பரம்பொருளின் ஆசீர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும்.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கேள்வி: சுவாமி, அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் விச்'வரூபதர்ச்'னம் அளித்தார். இதைத்தான் கிறிஸ்துவ மதத்திலும், மற்ற மதங்களிலும் (Grace) காருண்யம், அருள் என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார்களா? அது, ஓர் அர்த்தம் நிறைந்த ஓர் அழகான வார்த்தை.
தயவுசெய்து விளக்கம் சொல்வீர்களா?
அம்மா, அருள் என்பது வாழ்வின் புரியாத புதிர்களுள் ஒன்று. அருள் என்பது தானாகவே நிகழ வேண்டும், அதனை உருவாக்க முடியாது.
எப்படிச் சூரியனைக் கண்டவுடன் தாமரை மலர்கிறதோ அதுபோல நமது இருப்புத் தன்மையின் மலர்ச்சியே அருள்.
ஞானி, பக்தரின் கண்பார்வை திறனுக்கேற்றவாறு தமது அலைவரிசையை மாற்றியமைத்து மனித உருவில் தர்ச்'னம் அளிக்கிறார்.
அதனை வலுக்கட்டாயமாக நிகழ்த்த முடியாது. கற்பனை செய்யவும் முடியாது.
tதெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எப்போது நம்முடைய அக விழிப்புணர்வு அதன் உச்சத்தை எட்டுகிறதோ, அப்போது நாம் அமைதியாகவும் கருணை நிரம்பியவர்களாகவும், ஆனந்தமயமானவர்களாகவும் மாறிவிடுகிறோம்.
நம்முள் இது தடையின்றி நிகழும்போது, அதன் விளைவாக நமது மனமும் உடலும் அருள் நிரம்பியதாக மாறிவிடுகிறது. நமது உடலின் ஒவ்வொரு அணுவும், நமது அமைப்பின் ஒவ்வொரு நுண் துளையும் இந்த அருள் மழையைப் பொழிய ஆரம்பிக்கிறது.
அழகு என்ற சொல்லுக்கு, அகராதி வரையறுத்துள்ளபடி ஒருவர் அழகாக இருக்கத் தேவையில்லை. இது, புற அழகைச் சார்ந்தது இல்லை. உள்நிலையில் இருந்து எழும் அழகே அருள்.
ஒரு சிம்னி விளக்கை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்றப்படும்வரை, அதன் வெளியே இருக்கும் கண்ணாடி தடுப்பைத்தான் பார்க்கிறோம்.
இந்த நிலையில்தான், "இவர் அழகு, அவள் அழகில்லை," என்று சொல்கிறோம். நாம் பார்ப்பது அனைத்தும் வெளியில் இருக்கும் கண்ணாடியால் ஆன தடுப்பைத்தான்.
பிறகு விளக்கு ஏற்றப்பட்டு விடுகிறது. சுடரின் அழகைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இங்கேதான் உண்மையான அழகு இருக்கிறது. இதுதான் அருள், உள்ளொளி, உண்மையான அகத்தின் அழகு.
அந்த உள்ளொளி உடல், மனம் முழுவதும் வீசத் தொடங்கும்போது, இந்த ஸ்தூல உடலோ, மனமோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அழகான ஒரு உள்ளொளி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.
அருள் என்பது தவறாகப்
புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. நாம்
நினைப்பதுபோல, அது வெளித்தோற்றம்
சம்பந்தப்பட்டது அல்ல; அது என்றென்றும்
நமது உள்நிலை சம்பந்தப்பட்டது.
குருவின்
போதனைகளைப்
புரிந்துகொண்டு
உள்வாங்கி,
உண்மையுடனும்,
முயற்சியுடனும்
அவற்றைச்
செயலாக மாற்றும்
தன்மையே
தேவைப்படுகிறது.
அப்போது நமது வார்த்தைகள்
வார்த்தைகளாக இல்லாமல், இசையாக
மாறுகின்றன. நமது கோபம் சக்தியாக
வெளிப்படுகிறது. நமது சிரிப்பு பரவச
நிலையாக மாறுகிறது.
பிரபஞ்ச இருப்புத்தன்மையை நாம் நம்பும்போது, அருள் நிகழ்கிறது. எண்ணமும் சிந்தனையும் இல்லாத ஒரு வெளியில் அருள் தானாகவே இறங்குகிறது; அது நம்மை சூழ்ந்து கொள்கிறது. அருள் நம்மைப் பின் தொடர்கிறது.
அர்ஜுனன் தயாரானபோது, அவரது மனம் நிசப்தமானபோது அவரின் மேல் கடவுளின் அருள் மழை பொழியத் தொடங்கியது. அவர் ஒன்றுமே செய்யவில்லை, அவர் எதையும் செய்ய விரும்பவும் இல்லை. அவர் தயாராக இருந்தார், அவ்வளவுதான், அது தானாக நடந்தது.
எல்லா ஞானிகளிடத்தும் இதுதான் நடக்கிறது. அவர்களோடு ஒன்றிணைந்து வாழத் தொடங்கும்போது, நம்மீது அவர்களது அருள் தானாகவே இறங்கத் தொடங்கும். பிறகு, நாம் முற்றிலும் புதிய மனிதர்களாகிறோம். உண்மையில் நாம் மறு பிறவி எடுக்கிறோம்.
பொறுமையாகக் காத்திருங்கள்; நீங்கள் தயாராகும்போது அருள் உங்கள் மீது பொழியத் தொடங்கும்.
தியானம்:
அர்ஜுனன் கண்ட விஸ்வரூபதர்சனத்தை நாமும் அனுபவிக்க தியானத்திற்குள் நுழைவோம்.
மீண்டும் இரண்டு கருத்துகள்:
கிருஷ்ணரின் உணர்வு நிலையை அனுபவமாக அடைவது சாத்தியமா?
ஆம். சாத்தியமே.
என்ன தகுதி தேவை?
நம்முடைய இருப்புத்தன்மை இங்கே
இருந்தால், அதுவே போதுமானது. இப்போது
நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது
முழு விழிப்புணர்வு நிலையில் தீவிரமாக
தியானத்திற்குள் நுழைவது மட்டுமே.

குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இந்த தியானம் நடக்கும். உங்களால் தியானம் செய்ய முடியாது என்றாலோ, தியானத்தில் அமர விருப்பமில்லாதவர்களோ, அறையை விட்டு வெளியேறலாம்.

உங்களால் செய்ய முடிந்தால்
தியானத்திற்குள் நுழையலாம். தயவு
செய்து நடுவில் எழுந்து செல்ல
வேண்டாம். கண்களை மூடி
நிமிர்ந்து உட்காருங்கள். உங்களை
நான் படிப்படியாக தியானத்திற்குள்
வழி நடத்துகிறேன்.
பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கும் பரபிரஹ்ம கிருஷ்ணரை, எந்தப் பெயரில், எந்த வடிவத்தில் நீங்கள் அறிந்திருந்தாலும், அப்படியே அவரை ஆழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

ஆனந்தத்தை அனுபவமாகப் பெறுங்கள்
எல்லா ஞானிகளுக்கும் கிடைத்த, அர்ஜுனன் அடைந்த அந்த அனுபவத்தின் ஒரு துளியை, அந்தச் சக்தியின் ஒரு துளியை அனுபவிக்க அந்தப் பிரபஞ்ச சக்தியிடம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.
பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்தியுங்கள். அது உங்கள் எண்ணங்களுக்குச் செவி சாய்க்கும். உங்கள் பிரார்த்தனைகளை வெறுமையான வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். அவை உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தும்.
மிக மெதுவாக, ஆழமாக உங்கள் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள். உங்கள் மனத்தைப் புருவமத்தியில், ஆஜ்ஞா சக்ரத்தில் ஒருமுகப்படுத்துங்கள். மிக, மிக, மெதுவாக ஆனால் ஆழமாக உங்கள் ஆஜ்ஞா சக்ரத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.
எந்தவித கட்டாயமும் இல்லாமல் உங்கள் விழிப்புணர்வை இயல்பாக ஆஜ்ஞா சக்ரத்திற்குக் கொண்டுவாருங்கள்.
மெதுவாக இந்த முழுப் பிரபஞ்சமும், உங்கள் தலைக்குள் சுழலுவதாகப் பாவனை செய்யுங்கள். மிகத் தெளிவாக உங்கள் தலைக்குள் இதை உணருங்கள்.
உங்கள் முன் இருக்கும் அந்த வெளியில், உங்கள் ஆன்ம வெளியில் முழுப் பிரபஞ்சமும் சுழல்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் எல்லாக் கிரகங்களும் சுழலுவதைப் பாருங்கள். மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இதைப் பாவனை செய்யுங்கள்.
மிக மிக மெதுவாக உடலைத் தளர்வாக்குங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையுடன் ஒன்றாவதை உணருங்கள். இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாக இருக்கும் அந்த அனுபவத்தை உணருங்கள்.
நீங்கள் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் மிக மிகத் தெளிவாகப் பார்க்கிறீர்கள். பிரபஞ்ச விழிப்புணர்விற்குள் அப்படியே கரைந்துவிடுங்கள்.
உங்கள் பெயரை மறந்துவிடுங்கள், உங்கள் வடிவத்தை மறந்து விடுங்கள், எல்லாக் கட்டுப்பாடுகளையும் மறந்துவிடுங்கள், உங்கள் உத்யோகத்தை, ஆண் பெண் என்ற உணர்வை, உங்கள் தேசத்தை, உங்களைப்பற்றிய எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்.
உங்களுடைய அடையாளத்தை மறந்து, இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் ஆழமாகத் தீவிரத் தன்மையோடு பாருங்கள். நிலவுகள், நட்சத்திரங்கள், சூரியன்கள், கோள்கள் என்று இந்த மொத்தப் பிரபஞ்சமும் நகர்ந்து கொண்டிருப்பதை வெறுமனே பாருங்கள்.
பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் மறைந்துவிடுங்கள். எல்லா எண்ணங்களுக்கும் ஆணிவேராக இருக்கிற உங்கள் அடையாளத்தைத் தொலைத்துவிடுங்கள். அது பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் மறைந்து போகட்டும்.
ஆனந்தத்தை அனுபவமாகப் பெறுங்கள். பிரபஞ்ச இருப்பின் நிறைவுதரும் ஆனந்தத்தை அனுபவியுங்கள். விரிவடைந்த பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் மறைந்து விடுங்கள். பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் கரைந்துவிடுங்கள் நித்ய ஆனந்தத்தில் இருங்கள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்ஹவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
விச்வரூபதர்சநயோகோ நாம ஏகாதசோऽத்யாய: ॥
இது ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய விச்வரூபதர்சந யோகம் எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம்.