உங்களைப் படுகுழிக்குள் தள்ளும் பழி உணர்ச்சிக்கு இடம் கொடாதீர்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு சின்ன கதை:
ஒருவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவர் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.
“நான் எப்படியாவது புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவுங்கள்,” என்றார்.
நான், “நீங்கள் எப்படிப் புகைபிடிக்க ஆரம்பித்தீர்கள்?” என்று கேட்டேன்.
அவர் சொன்னார், “நான் ஒருபோதும் புகைபிடிக்க விரும்பியதே இல்லை. உண்மையில் அந்த வாசனையே எனக்குப் பிடிக்காது.
ஒரு நாள் நான் என்னுடைய நண்பரோடு தெருமுனையில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அவர் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.
என்னுடைய அப்பா, தூரத்தில் இருந்து எங்களைப் பார்த்து விட்டு, நானும் புகைபிடித்ததாக நினைத்துவிட்டார்.
நான் வீட்டிற்குப் போனதும், என்னைச் சத்தம் போட ஆரம்பித்து விட்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் என் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. என்னை நம்பத் தயாராக இல்லை. நான் செய்யாத தவறுக்குத் தண்டனையைப் பெற்றேன். அதற்குப்பிறகு, 'எப்படியோ தண்டனை கொடுத்துவிட்டார்கள். நான் ஏன் சிகரெட் பிடிக்கக் கூடாது?' என்று யோசித்தேன். இதனால்தான் புகைபிடிக்க ஆரம்பித்தேன்,'' என்றார்.
பெரும்பாலான சமயங்களில், ஒன்றைச் செய்ய வேண்டாம் என்று நம்மிடம் சொன்னால், அதைத்தான் நாம் செய்ய ஆசைப்படுவோம். அப்படிச் செய்வதால் நமக்குள் ஒருவித மகிழ்ச்சி, திருப்தி உண்டாகிறது.
இதுதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அடிப்படை சுபாவம்.
நம்முடைய பெற்றோரிடம் 'முடியாது' என்று சொல்லும்போதும், அவர்களை எதிர்க்கும்போதும் நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறோம்.
ஆமாம் என்று சொன்னால் நாம் குழந்தைகளாகக் கருதப்படுவோம் என்று நினைக்கிறோம். பக்குவம் அடையாதவர்களாக உணர்கிறோம்.
'முடியாது' என்று சொல்லும்போது முதிர்ச்சி பெற்று விட்டதாக நினைக்கிறோம். இதுதான் அடிப்படை குணமாக இருக்கிறது.
வாலிபப் பருவத்தில் இருக்கும் இளைஞர்களிடம் இந்தக் குணத்தைக் காணலாம், குறிப்பாக அமெரிக்காவில் இதைப் பார்க்கலாம். முடியாது என்று தங்களுடைய பெற்றோரிடம் சொல்ல ஆரம்பிக்கும் கணமே, தங்களுக்குப் பக்குவம் வந்து விட்டதாகவும், தாங்கள் வளர்ந்து விட்டதாகவும் இவர்கள் உணர்கிறார்கள்.
அதனால்தான் ஏராளமான புரட்சிக்
கூட்டங்களும் குழுக்களும் இருக்கின்றன.
முடியாது என்று சொல்லும்போது ஆழமான
ஒரு திருப்தியுணர்வு கிடைக்கிறது! அதுவும்
ஒரு போதை பழக்கத்திற்கு அடிமையாவது
போன்றதுதான்.
முடியாது என்று சொல்லும்போது,
நம்மை உயர்வானவர்களாகவும்,
வித்தியாசமானவர்களாகவும் நிரூபித்துக்
காட்ட முயற்சி செய்கிறோம்.
நல்லொழுக்கங்கள் புரிந்துகொள்ளப்படாமல்,
வாழ்க்கையை ஆசை,
அச்சம் இல்லாமல்
வாழ்பவரே பண்பட்ட
மனிதர்.
மற்றவர்களால் புகட்டப்படும்போது, நாம் இரண்டு விஷயங்களை உருவாக்குறோம். முதலில் நாம் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறோம். இரண்டாவதாக, தப்பித்தவுடன் நம்முள்ளே ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறோம்.
எல்லா மனிதர்களும் விதிமுறைகளை மீறவே விரும்புகிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தல் என்பது நம்மிடம் இயற்கையாக இருக்கிறது.
பல சமயங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பரிசோதிக்கப்படாமலும், எந்தவித புரிந்துகொள்ளுதலும் இல்லாமலும் விதிமுறைகள் உருவாக்கப்படுவதே இதற்குக் காரணம்.
> மனசாட்சி சமுதாயம் சார்ந்தது. > விழிப்புணர்வு இயற்கையானது.
நம்முடைய வாழ்க்கையைப் பார்த்தோம் என்றால், நிறைய தடைகள் இப்படித்தான் நுழைந்திருக்கின்றன. நமக்குப் புரியாமலேயே, ஏகப்பட்ட வேகத் தடைகள் - ஏகப்பட்ட தடைகள் - நம்முடைய வாழ்க்கையில் புகுந்து இருக்கின்றன.
காலாவதி ஆகிவிட்ட சட்ட திட்டங்களுக்கு விடைகொடுங்கள்
ஆரம்பத்தில் அர்த்தம் பொதிந்ததாக இருந்த நிறைய பழக்க வழக்கங்கள், காலப்போக்கில் சட்ட திட்டங்களாகிவிட்டன. இப்போது, அவற்றிற்கு எல்லாம் அர்த்தமே இல்லை.
பழங்கால இந்தியாவில் மின்சார வசதி இல்லாதபோது, சூரிய அஸ்தனமனத்திற்குப் பிறகு துணிகள் தைக்க மாட்டார்கள். ஏனென்றால் அப்போது கைகளால் தைக்கப்பட்டது. இயற்கையாகவே மெழுகுவர்த்தி அல்லது ஹரிக்கேன் விளக்கின் மங்கலான ஒளியில் உங்களால் தைக்க முடியாது. அதனால் அப்படியொரு பழக்கம் வழக்கத்தில் இருந்தது.
ஆனால் என்றும்கூட இந்தியாவில் நிறைய மக்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துணி தைக்க மாட்டார்கள். தையல் கடைகளில்கூட தைப்பதில்லை! நிறைய தையல் கடைகளில் மின்சார வசதி உண்டு. தையல் இயந்திரங்களின் மூலம் அவர்கள் தைக்கிறார்கள். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கைகளால் அவர்கள் தைக்க மாட்டார்கள். நமக்குப் புரிந்து கொள்ளுதல் இல்லாதபோது, பழக்க வழக்கங்கள் உயிரற்ற விதிமுறைகள் ஆகி விடுகின்றன. புரிந்து கொள்ளும்போது, எந்த ஒரு சட்டமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு யுக்தி ஆகி விடுகிறது.
நமக்குள் புரிதல் மலரும்போது, எல்லா விதிமுறைகளும் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தமான வாழ்க்கையையும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறோம்.
இன்றோ, அதே விதிமுறைகள் அதனுடைய அர்த்தத்தைத் தொலைத்து விட்டதால், நமக்கு நரகத்தை உருவாக்கிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். நான் சிலரைப் பார்த்திருக்கிறேன். தியானம் செய்வதற்கு முன்னால் வீட்டில் ஒரு வீணான பரபரப்பை உருவாக்கிவிடுவார்கள். "அமைதியாக இரு, சத்தம் போடாதே, தொலைபேசியை அணைத்து வை, இதைச் செய், அதைச் செய்யாதே," என்றெல்லாம் தேவையில்லாத சந்தடியை உருவாக்குவார்கள்.
பத்தே பத்து நிமிட தியானத்திற்காக முழு
வீட்டையும் தலைகீழாக மாற்றுவார்கள்.
உண்மையில், அந்தப் பத்து நிமிடத்திலாவது
இவர்கள் தியானம் செய்வார்கள் என்று
நினைக்கிறீர்களா?
புரிந்து
கொள்ளும்போது,
எந்த ஒரு சட்டமும்
மகிழ்ச்சியாக
வாழ்வதற்கான
ஒரு யுக்தி ஆகி
விடுகிறது.
தியானம் செய்யத் தொடங்கிய உடனேயே, இவர்கள் தூங்கி விடுவார்கள். இரண்டு மூன்று நிமிடத்திற்குப் பிறகு கொசு அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் இரண்டு நிமிடத்திற்குப் பிறகு, தங்களைச் சொறிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
பிறகு, 'மீதி தியானத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு இது போதும்' என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த தியானத்தைச் செய்ய, முழு வீட்டையே தலைகீழாகப் புரட்டி போட்டுவிடுவார்கள். ஆழ்ந்த அமைதிக்காகவும், மௌனத்திற்காகவும்தான் தியானம் செய்யப்படுகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.
சிலர் மற்றவர்களை அமைதிப்படுத்த செய்யும் முயற்சியில் தாங்களே அதிக சத்தத்தை உருவாக்குவார்கள். அவர்களின் சத்தம் மற்றவர்களுடைய சத்தத்தை விட மோசமாக இருக்கும்.

"ஷ்ஷ்.....அமைதியாக இருங்கள்,"
என்ற அவர்கள் போடும் சத்தமே, பேசி
க் கொண்டிருப்பவர்களின் சத்தத்தை
விட அதிகமாக இருக்கும்.
குழந்தைகளின் சத்தம், ஆசிரியர்களின்
சத்தத்தை விட குறைவாகவே
இருப்பதைப் பள்ளிகளில் நாம்
கண்கூடாகப் பார்க்க முடியும்!
எந்த ஒரு
விதிமுறைக்கும்
அடிமைப்பட
நாம்
ஒருபோதும்
விரும்புவதில்லை!
பெரும்பாலான நேரங்களில்,
நல்லொழுக்கத்தின் அடிப்படையைப்
புரிந்துகொள்ளத் தவறுவதால் மந்தமான
உயிர்ப்பில்லாத ஒரு வாழ்க்கையை வாழ
ஆரம்பித்து விடுகிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு
விதியும் உள்வாங்கப்படும்போது, நமக்குள்
ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கி
விடுகிறது.
'எந்த ஒரு விதியும்', என்று நான் சொல்லும்போது, நான் எல்லா விதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இயல்பாகவே நாம் சுதந்திரமாக இருக்கத்தான் ஆசைப்படுகிறோம், அதனால்தான் எந்தவொரு சட்டதிட்டமும் உள்வாங்கப்படும்போது ஒரு ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கிவிடுகிறது.
எல்லா வகை போராட்டமுமே சுதந்திரத்திற்காகத்தான்!
ஸ்வபாவ ஸ்வதந்த்ர: என்னும் வார்த்தை மிகவும் ஆழமானது. நம்முடைய இயல்பே சுதந்திரம்தான் என்பதுதான் அதன் அர்த்தம். நாம் நிரந்தரமாகச் சுதந்திரமானவர்கள், கூண்டில் அடைக்கப்படுவதை நாம் எப்போதும் விரும்புவதே இல்லை! எந்த ஒரு விதிமுறைக்கும் அடிமைப்பட நாம் ஒருபோதும் விரும்புவதில்லை!
எல்லாச் சமுதாயமும் விடுதலைக்காகப் போராடி பாடுபட்டு உழைப்பதைப் பார்க்க முடியும். நம் முழுப் போராட்டமுமே விடுதலை போராட்டத்தைத்தவிர, வேறு இல்லை. நாம் பணத்தைத் தேடுவதுகூட சுதந்திரத்தைத் தேடுவதற்காகத்தான்.
நம்மிடம் பணம் அதிகமாக இருப்பதால் நமக்கு வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்: பெரிய வீடு, பெரிய கார், அதிக வசதிகள்.
அதிகமான வாய்ப்புகள் இருப்பதால், நமக்கு அதிக சுதந்திரமும் இருக்கும். உண்மையில் நம்முடைய தேடுதல் என்பது இந்தச் சுதந்திரம் அல்லது வாய்ப்புகளுக்காகத்தான்.
உண்மையில், பணத்தின் மீதான நம்முடைய தேடுதல் கூட, சுதந்திரம் சம்பந்தப்பட்டது. அதனால் இயல்பாகவே நாம் தேடுவதெல்லாம் விடுதலையைத்தான். நல்லொழுக்கங்களாலோ அல்லது சட்டவிதிகளாலோ ஒருபோதும் நாம் சிறைப்பட விரும்புவதில்லை.
நாம் நிரந்தரமாகச் சுதந்திரமானவர்கள், கூண்டில் அடைக்கப்படுவதை நாம் ஒருபோதும் விரும்புவதே இல்லை!
நமக்கு ஒரு ஒழுக்கவிதி கொடுக்கப்படும்போது நாம் அதை மீறி நடக்கவே விரும்புகிறோம். முடியாதபோது யார் நம் மீது ஒழுக்கவிதிகளைத் திணிக்கிறார்களோ அவர்களைப் பழிவாங்க நினைக்கிறோம். நாம் சரியான தருணத்திற்காகக் காத்திருந்து அவர்களைப் பழி தீர்க்கவே விரும்புகிறோம்.
மக்கள் என்னைச் சந்திக்கும்போது என்னிடம், மீண்டும் மீண்டும் சொல்லுவது. "என் மகன் என் பேச்சைக் கேட்பதேயில்லை."
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மகன் உங்கள் முதல் எதிரியாக இருக்கலாம். ஆனால் அதுபோல் நீங்களேகூட உங்கள் மகனின் எதிரியாக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் நிறைய ஒழுக்க விதிமுறைகளை அவருக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
சிறு வயதிலிருந்தே பல விதிமுறைகளால் அவரைக் கட்டுப்படுத்தி
இருக்கிறீர்கள். இயல்பாகவே மனத்தின்
ஒரு பக்கத்தில் உங்கள் மேல் மரியாதை
இருந்தாலும், மறுபக்கம் எப்போதும் உங்கள்
மேல் அவருக்கு மனக்கசப்பு இருக்கும்.
அந்த ஆத்திரமான மறுபக்கம்
உங்களைப் பழிவாங்க காத்துக்கொண்டு
இருக்கும். ஏனென்றால் நீங்கள்
அவனுக்கு நிறைய நெறிமுறைகளை
வகுத்துக்கொடுத்திருக்கிறீர்கள். அவர்
உங்களுக்கு எதிராகப் புரட்சி செய்வார்.
> வாழ்க்கை,
> எல்லாச்
> சட்டதிட்டங்களுக்கும்
> அப்பாற்பட்டது.
சிலர், மிகவும் தந்திரமான முறையில் நம்மீது விதிகளைத் திணிப்பார்கள். சொர்க்கத்தைப் பற்றிய ஆசையையும், நரகத்தைப் பற்றிய அச்சத்தையும் ஊட்டி, நமது ஆசையையும் அச்சத்தையும் தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையையும் நரகத்தைக் கண்டு அச்சமும் தோன்றுமாறு செய்வார்கள்.
"இந்த மாதிரியான விஷயங்களைப் பின்பற்றுவதால் சொர்க்கத்தை அடைவீர்கள். அந்த மாதிரி விஷயங்களைப் பின்பற்றுவதால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள்," என்று சொல்வார்கள்.
சொர்க்கம், நரகம் என்ற கருத்தே நம்முடைய இருப்புத்தன்மையைப் பாழ்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
பேராசையையும் பயத்தையும் அடிப்படையாகக்கொண்டு விதிகள் வழங்கப்படும்போது, ஆழமான குற்ற உணர்ச்சி நம்முள் உருவாகிறது.
இன்னொரு விஷயம்... இதுவே இறுதியான, முக்கியமான விதிமுறை. இது புரிந்துகொள்வதற்கு கடினமான ஒரு விதிமுறையாக இருந்தாலும், நான் மறுபடியும் சொல்கிறேன், இது இறுதியானமுக்கியமான ஒரு விதிமுறை.
யாரும் விதிமுறைகளை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை வாழ முடியாது. 'யாரும்' என்று நான் சொல்லும்போது எல்லாரையுமேதான் குறிப்பிடுகிறேன். 'விதிமுறைகளை' என்று சொல்லும்போது எல்லா விதிமுறைகளையுமேதான் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
வாழ்க்கை, எல்லாச் சட்டதிட்டங்களுக்கும் அப்பாற்பட்டது. எல்லாச் சட்டத்திட்டங்களும் ஒழுங்குமுறைகளும் வாழ்வின் சில புரிதல்களை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டத்துதான்.
ஆனால் வாழ்க்கை, நமது எல்லாப் புரிதல்களுக்கும், எல்லாத் தர்க்க ரீதியான அறிவுக்கும் அப்பாற்பட்டது.
விடையில்லாக் கேள்வி
அன்பர்கள், "இந்த வாழ்க்கை எதற்காக?" என்று கேட்பார்கள். 'ஏன்' என்ற கேள்விக்கு ஒருபோதும் பதில் இல்லை என்று நான் சொல்வேன். ஏனென்றால் ஏன் என்ற கேள்வி நமது தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் வாழ்க்கை, கடவுளின் தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நமது தர்க்க அறிவும், கடவுளின் தர்க்க அறிவும் ஒருபோதும் சந்திக்க முடியாது.
கடவுளின் தர்க்க அறிவு மிக பிரமாண்டமான, பரந்து விரிந்த எல்லையில்லா தன்மை வாய்ந்தது. நம்மால் ஒருபோதும் அவருடைய தர்க்க அறிவை புரிந்துகொள்ள முடியாது. கடவுள் வாழ்க்கையைப் படைத்தார். மனிதர்கள் விதிமுறைகளைப் படைத்தார்கள். இயற்கையாகவே நம்முடைய சட்டங்கள், கடவுளின் தர்க்க ரீதியான படைப்புடன், கடவுள் படைத்த வாழ்வோடு ஒருபோதும் பொருந்துவதே இல்லை.
வாழ்க்கை இயற்கையானது. சட்டங்கள் சமுதாய ரீதியானவை. வாழ்க்கை உடல் ரீதியானது. சட்டங்கள் மன ரீதியானவை. அதனால் நமது எல்லா கருத்துக்களும், செய்ய வேண்டியது, செய்யக் கூடாது, நல்லொழுக்கங்கள், இது சரி, இது தவறு என்பதைப் பற்றிய எண்ணங்களும் சமுதாயத்தால் நமக்குக் கொடுக்கப்பட்டவையே.
ஞானிகள் என்றோ, பாவிகள் என்றோ நம்மைச் சமுதாயம்தான் முத்திரை குத்துகிறது.
சமுதாயம் நம்மைப் புனிதமானவர்கள்
என்று அழைக்கும் வரையிலும் நாம்
புனிதமானவர்களே. எந்தக் கணம் சமுதாயம்
நம்மைப் பாவிகள் என்றழைக்கிறதோ அப்போது நாம் பாவிகள் ஆகிறோம்.
சமுதாயத்தில் நாம் யாரையாவது
கொலை செய்தால் கொலைகாரன்
என்றழைக்கப்படுவோம்; நாம்
தண்டிக்கப்படுவோம். ஆனால் போர்
முனையில் யாரையாவது கொன்றால் வெற்றி
வீரர்களாகக் கொண்டாடப்படுவோம். நமக்கு
விருது கொடுத்துப் பாராட்டுவார்கள்.
ஆகவே ஒழுக்க அமைப்பே சமுதாயம் சார்ந்ததுதான். சமுதாயத்தின் சட்டங்களை நம்முடைய மனத்தில் உள்வாங்க ஆரம்பிக்கும்போது, நமது இருப்புத் தன்மையில் ஆழமானதொரு காயத்தை உருவாக்குகிறோம். நமது புத்திசாலித்தனத்தை அழித்து விடுகிறோம். என்னைப் பொறுத்தவரையில் நமது எல்லா ஒழுக்கங்களும் விதிகளும் ஒழுங்குபடுத்துதல்களும் மிகவும் மேலோட்டமானவை. அவற்றைச் சற்று ஆழமாகப் பாருங்கள்!
நமது இயற்கை இயல்பு எப்போதும், எல்லா ஒழுக்கங்களையும் விதிகளையும் ஒழுங்கு அமைப்புகளையும் கடந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள போராடுகிறது.
நமது விழிப்புணர்வு எப்போதும், நம்முடைய மனசாட்சியை உடைத்துக்கொண்டு வெளியில் வர முயற்சி செய்கிறது. நமது விழிப்புணர்வு, மனசாட்சியோடு தொடர்ச்சியாகச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறது.
மனசாட்சி சமுதாயம் சார்ந்தது. விழிப்புணர்வு இயற்கையானது. மனசாட்சி, விழிப்புணர்வுக்கு சரியான மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது.
மக்கள் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அடிப்படை விதிகளைத் தகர்த்துக்கொண்டு இருக்கிறீர்களே. சமுதாயத்தின் கட்டமைப்பை நீங்கள் இடித்துத் தள்ளுகிறீர்கள். எல்லா விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நீங்கள் தகர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படி இருந்தால், நாங்கள் எல்லோரும் எப்படி ஒழுக்கமாக வாழமுடியும்? மக்கள் எப்படி ஒழுக்கத்தோடு வாழ்வார்கள்? என்ன செய்கிறீர்கள் நீங்கள்?” என்கிறார்கள்.
ஆனால் இனியும் நாம் குழந்தைகள் இல்லை!
நான் அவர்களிடம் சொல்வது, ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், திணிக்கப்பட்ட நல்லொழுக்கம் குழந்தைகளுக்கு மட்டுமே தேவை. குழந்தைகளிடம்தான், அமைதியாக இருந்தால் நான் சாக்லேட் தருவேன் என்று சொல்ல வேண்டி இருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் கூட, "நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். எனக்கு உங்களுடைய சாக்லேட் தேவையில்லை, யாருக்கு வேண்டும் உங்களுடைய சாக்லேட்?" என்று சொல்லி விடுகிறார்கள்.
ஒரு குழந்தையிடம்தான் நீங்கள், "உனக்கு இனிப்பு தருகிறேன் அல்லது உன்னை அடித்து விடுவேன்," என்றெல்லாம் சொல்ல முடியும். ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் குழந்தைகளிடம் நீங்கள் ஒழுக்கத்தைச் சுமத்த முடியும்.
ஆனால் இனியும் நாம் குழந்தைகள் இல்லை! புரிதலின் அடிப்படையில் ஒழுக்க வாழ்வை கடைப்பிடிப்பதற்கான நேரம் இது; ஆசையினாலும் அச்சத்தினாலும் இல்லை. ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் உங்கள் நல்லொழுக்கம் அமையுமானால் அது மிகவும் மேலோட்டமானதாக மட்டுமே இருக்க முடியும். பேராசையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒழுக்க வாழ்க்கையில் இருந்து நாம் எப்படியாவது தப்பித்துப் போகவே முயற்சி செய்வோம்.
உதாரணமாக, வரையறுக்கப்பட்ட வேகத்திற்கும் ஒரு பத்து கி.மீ. கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஓட்ட முயற்சி செய்வோம். காவல்காரரைப் பார்த்தால் வேகத்தைக் குறைத்து விடலாம் என்று நினைப்போம்.
புரிதலின்
அடிப்படையில்
ஒழுக்க வாழ்வை
கடைப்பிடிப்பதற்கான
நேரம் இது!
ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் நமது தனிமனித ஒழுக்கம் அமையும் என்றால், நிச்சயமாக நீங்கள் இன்னும் குழந்தைகளாகத்தான் இருக்கிறீர்கள். மன முதிர்ச்சி அடையவில்லை.
உண்மையாகவே, நாம் பெரியவர்கள் என்றால் நமது தனி மனித ஒழுக்கம் ஆசை, அச்சத்தின் அடிப்படையில் அமையாது. ஆழமான புரிதலின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில், யார் ஒருவர் அமைதியான, ஆனந்தமான, சாந்தமான வாழ்க்கையை ஆசை, அச்சம் இல்லாமல் வாழ்கிறாரோ அவரே பண்பட்ட பக்குவமான மனிதர்.
பேராசை, அச்சம் இவற்றை விட்டு விடும்போது, ஒரு புதுவிதமான ஒழுக்க உணர்வு உங்கள் இருப்புத் தன்மையில் மலரக் காண்பீர்கள். இது சமுதாய ரீதியான, மேலோட்டமான நல்லொழுக்கம் இல்லை. இது நமது முழு இருப்புத் தன்மையில் இருந்து தோன்றும். நமது முழு இருப்புத்தன்மையுமே, ஒரு வித்தியாசமான சௌகரியத்தை, நிம்மதியை அனுபவிக்கும்.
ஒரு சமூகமோ, மதமோ நம்மைப் பிறவி பாவிகளே என்று முத்திரை குத்தும்போது, அந்த மதத்தின் தத்துவத்தில் உண்மையில் ஏதோ மிகப்பெரிய தவறு இருக்கிறது.
தெய்வத் தன்மை வாய்ந்த மனிதப்பிறவியின் ஆன்மாவை அது இழிவு படுத்துகிறது. நமது உடல்-மன அமைப்பு மாசுபடுத்தப்பட்டு சீர்கேடு அடைய முடியும்; அது வெகு எளிதாக மாறக் கூடியது, அழியக்கூடியது.
ஆனால் நம் மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மாவை அழிக்க முடியாது. அது தூய்மை வாய்ந்தது. இது புரியும்போது ஒவ்வொரு
பேராசை, அச்சம் இவற்றை விட்டு விடும்போது, ஒரு புதுவிதமான ஒழுக்க உணர்வு உங்கள் இருப்புத் தன்மையில் மலர்கிறது!
தனிமனிதருமே, பாவங்கள் அற்ற, தெய்வீகமான தமது ஆன்மாவை உணருவதற்கான முன்னேற்ற பாதையை நோக்கிய, முக்தி வாழ்க்கையை நோக்கிய பயணத்திற்காக உழைக்க ஆரம்பிப்பார்.
இந்தப் புரிதல் நிகழாமல் செய்யப்படும் எல்லாமே, ஒருவரைத் திருப்திப்படுத்தும் குறிசொல்லுதலாக மட்டுமே இருக்கும். இவை ஒருவரை மேலும் மேலும் மனச்சோர்வு, எதிர்மறை எண்ணங்கள் என்னும் சேற்றிலும் சகதியிலும்தான் அமிழ்த்தும்.
இவ்வுலகில் மதமும், சமுதாய பங்களிப்பும் இல்லாமலேயே போதுமான எதிர்மறை எண்ணத் தாக்கங்களும், மனச்சோர்வும் இருக்கின்றன. மதங்களின் லட்சியம் பயத்தையும் கட்டுப்பாட்டையும் அளிப்பதாக இருக்கக் கூடாது. மதங்களின் இலட்சியம் முன்னேற்றத்தையும் முக்தியையும் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் நாம் பாவிகள் இல்லை. பாவிகளாக ஒருபோதும் இருந்ததில்லை, பாவிகளாக ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை.
நாம் நித்யானந்தமயமானவர்கள்.
