KAILASA Library/பகவத் கீதை/நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய்Sign in
பகவத் கீதை

நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna

11.47 பகவான் சொல்கிறார்: அன்புக்குரிய அர்ஜூனா என்னுடைய உள்ளார்ந்த சக்தியின் வெளிப்பாடாக விளங்கும் இந்தப் பொருளியல் சார்ந்த உலகத்தின் உள்ளேயே, மனித அறிவுக்கு எட்டாத என் ஆன்மீக வடிவத்தை உனக்குக் காட்டினேன். உன்னைத் தவிர வேறு யாரும் இதற்கு முன் இந்த இறுதி வடிவத்தைப் பார்த்ததில்லை.

11.48 குருவம்சத்தின் சிறந்த வீரனே, உன்னைத் தவிர வேறு யாரும், வேதத்தைப் படித்ததாலும், சமர்ப்பணங்களாலும், தானங்களாலும்கூட இந்த வடிவத்தைப் பார்க்கவில்லை.

நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிருக்கிறாய்.

11.49 அன்பான சீடனே, இனியும் நீ என்னுடைய இந்தக் கோர வடிவத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அச்சம் நீங்கி, அமைதியான மனத்தோடு மறுபடியும் நீ பார்க்க விரும்பிய எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.

உங்களுக்கு உதவிட எந்த வேடத்திலும் வந்திடுவார்

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றி ஆறுதல் அளிக்கிறார். கலங்கிய தமது சீடருக்கு மீண்டும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

அர்ஜுனன் பார்த்த விச்வரூபகாட்சி அவரைத் தவிர வேறு யாரும் பார்த்திராத, பார்க்க முடியாத அரிய காட்சி என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது.

விச்வரூபகாட்சி பற்றிய குறிப்பு

தவங்கள் செய்வதனாலோ, யாகங்கள் செய்வதனாலோ, வேதத்தை படிப்பதனாலோ தானங்களாலோகூட ஒருவர் இதற்குமுன் இவ்வடிவத்தைக் கண்டதில்லை. "எது எப்படியோ, நீ கலக்கமடைந்து இருக்கிறாய். சரி, நீ அன்றாடம் வழிபடும், பார்க்க விரும்பும் எனது இயல்பான வடிவத்தையே பார்ப்பாயாக."

கிருஷ்ணர் இங்கே மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். தம் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் எவ்விதம் தம்மை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதைக் கிருஷ்ணர்தான் முடிவு செய்கிறார்.

இது குருசக்தியிடம் இருந்து, தெய்வசக்தியிடம் இருந்து கிடைக்கும் ஒரு பரிசு. இதை முயற்சியினால் அடைந்துவிட முடியாது.

ஆனாலும், முயற்சி, ஒருவரை கிடைப்பதற்கரிய இந்தப் பரிசினைப் பெறுவதற்குத் தயார் செய்கிறது. ஆனால் அதுமட்டுமே இந்த அருள் நம்மீது பொழிவதற்குத் தேவையான நிபந்தனை கிடையாது.

உங்களுடன் என்னுடைய இன்னுமொரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது பரிவ்ராஜக வாழ்க்கையின் ஆரம்ப கால நாட்களில், இந்தியா முழுவதும்

Statue of Lord Shiva

குறுக்கும் நெடுக்குமாகப் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது ஹரித்துவாரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன்.

கங்கை நதிக் கரையில், ஒரு பாலத்திற்கு அடியில் அமைந்திருந்த சிமெண்ட் மேடை ஒன்றில் தங்கி இருந்தேன். அங்கே ஒரு சிறிய சிவனின் சிலை இருந்தது. மக்கள் அதிகமாக அங்கே வருவதில்லை.

கடும் காய்ச்சலாலும் அதிகமான வயிற்றுப் போக்காலும் நான் உடல் நலம் குன்றி இருந்தேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. நாம் இறக்கப் போகிறோம் என்று நினைக்கத்தொடங்கிவிட்டேன்.

அப்போது திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு வாலிபர், என்னோடு பேச ஆரம்பித்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகானவராகவும் அருள் நிறைந்தவராகவும் இருந்தார்.

அவரது சட்டைப் பையில் சொருகியிருந்த வைா பேனா, குறிப்பாக என் கவனத்தை ஈர்த்தது. மிகவும் எளிமையாக ஆடையணிந்திருந்த அந்த மனிதரிடத்தில் அந்தப் பேனா பொருத்தமில்லாமல் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

என்னால் நகரக்கூட முடியாமல் இருந்த அந்த மூன்று நாட்களும் தினமும் உணவும் மருந்துகளும் கொண்டுவந்து கொடுத்தார். எனது அருகில் அமர்ந்து என்னோடு அவர் பேசுவார்.

அவருடைய பெயர் என்ன, எங்கு வசிக்கிறார் என்றெல்லாம் நான் கேட்டேன். அவர் தம்மை 'சங்கர் மஹராஜ்' என்று மற்றவர்கள் அழைப்பார்கள் என்றும், அருகில் இருக்கும் ஓர் ஆச்'ரமத்தின்பெயரைச் சொல்லி, அங்குதான் தாம் வசிப்பதாகவும் சொன்னார். நான் அந்த ஆச்'ரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை.

நான் சற்று உடல் நலம் தேறியதும் அவர் என்னைப் பார்க்க வருவதை நிறுத்தி விட்டார்.

இறைசக்தி,
அது எங்கும்
நிறைந்திருக்கிறது,
நமது
பிரார்த்தனைகளுக்கு
செவிசாய்க்கிறது.

சில தினங்களுக்குப் பிறகு நான் நன்றாக நடக்க ஆரம்பித்தேன். அந்த ஆச்ரமத்திற்குச் சென்று அவருக்கு நன்றி சொல்ல முடிவு செய்தேன். எந்தச் சிரமமும் இல்லாமல் அந்த ஆச்ரமத்தைக் கண்டு பிடித்தேன். கங்கைகரையில் மூன்று, நான்கு அறைகளுடன் அந்த ஆச்ரமம் இருந்தது. ஒரு வயதான மூத்த ஸந்யாஸி அங்கே அமர்ந்து இருந்தார்.

சங்கர் மஹாராஜைப் பார்க்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவரோ அந்தப் பெயரில் இங்கே யாரும் இல்லை என்று சொன்னார்.

அந்த வயதானவர் பேசுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. நான் மிகவும் வற்புறுத்திக் கேட்ட பிறகு, அவரைத் தவிர மூன்று வயோதிக சன்யாசிகள் மட்டுமே அங்கே தங்கி இருப்பதாகவும், நான் குறிப்பிடும் சங்கர் மஹாராஜ் என்ற பெயரில் எந்த இளம் வாலிபரும் அங்கே வசிக்கவில்லை என்றும் சொன்னார்.

> பிரபஞ்ச சக்தியின்
> அற்புதங்களை
> நம்மால்
> புரிந்துகொள்ள
> முடிவதில்லை.

நான் மேலும் மேலும் வற்புறுத்திக்
கேட்டபோது அந்த ஸந்யாஸி கொஞ்சம்
எரிச்சலோடு, “இங்கே இருக்கும் ஒரே
சங்கர் மஹாராஜ் அதோ அங்கே அமர்ந்து
இருக்கிறார்,” என்று சொன்னார்.

அவர் கைகாட்டிய இடத்தில் பார்த்தேன். அங்கே ஒரு சிறிய சிவன் கோவில் இருந்தது. அதன் உள்ளே பளிங்கினால் ஆன சிவன் சிலை இருந்தது. நான் கொஞ்சம் அருகில் போய்ப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அந்த இளம் துறவி தம்முடைய சட்டைப் பையில் சொருகி இருந்த அந்த வைரம் பதித்த பேனா, சிவனின் தோளில் சார்த்தி இருந்த துணியில் சொருகி வைக்கப்பட்ட்டு இருந்தது.

நான் பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நான் அந்த வயதான மனிதரிடம் போய், “ஏன் சிவனது சிலையில் வைரம் பதித்த பேனா இருக்கிறது,” என்று கேட்டேன்.

யாரோ ஒரு பக்தர் அந்தப் பேனாவைத் தனக்குப் பரிசாக அளித்ததாகவும், தாம் அதை சிவனுக்கு அணிவித்ததாகவும் சொன்னார்.

நான் உடல் நலமில்லாமல் இருந்தபோது என்னை நன்றாகக் கவனித்துக் கொண்ட சங்கர் மஹராஜ் என்ற அந்த இளம் வாலிபரும், அவருடைய சட்டைப் பையில், இந்தச் சிலை அணிந்திருந்த அதே பேனாவைத்தான் சொருகி இருந்தார்.

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, இதுதான் உண்மையில் நடந்தது.

தேடி அடைந்தோம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் பக்தர்களோடு 2005 -ல் இமாலய யாத்திரை சென்றபோது இந்தச் சம்பவத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.

அந்தக் கோயில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றேன். ஆனால் நேரமின்மையால் அது கைவிடப்பட்டது. மீண்டும் 2006-ல் மற்றொரு குழுவினரோடு போனபோது, அந்த இடத்தைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்தோம்.

கங்கையில் அதிகாலையில் குளித்த பிறகு, சிறிது தூரம் நடந்து சென்றோம். சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு, நான் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த அந்தப் பாலத்தடியையும் சிவன் சிலையையும் கண்டுபிடித்தோம்.

அங்கிருந்து, அந்த ஆச்ரமம் இருக்கும் இடம் எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கவில்லை. அது கீதா மந்திருக்கு பக்கத்தில் இருந்தது என்று மட்டுமே தெரிந்தது.

நாங்கள் மேலும் சில மைல்கள் நடந்த பிறகு கீதா மந்திரில் அந்த ஆச்ரமத்தைப் பற்றி விசாரித்தோம். எனக்குத் தெரிந்ததெல்லாம், அந்த ஆச்ரமம் கங்கை நதிக் கரையில் இருந்தது என்பதும், ஒரு சிறிய சிவன் கோவில் அங்கே இருந்தது என்பதும் மட்டுமே.

கீதா மந்திரில் இருந்த ஒருவர், அங்கிருந்த
பின் கதவு வழியாகச் சென்று அக்கம்
பக்கத்தில் பார்க்கும்படி சொன்னார்.
நாங்களும் அவர் சொல்லியபடி அக்கம்
பக்கத்தில் விசாரித்தோம். எப்போது நாங்கள்

> பிரபஞ்ச சக்தியின் அன்புகரங்களுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் போதும், உங்களுக்குள் ஒரு ஆழமான நிம்மதி பரவுவதைக் காண்பீர்கள்.

A small deity figure inside a crystal geode

சிவன் கோவிலைப் பற்றிக் கேட்டாலும் கடந்து
போகும் ஒவ்வொருவரும் பக்கத்து வீட்டைக்
காட்டுவார்கள்.

ஏனென்றால் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிவன் கோவில் இருந்தது. முடிவாக சற்றே பார்த்த மாதிரி இருந்த ஒரு ஆச்ரமத்தை வந்தடைந்தோம். இரண்டு பக்தர்கள் உள்ளே போய்ப் பார்த்தார்கள்.

அங்கே பலரோடு பேசி, பிறகு ஒரு கோவிலைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் அதுவும் நான் சொன்ன கோயில் இல்லை. மீண்டும் தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் பத்து பேர் கொண்ட குழு அவர்களுக்குப் பின்னாலேயே போனோம்.

ஒரு குழந்தை
தன் தாயிடம் சரணாகதி
அடைவதுபோல,
ஒரு பக்தர்
தம் குருவிடம்
சரணாகதி அடைந்தால்
மட்டுமே,
நிபந்தனையற்ற அன்பு
தூண்டப்படுகிறது.

சிறிதுநேர தேடலுக்குப் பிறகு, தேடி
போனவர்கள் ஓடோடி வந்து கங்கை நதிக்கரை
ஓரத்தில் ஒரு சிவனின் சிலை இருப்பதாகச்
சொன்னார்கள்.

அங்குப் போய் பார்த்தோம். அந்த இடம்
நான் பார்த்தது போலவே அப்படியே
இருந்தது. நான்கு அறைகளோடு கூடிய
அந்தப் பழைய ஆச்ரமம் அப்படியே இருந்தது.
வெண்மையான சிவனின் பளிங்கு சிலையும்
அப்படியே அங்கே இருந்தது.

எங்கள் குழுவினரின் சிலர் பணம் கொடுத்தபோது, அந்தப் பூசாரி அதை வாங்கி சிவனது தோளில் இருந்த துணியில் சொருகி வைத்தார். அவர் சொருகிய இடம், வைரம் பதித்த பேனாவை நான் பார்த்த அதே இடம்!

அந்தப் பூசாரியிடம், சிலகாலம் முன்பு நான் சங்கர் மஹராஜ் என்பவரைத் தேடி வந்த சம்பவம் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டோம். அவருக்கு மிகவும் வயதாகி விட்டதால், அவருக்கு எதுவும் நினைவிலிருக்கவில்லை.

ஆனால் அந்தச் சிவன்ப்போதும் சங்கர் மஹராஜ் என்றே அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானே நேரில் வந்து என்னைக் கவனித்துக் கொண்ட இந்தச் சம்பவத்தில் நம்புவதற்கோ நம்பாமல் இருப்பதற்கோ எதுவுமே இல்லை.

இது உண்மையாக நடந்த சம்பவம். அவ்வளவுதான். ஆழ்ந்த பிரார்த்தனையினாலோ அல்லது தவத்தின் விளைவாகவோ இது நடக்கவில்லை.

இது ஏன் நடந்தது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சத்தின் படைப்பில் இப்படித்தான் எல்லாமே நிகழ்கின்றன. வருவதை அப்படியே ஏற்றுக் கொள்வதே உங்கள் கடமை.

இருந்த போதிலும், இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரின் விச்வரூபத் தரிசனத்தைக் காண விரும்பினார்; அது நிகழ்ந்தது.

தாயின் அன்பைப் பெறுவதற்கு எந்தத் தவமும் தேவையில்லை

அவரது தேடுதல் இல்லாமலேயேகூட இது நிகழ்ந்திருக்க முடியும். நாம் கேட்பதனால் அது கிடைப்பதில்லை. இறைத் தன்மை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுப்பதால் மட்டுமே, நமக்கு அது கிடைக்கிறது.

அர்ஜுனன் காணுதற்கரிய இந்தப் பரிசை வெறுத்து ஒதுக்குவதுபோல தோன்றினாலும், கிருஷ்ணரின் பழக்கமான இனிய வடிவத்தையே காண விரும்பினாலும், இவை எதுவுமே கிருஷ்ணருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

எந்த ஒரு பாராட்டுதலையோ அல்லது ஏற்றுக்கொள்ளும் தன்மையையோ எதிர்பார்க்காத, நிபந்தனையற்ற ஒரு பரிசையே கிருஷ்ணர் வழங்கினார்.

தன்னளவில் எந்த ஒரு முயற்சியும் செய்யாமலேயே ஒரு குழந்தைக்கு அதன் தாயின் அன்பு தானாகக் கிடைக்கிறது.

குழந்தையின் இருப்பே, நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்பைத் தாயிடம் தூண்டுகிறது.

> தம்மிடம் வரும் சீடரின் அஹங்காரத்தை அழிப்பதில் ஒரு குரு இரக்கமில்லாமல் செயல்படுகிறார். ஒரு குழந்தை தன் தாயிடம் சரண்ாகதி அடைவதுபோல, ஒரு பக்தர் தம் குருவிடம் சரண்ாகதி அடைந்தால் மட்டுமே, இந்த நிபந்தனையற்ற அன்பு தூண்டப்படுகிறது.

ஒரு குழந்தையின் விஷயத்தில் அன்பு பிரதிபலிக்கப்படுகிறது. ஒரு குழந்தை, தன்னைப் பாதுகாத்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது; தன்னைக் கவனித்துக் கொள்பவர்களிடம் முழுமையாக சரண்ாகதி அடைகிறது.

ஆனால் ஒரு பக்தரின் விஷயத்தில், அவர் தமது வரையறுக்கப்பட்ட முழு மன அமைப்பையுமே விட்டுவிட வேண்டியதாக இருக்கிறது. இது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.

நிபந்தனையற்ற
அன்பை
அனுபவிப்பதற்கு
ஒருவர் தம்முடைய
மனத்தை விட்டுவிட
வேண்டும்.

நிபந்தனையற்ற அன்பை அனுபவிப்பதற்கு ஒரு பக்தர் தமது இயல்பான, இயற்கையான சரண்ாகதித்தன்மைக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.

இதையடைவதற்கு ஒருவர் தம்முடைய மனத்தை விட்டுவிட வேண்டும்.

ஒருவர், விழிப்புணர்வு மற்றும்
விழிப்புணர்வற்ற்ற என்ற இந்த இரு
நிலைகளிலுமே வரையறுக்கப்பட்ட தனது
மன அமைப்பை விட்டுவிட வேண்டும்.

மனம், ஆதர்ச கதாபாத்திரங்களோடு ஒப்பீடு செய்து கொண்டிருக்கும் தன்மையை விட்டுவிடும்போது, தெய்வத் தன்மை இனிமையாகவோ, உக்கிரமாகவோ எப்படி இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை.

இருவித தன்மைகளிலுமே இறைவனை மனம் ஒப்புக்கொண்டு விடுகிறது.

கிருஷ்ணர் தம்முடைய சீடரை, 'தன்னை - உணர்தல்' என்னும் ஞானப்பாதையின் ஒவ்வொரு நிலையிலும் வழி நடத்திச் செல்கிறார்.

'தன்னை - உணர்தல்' என்பது 'இறைவனை உணர்தல்' என்பதிலிருந்து வேறுபட்டதல்ல; இரண்டுமே ஒரே நிலையைத்தான் குறிக்கின்றன.

உருவ வழிபாடு -ஒரு சிறந்த தியான நுட்பம்

கேள்வி: விஷ்ணுவும் லக்ஷ்மியும் எப்போதும் மென்மையான அழகான வடிவங்களில் வழிபடப்படுகிறார்கள். சிவனும் காளியும் கொடூரமான, பயங்கரமான வடிவங்களில் வழிபடப்படுகிறார்கள். சிவனும் காளியும் உயர்ந்த நிலையில் இருப்பதை இது குறிக்கிறதா?

முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தெய்வத்தை நீங்கள் எந்த ஒரு வடிவத்தில் வணங்கினாலும், வழிபட்டாலும், கல், உலோகம், மரம் என்று எந்த வடிவத்தில் வழிபட்டாலும் நீங்கள் வழிபடுவது அந்த விக்ரஹத்தை அல்ல, அந்தத் திருவுருவ படத்தை அல்ல.

| ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், உருவமில்லாச் சக்தியை உணரும் நிலையை அடைவது சாதாரண வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்று. | | --- |

அந்த விக்ரஹத்திற்கும் படத்திற்கும் ஆதாரமாகவும், அதைக் கடந்தும் இருக்கும் உருவமில்லாச் சக்தியைத்தான் அந்த விக்ரஹத்தின் மூலமாக வழிபடுகிறீர்கள். நாம் விக்ரஹங்களை வழிபடுவதால் உருவ வழிபாட்டில் ஈடுபடுவோர் என்னும் பெயர் ஏற்பட்டு இருக்கிறது. நமது கலாச்சாரத்தில் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கும் ஒரு தன்மையே இந்த உருவ வழிபாடு.

உருவத்தோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு முன்னேறினால்தான், நாம் உருவமில்லாச் சக்தியைப் புரிந்து கொண்டு, அதை வழிபட முடியும்.

உருவமில்லாச் சக்தியை நேரடியாக வழிப்பட்டு புரிந்து கொண்டுவிட முடியும் என்று எவ்வளவுதான் ஒருவர் நம்பினாலும், ஒருவராலும் அது முடியாது.

உருவமில்லாச் சக்தியை வழிபடுவதாகச் சொல்பவர்கள்கூட குறிப்பிட்ட திசையை நோக்கி வழிபடுவதையும் அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவத்திற்கு முன் இருந்து வழிபாடு செய்வதையும் நீங்கள் காண முடியும்.

ஏன்? ஏனென்றால், ஏதாவது ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், உருவமில்லாச் சக்தியை உணரும் நிலையை அடைவது சாதாரண வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்று.

கடவுளைப் பற்றி, தெய்வீகத்தைப்
பற்றி உங்கள் கண்ணோட்டம் எதை
அடிப்படையாகக் கொண்டுள்ளது? இவை
எல்லாம் நேரத்தை வீணடிக்கும் வெறும்
கருத்துகள் மட்டுமே.

இராமகிருஷ்ணரின் ஒரு சீடர்,
விவேகானந்தரைப் பார்த்து, "நீங்கள்
எதற்காக இராமகிருஷ்ணரை 'பகவான்'
(கடவுள்) என்று எல்லோரின்
முன்னிலையிலும் அழைத்தீர்கள்," என்று
குற்றஞ்சாட்டுவதுபோல கேட்கிறார்.

அதற்கு விவேகானந்தர், "கடவுளை நீ எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறாய்?" என்று பதிலுக்கு கேட்டார்.

கடவுள் என்பவர் சர்வ வல்லமை வாய்ந்த, சக்தி படைத்த, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவர் என்று அவரும் பதில் சொன்னார்.

விவேகானந்தர், "முட்டாளே! நீ சொல்லும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள், இராமகிருஷ்ணரிடம் எப்போதும் இருக்கிறார். உன்னைப் பொறுத்தவரையில் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. ஆனால் இராமகிருஷ்ணருக்கோ கடவுள் என்பவர் வாழும் உண்மை தன்மை. அவர் கடவுளுடனேயே எப்போதும் வாழ்கிறார்," என்று பதிலடி கொடுத்தார்.

உருவ வழிபாடு என்றால் என்ன என்பதைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளாமலேயே அதை அர்த்தமற்றது என்று குறை சொல்வது, இன்றைய நாகரீகமாகி விட்டது.

ஆலயங்கள் - சக்தி கேந்திரங்கள்

கோயில் கட்டுவது என்பது வெறும் கலை மட்டுமல்ல; அது ஒரு விஞ்ஞானம். ஆலய கட்டுமானம் என்பது மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு விஞ்ஞானம்.

அதன் ஒவ்வொரு அம்சமும், சிலைகளின் அளவு, அறைகளின் அளவு, திறந்த வெளி மண்டபங்களின் அளவு, எந்தத் திசையை நோக்கி அவை அமைக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து, கர்ப்பகிரகத்தில் சிலையைப் பிரதிஷ்டை செய்யும்முறைவரை ஒவ்வொரு சின்ன சின்ன அம்சமும் மிகவும் விளக்கமாக, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே நுணுக்கமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு விட்டன.

இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களுள் ஒன்றான தஞ்சை பிரஹதீஸ்வரர் கோவிலில், அதன் இராஜகோபுரத்தின் நிழல் தரையில் ஒருபோதும் விழாமல் கோபுரத்தின் மேலேலே விழுமாறு கட்டப்பட்டு இருக்கிறது.

பல ஆலயங்கள், சூரியனின் கதிர்கள் வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரங்களில் மூல விக்கிரஹத்தின் மீது விழுமாறு கட்டப்பட்டு இருக்கிறது.

nிறைய ஆலயங்கள், ஆயிரங்கால் மண்டபங்களுடனும், தட்டினால் இசை எழுப்பும் தூண்களுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன கால கட்டிடக்கலை இப்படிப்பட்ட சிறப்பம்சங்களை மறுபடியும் உருவாக்குவதற்கான முறைகளை வைத்திருக்கவில்லை.

விக்கிரஹங்களைப் போலவே ஆலயங்களும் சக்தி கேந்திரங்களே. அவை சக்தியை உள்வாங்கி, தன்னுள் சேமித்து வைத்து, அதைப் பரவச் செய்பவனாக இருக்கின்றன. அவை த்யானம் செய்ய முடியாதவர்களும், த்யானம் செய்ய விருப்பமில்லாதவர்களும்கூட பயன் பெறுவதற்காக அமைக்கப்பட்ட பொது த்யான மையங்கள்.

இந்த ஆலயங்கள், நீங்கள் வடிவத்தின் மூலமாக, பிரபஞ்ச விழிப்புணர்வை உணர்ந்துகொள்வதற்கு உங்களுக்கு தீக்ஷை அளிக்கின்றன. உருவத்தைக் கடந்து செல்வதற்கு, உருவத்தை நீங்கள் கைவிட்டாக வேண்டும்.

நமது எல்லா த்யான முறைகளும், உருவமற்றதையே வலியுறுத்துகின்றன. அங்கே மந்த்ரங்கள் உச்சரிக்கப்படுவதில்லை. எந்த ஒரு வடிவத்தின் கற்பனைகளும் பாவனைகளும் இருப்பதில்லை. ஆனால் இவை அனைத்தையும் பயிற்சி செய்வதற்கு முன்பு கொஞ்சம் புரிதலும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

ஒருவர் ஓர் உருவத்தைத்
தேர்ந்தெடுக்கும்போது, அவரிடம் எந்தத்
தன்மை குறைகிறதோ, எந்தத் தன்மை
அவருக்குத் தேவையோ அதையே
தேர்ந்தெடுக்கிறார்.

> கற்பனைகளும்,
> பாவனைகளும்
> இல்லா வழிபாட்டை
> பயிற்சி செய்வதற்கு
> முன்பு
> கொஞ்சம் புரிதலும்,
> விழிப்புணர்வும்
> தேவைப்படுகிறது..

நிறைவேறாத ஆசைகள், ஸம்ஸ்காரங்கள், வாஸனைகள் இவற்றின் அடிப்படையிலும் அந்த உருவம் தீர்மானிக்கப்படுகிறது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் வழிபாடு செய்பவர், பொருளாதார மேம்பாடும் செல்வமும் தேவை என்பதற்காக வழிபடுகிறார். அவர்கள் இருவரும் இந்த இரு தன்மைகளைப் பிரதிபலிக்கிறார்கள்.

துணிச்சலும் தைரியமும் தேவைப்படும் ஒருவர், அன்னை காளியைப் பூஜிக்கிறார். ஞானப் பாதையை அடைய விரும்புபவர் சிவபெருமானைத் துதிக்கிறார்.

இந்தத் தேர்வுகள் எல்லாம் ஒருவரின் தேவையைக் குறிக்கிறதே தவிர அவரது நிலையை இல்லை. பல தலைமுறைகளாக, வங்காளத்தில் காளி மாதாவாக வழிபடப்பட்டு வருகிறாள். அவளைக் காருண்ய சொரூபிணியாக அவர்கள் கருதுவதால், பயமில்லாமல் அவளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. விஷ்ணுவின் வழிபாட்டில் கூட, நரசிம்மம் என்ற அவதாரத்தின் (பாதி சிங்கம், பாதி மனிதன்) வழிபாடு நடக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.

பொதுவாக, அன்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்ல உருவத்தோடு தொடர்பு கொள்வது மிகவும் எளிதாக இருக்கும் என்பது உண்மையே. அதனால்தான், தெய்வங்களுள் விநாயகரும் கிருஷ்ணரும் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வங்களாக இருக்கிறார்கள்.

ஆனால் எந்த வடிவத்தை நீங்கள் வழிபட்டாலும் சரி, அந்த வடிவங்களுக்கு பின்னே இருக்கும் சக்தி ஒன்றே! உருவமில்லாத சக்தியைத்தான் முடிவாக நீங்கள் வழிபடுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எல்லாத் தெய்வங்களின் சக்தியும் ஒரே சக்திதான். எந்த ஒரு வித்தியாசமும், இல்லை. உண்மையில், எல்லா ஞானிகளின் சக்தியும் ஒரே சக்திதான். கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர், இயேசுபிரான் இவர்களின் சக்தி நிலையில் கொஞ்சம்கூட வித்தியாசம் இல்லை. நாம்தான் இவர்களை வித்தியாசமாகப் புரிந்து கொள்கிறோம். வெவ்வேறாக உணர்கிறோம். தனித்தனி நபர்களாக வெளிப்படுத்துகிறோம்.

தீவிரவாதம் - ஒரு ஆன்மீகவாதியின் அகராதியில் இல்லாத வார்த்தை

இந்த ஞானிகளின் சக்தி மற்றும் இவர்கள் உலகிற்கு அளித்த செய்தியின் சாரம் எல்லாம் அன்பும் கருணையும்தான்! ஞானி என்பவர் அன்பும் கருணையும் நிறைந்தவராக இருக்கிறார். அவை இல்லாமல் ஞானியாகவோ, அவதார புருஷராகவோ இருக்க முடியாது.

பிறரைத் துன்புறுத்துவதையோ,
வன்முறையையோ எந்த குருவும், எந்த
அவதார புருஷரும் ஆதரிக்க மாட்டார்கள்.
தீவிரவாதம் என்பது ஆன்மீகவாதியின்
அகராதியிலேயே இல்லை. அதனால்
ஒரு சிறந்த ஞானியின் போதனைகளில்
தீவிரவாதம் ஒரு பாகமாக இருக்கவே
முடியாது.

மதங்களின் பெயரால், தங்களுடைய
ஜ்ஞான குருமார்களின் போதனைகளின்
பெயரால் யாரெல்லாம் வன்முறையில்
ஈடுபடுகிறார்களோ, அவர்களெல்லாம்
தங்களுடைய குருவின் போதனைகளுக்குத்
தவறான பொருள் கொடுத்து, அதன்
உண்மையைச் சிதைத்து, ஸத்யத்தை
அழிப்பவர்கள்.

> ஞானிகளின் சக்தி
> மற்றும் இவர்கள்
> உலகிற்கு அளித்த
> செய்தியின் சாரம்
> எல்லாம்,
> அன்பும்
> கருணையும்தான்!

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவம், அர்ஜுனனை அச்சமடையச் செய்ய வேண்டுமென்பதற்காக வெளிப்படுத்தப்பட்டதல்ல. இந்தப் படைப்பின், இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் உண்மையை உணர்த்துவதற்காகவே விச்'வரூப தர்ச்'னம் வெளிப்படுத்தப்பட்டது.

பிரபஞ்ச இருப்பு தன்மையின் நடுநிலை தன்மையை விளக்கும் விதமாக, அழித்தலுக்குப் பின் தொடரும் படைத்தலையும், படைத்தலுக்குப் பின் தொடரும் அழித்தலையும் கிருஷ்ண பகவான் வெளிக்காட்டுகிறார். இதுவே இயற்கை.

ஒருவரின் அஹங்காரத்தை அழிக்கும் அனுபவத்தை வெளிப்படுத்தும்

ஒரு உருவகமாகவே காளி மாதாவின்
பயமுறுத்தும் கோர உருவம் இருக்கிறது.
அஹங்காரமே அந்த மனித உடல்.
அந்த உடலின் மேல்தான் காளிமாதா
நடனமாடுகிறாள்.

தம்மிடம் வரும் சீடரின் அஹங்காரத்தை
அழிப்பதில் ஒரு குருவும் இரக்கமில்லாமல்
செயல்படுகிறார். இதுவே ஒரு
ஞானியின் இயல்பு, இந்த இயல்பைக்
கண்டு அஞ்சுபவர்கள் விலகி இருக்க
வேண்டியதாகிறது.

உருவம் கடந்து
செல்லுங்கள்;
வடிவமில்லாச்
சக்தியை
இறுகப்பற்றிச்
சரணையுங்கள்.
நீங்கள் ஆனந்தத்தில்
இருப்பீர்கள்.

அறிவு ரீதியாக இந்த உண்மைகளை ஒத்துக் கொள்வது வெகு சுலபம். என் குருவிடம் நான் சரணடைகிறேன். அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்யட்டும் என்று சொல்வதும் வெகு சுலபம்.

நான் எந்த அசௌகரியத்தையும் உணரவில்லை என்று சொல்வதும் சுலபம். உங்களுக்கு எந்தவித கஷ்டத்தையும் தராத வரையில் மட்டுமே இந்த சரணாகதியும் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் நீடிக்கும்.

குரு உங்களை அழைக்கும் போதுதான், செய்வதற்கு நூற்றுக்கணக்கான வேறு விஷயங்கள் இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். உங்களை வார இறுதியில் மட்டும் அழைக்கும் குருவாக இருந்தால் வசதியாக இருக்கும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அழைக்கும் குருவாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்.

உங்களது மற்ற அலுவலுகளுடன் ஒத்துப்பொக முடிந்தால் மட்டுமே, அவரை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் அவர் ஒரு தொந்தரவாக உங்களுக்குத் தெரிகிறார்.

உயர்ந்த தன்மையில் இருப்பவர் எந்தக் கடவுள் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். சிவனோ, விஷ்ணுவோர், லஷ்மிதேவியோ, காளியோ, இவர்கள் எல்லோரும் ஒரே வடிவமே, ஒரே சக்தியின் வெளிப்பாடே!

உங்களது தன்மைகளுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் வெவ்வேறு முகமுடி அணிந்து கொள்கிறார்கள், அவ்வளவுதான். உருவம் கடந்து செல்லுங்கள்; வடிவமில்லாச் சக்தியை இறுகப் பற்றிச் சரணையுங்கள். நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள்.