KAILASA Library/பகவத் கீதை/நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள்Sign in
பகவத் கீதை

நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna playing flute

11.35 ஸஞ்சயன் சொன்னது:

கேசவனுடைய இந்த செய்திகளைக் கேட்ட, மணிமகுடம் தரித்த அர்ஜூனன் நடுங்கும் கரங்களால் கைகூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறார்.

தொண்டை அடைக்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தலைவணங்கி மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்துப் பேசுகிறார்.

11.36 அர்ஜூனன் சொன்னது:

ரிஷிகேஷா, உம்முடைய புகழைப் பாடுவதில் உலகம் இன்புற்று ஆனந்தமடைகிறது. ராக்ஷஸர்கள் அஞ்சி நாலாப்பக்கமும் ஓடுகிறார்கள். சித்தர்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் உமக்குப் பொருத்தமானவையே.

மஹாத்மாவே, அனைத்தைக் காட்டிலும் மேலானவரே, உலகைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்தவரே, பிரபஞ்ச பேரண்டத்தின் தோற்றுவாயே, தேவதேவருக்கெல்லாம் சிறந்தவரே, முடிவில்லாதவரே, உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியுள்ளதும் தோன்றாததும் ஆகிய இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட அழியாப்பொருளும் நீரே!

நீரே முழுமுதற் பொருள், தொன்மையானவர், பிரபஞ்ச பேரண்டத்திற்கு மேலான புகலிடமாக இருப்பவர். நீரே அறிபவராகவும், அறியத்தக்க விஷயமாகவும் இருக்கிறீர். மேலான இருப்பிடமும் நீரே. கணக்கில் அடங்கா வடிவங்களாக இருப்பவரே! தாங்கள் ஒருவரே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறீர்கள்.

வாயு, எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, ஆகிய எல்லோருக்கும் தாங்களே மூப்பாட்டனார். உமக்குப் பல நமஸ்காரங்கள். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள்!

எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லாப் பராக்கிரமத்தையும் உடைய நீர்வீர் அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர்கள். அதனால் நீரே எல்லாமுமாக இருக்கிறீர்.

இயல்புத் தன்மைக்கு உணர்வு மாற்றம் பெறுவதே பாவ விமோசனம்

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவவைப் புரிந்துகொள்ளும் ஞானத்தின் மூன்றாவது நிலையை அர்ஜூனன் அடைகிறார்.

முதல் நிலையில் கிருஷ்ணருடைய விச்வரூப தர்சனத்தைப் பற்றிய அர்ஜூனனின் மகோன்னதமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி அடைந்தன. அவர் விரும்பியபடியே கிருஷ்ணரைத் தரிசிக்கிறார்.

தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலர் மீது பிரம்மன் அமர்ந்திருக்க, கிரீடம் தரித்து, சக்கரம் ஏந்தியவராக, கதை தாங்கியவராக, காண்கிறார்.

ஆதி அந்தமில்லா ஜோதி ஸ்வரூபமாகிய விச்வரூப தர்சனத்தை அர்ஜூனன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று இனிமையான அந்த வடிவம் மறைந்து உக்கிரமான. கோரமான அனைத்தையும் விழுங்கும் பேருருவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்.

கலக்கத்துடன் அர்ஜூனன் கேட்கிறார், "தாங்கள் யார்? தங்கள் வருகையின் நோக்கம் என்ன?"

தாம் யார் என்று கிருஷ்ணர் விளக்குகையில், "நான் உலகங்கள் அனைத்தையும் விழுங்குகிற பெருவல்லமை வாய்ந்த காலம்," என்று சொல்கிறார்.

அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தாலும், சில கணங்கள் கழித்து, உக்கிரவடிவ காட்சியின் தாக்கத்தில் இருந்து சற்றே விடுபட்டு அர்ஜூனன், கிருஷ்ணரிடம் தம்மை முழுமையாகச் சரணாகதி செய்கிறார்.

தம்மைச் சுற்றி இருக்கும் உலகனைத்தையும்
விழுங்கும் மகாகாலமாக விளங்கும்
கிருஷ்ணரின் கோர வடிவைக் கண்ட
அர்ஜூனன் பிரமித்து நடுங்குகிறார்.
இருந்தாலும், தாம் இன்னும் உயிருடன்
விழுங்கப்படாமல் இருப்பதைக் கண்ட
அர்ஜூனன் அச்சத்திலிருந்து சிறிது
விடுபடுகிறார். அதனால் அர்ஜூனனால்
கிருஷ்ணரைப் போற்றி வணங்கத்தான்
முடியும்.

பற்றற்ற தன்மையின்
மூலமாகத்தான்
பாவ விமோசனம்
அமையமுடியும்.

சிறிது நேரம் முன்புவரை தோழனாகவும், தேர் ஒட்டியாகவும் காட்சி அளித்த கிருஷ்ணரின் எல்லையில்லாப் பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையைப் பற்றிய சந்தேகம் இப்போது சிறிதுகூட அர்ஜூனனிடம் இல்லை. ஆகவே இந்தப் பரம்பொருளை பரமாத்மாவை வர்ணிக்க என்னென்ன பெயர்கள், வர்ணனைகள் உள்ளனவோ அவற்றால் போற்றிப் புகழ்கிறார்.

இந்த நிலையில், அர்ஜூனன் கிருஷ்ணர் யார் என்பதையும் புரிந்துகொள்கிறார். கிருஷ்ணரின் நோக்கம் என்ன என்பதையும் அவர் புரிந்து கொள்கிறார். இப்போது அர்ஜூனனின் பக்தி உச்சத்தில் இருந்தது.

கிருஷ்ணரை முதற்பொருளாகவும் உலகைப் படைத்தவராகவும் வணங்குகிறார். கிருஷ்ணரில் இருந்து தோன்றிய பிரம்மா, பிரஜாபதியைப் படைக்கிறார். பிரஜாபதி உலகத்தின் சகல படைப்புகளையும் படைக்கிறார். அதனால் படைப்புக் கடவுளாகிய பிரம்மாவைப் படைத்தவரே உம்மை வணங்குகிறேன் என்று போற்றுகிறார்.

பஞ்ச பூதங்களாகவும் இயற்கையின் அனைத்து அம்சங்களாகவும் கிருஷ்ணரை வணங்குகிறார். எல்லாப் பக்கங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கிருஷ்ணர் இல்லாத இடமே இல்லை. அர்ஜூனன் அவரை எல்லாத் திசைகளிலும் வணங்குகிறார்.

ஆதி அந்தமில்லாமல், பேருண்மையாக, எல்லாமுமாக இருக்கும் கிருஷ்ணரை உளமாற கைக் கூப்பிப் போற்றி வணங்குகிறார்.

கடவுளின்
விருப்பத்தையே
நமது
விருப்பமாக நிகழ
அனுமதிப்பதுதான்
சரணாகதி.

கேள்வி: "நாம் எல்லோரும் பாவிகள்.
பிறவியிலேயே பாவம் செய்தவர்கள். நாம்
பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை
அடைய வேண்டும். கடவுள் ஒருவரே," -
இப்படிச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

நீங்கள் பாவிகள் இல்லை! நீங்கள்
ஒருபோதும் பாவிகளாக இருந்ததில்லை;
இப்போதும் பாவிகளாக இருக்கவில்லை.
இனி ஒருபோதும் பாவிகளாக இருக்கப்
போவதும் இல்லை.

ஒவ்வொருவருமே சக்தி ரீதியில் ஒரு கிருஷ்ணர்தான், ஒரு இயேசுகதான், ஒரு புத்தர்தான். இறுதியானது எதுவோ, அதன் விதையை கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதற்கு நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த விதையை சரியான நிலத்தில் விதைப்பதும், அந்த விதையை நிலத்திற்குள்ளேயே இறக்கத் தயார்படுத்துவதுமே ஆகும். அந்த விதை இறந்தால்தான், வெடித்தால்தான் அது மரமாக வளரமுடியும்.

நீங்கள் பாவ விமோசனம் அடைய விரும்பினால். பற்றற்ற தன்மையின் மூலமாகத்தான் அது முடியும். நீங்கள் செய்த செயல்களுக்கு வருந்துவதால் பாவ விமோசனம் அடைய முடியாது. எதுவாக இருக்கிறீர்களோ அதிலிருந்து உங்களின் உண்மையான இயல்புத் தன்மைக்கு உணர்வு மாற்றம் பெறுவதே பாவ விமோசனம்.

விதை இறந்தால், மரம் வளரும்

கடவுளின் பிம்பமாகவே நீங்கள் இந்த உலகத்தில் நுழைந்தீர்கள். நீங்கள், தூய்மையாக, சுதந்திரமாக, இயல்பான தன்மையுடன் பிறந்தீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் வெளி உலகின கட்டுறு மனப்பாங்கு உங்களிடம் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி விட்டது.

எப்படிப் பிறந்தீர்களோ அந்த நிலையை உங்களால் எந்த நேரத்திலும் அடைய முடியும்.

text box background

'வருந்துதல்' என்ற வார்த்தையின் மூலம் இயேசு இதைத்தான் சொல்கிறார். இயேசு பேசிய பழமையான அராபிய மொழியில் 'வருந்துதல்' என்ற வார்த்தைக்கு 'உங்களின் வேர்களை நாடிச் செல்லுதல்' என்று பொருள். அப்படி என்றால் உங்களின் தெய்வீக இயல்பு தன்மைக்கு, பரிபூரண தன்மைக்குத் திரும்பச் செல்வது என்று அர்த்தம்.

அது மதபோதகர்கள், பேசுகிற பாப விமோச னத்தைக் குறிக்கவில்லை.

ஸநாதன தர்மம் மிக
துணிச்சலான
ஒரு ஆன்மீக
பாதையாகத்
திகழ்கிறது.

அவர்கள் பணத்தைப் பற்றியும், உண்டியலில் சேரும் பங்களிப்பு பற்றியும், பாவ மன்னிப்பைப் பற்றியும் பேசுவார்கள்.

நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் துறக்க வேண்டும். நான் முன்பே சொன்னதுபோல, உங்களிடம் இருக்கும் எதையும் நீங்கள் விட்டுவிடத் தேவை இல்லை.

உங்களின் எதிர்பார்ப்புகளையும் பற்றுதல்களையும் கற்பனைகளையும் மட்டும் துறந்து விடுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை விட்டுவிடுங்கள் அது போதும்.

துறவறமே சரியான நிலம். ஒரு குருவுடன் வாழ்வது என்பது அவருக்குள் இறப்பதற்குத் தயாராவதுதான். விதை இறந்த அந்தக் கணமே, அங்கே மரம் முளைக்கிறது.

விதை மரணிக்காமல் மரம் முளைக்க முடியாது. மரணத்தின் மூலமாகத்தான் புது உயிர் பிறக்கிறது. வாழ்வின் இந்தச் சூட்சுமமான இரகசியத்தை அறிந்த ஒருவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், இறந்து கொண்டேதான் இருக்கிறார்.

ஏனென்றால் அவருக்கு இறப்பு என்பது புதுப்பித்துக் கொள்வதற்கான, மீண்டும் பிறப்பதற்கான ஒரு செயல்முறையாக இருக்கிறது. கடவுள், உங்களின் உள்ளே இருப்பதால் உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணருங்கள். கடவுளாக இருப்பதற்கு ஒருவர், கிறிஸ்துவராகவோ இந்துவாகவோ அல்லது எதுவாகவும் இருக்கத் தேவையில்லை.

நீங்களே கிறிஸ்துவாகவே இருக்கமுடியும் என்னும்போது, ஏன் கிறிஸ்துவராக இருப்பதில் நிறைவடைந்து விடுகிறீர்கள்? புத்தராகவே இருப்பது உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்போது, ஏன் பௌத்தராக இருப்பதிலேயே திருப்தி அடைகிறீர்கள்?

மக்களுக்கு நான் சொல்லவிரும்பும் கருத்து இதுதான்: சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் திருப்தி அடைந்து விடாதீர்கள். இறுதியான பரிபூரணத் தன்மை மட்டுமே நம்மை நிறைவாகவும் முழுமை அடைந்தவராகவும் மாற்ற முடியும்.

கவனமாய் இருங்கள்!

எந்த ரூபத்திலும் கடவுளின் செய்தி வரலாம்

ஆனந்தமாக இருங்கள். ஏனென்றால் ஏற்கனவே நாம் காப்பாற்றப் பட்டு விட்டோம். ஆரம்பத்திலிருந்தே நாம் காப்பாற்றப் பட்டுவிட்டோம். 'நாம் பாவிகள்' என்று சொல்லப்படுவதெல்லாம் சித்தரிக்கப்பட்டவையே. நம்மைப் பந்தத்தில் வைத்திருப்பதற்காகவும். நம்மை அடிமைகளாக வைத்திருக்கவும், சமயத் தலைவர்களின், மதபோதகர்களின் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கவுமே இந்தப் பாவிகள் எனும் பிரச்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையில் நாம் சுதந்திரமானவர்கள், நாம் தெய்வீகமானவர்கள், அதனால் நாம் பாவிகளாக இருக்க முடியாது. நேர்மையற்ற பாதை, தவறான பாதை என்று ஒரு பாதை கிடையாது; ஏனென்றால் எல்லா வழிகளும் இறைவனை நோக்கியே செல்கின்றன.

வழி தவறிப் போகிறவர்கள்கூட சற்றே சுற்று வழிப் பாதையில் வருகிறார்கள். அவ்வளவுதான். வேறு எங்கு அவர்களால் போக முடியும்?

கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதால் போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. அதனால் நீங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எங்குப் போனாலும்சரி அல்லது எங்கேயும் போகாமல் இருக்கும் இடத்திலேயே உட்கார்ந்தாலும் சரி, கடவுள் அங்கேயும் இருக்கிறார்.

கடவுளை நம்பாதவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்கூட கடவுளுக்கே சொந்தமானவர்கள். கடவுளைப் பொறுத்தவரையில் அவர்களும் காப்பாற்றப்பட்டவர்களே!

இந்த முழுப் பிரபஞ்சமும் ஏற்கனவே
பரிபூரண தன்மையில்தான் இருக்கிறது.
நாம்தான் அதை மறந்துவிட்டோம்.
நாம் எதையும் செய்யத் தேவையில்லை
என்பதையும் நாம் மறந்து விட்டோம்.

நாம் எங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அங்கேதான் ஏற்கனவே இருக்கிறோம் என்பதையே நாம் மறந்துவிட்டோம். நாம் எதுவாக விரும்புகிறோமோ, அதுவாகதான் ஏற்கனவே இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

நாம் எதை விரும்புகிறோமோ, எத்தைக் கனவு காண்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம். வேறு எதுவாகவும் ஒருபோதும் இருக்கவில்லை என்பதை மறந்து விட்டோம்.

ஜென் மதத்தில் ஒரு பழமொழி இப்படிச் சொல்கிறது; ஆரம்பத்தில் இருந்தே நாம் எல்லோரும் காப்பாற்றப்பட்டு விட்டோம். நாம் எல்லோரும் புத்தர்களே.

ஆனால் ஆழமான தூக்கம் நம்மைச் சூழ்ந்துகொண்டு விட்டது. ஒரு குருவின் வேலை நம்மைக் காப்பாற்றுவது அல்ல, நமக்கு ஞாபகப்படுத்துவது மட்டுமே. நாம் அவரைக் கூர்ந்து கவனிக்கும் சக்தி பெற்றவராக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

கேட்பதற்கும், கவனிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. காது கேட்கும் திறன் படைத்த யாராலும் கேட்டு விட முடியும். ஆனால் நம்முடைய இதயமும்கூட அங்கே இருக்க வேண்டும், இல்லையென்றால் நம்மால் கவனிக்க முடியாது.

ஆழ்ந்த பணிவோடு கவனியுங்கள் ஆழ்ந்த நம்பிக்கையோடு கவனியுங்கள், எந்த எண்ணங்களும் இல்லாமல் கவனியுங்கள். ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் இடையூறு செய்து, சிதைத்துவிடும் தன்மை வாய்ந்தவை.

கடவுள், தம்முடைய செய்திகளை எல்லாப் பக்கங்களிலும் இருந்தும் பொழிந்துகொண்டு இருக்கிறார்.

அவை வார்த்தைகளின் அர்த்தத்தையே
மாற்றி, தங்களின் சொந்தகருத்துகளைப்
புகுத்திவிடும். நம்முடைய மனம் எதைக்
கேட்க விரும்புகிறதோ, அதை மட்டுமே
கேட்க நம்மை அனுமதிக்கும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களிடம் வந்து
சேரும் செய்திகளைச் சிதைத்து விடாமல்,
அவற்றை உள்ளது உள்ளவாறே உள்வாங்கும்
அளவிற்கு ஆழ்ந்த அமைதியோடு
எல்லாவற்றையும் கவனியுங்கள்.

கடவுள், தம்முடைய செய்திகளை எல்லாப் பக்கங்களில் இருந்தும் பொழிந்துகொண்டு இருக்கிறார்.

'மரத்தில் இருந்து விழும் பழுத்த இலை'கூட அவரது செய்திதான்.

லாவோட்சு என்னும் ஞானி, மரத்தில் இருந்து விழுகிற காய்ந்த இலையைப் பார்த்த மாத்திரத்திலேயே ஞானமடைந்தார். அவர் மிகவும் ஆழமானதொரு மௌனத்தில் இருந்த மனிதராக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான மரம் மற்றும் விழும் இலைகள் சித்திரக்கலை

வெளுத்துப்போன, பழுத்த, காய்ந்த
அந்த இலை மரத்தில் இருந்து விழுந்து
கொண்டிருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே,
எல்லாமே நிலையற்றது; வாழ்க்கை மரணத்தில்

முடியக் கூடியது; பற்றிக்கொண்டு வாழ்வதற்கு என்று தகுதியானவை எதுவும் இல்லை; மரணத்தில் முடியும் இந்த வாழ்க்கை உண்மை இல்லை என்னும் மாபெரும் ஸத்யங்களை உணர்ந்தார்.

அந்த இலை கடவுளின் தூதனாக இருந்தது. அந்தக் கணத்திலேயே தகுதி இல்லாதவை அனைத்தும் துறக்கப்பட்டன. பகிரங்கமாகத் துறக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுக்கவில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை.

கடவுளுடன் இருப்பதும், கடவுளுக்குள் இருப்பதும்தான் வெற்றி

வாழ்க்கை நிலையற்றது; வாழ்க்கை
அர்த்தமற்றது என்னும் இந்தப் புரிதலே
அவருக்குப் போதுமானதாக இருந்தது.
இதனை உணர்ந்த ஒருவர் வேறு விதமான
வாழ்க்கையை, வேறொரு தளத்தில்
தேடுவதில் ஈடுபடுகிறார்.

வெளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்
இப்போது உள்நோக்கித் திரும்புகிறார். நாம்
சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் வெளி
உலகில் தேடித் தேடி அலைகிறோம், ஆனால்
நமக்குக் கிடைத்ததெல்லாம் ஏமாற்றமும்,
துக்கமும்தான். அதைத்தான் வெளி உலகால்
நமக்குக் கொடுக்க முடியும்!

எதிர்ப்பு தெரிவித்தல்
என்பது நம்மிடம்
இயற்கையாக
இருக்கிறது.

எந்தக் கணம் நாம் உள்நோக்கித் திரும்புகிறோமோ, உள்முகமாக நம் உள் உலகை ஆராய முற்படுகிறோமோ அந்தக் கணம் மிகப்பெரிய சந்தோஷம் பொங்குகிறது.

நாம் மெளனமாகும்போது, எது மறைந்து இருக்கிறதோ அது வெளிப்பட ஆரம்பிக்கிறது. நம்முள் புதிய கண்களும், காதுகளும் முளைத்து விட்டதுபோல, நாம்ாதாரணமாகக் கேட்காதவற்றை எல்லாம் கேட்க ஆரம்பிக்கிறோம், பார்க்காதவற்றை எல்லாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

த்யானத்திற்கான வரையறைதான் சீடருக்கான வரையறையும் கூட; அதுதான்,

குருவின் வார்த்தைகளைக் கவனிக்கும் கலை.

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்டது, உண்மையில் அவருக்கு அது முடிசூட்டிய வைபவமே!.

யாருக்கெல்லாம் இதைக் காண முடிகிற கண்கள் இருந்தனவோ, யாரெல்லாம் இதைப் புரிந்துகொள்ள முடிந்ததோ, அவர்களுக்கெல்லாம் இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்ச்சி, ஒரு முடிசூட்டும் விழாவாகவே இருந்தது.

ஏனென்றால் கடைசி நிமிடத்தில் சிலுவையில் இயேசுபிரான் தம்மை முழுவதுமாக சரணாகதி செய்கிறார்.

அவர் சொன்னார், "உம்முடைய இராஜ்ஜியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக!" என்றார்.

இதுதான் அவரது கடைசி பிரார்த்தனை. இதுதான் சரணாகதி. ஒருவர் தமது சொந்த விருப்பத்தில் பிடிப்புடன் இருப்பது அஹங்காரத்தைக் குறிக்கும்; கடவுளின் விருப்பத்தையே நமது விருப்பமாக நிகழ அனுமதிப்பதுதான் சரணாகதி.

கடவுளுடன் இருப்பதும், கடவுளுக்குள் இருப்பதும்தான் வெற்றியாகும். முழுமையாகக் கடவுளிடம் சரணடைவதால் வரும் வெற்றியைக் காட்டிலும் மேலான வெற்றி வேறு எதுவும் இருக்க முடியாது. சரணடைதல் மற்றும் வெற்றியடைதல் இந்த முரண்பாடுடைய ஸத்யத்தை ஒரு குரு வாழ்ந்து காட்ட வேண்டியுள்ளது: நாம் எல்லோரும் தரிசுநிலமாக இருக்கிறோம். நம்முள் எதுவும் வளரவே இல்லை.

நம் உள்ளே, உள் தளத்தில் எல்லாம் பூட்டப்பட்டு இருக்கின்றன. வளர்ச்சி அடைய முடியாத அளவிற்கு நிறைய அடைப்புகள், நிறையக் கற்கள், நிறைய தடைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கிடைத்தற்கரிய வைரங்களாக நினைத்துகொண்டு நாம் மேலும் மேலும் அவற்றைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் அவை வைரங்கள் கிடையாது. நம்முடைய ஆன்மாவின் மிக பெரிய பாரங்களாக அவை இருக்கின்றன. நம்முடைய இதயமே அந்தப் பாரத்தின் கீழ் நசுக்கப்பட்டு விடுகிறது.

உலகளவில் பழங்காலத்தில் வாழ்ந்த எல்லாச் சமுதாயங்களும் கற்பாறையைப் போன்ற கடுமையான தன்மையோடு இருக்கும் தன்மையையே பாராட்டியது. அது ஆண்மைக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. இந்தக் கடுமையான குணம் புகழப்பட்டது. ஏனென்றால் சமுதாயத்திற்குப் போர் வீரர்கள் தேவைப்பட்டார்கள்.

மற்றவர்களைக் கொல்லவும், மற்றவர்களால் கொல்லப்படவும் தயாராக இருக்கும் மக்கள் தேவைப்பட்டார்கள். இதயத்தால் வாழாமல் மூளையால் வாழும் கடுமையான மக்கள் தேவைப்பட்டார்கள்.

மென்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும்
இருக்கத் தெரியாதவர்கள்
தேவைப்பட்டார்கள். இப்படிப்பட்ட
மக்கள்தான் இயந்திரங்களைப்போல
இயங்குவார்கள். இவர்களைத்தான் எளிதில்
அடிமைப்படுத்த முடியும்.

மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களால் மனிதர்களாக முடிவதில்லை. இயந்திரங்களுக்கு சரி என்றும், தவறு என்றும் பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை.

சரி என்றும் தவறு என்றும் அளப்பதற்கு அளவுகோல் எங்கே இருக்கிறது? அதற்கான அளவுகோலே இல்லை. அதற்காகத்தான் ஸனாதன தர்மத்தில் இதுதான் இந்து மதத்தின் உண்மையான பெயர். ஸனாதன தர்மம் என்றால் 'அழிவே இல்லாத, நிலையான ஆன்மீகப் பாதை' என்று பொருள். நாம் இரண்டு விதமான புனித நூல்களை வைத்திருக்கிறோம்.

ஆழ்ந்த அமைதிக்காகவும் மௌனத்திற்காகவும்தான் தியானம் செய்யப்படுகிறது.

துணிச்சல்மிக்க ஸனாதன தர்மம்

ஸனாதன தர்மம் மட்டுமே இரண்டு விதமான சமய நூல்களைக் கொண்டிருக்கும் மிகவும் துணிச்சலான ஒரு தர்மமாக இருக்கிறது. இந்தப் பூமியில் இருக்கும் மற்ற அனைத்து மதங்களும் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே வைத்திருக்கின்றன. அதுவே இறுதியான வேத நூல் என்றும், அனைத்து நூல்களுக்கும் மேலானது என்றும் சொல்லிக் கொள்கின்றன!

அநேக மதங்கள், தங்களுடைய புனித நூலை தற்காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்க முடியாது என்றும் அறிவித்துவிட்டன. ஆனால் மென்பொருட்களைக்கூட புதிதாக மாற்றி எழுத முடிகிறது. எனும்போது புத்தகங்களை மாற்றி எழுத முடியாது என்று அவை சொல்கின்றன, இதைப் பற்றி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தங்களுடைய புனித நூல் ஒருபோதும் காலத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப்பட முடியாதது என்று அநேக மதங்கள் சொல்கின்றன.

ஆனால் ஸநாதன தர்மம் மட்டுமே, மிகத் துணிச்சலான ஒரு ஆன்மீகப் பாதையாகத் திகழ்கிறது. அதனை வடிவமைத்தவர்கள், தங்களுடைய புனித நூல்களை மாற்றி வடிவமைக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய இயல்பே சுதந்திரம்தான்!

அவர்கள் தங்களுடைய வேத நூல்களை இரு பிரிவாகப் பிரிக்கிறார்கள். 1. ச்ருதி (வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, காதால் கேட்பதனாலேயே தலைமுறை, தலைமுறையாக கொடுக்கப்பட்ட அறிவு) 2. ஸ்ம்ரு’தி (ஞாபகத்தில் வைத்து எழுதப்பட்ட நூல்கள், நீதி அல்லது சட்டத் தொகுப்பு நூல்கள்).

ஞானமடைந்த குருமார்களின் அனுபவ வெளிப்பாடுகளும், ஞானமடைவது எப்படி என்பதைப் பற்றிய நுட்பங்களும் அடங்கிய நூல் ச்ருதி.

சமுதாயத்திற்குத் தேவையான சட்டதிட்டங்களும், அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற விதிமுறைகளும் நடைமுறைகளும் அடங்கிய நூல் ஸ்ம்ரு’தி என்றழைக்கப்பட்டது.

ஸ்ம்ரு’தி என்னும் சட்ட நூல்களை மாற்ற முடியும் என்று துணிகரமாக அறிவித்த ஒரே கலாச்சாரம் நமது வேத பாரம்பரியம் மட்டுமே.

காலத்திற்கேற்றவாறு, ஞானிகளால் புதிய புதிய சட்ட நூல்களை உருவாக்க முடியும். ஏனென்றால் எந்த ஒரு சட்ட ஒழுங்கு முறைகளுமே எல்லாக் காலங்களுக்கும் பொருந்துவதாக இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். எந்தச் சட்டமும் நிரந்தரமான ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் சட்டமும் ஒழுங்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு மாறுபடுகின்றன.

மான்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது நீங்கள் வேட்டையாட அனுமதிக்கப்படுகிறீர்கள். இதேபோலத்தான், இந்தியாவில் முன்னொரு காலத்தில் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அதனால்தான் பசுக்களைப் பலி கொடுக்க ஆரம்பித்தார்கள். பசுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்த உடன், அவற்றை தெய்வாம்சமாக வழிபட ஆரம்பித்தார்கள்.

சமுதாயத்தில் ஒரு சமநிலையையும், ஒற்றுமையையும் கடைப்பிடிப்பதற்காகவே இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும்போது, சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரு சில அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன.

உதாரணத்திற்கு, என்னை நீங்கள்
கொல்லமாட்டேன் என்று ஒத்துக் கொண்டால்,
நானும் உங்களை கொல்லமாட்டேன்
என்று என்னால் உறுதி கூற முடியும்,
அவ்வளவுதான்.

நீதி, நெறி, நல்லொழுக்கம்
இவற்றின் அடிப்படைகளை
புரிந்துகொண்டால்,
நாம்
ஒழுக்கம் தவறுவதே
இல்லை!

நாம் இருவரும் பயமில்லாமல் வாழ முடியும். இது போலத்தான் சில அடிப்படை புரிதல்கள் யோசிக்கப்பட்டு மெதுவாகச் செயல்பாட்டிற்கு வந்தன. மெதுவாக அவை விதிமுறைகள் ஆகின. அவையே பிற்பாடு நல்லொழுக்கம்ாகவும் மாறியது.

நீதி, நெறி, நல்லொழுக்கம் இவற்றின் அடிப்படைகளை நாம் புரிந்துகொண்டால், ஒழுக்கம் தவறுவதே இல்லை, ஒழுக்கநெறிகளையும் தொந்தரவாக நினைக்க மாட்டோம். அந்த சட்ட விதிமுறைக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளாதபோதுதான், அது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

பிறகு அந்தச் சட்டத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது மட்டுமல்லாமல், சட்டத்தை மீறும் போதெல்லாம் ஆழமான குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகிறோம்.

திணிக்கப்பட்ட சட்டமாக இருக்கும்போது
அதை மீற முயலுகிறோம். உதாரணமாகப்
போக்குவரத்து காவலர் இல்லாதபோது
வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்வோம்.

நாம் செய்யக் கூடாதவற்றைச் செய்யும்போது,
உண்மையில் ஏதோ துணிச்சலாக
செய்துவிட்டதாக உணர்கிறோம்.

விதிமுறைகளை
அடிப்படையாக
வைத்து வாழ்க்கையை
வாழ முடியாது