KAILASA Library/பகவத் கீதை/உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம்Sign in
பகவத் கீதை

உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

11.45 பிரபஞ்சத்திற்கே புகலிடமாக விளங்குபவரே, இதற்குமுன்பு பார்த்திராத உம் வடிவத்தைப் பார்த்த பிறகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன்; ஆனால் அதே சமயம், பயத்தால் தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறேன். தேவ தேவர்களுக்கெல்லாம் தலைவரே! உம்முடைய முந்தைய இனிய வடிவத்தையே எனக்கு நீர் கருணை கூர்ந்துக் காட்டுவீராக.

11.46 ஆயிரம் கரங்களையுடைய விச்வரூபத்தை உடையவரே! கிரீடம் அணிந்தவராக, கதையும், சக்கரமும் கரங்களில் ஏந்தியவராக நான்கு கரங்களுடன் உம்மைக் காண விரும்புகிறேன்.

நான் இந்த வடிவத்திலேயே உங்களைக்காண விரும்புகிறேன்.