந்தால், திறந்த மனத்தோடு நெருங்கி வாருங்கள். பிறகு நீங்கள் அறுவை சிகிச்சைக்குத் தயாராக வேண்டும். நான் அறுவை சிகிச்சையாளராக மாறும்போது விருந்தளிப்பது நின்று விடும்.
உங்களுடைய அஹங்காரத்தை கரைப்பதற்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்றார்போல, நான் உங்களை எரிக்கலாம் அல்லது நீங்கள் சாதாரணமாக, இனிமையற்றவை என்று எதைச் செய்ய விரும்பாமல் தவிர்ப்பீர்களோ அவற்றையே நான் உங்களைச் செய்ய வைக்கலாம்.
இது உங்கள் விருப்பம். இதில் எந்தவிதமான கட்டாயமும், வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை.
எது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்குமோ அதையே நான் தருகிறேன். எப்படியோ, நெருங்கி வருவது என்று முடிவு செய்து விட்டால், விஷயங்கள் சூடுபிடிக்கும் போது ஓடி விடாதீர்கள்.
இது, அறுவை சிகிச்சை மேஜையில் இருந்து பாதியில் ஓடுவதுபோல மிகவும் ஆபத்தானதும் கூட."
அர்ஜுனன் எத்தைக் கேட்டாரோ, அது அவருக்குக் கிடைத்தது. அர்ஜுனன்
தமது இஷ்ட தெய்வத்தின் அழகான
வடிவத்தைக் கேட்கவில்லை. கிருஷ்ணரின்
உண்மையான வடிவமாகிய பரப்ரம்ஹகிருஷ்ண
வடிவத்தைப் பார்ப்பதற்கு விரும்பினார்.
உண்மையில், என்ன எதிர்பார்க்க
வேண்டுமென்று அர்ஜுனனுக்குத்
தெரியவில்லை. அந்த வடிவம் மிகமிக
அரிதாகவே வெளிப்படும்.
அந்த வடிவத்தின் ஒரு பகுதியாகிய கோர
சொரூபத்தைப் பார்த்ததும் அர்ஜுனன்
பயந்துவிட்டார். மாபெரும் போர்வீரராகிய
அர்ஜுனனுக்கும்கூட அக்காட்சியைக் காணும்
மனத்தைரியம் இல்லை.
> எந்த ஒரு விஷயத்திலும்
> அதன் எதிரிடையான
> அனுபவத்தைப்
> பெறாமல்
> அந்தக் குறிப்பிட்ட
> விஷயத்தை
> முழுமையாகப்
> புரிந்துகொள்ள
> முடிவதில்லை.
அவர் கண்ட காட்சி, அவர் காண விரும்பிய காட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
வேற்றுமை பாராட்டுதல்
பிரபஞ்சம் முழுவதுமே முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. பொருள் சார்ந்த பிரபஞ்சத்தில் யாருமே எந்த ஒரு விஷயத்திலும் அதன் எதிரிடையான அனுபவத்தைப் பெறாமல் அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
தீமை இல்லாமல் நன்மை இல்லை. வெறுப்பு இல்லாமல் அன்பு இல்லை. பயம் இல்லாமல் துணிச்சல் இல்லை. சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை இல்லை.
நீங்கள் இந்த இரண்டு முரண்பாடான குணாதிசயங்களைப் பார்த்தால் மட்டுமே, இந்த இரு எதிரெதிர் தன்மைகளின் உண்மைநிலையோடு இணக்கமாக ஒத்துப்போகும்போது மட்டுமே, இந்த இரண்டு தன்மைகளையும் கடந்து செல்வீர்கள்; இரண்டையுமே சமமாகக் கையாளுவீர்கள்.
ஆன்மீக உலகில், ‘சரி, தவறு என்று எதுவுமே இல்லை’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அங்கே அப்படியே, வெறுமனே இருக்கிறது. என்ன நடக்கிறதோ அதுதான் நடக்கிறது. பாவி என்றும் புண்ணிய புருஷர் என்றும் எவருமே இல்லை. வேறு வகையில் சொல்லப்போனால், துறவிகளும் பாவிகளும் சமமானவர்களே.
கம்சனும் சிசுபாலனும் இல்லாமல் கிருஷ்ணர் இல்லை. இராவணன் இல்லாவிட்டால் இராமன் இல்லை.
இந்து புராணத்திலிருந்து ஒரு சின்ன கதை.
விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தில் ஜெயன், விஜயன் இருவரும் துவாரபாலகர்களாக இருந்தார்கள். ஒரு முறை விஷ்ணுவை காண வந்த ஸனகாதி முனிவர்களை, உள்ளே செல்லவிடாமல் தடுத்தார்கள். அவர்களின் வருகை விஷ்ணுவின் ஓய்விற்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக நினைத்து அவர்களை உள்ளே விட மறுத்தார்கள்.
இரு எதிரெதிர்
தன்மைகளின்
உண்மைநிலையோடு
இணக்கமாக
ஒத்துப்போகும்போது
மட்டுமே,
இந்த இரண்டு
தன்மைகளையும்
கடந்து செல்வீர்கள்;
கோபமடைந்த அவர்கள் அவ்விருவரையும்
மானுடர்களாக பிறக்குமாறு சபித்து
விட்டார்கள். உடனே ஜெயனும் விஜயனும்
விஷ்ணுவிடம் முறையிட்டு சாபவிமோசனம்
கேட்டு மன்றாடியபோது, விஷ்ணு தம்மால்
எதுவும் செய்ய முடியாது என்றும், சாபத்தை
மாற்றி வேண்டுமானால் அமைக்க முடியும்
என்று சொன்னார்.
விஷ்ணு அவர்களுக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்கிறார். ஒன்று, இருவரும் விஷ்ணுவின் எதிரிகளாக பிறந்தால், மூன்று ஜென்மங்களிலேயே சாப விமோசனம் அடைந்து வைகுண்டம் திரும்பி விடலாம் அல்லது நூறு ஜென்மங்கள் விஷ்ணுவின் புகழ்பாடும் பக்தர்களாகப் பிறந்து பிறகு வைகுண்டத்திற்குத் திரும்பி விஷ்ணுவை அடையலாம் என்பதே அந்த வாய்ப்புகள்.
ஜெயனும், விஜயனும் முதல் விருப்பத்தையே தேர்வு செய்தார்கள். விஷ்ணுவின் அவதாரங்களின் பிறகு அவர்களே பூமியில் ஹிரண்ய கசிபு மற்றும் ஹிரண்யாக்ஷனாகவும், இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும் கம்ச னாகவும் சிசுபாலனாகவும், எதிரிகளாகப் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்துணை விரைவில் விஷ்ணுவைச் சென்றடைய வேண்டும் என்ற தீவிர தன்மை அவர்களிடம் இருந்தது. அதனால் விஷ்ணுவின் எதிரிகளாக அல்லது பக்தர்களாக, எப்படிப் பார்க்கப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தமட்டிலும் அது ஒரே தன்மைதான்.
உண்மையில், எதிரிகளாக இருந்ததால் ஒரு பக்தன் நினைப்பதை விட அதிகமாக, ஆழமாக தங்களுடைய இதயத்தில் விஷ்ணுவை நினைத்துகொண்டு இருந்தார்கள்.
எதிரெதிர் தன்மைகளாகத் தெரிகிற இரு வேறு குணாதிசயத்தை அனுபவித்து, அவற்றின் சாரம் ஒன்றே என்பதை விழிப்புணர்வுடன் உணர்ந்து புரிந்து கொள்ளும்போது மட்டுமே இந்தப் புரிதல் நிகழ முடியும்.
உங்கள் பார்வையிலும் அணுகுமுறையிலும்தான் இந்த மாறுபாடும் வேறுபாடும் இருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவருக்குச் சரி என்று தோன்றுவது மற்றொருவருக்குத் தவறாகத் தோன்றலாம்.
ஒருவர் விரும்புவதை மற்றவர் வெறுக்கலாம்.
புலன்கள் மூலம் உணரக்கூடிய விஷயங்களின்
தன்மைகளைக் கடந்து செல்லும்போது, ஒரு
பொருளோடு அல்லது ஒரு நிகழ்ச்சியோடு
உங்களைப் பிணைத்துக் கொள்ளாமல்,
சாட்சியாக விலகி நின்று பார்க்கும்போது
இந்த வேறுபாடுகளும் மாறுபாடுகளும்
முற்றிலும் மறைந்து விடுகின்றன.
இந்தப் பக்குவத்தை, இந்தப் புரிந்து கொள்ளும் தன்மையை அடைவதற்கான முயற்சியில் அர்ஜூனன் இருக்கிறார். இந்த அத்தியாயத்தின் உள் அர்த்தத்தை நீங்கள் ஆழமாக உள்வாங்க முடிந்தால் ஒன்றைப் புரிந்து கொள்வீர்கள்.
உருவமில்லா ஒரு சக்தியை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் சக்தி வாய்ந்த ஒரு உருவத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு அந்த உருவத்தைக் கடந்துசெல்லும்போது உருவமில்லாச் சக்தியைப் பார்க்க முடியுமென்பதை நீங்கள்கூட புரிந்துகொள்வீர்கள்.
இந்தச் செயல் நிகழும்போது, அந்த வடிவம் உங்களுக்குப் பழக்கப்படாத ஒன்றாகவோ அல்லது நீங்கள் காண விரும்பிய வடிவமாகவோ இருக்கலாம்.
உங்களுக்குப் புரியும்விதத்தில் புரியும் வார்த்தைகளில் சொல்கிறேன்
கேள்வி: மற்ற உயர்ந்த ஞ்ஞான குருமார்களிடம் இருந்து உங்களுடைய போதனைகள் எந்த விதத்தில் வேறுபடுகின்றன? இப்போது இருக்கும் எதையும் துறக்க வேண்டியதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். வேத நூல்கள் உலக பந்தங்களை எல்லாம் துறந்துவிட வேண்டும் என்று சொல்வதாகப் பலர் சொல்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது.
குழப்பமடைவது நல்லதே. ஒரு ஞானியும் முட்டாளும் மட்டுமே ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அதனால் நீங்கள் உங்களது இயல்பு தன்மையில்தான் இருக்கிறீர்கள்!
நான் சொல்வதும் வேத நூல்கள் சொல்லுவதும் ஒரே கருத்தைத்தான். வேத நூல்கள் சொல்வதும், கிருஷ்ணர் பகவத் கீதையில் மீண்டும் மீண்டும் ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே’ என்று சொல்வதும் ஒரே கருத்தைத்தான்.
கிருஷ்ணர் ஒருபோதும், "எல்லாச் செயல்களையும் துறந்துவிட்டு, கண்களை மூடி மலைகளிலோ காடுகளிலோ அமர்ந்து கொள்," என்று சொன்னதே இல்லை.
மீண்டும் மீண்டும் அவர் சொல்வதெல்லாம், எது சரியோ அதைச் செய் என்பதே. "உன் தர்மத்தைச் செய்வாயாக, ப்ராரப்த கர்மத்தின்படி உனக்கு விதிக்கப்பட்டு உள்ள கடமையைச் செய்வாயாக!" என்பதுதான்.
> "எல்லாச்
> செயல்களையும்
> துறந்துவிட்டு,
> கண்களை மூடி
> மலைகளிலோ,
> காடுகளிலோ
> அமர்ந்து கொள்," என்று
> சொன்னதே இல்லை.
இந்த ஞானக்கருத்துக்களைத்தான், பேராசை
நிறைந்த இன்றைய சூழலுக்கேற்றவாறு,
உங்களுக்குப் புரியும்விதத்தில், புரியும்
வார்த்தைகளில் நான் சொல்கிறேன்.
கிருஷ்ணருடைய காலத்திற்கும், இன்றைய
காலத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம்
இருக்கிறது. அன்றைய மக்கள் சமயநூல்களில்
வழங்கப்பட்ட உத்தரவுகளையும்,
கட்டளைகளையும் மதித்துப் பின்பற்றினார்கள்.
அவர்கள் ஆன்மீகத்தைத் தங்களின் உருமாற்றத்திற்காக நம்பினார்களே தவிர, ஆசை அச்சத்தின் அடிப்படையில் நம்பவில்லை.

நானே அந்த அகராதி
நாம் தற்போது ஊடகங்களில் இருந்தும், நம்மைச் சுற்றி இருக்கும் பலவற்றில் இருந்தும் பார்த்தவற்றைக் கொண்டும் தொகுக்கப்பட்ட கற்பனைகளைக் கொண்ட, ஒரு மாசுபட்ட மூளைபடிவத்தை உருவாக்கி இருக்கிறோம்.
> உங்களிடம்
> இப்போது இருக்கும்
> எதையும்
> துறக்கத் தேவையில்லை.
> ஆனால் உங்களிடம்
> இல்லாதவற்றைப் பற்றிய
> கற்பனைகளையும்,
> கனவுகளையும்
> விட்டு விடுங்கள்.
ஒவ்வொருவரும் எல்லாவற்றிலும்
நிபுணராக இருக்கிறோம். நாம் எதையும்
இழக்க விரும்புவதில்லை; ஆனாலும்
எல்லாவற்றையும் பெற விரும்புகிறோம்.
கிருஷ்ணருடைய போதனைகளின்
அடிப்படையைப் புரிந்துகொள்ளாவிட்டால்,
அவற்றைப் பின்பற்ற மாட்டோம்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன், “நீங்கள் வாழ்க்கையில் எதையுமே துறக்கத் தேவையில்லை.” அதுதான் உண்மை. தயவுசெய்து, உங்களிடம் இருக்கும் எதையும் விட்டு விடுவதைப் பற்றி நினைக்காதீர்கள். இருப்பதையெல்லாம் அனுபவியுங்கள். உங்கள் பணம், உங்கள் கார், உங்கள் வீடு, உங்கள் விடுமுறைகள், வேலை மற்றும் பொருள் ரீதியாக எவையெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.
உங்கள் உறவுகள், மனைவி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் அனைவரிடமும் அன்பாக இருங்கள். ஆனால் உங்கள் கற்பனைகளை, மனக்கோட்டைகளை மட்டும் விட்டு விடுங்கள்.
உங்கள் நண்பரோ, பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது வேறு யாரோ ஒருவர் வைத்திருக்கும் பொருள்களைப், பார்த்து, அவற்றை அனுபவிக்க ஆசைப்படாதீர்கள். அவர்களைப்போல் மேலும் மேலும் பொருள் சேர்க்க ஆசைப்படாதீர்கள். அவை உங்கள் சொத்துகள் இல்லை. அவை உங்கள் கற்பனைகள்.
இந்தக் கற்பனைகள், நீங்கள் எதை வைத்திருக்கிறீர்களோ அதை அனுபவிக்க முடியாமல் உங்களைத் தடுக்கின்றன. அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். "உங்களிடம் இப்போது இருக்கும் எதையும் துறக்கத் தேவையில்லை. ஆனால் உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றிய கற்பனைகளையும், கனவுகளையும் விட்டு விடுங்கள்."
உங்கள் எல்லாத் துக்கங்களுக்கும் காரணம், உங்களிடம் இல்லாதவற்றின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஆசையே. எதைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்ப நினைக்கிறீர்களோ, அதைப் பற்றிய கற்பனைகளே உங்களது ஆசைகள்.
இந்தக் கற்பனைகளை விட்டுவிட்டால் நீங்கள் ஆனந்தமாக இருக்கலாம்.
வேத நூல்கள், குறிப்பாக இந்து மதத்தின் வேத நூல்கள், ஞானமடைந்த குருமார்களுடைய அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. அவை ஒருபோதும் தவறாவதில்லை.
அவற்றைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது இல்லை. ஏனென்றால் நீங்கள் வேறொரு காலத்தில் வேறொரு நேரத்தில் வாழ்கிறீர்கள். உங்களுக்குத் தேவை ஓர் அகராதி. நானே அந்த அகராதி.
