KAILASA Library/பகவத் கீதை/எல்லாச் சமூக உறவுகளையும்போல இந்த உறவும் மாற்றத்திற்குரியதே!Sign in
பகவத் கீதை

எல்லாச் சமூக உறவுகளையும்போல இந்த உறவும் மாற்றத்திற்குரியதே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நண்பர்கள் எதிரிகள் ஆகலாம். நமது நண்பராக இருந்திருக்காத ஒருவர் எதிரியாக இருப்பது அரிது. முன்பின் அறிமுகமாகி இருக்காத இருவர் எதிரிகளாக மாறுவதை விட இரண்டு நல்ல நண்பர்கள் எதிரிகளாக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

நிறைவேறாத எதிர்பார்ப்புகளின் விளைவே இரண்டு நல்ல நண்பர்களுக்கிடையே மிகப் பெரும் பிரச்சினைகளையும், ஆழமான பகைமையையும் உருவாக்குகிறது. அறிமுகமாகி இருக்காத அல்லது ஆழமான நட்பு மலர்ந்திருக்காத உறவில் இந்தப் பகைமை சாத்தியமில்லை.

யாரோ ஒருவர் நம்மை ஏமாற்றும்போது,
நாம் அதை ஒப்புக் கொள்கிறோம் அல்லது
அதற்குத் தேவையான நடவடிக்கை
எடுக்கிறோம். ஏமாற்றப்பட்டு விட்டோமே
என்ற கோபம் தவிர வேறு ஆழமான
உணர்வுகள் அங்கு எழுவதில்லை.

நண்பர் என்று நாம் மதிக்கும் ஒருவர்
நம்பிக்கை துரோகம் செய்யும்போது,
கட்டுக்கடங்காத கோபம் ஏற்படுகிறது. அந்த
மனிதரை அழித்துவிட விரும்புகிறோம்.

கோபம் என்ற உணர்ச்சியுடன், வலி, வேதனை,
குற்ற உணர்ச்சி, மனச்சோர்வு மாதிரியான
உணர்ச்சிகள் அழையா விருந்தாளிகளாக
நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.

சில காலம் துக்கம் கொண்டாடும் மனநிலையிலும் பிறகு ஆழ்ந்த கோபம் மனசோர்வாக மாறி சூழ்நிலையை ஒத்துக் கொள்ளும் பக்குவத்தையும் அடைகிறோம் அல்லது ஆழமான பழிவாங்கும் மனநிலைக்குச் செல்கிறோம். எதிரி நமக்கிழைக்கும் தீங்கை விட நண்பர் செய்யும் நம்பிக்கைத் துரோகம் நம்மை அரித்தெடுத்து விடுகிறது.

எதிரிகளாக நாம் கருதுபவர்கள் நண்பர்களாக மாறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நண்பர்கள் எதிரிகளாக மாறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதைப்போல எதிரிகள் நண்பர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம் வாய்ப்பதில்லை. ஆனால் மனதைப் பக்குவமான நிலைக்கு பண்படுத்தினால் இது சாத்தியமே.

த்யான சிகிச்சையாளர்களாகத் தீக்ஷை பெறும் முன்பு, நான் அவர்களிடம் நீங்கள் குணமளிக்க விரும்பும் உங்கள் எதிரிகளை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது, அவர்களில் பலரும் எங்களால் யாரையும் எதிரிகளாகப் பார்க்க முடியவில்லை என்றே சொல்வார்கள்.

நித்யானந்த ஸ்புரண த்யான முகாம் அல்லது LPB-2 - இரண்டாம் நிலை பயிற்சி வகுப்பு, அவர்களது ஆழமான ஸம்ஸ்காரங்களையும், எதிர்மறை மனப்பான்மையையும், வெறுக்கும் தன்மை உட்பட அனைத்தையும் முற்றிலும் அழித்து விடுகிறது. எந்த ஒரு நித்ய குணமளிக்கும் சிகிச்சையாளரைக் கேட்டால்கூட, அவர் இதை உறுதி செய்வார்.

உண்மையான ஸுபாவத்தில் குரு மட்டுமல்லாமல், எல்லோரும் நண்பர்களே. எந்த ஒரு மதிப்பீடும் செய்யாமல், தம்மைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அந்தத் தெய்வீக தன்மையின் வெளிப்பாடுகளாக மதிக்க ஆரம்பித்துவிடுவோம்.

தம் இனத்தவரையே எதிரிகளாகப்
போர்க்களத்தில் சந்திக்கும் அர்ஜுனனுக்கு
ஒரு விதத்தில் இந்தப் பிரச்சினைதான்
எழுகிறது. கிருஷ்ணருடனான தம்முடைய
ஸுபாவ உறவின் தொடர்ச்சியாக, தம்முள்
வெளிப்பட்ட இம் மனப்பான்மையின்
காரணமாகவே, அவர்களை வெறுத்து,
எதிர்த்துப் போரிட்டுக் கொல்வதைக்
கஷ்டமான செயலாக உணர்கிறார்.

அர்ஜுனன் நிறைய காரணங்களை எடுத்துச் சொன்னாலும், அவை அனைத்தும் சமாதானங்களே.

ஸுபாவ உறவிலிருந்து மஹாபாவ உறவுக்குள் நுழையுங்கள்

அர்ஜுனன் கோழையல்ல. மாபெரும் வீரர். கொல்வது அவரது இயல்பான குணம். ஆனால் நண்பரை அழிப்பது அவரது குணம் இல்லை. கிருஷ்ணரிடம் கொண்ட ஆழமான பக்தி அன்பாக மலர்ந்து கௌரவர்களிடமும் பரவியது. போர்க்களத்தில் அந்த நட்ப உணர்வைத் தள்ளி வைக்க முடியாமல் அவர் தடுமாறுகிறார். இந்த வரிகளில், அர்ஜுனன், கிருஷ்ணருடனான தமது நட்பில் அறிந்தோ அறியாமலோ ஏதாவது ஒரு காலகட்டத்தில், வெறுப்பு உணர்ச்சியோ, பகைமையோ, கோபமோ வெளிப்பட்டு இருக்குமோ, அவர்களது நட்பில் இவற்றின் சாயல் இருந்திருக்குமோ என்று அஞ்சுகிறார்.

கவனமில்லாமல், பணிவில்லாமல், 'கிருஷ்ணா, யாதவா' என்றெல்லாம் அழைத்ததற்காக அர்ஜுனன் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் ஒரு நல்ல நண்பரிடம், அந்த நண்பர் கடவுளாகவே மாறினாலும், இவையெல்லாம் மன்னிப்புக் கேட்க தகுந்த காரணங்கள் இல்லை.

எப்படி இருந்தாலும் அர்ஜுனனுக்கு வெளிக்காட்ட முடியாத பயம் இருந்தது. ஏனென்றால் எப்போதாவது அவர்களுடைய நட்பில், இவர் அறியாமலேயே பகைமை உணர்வு வெளிப்பட்டிருக்குமோ என்று நினைத்துக் கவலைப்பட்டு மன்னிப்புக் கேட்கிறார்.

யாருக்கு உதவி செய்கிறோம் என்பதைத்
தெரிந்து கொள்ளாமலேயே பிறருக்கு உதவி
செய்த மக்களைப் பற்றிய உண்மையான
வாழ்க்கைச் சம்பவங்கள் பல இருக்கின்றன.

பல உணவுவிடுதிகளுக்குச் சொந்தக்காரர்
ஒருவர், ஒருமுறை தம்முடைய சிறிய
விடுதிகளில் ஒன்றை மாறுவேடத்தில் போய்ச்
சோதனை செய்யப் போனார்.

யாருக்கு
உதவி செய்கிறோம்
என்பது முக்கியமல்ல,
உதவும் மனப்பான்மை
உங்களுக்குள்
மலர வேண்டும்.

அங்கே வேலை பார்க்கும் ஒரு ஊழியர், இந்த மனிதரை யார் என்று அடையாளம் தெரியாத போதிலும், ஒரு பெரியவர் குளிர் இரவில் போதுமான கம்பளி ஆடைகள் இல்லாமல் இருப்பதைக் கண்டு இரங்கி, அவருக்குத் தக்க உதவிசெய்து நன்கு கவனித்துக் கொள்கிறார்.

முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும், அந்தக் கடைநிலை ஊழியருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அவர் அந்த விடுதியின் தலைமைப் பதவிக்கு வந்தார்.

ஆனால் அந்த ஊழியருக்கு தாம் உதவி புரிந்தது தம் முதலாளிக்குத்தான் என்ற உண்மை தெரிய வந்து, ஆனாலும், அவருடைய நல்ல செயலுக்கு இன்னமும் சன்மானம் வழங்கப்படவில்லையென்றால், அந்த ஊழியருடைய நிலையைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்.

அவர், நாம் என்ன தவறுகள் செய்திருப்பேामो என்ற கவலையிலேயே வருத்தம் அடைந்திருப்பார். அவர் செய்த உதவி அவர் மனத்தின் ஒரு மூலையில் பின்னால் தள்ளப்பட்டிருக்கும். எங்கே தம் வேலை போய்விடுமோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்பதைப் பார்ப்பார்.

இதுதான் அர்ஜுனனின் நிலையும்கூட, கிருஷ்ணர் தமது எல்லையில்லாப் பிரபஞ்ச வடிவத்தைக் காட்டி, தாம் யார் என்று அறிவித்து விட்டார்.

அர்ஜுனனுக்கு, தாம் எங்கே எந்த நிலையில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. கிருஷ்ணரைப் பற்றி எல்லா நேரத்திலும் தாம் நல்ல விதமாகவே நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதை அர்ஜுனன் மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

இப்படித்தான் நாம் எல்லோரும் கடவுளை
நடத்துகிறோம். நாம் கேட்பது எல்லாம்
கொடுக்கும்வரை அவரை நன்றாக
வழிபடுகிறோம். எப்போது நமது
பிரார்த்தனைகள் நிறைவேறவில்லையோ,
அந்த நிமிடமே அந்த விக்ரஹம், அந்தத்
தெய்வத் தன்மை வெறும் கல்லாகி
விடுகிறது.

ஒரு குருவுக்கும்கூட இதே நிலைதான் நீடிக்கிறது. நீங்கள் பலமடைந்து விட்டால், வளமாக வாழ்ந்தால் குரு நல்லவராகிறார்.

அப்படி நடக்கவில்லை என்றால் குருவினால் என்ன பயன்? பிரார்த்தனைகள், அவமரியாதைகளாகவும் சாபங்களாகவும் மாறி விடுகின்றன.

அர்ஜுனனுக்குள் மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. அறிவு ரீதியாகச் சிந்தித்து செயல்படும் ஒருவர் எப்படிப் பக்தராக உருமாறி, பின்னர் சீடராக உயர்கிறார் என்பதைத்தான் அர்ஜுனன் பிரதிபலிக்கிறார்.

விச்வரூப தர்ச’னத்திற்குப் பிறகு அவருக்குள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணர் உண்மையில் யார் என்பதைப் பற்றி அர்ஜுனனுக்கு சந்தேகமே இல்லை. விச்வரூப தர்ச’னத்திற்கு முன்னர்வரை, அது, சொல்லப்பட்ட ஒரு கருத்தாக மட்டுமே இருந்தது. இப்போது விச்வரூபதர்சநத்திற்குப் பிறகு, அது உண்மையாக மாறி விடுகிறது. ஸகாபாவ உறவிலிருந்து ஞானமடைந்த ஒரு சீடராக, மஹாபாவ உறவுக்குள் நுழைகிறார். இந்த மன மாற்றம்தான் அவருக்குள் தேங்கி இருக்கும் குற்ற உணர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறது.

Hands playing a flute
Lord Krishna