KAILASA Library/பகவத் கீதை/ஆழமான காதல் கொண்டால் நிச்சயமாய் வந்திடுவார்Sign in
பகவத் கீதை

ஆழமான காதல் கொண்டால் நிச்சயமாய் வந்திடுவார்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

11.41 அர்ஜுனன் சொல்கிறார்: உம்முடைய இந்த மஹிமையை அறியாமல், உம்மை வெறும் நண்பராக மட்டும் நினைத்து, கவனமில்லாமலோ அல்லது அன்பாலோ உம்மை 'கிருஷ்ணா, யாதவா, என் நண்பரே' என்றெல்லாம் பணிவில்லாமல் சொல்லிவிட்டேன்.

11.42 ஓ அச்சுதா, உம்முடன் நான் விளையாடும்போதும், ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோதும், உட்கார்ந்திருந்தபோதும், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதும், நாம் தனித்திருந்தபோதும், மற்றவர்களுடன் இருந்தபோதும் உம்மை ஏளனமாக எந்தவிதத்தில் அவமதித்திருந்தாலும், அதையெல்லாம் மன்னித்தருளுமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்.

11.43 அசையும், அசையா பொருட்களால் நிறைந்திருக்கும் இப்பிரபஞ்சத்திற்கு நீரே தந்தை, போற்றுதலுக்கு உரிய குருவும் நீரே. உமக்குச் சமமானவரும் வேறு ஒருவரும் இல்லை. ஒப்பற்ற பெருமையுடையவரே, இம்மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும்?

அஅதனால் உடலால் விழுந்து வணங்கி, போற்றத்தக்க உம்மை அருள்புரிய வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலிக்குக் காதலன் போலவும், தேவனே என்னைப் பொறுத்து மன்னித்தருளுங்கள்.

அர்ஜுனன் மீண்டும் அச்சமடைகிறார். விச்'வரூப தர்ச்'னத்தைப் பார்த்த பிறகு, கிருஷ்ணரின் எல்லையில்லாத் தன்மையைப் புரிந்து கொள்கிறார்.

இந்தப் பெருமைகளை அறியாமல் இத்தனை நாட்கள் கிருஷ்ணரை மிகச் சாதாரணமாக, சராசரி நண்பராகக் கருதியதை எண்ணி வேதனை அடைகிறார், அர்ஜுனன்.

கிருஷ்ணர் யார் என்று தெரிந்த பிறகு, வரும் அர்ஜுனனின் இந்தக் கவலை அடக்கத்தால் வந்தது அல்ல; அவரை வருத்துகிற குற்ற உணர்ச்சியால் எழுந்தது.

"நான், யாதவா என்று உன்னுடைய ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்தேனே," என்று கதறுகிறார். "ஹே நண்பனே, ஹே கிருஷ்ணா என்று உங்களைப் பணிவில்லாமல் அழைத்தேனே," என்று வருந்துகிறார்.

"யாருடன் பழகிக் கொண்டிருக்கிறேன், யாரை அழைக்கிறேன் என்ற கவனமில்லாமல் உங்களை அவ்வாறு அழைத்து விட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்.

நான் எப்படி இதைச் செய்யலாம்? உங்கள் மேல் கொண்ட அன்பினால் கவனமில்லாமல் அவ்வாறு அழைத்து விட்டேன்.

கடவுள், நண்பனாகலாம்!

ஒரு தந்தை மகனை மன்னிப்பதுபோல, ஒரு தோழன் தோழனுக்கு, ஒரு காதலன் காதலிக்கு மன்னிப்பு தருவது போலவும் என்னைப் பொறுத்தருளுங்கள்." என்றார்.

ஒரு சின்ன கதை...

பல வருடங்களாக, ஒரு சிவபக்தர் தீவிரமான பக்தியோடும், சிரத்தையோடும் தினமும் ஒரு சிவ விக்ரஹத்திற்குப் பூஜை செய்து வழிபாடு நடத்தி வந்தார்.

சிவனைத் தவிர வேறெந்த எண்ணமும்
இல்லாத அந்தச் சிவபக்தர் காண
விரும்பியதெல்லாம், என்றாவது ஒரு
நாள் சிவன் அவருக்கு அளிக்கப் போகும்
தர்ச'னத்தைத்தான்.

இருப்புத் தன்மைக்கு
எந்தப் பாரபட்சமும்
இருப்பதில்லை.

ஆண்டுகள் பல உருண்டன. சிவபக்தரும்
முதுமை அடைந்தார். ஒன்றும் சிறப்பாக
நடக்காததால் அந்தச் சிவபக்தர், சிவனுக்கு
முடிவாக ஒரு எச்சரிக்கை விடுகிறார்.

"நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு சிவ தர்ச'னம் கிடைக்க வேண்டும். முக்தி அடைய வேண்டும். எனக்குக் காட்சி தாருங்கள். இல்லையென்றால் நான் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கும்," என்று கெடு விதிக்கிறார்.

இருப்பினும் சிவன் மனமிரங்கி காட்சி அளிக்கவில்லை. சில தினங்கள் கழித்து அந்த சிவபக்தர், விஷ்ணுவின் சிலை ஒன்றை வாங்கி வந்து சிவனை எடுத்துவிட்டு பூஜை மாடத்தில் வைக்கிறார்.

ஆனால் சிவனை வீசியெறிய மனம் வராததால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு சிவனிடம், "இதோ பாருங்கள், இத்தனை வருடங்கள் பொறுமையாக நான் காத்திருந்தேன். இது எல்லாம் உங்களுடைய தவறுதான்," என்று சொல்லிக் கொண்டார்.

மறுநாள் காலையில், வழக்கம் போல் ஊதுபத்தி பொருத்தினார். ஆனால் அதை விஷ்ணுவின் முன்னால் வைக்கிறார்.

அவரை எரிச்சலூட்டும் விதமாக, அந்த
ஊதுபத்தியின் புகை, ஓரமாக ஒதுக்கி
வைக்கப்பட்டிருந்த சிவனின் சிலை
பக்கமாகவே போனது.

எனக்குக் காட்சி கொடுக்காத உமக்கு ஊதுபத்தி தேவையில்லை என்று சொல்லி சிவபக்தர் சிவன் விக்ரஹத்தின் மூக்கை இறுக மூடினார். அடுத்த கணம் சிவபெருமான் சிரித்தவாறே அவருக்கு முன்பாகக் காட்சி அளித்தார்.

Illustration

அந்தப் பக்தர் ஆழ்ந்த குற்ற உணர்ச்சியாலும், நெகிழ்ச்சியாலும் உருகிக் கரைந்து, "பெருமானே, இத்துணை வருடங்களாக நான் உன்னைப் பூஜித்து வந்தேனே, எனக்கு நீர் தர்ஸுனம் தரவே இல்லை. ஆனால் இன்று உன்னை ஒதுக்கி வைத்து உன் மூக்கை மூடியபோது காட்சி தருகிறீர்களே. இது ஏன்?" என்று கேட்டார்.

சிவபெருமான் சொல்கிறார்: "இத்தனை வருடத்தில் இன்றுதான் நான் உனக்கு உண்மையாகத் தெரிந்தேன். அந்த விக்ரஹத்தை ஒரு விக்ரஹமாகக் கருதாமல், உண்மையிலேயே நான் அங்கு இருப்பதாகக் கருதி என் மூக்கை நீ மூடினாய். அதனால்தான் நான் உன்னைக் காண வந்தேன்," என்றார்.

கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு உண்மையான தோழனாக இருந்தார். அதனால் நண்பராகக் கிருஷ்ணரிடம் எல்லாவித உரிமைகளையும் அர்ஜூனன் எடுத்துக் கொண்டார்.

ஆனால் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்ததும், அர்ஜூனனுடைய மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது. அவர், தமக்குள் நிகழ்ந்த புதிய புத்திசாலித்தனத்தைக்கொண்டு குற்ற உணர்ச்சியினால் சூழப்பட்டார்.

கடவுளுடன் இருப்பளவில் தொடர்புகொள்ளுங்கள்.

peacock feather icon

அவரது ஸாந்நித்தியத்தில் அனைத்திலிருந்தும் விடுதலை

அர்ஜூனனுக்குக் கிருஷ்ணரிடம் இருந்த ஆழ்ந்த பக்தியின் காரணமாகத்தான் அவருக்குக் காணுதற்கரிய விச்வரூப தர்ஸுனம் கிடைத்தது. அர்ஜூனனுக்குத் தகுதி இருப்பதாகக் கிருஷ்ணர் நினைத்ததால்தான், அவருக்கு தர்ஸுனம் கொடுத்தார்.

நம் வாழ்க்கை முழுவதும், கடந்த காலத்தைப் பற்றிய குற்ற உணர்ச்சி கள்தான் நம்மை ஆள்கின்றன. எந்தக் காலத்தில் என்ன செயல் செய்திருந்தாலும், அந்த நேரத்தில் நமக்கு இருந்த புத்திசாலித்தனத்தை வைத்துதான் அதை நாம் செய்திருப்போம்.

பிற்காலத்தில், புதிதாகச் சேகரித்துக் கொண்ட புத்திசாலித்தனத்துடன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து ஆராய்கிறோம். பெரும்பாலும் நாம் முன்பு செய்த செயல் நமக்குத் தவறாகவே தெரிவதால் நாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறோம்.

குற்ற உணர்ச்சியைச் சுமந்து கொண்டிருப்பதை விட பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. நாம் என்ன செய்தோமோ அது பாவம் அல்ல. குற்ற உணர்ச்சியை நம்மோடு சுமந்து கொண்டிருப்பதுதான் பாவம்.

குற்ற உணர்ச்சியை விட்டுவிட்டு விழிப்புணர்வோடு முன்னோக்கி வாழ்வில் செல்லும்போது, ஒரு ஆழமான நேர்மறை பதிவு நமக்குள் ஏற்படுத்தப்படுகிறது. இது குற்ற உணர்ச்சியைக் காட்டிலும் மிகவும் வலுவானது. குற்ற உணர்ச்சியை விடுவதால் எதை மீண்டும் செய்யக் கூடாது என்ற மிக உயர்ந்த புதுவித விழிப்புணர்வை நாம் பெறுகிறோம்.

குற்ற உணர்ச்சியின் சக்தியை அர்ஜூனன் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறார். இந்தச் சம்பவத்தில், குற்ற உணர்ச்சியானது ஆழ்ந்த அன்பினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. ஒரு விதத்தில் அர்ஜூனன் அந்தக் குற்ற உணர்ச்சியினைச் சுமந்து கொண்டிருக்க விரும்பவில்லை. தம் தோழனும், குருவும் மற்றும் இறைவனுமாக இருக்கும் கிருஷ்ணரிடம் 'என்னை மன்னிப்பீர்களாக என்று சொல்வதன் மூலம் தம் குற்ற உணர்ச்சியை விட்டுவிடுகிறார்.

பயம் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.
கடந்த காலம் என்பது கடந்து விட்டது,
இறந்துவிட்டது. கடந்த காலத்தைக் குறித்து
நாம் ஒருபோதும் பயப்படமுடியாது.
வருத்தமும் குற்ற உணர்ச்சியும்தான் கடந்த
காலத்தில் இருந்துகொண்டு நம்மைத்
துன்புறுத்துகின்றன.

நாம் செய்த ஒவ்வொரு தனிச் செயலையும் வித்தியாசமாகச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறோம்; அல்லது நாம் அப்படிச் செய்திருக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறோம்; அல்லது வேறு விதமாகச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறோம்; இந்த எதிர்மறையான குற்ற உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக அர்ஜூனனிடம் இருந்து வெளிக்க கிளம்பி வருகின்றன. ஒரு ஸத்குருநாதனின் ஸாந்நித்யத்தில் அர்ஜூனன் அவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்படுகிறார்.

அனைவரையும் அந்தத் தெய்வீக தன்மையின் வெளிப்பாடுகளாக மதிப்பதே ஸகபாவம்

கேள்வி: ஞான ஸத்குருவை அல்லது இஷ்ட தேவதையை அணுக ஐந்து பாவங்களில் ஒன்றான நட்பு ரீதியான ஸகபாவமும் ஒன்று என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு எதற்காக அர்ஜூனன் ஸகபாவத்தை வெளிப்படுத்த பயந்தார்?

குருவுக்கும் சீடருக்கும் இடையில் நட்பு ரீதியான ஸகபாவம் என்ற இந்த உறவுமுறைக்கு உண்மையில் அர்ஜூனன் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். அர்ஜூனன் கிருஷ்ணரின் உண்மையான வடிவத்தைப் பார்க்க விரும்பினார். ஆனால் கிருஷ்ணரின் கோர உக்கிர வடிவத்தைப் பார்த்தவுடன், அவர் பயந்துவிட்டார்.

ஸகபாவம் என்பது சமமான இருவருக்குடையில் ஏற்படும் உறவு. ஒரு சீடர், என்றுமே குருவுக்குச் சமமாக முடியாது. சீடர் ஞானமடைந்தாலும் அதற்குப் பிறகுகூட ஞானியாகிய குருவிடம் அவருக்கு ஏற்படும் உணர்வு, அதீதமான நன்றியுணர்வு மட்டுமே.

ஞானமடைந்த பிறகுதான் குருவின் உண்மையான பிரமாண்டத்தை உணர்கிறார். அங்கேதான் உண்மையான குரு சிஷ்ய உறவு மலர்கிறது.

குருவின் தன்மையைச் சீடர் உள் வாங்குகிறார். குருவுடன் ஒன்றுபட்ட உணர்வில் சீடர் தொடர்பு கொள்கிறார். இப்படித்தான் காலகாலமாகக் குரு - சிஷ்ய பாரம்பரியம் உயிர்ப்புடன் தொடரப்படுகிறது.

நட்பு என்பது நிரந்தரமான உறவு அல்ல; அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஏற்படுவது போன்ற உயிர் சம்பந்தமான தொடர்பு அல்ல; ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்த ரீதியான உறவும் அல்ல; காதலர்களுக்கு இடையே ஏற்படும் இருப்புத் தன்மையில் இருந்து மலரும் உறவும் அல்ல; ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்ளும் வசதி, ஆறுதலை முன்னிட்டு உருவான சமுதாய ரீதியான ஒரு உறவுதான்,