பயப்படாதீர்கள்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாதீர்கள்

11.32 ஸ்ரீ பகவான் சொன்னது: உலகங்களை அழிக்கிற எல்லாம்வல்ல காலம் நான். நானே உலகங்களை அழித்துகொண்டு இருக்கிறேன். நீ போர் புரியாவிட்டாலும் எதிர்த்து நிற்கிற சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர் வீரர்கள் யாரும் உயிர் வாழப் போவதில்லை.
11.33 இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவனே! நீ எழுந்திரு, புகழைப்பெறு. எதிரிகளை வென்று, செல்வம் நிறைந்த இராஜ்ஜியத்தை அனுபவி. இந்தப் போர்வீரர்கள் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ ஒரு கருவியாக மட்டும் இரு!
11.34 என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற போர் வீரர்களையும் நீ கொல். பயப்படாதே; போரில் நீ உன்னுடைய பகைவர்களை வெல்வாய். தான் உண்மையில் யார் என்பதை கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.
"நானே வல்லமை வாய்ந்த காலம்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். "நானே ஆக்ரோஷமாக உலகங்களை உண்டு அழிக்கிறேன்!"
கீதையில் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட ஸத்யங்களுள் மிகவும் வீரியம் வாய்ந்த ஸத்யம் இதுவே. அர்ஜூனனிடம் கிருஷ்ணர் முன்பே, ஆன்மாவைப் பற்றியும், மறுபிறவி, கர்மாவின் இயல்பு, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வது பற்றியும், தம் மகிமைகள் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
முதல் முறையாக தம் முகத்திரையை எடுத்து விட்டு, உண்மையைச் சொல்கிறார், "நானே அழிப்பவன்."
> சிவன்,
> அழிப்பதன் மூலம்
> உருவாக்குபவர்.
"தாங்கள் யார்? தங்களின் நோக்கம்தான்
என்ன?" என்ற அர்ஜூனனின் கேள்விகளுக்கு,
கிருஷ்ணர் எந்தத் தயக்கமும் இல்லாமல்
பதில் சொல்கிறார்.
"நானே காலம், நானே அழிப்பவன்," என்று பகவான் சொல்கிறார்.
காலம் ஒருபோதும் அப்படியே நிற்பதில்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. காலத்தின் ஓட்டத்தை எதுவும் நிறுத்த முடியாது. காலத்தை எதுவும் திரும்பவும்கொண்டு வர முடியாது. காலத்தை எதுவும் முன்னோக்கியும் நகரச் செய்ய முடியாது. காலம் அழிக்கிறது.
எதிர்காலம், தொடர்ந்து நிகழ்காலமாக மாறுகிறது; பிறகு கடந்த காலமாகிவிடுகிறது. நமது வாழ்வின் இப்போதை அலைவரிசையின்படி, நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே பார்க்க முடியும். கடந்த காலத்தை நினைவாக மட்டுமே வைத்திருக்க முடியும்.
வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே உணரமுடியும் என்பது தெரிந்தும் கூட, நாம் நிலையாக நிகழ்காலத்தை விட்டு தப்பியோட முயற்சி செய்கிறோம்.
நம்மால் தெரிந்து கொள்ளமுடியாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளிலேயே நாம் எப்போதும் சிக்கிக் கொள்கிறோம். மேலும் நமது நிகழ்காலமாக இருந்தபோது, நாம் வாழத் தவறிவிட்ட கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களிலும் நாம் சிக்கிக்கொண்டு இருக்கிறோம்.
நம் மொத்தக் கதையுமே, காலத்தைத் தவறவிடுவதாகத்தான் இருக்கிறது. நாம் காலத்தை அழிக்கிறோம். காலம் நம்மை அழிக்க அனுமதிக்கிறோம்.
நமக்குக் கிடைத்திருக்கும் காலத்தின் ஒரே முகமாகிய நிகழ்காலத்தைத் தவற விட்டு அழிக்கிறோம். நிகழ்காலத்தில் இருப்பதை விட்டுவிட்டு, கற்பனைகளால் நமது எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்.
நமது கற்பனைகளால் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இரண்டையுமே அழித்துவிடுகிறோம்.

மொத்தச் சக்தியையும் ஆனந்தத்தை நோக்கித் திருப்பிவிடுங்கள்
நம் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிச்சயமான
விஷயம், என்ன என்றால், ஒருமுறை
காலம் நகர்ந்து சென்றுவிட்டால், சென்றது
சென்றதுதான். அதை ஒருபோதும்
மீட்டெடுக்க முடியாது.
எப்படி வருத்தப்பட்டாலும், எவ்வளவு துக்கப்பட்டாலும், நடந்ததை எதுவும் மாற்ற முடியாது. ஆனால், நிகழ்காலத்தின் இந்தக் கணத்தில் இருக்கும்போது நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தியை நாம் பெற்று விடுகிறோம்.
ஒவ்வொரு மனிதரும், நிகழ்காலத்தின் இந்தக் கணத்தில் தமக்கு விருப்பமான செயலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெற்று இருக்கிறார்.
இதப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டு விட்டு நடப்பதெல்லாம் முன்வினைப் பயன் என்றும் குற்றம் சாட்டலாம்.
முன்வினைப் பயன் என்பது நமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாததே.
நிகழ்காலத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்போது மட்டுமே எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும். அது இன்னும் எதிர்காலமாகவே இருக்கும்போதோ அல்லது கடந்த காலமாக நழுவி விடும்போதோ அதை வடிவமைக்க முடியாது.
முதலில் சொன்னது சாத்தியமில்லாத ஒன்று. இரண்டாவது காலம் கடந்து விட்ட ஒன்று. நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன், ஸ்திரமாக இருந்தால் மட்டுமே ஒருவரால் எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க முடியும்; மேலும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் முடியும்.
நமது புத்திசாலித்தனம், சக்தி, உருவாக்கும் திறன், யுக்தி அனைத்தையும் இந்தக் கணத்தில் நாம் ஆனந்தமாக வாழவே உபயோகிக்கவேண்டும். இவை அனைத்தையும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகளிலும், கடந்த காலத்தைப் பற்றிய துக்கங்களிலும் செலவிடக் கூடாது.
அர்ஜுனனுக்கும்
அவரது
ஸம்ஸ்காரங்களுக்கும்
இடையில் நடைபெறும்
சண்டையே இந்த
மாபெரும் போர்.
வாழ்க்கை நதியின் திசைக்கேற்ப நீந்திலாம்
கிருஷ்ணர் ஒரு எளிய ஸத்யத்தை இங்கே சொல்கிறார். “நீ போர் புரிந்தாலும், போர் புரியா விட்டாலும், இந்தப் போர் வீரர்கள் எல்லாரும் இறப்பார்கள். பெருவல்லமை மிக்க காலமாக நான் அவர்களை விழுங்குவேன். நீ அதற்கு காரணம் அல்ல. நீ மேலோட்டமான காரணம் மட்டுமே. அவர்களது அழிவிற்கு கருவியாக இருப்பதன் மூலம் புகழ், சக்தி, செல்வங்களைப் பெறுவாயாக.”
அர்ஜுனனின் எதிரிகள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள் என்று கிருஷ்ணர் சொல்வதால், எதிர்காலம் என்பது விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று மிக எளிதாக விளக்கம் சொல்லிவிட முடியும்.
நன்மையைக் காப்பதும், தீமையை அழிப்பதுமே அவரது செயல் என்றும்கூட நாம் இதற்கு அர்த்தம் கொள்ள முடியும்.
'மஹாகாலம்' அவருக்கு அமைந்த உருவகங்களுள் ஒன்று. மஹாகாலமாக இருந்து கிருஷ்ணர் நன்மை, தீமை என்று எல்லாவற்றையும் அழிக்கிறார். காலம் வேற்றுமை பார்ப்பதில்லை. நீங்கள் நன்மை செய்தீர்களா, தீமை செய்தீர்களா என்று காலம் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காலம் விரைந்தோடிக் கொண்டே நிகழ்காலத்தை கடந்த காலமாகவும், எதிர்காலத்தை நிகழ்காலமாகவும், இறந்தகாலமாகவும் அழிக்கிறது.
மஹாபாலமாகக் கிருஷ்ணர் சமநிலையில் இருக்கிறார். அவர் அப்படியே இருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் அதன் மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை. காலமாக, என்ன நிகழ்கிறதோ அதை அவர் நிகழ்த்துகிறார்.
அவர், வெறுமனே பாய்ந்தோடும் பெரும் வல்லமை பொருந்திய ச க்தியாக இருக்கிறார். ஒருவர் ஆழ்ந்த பக்தியோடு கிருஷ்ணரிடம் தம்மையே சரணாகதி செய்து விட்டால் கிருஷ்ணரின் விருப்பப்படியே, அவர் வாழ்வில் என்னென்ன, எப்படி நட்க்கவேண்டுமோ அப்படி நிகழ ஆரம்பித்து விடுகிறது.
நாம் எந்தக் குறுக்கீடும் செய்யத்
தேவையில்லை. ஒரு செயலைச் செய்தால்,
பின்விளைவாக, பக்கவிளைவாக
என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ
என்று கவலை கொள்ளாமல் நாம்
எதைச் செய்யவேண்டுமோ, எப்படிச்
செய்யவேண்டுமோ, அதை அப்படியே
செய்ய வேண்டும், அவ்வளவுதான்.
இப்படிச் செய்வதனால் நாம் காலத்தின் ஓட்டத்தோடு இயைந்து செல்கிறோம். கிருஷ்ணரின் சக்தியோடு கலந்து செல்கிறோம்.
நம்முடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நமக்கு பிடித்தவிதத்தில் மாற்றி அமைக்க விரும்புகிறோம். இவ்வாறு எதிர்க்கும்போது நாம் கால ஓட்டத்தைத் தடை செய்கிறோம்.
நதியில் இருக்கும் பாறை, நதிநீரின் ஓட்டத்தால் படிப்படியாகத் தூளாக்கப்பட்டுக்க் கால ஓட்டத்தில் நுண் துகள்களாக மாறிவிடுகிறது. அதுபோல நாமும் காலத்தின் ஓட்டத்தில் ஒன்றுமில்லாததாக மாறி விடுகிறோம்.
நதிக்கரையில் இருக்கும் நாணலைப்போல
எதிர்ப்பு இல்லாமல் வளைந்து கொடுக்கக்
கற்றுக் கொண்டால், நாம் கால ஓட்டத்துடன்
நாமும் இயைந்து செல்ல முடியும்.
கடந்த காலமும்,
எதிர் காலமும்
மரணத்தின்போது
நிகழ்காலத்தில்
இணைகின்றன.
தேர்வு செய்யப் போராடுவது விடுதலை
இல்லை. அது நம்முடைய மனத்தின்
அடிமைத்தனம். நாம் தேர்வு செய்ய
வேண்டிய தேவையே இல்லை. மனம்
இயங்கும் தளத்தில்தான் தேர்வு செய்வது
என்பது நிகழ்கிறது; இருப்புத் தன்மையின்
நிலையில் தேர்வு செய்வது நடப்பதில்லை.
நம்முடைய இருப்புத் தன்மையில் நாம் தளர்வாக இருக்கும்போது, ஆனந்தமாக, தேர்வு செய்யாத விழிப்புணர்வோடு இருக்கிறோம்.
'தேர்ந்தெடுத்தல்' தானாக நிகழட்டும்! தேர்ந்தெடுக்காத தன்மையை நாம் தேர்ந்தெடுக்கமுடியும்.
நாம் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, இந்தக் கணத்தில் உண்மையிலேயே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்கும்போது நாம் என்ன செய்தாலும் அது தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிவிடுகிறது.
இதற்காக நாம் எந்தத் தனிச் சிறப்பு முயற்சியும் செய்ய தேவை இல்லை. என்ன நடந்தாலும் இந்த நொடியில் விழிப்புணர்வோடு இருப்பது என்பதே சரியான தேர்வு.
பிரபஞ்சத்தில் அழிவென்பது இல்லை அனைத்தும் புதுப்பித்தலே
இந்த உலகத்தை நான் அழித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, உடல் ரீதியான, பொருள் சார்ந்த உலகத்தின் மாயையை அழிப்பதைத்தான் குறிப்பிடுகிறார்.
அவர் கற்பனைகளை அழிப்பவர், அடையாளங்களை அழிப்பவர், அஹங்காரத்தை அழிப்பவர், உண்மையில்லாத மாயையை அழிப்பவர். அவர் முன்பே சொன்னதுபோல, அழிக்கப்படுவது இந்த உடல் மனம் என்கிற கூடு தானே தவிர, அழிக்கப்பட முடியாத ஆன்மா அல்ல.
போர்க்களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உளவியல் ரீதியான நாடகத்தைத்தான் மஹாகாலம் அழிக்கிறது.
கிருஷ்ணர் இந்த வார்த்தைகளில் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். உச்சநிலை விழிப்புணர்வாக, மாபெரும் இறைசக்தியாக, கிருஷ்ணரும் சிவத் தன்மையைத்தான் பிரதிபலிப்பிகிறார். சிவன், அழிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டிருந்தாலும், அவர் அழிப்பவர் அல்ல. அழிப்பதன் மூலம் மீண்டும் உருவாக்குபவர். அழித்தல் இல்லாமல் படைத்தல் நிகழவே முடியாது.
இறப்பில்லாமல் பிறப்பும் இல்லை. சிவனுடைய காலபைரவர் என்னும் தன்மையைத்தான் கிருஷ்ணரின் மஹாகாலம் குறிக்கிறது.
காலபைரவர் நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் நிகழும் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார்.
இம்மாபெரும் சக்தியின் முன்பு ஒருவர் சரணாகதி செய்யும்போது, காலத்தை பற்றிய பய உணர்வை இழக்கிறார்; அவர் காலத்தோடு இணைந்து செயல்படுகிறார்.
அப்போது ஒருவர் எதைச் செய்தாலும் அது சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான செயலாகிவிடுகிறது. காலம் குறித்த பயத்தை ஒருவர் இழக்கும்போது மரணபயம் அவரை விட்டுச் சென்று விடுகிறது. இறக்கின்ற அத்தனையும் மீண்டும் உருவாக்கப்படுகிறது.
அர்ஜுனன் முன்பே, தாம் மிகவும் மதிக்கும்
பெரியவர்களை, ஆச்சாரியர்களை,
நேசிக்கும் சொந்தபந்தங்களை அழிக்க
வேண்டிய சூழ்நிலையை எண்ணி குழப்பம்
அடைவதாகச் சொல்கிறார்.
தம்முடைய எதிரியாகக்
கருதிக்கொண்டிருக்கும் கர்ணன் தம்
சொந்த சகோதரந்தான் என்பதை அவர்
அறியவில்லை.

போருக்கு முன்னர், இரத்த சேதத்தைத் தவிர்ப்பதற்காக கர்ணனையும் அர்ஜுனனையும் பெற்ற தாயான குந்திதேவி கர்ணனைச் சந்திக்கிறார்.
கர்ணனிடம், "பிறந்தவுடன் ஆற்றில் விட்டுவிட்ட உன் தாய் நான்தான்," என்று எடுத்துச் சொல்கிறாள்.
போரில், கர்ணன் அர்ஜுனனாலோ அல்லது அர்ஜுனன் கர்ணனாலோ சாகப் போவது உறுதி, அதைத் தவிர்க்க முடியாது, ஆனால் எப்படியானாலும், குந்திக்கு ஐந்து மகன்கள் இருக்கப்போவது உறுதி என்று கர்ணன் சொல்கிறார்.
தாம் நேசிப்பவர்களையும் மதிப்பவர்களையும் கொல்லப்போவதில் தமக்கிருக்கும் தமது பயத்தைப் பற்றி அர்ஜுனன் விரிவாக எடுத்துரைக்கிறார்.
இப்படிச் செய்வதனால் தம்முடைய
வம்சத்தின் மொத்த அழிவிற்கும் தாமே
காரணமாகி விடுவோமோ என்று எண்ணி
அதிர்ச்சியடைகிறார்.
உண்மையில் அர்ஜுனன், தமது சொந்த கட்டுறு மனப்பாங்கின் அழிவிற்கெதிராகத்தான் போரிடுகிறார். பெற்றோர்களாலும் ஆச்சாரியர்களாலும் சமுதாயத்தாலும் உருவாக்கப்பட்ட அவருடைய கட்டுறு மனப்பாங்கும், ஸம்ஸ்காரங்களும் அழிப்பதற்குக் கடினமானவையாகவே இருந்தன.
உண்மையில், அர்ஜுனனுக்கும் அவரது ஸம்ஸ்காரங்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டையே இந்த மாபெரும் போர்.
மீண்டும் ஒருமுறை கிருஷ்ணர் இந்த அழிவிற்கு 'தாமே பொறுப்பு' என்று உணர்த்துகிறார். முன்னர் அவை வெறும் வார்த்தைகளாக இருந்தன.
ஆனால் இப்போது அர்ஜுனன் தாமே அந்த அழிவைக் காண்கிறார். பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வடிவமாகக் கிருஷ்ணர் மாறி கௌரவவீரர்களை விழுங்குவதைப் பார்க்கிறார்.
பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் எல்லா போர்வீரர்களுமே
ஆதி அந்தமில்லாத கிருஷ்ணரின்
கோர வடிவத்தினுள் மறைவதை, தம்
கண்களாலேயே கண்டதை அவரால்
நம்பாமல் இருக்க முடியவில்லை.
கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றுகிறார்,
"என்ன நடக்கிறது என்ற ஸத்யத்தை நீ
பார்த்து கொண்டிருக்கிறாய். அவர்கள்
ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள்.
தைரியத்தை இழக்காதே அர்ஜுனா. நீ என்ன
செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக.
உன்னுடைய பயத்தின் விளைவாக ஏற்பட்ட
மாயத்தோற்றங்கள் அனைத்தையும் நீ
போரிட்டு அழிப்பாயாக."
> குற்ற உணர்ச்சியையும்
> வருத்தத்தையும்
> விட்டுவிட்டு முன்னோக்கிச்
> சென்றுகொண்டே
> இருங்கள்.

தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும் சுதந்திரமும் உங்களுடையதே!
கேள்வி: காலம் முடிவில்லாதது, காலமே அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்றால், சுதந்திரமாக முடிவெடுப்பது, தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) - இவற்றுக்கு என்னதான் அர்த்தம்? தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமையை ஒத்துக் கொண்டாலும் கூட, நாளை என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருந்து எப்படி விடுபடுவது?
மிக நல்ல கேள்வி. கேள்வியின் இரண்டாவது பாகத்திற்கு முதலில் பதிலளிக்கிறேன்.
பெரும்பாலும், தெரியாத ஒன்றைப் பற்றிய பயம்தான் நம்முடைய ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கிறது. நம்முடைய அனைத்து பயங்களுக்கும் காரணமாக மரணபயமே இருக்கிறது!
நாம் இறக்கும்போது என்ன நடக்கும் என்று நமக்குத் தெரிவதில்லை. நாம் மறுபடியும் பிறந்து வருவோம் என்று சிலர் சொல்கிறார்கள். நாம் நரகத்திற்குச் செல்வோம் என்று சிலர் சொல்கிறார்கள்.
நாம் தருமங்கள் செய்வது, பசுக்களைத் தானமாகக் கொடுப்பது மாதிரியான செயல்களைச் செய்வதால் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். நம்முடைய அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்திலிருந்துதான் அனைத்து பயங்களுக்கும் மூல வேராக இருக்கும் மரணபயம் பிறக்கிறது.
குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதையே இணையற்றதாகவும், மேம்பட்டதாகவும் நினைக்கிறோம். நாம் எப்போதும் நம்மை பிரத்தேகமானவர்களாக, தனித்துவம் வாய்ந்தவர்களாக உணர்கிறோம். நாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைப் போலவோ, நம்முடைய நண்பர்களைப் போலவோ இல்லை. நாம் அவர்களை விட சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகவே நினைக்க விரும்புகிறோம். நாம் தீவுகள். இப்படித்தான் நாம் நம்முடைய அடையாளத்தை உருவாக்குகிறோம்.
namம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் அந்த அடையாளங்களுக்கு என்ன நிகழும் என்று நமக்குத் தெரியாததால் மரணம் நம்மைப் பயமுறுத்துகிறது.
நம்முடைய அடையாளத்தைப் பாதுகாத்துப்
பராமரித்து விரிவாக்க நாம் அங்கே இருக்கப்
போவதில்லை, நமது ஆனந்தமான, பசுமையான
அனைத்து ஆதாரங்களிலும் இருந்தும் நம்மை
விடுவித்து ஆதாரமற்ற வெற்றிடத்தில்
மரணம் நம்மைத் தள்ளிவிடும் என்று பயம்
கொள்கிறோம்.
மரண அனுபவத்தை அடைந்து திரும்பிய பலரிடம் பேசும்போது ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் மரண பயத்தை இழந்து விட்டிருந்தார்கள். அவர்களுக்கு மரணத்தை, எதிர்கொண்ட அனுபவம் வரவேற்கத் தக்கதாக இருந்தது. உண்மையில் அவர்களுக்கு திரும்பிவர மனமே இல்லை.
எந்தப் பயத்தை விட்டொழிக்க வேண்டுமென்றாலும், அதை எதிர்கொள்வதே சிறந்த வழி, குறிப்பாக மரணபயத்தை எப்படி எதிர்கொள்வது?
எங்களுடைய சில த்யான முகாம்களில், மரணமடைவது போன்ற அனுபவத்தில் உங்களை அழைத்து செல்லும் சில பகுதிகள் இருக்கின்றன. உடல், மனம், ஆன்மா வெவ்வேறானவை என்று நீங்கள் உணர இது உதவுகிறது. விழிப்புணர்வுடன் அந்த அனுபவத்திற்குள் ஒருமுறை சென்றால்கூட போதும், இந்த தியானம் மரணபயத்திலிருந்து உங்களை விடுவித்துவிடும். ஒருமுறை நீங்கள் மரண பயத்தைக் கடந்து விட்டால் போதும், தெரியாத ஒன்றைப் பற்றிய மற்ற பயங்கள் அனைத்தும் தானாகவே விலகிவிடும்.
மரணமடைவதற்கு உங்களுக்குப் பயமில்லை என்றால் பயப்படுவதற்கு வேறு என்ன இருக்கிறது? உங்களுக்கு இதை நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தால், மரண அனுபவம் பெற்ற மக்களிடம் பேசிப் பாருங்கள். இந்த அனுபவங்களைப் பற்றி விவரிக்கும் இணையதளங்களும் இருக்கின்றன.
அவர்கள் எல்லாருக்குள்ளும் ஒரே விதமான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காண்பீர்கள். எல்லாப் பயங்களில் இருந்தும் அவர்கள் விடுபட்டு விட்டார்கள். அவர்கள் தங்களுடைய மிக மோசமான பயத்தை எதிர்கொண்டு காயப்படாமல் வெளியில் வந்து இருக்கிறார்கள்.
மரணம் என்பது காலத்துடன் தொடர்புடையது. அதுதான் இறுதியான நிகழ்காலம். கடந்த காலமும், எதிர்காலமும் மரணத்தின்போது நிகழ்காலத்தில் இணைகின்றன. ஆனால் நிகழ்காலத்தை அனுபவித்து உணர்வதற்கு இறக்க வேண்டிய அவசியமில்லை. இதுவே நிகழ் காலத்தின் சிறப்பம்சம்.
> எந்தப் பயத்தை விட்டொழிக்க வேண்டுமென்றாலும், அதை எதிர்கொள்வதே சிறந்த வழி!
நிகழ்கால கணம் கடந்த காலத்தை அழித்து, எதிர்காலத்தை உருவாக்குகிறது. காலம் அளிக்கும் செயலை மட்டும் செய்வதில்லை. காலம், படைக்கும் செயலையும் காக்கும் செயலையும் செய்கிறது.
தேவாதி தேவனாகிய மஹேச்வரன்தான் காலம் என்று அழைக்கப்படுகிறார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றின் ஒருங்கிணைப்பே காலம்; படைத்தல் காத்தல், அழித்தல் இவற்றின் ஒருங்கிணைப்பே ‘காலம்.’
நிகழ்காலத்தின் இந்தக் கணத்தை, காலமே தீர்மானிக்கிறது. அனைத்தையுமே காலம்தான் தீர்மானிக்கிறது. இப்போது இந்த நொடியில் என்ன நிகழ்கிறதோ, அதுவே எதிர்காலத்தில் நிகழப்போவதையும் தீர்மானிக்கிறது.
நம்முடைய நிகழ்காலத்தைச் சீரமைக்க
முடியாத ஒன்று, நம்முடைய எதிர்காலத்தை
வடிவமைக்கவும் உதவாது.
மனிதராகப் பிறந்த எல்லோரும் ஏதாவது
ஒரு சமயம் இறந்தே ஆகவேண்டும்
என்ற ஸத்யத்தைத்தான் கிருஷ்ணர், ‘எல்லா
கெளரவர்களும் ஏற்கனவே இறந்து
விட்டார்கள்’ என்று சொல்லும்போது
குறிப்பால் உணர்த்துகிறார்.
இந்த ஸத்யம் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுக்கும்கூடப் பொருந்தும். கிருஷ்ணருடைய கவனம் அனைத்தும் அர்ஜுனன் தைரியமாக எழுந்து நின்று போரிட வேண்டும் என்பதே.
கிருஷ்ணர் அர்ஜுனனை உபதேசங்களால் தூண்டி, விழிப்படையச் செய்திராவிட்டால், அர்ஜுனன் யுத்த களத்தை விட்டே வெளியேறி இருப்பார்.
கிருஷ்ணரின் முயற்சியினால் பலன் முற்றிலும் வேறுவிதமாக மாறியது.
நாம் எதைச் செய்தாலும் அதில் தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும் சுதந்திரமும் எப்போதும் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்த செயலின் பலன் நாம் எதிர்பார்த்ததைப்போல இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்புகளை விட்டுவிடுங்கள்
இங்கேதான் நம்மில் பலருக்குப் பிரச்சினைகள் உருவாகிறது. நாம் நம் தேர்வை அதன்விளைவோடு குழப்பிக் கொள்கிறோம். நமது செயலுக்கும் விளைவுக்கும் (பலனுக்கும்) தொடர்பு இருந்தாலும் கூட, நாம் தேர்ந்தெடுத்த செயல் நாம் விரும்பிய பலனை அளிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால்தான் பகவத் கீதையில் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் அர்ஜுனனை எல்லா எதிர்பார்ப்புகளையும், பந்த பாசங்களையும் விட்டுவிடுமாறு புத்திமதி சொல்கிறார். மேலும் அவர் அர்ஜூனிடம், அர்ஜூனன் எதைச் செய்யவேண்டுமோ அதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்றும் ஆனால் அதே சமயம் பலனின் மீது எதிர்பார்ப்புகளையும் பற்றுதல்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார்.
இதுவே வெற்றிக்கான திறவுகோல்; இத் திறவுகோல், பொருள் சார்ந்த உலகில் வெற்றிகரமாக வாழ்வதற்குப் பயன்படுவதாக இருக்கிறது!
தொழில்சார்ந்த உலகத்தில், பொருள்சார்ந்த உலகத்தில் குடும்பத்திற்கென ஓடிக்கொண்டிருக்கும் நாம் இதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
நம்மில் பலரும் நமது எதிர்பார்ப்புகளில்தான் முழுக் கவனத்தையும் செலுத்துகிறோம். காலாண்டு திட்டத்தின் முடிவில் விளையும் பலனோ, அல்லது ஒரு நாளின் முடிவில் விளையும் பலனைப் பற்றிய எண்ணங்களோதான் நம் மனத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன.
இந்த எதிர்பார்ப்பில் ‘இப்போது’ என்ன செய்ய வேண்டும் என்பதை கவனிக்கத் தவறி விடுகிறோம். ‘இப்போது’ என்பதுதான் முக்கியம், எதிர்காலம் இல்லை.
‘இப்போது’ என்பதில் நம் கவனத்தைச் செலுத்தினால் போதும், எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.
நாம் ‘இந்தக் கணத்தில்’ ஒருபோதும் இருப்பதே இல்லை. கடந்த கால சிந்தனைகளில் மூழ்கி, நாம் என்ன செய்திருந்திருக்கலாம், எப்படிச் செய்திருந்தால் பலன்கள் வேறுவிதமாக இருந்திருக்கும். என்றெல்லாம் எண்ணி எப்போதும் கடந்த காலத்திலேயே வாழ்கிறோம்.
நீங்கள் எப்போதும் குற்ற உணர்ச்சி
யையும் வருத்தத்தையும் சுமந்துகொண்டு
இருக்கிறீர்கள். இவற்றை விட்டுவிட்டு
முன்னோக்கிச் சென்று கொண்டே இருங்கள்.
நாம் இப்போது செய்யும் எந்தச் செயலும்
நாம் ஏற்கனவே செய்த செயலின் மீது
எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அர்ஜூனன்,
கிருஷ்ணரிடம்
தம்மை முழுமையாக
சரணாகதி செய்கிறார்.
கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்து அசைபோடுவதால் எதிர்காலத்தைச் சிறப்புடன் வடிவமைக்கலாம் என்று நாம் சிந்தித்தால் அது தவறு. தேவையில்லாமல் குற்ற உணர்ச்சியை ஆழப்படுத்தவே இது உதவும்.
எதிர்காலத்தைப் பற்றி யூகிப்பதால் நாம் அடையப்போவது ஒன்றும் இல்லை. நாம் நன்றாகப் பகல் கனவு காணலாம். அவ்வளவுதான். ஆனால் ‘இந்தக் கண’த்தில் அதற்குத் தேவையானவற்றைச் செய்யாமல், வெறுமனே யோசித்துஃக் கொண்டிருப்பதால் ஆக்கப்பூர்வமாக எதுவும் நிகழ முடியாது.
எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை எதிர்காலச் செயல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன் நம்முடைய நிகழ்காலச் செயல்களின் மீது முதலில் தாக்கத்தை ஏற்படுத்தட்டும்.
நம்முடைய நிகழ்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினால்தான் எதிர்காலத்தின் மீது அவை ஆதிக்கம் செலுத்த முடியும்.
நாம் நிகழ்காலத்தில் உண்மையாக நிலை கொள்ளும் போது, நாம் என்ன செய்கிறோம், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்கிறோம். அப்போது நம் உடல் இருக்குமிடத்திலேயே மனமும் இருக்கிறது.
நிகழ்காலத்தில் செய்யும் எந்தச் செயலுமே சரியானதாகவே இருக்கும்; நாம் தேர்வு செய்யும் எந்தப் பாதையுமே நம்மைச் சரியான இடத்தில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
இந்த நிகழ்கால விழிப்புணர்வு என்பது உள்ளுணர்வுகளில் ஒன்றாகும். இது, எந்த விதமான திட்டமிட்ட அலசல்களும் ஆராய்வுகளும் தேவைப்படாமல், எது சிறந்ததோ அதைத் தீர்மானம் செய்யும்.
‘இப்போது’ என்பதில்
நம் கவனத்தைச்
செலுத்தினால் போதும்,
எதிர்காலம்
தன்னைத்தானே
கவனித்துக் கொள்ளும்.
பிரபஞ்ச சக்தியுடன் நாம் இசைந்து
இருக்கிறோம். எது நடந்தாலும் அது
நமக்கு சிறந்த நன்மையையே தரும்.
இது, சுதந்திரமாக முடிவெடுப்பதைக் குறிக்கிறதா அல்லது சரணாகதியைக்குறிக்கிறதா என்ற குழப்பம் நமக்குள் தோன்றும்.
நாம் நிகழ்காலத்தில் இருக்கும்போது, நமது முழுச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் முழுமுதற் சக்தியிடம் நம்மை சரணாகதி செய்கிறோம். இந்த முடிவு நம்மால் எடுக்கப்படுவதுதான்.
இது விபத்து அல்ல; நம்முடைய தேர்வே. கடந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இந்தக் கணத்தில் விஷயங்கள் எப்படி நிகழ்கிறதோ அப்படியே எல்லா நேரத்திலும் நிகழ அனுமதிக்கிறோம். இது நாம் விழிப்புடன் செய்யும் தேர்வு.
நிகழ்காலத்தின் இந்தக் கணத்தில் நாம் இருப்பதற்கான ஒரே வழி தியானம். உண்மையில் நாம் இந்தக் கணத்தில் வாழும்போது தியானத்தில் இருக்கிறோம்.
இதில் கொஞ்சம்கூட வித்தியாசம் இல்லை. மனத்தின் விழிப்புணர்வு நிலையில் இருந்து பிரபஞ்சத்தின் விழிப்புணர்வு நிலைக்கு நாம் உயர்த்தப்படுகிறோம். இது, நாம் செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது; நம்மை விழிப்புணர்வுள்ளவர்களாக ஆக்குகிறது. அங்கு முழுமையான தெளிவு இருக்கும்.
