KAILASA Library/பகவத் கீதை/தெய்வீகத்தின் முகமூடிகள்Sign in
பகவத் கீதை

தெய்வீகத்தின் முகமூடிகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அர்ஜுனன் தமது கடைசி வேண்டுகோளை இந்த வரிகளில் சமர்ப்பிக்கிறார்.

"எனக்குப் பழக்கமான இனிமையான வடிவத்தையே காட்டுங்கள்," என்று அர்ஜுனன் கேட்கிறார். "உலகத்தைக் காத்து அருள்பவரே, இதுவரை காட்டிய காட்சிகளை, எல்லாம் கண்டு மகிழ்ந்து நன்றியுடையவனாக இருக்கிறேன்.

ஆனால் மீண்டும் உங்களை முன் போலவே கிரீடம் தரித்தவராகவும், உலகைக் காப்பவராக கரங்களில் கதாயுதமும் சக்கரமும் ஏந்திய வடிவத்திலேயே பார்க்க விரும்புகிறேன்.

என்னதான் உண்மையான வடிவமாக இருந்தாலும், உலகத்தையே விழுங்கி அழிக்கும் கோர வடிவத்தைப் பார்க்க மனம் அஞ்சி, நடுங்கிக் கலங்குகிறது. என்னால் அந்த வடிவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்று சொல்கிறார்.

அர்ஜுனன் இருந்த அதே சூழ்நிலையில்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம். நம் அனைவருக்கும் தாய்மை, தெய்வத் தன்மை, அன்பு, நட்பு இவற்றை பற்றி எல்லாம் ஒரு திட்டவட்டமான கருத்து இருக்கிறது.

எவையெல்லாம் இனிமையான, ஆறுதலான, மன்னித்துக் காத்து அருளும் தன்மை கொண்டனவாக இருக்கின்றனவோ அவைதான் தாய்மை, அன்பு, நட்பு என்றும் நினைக்கிறோம்.

> இருப்புத் தன்மைக்கு, நன்மை தீமை, அழகு அகோரம்ற்றுக்கிடையில் எந்தப் பாரபட்சமும் இருப்பதில்லை.

பிரபஞ்ச சக்தி அப்படிச் செயல்படுவதில்லை. இருப்புத் தன்மைக்கு, நன்மை தீமை, அழகு அகோரம்ற்றுக்கிடையில் எந்தப் பாரபட்சமும் இருப்பதில்லை.

நாம்தான் அனைவரையும் மதிப்பீடு செய்து கொண்டும், இந்த மதிப்பீடுகளைச் செயல்படுத்துவதற்காக நமக்குள் பல்வேறு உணர்ச்சிகளை உருவாக்கிக்கொண்டும் இருக்கிறோம்.

பீஷ்மர் தம்முடைய முக்திக்காகக் காத்திருக்கும்போது பாடிய விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாடலில், சாந்தாகாரம்...என்று விஷ்ணு பெருமானை வர்ணிக்கிறார். அதன் பொருள்: ‘சாந்த நிலையில் நிலைகொண்டிருப்பவரே...’

விஷ்ணு பெருமானின் மறு அவதாரமே! கிருஷ்ண பகவான், இந்த எளிமையான வரிகள், நமக்குள் ஆழ்ந்த அமைதியையும் மெளனத்தையும் க்கொண்டுவருகின்றன.

இப்படியல்லாமல், பீஷ்மர், விஷ்ணுவின் உக்கிர வடிவத்தின் குணாதிசயங்களைப் பற்றி “கோர வடிவினனே, உலகை அழிப்பவனே, தீப்பிழம்பாய் தகிக்கும் வாய்களை உடையவனே...,” என்றெல்லாம் பாடி புகழ்ந்திருந்தால் நம்முள் எத்தனை பேர் விஷ்ணு ஸஹஸ்ரநாம நாமாவளியை மனப்பாடம் செய்திருப்போம்?

பீஷ்மர் என்ன பாடியிருந்தாலும் சரி, நிறைய
பேர் அதன் பொருள் புரியாமலேயே
என்ன படிக்கிறோம் என்றே தெரியாமல்
படிக்கிறார்கள். அதனால் அவர்கள்
தப்பித்தார்கள்.

நீங்கள் தெளிவான சமமான உணர்வு நிலையில் இல்லையென்றால், படிக்கும் வார்த்தையின் அர்த்தத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால், நீங்கள் கலக்கமடைவீர்கள். இந்த வார்த்தைகள் எதிர்மறையானவை என்று நம்முடைய தர்க்க அறிவு நமக்குள் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பினை உருவாக்கிவிடும்.

இந்தக் கொந்தளிப்புகளை எல்லாம் கடந்த நிலையில் இருப்பவரே ஒரு யோகி.

பரப்ப்ரஹ்ம தெய்வீக தன்மை என்பது குணங்களைக் கடந்த குணமில்லாத் தன்மை என்பதை அவர் அறிவார்.

அதற்கு அமைதி, ஆறுதல், பயமுறுத்தும் கோர வடிவம் என்று எந்தக் குணமும் இல்லை என்பது அவருக்குத் தெரியும்.

side note

இந்த வெளிப்பாடுகள் அனைத்தும்,
கற்பனைகளே! இந்த வெளிப்பாடுகளுக்கு
ஆதாரமாகவும், இவற்றைக் கடந்தும்,
தெய்வத்தன்மை தன் இயல்பு நிலையில்
இருக்கிறது, அவ்வளவுதான். மூன்று
குணங்களையும் கடந்த நிலையில், அது
சலனமற்று வீற்றிருக்கிறது.

அர்ஜுனன் இந்த நிலையை இன்னும்
எட்டவில்லை. பயமுறுத்தும் மஹாகாலத்தின்
வடிவத்தைக்காட்டிலும், நான்கு கரத்துடன்
அபயமளிக்கும் இனிமையான தெய்வ
வடிவத்தையே அவர் காண விரும்புகிறார்.

குழந்தைகளை
நல்லவிதமாக வளர்க்க
விரும்புகிறீர்கள்
என்றால், உங்கள்
கட்டுறு மனப்பாங்கை
விட்டுவிடுங்கள்.

இவ்விரு தன்மைகளும் தெய்வீகத்தின் முகமுடிகளே, இந்த இரு தன்மைகளுமே தெய்வீகத்தின் உண்மையான வடிவம் இல்லை என்பதையும், இந்த இரு தன்மைகளுமே தெய்வீகத்தின் உண்மை வடிவம் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் மாயையைக் கடந்து நாம் புக்தியடைய முடியும்.

உங்கள் கனவுகளைக் குழந்தைகளின் மேல் சுமத்தாதீர்கள்

கேள்வி: சுவாமி, நான் இளம் குழந்தைகளின் தாய். அவர்களை எப்படி நல்ல விதத்தில் வளர்த்து ஆளாக்குவது என்று எனக்கு அறிவுரை சொல்வீர்களா?

நம்முடைய ஆசைகளைக் குழந்தைகளின் மீது திணிப்பதுதான் நம்முடைய முழு முயற்சியாக இருக்கிறது. நம்முடைய கனவுகள் நிறைவேறுவதில்லை, ஏனென்றால் கனவுகள் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

அதனால் நம்முடைய நிறைவேறாத கனவுகளை அவர்கள் மீது திணித்து, நம்முடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகி றோம். நமக்கு நிகழாதது அவர்களுக்கு நிகழ முடியும் என்று நம்புகிறோம்.

உங்கள் பெற்றோரும் இதையேதான் செய்தார்கள். உங்கள் குழந்தைகளும் இதையேதான் செய்யப்போகிறார்கள், அவர்கள் பெற்றோர்களாக ஆகும்போது!

Illustration of a money tree with banknotes

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச்
செய்திடும் நிஜமான உதவி, அவர்களை
கனவுகளையும் கற்பனைகளையும்
கடந்த நிலைக்கு எடுத்துச் செல்வதே!
ஒரு தாயாக, தந்தையாக, பெற்றோராக
இதுதான் உங்கள் அடிப்படை செயலாக
இருக்க வேண்டும்.

ஆனால் பொதுவாக நாம் இதற்கு மாறுபட்டுச் செயல்படுகிறோம். அந்தக் குழந்தை அதிக லட்சியங்களைக் கொண்டதாகவும், அதிக அஹங்காரம் உடையதாகவும் ஆக நாமே உதவி செய்கிறோம்.

பேராசையிலும் அச்சத்திலும் வாழும் மனப்பாங்கை வளர்த்து, கற்பனைகளில் வாழ பயிற்சி தருகிறோம். பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அடிப்படையாகவே நிறைவேற்ற முடியாத ஆசைகளையும் லட்சியங்களையும் நம்பிக்கைகளையும் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

உண்மையிலேயே நம் குழந்தைக்கு நாம் உதவி செய்ய நினைத்தால், முதலில் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கனவுகளைக் குழந்தையின் மேல் சுமத்தாதீர்கள்.

இந்தக் கனவுகள் எல்லாமே வீணானவை என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். பிறகு ஒவ்வொரு குழந்தையுமே புத்தராக மாறுவதைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு புத்தராக மாறவே பிறந்திருக்கிறது.

தவறான சமுதாயம், கட்டுறு மனப்பாங்கு,
தவறான கல்வி இவற்றை புகுத்துவதன் மூலம்
புத்த தன்மை அடையக் கூடிய அவர்களின்
வளர்ச்சிக்கு நாம் தடையாக மாறுகிறோம்.

ஜப்பானில், ஒரு விதமான கொடூரமான கலை இருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கு பான்சாய் கலை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

மரங்களைச் சிறு தொட்டியில் வளர்ப்பார்கள். பூமியில் வளர்த்தால் விண்ணைத் தொடும்

ஒவ்வொரு
குழந்தையும் ஒரு
புத்தராக மாறவே
பிறந்திருக்கிறது.

அளவிற்கு வளரக் கூடிய அம்மரங்களை, அடி இல்லாத மண்தொட்டியில் வளர்த்து அவற்றின் வேர்களை வளர வளர வெட்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

நானூறு வருட பழமையான இந்தச் சிறு மரங்கள் ஆறு அங்குல உயரம் மட்டுமே வளர்ந்திருக்கும்.

வேர்களை வெட்டும்போது அவை எப்படி வளர முடியும்? இதை ஒரு கலையாக அவர்கள் நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் இதைப் பாராட்டவும் செய்கிறார்கள்.

இந்த மரங்களைப் போய்ப் பார்க்கும் மக்களும், இதை ஏதோ செயற்கரிய செயலாக நினைக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மரங்கள், தலைமுறை தலைமுறையாக தோட்டக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அழகான நாகரீகம்
இவற்றின் பெயரால்
உங்களை
ஊனப்படுத்திக்
கொள்ளாதீர்கள்.

அந்த மரங்கள் எவ்வளவு
பழமையானவையோ, எவ்வளவு
நூற்றாண்டுகளாக வேர்கள்
வெட்டப்பட்டு வளர முடியாமல்
செய்யப்பட்டிருக்கின்றனவோ, அவ்வளவு
சிறப்புமிக்க கலைப்பொருளாக அவை
புரிந்துகொள்ளப்படுகின்றன.

சீனாவின் சர்வாதிகார ஆட்சியின்போது, இதேபோல மனிதர்களுக்குச் செய்தார்கள். அழகான பெண்களின் பாத விரல்களை நெருக்கி கட்டி விடுவார்கள். அவை வளர முடிவதில்லை. அவர்களுடைய பாதங்கள் ஒரு குழந்தையின் பாத அளவிலேயே இருந்து விடுவதால், பெரியவர்களாகும்போது அவர்களின் உடல் எடையை அந்தப் பாதங்களால் தாங்க முடியாது.

அழகு, நாகரீகம் இவற்றின் பெயரால் அந்தப் பெண்கள் நிஜமாகவே ஊனப்படுத்தப்பட்டார்கள்.

தற்போதைய நாகரிக ஆடை உலகில் இதே நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் உணவு உண்ணாமல் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதும், உண்டவுடன் வாந்தி எடுப்பதுமாக இருப்பதால் மிகவும் மெலிந்து இருக்க முடிகிறது.

இளம் பெண்கள் எலும்பும் தோலுமாக தோற்றமளிக்காவிட்டால் தாங்கள் அசிங்கமாக இருப்பதாக நினைக்கிறார்கள்.

இந்த விதமாகத்தான் சமுதாயம் மக்களின் மனப்பாங்கை, குறிப்பாகக் குழந்தைகளின் மனப்பாங்கினை உருவாக்கி வைத்திருக்கிறது.

ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அந்த போன்சாய் மரங்கள் இதைத்தான் பிரதிபலிிக்கின்றன.

நாம் குழந்தைகளை என்ன செய்கிறோம்? நாம் அவர்களின் வேர்களை வெட்டுகிறோம். நாம் உதவி செய்யவே விரும்புகிறோம். ஆனால் நாம் அவர்களுக்குச் செய்வது உதவி இல்லை. அவர்களுடைய முன்னேற்றத்திற்கு நாம் தடையாக இருக்கிறோம் என்பதுகூட நமக்குத் தெரிவதில்லை.

Peacock Feather Icon

கடந்த காலத்தில் இருந்து வெளியேறுங்கள்

அதனால் இதுதான் உங்களின் வேலையாக இருக்க வேண்டும். இது நீங்கள் விழிப்படைய உதவி செய்கிறது; உங்கள் குழந்தையை நல்ல பாதையில் வளர்க்க உதவுகிறது.

மனத்தைக் கடந்த நிலைக்குச் செல்வதற்கான காலம் வந்து விட்டது. மனம் நம்மை அடிமைப்படுத்துகிறது. மனம் என்பதே கடந்த காலம். மனம் கடந்த நிலையில் வாழ்வது என்றால் நிகழ்காலத்தில் வாழ்வது.

கடந்த காலத்தில் இருந்து வெளியேறுங்கள். இதற்கு மேலும் அதை உங்கள் வாழ்க்கையில் இடையூறாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் கடந்த காலத்தின் வழியாக வாழ்வதென்பது உயிரற்ற வாழ்க்கை வாழ்வதற்குச் சமமானது.

கடந்த காலம். இறந்து விட்ட காலம், கடந்த காலத்தில் வாழ்வது என்பது கல்லறையில் வாழ்வதற்குச் சமம். அதனால்தான் உலகில் இவ்வளவு துயரமும் துன்பமும்

Quote Box

மனம் கடந்த நிலையில் வாழ்வது என்றால் நிகழ்காலத்தில் வாழ்வது. விழிப்புணர்வற்ற நிலையும் நிலவுகிறது.

மக்கள் உண்மையில் உயிர்ப்போடு இல்லை. அவர்கள் மலருவதில்லை. வளர்ச்சி என்பது நிகழ்வதாகவே தெரியவில்லை.

மக்கள் பிறக்கிறார்கள். மந்தத்தன்மையில் குறைந்த செயல்பாடுகளுடன் வாழ்கிறார்கள். ஒரு நாள் இறக்கிறார்கள். அவர்கள் மொத்த வாழ்க்கையும் அர்த்தமற்ற செயல்களால் நிரம்பி இருக்கிறது. அவர்கள் எந்தவித முக்கியத்துவத்தையும் அடைவதே இல்லை.

மனமற்ற நிலையில்
இருப்பதே
தியானம்.

வாழ்வே ஆசீர்வாதமாக இருந்தது என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் கனவுகள் கலைந்து, நம்பிக்கை இழந்து, ஏமாற்றமடைந்து வாழ்கிறார்கள். அவர்களது இந்த நிலைக்கு அவர்களே பொறுப்பு. வேறு யாரும் இல்லை. மனத்தால் வாழும்போது இதுதான் நிகழும்.

தியான வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள், மனமற்ற நிலையில் இருப்பதே தியானம். எண்ணங்கள் குறுக்கீடு செய்வதை அனுமதிக்காதீர்கள்.

படைப்புடன் நேரடியான தொடர்பில் இருங்கள். மரங்களோடு, பாறைகளோடு, நதிகளோடு, மக்களோடு இணைந்து இருங்கள். மீண்டும் குழந்தையாக மாறுங்கள். உங்கள் வாழ்க்கைச் சுழற்சி முழுமைபெறும்..

ஒருவர் குழந்தையாகப் பிறக்கிறார். குழந்தையாகத்தான் இறக்க வேண்டும். "நீங்கள் சிறு குழந்தைகள் போல் இல்லையென்றால் என்னுடைய ராஜ்ஜியத்திற்குள் நீங்கள் நுழையமுடியாது," என்று இயேசு சொல்கிறார். அவர் சொல்வது முற்றிலும் சரியே.

கனிந்து, முதிர்ந்த ஒருவர் வயதாகும்போது, மீண்டும் ஒன்றுமறியாத சிறு குழந்தையைப்போல மாறிவிடுகிறார். வாழ்க்கை உச்சக்கட்டத்தை அடையும்போது நாம் வீடு திரும்ப தயாராகிறோம். இந்த வாழ்க்கைச் சுற்று முழுமையடைகிறது.

இந்த சுற்று முழுமை அடையவில்லை என்றால் நாம் மீண்டும் மறுபடியும் பிறக்க நேரிடும். ஏனென்றால் இந்த சுற்று முழுமை அடைய வேண்டும். அதுதான் நமக்கு கொடுக்கப்பட்ட வேலை.

பிறந்த காரணத்தை நிறைவேற்றாவிட்டால் கடவுளால் நம்மை அழைத்துக் கொள்ள முடியாது. மீண்டும் ஒரு குழந்தையைப்போல ஆக வேண்டுமானால்,நாம் வெகுளித்தனமும் வியப்பும் ஆச்சரியமும் நிறைந்தவர்களாக மாற வேண்டும். இதுதான் நம்முடைய வாழ்வில் அடைய வேண்டிய இலட்சியம். மனம் நல்லதொரு கருவி. நீங்கள் அதை உபயோகியுங்கள். மனத்தால் உபயோகப்படுத்தப்படும் கருவியாக நீங்கள் ஆகி விடாதீர்கள்.

மனத்திற்கு அடிமையாகாதீர்கள். அதனால் ஆக்கிரமிக்கப்படாதீர்கள். மனத்திற்கு நீங்கள் எஜமானராக இருங்கள்.

குழந்தைகள், பருவ வயதை அடையும்வரை அவர்களது மூளை ஆல்பா நிலையில் இருந்து இயங்குவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பெரியவர்களின் மூளை, பீட்டா அலைவரிசையில் இயங்குகிறது (13 முதல் 20 ஹெர்ட்ஸ் வரை). அல்ஃபா அலைவரிசை என்பது 8 முதல் 12 ஹெர்ட்ஸ்வரை இருக்கும்.

அவர்கள் சின்னஞ் சிறிய குழந்தைகளாக இருக்கும்போது, அவர்களுடைய மூளையின் அலைவரிசை இதை விட குறைவாக, டெல்டா, தீட்டா அலைவரிசைகளில் (ஆழ்ந்த உறக்கம், கனவு நிலை) இருக்கிறது.

இந்தக் குறைவான அலைவரிசையில் இருக்கும் ஒருவரிடம் ஆதிக்கம் செலுத்த முடியும். யார் எதைச் சொன்னாலும், குறிப்பாக வயது முதிர்ந்த, ஆளுமைதிறன் மிக்க ஒருவர் சொல்லும்போது, அதைக் கேள்வி எதுவும் கேட்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.

அறிவியல் ரீதியாகக் குழந்தைகளின் கட்டுறு மனப்பாங்கு உருவாகும் விதம் இதுதான். இப்படித்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெரியவர்களும் குழந்தைகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். இப்படித்தான் நம்முடைய ஸம்ஸ்காரங்கள் உருவாக்கப்படுகின்றன.

பல தலைமுறைகளைக் கடக்கும்போது, ஸம்ஸ்காரங்களின் சுமை ஒரு தனிமனிதரின் தாய், தந்தையர்கள் சுமத்திய சுமையாக இருப்பது இல்லை. அது ஒரு கலாச்சாரத்தின், மதத்தின், குழுவினரின் ஸம்ஸ்காரங்களாக ஆகிவிடுகின்றன. அவை கட்டளையாகவும் உத்தரவுகளாகவும் மாறி விடுகின்றன. மக்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக, காரணிகளாக மாறி விடுகின்றன.

நாம் நம்முடைய குழந்தைகளை வளர்க்கும்போது இதுதான் நடக்கிறது. நமது மதத்தின் பெயரால், சமுதாயத்தின் பெயரால் நாம் நம் குழந்தைகளைக் கட்டுப்படுத்துகிறோம். நமக்கு வேறு சிறந்தது எதுவும் தெரிவதில்லை.

நம்முடைய வாழ்க்கைச் சூழலில் நாமே சந்தோஷமாக இல்லை என்பது முழுமையாகத் தெரிந்திருந்தாலும் கூட, நம்மை வளர்த்தமுறைதான் நம்மை இப்படி உருவாக்கிவிட்டிருக்கிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாலும் கூட, அதே சட்டதிட்டங்களைத்தான் நாம் நம்முடைய குழந்தைகளின் மீது திணிக்கிறோம்.

வாகன விளக்கு வெளிச்சத்தைப் பார்த்து நிற்கும் மான்களைப்போல, நாமும் செய்வதறியாது, மறு மொழி பேச முடியாமல் உறைந்து விடுகி றோம்.

நீங்கள் உண்மையாகவே, உங்கள் குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் கட்டுறு மனப்பாங்கை முதலில் விட்டுவிடுங்கள்.

உங்களது பெற்றோர்கள்காட்டும் எல்லாவிதக்கட்டுறுமனப்பாங்குகளையும், சமுதாய, மத ரீதியான கட்டுறு மனப்பாங்குகளையும் விட்டுவிடுங்கள். நீங்கள் இழக்க வேண்டியதெல்லாம் பேராசையையும் அச்சத்தையும் மட்டும்தான்.

பிறகு நீங்கள், அழிவின் சங்கிலித் தொடரைப் பாதுகாத்து வைத்திருப்பதை விட்டு விடுவீர்கள். நீங்கள் ஆன்மாவை அழிப்பதற்கான செயல்களைப் பரப்பிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஞானமும் முக்தியும் மலர்வதற்கான சூழலை அனுமதிப்பீர்கள்.