இந்த முறையில்தான் நீங்கள் என்னை அடைய முடியும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

11.50 ஸஞ்சயன் சொன்னது:
வாஸுதேவர் இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன் கூடிய தம்முடைய வடிவத்தைக் காட்டினார். பிறகு, தம்முடைய இனிய மானுட வடிவமெடுத்து, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனைத் தேற்றினார்.
11.51 அர்ஜுனன் சொன்னது:
ஜனார்தனா, உமது இந்த இனிய மானுட வடிவம் கண்டு, இப்போது மனம் தெளிந்து சாந்தமாக என்னுடைய இயல்பை அடைந்தவனாக இருக்கிறேன்.
11.52 பகவான் சொன்னது:
தரிசிப்பதற்கரிய என்னுடைய இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்க தேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள். 11.53 நான்கு கரங்களோடு நீ என்னை எப்படித் தரிசித்தாயோ, அதை வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் புரிந்துகொள்ள முடியாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் மட்டுமே ஒருவர் என்னை இவ்வாறு தரிசித்துவிட முடியாது.
11.54 என் அன்பிற்குரிய அர்ஜூனா, எதிரிகளை வாட்டுபவனே, ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.
11.55 அன்பிற்கினிய பாண்டு புத்திரனே, எனக்காகப் பக்தி சேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான்.

இது பக்திக்கான இடம்
கிருஷ்ண பகவானின் இந்த வாய்மொழிகள் நேரடியான, உண்மையான எளிமையான ஸத்யங்களாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கிருஷ்ணர், முதலில் அர்ஜூனன் சௌகரியமாக உணரும் நான்கு கரங்களுடன் கூடிய தனது அழகிய தெய்வீக வடிவத்தை அர்ஜூனனுக்குக் காட்டியருளினார்.
பிறகு, வாசுதேவ கிருஷ்ணராக, அர்ஜூனனுக்கு மிகவும் பழக்கமான இனிய மானிட வடிவமெடுத்து அவரை மகிழ்விக்கிறார்.
ஆனால் அந்த நெருங்கிய பழக்கமான தன்மை அங்கேயே முடிவடைகிறது.
சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் தெய்வீக வடிவம் நாராயணனாகத் திவ்ய வடிவமெடுத்து வந்த கிருஷ்ணரை அர்ஜூனன் கண் குளிர தரிசிக்கிறார். அதே சமயத்தில் கோர வடிவினராக உலகையே விழுங்கும் மஹாகாலமாகவும் கிருஷ்ணரைக் கண்டு நடுநடுங்கி இருக்கிறார்.
தம் எதிரில் நிற்கும் கிருஷ்ணர், அந்த எல்லையில்லாப் பேருண்மையின் பிரம்மாண்ட வடிவம் என்பதைப் புரிந்துகொண்டார்.
கிருஷ்ணர், இப்போது எந்த வடிவமெடுத்துக் காட்சி அளித்தாலும், அர்ஜுனனின் இந்தப் புரிதல் அவருடனேயே இருக்கும்.
தேவகியின் மகனாகக் கிருஷ்ணர் சிறையில் அவதரித்தபோது, வசுதேவருக்கும் தேவகிக்கும் ஆறுதல் அளிப்பதற்காக, கிருஷ்ணர் தமது திவ்ய வடிவமாகிய நான்கு கரங்களுடன் காட்சி அளித்தார்.
பிறகு இனிமையான மனித உருவில் குழந்தையாக மாறினார்.
அர்ஜுனன், இப்போது கிருஷ்ணரின் எல்லா வடிவங்களையும் பார்த்து விட்டார். கிருஷ்ணரின் உண்மையான பிரபஞ்ச வடிவமான விச்வரூபம் அல்லது விராட்ரூபத்தையும் கண்டுவிட்டார். அது அர்ஜுனனுக்குப் பயத்தை விளைவிப்பதாக இருந்தது.
சங்கு சக்கரதாரியாக, அபயமளிக்கும், வரமருளும் நான்கு கரங்களுடன் கூடிய அழகிய, திவ்யமான, இனிமையான போற்றுதற்குரிய நாராயணனாகவும் காட்சி அளித்ததைப் பார்த்தார்.
முடிவாக, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான மானுட வடிவத்திற்கே திரும்புகிறார்.
மகரிஷிகளும் ஞானிகளும்கூட பார்த்திராத பார்ப்பதற்கரிய காட்சியை அர்ஜுனன் காணும் பேறு பெற்றிருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். இது ஒரு உண்மையான கூற்று.
ஞானிகளால் தர்சனங்களைக் காண முடியாது. ஒரு ஞானி மற்றொரு ஞானியைப் பார்க்கும்போது சக்தி வடிவாகவே பார்க்கிறார். ஸ்தூலவடிவில் பார்ப்பதற்கு, இருவரும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எனது பக்தர்களுள் ஒருவர் இமாலயத்தில் மஹாவதார பாபாஜியை, மனித உருவில் பார்த்திருக்கிறார். அந்த ஞானி இந்தப் பக்தரின் கண்பார்வை திறனுக்கேற்றவாறு தமது அலைவரிசையை மாற்றியமைத்து மனித உருவில் தர்சனம் அளித்தார்.
கிருஷ்ணரோ, அர்ஜுனனுக்கு ஞானக்கண் அளித்து தமது பிரபஞ்ச வடிவத்தைக் காட்டுகிறார்.
மற்றவர்கள் எந்தவிதமான ஆன்மீக சாதனைகள், அறிவு தேடல்களில் ஈடுபட்டாலும் இந்த நிலையை அடைய முடியாது. இது பக்திக்கான இடம், கடவுளைத் தவிர வேறு ஒன்றையும் தேடாத ஆழமான பக்திக்கான தளம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், குருவிடம் ஒருவருக்கு இருக்க வேண்டிய தீவிரமான பக்தியைப் பற்றிச் சொல்லும்போது, இப்படிச் சொல்கிறார்.

உங்களைத் தேடி நானே வருவேன்
'தமது கணவனிடம் ஒரு கற்புடைய பெண்ணுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்திடம் ஒரு கஞ்சனுக்கு இருக்கும் ஆசை, உலகியல் இன்பங்களிடத்து ஒரு சிற்றின்பக்காரனுக்கு இருக்கும் பற்று, இவை மூன்றும் ஒன்று கூடினாற் போன்ற ஒரு ஆழமான அன்பு குருவின்பால் தோன் றினால் அதுதான் ஆழ்ந்த பக்தி.
எனக்காகத் தொண்டு செய்பவன் என்னை வந்து அடைகிறான் – கிருஷ்ணர்
கிருஷ்ணர் தம்மை அடைவதற்கு ஒரு பக்தர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவான ஒரு பாதையைச் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வதைப் போன்ற மிக எளிமையானதொரு பாதை அது.
'‘எனக்காகத் தொண்டு செய், எனது சங்கத்திற்காகத் தொண்டு செய் எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் என்னையே மேலான புகலிடமாகக் கருதி, என்னிடமே சரணடைவாயாக! என்ன செய்தாலும் பற்றற்று கடமையைச் செய்வதன் மூலம் பலனை என்னிடம் விட்டுவிடுவாயாக. உன் செயல்களின் பலனை என்னிடம் சரணாகதி செய்வாயாக! விருப்பு வெறுப்பில்லாமல், எல்லோரையும் உனது சொந்த ஆத்மாவாகக் காண்பாயாக!’’
கிருஷ்ணர் இங்கே சொல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'எனக்காகத் தொண்டு செய், எனக்காகத் தொண்டு செய்பவன் என்னை வந்து அடைகிறான்,” என்று சொல்கிறார்.
எல்லாப் பக்தர்களும் சீடர்களும் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விக்ரஹத்தை வைத்தோ, புகைப்படத்தை வைத்துக் கொண்டோ பிரார்த்தனை செய்வது பக்தி அல்ல.
உங்கள் வாழ்நாள் முழுதும் புகைப்படத்தையோ, உருவத்தையோ பார்த்துக் கொண்டே இருந்தாலும், அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
குருவின் போதனைகளைப் புரிந்துகொண்டு உள்வாங்கி, உண்மையுடனும் முயற்சியுடனும் அவற்றைச் செயலாக மாற்றும் தன்மையே தேவைப்படுகிறது.
நான் என் பக்தர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்.
என் முன் அமர்ந்து, என் உருவத்தைக் பெண்குளிர தரிசித்து மகிழ்பவர்கள் எல்லோரும் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். எனது இனிமையான வார்த்தைகளும் வடிவமும் உங்கள் கண்களுக்கும் மூளைக்கும் விருந்தாக அமையும். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
> ஒரு விக்ரஹத்தை
> வைத்தோம்,
> புகைப்படத்தை
> வைத்துக்கொண்டோ
> பிரார்த்தனை செய்வது
> பக்தி அல்ல.
நான் உங்களை விட்டுச் சென்று விடுவேன் என்ற நினைவே உங்களை வேதனைப்படுத்தும். என்னுடன் இருக்கும் அந்தத் தருணத்தை உணராமல், அதற்குப் பின்வரும் நான் இல்லாது போகும் தருணங்களை எண்ணி வேதனைப்படுவீர்கள்.
அதற்குப் பதிலாக, எனது சங்கத்திற்காக உழைக்கும் போதும், எனது வார்த்தைகளையும் போதனைகளையும் பரப்பும் போதும் நான் உங்களைப் பின் தொடருவேன்.
நீங்கள் எங்கிருந்தாலும், நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன்! நீங்கள் என்னிடம் வரக்கூட தேவையில்லை. நான் உங்களிடம் வருவேன்.